Wednesday, November 14, 2007

வாளுக்குப் பயந்து மதம் மாறியப் பெண்கள்!

இஸ்லாமியக் கொள்கைகளை மெச்சி யாராவது ஒரு வார்த்தைப் பேசி விட்டால் - அவர் பெட்ரோ டாலருக்கு விலைப்போனவர்!

இஸ்லாமிய மார்க்கத்தின் வளர்ச்சியைக் குறித்து யாராவது வரலாற்றிலிருந்து எடுத்துக் கூறினால் - அது வாளால் பரப்பப்பட்டது!

பார்ப்பனப் பன்னாடைகளின் மனித உரிமை மீறல்களைச் சகிக்காமல் மீனாட்சிப்புரம் ஒட்டுமொத்தமாக மதம் மாறினால் - பணத்திற்கு விலை போனவர்கள்!

இதோ அதே வரிசையில், தஞ்சையில் ஒரு முஸ்லிம் டாக்டர் மற்றும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தினரின் வாளுக்குப் பயந்து இந்து மதத்தை விட்டு இஸ்லாத்திற்கு மதம் மாறிய 4 பெண்கள்!

தஞ்சாவூர் அருகே மதம் மாறிய 4 பெண்கள் பாதுகாப்பு கேட்டு மனு!
சென்னை, நவ.14: இந்து மதத்தில் இருந்து முஸ்லிம் மதத்துக்கு மாறிய 4 பெண்கள், பாதுகாப்பு கேட்டு போலீஸ் கமிஷனரிடம் மனு கொடுத்துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டம், அய்யம்பேட்டையைச் சேர்ந்தவர் லோகேஸ்வரி (22). இவரது தங்கைகள் அம்பிகா (20), சர்மிளா (19). அதே பகுதியைச் சேர்ந்தவர் கலைச்செல்வி (20). லோகேஸ்வரி, சர்மிளா, கலைச்செல்வி ஆகியோர், அங்குள்ள ரெஜ்யா கிளினிக்கில் வேலை செய்தனர்.

லோகேஸ்வரியின் அப்பா இறந்து விட்டார். அம்மா இருக்கிறார். முஸ்லிம் மதத்தின் மீது ஈடுபாடு ஏற்பட்டு, லோகேஸ்வரி, அவரது தங்கைகள், கலைச்செல்வி 4 பேரும் அவர்கள் வீட்டில் தொழுகை நடத்த ஆரம்பித்தனர்.

மேலும், 4 பேரும் பெயரையும் மாற்றிக் கொண்டனர். இது வெளியில் தெரிந்ததும், 4 பெண்களும் வீட்டில் இருந்து வெளியே கடந்த 7ம் தேதி சென்னைக்கு வந்தனர். பாரிமுனையில் உள்ள தமிழ்நாடு தவுஹீத் ஜமா அத் அமைப்பின் மாநில தலைமை அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தனர். பின்னர், 4 பேரும் போலீஸ் கமிஷனர் நாஞ்சில் குமரனை நேற்று சந்தித்து பாதுகாப்பு கேட்டு மனு அளித்தனர் அந்த மனுவில் கூறியிருப்பதாவது:

நாங்கள் மதம் மாறவில்லை. மார்க்கம்தான் மாறியுள்ளோம். லோகேஸ்வரியை அவரது மாமா தமிழ்ச்செல்வன், திருமணம் செய்ய விரும்பினார். அப்போதுதான் 4 பெண்களும் முஸ்லிம் மத மார்க்கப்படி நடப்பது தெரிந்தது. இது ஊர்க்காரர்களுக்குத் தெரிந்தது. அதனால், எங்களை மிரட்ட ஆரம்பித்தனர். நாங்கள் பயந்து போய் சென்னைக்கு வந்துள்ளோம்.

ஆனால், நாங்கள் வேலை செய்யும் கிளினிக்கின் டாக்டர்தான் மிரட்டி மதம் மாற்றியதாகக் கூறி, கடையடைப்பு செய்துள்ளனர். நாங்கள் ஊருக்குத் திரும்பினால் எங்களுக்கு பாதுகாப்பு இல்லை. அதனால், எங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் 4 பேரும் கூறியுள்ளனர். அவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும் என்று போலீஸ் கமிஷனர் நாஞ்சில் குமரன் உறுதியளித்துள்ளார்.
எத்தனைக் காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே! இந்த நாட்டிலே!

3 comments:

  1. பன்னாடைனு போட்டதுதுஞ் சரி, இந்த செய்திய கட்டங்கட்டி போட்டதுஞ் சரி. செய்தியோட மூலத்தச் சொன்னா, இதனுடைய நம்பகத்தன்மைய‌ ஆராயலாம். கொஞ்சங் குடுக்கிரீங்ளா ?

    ReplyDelete
  2. இறைநேசன்,

    நான்கு பெண்களையும் டாக்டர் ஊசியைக் காட்டி மிரட்டி மதம் மாத்தியிருக்கலாம்லா எதுக்கும் நல்லா விசாரிச்சுப் பாருங்க.

    ReplyDelete
  3. செய்தியோட மூலம்!

    http://www.dinakaran.co.in/epaperdinakaran/showxml.aspx?id=198229&code=17726

    வெவரமா:

    http://tntj.net/Statement/Ayyampettai_4_Emr.asp

    அனானி அண்ணா!

    கண்டிப்பாப் பாத்துட்டு நம்பகத்தன்மையச் சொல்லிடுவீகல்ல.

    அன்புடன்
    இறை நேசன்

    ReplyDelete