Saturday, July 22, 2006

சிறந்த பெண்கள் பாதுகாவலன் - புஷ்!!!!!!



இதற்கு முன் அறிவிசீவி புஷின் தெளிந்த தொலைநோக்கு அறிவினை வெளிச்சம் போட்டு காட்டும் உலகின் மிகச் சிறந்த படங்களை மலர்களில் பார்த்து மெய்சிலிர்த்திருப்பீர்கள்.

மேற்கண்ட படத்திற்கு பெரிய விளக்கம் எதுவும் தேவையில்லை என நினைக்கிறேன்.
உலகின் அதிபயங்கர பயங்கரவாதி புஷின் புழுத்து போன கேவலமான மூளையினை இந்த படங்கள் வெளிச்சம் போட்டு காட்டுகின்றன.

சமீபத்தில் நடந்த ஜி-8 உச்ச கோடி மாநாட்டில் வைத்து தான் எவ்வித நாகரீகமுமின்றி இவ்வாறு ஒரு பெண்ணின் பின்பக்கமாக வந்து கழுத்தை புஷ் தடவும் இந்த கேடுகெட்ட சம்பவம் நடந்தது.
இந்த மாநாட்டை பொறுத்தவரை உலக அளவில் எல்லோராலும் உன்னிப்பாக கவனிக்கப்பட்ட ஒரு மாநாடாகும். ஆக்ரமிப்பின் மூலமாக அந்நிய நாட்டை கையகப்படுத்தி அதில் தனது இருப்பிடத்தை வைத்திருக்கும் உலகின் ஒரே ஆக்ரமிப்பு நாடான இஸ்ரேலின் பலஸ்தீன் மற்றும் லபனான் நாடுகளின் மீதான அட்டூளியம் போன்ற மிக முக்கிய பிரச்சனைகளைக் குறித்து கலந்தாலோசிக்க கூடிய மாநாடாகும் இது.

இவ்வளவு அதிமுக்கியத்துவம் வாய்ந்த மாநாட்டில் கலந்து கொள்ள வந்த உலக சட்டாம்பிள்ளை புஷின் மனம் எதில் கவனம் செலுத்திக் கொண்டிருந்தது என்பதை இப்படம் வெட்டவெளிச்சமாக்குகிறது. ஒரு வேளை அமெரிக்க அதிபர்கள் எல்லோருக்கும் இந்த பெண்களின் பின்புறத்தை தடவிக் கொண்டு நடப்பது தான் முக்கியமாக அமெரிக்க பாராளுமன்றத்திலிருந்து கொடுக்கப்பட்டிருக்கும் பணியோ என்னமோ? இது அமெரிக்க அதிபர் ஆவதற்கான முக்கிய தகுதியாக கூட இருக்கலாம்.

மேலே காணப்படும் படத்தில் புஷின் எதிர்பாராத தடவலால் அதிர்ச்சிக்குள்ளாகும் பெண் இந்த மாநாட்டுக்கு ஜெர்மனியின் சார்பில் கலந்து கொண்ட ஏஞ்சலா மெர்கலின் ஆவார். இவர் இம்மாநாட்டில் கலந்து கொண்ட ஒரே ஒரு பெண் என்பதும் கவனிக்கத்தக்கது.
இத்தாலி பிரதமர் ரொமானோ ப்ரோடியுடன் ஏஞ்சலா மெர்கலின் பேசிக்கொண்டிருக்கும் பொழுது எதிர்பார்க்காத தருணத்தில் புஷ் இவ்வாறு கீழ்த்தரமாக நடந்து கொண்டது ஜெர்மனியில் பெரும் சர்ச்சையை கிளப்பியிருக்கிறது.

ம். உலக அமைதி(!)க்காகவே அவதாரம் எடுத்த புஷ் வகையறாக்களே பெண்களிடம் இவ்வளவு கீழ்தரமாக நடக்கும் பொழுது, பாதிக்கப்படும் பெண்கள் எங்கு சென்று தான் முறையிடுவார்களோ?

பின் குறிப்பு:

ஆமாம். இதெல்லாம் கீழ்தரமான செயல்பாடுகளா என்ன?

