Sunday, March 30, 2008

ஆர்.எஸ்.எஸ், மோடி அழிக்கப்பட வேண்டும் - மனநல மருத்துவர்.

தெகல்கா வாக்குமூலங்கள்: இந்து பாசிசத்தின் உளவியல்!

"உள்ளே ஒரு மிருகம் காத்திருக்கிறது; தூண்டி விட்டால் அது வெறியோடு கிளம்பும்", என்பது ஒரு சௌகரியமான பொய். மிருகத்தன்மை மாறி பரிணாம வளர்ச்சியடைவதுதான் மனிதத்தன்மை. பரிணாமம் பின்னோக்கிப் போகாது. குஜராத்தில் நடந்த வெறியாட்டம், தற்செயலாக தட்டி எழுப்பப்பட்ட மிருககுணம் அல்ல. அது இயல்பாக மனிதனிடம் உள்ள குணநலன்களை மழுங்கடித்து, பல காலமாக அவனது மூளையில் பதிய வைக்கப்பட்ட பேதவெறி; தன்னை விடத் தாழ்ந்தவனின் தலை சற்றே கூட நிமிரக்கூடாது எனும் ஆதிக்க வெறி; யதேச்சையாய் வெடித்த கலவரமல்ல, அது ஒரு திட்டமிட்ட வேட்டை.

"எதைச் செய்வது சரி, எப்படிச் செய்வது சரி" என்பதெல்லாம், மனித மனம் நாளும் கற்றுத் தேர்பவை. மனவியல் கருத்தின்படி, ஊக்குவிக்கப்படுவன (மிட்டாயோ? கைதட்டலோ?) சரியானவை என்றும், தண்டிக்கப்படுவன (அடிக்கப்படுவதோ? ஒதுக்கப்படுவதோ?) தவறானவை என்றும், மனம் கற்றுக் கொள்கிறது.

"தண்டிக்கப்பட மாட்டோம், தப்பிப்போம்" என்று மனதுக்குத் தெரிந்தால் — தவறானதாகத் தெரிந்து வைத்தவற்றைக் கூட முயன்று பார்க்கத் துணியும். தண்டனை கிடைக்காது எனும் தைரியமும், ஓர் ஊக்குவிப்புதான். இப்படி மிருகத்தனமான செயல்கள், நேரடியாகவோ? மறைமுகமாகவோ? ஊக்குவிக்கப்பட்டால், மனம் "இதுவே நியாயம்" என்றும் நம்பியிருக்கும். சரியான காரியங்களைச் செய்தபின் இயல்பாகவே மனதுக்குள் மகிழ்ச்சியும், பெருமையும் நிலவும்.

"வெட்டினேன், கொளுத்தினேன், கொன்றேன், கொள்ளையடித்தேன், கற்பழித்தேன்" என்று பெருமையோடு பேசும் குஜராத் இந்து மதவெறியர்களின் மனங்கள், "அந்தக் காரியங்கள் நியாயமானவை, அவசியமானவை, சரியானவை" என்று தீர்மானித்து விட்டதால்தான், இத்தனை ஆண்டுகள் கழித்தும் தங்களது வெறிச் செயல்களை "வீர சாகசங்களாகவும், வெற்றிச் சரித்திரங்களாகவும்" அவர்கள் கொக்கரிக்கிறார்கள். அவர்களின் மனங்களுக்கென்றே ஒரு "கோணலான கல்வி' தொடர்ந்து பாடமாகப் பதியவைக்கப்பட்டுள்ளது.

"திருடுவது, கொல்வது, கற்பழிப்பது போன்றவை சரி"யென்று, பொதுவாக எந்த மதத்திலும் கூறப்படுவதில்லை. ஆனாலும், அந்தக் கலவரமும், வெறியாட்டமும் மதத்தின் சார்பாகவே நடந்தது. "மிதமானவை, மூர்க்கக் கட்டமைப்பு இல்லாதவை" என்று சொல்லிக் கொள்ளும் எல்லா மத மார்க்கங்களிலும் தாம் உயர்ந்தவர், கடவுளுக்கு அருகிலுள்ளவர் — தமது வழி வராதவரெல்லாம் தீயவர், தாழ்ந்தவர் என்ற மறைமுக போதனைகளும் உண்டு. மேலோட்டமாகவேனும் நெறி புகட்டுவதாய் கருதப்படும் மதவரம்புகளை மீறி, அதைச் சார்ந்த ஒரு கூட்டம் வெறியாடுகிறது என்றால் — அந்தக் கும்பல் கயவர்களாலானது அல்லது அந்த மதநெறியே கோணலானது என்றே அர்த்தம்.

மேல் கீழ் எனும் பேதவெறியை தொடர்போதையாக ஊட்டி விட்டால், "தர்மம்" என்பதற்கே ஒரு புதிய அர்த்தம் தோன்ற ஆரம்பிக்கும். சமூக சட்ட அங்கீகாரமற்ற கோரச் செயல்களில் இவர்கள் ஈடுபடுவதற்குக் காரணம், உள்ளே வேரூன்றிக் கிடக்கும் "தான் உயர்ந்தவன்" எனும் ஆணவம். இந்தப் போலி சமூகச் செல்வாக்கு "தன்னைவிடத் தாழ்ந்தவனை மிதிக்கலாம்" என்பதற்கு ஒரு அனுமதி போன்றே அவர்களது மனத்திற்குள் தோன்றும்.

இப்படியொரு கோணலான கண்ணோட்டத்தில் செய்த வன்முறை, வெறி, வரம்பு மீறல், கேவலம், கொடூரம் — எல்லாமே தக்க நேரத்தில் செய்த, சரியான காரியமாகவே அவர்களுக்குப் படும். அதனால்தான் அவர்களிடம் இது குறித்து வருத்தமும் இல்லை, வெட்கமும் இல்லை; குற்றமும் புரிந்து விட்டு, குறுகுறுப்பும் இல்லாதது மட்டுமல்ல, இவர்களிடம் சாதித்து விட்ட மமதையும் வெளிப்படுகிறது. இது வெறி மட்டுமல்ல, தண்டிக்கப் படாததால் வந்த தைரியம். கொலையும், கற்பழிப்பும், மனிதத்தன்மையே அல்ல என்பதை உணரக்கூட முடியாத அளவுக்கு உள்ளே மதவெறியும், ஆதிக்கத் திமிரும் வளர்ந்திருக்கிறது. இது ஆபத்தானது.

பொதுவாக, ஒரு போரின் முடிவில், வென்றவர்கள் தோற்றவர்களின் உடைமைகளை (பொருள்களை, பெண்களை) கொள்ளையடிப்பது, காலங்காலமாய் இருக்கும் ஒரு கோணலான நியதி. வெற்றிபலம், தோல்விபலவீனம் என்று ஏற்றுக் கொள்ளப்படுவதால், "பலவீனமானவர்களைக் கொள்ளையடிப்பதும், கொல்வதும், கற்பழிப்பதும், தவறு" என்பதற்குப் பதிலாக, "யுத்த தர்மம்" என்றே இது போற்றப்பட்டு வந்துள்ளது.

குஜராத்தில் நடந்தது யுத்தமா? "எதிரிகள் மனிதர்களேயல்ல" என்ற மூர்க்க சித்தாந்தம்தான் ஒரு படையைத் தூண்டிவிட முடியும். குஜராத்தில் சேர்ந்தது ஒரு பரிதாபகரமான படை. இதுநாள்வரை, ஒதுக்கித் தாழ்த்தி வைக்கப்பட்ட ஒரு கூட்டம், சண்டைபோட மட்டும் சேர்த்துக் கொள்ளப்பட்டது. "தாங்கள் தாழ்வாகக் கருதப்பட்டவர்கள்", என்பதை மறந்து, "தம்மிலும் தாழ்ந்தவனாக ஒரு எதிரியை" அவர்கள் பார்த்தார்கள். இந்தப் போலி தர்மத்திற்கான யுத்த நேரத்தில் "ஆதிக்கம் செலுத்தியவன் தன் தோளோடு தோள் நிற்கிறானே" என்ற பொய்யான மகிழ்ச்சி, கூட்ட மனப்பான்மையில் "கொலைவெறி"யாகவும் மாறிவிட்டது.

போர்ப்படை என்பதும் ஒரு கூட்டம்தான். எல்லாக் கூட்டங்களிலும், எப்போதுமே ஒரு தலைவன் உண்டு. அவனது ஆணைப்படியே அந்தந்த கூட்டம் இயங்கும். யதேச்சையாகத் திரளும் கூட்டங்களைத் தவிர, ஒரு இயக்கமாக, கட்சியாக, மதமாக அமையும் கூட்டங்கள், தலைவனை நேரில் பார்க்காத போதும் ஆணைகளைப் பின்பற்றும். இவ்வகைக் கூட்டங்களுக்கு "தலைவன் சொல்வதே சரி, அவன் ஆணைப்படி நடப்பதே சரி" எனும் ஒரு மூர்க்கப் பின்பற்றுதல் சிந்தனை அமையும். இவ்வகைத் தலைவன், எதிரியை அடையாளம் காட்டித் தன் கூட்டத்தையே போரிட வைக்க முடியும்.

