Monday, November 26, 2007

கொலை வெறிக்கூட்டத்தின் வாக்குமூலம் தமிழில்...10.

சுரேஷ் ரிச்சர்ட் என்பவன் மோடியை பற்றி கூறும் போது, “நீங்கள் எல்லோரும் சிறப்பானவர்கள் என்று அவர் எங்களுக்குக் கூறினார்”என்றான்.

தனிப்பட்ட முறையில் ரிச்சர்டைப் பாராட்டி வாழ்த்துக்களை மோடி தெரிவித்த போது, மிகச் சிறப்பாக வேலைகளை (இன படுகொலை, கற்பழிப்பு, கொள்ளை....) செய்து முடித்ததாக ச்சாரா இனத்தையும் புகழாரங்கள் பொழிந்துப் பாராட்டினார்

சுரேஷ் ரிச்சர்ட் தெஹல்காவுடன் மோடி தொடர்புடைய உரையாடலின் போது....

சுரேஷ் ரிச்சர்ட்: (படுகொலை நடந்த நாளில்) என்னென்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அவைகள் அனைத்தையும் மாலையின் கடைசி பொழுது வரை முழுமையாகச் செய்தோம்...7:30 மணியளவில்....கிட்டதட்ட 7:15 எங்களுடைய மோடி பாய் வந்தார்.....வீட்டின் வெளியே, இதே இடத்திற்கு.... எனது சகோதரிகள் ரோஜாக்களால் செய்த மாலை அணிவித்தனர்.

தெஹல்கா: நரேந்திர மோடி....

ரிச்சர்ட்: நரேந்திர மோடி....அவர் கருப்பு பூனை அதிரடி படையினருடன் வந்தார்.....தனது அம்பாஸிடர் காரிலிருந்து வெளியேறி இங்கு வரை நடந்து வந்தார்....எனது சகோதரிகள் எல்லோரும் அவருக்கு மாலை அணிவித்தார்கள்...... என்ன இருந்தாலும் பெரிய மனிதன் (?) பெரிய மனிதன் தான்.

தெஹல்கா: அவர் தெருவிலா வந்தார்?

ரிச்சர்ட்: இங்கே, இந்த வீட்டின் அருகே.... பிறகு இந்த வழியாகச் சென்றார்....நரோடாவில் எப்படி உள்ளது என்பதைப் பார்த்தார்.....

தெஹல்கா: பாட்டியாவில் வன்முறை சம்பவங்கள் நடந்த நாளன்றா?

ரிச்சர்ட்: அதே மாலை

தெஹல்கா: பிப்ரவரி 28

ரிச்சர்ட்: 28

தெஹல்கா: 2002

ரிச்சர்ட்: இங்கே அவர் எல்லா இடங்களையும் சுற்றிப் பார்த்தார்... எங்கள் இனம்(ச்சாரா) சிறப்பானது எனக் கூறினார்.....எங்கள் தாயார்களும் சிறப்பானவாகள் (எங்களைச் சுமந்ததால்) ..

தெஹல்கா: அவர் வந்தது 5 மணியளவிலா அல்லது 7 மணியளவிலா?


ரிச்சர்ட்: கிட்டதட்ட 7 அல்லது 7:30.... அந்த நேரத்தில் மின்சாரம் கிடையாது..... வன்முறை கலவரத்தால் எல்லாம் எரிந்து சாம்பலாகிப் போனது......

• • •

தெஹல்கா: நரேந்திர மோடி அன்றைய தினம், நரோடா பாட்டியா படுகொலைகள் நடந்த தினத்தில் உங்கள் வீட்டுக்கு வருகை தந்து விட்டுப் போன பின்பு, அதன் பிறகு எப்போவாவது உங்கள் வீட்டுக்கு மீண்டும் வருகை தந்தாரா?

ரிச்சர்ட்: ஒரு போதும் இல்லை

ராஜேந்திர வியாஸ் என்பவன் மோடியைப் பற்றிக் கூறும் போது, “பழிவாங்குவது என்பதே அவருடைய உறுதிமொழியாக இருந்ததுஎன்றான்.

கோத்ரா சம்பவத்திற்குப் பிறகுத் தாங்க முடியாத துயரில் இருந்த அஹ்மதாபாத் விஹெச்பி தலைவர் மோடியிடம் இருந்து எல்லாம் பார்த்து கொள்ளபடும் என்ற வார்த்தைகளைப் பெற்றுக் கொண்டார்.

ராஜேந்திர வியாஸ் தெஹல்காவுடன் மோடி தொடர்புடைய உரையாடலின் போது....

தெஹல்கா: நரேந்திர மோடி பற்றி.... நான் அறிந்து கொள்ள விரும்புகிறேன்...அவருடைய முதல் வார்த்தைகள் என்னவாக இருந்தது (கோத்ரா ரயில் சம்பவத்திற்குப் பிறகு)? உங்கள் அனைவர்களிடமும் அவர் என்ன சொன்னார்?.

ராஜேந்திர வியாஸ்: முதலில் அவர்(மோடி) சொன்னது என்னவென்றால் நாம் பழிவாங்க வேண்டும்...... நான் எதை பொதுவிடத்தில் வைத்து சொன்னேனோ அதையே.... அதன் பிறகு எதையும் நான் சாப்பிட கூடவில்லை.... ஒரு துளி தண்ணீர் கூடப் பருகவில்லை.... எத்தனையோ பேர் இறந்து விட்டார்களே என்று நான் கடுமையான கோபத்தில் இருந்தேன், கண்ணீர் எனது கண்களிலிருந்துப் பெருகி ஓடியது..... ஆனால் எனது பலத்தைக் காட்ட ஆரம்பித்ததும்.... திட்ட ஆரம்பித்ததும்... அமைதியாக இருங்கள் எல்லாம் கவனித்து கொள்ளப்படும் என்று அவர் (மோடி) சொன்னார்.... எல்லாம் கவனித்து கொள்ளப்படும் என்று அவர் (மோடி) சொல்வதன் அர்த்தம் என்ன?.....அவைகள் எல்லாமே புரிந்தது, புரிந்து விட்டது.....!

பகுதி 4 நிறைவடைந்தது. இன்ஷா அல்லாஹ் பகுதி 5 விரைவில்..

Saturday, November 24, 2007

கொலை வெறிக்கூட்டத்தின் வாக்குமூலம் தமிழில்...8.


கோத்ரா MLA வான ஹரேஷ் பட் மோடியைப் பற்றிக் கூறும் போது, "எந்த ஒரு முதலமைச்சரும் எக்காலத்திலும் செய்ய முடியாததை மோடி செய்தார்" என்றுக் கூறினான்.

ஹரேஷ் பட் தெஹல்காவுடன் மோடி தொடர்புடைய உரையாடலின் போது....

தெஹல்கா: கோத்ரா சம்பவம் நடந்த போது, நரேந்திர மோடி உடைய உணர்வுகள் எவ்வாறு இருந்தது?

ஹரேஷ் பட்: அதை நான் உனக்குச் சொல்ல முடியாது.....ஆனால் அது சாதகமாக இருந்தது என்று மடடும் நான் சொல்ல முடியும்......புரிந்துணர்வின் காரணமாக அந்த நேரத்தில் நாங்கள் பரிமாறிக் கொண்டோம்.

தெஹல்கா: எனக்குச் சிலவற்றை கூறுங்களேன்.... அவர்.......

ஹரேஷ் பட்: நான் பேசப்பட்ட விஷயங்களைத் தரமுடியாது.....ஆனால் எந்த ஒரு முதலமைச்சரும் எக்காலத்திலும் செய்ய முடியாததை மோடி செய்தார்.

தெஹல்கா: நான் எங்கேயும் அதை மேற்கோளாகக் காட்ட மாட்டேன்....அந்தக் காரணத்திற்காக....நான் உங்களிடம் கூட மேற்கோளாகக் காட்ட போவதில்லை.

ஹரேஷ் பட்: நாங்கள் என்னென்ன செய்ய முடியுமோ அவற்றை எல்லாம் செய்வதற்கு 3 நாட்களைக் கொடுத்தார். இம் மூன்று நாட்களுக்குப் பிறகு தன்னால் மேலும் அதிகமான நேரம் எதையும் தரமுடியாது என்றும் சொன்னார்.....இதை வெளிப்படையாகவே சொன்னார்.....மூன்று நாட்களுக்குப் பிறகு நிறுத்துமாறு அவர் எங்களைக் கேட்டு கொண்டார், எல்லாம் நிறுத்தப்பட்டது.

தெஹல்கா: மூன்று நாட்களுக்குப் பிறகு தான் அது நிறுத்தப்பட்டது....இராணுவமும் கூட அழைக்கப்பட்டதே...

ஹரேஷ் பட்: எல்லா படைகளும் வந்தது.... எங்களுக்கு மூன்று நாட்கள் கிடைத்தது..... அந்த மூன்று நாட்களில் என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்தோம்........

தெஹல்கா: அவர் அதைச் சொன்னாரா?

ஹரேஷ் பட்: ஆம்....அதனால் தான் நான் சொல்லுகிறேன் , எந்த ஒரு முதலமைச்சரும் செய்ய முடியாததை அவர்(மோடி) செய்தார்...

தெஹல்கா: அவர்(மோடி) உங்களிடம் பேசினாரா?

ஹரேஷ் பட்: நாங்கள் ஒரு சந்திப்பில் கலந்துக் கொண்டோம் என்று உங்களிடம் சொன்னேனே?

......

ஹரேஷ் பட்: அவர் அரசை நடத்த வேண்டியுள்ளது....இப்போது அவர் சந்திக்கும் கஷ்டம்....அதிகமான வழக்குகள் மீண்டும் திறக்கப்படடுள்ளது...மக்கள் அவருக்கு எதிராகத் திரும்பியுள்ளார்கள...

தெஹல்கா: பாஜகவில் உள்ளவர்கள் அவருக்கு எதிராக வெறுப்படைந்துள்ளார்கள்....

ஹரேஷ் பட்: பாஜகவில் உள்ளவர்கள்... எதுவெல்லாம் அவர் செய்துள்ளாரோ அது அவரை வாழ்வில் மிக உயாந்தவராக ஆக்கியுள்ளது. அதனை மற்ற அரசியல்வாதிகளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை...

நானாவதி-ஷா ஆணையம் முன்பு அரசாங்கச் செயல்பாடுகளை நியாயப்படுத்த அரசின் சட்ட ஆலோசகராக நரேந்திர மோடியால் நியமிக்கப்பட்ட அரவிந்த் பாண்ட்யா மோடியைப் பற்றி கூறும் போது, "மோடி மட்டும் அமைச்சராக இல்லாது இருந்திருந்தால், அவரே வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்திருப்பார்" என்றுக் கூறினான். மோடியைப் பற்றிய புகழ்ந்துரையில் அரவிந்த் பாண்ட்யா மேலும் கூறும் போது, குஜராத்தின் முதலமைச்சர் ஹிந்து சமாஜின் புதியக் காவலர் என்று வர்ணித்தான்.

அரவிந்த் பாண்ட்யா தெஹல்காவுடன் மோடி தொடர்புடைய உரையாடலின் போது....