பெண்கள் பாதிக்கப்படாமல் தான் விரும்புபவர்களுடன் உறவு கொள்வது எப்படி? என பல ஆயிரக்கணக்கானவர்கள் முன்னிலையில் தனது முகத்தை எவ்வித வெட்கமுமின்றி காட்டிக் கொண்டு தனது உள்மன வக்கிர எண்ணங்களை கொட்டும் மூதறிஞர்களை பெண்களே "சிறந்த முற்போக்கு பெண்ணியவாதி" எனப் புகழும் போது பெண்களிடம் இது போன்ற சில்மிஷங்களால் பலர் முன்னிலையில் எவ்வித மானரோஷமின்றி(அப்படியெல்லாம் உண்டா என்ன?) நேரடியாக ஈடுபட்டு நல்ல பெண்களை தவறான வழிக்கு வர சிக்னல் கொடுக்கும் இதுபோன்ற ரோமியோக்களுக்கு "சிறந்த பெண்கள் பாதுகாவலன்" பட்டம் கொடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.


Thursday, July 13, 2006

அபு, லபு, கிப்னு, இப்னு

"அபு, லபு, கிப்னு, இப்னு" என்று வாயில் நுழையாத பெயர் வைத்திருக்கும் "மத அடிப்படைவாதி" சகோதரர் இப்னுபஷீர் அவர்களுடைய "மும்பை குண்டு வெடிப்பு" பதிவில் சகோதரர் மியூஸ் அவர்களின் நடுநிலையான பின்னூட்டமும் என் பார்வையும்.

சகோதரர் மியூஸ் அவர்கள் சிந்தித்த அளவுக்கு கூட மனிதத்தை இழந்துவிட்ட "சுருட்டு விற்பவர்கள்" சிந்திக்க முடியவில்லையே.

//இன்று அவர்கள். நாளை உங்களுடைய குழந்தைகள்.//

“பயங்கரவாதிகளை’ வளர்த்து விட்டு தானும் தன் குடும்பமும் மட்டும் சுகபோகமாக வாழ வேண்டும் என விரும்பும் ஒவ்வொரு அரசியல்வாதியும் ஆழமாக சிந்திக்க வேண்டிய வரிகள்.

//யார் செய்தார் என்று தெரியவில்லை.//

ஒரு செய்தியை அது இன்னார் தான் செய்தார் என நிறுவப்படும் வரை ஒருவர் எப்படி அச்செய்தியை காண வேண்டுமமென்பதற்கு உதாரணம்.

//நேற்று வரை ஏதோ சிலையில், யாரோ மண்ணை வீஸிவிட்டார்கள் என்று பஸ்ஸை எரித்த ஷிவ சேனாவும் இதை செய்திருக்கலாம்.//

இத இதத் தான் எதிர்பார்த்தேன். ஒரு சம்பவத்தை ஒரு கோணத்திலிருந்து மட்டும் பார்த்து முடிவுக்கு வருவதை விடுத்து பல கோணங்களில் ஆய்ந்து தெளிவதே அறிவுடைமை.
மற்றொரு கோணத்தில் கூட இதக் காணலாம்.

இச்சம்பவம் நடப்பதற்கு முந்தைய இரு நாட்களில் உலக நாடுகள் ஆவலுடனும் ஆச்சரியத்துடனும் எதிர்பார்த்திருந்த இந்திய ஏவுகணை அக்னி 3 மற்றும் செயற்கைகோள் இன்சாட் 4c இரண்டும் தோல்வியில் முடிந்தன. இதற்கான காரணம் இன்னும் சரியாக புரிபடாத நிலையில் தொடர்ந்த அடுத்த நாளே இந்தியாவின் முக்கிய வர்த்தக நகரமான மும்பையில் இந்த குண்டு வெடிப்பு நடந்துள்ளது.

இதன் மூலம் இந்தியா பாதுகாப்புத்துறையில் பலவீனமடைந்துள்ளது என்பதை காண்பிக்கவும் இதன் மூலம் இந்தியா எதிர்காலத்தில் அடையப்போகும் இராணுவத்துறை முன்னேற்றத்தை தடுக்கவும் இந்தியாவை வல்லரசு ஆவதை விரும்பாத அந்நிய நாடுகளுக்கு துணைபோகும்(இந்திய முக்கிய துறைகளில் பெரிய பணிகளில் உள்ள) சில காட்டிக்கொடுக்கும் துரோகிகளின் துணையுடன் தேசவிரோத சக்திகள் நடத்தியதாகவும் இருக்கலாம்.