தான் அடையப் போகும் பெரிய லாபத்திற்காக, இந்தக் கூட்டத்திலுள்ள வேலைக்காரர்கள் அடையும் அற்ப சந்தோஷங்களை அவன் கண்டு கொள்ள மாட்டான். சில எலும்புத் துண்டுகளை, அவனது வெறிநாய்கள் தாங்களாகவே பொறுக்கிக் கொள்வதும், அவனுக்கு வசதியாகவே அமையும். போர் முடிந்து, வெற்றி கிடைத்த பிறகுதான் "கூட்டத்துக்குத் தலைவன்" கொஞ்சம் தெரிவான். ஒன்றாக வெறியாடி, அவனுக்கு வெற்றி தேடித் தந்தவர்களில் சிலரே உயர்வார்கள். தற்காலிகக் கூலியாக மட்டுமே மற்றவர்கள் ஒதுக்கப்படுவார்கள்.

சாணக்கிய ரீதியில், இது "ராஜநீதி" என்றும் கூட ஏற்கப்படும். இவ்வளவு யுத்த தந்திரங்களோடு செயல்பட்டு ஒடுக்குமளவு, குஜராத்தில் யார் எதிரி? அடிபட்டவன், என்ன தவறுகள் செய்தான்? இது பழிவாங்குதல் என்றால், பழிதான் என்ன? தொடர் தவறுகளின் ஆரம்பம் எது? மதவெறியே அடிப்படைக் காரணமென்றால், வெறியூட்டும் மதத்திலுள்ள தவறுகள் எவை? நேற்றுவரை தெருவில் சந்திக்கும்போது சிரித்துப் பழகிய பெண்ணை, இன்று துரத்திக் கற்பழிப்பதும், கொல்வதும் சாத்தியம் என்றால் அவ்வெறியை ஊட்டியது யார்? ஊக்குவிப்பது யார்?

தொலைக்காட்சியிலும் பத்திரிக்கையிலும், இது குறித்து மேலோட்டமாகத் தெரிந்து கொண்டு, கொஞ்சமாக முகம் சுளித்து, மிகக் குறைந்த அளவில் வருத்தப்படும் நடுத்தர வர்க்கத்திற்கும், இதிலுள்ள வக்கிரமும் உக்கிரமும் புரியவே செய்கிறது. வழக்கமான கோழைத்தனம் வாயை மூடிவைத்தாலும், தேர்தலில் வரக்கூடிய தைரியம் என்ன ஆனது? வெறிச் செயல்களுக்கு ஆதரவாக வாக்களிப்பதும், அச்செயல்களை ஊக்குவிப்பதேயாகும். நடுத்தர வர்க்கத்தின் இந்த மௌனமான மறைமுகமான ஊக்குவிப்பிற்குக் காரணம், சுயநலம் மிகுந்த அச்சம்; "ஜெயிக்கும் குதிரை மேலேயே பணம் கட்டலாமே" எனும் சூதாட்ட மனப்பான்மை; வெல்பவன் பலசாலி – அவனை எதிர்ப்பதை விட கூட்டு சேர்ந்து கொள்ளலாமே, என்ற கோழைத்தனமான "குயுக்தி'. இந்த நடுத்தர வர்க்கமும் ஒரு கூட்டம்தான்.

மூர்க்க வெறியோடும் மூட பக்தியோடும், ஒரு தவறான தலைவனைப் பின்பற்றும் கூட்டம், வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் வெறியாட்டம் போடும். வேடிக்கை பார்க்கும் நடுத்தர வர்க்கத்தின் மௌனமே, இந்தக் கூட்டத்தை இன்னும் உரக்கச் சப்தமிட வைக்கும். "தன்னலக் குறிக்கோள்' மட்டுமே கொண்ட தலைவனிடம் அடிமைப்பட்டுக் கிடக்கும் இந்தக் கூட்டம், "வெறியாடும் வாய்ப்பி"லேயே விடுதலையின் திருப்தியை அடையும். ஒரு முறை ருசித்த பிறகு, அடுத்த வெறியாட்ட வாய்ப்புக்குக் காத்திருக்கும். இந்தக் கூட்டத்தை, ஒதுங்கி நின்று பார்த்துக் கொண்டிருக்கும் நடுத்தர வர்க்கம், வெறியலையில் ஒருநாள் சுலபமாக உள்ளிழுக்கப்பட்டுவிடும்.

தனி மனிதனுக்கு "தன் வீடு, தன் இடம்" எனும் பாதுகாப்பான எல்லைகள் தேவைப்படுகின்றன. வெளியே ஒரு கூட்டத்துக்குள் நுழையும்போது, அவனுக்குத் "தன் இடம்" என்பதில்லாததால், ஒரு பாதுகாப்பின்மை உணர்வு ஏற்படுகிறது. இது ஒரு பயமாகவும் மாறுகிறது. இந்தப் பாதுகாப்பின்மையின் பயத்தை, அவன் கூட்டத்தின் எண்ணிக்கையில் சரி செய்ய முயலுகிறான். தன்னைப் போலவே, பல தனிமனிதர்கள் இருக்கும் கூட்டத்தாலேயே தைரியம் பெறுகிறான். கூட்டத்தின் அளவு அதிகரிக்கும்போது தனது தனித்தன்மையை மீறி, கூட்டத்தின் ஒட்டுமொத்தத் தன்மையில் கலக்கிறான்.

பெரும்பான்மை மக்கள் கூட்டத்தில் செம்மறியாடுகள் போலிருந்தாலும், அதில் ஒரு கும்பல் தலைவனின் கூலிப்பட்டாளமாகச் செயல்படும். இந்தக் கும்பல்தான் கொள்ளையடித்து, "யுத்தம்" எனக் கூறி மற்றவர்களை இழுத்தும் செல்லும். எதிரியைத் தலைவனும், அவனுடைய கும்பலும் அடையாளம் காட்டும்போதே, கூட்டத்தில் "கொல்லப்படுமுன் கொல்" எனும் ஆதி மனிதத் தற்காப்பு எண்ணம் ஊட்டப்படும்.

குஜராத்தில் எதிரிகளாகக் கூறப்பட்டவர்கள் கொல்ல வரவில்லை, பயந்தே ஓடினார்கள். கும்பலோடு கூட்டம் அவர்களை வேட்டையாடியது. சாதாரணக் கோழைகளுக்கு, "கூட்டம்" ஊக்க மருந்தாக மட்டுமல்ல, பாதுகாப்புக் கவசமாகவும் மாறுகிறது. கோழைகள் பயந்தவர்கள். "தண்டனையைத் தவிர்ப்பதே!' அவர்களது அடிப்படை நோக்கம். ஆனால், கோழைகளுக்கு ஆசைகள் அதிகம். தண்டிக்கப்படாத வரை, எப்படியாவது ஆசைகளை அடையத் துடிப்பதே, அவர்களது சிந்தனைக்கோணம். நெறிகளின் பால், சமூகத்தின் மேல் அக்கறை என்பதை விடவும், சமூகத்தின் அனுமதியே அவர்களுக்கு முக்கியம்.

குஜராத்தில் அவர்களுக்கு சமூக அனுமதி, அரசியல் சலுகை, ஆசைகளுக்குத் தீனி, வெறிக்கு வடிகால், குற்றங்களுக்கு நியாயம் எல்லாமே கிடைக்கும் என்று தெரிந்த உடன், கோழைகளின் கூட்டம் "வீரர்களின் சேனை"யாகத் தன்னை நினைத்துக் கொண்டது. வெறியாட்டத்தைப் "போர்" என்றும், அரசு பலத்தை "வீரமெ"ன்றும் கருதியவர்கள், பெருமையோடு இன்றும் திரிவது, அந்தச் சமூகம் தந்த அனுமதியோடுதான்.

அறிவும், பண்பும் இல்லாதது வீரமே அல்ல. மௌன கோழைத்தனம், இந்தப் போலி வீரத்தை மீண்டும் தூண்டும். முட்டாள்களும், கோழைகளும் இருக்கும் வரை, ஆதிக்க வெறியும், ஆணவமும் மிகுந்த அயோக்கியன் தலைவனாகவே தொடர்வான். வெறியூட்டினால், தனக்கே இறுதி வெற்றி, என்ற இறுமாப்பில், அவன் மேலும் பல திசைகளில், தன் பார்வையைத் திருப்புவான்.

போதையால் ஊட்டப்படும் வெறி, வெட்கப்படக்கூடிய அறிவை மழுங்கடிக்கும். சுயநலக் கோழைகள் மிகுந்த சமுதாயமும், அதைச் சுலபமாய் ஆட்டி வைக்கும் மோசடித் தலைமையும் "தொற்று நோய்' போல நாடு முழுவதும் பரவும். அந்த ஆதாரக் கிருமியை அழித்தால்தான் வருங்காலத்திற்குப் பாதுகாப்பு –இது அவசியமானது மட்டுமல்ல, அவசரமாகவும் செய்ய வேண்டிய காரியம்.

- ருத்ரன், மனநல மருத்துவர்.

அதிகம் கூற என்ன இருக்கிறது?. அனைவருக்கும் தெரிந்த விஷயத்தை அறிவியல்/மனோதத்துவ ரீதியாக அவை சமூகத்தில் பின்னர் என்ன விளைவுகளைத் தோற்றுவிக்கும் என்பதையும் சமூகத்தில் அது எத்தகையத் தீங்கை விளைவிக்கக் கூடியது என்பதையும் அதிலிருந்துச் சமூகத்தைப் பாதுகாப்பதற்கான வழி என்ன என்பதையும் மருத்துவர் ஒருவர் இங்கு தெளிவுபடுத்தியுள்ளார்.