அரவிந்த் பாண்ட்யா : (கோத்ரா முஸ்லிம்கள்) தாங்கள் செய்தவை அப்படியே சென்று விடும் என எண்ணினார்கள். காரணம், இயற்கையில் குஜராத்திகள் மென்மையானவர்கள். முன் காலங்களில் அவர்கள் குஜராத்திகளை அடித்துள்ளார்கள்; அவர்கள் உலகத்திலுள்ளவர்களை கூட அடித்துள்ளார்கள். ஆனால் எவரும் அவர்களுக்கு எதிராக எவ்வித தைரியத்தையும் காட்டவில்லை... ஒரு போதும் அவர்களைத் தடுத்ததில்லை... முன்னரெல்லாம் அவர்கள் பிரச்சனைகள் செய்யும் போது எவ்விதச் சிரமமும் இல்லாமல் சென்று விடுவதை போன்று இந்த முறையும் சென்று விடும் என எண்ணினார்கள். முன்பு இங்கே காங்கிரஸ் ஆட்சி செய்தது... அவர்கள் ஓட்டைப் பெறுவதற்காக காங்கிரஸ் குஜராத்திகள் மற்றும் ஹிந்துக்களை அடக்கியது... ஆனால் இந்த முறை அவர்கள் செமையாக அடித்து நையப் புடைக்கப்பட்டார்கள்... இப்பொழுது இங்கே ஹிந்து ஆட்சி நடைபெறுகிறது... குஜராத் முழுவதும் ஹிந்துக்களால் ஆட்சி நடத்தப்படுகிறது. இன்னும் அது கூட விஹெச்பி மற்றும் பாஜகவில் உள்ளவர்களிலிருந்து நடத்தப்படுகிறது....

தெஹல்கா: அவர்கள் தப்புக் கணக்கு போட்டுவிட்டார்கள்...

பாண்ட்யா : இல்லை, என்ன நடந்திருக்கும்....ஒருகால் இது காங்கிரஸ் அரசாக இருந்திருந்தால், அவர்கள் ஒருகாலும் ஹிந்துக்கள் முஸ்லிம்களை அடிப்பதற்கு அனுமதித்திருக்க மாட்டார்கள். அவர்கள் தங்கள் நிர்வாகப் பலத்தை பயன்படுத்தி ஹிந்துக்களை கீழே இழுத்துப் போடவே முயன்றிருப்பார்கள்... அவர்கள் முஸ்லிம்களைக் கலவரத்திலிருந்து ஒரு போதும் தடுத்திருக்க மாட்டார்கள்... அவர்கள் ஹிந்துக்களை அமைதி காக்கும் படிக் கூறியிருப்பார்கள். ஆனால் அவர்களைத் (முஸ்லிம்களை)தொடுவதற்கு கூட ஒன்றும் செய்திருக்க மாட்டார்கள்... இது போன்றச் (கோத்ரா) சந்தர்பங்களின் போது கூட ஒன்றும் செய்திருக்க மாட்டார்கள்.... ஆனால் இந்தச் சமயத்தில் ஹிந்து அடிப்படை(வாத) அரசாங்கம் உள்ளது... எனவே மக்களும் தயாரானார்கள். இன்னும் மாநில அரசும் தயாரானது.... இது இரகசியமாக உருவாக்கப்பட்டு கண்டும் காணாதிருப்பதுப் போல் நடந்த நல்லதொரு ஆதரவு.

தெஹல்கா: இது ஹிந்து சமுதாயத்திற்க்கும், ஹிந்து சமாஜ் முழுமைக்கும் கிடைத்த நல்லதொரு அதிஷ்டம்.

பாண்ட்யா : சொல்லுங்கள், ஆட்சியாளரும் உறுதியான குணம் படைத்தவராய் இருந்தார். ஏனெனில் பழிவாங்க வாய்ப்பளித்தார். இன்னும் நானும் தயார்... நாமெல்லாம் கல்யாண் சிங்குக்கு தான் முதல் முதலில் மரியாதை செய்ய வேண்டும் . ஏனெனில் உச்ச நீதிமன்றத்தின் முன்பாக எல்லாம் நான் தான் செய்தேன்; நான் தான் கட்சி என்று கூறி எல்லா வகையான பொறுப்பையும் தான் ஏற்றுக் கொண்டார்...

தெஹல்கா: பின்னால் அவர் கட்சியை விட்டு மாறிய போது...

பாண்ட்யா : அவர் செய்தார். ஆனால் அவர் தான் முதல் முதலாக உருவாக்கியவர். அவர் உச்ச நீதிமன்றத்தில் முன்பாக தைரியமாக நின்று நான் தான் என்று கூறினார்.

தெஹல்கா: முழுபொறுப்பையும் ஏற்று கொண்டார்.

பாண்ட்யா : அதற்குப் பிறகு இரண்டாவது கதாநாயகனாய்.... நரேந்திர மோடி வந்தார். இன்னும் அவர்(மோடி) காவல்துறையினர் ஹிந்துக்களுடன் இருக்க வேண்டும் என்று வாய்மொழி உத்தரவு பிறப்பித்தார். ஏனெனில் மாநிலம் முழுவதும் ஹிந்துக்களுடன் இருந்தது.

தெஹல்கா: ஐயா! பிப்ரவரி 27ல் மோடி கோத்ரா சென்ற போது விஹெச்பி தொண்டர்கள் அவரைத் தாக்கினார்களாமே, அது உண்மையா?

பாண்ட்யா : இல்லை. அவ்வாறு அவர்கள் செய்யவில்லை...அது இப்படி தான்...அங்கே 58 உடல்கள்.. அதுவும் மாலை நேரம்... நீங்கள் என்ன செய்தீர்கள் என்று மக்கள் உரிமையுடன் கேட்டார்கள்.

தெஹல்கா: காலை 8 மணியிலிருந்து மாலை வரை அங்கு வந்திறங்கவில்லை. எனவே விசயங்கள் சூடாகி விடவே, மோடிஜியும் கோபப்படடார்...

பாண்ட்யா : இல்லை அது அப்படி அல்ல.. மோடி நெடுங்காலமாக எங்கள் அணியில் தான் இருக்கிறார்... அந்த விசயத்தை மறந்து விடுங்கள்... அவர் பதவியில் இருக்கிறார். எனவே அவருக்கு நிறையக் கட்டுபாடுகள் இருக்கிறது. இன்னும் முழுமையாக சில உள்ளன. ஹிந்துக்களுக்குச் சாதகமாக எல்லா சைகைகளையும் கொடுத்ததும் அவர் தானே.. ஆட்சியாளர் உறுதியாக இருந்தால் பிறகு எல்லாமே நடக்க ஆரம்பித்துவிடும்.

தெஹல்கா: நீங்கள் சந்தித்தீர்களா... நரேந்திர மோடி 27ம் தேதி கோத்ராவிலிருந்து திரும்பிய பின்..

பாண்ட்யா : இல்லை, இந்தக் கேள்விக்கு பதிலளிக்க மாட்டேன்.... நான் பதிலளிக்கக் கூடாது.

தெஹல்கா: ஐயா! அவருடைய (மோடி) உணர்வுகள் முதலில் எவ்வாறு வெளிப்பட்டது என்பதை அறிய விரும்புகிறேன்.

பாண்ட்யா : நரேந்திர மோடி தொலைபேசி மூலமாக இதை அறிந்த போது அவருடைய இரத்தம கொதித்தது... சொல்லுங்கள் வேறு என்ன சொல்ல முடியும்... உங்களுக்குச் சிலக் குறிப்புகளைத் தந்து விட்டேன். இதற்கு மேல் எதையும் வெளிபடுத்த முடியாது அல்லது பேசக் கூடாது.

தெஹல்கா: இதை தான் நான் அறிய விரும்பினேன்... அவருடைய உணர்வுகள் முதலில் எவ்வாறு வெளிபட்டது...

பாண்ட்யா : இல்லை, அவரது உணர்வின் வெளிப்பாடு இவ்வாறு இருந்தது. அவர்(மோடி) மந்திரியாக இல்லாது இருந்திருந்தால் அவர் வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்திருப்பார். அவர் சக்தி பெற்றிருந்து, மந்திரியாகவும் இல்லாமல் இருந்திருக்குமானால், அவர் சில குண்டுகளையாவது சுகபூராவில் (அஹ்மதாபாத்தில் முஸ்லிம் அதிக அளவில் வாழும் பகுதி) வெடித்திருப்பார்.

இன்ஷா அல்லாஹ் தொடரும்..

Thursday, November 22, 2007

கொலை வெறிக்கூட்டத்தின் வாக்குமூலம் தமிழில்...7.

மோடியை பற்றி அவர்கள் என்ன சொன்னார்கள்.

நரேந்திர மோடி எப்படி முஸ்லிம்களுக்கு எதிரானச் செயல் திட்டங்களுக்குத் தனது ஆதரவையும், ஒப்புதலையும் அளித்தான் என்பது பற்றி பாஜக, RSS, விஹெச்பி மற்றும் பஜ்ரங்தள் ஆகிய சங்பரிவார அமைப்புகளைச் சார்ந்த முக்கிய நபர்கள் வெளிப்படையாகவே பேசினார்கள்.

மேலோட்டம்

கோத்ரா சம்பவத்திற்குப் பின், நரேந்திர மோடியின் கோபம் தெளிவாக அறியக் கூடியதாக இருந்தது. அவன் (மோடி) பழிதீர்க்கச் சபதம் செய்தான். பஜ்ரங்தள் உடைய தேசிய ஒருங்கிணைப்பாளரான ஹர்சத் பட் என்பவனும் ஒருவனாக கலந்துக் கொண்ட ஒரு சந்திப்பின் போது நரேந்திர மோடி, "அடுத்த மூன்று தினங்களுக்கு அவர்கள் என்னென்ன செய்ய விரும்புகிறார்களோ அவை அனைத்தும் செய்து கொள்ளட்டும்" என்று (மோடி)சொல்லியுள்ளான். அதன் பிறகு அவன் எங்களை நிறுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டான். அனைத்தும் நிறுத்தப்பட்டது என பட் தெரிவித்தான்.

அஹ்மதாபாத் நகர விஹெச்பி தலைவனான ராஜேந்திர வியாஸ்க்கு மோடி ஆறுதல் கூறும் போது, "ராஜேந்திர பாய் அமைதியாக இருங்கள். எல்லாம் பார்த்துக் கொள்கிறேன்" என்று ஆறுதலளித்தானாம்.

மோடியின் அரசு, வன்முறை கும்பல்களுக்கு அவர்களின் வெறி கொண்டத் தாக்குதல்கள் எவ்விதத் தடங்கலும் இல்லாமல் நடத்திட அனுமதித்ததோடு மட்டுமல்லாமல், குற்றம் செய்தவர்களைச் சட்டத்தின் பிடியிலிருந்து பாதுகாப்பதற்கும் முயன்றது. நரோடா பாட்டியா வழக்கில் முக்கிய குற்றவாளியான பாபு பஜ்ரங்கி என்பவன் மவுண்ட் அபுவிலுள்ள குஜராத் பவனில் தங்குவதற்கு நரேந்திர மோடியே எல்லா ஏற்பாடுகளையும் செய்ததோடு, அவனுக்கு பெயில் கிடைக்க உதவிடும் வகையில் இரண்டு நீதிபதிகளையும் மாற்றம் செய்துள்ளான்.

குஜராத் முழுவதும் காவல்துறையின் கட்டுப்பாட்டில் இருந்த காரணத்தால், காவல்துறையினர் ஹிந்துக்களுக்கு சார்பாக நடந்து கொள்ள வேண்டும் என மோடி உத்தரவிட்டதால், அது கலவரக்காரர்களுக்கு எவ்வித கட்டுபாடும் இல்லாமல் சுதந்திரமாக மூன்று நாள்கள் செயல்பட உதவியது. எதுவரையில் என்றால் இராணுவம் வரவழைக்கப்பட வேண்டும் என்னும் அதிகப்படியான நெருக்குதல்கள் மேலிட்டத்தில் இருந்து வரும் வரையிலுமாகும்.

நரோடா பாட்டியாவில் நிகழ்நத மனித இனப்படுகொலைகளுக்குப் பின்னர், முதலமைச்சரே சம்பவ இடத்திற்குச் சென்று, நரோடா பாட்டியா படுகொலைகளில் முக்கியமாக பங்கெடுத்தச் சாரா இன மக்களின் செயல்பாடுகளை "நியாயமானதே" என அங்கீகரித்தான்.

