Wednesday, October 19, 2005

சொல்லமறந்த கதை!

கடந்த சில ஆண்டுகளில் உலகின் பொருளாதார வளர்ச்சியை நாம் கணக்கிட்டு பார்ப்போமானால் நம்பமுடியாத அளவிற்கு அசுர வளர்ச்சியை பெற்றிருப்பதைக் காணலாம். 1950 க்கும் 2000 க்கும் இடையில் பொருளாதாரம் 7 மடங்கு வளர்ச்சியை அடைந்திருப்பதாக பொருளாதார வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

பொருளாதாரம் இவ்வளவு வளர்ச்சி அடைந்திருந்தும் ஏழைகள் இப்பொழுதும் ஏழைகளாகவும், பணம் சில குறிப்பிட்டவர்களின் பாக்கட்டுகளில் மட்டுமே இருப்பதற்கு என்ன காரணம் என்று ஆலோசித்த போது எதேச்சையாக சில படங்களை காண நேர்ந்தது.

அவற்றில் குறிப்பிட்ட இரண்டை மட்டும் இங்கே பதிக்கின்றேன். பணம் உள்ளவர்கள் மீண்டும் மீண்டும் பணத்தை வாரிக் கொண்டிருப்பதற்கும் ஏழைகள் விரக்தியில் வாழ்வை முடித்துக் கொள்ளும் அளவிற்கு செல்வதற்கும் உள்ள காரணத்தை இப்படங்கள் தெளிவாக விளக்குகின்றன.






இரண்டு படங்களுக்கும் ஏதோ ஓர் தொடர்பு இருப்பதாக தோன்றியதில் விளைந்த வரிகள்.

படித்து விட்டு உண்மையான கவிகள் அடிக்க வராமல் இருந்தால் சரி தான்!

பாட்டாளிகளின் இரத்தத்தில்
பையை நிறைக்கும்
பணக்காரர்களின் தொழிற்சாலைகளால்
ஓசோனில் விழுந்த ஓட்டை
பாட்டாளிக்கு வயிறளக்கும் பூமியின்
வயிற்றை மட்டும் பிளக்கவில்லை - பாட்டாளிகளின்

வாழ்க்கையையும் தான்.

ஓசோன் - சூரியனின் வெப்பம் நேரடியாக பூமியை தாக்காமல் இருக்க பூமியின் மேல் மூடி படர்ந்து பூமியை பாதுகாத்து கொண்டிருக்கிற ஒரு படலம்.

இப்பொழுது தலைப்பினை ஒரு முறை கூட "படம் சொல்லமறந்த கதை!" என்று திருப்பி(த்தி) வாசிக்கவும்!

7 comments:

  1. படமும் குட்டிக்கtpதையும் நிதர்சனமாக உண்மையைத்தான் சொல்கிறது.

    ReplyDelete
  2. ஆம்.
    சொல்ல மறந்த கதை மட்டுமல்ல.
    சொல்ல மறக்கடிக்கப்பட்ட கதையும் கூட.
    மறக்காமல் சொன்னதற்கு நன்றி.

    ReplyDelete
  3. வேண்டுமென்றே மறக்கடிக்கப்பட்ட கதை இது.
    நன்றி உங்கள் அக்கறைக்கு
    கவிதை நல்லாதாங்க இருக்கு:-)

    ReplyDelete
  4. சகோதரர் இறைநேசன் ,
    அருமையான கவிதை ,தேவையான சிந்தனை .தற்போது அடிக்கடி நடக்கும் இயற்கை சீற்றங்களுக்கு இவை தானே காரணம்.

    ReplyDelete
  5. கருத்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி!

    அருமையான கவிதை

    சகோதரரே இந்த கிண்டல் தானே வேணாங்கறது! குறைந்த பட்சம் மதுமிதா அவர்களைப் போல் ஒரு ஸ்மைலியாவது போட்டிருக்கலாம் அல்லவா?

    ReplyDelete