இனி என்ன? உச்சநீதி மன்றம் முதல் சமூகத்தின் அடித்தட்டு சாமானியன் வரை கொலை வெறி கொண்ட மோடி நாய்களைப் போன்றவைகளைத் தலைமையாகக் கொண்ட ஆர்.எஸ்.எஸ் வெறிக் கூட்டம் சமூகத்தில் உலவுவதால் விளையும் தீமையை உணர்ந்திருக்கும் இவ்வேளையில் உடனடியாக மனநல மருத்துவர் கூறியிருக்கும் இத்தீர்வினைச் செயல்படுத்த அரசு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

மத சார்பற்ற, வேற்றுமையில் ஒற்றுமை பேணும் ஒரு ஜனநாயக நாடு, தனது குடிமக்கள் அனைவருக்கும் பாதுகாப்பான வாழ்க்கைக்கான சூழலை ஏற்படுத்திக் கொடுப்பதற்குக் கடமைப் பட்டதாகும். அந்த பாதுகாப்பைப் பாதிக்கப்பட்டிருக்கும் சமுதாயங்களுக்கு வழங்கும் விதத்தில் சமூகத்தில் புரையோடிப் போயிருக்கும் ஆர்.எஸ்.எஸ் இரத்த வல்லூறுகளை அடியோடு அழிப்பதற்கான செயல்திட்டங்களைக் குறித்து ஆலோசிப்பதற்கும் அதனைச் செயல்படுத்துவதற்கும் ஜனநாயக அரசு முன்வர வேன்டும்.

இல்லையேல் .............. அடி வாங்கிக் கொண்டிருப்பவன் நீண்ட நாட்களுக்கு அடி வாங்கிக் கொண்டே இருப்பான் என்ற அடிமுட்டாள்தனமான நினைப்பு மிகப்பெரிய தவறான முடிவு என்று அரசு கண்டுகொள்ளும் சூழல் உருவாவதைத் தவிர்க்க இயலாது. - இறை நேசன்.

Thursday, March 20, 2008

கொலை வெறிக்கூட்டத்தின் வாக்குமூலம் தமிழில்...24.

கற்பனை தகவல் 140 லிட்டர் பெட்ரோலை முஸ்லிம் வியாபாரிகளுக்கு விற்றதாக வாக்குமூலம் அளித்த விற்பனையாளர்கள் பிரதாப் சிங் பட்டேல் மற்றும் ரன்ஜித் சிங் பட்டேல் ஆகியோர் இவ்வாறு கூறுவதற்காகவும் பொய்யாக ஆட்களை அடையாளம் காட்டுவதற்காகவும் முதன்மை விசாரணை அதிகாரியான நோயல் பர்மார் என்பவனால் கையூட்டு பணம் கொடுக்கப்பட்டார்கள். கையூட்டு பணம் பெற்றதாக ரன்ஜித் சிங் ஒப்பு கொண்டது தெஹல்காவின் ஒளிநாடவில் பதவாகியுள்ளது. ஒவ்வொருவருக்கும் தலா ரூ.50000 கொடுக்கப்பட்டது.

கற்பனை தகவல் 41 முஸ்லிம்களை அடையாளம் காட்டிய ஒன்பது பாஜக உறுப்பினர்கள் அன்றைய தினம் (இரயில் எரித்த போது) இரயில்வே நிலையத்திலேயே இருக்கவில்லை. ஒன்பது பேர்களில் காகுல் பதக் மற்றும் முரளி மூல்சன்தானி ஆகிய இருவரின் உரையாடலை தெஹல்காவின் இரகசிய நிருபர் தனது ஒளிபதிவு கருவியில் பதிவு செய்துள்ளார். அந்த உரையாடலின் போது தாங்கள் சம்பவம் நடந்த போது அவ்விடத்தில் இருக்கவில்லை என்றும், தங்களது கவனத்துக்கு வராமலேயே காவல்துறையினர் அவர்களாகவே தங்கள் பெயரில் வாக்குமூலத்தை உருவாக்கியதாகவும் இருப்பினும் ஹிந்துத்வாவுக்கு சேவையாற்றவே இந்தத் தீய சதிக்குத் தாங்கள் உடன்பட்டதாகவும் தெரிவித்தார்கள்.

கற்பனை தகவல் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட இல்யாஸ் ஹுசைன் மறறும் அன்வர் கலந்தர் ஆகியோர், இரயிலின் தட்டைத் திருப்பி தொடர் வண்டியை அறை Aயின் அருகே நிறுத்தியதாக, நோயல் பர்மார் மற்றும் அவனது விசாரணை குழுவினரால் நிர்பந்திக்கபட்டு குற்றச்சாட்டை ஒப்பு கொள்ளச் செய்யப்பட்டனர். காவல்துறையின் விசாரணை காவலில் இருந்த போது, பர்மார் உடைய ஆட்கள் தன்னுடைய காலில் பெரிய கட்டையைக் கட்டி அதோடு நடக்க சொல்லி சித்தரவதை செய்ததாக இல்யாஸ், தெஹல்கா நிருபரிடம் சொன்னார். கலந்தர் சொல்லும் போது அவருடைய மர்மஸ்தானத்தில் மின்சார அதிர்ச்சி கொடுக்கப்பட்டு சித்தரவதை செய்யப்பட்டதாக கூறினார். காவல்துறையின் நிர்பந்தத்தால் வாக்குமூலம் கொடுத்த ஓராண்டுக்குப் பின், கட்டயப்படுத்தி வெளியேற்றபட்ட இவ்விருவரும் திரும்பி வந்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாணத்தில் தனது வாக்குமூலத்தை முழுமையாக மாற்றி கூறினார்கள்.

கற்பனை தகவல் புரிந்து கொள்ள முடியாத மர்மம் நிறைந்தவரான ஹிந்து வியாபாரி அஜெய் பாரியா உடைய வாக்குமூலம் காவல்துறையின் கருத்தை நேர்த்தியாக பொருத்திகாட்ட உதவும் வகையில் காணப்பட்டது. இவர் கோத்ராவில் வாழ அனுமதிக்கப்படவில்லை. 24 மணி நேரமும் இரண்டு காவலர்கள் அவருடனேயே உள்ளார்கள். எனவே தெஹல்கா அவரிடம் நேரடியாகப் பேச முடியவில்லை. ஆனால் அவருடைய தாயாரிடம் பேசினர். அப்போது பாரியா பயத்தினாலேயே காவல்துறையின் சாட்சியாக மாறியதாக அவருடைய தாயார் கூறினார்.

கற்பனை தகவல் தொடர் வண்டி எரிப்பு சம்பவம் நிகழும் போது அவ்விடத்திலேயே இருந்திடாத இஸ்லாமிய மார்க்க அறிஞர் உமர்ஜி, சதி ஆலோசனையில் பங்கு பெற்றதாக உறுதியாக கூறப்படுவது காவல்துறை கூறும் கருத்தை நிறுவிட மிக முக்கியமானதாகும். இவர் மீதான குற்றச்சாட்டு இரண்டு வாக்குமூலங்களை கொண்டு உறுதிபடுத்தப்படுகிறது. இதில் முக்கியமான அம்சம் என்னவென்றால், முதலில் உமர்ஜியின் பெயரை கூறியவரான ஜாபிர் பின் பஹீரா என்பவர் பின்னர் தனது வாக்குமூலத்தை முழுமையாக மாற்றி கூறினார். உமர்ஜியின் பெயரை கூறும் அடுத்த சாட்சியான சிக்கந்தர் சித்தீக் என்பவன் மிகவும் நம்பகமற்றவன் என்பது நிரூபணமாகிறது, ஏனென்றால் இவன் இஸ்லாமிய மார்க்க அறிஞர் யாகூப் பஞ்சாபியையும் உமர்ஜியையும் சம்பவத்தில் இருந்ததாக குறிப்பிட்டான். ஆனால் சம்பவம் நடந்த நாளில் பஞ்சாபி இந்தியாவிலேயே இருக்கவில்லை என்பது நிரூபணமாகியுள்ளது.

கற்பனை தகவல் உடைந்த ஜன்னல்கள் வழியாகவோ அல்லது பெட்டியின் வெளி பகுதியிலோ திரவ எரிப்பொருளை ஊற்றி S-6 இரயில் பெட்டி தீயிட்டு எரிக்கப்பட்டது என காவல்துறையும் மாநில அரசும் கூறுகின்ற வாதத்தை தடயவியல் அறிக்கை மிக உறுதியாக உடைதெறிந்துள்ளது. எனவே தற்போதைய புதிய கருத்து என்னவென்றால், மூன்று கரசேவகர்களின் வாக்குமூலத்தின் அடிப்படையில் பெட்ரோல் பெட்டியின் தரையில் ஊற்றி S-6 இரயில் பெட்டி தீயிட்டு எரிக்கப்பட்டது. மூன்று மாதங்களுக்கு முன்பு தான் இம்மூவரும் தாங்கள் மயங்கி விட்டதால் எதையும் பார்க்கவில்லை என்று கூறியிருந்தார்கள்.

இருமுறை எரிந்தும் கூட இன்னும் கொதிக்கும் நிலையிலேயே இருக்கிறது

நிரூபிக்க முடியாத கருத்துக்கள், கையூட்டு பணம் இறைத்து பெறபட்ட சாட்சிகள், நிர்பந்தங்களை கொண்டு உருவாக்கப்பட்ட வாக்குமூலங்கள். புலன்விசாரணையின் மூலமாக, திகிலூட்டவும் திகைப்படைய வைக்கவும் செய்யும் விதத்தில் திட்டமிட்டு குரோதத்தால் உண்மைகள் அழிக்கப்பட்டதை ஆசிஸ் கேத்தன் வெட்ட வெளிச்சமாக்கி இருக்கிறார்.

பொய் பெரிதாக இருக்குமானால் அதிகமான மக்கள் நம்புவார்கள் - அடோல்ஃப் ஹிட்லர்.