மோடியின் உறுதியான தலைமையினாலேயே, கோத்ரா சம்பவத்திற்குப் பின் நடந்த மனிதவர்க்கப் படுகொலைகள் நிகழ சாத்தியமானது என அரசாங்க சட்ட ஆலோசகரான அரவிந்த் பாண்ட்யா என்பவன் ஏற்றுக் கொண்டான்.

உங்களுடைய கை, மாபெரும் சட்ட ஒழுங்கில்லாத சமுதாயம்

அரசு நிர்வாகம் திரும்பிக் கொள்ள வேண்டும் என்ற தெளிவானக் கட்டளைகளை நரேந்திர மோடி மட்டும் பிறப்பிக்காமல் இருந்திருந்தால் குஜராத்தில் நடைபெற்ற இன அழிப்பு படுகொலைகளுக்குச் சாத்தியமே கிடையாது என்பதனை குற்றம்சாட்டபட்டவர்கள் ஒருவர் பின் ஒருவர் உறுதி செய்தனர்.

விஹெச்பி மற்றும் பஜ்ரங்தள் தலைவர்கள் படுகொலைகளை நிகழ்த்த எவ்வாறு சதி திட்டங்களை உருவாக்கினார்கள்?, சபர்மதி விரைவு இரயில் தீவைப்பு சம்பவம் நடந்த தகவல் கிடைத்த உடன், மிக அதிக அளவில் படுகொலைகள் செய்யப்படுவதற்கான முன்னேற்பாடுகள் உடனடியாக எவ்வாறு துவங்கப்பட்டது? பல்வேறு காவி அமைப்புகளிலுள்ள உறுதி மிக்க தொண்டர்களை உள்ளடக்கிய கொலைகள் செய்யும் குழுக்கள் எவ்வாறு உருவாக்கப்பட்டது? கலவரங்கள் நடக்கும் போது
காவல்துறையினர் கண்டு கொள்ளாமல் இருந்ததோடு மடடுமல்லாமல், சில சம்பவங்களில் வன்முறை கும்பலுடன் தோளோடு தோள் நின்று பங்கெடுத்தது எப்படி? குற்றவாளிகளுக்கு அவர்களுடைய குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு தண்டனை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டிய அரசு தரப்பு வழக்கறிஞர்கள் அதற்கு பதிலாக உயிர் தப்பியவர்களை மிரட்டவும், விலைக்கு வாங்கவும் திட்டமிட்டார்களே அது எப்படி?, போன்ற விபரங்கள் முந்தைய பகுதிகளில் விளக்கப்பட்டுள்ளது.

படுகொலைகளும் இன்னும் அது பற்றிய செய்திகளை இருட்டிப்பு செய்வது ஆகியன பாஜக அரசாலும் இன்னும் அதன் சகாக்களாகிய விஹெச்பி மற்றும் பஹ்ரங்தள் அமைப்புகளில் உள்ள பல்வேறு நிலைகளில் உள்ளவர்களால் செய்யப்பட்டது. எனவே குஜராத் படுகொலைகள் ஒரு சூத்திரகாரனுடையக் கட்டளைகளை கொண்டு இயக்கப்பட்ட கொடூர காட்சிகளா அல்லது எவ்வித ஒருங்கியைப்பாளரும் இல்லாமல் தானாகவே நடந்துவிட்ட உணர்வு வெளிப்பாடா? திரைக்குப் பின்னாலிருந்து கண்ணால் காணமுடியாத படி நூல்களை கொண்டு பொம்மலாட்டங்கள் நடத்துவது போன்று, திரைமறைவில் இருந்து கொண்டு யாரேனும் வன்முறை வெறியாளர்களை இயக்கிக் கொண்டிருந்தார்களா?

இம்மனித வர்க்கப் படுகொலைகள் நடந்து கொண்டிருந்த போது அம் மாநிலத்தை நிர்வகித்து வந்தவனுடைய அரசின் பல்வேறு துறைகளும் வன்முறை கும்பல்களுக்கு உதவிகள் செய்த போது, அவனுடைய நிஜமான பங்களிப்பு எத்தகைய அளவில் இருந்தது? குஜராத் இனப்படுகொலைகளில் காவல்துறையும் குற்றங்களில் பங்கு வகித்ததற்கு மோடி தான் பொறுப்பா?

இரத்த தாகவெறி பிடித்த விஹெச்பி மற்றும் பஜ்ரங்தள் தலைவன்களான பாபு பஜ்ரங்கி, ஹரேஷ் பட் மற்றும் அனில் பட்டேல் போன்றவர்களை, இவ்வெறியாட்டத்திற்கு செல்ல மோடியா கட்டளையிட்டான்?

கொலையாளிகளிடமிருந்தே உண்மைகளைக் கண்டுபிடிக்க தெஹல்கா முயற்சி மேற்கொண்டது. அப்போது இது தான் இக்கயவர்கள் மோடியை பற்றியும் அவனது பங்களிப்பை பற்றியும் சொல்லியது....

கோத்ரா MLA வான ஹரேஷ் பட் மோடியை பற்றிக் கூறும் போது, "எந்த ஒரு முதலமைச்சரும் எக்காலத்திலும் செய்ய முடியாததை மோடி செய்தார்".

இன்ஷா அல்லாஹ் தொடரும்...

Monday, November 19, 2007

கொலை வெறிக்கூட்டத்தின் வாக்குமூலம் தமிழில்...9.

உள்ளூர் பஜ்ரங்தள் தலைவனும், சதித் திட்டங்களைத் தீட்டியச் சூழ்ச்சியாளர்களில் ஒருவனும், இப்பொழுது சிவசேனா உறுப்பினருமான பாபு பஜ்ரங்கி, மோடியைப் பற்றிக் கூறும் போது, “என்னை பெயிலில் வெளியே கொண்டு வருவதற்காக, நரேந்திரபாய் மும்முறை நீதிபதிகளை மாற்றினார்” என்றான்.

மோடிக்கு இம்மனிதன்(?) மேல் ஒரு அனுகிரகம் உண்டு. இவன் தான் பின்னர் பர்ஜானியா என்றத் திரைபடத்தைத் திரையிட விடாமல் தடுத்தவன். ஒருவருக்கொருவர் மரியாதை உண்டு.

பாபு பஜ்ரங்கி தெஹல்காவுடன் மோடி தொடர்புடைய உரையாடலின் போது....

தெஹல்கா: பாட்யா சம்பவத்தின் போது மோடி உங்களை ஆதரிக்கவில்லையா?

பஜ்ரங்கி : அவர் தான் எல்லாவற்றையும் சாதகமாக்கித் தந்தார், இல்லையென்றால் யாருக்கு பலம் இவ்வளவு பலம் உண்டு.....? அவருடைய கைகள் தான் எல்லா இடத்திலும் இருந்தது... அவர் மட்டும் காவல்துறையை வேறு வகையில் செயல்படுமாறு கூறியிருந்தால், அவர்கள் எங்களை ஓ..... ....அவர்களால் அது முடிந்திருக்கும்.... முழுகட்டுபாடும் அவர்கள் கையிலிருந்தது.....

தெஹல்கா: அவர்கள் கட்டுக்குள்ளா?

பஜ்ரங்கி : குஜராத் முழுவதிலும் எல்லா நகரங்களும் அவர்களின் (காவல்துறை) கட்டுபாடுகளும் மிக உறுதியாகவே இருந்தது.. (ஆனால்) இரண்டு நாட்களுக்கு மட்டும் நரேந்திரபாய் தான் தன் கட்டுபாடுக்குள் வைத்திருந்தார்.... மூன்றாவது நாளிலிருந்து அதிகமான அழுத்தங்கள் மேலிடத்திலிருந்து வர ஆரம்பித்தது... சோனியா-வோனியா இன்னும் எல்லோரும் இங்கே வந்தார்கள்....

.• • •

தெஹல்கா: நீங்கள் சிறைச்சாலையில் இருந்த போது நரேந்திரபாய் உங்களைச் சந்திக்க வந்தாரா?

பஜ்ரங்கி : நரேந்திரபாய் என்னைச் சந்திக்க வந்திருப்பாரானால், அவருக்கு மிகப் பெரிய நெருக்கடி வந்திருக்கும்....நான் அவரைப் பார்ப்பதைப் பற்றி எதிர்பார்க்கவில்லை.... இன்று கூட நான் எதிர்பார்க்கவில்லை.

தெஹல்கா: அவர் (மோடி) எப்போதாவது உங்களுடன் தொலைபேசியில் பேசினாரா?

பஜ்ரங்கி : அந்த வழியில் அவருடன் பேசினேன்.... ஆனால் எளிதாக அல்ல.... முழு உலகமே இதைப் பற்றிப் (குஜராத்தில் மோடியின் செயல்பாடுகள்) பேச ஆரம்பித்திருந்தது.

தெஹல்கா: ஆனால் நீங்கள் தலைமறைவாக இருந்த போது, அந்த சமயத்தில் அவர்.......

பஜ்ரங்கி : ம்ம்ம்....நான் இரண்டு அல்லது மூன்று தடவை பேசினேன்.

தெஹல்கா: அவர் (மோடி) எங்களை உற்சாகப்படுத்தினாரா?....

பஜ்ரங்கி : நரேந்திரபாய் நெசமான ஆம்பளை....அவர் (மோடி) எனது உடலில் ஒரு வெடிகுண்டு கட்டிக் கொண்டு என்னைக் குதிக்கச் சொல்லியிருந்தால்....அவ்வாறு நான் செய்வதற்கு நொடிப் பொழுது கூட எனக்கு ஆகாது.....நான் உடனே ஒரு வெடிகுண்டு எனது உடலில் சுற்றிக் கொண்டு எங்கு குதிப்பதற்கு நான் கூறப்பட்டேனோ அங்கே குதித்து விடுவேன்..... ஹிந்துகளுக்காக..

தெஹல்கா: அவர்(மோடி) மட்டும் இல்லாதிருந்தால், பிறகு நரோடா பாட்டியா, குலடபர்க் இன்னும்......

பஜ்ரங்கி : நடந்திருக்காது, நடந்திருப்பது மிகக் கடினமே....

• • •

தெஹல்கா: நரேந்திரபாய் படுகொலைகள் நடந்த மறுநாள் பாட்டியா வந்தாரா?

பஜ்ரங்கி : நரேந்திரபாய் பாட்டியா வந்தார்... அவர் சம்பவங்கள் நடந்த இடத்துக்கு வரமுடியவில்லை. ஏனென்றால் அவருடன் கமெண்டோ (அதிரடி படையினர்)-பமெண்டோ எல்லோரும் இருந்தார்கள்... ஆனால் பாட்டியா வந்து எங்களுடைய உற்சாகத்தைக் கண்டார். பின்னர் சென்று விட்டார்.... அவர் உண்மையிலேயே நல்ல ஒரு சூழலை விட்டுச் சென்றார்.....

தெஹல்கா: மிக உங்கள் அனைவருக்கும் ஆசீர்வாதங்களைச் சொன்னாரா....

பஜ்ரங்கி : நரேந்திரபாய் அங்கு பார்க்க வந்தவைகள் எதுவும் மறுநாளும் நிறுத்தப்படவில்லை....அவர் அஹ்மதாபாத் முழுவதும், மீயாக்களுடைய (முஸ்லிம்கள்) இடங்கள், ஹிந்துக்களுடையப் பகுதிகளும் என எல்லா இடங்களுக்கும் சென்றார்.... அவர்கள் (காவி பாவிகள்) நல்லபடியாக செய்துள்ளதாக மக்களிடம் (?) சொன்னார். அதோடு இன்னும் அதிகம் செய்ய வேண்டும் என்றும் கூறினார்.....