//அப்படி நடந்திருக்குமானால் அவர்கள் இந்தியர்களை எதிரியாக நினைக்க ஆரம்பித்துவிட்டனர் என்று பொருள்.//

சிவசேனாவின் ஆரம்பத்தை முழுமையாக அறிந்தவருக்கு இது நன்றாகவே தெரியும். மஹாராஷ்டிரர்களைத் தவிர மற்றவர்களுக்கு மஹாராஷ்டிராவில் இடமில்லை, அவர்களுக்கு வேலையில்லை என்பன போன்ற சுயராஜ்ய கோரிக்கையுடன் ஆரம்பிக்கப்பட்ட சிவசேனா தமிழர்களுக்கு எதிராக பல அக்கிரமங்களை கட்டவிழ்த்து விட்ட சிவசேனா பின்னர் சில அரசியல் காரணங்களுக்காக ஹிந்துத்துவ அஜண்டாவிற்கு தன்னை மாற்றியதை அறிந்தவர்களுக்கு இவர்கள் “இந்தியர்களுக்கு” எதிரானவர்கள் தான் என்பதில் சந்தேகமிருக்காது.

//இப்போது இதைச் செய்தது இவர்களில்லாமலிருக்கலாம்.//

ஆம். இவர்கள் இல்லாமலும் இருக்கலாம்.

//ஆனால் இதுவரை இவர்கள் செய்டுவந்த ஹிந்து தீவிரவாதத்திற்கு இவர்களையெல்லாம் தடை செய்யவேண்டும்.//

இதைத் தான் முன்னர் கூறினேன். முதலில் தங்களை தீவிர சுராஜ்யகாரர்களாகக் காட்டிக் கொண்டு மற்ற மொழி பேசும் மாநிலத்தவர்களுக்கு எதிராக அக்கிரமங்களைக் கட்டவிழ்த்து விட்டவர்கள் பின்னர் தங்களது நிலைநிற்பிற்கு சவால் எழுந்தபொழுது ஹிந்துத்துவ அஜண்டாவில் தங்களை ஐக்கியப்படித்திக் கொண்டார்கள். இதன் பின் இவர்கள் செய்த அக்கிரமங்களுக்கு அளவே கிடையாது. அக்கிரமங்களைக் கட்டவிழ்த்து விட இவர்களுக்கு ஆர் எஸ் எஸ்ஸைப் போன்ற காரணங்கள் ஒன்றும் தேவையில்லை. சமீபத்திய காரணம் பால்தாக்கரே மனைவியின் சிலையில் ஏதோ ஓர் விஷமி சேறு வாரி பூசி விட்டான் என்பது. இதற்காக மற்றொரு அக்கிரமத்தை இவர்கள் மஹாராஷ்டிராவில் நடத்திக் கொண்டிருந்த சமயம் தான் இந்த குண்டு வெடிப்பு நடந்துள்ளது.

//இல்லாவிட்டால் இதுபோன்ற குண்டு வெடிப்பை இவர்கள் எதிர்காலத்தில் செய்வது நிச்சயம்.//

இராணுவத்துக்கு நிகரான பயிற்சியை தனது உறுப்பினர்களுக்கு வழங்கி பரிசீலனை நடத்திக் கொண்டிருக்கும் சங்க்பரிவார் குடும்ப இயக்கங்களுக்கு இது ஒன்றும் பெரிய காரியம் இல்லை.

//இஸ்லாமியத் தீவிரவாதம், ஹிந்து மதத் தீவிரவாதம் இரண்டும் தடை செய்யப்பட வேண்டும். அழிக்கப்பட வேண்டும்.//

அப்பாவி மக்களுக்கு எதிராக வரும் அக்கிரமங்கள் எவ்வழிகளில் வந்தாலும் அந்த தீவிரவாதங்கள் கண்டிப்பாக அழிக்க ஒழிக்கப் படவேண்டியவைகளே.

//அரஸாங்கமே இங்கு பலமுள்ளதாகவேண்டும்//.

கண்டிப்பாக. ஒரு நாட்டின் பாதுகாப்பு, முன்னேற்றம், எதிர்காலம், மக்களின் அமைதியான வாழ்வு இவை அனைத்திற்கும் அநியாயத்துக்கு துணை போகாத அரசாங்கம் மட்டுமே பலமுள்ளதாக இருக்க வேண்டும்.