27 பிப்ரவரி 2002 அன்று காலை 7:43 மணிக்கு சபர்மதி விரைவு தொடர் வண்டி ஐந்து மணி நேர தாமத்திற்குப் பின் கோத்ரா இரயில் நிலையத்தின் உள்ளே செல்லும் போது எவ்வித கெட்ட அறிகுறிகளோ மோசமான அச்சுறுத்தல்களோ இருக்கவில்லை. காற்றில் குளிர் இன்னும் தொற்றிக் கொண்டிருந்தது. நாட்டின் பிறபகுதியில் மக்கள், பாடசாலைக்குச் செல்வதிலோ அல்லது வேலைக்குச் செல்வதிலோ அல்லது தூங்கச் செல்லவோ மற்றுமொரு புதிய நாளுக்குள் தங்களை இயக்கிக் கொண்டிருந்த வேளையில் தான் முக்கிய செய்தி வெளியாகியது. கோத்ரா இரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த சபர்மதி விரைவு தொடர் வண்டியில், அதிக எண்ணிக்கையிலான பயணிகளால் நெரிசலோடு நிறைந்திருந்த S-6 பெட்டியில் பயங்கரமான தீ பற்றிக் கொண்டது. இக் கொடிய நிகழ்வில் 59 பேர் உயிரோடு கருகி இறந்தனர். - இவர்களில் சிலர் அயோத்தியாவிலிருந்து திரும்பி வரும் கரசேவகர்கள், இன்னும் சிலர் சுல்தான்பூர், அலகாபாத் மற்றும் லக்னோவிலிருந்து குஜராத்திற்கு வந்தச் சாதாரண பயணிகளாவர்.

இத்துயரமான பயங்கர நிகழ்வானது நாட்டையே துன்பத்தில் உறைய வைத்தது. ஆனால் கோத்ராவில் நிகழுற்ற இத்துயர சம்பவமானது, நமது நாடடின் அண்மைய வரலாற்றில் இடம்பெற்றிடாத மோசமான அழிவுகளுக்குக் காரணமாக அமையப் போகிறது என்பதனை உடனடியான யாரும் உணர்ந்திருக்கவில்லை. நாடு முழுவதிலும் உள்ள 24 மணி நேர செய்தி ஊடகங்கள் இக் கொடிய சம்பவத்தின் போது எடுக்கப்பட்ட, இரத்தத்தை உறைய வைக்கும் அதிர்ச்சி தரும் படங்களை தொடர்ந்து மீண்டும் மீண்டும் ஒளிபரப்பவே, பதட்டமும் உருவாகியது. கோபம் - நியாயமான கேள்விகள் கேட்கபட்டது. தீ எப்படி ஆரம்பித்தது? குற்றவாளிகள் யார்? இது ஒரு விபத்தா? அல்லது வேண்டுமென்றே தீயிட்டு கொளுத்தப்பட்ட செயலா? அப்படிவேண்டுமென்றே தீயிட்டு கொளுத்தப்பட்ட செயலாக இருக்கும் பட்சத்தில் முன்பே திட்டமிட்டு நடத்தபட்ட சதி செயலா? அல்லது தீடீரென்று எதேச்சையாக நிகழ்ந்ததா?

கோத்ராவில் கொடூரமாக நடந்த நிகழ்வின் உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டியும், நீதி நிலைநாட்டவும் குரல்கள் எழஆரம்பித்தது. ஏற்கனவே பிரிந்து கிடக்கும் சமுதாயங்கள், ஏற்கனவே வெளிப்படாமல் கொதித்து கொண்டிருக்கும் சமூகங்களுக்கிடையிலான விரோதம் போன்ற பதட்டமான சூழ்நிலையில் இருக்கும் குஜராத்தில், இப்போது மிக பயங்கரமான மற்றும் அடக்க முடியாத கோபத்தால் நிறைந்திருந்தது. அப்போது மக்களின் தேவை என்னவென்றால் நீதி நிலை நிறுத்தபட வேண்டும் என்பதும், உண்மையை வெளி கொண்டு வருவதில் எவ்வித சமரசமும் செய்ய கூடாது என்பதுமாகும். இன்னும் தங்களது அரசாங்கத்தின் பரிவுடன் கூடிய அரவணைப்பும் ஆறுதலும் கூட மக்களுக்கு தேவைபட்டது.

ஏற்கனவே வெறுக்கத்தக்க உணர்வுகள் நிறைந்திருந்ததினால், கோத்ராவில் நடந்தேறிய துயரமான சம்பவத்துக்குப் பின் சில மணி நேரத்துக்குள் இவ்வெறுப்புணர்வானது மோசமான இன அழிப்பு நிகழ்வாக மாற்றப்பட்டது. தீயில் கருகிய பிரேதங்கள் மருத்துவமனையிலிருந்து கொண்டு வரப்பட்டு உணர்ச்சி கொந்தளிப்பான ஊர்வலமாய் எடுத்துச் செல்லப்பட்டது. தீயிட்டு கொளுத்தப்பட்ட 59 பேர்களும், அவர்களுடைய தனித்துவ அடையாளத்தைக் கொண்டு காட்டப்படுவதற்கு அனுமதிக்கபடவில்லை. முதல் பரீட்சாத்தைய உண்மைகள் நிறுவபடுவதற்கு முன்பாகவே, காவல்துறையினரின் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யபடுவதற்கும் முன்பே, பிரேத பரிசோதனையின் அறிக்கைகள் இன்னும் வந்து முடியவில்லை என்னும் சூழ்நிலையிலேயே – சம்பவம் நிகழ்ந்து 12 மணி நேர காலத்திற்கும் குறைவான நேரத்திற்குள்ளாகவே, முதலமைச்சர் நரேந்திர மோடி போர் பிரகடனத்தைப் பத்திரிக்கை அறிக்கை மூலமாக வெளியிடுகிறான். “கோத்ராவில் நடத்தப்பட்ட கொடூரமான வெறுக்கத்தக்க சம்பவமானது எந்த ஒரு நாகரீக சமுதாயத்தினாலும் ஏற்று கொள்ளப்பட முடியாத நிகழ்வாகும். “ இது ஒரு வெறும் சமூக கலவரம் அல்ல. மாறாக, தீவிரவாதிகள் ஒரு புறம் ஒன்றிணைந்து ஒரு சமூகத்தின் மீது நடத்திய தாக்குதலாகும்.

அன்றிரவே தீவைப்பு நிகழ்வுகளின் முதல் சம்பவம் நிகழ்த்தப்பட்டது. அடுத்த மூன்று தினங்களில் 2000க்கும் அதிகமான முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். துண்டம் துண்டமாக வெட்டப்பட்டு, சுட்டு தள்ளப்பட்டு, தீயிட்டு எரிக்கபட்டு, கற்பழிக்கப்பட்டு கொல்லப்பட்டார்கள். ஆயிரக்கணக்கான முஸ்லிம் வீடுகள் எரிக்கப்பட்டன, டஜன்கள் எண்ணிக்கையில் மசூதிகள் சூறையாடப்பட்டது. வார்த்தையால் வர்ணிக்க முடியாத வெறுப்பால் உடல் வெப்பம் உச்சத்தை எட்டியது.

கோத்ராவை பற்றிய உண்மை, அச்சம்பத்திற்கு பின் திடீரென்று ஏற்பட்ட பெரும் மாற்றத்தினை நமக்கு கோடிட்டு காட்டுகிறது. கோத்ராவை பற்றிய உண்மை, மக்களை பிரித்தாளும் மிக படுபயங்கரமான மோசக்கார கும்பல்கள் இந்தியாவில் இருப்பதை நமக்கு கோடிட்டு காட்டுகிறது. நம்மை நாமே நாட்டின் அங்கமாக பார்க்க வேண்டிய அவசியத்தையும் கோத்ராவை பற்றிய உண்மை நமக்கு கோடிட்டு காட்டுகிறது.

குஜராத்தில் நடந்த இனப்படுகொலையானது திட்டமிட்டு நடத்தப்பட்ட செயலால் (கோத்ரா தொடர் வண்டி எரிப்பு) ஏற்பட்ட திடீர் கொந்தளிப்பே என்று தங்களை சுத்தமானவர்களாகக் காட்டுவதற்காக, மோடியும், அவர் சார்ந்துள்ள அரசியல் கட்சியான பாஜகவும், கடந்த ஐந்தாண்டுகளாய் எடுத்து கொள்ளும் பாதுகாப்பு கவசமாகும். கோத்ராவில் நிகழ்த்தப்பட்ட சம்பவமானது, கலவரக்காரர்களின் கட்டுபடுத்த முடியாத கோபத்தால் திடீரென்று ஏற்பட்ட நிகழ்வல்ல, மாறாக முக்கிய மத தலைவர்களாலும், முஸ்லிம் அரசியல் தலைவர்களாலும் முற்கூட்டியே சதி திட்டமிட்டு நிகழ்த்தியதாகும் என்று மோடியும் அவனது அரசாங்கமும் கடந்த ஐந்தாண்டுகளாக கூறி வருகிறது. குஜராத்தில் திட்டமிட்டு நிகழ்த்தபட்ட இனப் படுகொலைகளுக்கான காரணமே, கோத்ரா நகராட்சி தலைவரான முஹம்மது ஹுசைன் கலோட்டா செய்கு, பிலால் ஹாஜி, பாரூக் முஹம்மது பஹானா சலீம் செய்கு மற்றும் அப்துல் ரஹ்மான் தாண்டியா ஆகிய நான்கு நகரமன்ற உறுப்பினர்கள், ரோல் அமீன் ஹுசைன் ஹதிலா மற்றும் ஹபீப் கரீம் செய்கு ஆகிய இரண்டு வழக்கறிஞர்கள் இன்னும் உள்ளூர் மத தலைவரான மார்க்க அறிஞர் உமர்ஜி ஆகிய எட்டு நபர்களின் மீது பழியைச் சுமத்தி மோடி அரசாங்கம் கடந்த ஐந்து ஆண்டுகளாக கூறிவருகிறது.