• • •

பஜ்ரங்கி : (படுகொலைகளுக்குப் பின்) காவல்துறை ஆணையாளர் ஆணைகள் பிறப்பித்து இருந்தார் (எனக்கெதிராக)..... நான் எனது வீட்டிலிருந்து வெளியேறுமாறுச் சொல்லப்பட்டேன்...நான் அங்கிருந்து ஓடினேன்... நரேந்திரபாய் என்னை....மவுண்ட் அபுவிலுள்ள குஜராத் பவனில் நாலரை மாதங்கள் தங்க வைத்திருந்தார்.... அதன் பிறகு நரேந்திரபாய் என்னென்ன செய்ய என்னிடம் சொன்னாரோ (நான் செய்தேன்)..... குஜராத்தில் நரேந்திரபாய் செய்ததை போன்று ஒருவராலும் செய்ய முடியாது... நரேந்திரபாயுடைய உதவிகள் மட்டும் எனக்கு இல்லாது இருந்திருந்தால், எங்களால் பழிதீர்த்து (கோத்ரா சம்பவத்திற்காக) இருக்க முடியாது..... (எல்லாம் முடிவடைந்த பிறகு) நரேந்திரபாய் சந்தோசப்பட்டார், மக்கள் (?) சந்தோசமடைந்தனர், நாங்கள் சந்தோசமடைந்தோம்.... நான் சிறைக்குச் சென்று விட்டுத் திரும்ப வந்துள்ளேன்....முன்பு வாழ்ந்த வாழ்க்கையின் பால் திரும்பி விட்டேன்.
• • •

பஜ்ரங்கி : நரேந்திரபாய் என்னைச் சிறையிலிருந்து வெளியே எடுத்தார்.... அவர் நீதிபதிகளை மாற்றிக் கொண்டே இருந்தார்... என்னுடைய விடுதலையை உறுதி செய்வதற்காகவே இதைச் செய்தார். இல்லையெனில் இது வரை என்னால் வெளியே வந்திருக்க முடியாது.... முதல் நீதிபதி ஒரு தோலாகியாஜி... அவர் பாபு பஜ்ரங்கி உறுதியாக தூக்கிலிடப்பட வேண்டும் என்று சொன்னார். ஒரு தடவையல்ல நாலைந்து முறை சொன்னார். இன்னும் அவர் வழக்கு சம்பந்தப்பட்டக் கோப்பை ஒரு ஓரத்தில் வீசினார்.... அதன் பிறகு இன்னொருவர் வந்தார். நான் தூக்கிலிடப்பட வேண்டும் என்று சொல்ல வருவதற்கு சற்று முன்பாக அவர் நிறுத்தப்பட்டார்.... இதன் பிறகு மூன்றாவது ஒருவர்... இப்படியாக நாலரை மாதங்கள் சிறையில் கழிந்தது. பிறகு நரேந்திரபாய் ஒரு செய்தியை அனுப்பினார்...அவர் (மோடி) ஒரு வழியைக் கண்டுபிடிப்பதாக அந்தச் செய்தியில் கூறியிருந்தார்... அதன் பிறகு அக்ஸை மேத்தா என்ற பெயருடைய ஒருவரை நீதிபதியாக நியமித்தார்... அவர் வழக்கு சம்பந்தப்பட்ட கோப்புகளை கூடப் பார்க்கவில்லை... (பெயில்) வழங்கப்படுகிறது என்று மிகச் சதாரணமாக அவர் சொல்லி விட்டார்... அதன் பிறகு நாங்கள் அனைவரும் வெளியே வந்தோம்... நாங்கள் அனைவரும் விடுதலையானோம்.... இதனால் நான் கடவுள் (?) மீது நம்பிக்கை வைத்துள்ளேன்... நாங்கள் ஹிந்துத்வாவுக்காகச் சாவதற்கும் தாயாராக இருக்கிறோம்.......

விஹெச்பியின் குறிப்பிடத் தகுந்த முக்கிய நபரும், கலுப்பூர் மற்றும் தரியாபூர் ஆகிய இடங்களில் முஸ்லிம்கள் மீது தாக்குதல்கள் நடத்த திட்டமிட்ட சதிகாரனான ரமேஷ் தேவ் என்பவன் மோடியைப் பற்றிக் கூறும் போது, “அவருடைய கடுங் கோபம் மிக அதிகமாக இருந்தது” என்றான்.

உணர்ச்சி கொந்தளிப்பில் இருந்த மோடி கோத்ரா சம்பவத்தின் போது தனது உணர்வை உண்மைபடுத்தி காட்டியது, சங்பரிவாரத்திற்காக இறுதி வரை உழைக்கும் ஒரு சகத் தொண்டனால் புரிந்து கொள்ள முடிந்தது.

ரமேஷ் தேவ் தெஹல்காவுடன் மோடி தொடர்புடைய உரையாடலின் போது....

ரமேஷ் தேவ்: அன்றிரவு நாங்கள் (விஹெச்பி) அலுவலகத்திற்குப் போயிருந்தோம்... அங்குச் சூழ்நிலை மனதை மிகவும் பாதிக்கக் கூடியதாக இருந்தது... பல ஆண்டுகளாக (நாம் வாங்கிக் கொண்டிருந்தோம்) என ஒவ்வொருவரும் உணர்ந்தார்கள். நரேந்திரபாய் எங்களுக்கு மிகச் சிறப்பாக உதவி செய்தார்....

தெஹல்கா: கோத்ரா வந்ததும் அவருடைய உணர்வு என்னவாக இருந்தது?

தேவ்: கோத்ராவில் அவர் மிகக் கடுமையான தகவலைச் சொன்னார்... அவர் கடுங் கோபத்திலிருந்தார்.... அவர் சங்பரிவாரத்தில் தனது குழந்தை பருவத்திலிருந்தே இருக்கிறார்.... அவரது கோபம் அப்படி இருந்தது..... அப்போது அவர்(மோடி) வெளிப்படையாக வரவில்லையே தவிர, தனது காவல்துறையின் செயல்பாட்டை முற்றிலுமாக முடக்கிச் செயலிழக்கச் செய்தார்.........

இன்ஷா அல்லாஹ் தொடரும்..

முஸ்லிம்களின் எண்ணிக்கையைக் குறைக்க எளிய வழி!

ஒரு முஸ்லிம் நான்கு பெண்கள் வரை திருமணம் புரிய இஸ்லாம் அனுமதிக்கின்றது. தங்களது மதம் கொடுக்கும் அனுமதியை அப்படியே பின்பற்றும் இந்திய முஸ்லிம்கள் ஒவ்வொருவரும் நான்கு பெண்களை மணம் முடித்து இஷ்டத்திற்கு குழந்தைகளைப் பெற்றுப் போடுகின்றனர். இதனால் இந்தியாவில் முஸ்லிம்களின் எண்ணிக்கை வருடம் தோறும் மிக அதிக அளவில் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது.

இதே நிலை நீடித்தால் இன்னும் ஒருசில வருடங்களில் முஸ்லிம்கள் பெரும்பான்மையினராக ஆகி, இந்தியா இஸ்லாமிய நாடாக மாறிவிடும். இந்தியா இஸ்லாமிய நாடாக மாறி விட்டால், இஸ்லாமிய நாட்டில் காஃபிர்கள் எவருமே வாழ முடியாது. ஏனெனில், இஸ்லாம் "காஃபிர்களைக் கண்ட இடத்தில் வெட்டிக் கொல்லக் கட்டளை இடுகின்றது".

அவ்வாறு ஒரு நிலை நிகழாமல் இருக்க வேண்டுமெனில், இந்தியாவில் முஸ்லிம்களின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்த வேண்டும். அதற்கு என்ன வழி?

இதோ அதற்குரிய எளிய வழி!



வந்தேறிப் பார்ப்பனப் பன்னாடைகளில் உள்ள இழி மிருகங்கள் சிலர் முஸ்லிம்களைக் குறித்தும், முஸ்லிம்களின் வளர்ச்சியைக் குறித்தும் அவிழ்த்து விடும் பொய் மூட்டைகளை நம்பி, அந்தப் பன்னாடைகளால் உருவாக்கி விடப்பட்டுள்ள மூளையற்ற காட்டுமிராண்டி சங்க் கூட்டம் முஸ்லிம்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதாக எண்ணிக் கொண்டு செய்யும் தெய்வீகப் பணியினை மேலே கண்டிருப்பீர்கள்.

ஆனந்தமாக உள்ளது. பார்க்கப்பார்க்க ஆனந்தமாக உள்ளது.

மேலும் மேலும் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் போல் உள்ளது. அவ்வளவுச் சிறப்பாகத் தங்களுக்கு இடப்பட்டப் பணியினைக் காட்டுமிராண்டிக் கூட்டம் நிறைவேற்றிக் கொண்டு வருகிறது.

பிஞ்சுக் குழந்தைகளையும் விட்டு வைக்காமல் எரித்து கரிக்கட்டையாக்கியிருக்கும் மிருகத்தை விடக் கேவலமான இழி ஜந்துக்கள், ஜாட்டான்கள் அனைத்து வித பாதுகாப்பு மரியாதைகளுடன் மக்கள் மத்தியில் தெனாவெட்டாக உலாவிக் கொண்டிருக்கின்றனர். இருக்கட்டும்.

ஆனால், ஒன்று மட்டும் இந்த காட்டுமிராண்டிக் கூட்டம் நினைவில் வைக்க வேண்டும். எப்பொழுதானாலும் தான் செய்யும் காரியத்திற்கான பலனை அனுபவித்தே தீர வேண்டும். எப்படிப்பட்டப் பாதுகாப்புடன் எந்த மூலையில் போய் ஒழிந்துக் கொண்டாலும்.... செய்த வினைகளுக்குப் பலன் வந்தடைந்தே தீரும்.

எரியும் மனங்கள் இங்கு எண்ணிலடங்காதவை இன்னும் உள. இந்தியாவிலிருந்து கடைசி முஸ்லிம் துடைத்தெறியப்படும் வரை(மீனாட்சி புரங்கள் இருக்கும் வரை அந்த எண்ணம் பலிக்கப்போவதில்லை), இந்த ஈனச்செயல்களை செய்தக் காட்டுமிராண்டிகள் நிம்மதியாக வாழலாம் என்று கனவிலும் நினைக்க வேண்டாம். அந்த மனங்களின் தீச்சுவாலை இறுதிவரை பற்றி எரிந்து கொண்டே தான் இருக்கும் - பரிகாரம் காணப்படும் வரை!.

பிணம்தின்னிப் பேய்கள்!

பிணம் தின்னி மோடி மற்றும் அவனைப் பயிற்றுவித்து உருவாக்கிய காவிக் கூட்டத்தின் உண்மை முகத்தை அந்த இழி பிறப்புக்களின் வாயிலிருந்தே தோலுரித்தத் தெஹல்காவின் ஆதார வீடியோக்கள், ஆவணங்கள், அறிக்கைகள் அனைத்தும் வெளி வந்து நாட்டு மக்கள் அனைவரையும் அதிர்ச்சியில் உறைய வைத்தப் பின்னரும், இரத்த வெறி நாய் மோடிக்கு எதிராகவும் காவிக் கூட்டத்திற்கு எதிராகவும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகள் எழுந்தப் பின்னரும் நாட்டில் நீதி நியாயத்தை நிலை நிறுத்த வேண்டிய உச்சநீதி மன்றம் இதுவரை எந்த வித நடவடிக்கைக்கும் உத்தரவிடாததுப் பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கலாம்.

அணில் கட்டியது, குரங்கு கட்டியது என நடக்காத ஒரு கதையை உருவாக்கி, நாட்டுக்கு நன்மையை ஏற்படுத்தப்போகும் சேது சமுத்திரத் திட்டத்திற்கு முட்டுக்கட்டை இடும் சங்க் கும்பலுக்கு எதிராகப் போராட்டம் அறிவித்த ஒரு மாநிலத்தின் முதல்வருக்கு எதிராக நேரடியாகக் களம் இறங்கி மிரட்டல் விடுத்த உச்சநீதி மன்றம், இவ்விஷயத்தில் மட்டும் வாய் மூடி மவுனமாக இருப்பதேன்?.