கடந்த ஐந்து ஆண்டுகளாக, இவர்களே கொலையாளிகள் என்று மக்களிடமும், நீதிமன்றத்திலும், செய்தி ஊடகங்களுக்கும் சொல்லப்பட்டு வந்துள்ளது. இவ்வாறு கூறப்பட்ட அனைத்துமே, மோடியின் வினை-எதிர்வினை கூற்றின் அடிப்படையிலாகும். சபர்மதி விரைவு தொடர் வண்டி எரிப்பு சம்வத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 134 பேர்களில், அரசியல் மற்றும் மார்க்க பிரமுகர்களான இந்த எட்டு பேரை நீக்கி விட்டு பார்த்தால் மீதியிருப்பவர்கள் சிறு வியாபரம் செய்யும் வியாபாரிகளும், கூலி வேலை செய்பவர்களும், கனரக வாகன ஓட்டிகளும் ஆவர். கோத்ரா சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களின் பட்டியலில் இருந்து அரசியல் மற்றும் மார்க்க பிரமுகர்களை நீக்கினால் மீதியிருப்பவர்கள் தீடீரென்று ஏற்பட்ட கொந்தளிப்பான உணர்வால் உணர்ச்சி வயப்பட்டு எரித்தக் குற்றவாளிகளே. அரசியல் மற்றும் மார்க்க கோணத்தை நீக்கி கோத்ராவில் நிகழ்ந்த துர்சம்பவத்தை பார்த்தோமேயானால், மோடியின் தீய “வினை-எதிர்வினை கூற்று நிலைபெற முடியாமல் சுக்கு நூறாக சிதறுண்டு போவதைக் காண முடியும்.

எனவே இந்த எட்டு பேரும் பழிசுமத்தப்பட வேண்டியவர்களா?

கோத்ராவில் நடந்த தீ வைப்பு சம்பவத்துக்கு மோடியின் பின்னனியே காரணம் என சில அரசியல் குழுவினரும், சமூகத்திலுள்ள சில பொதுமக்களிலுள்ள பிரிவினரும் குற்றம் சுமத்துகின்றனர். திட்டமிட்ட படுகொலைகளை நிகழ்த்தி, அதனடிப்படையில் அரசியலில் இன ரீதியில் பிரிவு மற்றும் பிளவுகளை அறுவடை செய்திட இவன் (மோடி) S-6 பெட்டியை எரித்தான் என்று அவர்கள் குற்றம் சுமத்துகின்றனர். இது உண்மையா?

கோத்ராவில் உண்மையிலேயே நிகழ்வுற்றது என்ன? என்னும் பேருண்மையை பெறுவதற்காக, தெஹல்கா 6 மாத காலங்களாய் நெடிய புலனாய்வை நடத்தியது. பொய் வலைகள் உண்மைகளோடு சேர்த்து பின்னப்பட்டதையும், உண்மை நிகழ்வுகளோடு கற்பனைகளும் கலந்து தரப்பட்டதையும், மிகுந்த எச்சரிக்கையுடனும், அதி கவனத்துடனும் நடத்தப்பட்புலனாய்வு வெளிப்படுத்தியது. எங்களின் தேடல்கள் எம்மையே அதிர்ச்சி அடைய வைத்தது. உண்மையை கண்டறிவது மிகக் கடினமாக உள்ளதே என்றல்ல, மாறாக மேலே கூறப்பட்ட புனைவுகள் ஏராளமாக இருந்த காரணத்தாலே அதிர்ச்சியாக இருந்தது. இப்புனைவுகள் எல்லா இடத்திலும் இருந்ததை பார்க்க முடிந்தது. தாள்களிலும், உயிர் பிழைத்தவர்களின் வாக்குமூலத்திலும் இன்னும் தெரு வெளிகளிலும் காணக் கூடியதாகவே இருந்தது. எங்களின் தேடல்கள் எம்மையே அதிர்ச்சி அடைய வைத்தது. உண்மையே அதிர்ச்சியாக இருந்தது என்பதால் அல்ல, மாறாக மிக விவரத்துடனும் தீய நோக்குடனும் உண்மைகள் அழிக்கபட்டு இருந்ததனாலேயாகும். நாங்கள் பார்த்தது என்னவென்றால்.. மோடியும் அவனது அரசாங்கமும் சொல்லும் அனைத்தும் பொய்யே என்பதனை இது நிரூபிக்கின்றது. இது ஒரு சாதரண பொய்யல்ல, மாறாக திட்டமிட்டு உருவாக்கப்பட்ட பொய்கள். லஞ்சம் வழங்கப்பட்டும், நிர்பந்திக்கப்பட்டும், மிரட்டப்பட்டும் செயல்படுத்தபட்டவைகள்.

இதுவே நாம் கண்ட தகவல்கள். எப்போதும் போல், உண்மைகள் விளக்கமாக....

இன்ஷா அல்லாஹ் தொடரும்...

Tuesday, March 11, 2008

கொலை வெறிக்கூட்டத்தின் வாக்குமூலம் தமிழில்...23.

கோத்ரா: கொடூரமான பொய்

கட்டுப்படுத்த முடியாது திடீரென்று வெடித்த கலவரக்காரர்களின் கோபமானது திட்டமிட்டு நடத்தப்பட்டச் சதியாக, காவல்துறையால் எவ்வாறு காட்டப்பட்டது?. இவ்வாறு காட்டப்படுவதற்காகக் கையூட்டு பணம் கொடுத்தும் பலவந்தப்படுத்தியும் சித்திரவதைகள் செய்தும் பொய் சாட்சிகளைக் காவல்துறையினர் உருவாக்கினார்கள்.

மேலோட்டம்: போலியாகத் தயாரிக்கப்பட்ட பொய்களைப் பற்றிய ஒரு பகுப்பாய்வு.

கோத்ராவில் உண்மையிலேயே நடந்தது என்ன என்பதைக் கிடைக்கப் பெற்றத் தகவல்களைக் கொண்டுத் துல்லியமாக ஆராய்ந்து பார்த்தால் மட்டுமே தெரிந்துக் கொள்ள முடியும். இப்பகுதியில் காவல்துறையினரின் வழக்குகளைத் தெஹல்கா வெளிச்சத்திற்குக் கொண்டு வருகிறது

சம்பவம் ஒரு கண்ணோட்டம்

கோத்ராவில் வைத்து, சபர்மதி விரைவு தொடர் வண்டியில் நடந்தத் துயரமான சம்பவமே அதைத் தொடர்ந்து முஸ்லிம்கள் மீது பெரும் கலவரங்களின் மூலம் திட்டமிட்டு நடத்தப்பட்ட படுகொலைகளுக்கான காரணியாகும் என, முதலமைச்சர் மோடியும் இன்னும் குஜராத்திலுள்ள பாஜக அரசும் கடந்த ஐந்து ஆண்டுகளாகக் கூறி வருகின்றனர். சபர்மதி விரைவு தொடர் வண்டி தீயிட்டு கொளுத்தப்பட்ட சம்பவமானது, கட்டுக்கடங்காமல் திடீரென்று வெடித்த கலவரகாரர்(முஸ்லிம்)களின் கடுங்கோபத்தால் நடைபெற்ற பயங்கரமான விளைவு அல்ல, மாறாகத் திட்டமிட்டு நடத்தப்பட்ட வகுப்பு கலவரம் என்றே (மோடி கும்பல்) தெரிவிக்கின்றனர். ஆறு மாதக் காலமாக மிகக் கவனத்துடனும் சிரத்தையுடனும் தெஹல்கா மேற்கொண்ட புலன் விசாரணைகளின் போது முரண்பாடுகள் மிகுந்த பொய்யான தகவல்களும் நிர்பந்தங்களினாலும் கையூட்டுகளினாலும் (முஸ்லிம் சமுதாயத்தின் மீது பொய்கள் சுமத்தி)துரோங்கள் இழைக்கப்பட்டதும் வெட்ட வெளிச்சமாகியிருக்கிறது. இவ்வாறு அறியப்பட்டவைகள் சுருக்கமாக இங்கே தரப்படுகிறது.

காவல்துறையின் கூற்று:

தங்களது நோக்கத்தைப் பொருத்தும் வகையில் காவல்துறையினர் கூறும் கூற்றுகள் இதோ பின்வருமாறு;

கோத்ராவிலுள்ள முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்த மதத் தலைவர்கள் மற்றும் அரசியல் தலைவர்களில் பலர் - குறிப்பாக இஸ்லாமிய மார்க்க அறிஞர் உமர்ஜி, முஸ்லிம் நகராட்சி உறுப்பினர்களான பிலால் ஹாஜி மற்றும் பாரூக் பானா, விருந்தினர் விடுதி உரிமையாளரான ரஜாக் குர்குர் இன்னும் வியாபாரியான சலீம் பான்வாலா ஆகியோர் 27 பிப்ரவரி 2002 அன்று சபர்மதி விரைவு தொடர் வண்டியின் S-6 பெட்டியை எரிப்பதற்குச் சதி ஆலோசனை செய்தார்கள் (ஏதோ ஒரு பெட்டியல்ல குறிப்பாக S-6 பெட்டி. யாராலுமே விளக்கம் கூற முடியாத புதிரான காரணம்).

கோத்ரா நகராட்சி சபையின் முன்னாள் தலைவரான முஹம்மது ஹுசைன் கோல்டா ஷேக் இன்னும் நகராட்சி உறுப்பினர்களான சலீம் ஷேக் மற்றும் அப்துல் ரஹ்மான் தான்டியா ஆகியோர் வன்முறையாளர்களின் கூட்டத்தில் இருந்ததோடு, தொடர் வண்டியைத் தீயிட்டுக் கொளுத்த வன்முறை கும்பலைத் தூண்டினார்கள என கோத்ரா குற்றப்பத்திரிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஆனால், இவர்களும் சதி ஆலோசனை செய்ததில் ஈடுபட்டதாகக் காவல்துறையினர் கூறவில்லை.

S-6 பெட்டியின் தரையில் அதிக அளவில் எரிபொருள் (பெட்ரோல்) ஊற்றப்பட்டு பின்னர் தீயிட்டு கொளுத்தப்பட்டதாகக் காவல்துறை தெரிவிக்கிறது. மேலும், 26 பிப்ரவரி 2002 அன்று காலா பாய் என்ற முஸ்லிம் ஒருவருக்குச் சொந்தமான எரிபொருள் நிரப்பும் நிலையத்திலிருந்து 140 லிட்டர் பெட்ரோல் வாங்கபட்டதாகக் காவல்துறையினர் கூறியிருக்கின்றனர். பின்னர் மறுநாள் இந்த பெட்ரோல் ஒன்பது முஸ்லிம் வியாபாரிகளாலும் மேலும் திட்டவட்டமாகக் கூற முடியாத இக்காரியத்தில் ஈடுபட விருப்பப்படாத ஒரு ஹிந்து வியாபாரியாலும் எடுத்து செல்லப்பட்டு, சபர்மதி விரைவு தொடர் வண்டி நிறுத்தப்படும் அறை Aயில் வைக்கப்பட்டது.

மூன்று முஸ்லிம் வியாபாரிகள் ஓடிக் கொண்டிருக்கும் சபர்மதி விரைவு தொடர் வண்டியின் வெவ்வேறு பெட்டிகளில் ஏறி தொடர் வண்டியை நிறுத்தத் தட்டைத் திருகியதால் அது அறை Aயில் நிறுத்தபட்டதே அன்றி கரசேவகர்கள் தொடர் வண்டியின் சங்கிலியை இழுத்ததினால் அல்ல. (இதில் முக்கியமானது காவல்துறையின் இந்தச் சதி திட்டம் பற்றிய அனுமானம் தவிடு பொடியாகி விட்டது. இந்தத் தொடர் வண்டி அறை Aக்கு வெளியே நிறுத்தபடாமல் இருந்த போது, எப்படி S-6 பெட்டியில் தீயிட்டிருக்க முடியும்?)

S-6 மற்றும் S-7 பெட்டிகளை இணைக்கும் 6 அங்குல இணைப்பு தொடரைச் சிலர் சாதாரண கத்தரிகோலால் துண்டித்து S-6 பெட்டியில் ஏறியதாக காவல்துறையினர் தெரிவித்தார்கள். பிறகு திரவ எரிபொருளைத் (பெட்ரோல்) தரையில் ஊற்றினார்கள். உடைந்த ஜன்னல் வழியாகவும் பெட்ரோல் உள்ளே ஊற்றப்பட்டது.

தங்களது வாதத்தை பலப்படுத்த காவல்துறையினர் வைக்கும் ஆதாரங்கள்:

சம்பவத்தைக் கண்ணால் பார்த்த சாட்சிகளாகக் கூறப்படும் ஒன்பது பாஜக உறுப்பினர்களை வைத்தே காவல்துறையின் வாதம் நிறுவப்படுகிறது. கோத்ராவைச் சார்ந்த 41 முஸ்லிம்களை இவர்கள் அடையாளம் காட்டி, குற்றவாளிகளாகக் குற்றம் சுமத்துகிறார்கள். (பாஜகவைச் சார்ந்த இந்த ஒன்பது பேரில் ஒருவனான திலீப் தஸாதியா தனது வாக்குமூலத்தை முழுமையாக மாற்றி கூறியுள்ளான்).

S-6 பெட்டியிலும் இன்னும் பிற பெட்டிகளிலும் பிரயாணம் செய்த கரசேவகர்களின் வாக்குமூலங்களைக் கொண்டும் இவ்வாதம் நிறுவப்படுகிறது. கலவரகாரர்கள் பெட்ரோல் மற்றும் மண்ணெண்ணெய், திரவக குமிழ்கள், பெட்ரோல் குமிழ்கள் இன்னும் மசாலா பொடிகளையும் உடைந்த ஜன்னல் வழியாக வீசியதாகவும், திரவ எரிபொருளைப் (S-6) பெட்டியில் தெளித்ததாகவும் கரசேவகர்களின் வாக்குமூலத்தில் கூறப்பட்டுள்ளது.

புகையினால் தாங்கள் மயக்கமுற்று விட்டதாகவும் அதனால் எதனையும் பார்க்கவில்லை என்று மூன்று கரசேவகர்கள் முதலில் கூறினார்கள். இரண்டு மாதங்களுக்குப் பிறகு தங்களது கூற்றை மாற்றி, ஏதோ திரவ பொருள் (S-6) பெட்டியின் தரையில் ஊற்றப்படுவதைப் பார்த்ததாக கூறினர். இந்தப் புதிய தகவல்கள் 7 மே 2002 ல் - அதாவது முதல் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படுவதற்கு 15 நாட்களுக்கு முன்பு தான் சேர்க்கப்பட்டதோடு, இதுவே காவல்துறை விசாரணையின் முக்கியமான, வலுவான ஆதாரமாகவும் முன்னிறுத்தப்பட்டது. .

S-6 பெட்டியானது ஜன்னல் வழியாக வீசப்பட்ட திரவ எரிபொருளினாலோ அல்லது பெட்டியின் வெளியில் தெளிக்கப்பட்டதாலோ எரிக்கப்பட்டதாக மேலே சொன்ன குற்றச்சாட்டை தடயவியல் அறிக்கை தள்ளுபடி செய்தாலும், அது கூறுவது என்னவென்றால், "தென்புறத்திலிருந்து 60 லிட்டர் பெட்ரோல் பெட்டியின் தரையில் ஊற்றப்பட்டு இருக்கலாம்......" இதுவே ஏற்றுக் கொள்ளப்பட்ட அனுமானம்.

முதல் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு ஒன்றரை மாதத்திற்குப் பிறகு, காவல்துறை "அனைத்தும் தெரிந்த சாட்சி" என்று அஜெய் பாரியா என்னும் ஹிந்து வியாபாரி ஒருவரைக் கொண்டு வந்து நிறுத்தியது. இந்தச் சாட்சி, "தான் ஒன்பது முஸ்லிம் வியாபரிகளால் நிர்பந்திக்கப்பட்ட நிலையில் அவர்களுடன் சேர்ந்து பெட்ரோலைக் கொண்டு வந்து S-6 பெட்டியை எரித்ததாகக்" கூறுவது விளங்க முடியாத மர்மமான கூற்றாக உள்ளது. இவ்வழக்கின் முக்கிய ஆதாரமாக இருக்கும் பாரியா, தற்போது காவல்துறையின் கடுமையான கண்காணிப்பில் வாழ்ந்து வருகிறார்.

அவர்களைக் கைது செய்த இரு வாரங்களுக்குப்ப் பிறகு, மேலும் இரு முஸ்லிம் வியாபாரிகளான - இல்யாஸ் ஹுசைன் மறறும் அன்வர் கலந்தர் ஆகியோரை இரயிலின் தட்டைத் திருப்பி நிறுத்தியதாக குற்றம்சாட்டி காவல்துறையினர் கொண்டு வந்து நிறுத்தினர். இவ்விருவரும் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தப் பிரமாணத்திலேயே தங்களது வாக்குமூலத்தை முழுமையாக மாற்றி கூறியிருந்தனர்.

ஜாபிர் புன்யாமீன் பஹீரா என்னும் முஸ்லிம் வியாபாரி, பெட்டிகளை இணைக்கும் இணைப்பு தொடரை வெட்டிய குழுவில் தான் இருந்ததாகவும் பெட்ரோலை பெட்டியின் தரையில் ஊற்றியதாகவும் ஒப்பு கொண்டார். உமர்ஜியின் கட்டளையின் படி, முஸ்லிம் நகராட்சி உறுப்பினர்களான பிலால் ஹாஜி மற்றும் பாரூக் பானா ஆகியோர் S-6 பெட்டியை எரிக்க சொன்னதாகவும் பஹீரா சொன்னார். பின்பு பஹீரா, நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாணத்தில் தனது வாக்குமூலத்தை முழுமையாக மாற்றி கூறினார்.