காரணம் தேடுபவர்களுக்குக் கீழ்கண்ட வீடியோக்கள் ஒருவேளை பதிலளிக்கலாம்.







தெஹல்காவின் கண்டறிதல்கள் அனைத்தும் ஜோடனையாம். அதில் பேசுபவர்கள் அனைவரும் வேண்டுமென்றே முகமூடி அணிந்து நடிக்கின்றார்களாம்.

எப்படி நாட்டு மக்களின் முன்னிலையில் இவர்களுக்கு இவ்வாறெல்லாம் பேச நாக்கு எழும்புகிறதோ தெரியவில்லை. இழி பிறவிகளிலும் தாழ்ந்த இழிபிறவிகள்!

மற்றொரு பெண்ணைக் கற்பழித்துக் கொன்றதாகப் பெருமையுடனும் சந்தோஷத்துடனும் கூறுபவனும், அவன் அவ்வாறு கூறுவதைக் கேட்டு புழகாங்கிதத்துடன் புன்முறுவல் பூக்கும் மனைவியும்...

இப்படிப்பட்ட ஈனப்பிறவிகளை, வெட்கம், மானம், சுயகவுரவம் என்றால் என்ன என்றே தெரியாத காட்டுமிராண்டிகளை விடக் கேவலமான ஜந்துக்களை உருவாக்கி விட்டுள்ள காவி கூட்டத்தில் உள்ள ஆண்களும் பெண்களும் எப்படி சிந்திப்பார்கள் என்பதற்கு இந்த விவாத நிகழ்ச்சியே தக்கச் சான்று.

சிந்தனை என்றால் என்னவென்றே தெரியாத, மூளை மழுங்கடிக்கப்பட்ட, மனித இரத்தத்தையும், உடலையும் உயிரோடு அடித்துச் சாப்பிடும் இரத்தவெறிப்பிடித்தக் காட்டுமிராண்டிக் கூட்டம் ஒன்று நாட்டு மக்கள் நடுவில் வந்தால் என்ன செய்ய வேண்டுமோ அதனை மேலும் தாமதிக்காமல் செய்வதே இந்திய நாட்டு நலனுக்கு நல்லது.

அதனை அரசாங்கம் செய்ய முன்வரவில்லை எனில், மக்களே முன் நின்று செய்வர்.

Saturday, November 17, 2007

கொலை வெறிக்கூட்டத்தின் வாக்குமூலம் தமிழில்...6.


மாநில அரசு எதை விரும்பியதோ அதை போலீஸ் செய்தது

ஹரீந்தர் பவேஜாவிடம் முன்னாள் கூடுதல் DGP (நுண்ணறிவு)RB ஸ்ரீகுமார் பேசி கொண்டிருக்கும் போது, "கலவரகாரர்களுடைய பார்வையில் அரசாங்கம், அவர்கள் பக்கமே இருப்பதாகக் கருதினார்கள்" என ஒப்புதல் அளித்திருந்தார்.


நீங்கள் கூடுதல் DGP (நுண்ணறிவு)ஆக இருந்த போது, சபர்கந்தாவிலிருந்து ஆயுதங்கள் கடத்தப்பட்டன என்றப் புகாரை பதிவு செய்தீர்களா?

2002ல், முஸ்லிம்கள் வாழும் சில பகுதிகளிலிருந்து ஆயுதங்கள் எடுக்கப்பட்டன. எங்களுடைய தகவல் என்னவென்றால், விஹெச்பியை சேர்ந்த நபர் ஒருவருக்கு சொந்தமான, வட்காமிலுள்ள இரும்பு பட்டறையில் தான் இந்த ஆயுதங்கள் தாயாரிக்கப்பட்டன. நான் எழுத்து மூலமாகவே அறிக்கை அனுப்பினேன். மேலும் அப்போதைய அஹ்மதாபாத் போலீஸ் தலைவரான KR கவ்சிக்கிடமும் இது குறித்துத் தகவல் சொன்னேன். அவர்கள் சோதனை நடத்திய போது ஆயுதங்கள் ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை. காரணம், சோதனை நடத்தச் சென்றவர்களே, சோதனை நடத்த வரும் செய்தியைக் கசிய விட்டதால், அங்கே சோதனையின் போது ஒன்றும் கைபற்றப்பட வில்லை என்பதனை பின்னர் நான் தெரிந்து கொண்டேன். இத் தகவல்களை பத்திரிக்கைகள் அறிந்து கொண்டன. ஹிந்துஸ்தான் டைம்ஸ் முதல் பக்க செய்தியாகவே வெளியிட்டது. அவர்கள் தொடர்ந்து எனக்குத் தொந்தரவு கொடுத்தனர். அதனால் ஒரு பலனும் கிடைக்கவில்லை. அங்கு நாட்டு துப்பாக்கிகள் தாயாரிக்கப்படுவதாக வலுவாக சந்தேகிக்கப்பட்டது.

கலவரத்தின் போது இந்த ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டனவா?

இந்தத் தகவல் பின்னரே கிடைத்தது. எனக்கு எதிராக ஒரு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. ஆனால் எவ்வித நடவடிக்கையும் எடுக்க முடியாது, ஏனென்றால் தகவல்களைப் பரிமாறுவது நுண்ணறிவு பிரிவுக்கு வழக்கமான ஒன்றே என DGP கூறிவிட்டார்.

சோதனையிட்டவர்கள் மீது ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்பட்டா?

(சிரிக்கிறார்) சோதனையிட்டவர்களின் செயல்பாடுகள், ஆளும்கட்சியின் அரசியல் ஆதாயத்திற்கு இசைவானதாகவே இருந்தது. காவல்துறை சிறப்பாக செயல்பட்டு சட்ட ஒழுங்கு அதன் கட்டுபாட்டுக்குள் இருப்பதாக உணர்த்தும் வகையில், ஆயுதங்கள் முஸ்லிம்களிடம் இருந்து கைப்பற்றபட்டதாக காட்டப்பட்டது. அதைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 15 தேதியன்று DG வன்ஜராவுக்கும், மற்றவர்களுக்கும் இந்த ஆயுதப் பறிமுதலுக்காக வெகுமதிகள் வழங்கப்பட்டது.

கலவரங்களின் போது ஆயுதங்களும், வெடிகுண்டுகளும் தங்கு தடையின்றி விநியோகிக்கப்பட்டது என்று ஏதேனும் புகாரை பதிவு செய்தீர்களா?

நானாவதி-ஷா ஆணையத்திற்கு அளிக்கப்பட்ட என்னுடைய முதல் பிரமாண பத்திரத்திலேயே எனது அறிக்கைகளின் பிரதிகள் இணைக்கப்பட்டுள்ளது. சூலாயுதங்கள் விநியோகம் செய்யப்பட்டதாக ஒரு தகவல் அந்த அறிக்கையிலே உள்ளது. ஏப்ரல் 2002 -ல் பதவியை ஏற்றுக் கொண்டேன். அதன் பிறகு வன்முறை வெறி கீழே இறங்கி விட்டது. FIRகள் முறையாக பதிவு செய்யபடவில்லை என்றும், அதிகமான குற்றச்சாட்டுகள் ஒன்றாக இணைக்கபட்டுள்ளது என்றும், வன்முறை கும்பலுக்குத் தலைமை தாங்கி நடத்திய விஹெச்பி தலைவர்களின் பெயர்கள் FIRகளில் விடுவிக்கப்பட்டுள்ளது போன்ற புகார்களை குறிப்பிட்டு அறிக்கை அனுப்பினேன். இது ஒரு சர்ச்சையாகிற்று. இவ்வாறு கொடுக்கப்பட்ட புகார் அறிக்கைகள் எவற்றின் மீதும், அரசாங்கம் எந்தவொரு அடுத்தகட்ட நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. அல்லது இவற்றை பற்றி எந்த மேலதிக விளக்கங்களையும் கேட்கவிலலை. அது மிகவும் தெளிவு.

பகுதி மூன்று இத்துடன் நிறைவு பெற்றது. பகுதி 4 இன்ஷா அல்லாஹ் விரைவில்..

கொலை வெறிக்கூட்டத்தின் வாக்குமூலம் தமிழில்...5.

முன்னுரை, பாகம் 1, பாகம் 2, பாகம் 3, பாகம் 4
போலீஸின் பங்கு

சட்டத்தின் பாதுகாவலர்களே சட்டத்தை உடைத்தெறிந்தக் கயவர்களுடன் இரகசியமாகப் பங்கெடுத்து குஜராத்தின் பயங்கரத்தை மேலும் எவ்வாறு மோசமாக்கினார்கள் என்ற அதிர்ச்சியூட்டும் தகவல்:

மேலோட்டம்

நரோடா பாட்டியாவில் கிடந்த 700-800 இறந்த சடலங்களை இரகசியமாக எடுத்து, அஹ்மதாபாத் முழுவதும் போடுவதன் மூலம் படுகொலைகளின் எண்ணிக்கையை க் (கோரத்தை) குறைத்து காண்பிப்பதற்காக உத்தரவு பிறப்பித்தானாம் (சமீபத்தில் தேர்தல் ஆணையத்தால் குஜராத் போலீஸ் துறை தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட்)போலீஸ் ஆணையாளர் PC பாண்டே.

பஜ்ரங்தள் தலைவனான பாபு பஜ்ரங்கி என்பவன் நரேந்திர மோடி சரண் அடையச் சொன்னவுடன் தான் அவ்வாறு செய்ததாகக் கூறினான். பாபு பஜ்ரங்கியைக் கைது செய்யும் போது இணை ஆணையாளர் (குற்றவியல் கிளை) PP பாண்டேயும் அவன் உடனிருந்த காவல் துறையினரும் இதுவெல்லாம் ஒரு நாடகம் தான் என்று அவனிடம் கூறினார்களாம்.

உள்ளுர் சங்பரிவார் தலைவன் ஒருவனை நீதிமன்ற காவலில் வைக்க ஆணையிடப்பட்டிருந்தும், மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் ND சோலங்கி அவனை விஹெச்பி அலுவலகத்தில் இருக்க அனுப்பி வைத்தார்.

கலுப்பூர் மாவட்ட விஹெச்பி நபரான ரமேஷ் தேவ் என்பவனிடம் DCP காட்வி, தேவ் தன்னிடம் முஸ்லிம்களை இனம் காட்டினால் குறைந்தது நான்கைந்து முஸ்லிம்களையாவது கொல்லுவேன் என உறுதியளித்தானாம். உடனே தேவ் காட்வியை ஒரு வீட்டிற்கு அழைத்துச் சென்று அங்கிருந்து கொண்டு முஸ்லிம்களைக் காட்டினானாம். நாங்கள் உணர்வதற்குள் காட்வி 5 நபர்களை கொன்று விட்டான் என தேவ் கூறினான்.

குல்பர்க் முஸ்லிம் சமுதாய குடியிருப்புகளுக்கு வெளியே குழுமியிருந்த வன்முறை கும்பலிடம், அக்கும்பல் தங்கள் வன்முறை வெறியாட்டங்களை நிகழ்த்திக் காட்ட 3 மணி நேர அவகாசம் மட்டுமே உள்ளது என போலீஸ் ஆய்வாளர் KG எர்டா கூறினான். உடனே வன்முறையாளர்கள் வெறிகொண்டவர்களாய் சென்றார்கள். போலீஸ் ஆய்வாளர் KG எர்டா முன்பாகவே ஒரு மனிதர் துண்டம் துண்டமாக வெட்டி கொலை செய்யப்பட்டார்.

முஸ்லிம்களை ஏற்றி வந்து கொண்டிருந்த ஒரு வாகனத்தை தீ வைத்து கொளுத்திடுமாறு போலீஸ் ஆய்வாளர் எர்டா விஹெச்பி தொண்டர்களிடம் சொன்னான். இன்னும் அவ்வாகனத்தில் உடன்வந்த காவலரை ஓடிவிடுமாறு கூறிய எர்டா, "இந்நிகழ்வு முழுவதும் இங்கேயே முடிக்கப்பட வேண்டும். பிறகு எவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்படும் என்ற கேள்விக்கே இடமில்லை", எனக் கூறினான்.