சம்பவம் நிகழ்ந்து ஓர் ஆண்டிற்குப் பிறகு, காலா பாயின் எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் வேலை பார்த்த இரண்டு ஹிந்து விற்பனையாளர்கள் - பிரதாப் சிங் பட்டேல் மற்றும் ரன்ஜித் சிங் பட்டேல் ஆகியோர் 26 பிப்ரவரி 2002 அன்று மலை 140 லிட்டர் பெட்ரோலைக் குற்றவாளிகளுக்கு விற்றதாக கூறி காவல்துறையினர் வழக்கில் கொண்டு வந்து நிறுத்தினார்கள். இதில் குறிப்பிடதக்க விசயம் என்னவென்றால், இவ்விருவரும் முதலில் தாங்கள் எவருக்கும் அன்றைய தினமோ (இரயில் விபத்து நடந்த தினம்) அல்லது அதற்கு முந்தைய மாலையிலோ வாகனம் இல்லாமல் பெட்ரோலை விற்பனை செய்யவில்லை என்று கூறியிருந்தார்கள். தற்போது இவ்விருவருக்கும் 24 மணி நேர காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சிக்கந்தர் சித்தீக் என்பவன் காவல்துறையின் மற்றுமொரு சாட்சியாவார். S-6 பெட்டியை முஸ்லிம் வியாபாரிகள் எரிப்பதைத் தான் பார்த்தாகவும் இன்னும் குற்றவாளிகளுக்குத் தலா ரூ.1,500 வழங்கியதாக இஸ்லாமிய மார்க்க அறிஞர் உமர்ஜி தன்னிடம் கூறியதாகவும் இந்த சாட்சி தெரிவித்தான். மேலும் நகராட்சி மன்ற உறுப்பினர்களான பிலால் ஹாஜி மற்றும் பாரூக் பானா ஆகியோரை இரயில் பெட்டிக்கு அருகே பார்த்ததாகவும் தெரிவித்தான். இன்னும் கூடுதலாக, இஸ்லாமிய மார்க்க அறிஞர் யாகூப் பஞ்சாபி வன்முறை கும்பலை ஊக்கபடுத்தியதைத் தான் பார்த்தாகவும் தெரிவித்திருந்தான். ( இதன் அடிப்படையில், காவல்துறை மார்க்க அறிஞர் யாகூப் பஞ்சாபியைக் கைது செய்து பின்னர் விடுவித்து விட்டது. ஏனென்றால் சம்பவம் நிகழும் போது பஞ்சாபி இந்தியாவிலேயே இல்லை; அவர் சவுதி அரேபியாவில் இருந்தார்).

இஸ்லாமிய மார்க்க அறிஞர் உமர்ஜி மற்றும் முஸ்லிம் நகராட்சி மன்ற உறுப்பினர்களின் கட்டளைபடி S-6 இரயில் பெட்டிக்குத் தீயிட்டதில் தாங்கள் பங்கு பெற்றதை இன்னும் ஆறு முஸ்லிம் வியாபாரிகள் ஒப்பு கொணடதாகக் காவல்துறையினர் அவர்களிடம் ஒப்புதல் வாக்குமூலம் பெற்றனர். இவர்கள் அனைவரும் அதன் பிறகு தங்கள் ஒப்புதல் வாக்குமூலத்தை முழுமையாக மாற்றிக் கொண்டனர்.

எது நிகழவில்லையோ அதனை விலக்கினால் மட்டுமே கோத்ராவில் உண்மையிலேயே நிகழ்ந்த சம்பவம் என்ன என்பதை அறிந்து கொள்ள முடியும். மேலும் சில கொடுமையான கற்பனை தகவல்களைத் தெஹல்காவின் புலன் விசாரணை அம்பலபடுத்தியுள்ளது.

இறைவன் நாடினால் தொடரும்....

Thursday, March 6, 2008

கொலை வெறிக்கூட்டத்தின் வாக்குமூலம் தமிழில்...22.

குல்பர்க் முற்றுகை

அன்றைய தினம் அதிகாலையிலேயே விஹெச்பி மற்றும் பஜ்ரங்தளைச் சார்ந்தவர்கள் ஏராளமான எண்ணிக்கையில் மேஹனின் நகருக்கு வந்து சேர்ந்ததாக பிரகலாத் ராஜு கூறினான். விஹெச்பி அழைப்பு விடுத்த முழுஅடைப்பு நடைபெறுவதை நிர்பந்திக்கும் வகையில் அவர்கள் அனைவரும் வெளியில் வந்தனர். சுமார் 8:30 மணியளவில் இந்தக் கும்பலில் அவனும் இணைந்ததாகக் கூறினான்.

இந்தக் கும்பலில் உள்ள அதிகமானோர் சூலாயுதத்தைத் தங்கள் இடுப்பு கயிற்றில் கட்டி வைத்திருந்ததாக அவன் கூறினான். இன்னும் வன்முறையாளர்களில் அதிகமானோர் தடிகளையும், கார்களில் எரிபொருள்களையும் கொண்டுச் சென்றதாக மங்கிலால் ஜெயின் என்பவன் மேலும் தெரிவித்தான். வன்முறையாளர்களில் சிலர் கைத்துப்பாக்கிகளைக் கொண்டுச் சென்றதாக மதன் சாவல் தெரிவித்தான். விஹெச்பி.யினர் வந்து சேர்ந்தவுடனேயே முஸ்லிம் ஒருவரின் கடையைத் தீயிட்டுக் கொளுத்தியதாக சாவல் மேலும் கூறினான். பலசரக்கு மளிகை வியாபாரம் செய்யும் சாவல் இந்தத் தருணத்திலேயே தான் வன்முறை கும்பலுடன் இணைந்ததாக கூறினான்.

வன்முறையாளர்களை முன்நடத்திச் சென்றது யார்?

விஹெச்பி தலைவர்களான அதுல் வைத் மற்றும் பாரத் தெலி இன்னும் காங்கிரஸ் உள்ளுர் தலைவரான மேஹ் சிங் ஆகியோர்களே வன்முறை வெறிகூட்டத்தாரை வழி நடத்திச் சென்றதாக சாவல், ஜெயின் மற்றும் ராஜு கூறினார்கள்.

இஃஸான் ஜாப்ரி கொல்லப்பட்டது எப்படி?

வன்முறை கும்பல் வெகுவிரைவாக குல்பர்க் சமூகக் குடியிருப்பை முற்றுகையிட்டது. அங்கு 30 முதல் 35 முஸ்லிம் குடும்பங்கள் வசித்துவரும் நிலையில், பக்கத்திலுள்ள சேரி பகுதியிலுள்ள ஏழை முஸ்லிம்களும் இவ்வளாகத்தில் தஞ்சம் புகுந்திருந்தார்கள். இக் குடியிருப்பு வளாகத்திலுள்ள கதவு மூடப்பட்டிருந்ததாலும், அதன் சுற்று சுவர் மிக உயரமாக இருந்ததாலும்., வன்முறை வெறியர்களில் சிலர் முன் பகுதியிலிருந்தும் பின் பகுதியிலிருந்தும், சுவரைத் தகர்த்தார்கள்.

வன்முறை வெறியர்கள் வாயு உருளைகளை வீடுகளிலிருந்து கொண்டு வந்தனர். சுவரின் பக்கத்தில் வாயு உருளைகள் வைக்கப்பட்டு தீயிட்டு வெடிக்க வைக்கப்பட்டதால், 2 அடி தடிமம் கொண்ட சுவர் உடைக்கப்பட்டது என சாவல் கூறினான். மேலும் அவன் கூறும் போது, வன்முறை வெறியர்களில் சிலர் கயிற்றை கொண்டு 20 அடி உயர சுவரில் ஏறியதாகவும் சொன்னான். வன்முறை வெறியர்கள் குடியிருப்புகளைத் தகர்ப்பதனால் சுதாரித்து
கொண்ட ஜாப்ரி பதட்டத்தோடு காவல் துறை அதிகாரிகளையும் அரசியல் தலைவர்களையும் தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ள முயற்சி மேற்கொண்டார். தனது முயற்சிகள் பலன் எதனையும் தராததை உணர்ந்த ஜாப்ரி வன்முறை வெறியர்களை நோக்கி சுட்டு சிலரை காயமும் படுத்தினார் என்று குற்றம் சாட்டபட்ட ஒருவன் தெஹல்காவிடம் கூறினான். பிறகு வன்முறை வெறியர்கள் தன்னையும், பிற முஸ்லிம் மக்களையும் விட்டுவிடுவதற்காக பணம் தருவதாகவும் வேண்டினார். இந்தச் சமயத்தில், இவ்வெறியர்கள் பணத்துடன் கீழே வருமாறு கூறினார்கள்.

ஜாப்ரி கீழே வந்தவுடன், பணத்தைத் தரையில் போட்டு விட்டு திரும்பி செல்ல விரைந்தார். ஆனால் வன்முறை வெறியகள் அவர் மீது பாய்ந்துத் தாக்கினார்கள் என ஜெயின் கூறினான். ஐந்தாறு பேர் அவரைப் பிடித்துக் கொண்டார்கள். பிறகு ஒருவன் வாளால் தாக்கினான்... அவருடைய கைகள் வெட்டபட்டது; பிறகு கால்களும் வெட்டப்பட்டது... பிறகு மற்றவைகள் எல்லாம்... அவரை துண்டு துண்டாக வெட்டிய பிறகு, அவர்கள் அவரின் உடல் பாகங்களைக் குவித்து வைக்கப்பட்டிருந்தக் கட்டைகள் மீது வைத்து தீயிட்டார்கள்... அவரை உயிரோடு எரித்தார்கள் என கூறி சாவல் அக்கொடிய கொலை நிகழ்வை நினைவு கூர்ந்தான்.

ஜாப்ரியைக் கொன்ற பிறகு, மற்ற முஸ்லிம்களை வன்முறை வெறியர்கள் வெளியே இழுத்து கொண்டு வந்து, அவர்களை வெட்டி வீழ்த்தியதோடு தீயிட்டும் கொளுத்தினார்கள். மாலை சுமார் 4:30 மணியளவில் காவல்துறையினர் இறுதியாக அங்கு வந்து சேர்ந்தனர். வன்முறை வெறியர்களைக் கலைத்தனர். பிறகு உயிரோடு இருந்தவர்கள் காப்பாற்றப்பட்டார்கள்.