காக்கி கொலையாளிகள்

முஸ்லிம்கள் மீதான தாக்குதல்களை இரகசியமாக அனுமதித்திலிருந்து முன்னின்று தாக்குதல்களை நடத்தியது வரை, காவல்துறை அவர்களால் முடிந்த ஒவ்வொரு வழிகளாலும் வன்முறையாளர்களுக்குரிய வழியை சுலபமாக்கித் தந்தனர்.

2002 மார்ச் 2ம் தேதியன்று மாலை 6 மணியளவில், பாவாநகர் மாவட்டத்திலுள்ள கோகா ரோடு என்னுமிடத்திலுள்ள ஒரு மதரஸாவில், 200க்கும் மேற்பட்ட முஸ்லிம் குழந்தைகள் தஞ்சமடைந்திருந்த வேளையில், ஒரு ஹிந்து வெறிக் கும்பல் இரத்தத்தை ஓட்ட உறுமலோடு அந்த மதரஸாவினுள் நுழைந்தது. பாவாநகர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக அப்போது பணியாற்றிய ராகுல் சர்மா, துப்பாக்கி சூடு நடத்துமாறு தனது காவல்படையினரை ஆணையிட்டார். அதனால் வன்முறை கூட்டம் கலைந்தோடவே, குழந்தைகள் காப்பாற்றப்பட்டனர்.

பாவாநகர் சம்பவத்திற்குப் பின் அடுத்த இரண்டு வாரங்கள் போலீசார் அதே போன்று துணிச்சலான நடவடிக்கைகளை மேலும் சில இடங்களிலும் எடுத்தனர். மார்ச் 16 வரை பாவாநகர் மாவட்டத்தில் நடந்த போலீஸ் துப்பாக்கி சூட்டில் 8 பேர் உயிரிழந்தனர். அவர்களில் 5 பேர் ஹிந்துகளும், இருவர்
முஸ்லிம்களுமாவர். சரியான நேரத்தில் காவல்துறை முறையாக தலையிட்டக் காரணத்தால், இம்மாவட்டம் ஏறக்குறைய கொலைகள் நிகழாத மாவட்டமாக திகழ்ந்தது. இந்நிலையில் மார்ச் 16 அன்று கிட்டதட்ட காலை 10:10 மணியளவில், ராகுல் சர்மாவுக்கு அப்போதைய மத்திய உள்துறை இணையமைச்சராக இருந்த கோர்தன் ஜடாபியாவிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது.

நான் சிறப்பாக பணியாற்றியதாக ஜடாபியா பாராட்டினாலும், காவல் துறை துப்பாக்கி சூட்டின் போது இறந்தவர்களின் விகிதாசாரம் சரியாக இருக்கவில்லை என குற்றம் சாட்டினார். ஏனெனில் இறந்தவர்களில் ஹிந்துக்களின் எண்ணிக்கை முஸ்லிம்களை விட அதிகமாக இருந்தக் காரணத்தினால் அவ்வாறு குற்றம் சாட்டினார். "அதற்கு நான் அவரிடம் கூறினேன், இவைகள் எல்லாம் சம்பவங்கள் நடந்த இடத்திலுள்ள நிலமைகளின் அடிப்படையிலும், வன்முறையாளர்கள் நடக்கும் விதத்தின் அடிப்படையிலுமாகும்", என ராகுல் சர்மா பதவி நீக்கம் செய்யபட்ட பின் நானாவதி-ஷா ஆணையத்தின் முன்பு கூறினார்.

சர்மா மேலும் ஆணையத்திடம் கூறும் போது, 2002 மார்ச் 1ம் தேதி இரவு 10:20 மணியளவில் தான் அப்போதைய காவல்துறை தலைவரான K. சக்கரவர்த்தியை தொடர்பு கொண்டு, பாவாநகரில் கூடுதலான காவல் படையினர் நிறுத்தப்பட வேண்டும் என கேட்டப் போது DGP, அவர் மறுநாள் காலை ஒரு மாநில ரிசர்வ் போலீஸ் பட்டாளத்தை அனுப்புவதாகவும், இதற்கு மேல் நான் எவ்வித உதவியையும் எதிர்பார்க்கக் கூடாது எனவும் ஏனெனில் ஆட்சியாளர்கள் அதிகாரத்தை நிலைநிறுத்துவதில் முழுமையாக விட்டு கொடுத்து விட்டனர் என கூறினார்.

ஜடாபியாவுடனும் இன்னும் காவல்துறை தலைவருடனும் ராகுல் சர்மா செய்த இரண்டு உரையாடல்களுமே, 2002 மனித இனப் படுகொலைகளின் போது பெரும்பான்மையான காவல்துறையினர் குஜராத்தை எரித்துச் சுடுகாடாக்கிய வன்முறை கும்பல்களுடன் இணைந்து செயல்பட்டனர் என்பதற்குப் போதுமான சான்றைக் காட்டுகிறது. கொலைவெறி கும்பல்களைக் கொலை செய்யத் தூண்டியதிலிருந்து, அவர்களுக்கு வெடிப் பொருள்களை விநியோகம் செய்தது, வெடி குண்டுகளை மாவட்டங்களுக்கு இடையில் கொண்டு செல்வது, ஏற்கெனவே ஹிந்து கொலைவெறி வன்முறையாளர்களால் தாக்கப்பட்டிருந்த முஸ்லிம்கள் மீது துப்பாக்கி சூடு நடத்துவது போன்றவற்றைச் செய்து மனித இன படுகொலைகள் எளிதாக நடைபெற காவல்துறை எல்லா வழிகளிலும் முடிந்தவரை உதவியது.

கலவரக்காரர்கள் மற்றும் சதி செய்தவர்களிடம் இருந்து பெறபட்ட சில முதன்மையான தகவல்கள், வன்துறையாளர்கள் பெரும்பாலான காவல்துறையினரிடமிருந்து உதவிகள் பெற்றதையும், வன்முறையால் திக்குமுக்காடி திணறிய நாட்களில் சட்டத்தை நிலைநிறுத்த வேண்டியவர்களே சீருடை அணிந்த வன்முறையாளர்களாக மாறியதையும் தெரிவிக்கின்றது.

இன்ஷா அல்லாஹ் தொடரும்... பாகம் 6

Wednesday, November 14, 2007

வாளுக்குப் பயந்து மதம் மாறியப் பெண்கள்!

இஸ்லாமியக் கொள்கைகளை மெச்சி யாராவது ஒரு வார்த்தைப் பேசி விட்டால் - அவர் பெட்ரோ டாலருக்கு விலைப்போனவர்!

இஸ்லாமிய மார்க்கத்தின் வளர்ச்சியைக் குறித்து யாராவது வரலாற்றிலிருந்து எடுத்துக் கூறினால் - அது வாளால் பரப்பப்பட்டது!

பார்ப்பனப் பன்னாடைகளின் மனித உரிமை மீறல்களைச் சகிக்காமல் மீனாட்சிப்புரம் ஒட்டுமொத்தமாக மதம் மாறினால் - பணத்திற்கு விலை போனவர்கள்!

இதோ அதே வரிசையில், தஞ்சையில் ஒரு முஸ்லிம் டாக்டர் மற்றும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தினரின் வாளுக்குப் பயந்து இந்து மதத்தை விட்டு இஸ்லாத்திற்கு மதம் மாறிய 4 பெண்கள்!

தஞ்சாவூர் அருகே மதம் மாறிய 4 பெண்கள் பாதுகாப்பு கேட்டு மனு!
சென்னை, நவ.14: இந்து மதத்தில் இருந்து முஸ்லிம் மதத்துக்கு மாறிய 4 பெண்கள், பாதுகாப்பு கேட்டு போலீஸ் கமிஷனரிடம் மனு கொடுத்துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டம், அய்யம்பேட்டையைச் சேர்ந்தவர் லோகேஸ்வரி (22). இவரது தங்கைகள் அம்பிகா (20), சர்மிளா (19). அதே பகுதியைச் சேர்ந்தவர் கலைச்செல்வி (20). லோகேஸ்வரி, சர்மிளா, கலைச்செல்வி ஆகியோர், அங்குள்ள ரெஜ்யா கிளினிக்கில் வேலை செய்தனர்.

லோகேஸ்வரியின் அப்பா இறந்து விட்டார். அம்மா இருக்கிறார். முஸ்லிம் மதத்தின் மீது ஈடுபாடு ஏற்பட்டு, லோகேஸ்வரி, அவரது தங்கைகள், கலைச்செல்வி 4 பேரும் அவர்கள் வீட்டில் தொழுகை நடத்த ஆரம்பித்தனர்.

மேலும், 4 பேரும் பெயரையும் மாற்றிக் கொண்டனர். இது வெளியில் தெரிந்ததும், 4 பெண்களும் வீட்டில் இருந்து வெளியே கடந்த 7ம் தேதி சென்னைக்கு வந்தனர். பாரிமுனையில் உள்ள தமிழ்நாடு தவுஹீத் ஜமா அத் அமைப்பின் மாநில தலைமை அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தனர். பின்னர், 4 பேரும் போலீஸ் கமிஷனர் நாஞ்சில் குமரனை நேற்று சந்தித்து பாதுகாப்பு கேட்டு மனு அளித்தனர் அந்த மனுவில் கூறியிருப்பதாவது:

நாங்கள் மதம் மாறவில்லை. மார்க்கம்தான் மாறியுள்ளோம். லோகேஸ்வரியை அவரது மாமா தமிழ்ச்செல்வன், திருமணம் செய்ய விரும்பினார். அப்போதுதான் 4 பெண்களும் முஸ்லிம் மத மார்க்கப்படி நடப்பது தெரிந்தது. இது ஊர்க்காரர்களுக்குத் தெரிந்தது. அதனால், எங்களை மிரட்ட ஆரம்பித்தனர். நாங்கள் பயந்து போய் சென்னைக்கு வந்துள்ளோம்.

ஆனால், நாங்கள் வேலை செய்யும் கிளினிக்கின் டாக்டர்தான் மிரட்டி மதம் மாற்றியதாகக் கூறி, கடையடைப்பு செய்துள்ளனர். நாங்கள் ஊருக்குத் திரும்பினால் எங்களுக்கு பாதுகாப்பு இல்லை. அதனால், எங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் 4 பேரும் கூறியுள்ளனர். அவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும் என்று போலீஸ் கமிஷனர் நாஞ்சில் குமரன் உறுதியளித்துள்ளார்.
எத்தனைக் காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே! இந்த நாட்டிலே!

Tuesday, November 13, 2007

கொலை வெறிக்கூட்டத்தின் வாக்குமூலம் தமிழில்...4.

முன்னுரை, பாகம் 1, பாகம் 2, பாகம் 3

வெடிகுண்டு தயாரிப்பாளர்கள்

வி.ஹெச்.பி மற்றும் பஜ்ரங்தள் அமைப்புகள் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடிய ஆயுதங்களைப், பெரும்பாலும் போலீஸின் உடந்தையோடு மாநிலம் பரவலாக தாயாரித்து விநியோகமும் செய்தார்கள்.

மேலோட்டம்:

2002-ல் பஜ்ரங்தள் ராஷ்டிரீய ஸசன்யோக்கில் இருந்தவனும், தற்போது கோத்ரா சட்டமன்ற தொகுதியின் (கலவரத்துக்கு முன்பு வரை காங்கிரஸின் கோட்டை) பாஜக MLA ஆகவும் இருக்கும் ஹரேஷ் பட் என்பவன், தனதுச் சொந்தப் பட்டாசு தொழிற்சாலையில் வைத்து குண்டுகள் தாயாரிக்கப்பட்டதாக இதுவரை எவராலும் அறியப்படாத ஒரு தகவலைக் கூறினான். ராக்கெட் லாஞ்சர்கள் உள்பட நாட்டு வெடிகுண்டுகள் எல்லாம் எவ்வாறு உருவாக்கப்பட்டது என்றத் தகவலையும் அவன் விளக்கினான். இவ்வாறு தாயாரிக்கப்பட்ட ஆயுதங்கள், பின்னர் அஹ்மதாபாத்திலுள்ள கொலைகார வன்முறை கும்பல்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது.

2002-ல் அஹ்மதாபாத்தில் ஊரங்குச் சட்டம் அமுலில் இருந்த போதும், வாள்கள் பஞ்சாப்பிலிருந்தும், நாட்டுத் துப்பாக்கிகள் உ.பி, பீகார் மற்றும் மத்தியப் பிரதேசம் போன்றப் பகுதிகளிலிருந்து கொண்டு வரப்பட்டன. இவ்வாறு ஆயுதங்கள் வரவழைக்கப்பட்ட எந்த மாநிலங்களிலும் அப்போது பாஜக ஆட்சியில் இல்லாதிருந்தும் கூடக் கொண்டு வர முடிந்தது என பட் பெருமையாகக் கூறி கொண்டான். பிற மாநில எல்லைகளைக் கடந்துக் கொண்டு வரப்பட்ட ஆயுத குவியல்கள் ஒரு முறையல்ல, பலத் தடவைகள் கொண்டு வரப்பட்டன; "குவியல் குவியலாக அவைகள் இருந்தன" என்றத் தகவலையும் பட் வெளிப்படுத்தினான்.

குஜராத் கலவரத்துக்குச் சம்பந்தமில்லாததாக இருந்தாலும் கூட, "அவனால் பயிற்றுவிக்கப்பட்ட 40 இளைஞர்கள் டிசம்பர் 1992 பாபரி மசூதி இடித்த சம்பவத்தில் பங்கெடுத்ததாக", அதி முக்கியம் வாய்ந்த மற்றொரு இரகசியத்தையும் பட் வெளிப்படுத்தினான். இராணுவத்தில் தரப்படும் பயிற்சியை ப் போல, தடை ஓட்டப் பயிற்சி, 30 அடி கயிற்றில் எவ்வாறு ஏறுவது போன்றப் பயிற்சிகளை அவன் அந்த இளைஞர்களுக்குக் கொடுத்தானாம். அந்தப் பயிற்சி முகாம் இன்றும் அஹ்மதாபாத்தில் உள்ளது.

(தெஹல்கா அறிக்கை வெளிப்படுத்தும் ஹிந்துத்துவ வெறிநாய்கள் முஸ்லிம்களை அழிக்க எடுத்துக் கொள்ளும் அனைத்து முன்னேற்பாடுகளும், வருங்காலத்தில் முஸ்லிம் சமுதாயம் இந்தியாவில் நிம்மதியாக வாழ வேண்டுமெனில், அதற்காக எடுக்க வேண்டிய தற்காப்பு நடவடிக்கைகளின் முக்கியதுவத்தைக் குறித்தும், அந்தத் தற்காப்பு நடவடிக்கைகள் எவ்வகையிலெல்லாம் எடுக்கப்பட வேண்டும் என்பதனையும் விரிவாக எடுத்துரைக்கும். முஸ்லிம் சமுதாயம் இவற்றை வைத்து இனிமேலாவதுத் தன்னைத் தற்காத்துக் கொள்வதற்கான முன்னேற்பாடுகளில் கவனம் செலுத்தும் என நம்புவோமாக! - இறை நேசன்.)

வி.ஹெச்.பியைச் சார்ந்தத் தாவல் ஜெயந் பட்டேல் என்பவன் அவனுடைய குவாரிகளிலுள்ள அபாயகரமான வெடிகளை சபர்கந்தாவில் பயன்படுத்தி உள்ளான். வெடிமருந்துப் பொருள்களைக் கையாளுவதில் தேர்ச்சி பெற்ற பழம்பெரும் RSS காரனாகிய அம்ருத் பட்டேல் என்பவனுடைய உதவியால், குவாரியிலேயே வெடிமருந்துகள், RDX ஆகியவற்றைக் கொண்டு வெடிகுண்டுகள் தயாரிக்கப்பட்டன.

வி.ஹெச்.பியின் விபாக் பெர்முக்வாகிய அனில் பட்டேல் என்பவன், எவ்வாறு வெடிகுண்டுகள் சபர்கந்தாவில் உருவாக்கப்பட்டு பின்னர் அஹ்மதாபாத்திற்கு விநியோகம் செய்யப்பட்டது என்றத் தகவலை வெளியிட்டான்.

பகுதி 2 முடிவுற்றது. இறைவன் நாடினால், பகுதி 3 விரைவில். பாகம் 5

குறிப்பு: இதே தலையங்கத்தின் கீழ் வரும் உபதலைப்பான “தீவிரவாத நடவடிக்கையில் பெருமைபடும் வாணிபர்கள்” என்பதில் உள்ள தகவல்கள் தெஹல்கா வலைபதிவில் காணப்படவில்லை. கிடைக்கும் பொழுது இரண்டாம் பாகத்தின் அப்பகுதியும் இன்ஷா அல்லாஹ் தமிழாக்கி வெளியிடப்படும்.

Saturday, November 10, 2007

கொலை வெறிக்கூட்டத்தின் வாக்குமூலம் தமிழில்...3

பஜ்ரங்கி கூறவரும் கணிப்புபடி, நரோடாவில் அன்றைய ஒரு நாளின் இறுதியில் கொல்லப்பட்ட முஸ்லிம்களின் எண்ணிக்கை குறைந்தது 200 க்கும் மேலாகவே இருக்கும். ஆனால் இந்த எண்ணிக்கை மாநில அரசால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. அரசு அறிவிப்பின் படி நரோடா பாட்டியா மற்றும் நரோடா கவுனில் மொத்தமே 105 பேர் தான் கொல்லப்பட்டனர். எப்படியாயினும், அஹமதாபாத் வட்டாரத்தில் நரோடா மட்டுமே ஒட்டு மொத்தமாக ஒரே நேரத்தில் எரித்துச் சாம்பலாக்கப்பட்ட இடமாகும். அங்கிருந்து சில கிலோ மீட்டர் தொலைவில் தான் மேக்ஹனி நகரில் விஹெச்பி தலைவர்கள் வெறிப்பிடித்த வன்முறை கும்பலை முன்னின்று வழிநடத்திச் சென்று கொண்டிருந்தனர். அவர்களின் குறி முஸ்லிம்கள் காலங்கலமாக வாழந்து வரும் இடமாகிய குல்பர்க் என்றழைக்கப்படும் சமூகக் குடியிருப்புகளாகும்.

இம்மனிதவர்க்கப் படுகொலையில் பங்கெடுத்த மங்கிலால் ஜெய்ன், பிரகலாத் ராஜ், மதன் சாவல் ஆகிய மூவரையும் தெஹல்கா கண்டுபிடித்தது. இம்மூவரும் உள்ளுர் சிறு வியாபாரிகள்; இன்னும் இம்மூவர் மீதும் வன்முறை கலவரத்தில் ஈடுபட்டதற்காக அவர்களுக்கு எதிராக வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர்கள் கூறியதாவது, இவர்களும் இன்னும் இவர்களுடன் இருந்த வன்முறை கும்பலும், விஹெச்பி தலைவர்களான அதுல் வாய்த் மற்றும் பாரத் தெலி ஆகிய இருவரால் வழிநடத்தி செல்லப்பட்டது. இவ்விருவரும் FIRல் குற்றம்சாட்டபட்வர்களாகப் பதிவு செய்யப்பட்டனர். ஆனால், பின்னர் போலீஸ் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்த போது இவ்விருவரும் எல்லா குற்றச்சாட்டிலிருந்தும் நீக்கப்பட்டார்கள். சாவல் என்பவன், "அவனும் அவனுடனிருந்த கொடூரக் குற்றவாளிகளும் காங்கிரஸ் MPயான இஹ்ஸான் ஜாப்ரியை எப்படி துண்டம் துண்டமாக கை வேறு கால் வேறாக வெட்டி, பின்பு துண்டாக்கப்பட்ட அவரது பல்வேறு உடல் பகுதிகளை ஒன்றாகச் சேர்த்து எரித்தார்கள்" என்றக் கொடுஞ் செயலை விளக்கமான விவரித்தான்.

குல்பர்க் படுகொலைகளின் எண்ணிக்கை அரசாங்கக் கணக்கின்படி 39 ஆக கூறப்பட்டது. ஆனால் குற்றம்சாட்டபட்டவர்களில் ஒருவன் தெஹல்காவிடம் கூறும் போது கொல்லப்பட்டவர்களின் உண்மையான எண்ணிக்கை மிக அதிகாமாகவே இருக்கும் என்றான். இவ்வன்முறையில் கொல்லப்பட்டவர்கள் குல்பர்க் சமூகக் குடியிருப்புகளில் வசித்து வந்தவர்கள் போக, அதன் பக்கத்திலுள்ள சேரிகளில் வசித்த ஏழை முஸ்லிம்களும் ஆவர். இவர்கள் வன்முறையாளர்களின் வெறியாட்டத்திலிருந்துத் தங்கள் உயிர்களைப் பாதுகாக்க இக்குடியிருப்புகளில் தஞ்சமடைந்து இருந்தனர். இம் மக்களும் சேர்த்தேக் கொல்லப்பட்டார்கள். அஹமதாபாத்தில் வகுப்புக் கலவரங்களுக்கு அதிக வாய்ப்புள்ளப் பகுதிகளாகக் கண்டறியப்பட்டக் கலுப்பூர் மற்றும் தரியாபூர் ஆகிய இடங்களில் முஸ்லிம்களைத் தாக்க சதித் திட்டம் தீட்டிய சதிகாரர்களான விஹெச்பியின் தலைவர்கள் ராஜேந்திர வியாஸ் மற்றும் ரமேஷ் தேவ் ஆகியோரிடமும் தெஹல்கா உரையாடியது. பெரும் விளைவுகளை ஏற்படுத்தி விட்ட சபர்மதி விரைவு ரயிலில் பிராயணம் செய்தக் கரசேவர்களின் பிரயாண ஏற்பாட்டின் பொறுப்பாளனும், அஹமதாபாத் நகர விஹெச்பி தலைவனுமான ராஜேந்திர வியாஸ் என்பவன் சொல்லும் போது, ரயிலில் வைக்கப்பட்ட தீ, 59 கரசேவர்களின் உயிரை வாங்கிய தினத்தன்று இவன் விஹெச்பி தொண்டர்களிடம் கூறினானாம், "முஸ்லிம்கள் ஒரு நாள் போட்டியை விளையாடி விட்டு நமக்கு 60ஐ இலக்காகத் தந்துள்ளனர். இப்போது நாம் ஒரு டெஸ்ட் போட்டியை தான் விளையாட வேண்டும். நாம் 600 எண்ணிக்கையை எட்டும் வரையிலும் நிறுத்தக் கூடாது" என்று கூறி உணர்ச்சிகளைத் தூண்டியுள்ளான்.

கலுப்பூரில் வசிப்பவனும், தெஹல்காவின் கேமராவில் பதிவாகியுள்ளவனுமாகிய வியாஸ் என்பவன் கூறும் போது, தானே 5 முஸ்லிம்களைச் சுட்டுக் கொன்றதாகவும் மேலும் 9 முஸ்லிம் வீடுகளைக் கொளுத்தியதாகவும் விவரித்தான். ரமேஷ் தேவ் என்பவன் தரியாபூரில் விஹெச்பின் முக்கியமான ஆளாக இருந்தான். அவன் சொல்லும் போது, அவனும் அவனது சகச் சதியாளர்களும், 20வது வருடங்களுக்கு மேலாக தாங்கள் தெரிந்திருந்த முஸ்லிம்களையே குறி வைத்து தாக்கிக் கொன்றொழித்ததாக விவரித்தான். மேலும் தேவ் கூறும் போது, அவனது நண்பன் ஒருவனுடன் சேர்ந்து 10 சிறிய ரக துப்பாக்கிகளைத் தான் ஏற்பாடு செய்ததாக உரிமையும் கொண்டாடினான்.