குற்றங்களில் கூட்டாளியாகிய காவல்துறை

காவல்துறையினர் வன்முறையாளர்கள் சுதந்திரமாகத் தங்களது வெறியாட்டதை நிகழ்த்திட வாய்ப்பளித்ததோடு மட்டுமல்லாமல், இக்கயவர்கள் முஸ்லிம்களைக் கொல்வதற்கு ஊக்கமும் உந்துதலும் அளித்ததாக மூன்று குற்றவாளிகளுமே ஒரு சேர உரைத்தார்கள். மேஹனின் நகர் காவல் நிலையத்தில் ஆய்வாளராகப் பணியாற்றிய KG எர்டா என்பவன் வன்முறை வெறியர்கள் முஸ்லிம்களைக் கொல்ல 3 முதல் 4 மணி நேர அவகாச காலம் அளிப்பதாக கூறினான் என மங்கிலால் ஜெயின் தெரிவித்தான். கூடுதலான பாதுகாப்பு படையினர் அன்றைய தினம் மாலையில் அஹ்மதாபாத் வந்திறங்குவதாக எதிர்பார்க்கப்பட்டதால் தான் இக்கால அவகாசத்தை அந்த (அயோக்கிய) ஆய்வாளர் வழங்கினான் என்பதைத் தெஹல்கா கண்டுபிடித்தது.

சிலமணி நேர கால அவகாசத்திற்குள் வன்முறை வெறியர்கள் என்னென்ன செய்ய வேண்டும் என்று விரும்புகிறார்களோ அவை அனைத்தையும் செய்திட இசைவு தெரிவிக்கும் வகையில் காவல்துறையினர் முழுமையாய் விலகி இருந்து கொண்டார்கள் என ஜெயின் கூறினான். இத்தகைய நிலைபாடு, இக்கயவர்களின் வெறிக்கு மேலும் எரிபொருள் வார்ப்பதைப் போன்று இருந்ததால் அஹ்மதாபாத் முழுவதும் அதிக எண்ணிகையிலான முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட காரணமாய் இருந்தது.

அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த காவல்துறையினர் நகர்ந்து கொண்டதோடு மட்டுமல்லாமல் வன்முறையாளர்கள் போய் கொலை செய்வதற்குச் சைகை கூட தந்தார்கள் என ராஜு தெஹல்காவிடம் கூறினான். படுகொலைகள் கிட்டதட்ட நிகழ்த்தி முடிக்கபட்ட பின்பு உயிர் தப்பியவர்களை காப்பாற்றுவற்காக எர்டா வந்திறங்கினான். இந்த நேரத்தில் வன்முறையாளர்கள் எர்டாவிடம் சென்று அவனுடைய செயல்பாடு முறையல்ல, ஏனென்றால் உயிர் தப்பியவர்கள் வன்முறையாளர்களுக்கு எதிராக சாட்சி கூறுவார்கள் என்று முறையிட்டனர். எனவே மிகப் கொடிய திட்டம் எர்டாவின் எண்ணத்தில் உதித்தது. அந்தத் திட்டத்தின் படி, உயிர் தப்பியவர்களை வேனில் ஏற்றி கொண்டு குல்பர்கிலிருந்து வெளியேறும் போது வன்முறை வெறியர்கள் கற்களை வேனின் மீது வீசவேண்டும். அப்போது அவ்வேனில் உள்ள காவலர்கள் அச்சமுற்று ஓடிவிட்டதாக கூறப்படும். அந்த சமயத்தில் வன்முறை வெறியர்கள் அவ்வேனை தீயிட்டு கொளுத்தி விடவேண்டியது. ஆனால் பதான் என்னும் முஸ்லிம் காவல் ஆய்வாளர் சரியான தருணத்தில் தலையிட்டக் காரணத்தால் இக் கொடிய (சதி)திட்டம் செயல்படுத்த முடியாமல் போயிற்று என சாவல் தெரிவித்தான்.

மூடிமறைக்கப்பட்ட உண்மைகள்

அதிகாரப்பூர்வமாக கூறப்பட்ட கொலை செய்யப்பட்டோர்களின் எண்ணிக்கையை விடவும் உண்மையான எண்ணிக்கை பலமடங்கு அதிகமாக இருக்கும் என்று தெஹல்காவிடம் பேசிய மூன்று குற்றவாளிகளுமே கூறினார்கள். மேலும் அவர்கள் கூறும் போது, இறந்து கிடக்கும் உடல்களை அப்புறப்படுத்தி கொடூரத்தின் தாக்கத்தைக் குறைத்து காண்பிக்க உதவுமாறு வன்முறை வெறியர்களிடம் காவல் துறையினர் கோரினார்களாம். விசாரணைகள் துவக்கப்படும் போது கூட, குற்றங்களை மூடி மறைக்கும் வேலைகள் தொடர்ந்து நடந்து கொண்டே தான் இருந்தது. வழக்கு விசாரணைகளை மேற்கொள்ளும் குற்ற புலனாய்வு அதிகாரிகள் குற்றவாளிகள் அனைவரையும் மிகச் சிறந்த கண்ணியமான முறையில் நடத்தியதாக மூன்று குற்றவாளிகளுமே தெஹல்காவிடம் கூறினார்கள். விசாரணை காவலின் போது காவல்துறையினர் அவர்களில் எவரையும் கேள்விகள் கேட்டு விசாரணை நடத்தாததோடு மட்டுமல்லாமல், சிறந்த உபசரிப்போடு நடத்தப்பட்டதாக அவர்கள் அனைவருமே கூறினார்கள். வன்முறை வெறியர்களில் சிலர் விசாரணை காவலில் வைக்கப்பட்டதே, காவல்துறையினர் செய்ய வேண்டிய குறைந்தபட்சச் சம்பிரதாயத்தைக் கடைபிடிக்க வேண்டுமென்ற அவசியத்தினாலேயே, தவிர இக்காவலானது உண்மையில் ஒரு வேடிக்கையான நாடகமேயாகும் என இம்மூவரும் கூறினார்கள். அப்போதைய குற்றப்பிரிவு DCPயாக பதவி வகித்த DG வன்வாரா தான் குல்பர்க் படுகொலைகள் பற்றி விசாரிக்கும் அதிகாரியாக நியமிக்கப்படடிருந்தான். ஆனால் அவன் அவர்கள் (வன்முறை வெறியர்கள்) எவரிடமும் படுகொலைகள் தொடர்பாக தகவல்களைப் பெறுவதற்காக எவ்வித கேள்விகளையும் கேட்கவில்லை என சாவல் தெரிவித்தான். தாங்கள் காவல்துறையினரிடம் கொடுத்த வாக்குமூலங்களில் பொய்யையே கூறியதாகவும், ஆனால் உண்மைகள் கூறும்படி காவல்துறையினரால் தங்களுக்கு எவ்வித நிர்பந்தமோ நெருக்கடியோ தரப்படவில்லை என்றும் இம்மூவரும் மேலும் கூறினார்கள்

காவல்துறையினர் தங்களுடைய வாக்குமூலங்கள் தவறாக பதிவு செய்ததாக உயிர் பிழைத்தவர்களில் டஜன் எண்ணிக்கையிலானோர் அஹ்மதாபாத் காவல்துறை ஆணையாளரிடம் புகார் எழுதி கொடுத்துள்ளார்கள். முஹம்மது ரஃபீக் பதான் என்பவர் காவல்துறை ஆணையாளருக்குச் சத்திய பிரமாணம் செய்து கொடுத்த வாக்குமூலத்தில், தன்னால் இனம்காட்டப்பட்டு பெயரும் கூறப்பட்ட நான்கு வன்முறை வெறியர்களின் பெயரைத் தனது வாக்குமூலத்தில் காவல்துறையினர் சேர்க்கவில்லை என கூறியுள்ளார். முஹம்மது சயீத் என்னும் மற்றொருவர், தன்னால் இனம்காட்டப்பட்டு பெயரும் கூறப்பட்ட ஒன்பது வன்முறை வெறியர்களின் பெயரைத் தனது வாக்குமூலத்தில் காவல்துறையினர் சேர்க்கவில்லை என கூறியுள்ளார். இது போன்ற டஜன் எண்ணிக்கையிலான புகார்கள் காவல்துறையினரிடம் தெரிவிக்கப்பட்டும், வெளிப்படையாக தெரியும் இம்முரண்பாடுகளை சரி செய்வதற்குக் காவல்துறையினர் மறுத்துவிட்டனர்.

விஹெச்பி தலைவர்களான பாரத் தெலி மற்றும் அதுல் வைத் ஆகியோரை வன்முறை வெறியர்கள் கும்பலில் கண்டதாக உயிர் பிழைத்தவர்களில் ஏராளமான பேர் காவல்துறையினரிடம் கூறியுள்ளார்கள். குல்பர்க் படுகொலைகளில் பங்கெடுத்த குற்றவாளிகள் மூவரும் தெஹல்கா இரகசியமாக பதிவு செய்த உளவு படக்கருவியில் இவ்விரு விஹெச்பி தலைவர்களும் வன்முறை வெறியர்கள் கும்பலில் இருந்ததை ஊர்ஜிதம் செய்துள்ளார்கள். ஆனால் காவல்துறையினர் இதுவரை இவர்களுடையப் பெயர்களை குற்றப் பத்திரிக்கையில் சேர்க்கவில்லை.

பாகம் 6 முடிவுற்றது. இறைவன் நாடினால் பாகம் 7 விரைவில்...