வதோதரா: எரித்துக் கரியாக்கப்பட்ட நகரம்:

முஸ்லிம்கள் வாழும் ஒவ்வொரு இடங்களும் பல கட்டங்களாகத் தாக்கப்பட்டது. இத்தகையத் தாக்குதல்கள் 2 மாதக் காலங்களுக்கு மேலாக நடத்தப்பட்டது. பெஸ்ட் பேக்கரியில் மட்டும் 14 மக்கள் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டார்கள்.

அஹமதாபாதில் கட்டவிழ்த்து விடப்பட்டத் தாக்குதலுக்கு நிகராக எதுவுமே இல்லை என்ற போதிலும், குஜராத்தின் இரண்டாவதுப் பெரிய நகரமான வதோதராவில் முஸ்லிம்கள் பலக் கட்டங்களாக தாக்கப்பட்டார்கள்.

பிப்ரவரி 27 அன்று தொடங்கிய முதல் கட்டத் தாக்குதல்கள் மார்ச் 2 வரை நீடித்தது. அப்போது மார்ச் 1ம் தேதி, ஹனுமான் தெக்ரியிலுள்ள பெஸ்ட் பேக்கரியில் 14 மக்கள் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டச் சம்பவமே மிக மேசமான படுகொலை சம்பவமாகும். இதற்குப் பிறகு மார்ச் 15லிருந்து 20க்கு இடையிலும், அதைத் தொடர்ந்து ஏப்ரல் 25லிருந்து மே 2க்கு இடையிலும் குறிவைத்தத் தாக்குதல்கள் தொடர்ந்ததோடு, இவைகளுக்கு இடைபட்ட காலங்களிலும் கூட சிலச் சம்பவங்கள் நடந்தன.

நகரத்தில் முஸ்லிம்கள் பெருவாரியாக வாழும் ஒவ்வொரு இடங்களும் தாக்கப்பட்டது. கிஷன்வாடி, சாமா, அஷ்ஹாபிவி சாவ்ல், மாதவ்பூர் 2, மக்கர்புரா, அவ்தூத் நகர், ராகவ்பூரா, நூர் பூங்கா, கரேலிபாக், கோட்ரி கிராமம், ஹாஜி மியான் கா சாரா, ஹனுமான் தெக்ரி, ரோஷன் நகர், பானிகேட், தாய்வாடா மற்றும் மச்சிபித் ஆகியப் பகுதிகளுக்கு ஹிந்து வன்முறை கும்பல் வெறியோடு சென்றனர். முஸ்லிம்களுடைய நூற்றுக்கணக்கான வீடுகளும், வியாபாரத் தலங்களும் கொள்ளையடிக்கப்பட்டதோடு தீக்கிரையாக்கப்பட்டது. ஹிந்துக்கள் பெருவாரியாக வசிக்கும், வதோதராவின் புதியப் பகுதியான சாமாவில் பிப்ரவரி 28 அன்று, 20 பேரை கொண்ட வன்முறை கும்பலொன்று, போரசிரியர் JS பாண்டுக்வாலாவின் வீட்டைத் தாக்கியது. இவர் மாஹாராஜா சயாஜிராவ் பல்கலைகழகத்தில் இயற்பியல் துறை பேராசிரியராக பணியாற்றுவதோடு வாதோதராவில் மிக மதிக்கப்படக்கூடிய நபராகவும் இருந்தவர். பேராசிரியர் JS பாண்டுக்வாலாவும் அவரது மகளும், தனதுப் பக்கத்து வீட்டுக்காரான ஒரு ஹிந்து நண்பரின் வீட்டில் பாதுகாப்புப் பெற்றுக் கொண்டதனால், வன்முறை கும்பல் அங்கிருந்து வெறியேறியது.

இருப்பினும் மறுநாள் மார்ச் 1ம் தேதி, மிகப் பெரிய வன்முறை கும்பல் வாயு உருளைகள் உள்பட பல்வேறு பயங்கர ஆயுதங்களுடன் இரண்டாவது முறையாக பேராசிரியர் பாண்டுக்வாலா உடைய வீட்டைத் தாக்கியது. இம்முறை தங்களது வன்முறையால் அவரது வீட்டை எரித்துச் சாம்பலாக்கினார்கள். இது தவிரவும் அப்பகுதியில் உள்ள மேலும் இரு முக்கிய முஸ்லிம் உயர் அதிகாரிகளின் வீடுகளும் தீக்கிரையாக்கப்பட்டது. இம்மூன்று வீடுகளுக்கும் தீவைத்து வன்முறையில் ஈடுபட்டக் கும்பலில் இருந்த நபரான தீமந் பட் என்ற கலகக்காரனை தெஹல்கா கண்டுப் பிடித்தது. பட் கணக்காளனாக பணி செய்பவன். இவன் மாஹாராஜா சயாஜிராவ் பல்கலைகழகத்தில், தலைமை கணக்காளனாகவும் தணிக்கையாளனாகவும் பணியில் இருக்கிறான். ஆனால் இவனது உண்மையான பணி என்னவென்றால், முஸ்லிம்களுக்குப் பாதிப்புகளை ஏற்படுத்தித் துன்புறுத்துவதேயாகும்.

பட் பல்கலைகழகத்தில் பணியாளனாக இருப்பதோடு, வதோதராவின் தற்போதைய பாஜக MPயான ஜெயாபென் தக்காருக்கு அந்தரங்க உதவியாளனாகவும் இருக்கிறான். சபர்மதி விரைவு ரயில் தீ வைப்புச் சம்பவம் நடந்த அந்த இரவு, வதோதராவிலுள்ள பாஜக, RSS, VHP, பஜ்ரங்தள் மற்றும் ABVP ஆகிய அமைப்புகளில் உயர் பதவி வகிப்பவர்கள் ஒன்று கூடி சந்தித்தத் தகவலையும் பட் வெளிப்படுத்தினான். RSS உறுப்பினராகவும் உள்ள பட், அந்த இரவுக் கூட்டத்தில் பங்கெடுத்தாகக் கூறியதோடு, இந்தக் கூட்டத்தில் தான் முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்துவது குறித்தச் சதித் திட்டங்கள் வரையப்பட்டன எனக் கூறினான். அதே கூட்டத்தில் தான், கலவரத்திற்குப் பின் சட்ட நடவடிக்கைகளை சந்திக்கும் ஹிந்துக்களுக்குச் சட்ட உதவி வழங்குவது குறித்தத் திட்டமும் தீர்மானிக்கப்பட்டது.

வதோதராவிலுள்ள மற்றுமொரு பாஜக தலைவர் தீபக் ஷாவை தெஹல்கா சந்தித்தப் போது, பட் சொன்ன இரவு கூட்டம் குறித்தத் தகவலை ஊர்ஜிதப்படுத்தியதோடு, கூட்டம் எங்கே நடைபெற்றது? என்ற தகவலையும் தந்தான். இச்சதி கூட்டம் நர்மதா பண்ணை வீட்டில் வைத்து நடந்தது. முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்களை நடத்த தாழ்த்தப்பட்டச் சமுதாயத்தைச் சார்ந்த ஹிந்துக்களை காவி அமைப்புகள் பயன்படுத்தியதாக பாபு பஜரங்கி அஹமதாபாத்தில் வைத்து பெருமையாகக் கூறியதை, ஷாவும் ஊர்ஜிதம் செய்தான். இந்த ஷா மஹாராஜா சயாஜிராவ் பல்கலைகழகத்தின் சிண்டிகேட் உறுப்பினராகவும் இருக்கிறான்.

சபர்கந்தா: எங்கேயும் ஓடமுடியாது.

500 முஸ்லிம்களைக் கொல்ல வேண்டும் என சபதம் எடுத்திருந்த ஒரு விஹெபி தலைவனால் தலைமை தாங்கித் திரட்டிக் கூட்டிச் செல்லப்பட்ட வன்முறை கும்பலின் உறைய வைக்கும் கூக்குரலாக இருந்தது தான், "வெளியே கதவைப் பூட்டிவிட்டு முஸ்லிமை உள்ளே வைத்து எரி" என்னும் கோஷமாகும்.

சபர்கந்தா மாவட்டத்தில் தான் முஸ்லிம்கள் அதிகப்படியான பொருளாதார இழப்புகளால் பாதிக்கப்பட்டனர். இங்கு முஸ்லிம்களின் நூற்றுக்கணக்கான வீடுகளும், வியாபாரத் தலங்களும் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டது.

இங்கு நடைபெற்ற மனிதஇன படுகொலைகளுக்கு முக்கிய சூத்திரகாரனாக சதித் திட்டங்களை வகுத்தவன்,விஹெச்பியின் முக்கிய தலைமை பிரமுகனான அனில் பட்டேல் என்பவனாவான். சபர்மதி விரைவு ரயில் தீ வைப்பு சம்பவம் நடந்தப் பிறகு, குறைந்தது 500 முஸ்லிம்களையாவதுக் கொல்ல வேண்டும் என்றும், அவ்வாறு கொல்லாமல் போனால், தான் விஹெச்பியில் வகித்து வரும் பதவியை விட்டு விலகி விடுவதாக சபதம் செய்ததாகவும் அனில் பட்டேல் தெஹல்காவிடம் கூறினான். எங்கள் கோஷமே, "வெளியே கதவைப் பூட்டிவிட்டு முஸ்லிமை உள்ளே வைத்து எரி" என்பது தான் என மேலும் அனில் பட்டேல் தெஹல்காவிடம் கூறினான். விஹெச்பி மற்றும் RSS தொண்டர்களிடம், "வெளியே சென்று முஸ்லிம்களைக் கொல்லுங்கள், இன்னும் அவர்களின் சொத்துக்களை எரியுங்கள்" எனப் பகிரங்கமாகவே தூண்டிதாகவும் இவன் கூறினான். சபர்கந்தாவில் முஸ்லிம்களின் வீடுகளோ, வியாபாரத் தலங்களோ எரிக்கப்படாத கிராமங்களே இல்லை என்பதாகவும் பட்டேல் தெரிவித்தான். பட்டேலின் சொந்தக் கிராமமான தன்சுராவில் மொத்தம் 126 முஸ்லிம் வீடுகள் எரித்துச் சாம்பலாக்கப்பட்டத் தகவலையும் அவன் வெளியிட்டான்.

"முஸ்லிம்களுக்கு அதிகப்படியான உயிர் இழப்புகளையும், பாதிப்புகளையும் ஏற்படுத்த வேண்டும் என்கிற ஒரே உள்நோக்கமே அன்றி வேறுறொருத் திட்டமுமில்லை" என்பதாக பட்டேல் கூறினான். இம்மனித இனப் படுகொலையின் போது, பிரவீன் தொகாடியா மாவட்ட அளவில் செயல்களை நடத்தியதாகவும் மேலும் அவன் தெரிவித்தான். இன்னும் தொகாடியா படடேலிடம், "முக்கியமான விஹெச்பி ஆட்கள் யாரும் காவல் துறையால் குற்றம்சாட்டப்படக் கூடாது, சிறைக்குச் செல்லக் கூடாது என்பதை உறுதிசெய்யும் வகையில் பணியாற்றுமாறு" கூறியதாகவும் பட்டேல் தெரிவித்தான். சபர்கந்தாவில் 1545 வீடுகளும், 1237 வணிகத் தலங்களும் எரிக்கப்பட்டன. மேலும் 549 கடைகள் சூறையாடப்பட்டன.

பகுதி 1 முடிவுற்றது. இறைவன் நாடினால், பகுதி 2 விரைவில். பாகம் 4