//ஒரு உறையில் ஒரு கத்திதான் இருக்க முடியும்.//

இலட்சக்கணக்கான ஹிந்துத்துவ தீவிரவாதிகளை முழு இராணுவத்து நிகரான நவீன ஆயுதங்களை கையாளும் திறனுடன் பயிற்சி அழித்து நாட்டில் உலவ விட்டிருப்பது எதற்காக. நிச்சயம் நாட்டை பாதுகாக்க அல்ல. எனில் சுதந்தீரப்போரில் இருந்து கார்கில் யுத்தம் வரை எத்தனை ஆயுத பயிற்சிபெற்ற ஹிந்துத்துவவாதிகள் பங்கு வகித்தனர் என்ற கணக்கை தர வேண்டும்.
நாட்டில் தங்கள் அஜண்டாவிற்கு எதிராக வரும் கிறிஸ்தவ, முஸ்லிம், சீக்கிய, கம்யூனிஸவாதிகளை அழித்தொழிப்பதற்காக வேண்டி மட்டுமே இராணுவத்துக்கு நிகரான ஒரு ஆயுத அமைப்பு இங்கே இயங்கிக் கொண்டிருக்கிறது.
நாட்டின் பாதுகாப்புக்கு அந்நாட்டின் இராணுவம் போதுமானது. ஒரு உறையில் இரண்டு கத்தி இருப்பது நிச்சயம் மிகப்பெரிய கேடையே விளைவிக்கும்.

//அது மனித நலம் நாடும் அரசாங்கமாகவிருக்கவேண்டும்.//

மனித நலம் நாடும் ஓர் அரசாங்கம் நிச்சயம் இது போன்ற மற்றொரு கத்தியினை கூர் தீட்டி வைத்திருக்காது. அதனை முறித்துப் போட அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

//ஹிந்து மதத் தீவிரவாதம் ஆபிரகாமிய மதங்களின் விளைவு என்பதால் அதை விட்டுவிட முடியாது.//

உண்மையே. ஹிந்துமத தீவிரவாதம் ஆபிரகாமிய மதங்களின் விளைவு என்பதால் விட்டு விட முடியாது தான்.

ஆபிரகாமிய மதங்கள் இந்தியாவில் வருவதற்கு முன் கைபர்போலன் கணவாய் வழி மத்திய ஆசியாவிலிருந்து அடித்துவிரட்டப்பட்டு இந்தியாவிற்கு இருப்பிடம் தேடி ஓடி வந்த ஆரிய வந்தேறிகள் இந்நாட்டின் பழங்குடிகளாக வந்தாரை வாழவைக்கும் பரந்த உள்ளம் கொண்ட குழந்தை மனம் கொண்ட அப்பாவி திராவிடர்களை அடக்கி ஒடுக்கி ஒதுக்கி தங்களை தெய்வத்தின் திரு உருவங்களாக காட்டிக் கொண்டு மனித தன்மையே அற்று நன்றி மறந்த ஜென்மங்களாக கொடுங்கோலோச்சிக் கொண்டிருந்தனர்.

ஆபிரகாமிய மதங்களின் வருகைக்குப் பின் இவர்களின் இருப்பு கேள்விக்குள்ளானது.
இவர்களால் எதிரில் தலை நிமிர்ந்து நடந்து வரக் கூட அனுமதி மறுக்கப்பட்டு இந்நாட்டு எம்சகோதரிகளுக்கு மேலாடை போட அனுமதி மறுத்து தங்களது கேடுகெட்ட உணர்வுகளுக்கு வடிகால் தேடிக் கொண்டிருந்தனர்.

தீண்டாமை ஜாதிவெறி போன்ற வேற்றுமைகளை தோற்றுவித்து தங்களின் சுகபோகங்களுக்கு எவ்வித குறைவும் வந்து விடாமல் மேனி அசையாமல் உண்டு கழித்துக் கொண்டிருந்தனர்.
இதற்கு சாவுமணி அடித்தது ஆபிரகாமிய மதங்களின் வரவு. இம்மதக்காரர்கள் காட்டிய சமத்துவம், சகோதரத்துவம், சகிப்புத் தனமை மனிதனை சக மனிதனாக கண்ட மாண்பு போன்றவை திராவிட உடன்பிறப்புகளை சாரை சாரையாக ஆபிரகாமிய மதங்களுக்குள் படையெடுக்க வைத்தது.

விளைவு ஆட்சி அதிகாரம் அனைத்தும் ஆரியர்களின் கைகளை விட்டு போனது. இழந்ததை மீட்டெடுக்க உடலெடுத்தது தான் ஹிந்துத்துவ வாதம். இதன் மூலம் ஆபிரகாமிய மதங்களை தழுவும் ஒடுக்கப்பட்டவர்களை ஒன்றிணைத்து அவர்களுக்கு விடுதலை அளித்த ஆபிரகாமிய மதங்களுக்கு எதிராக திசை திருப்பி ஆபிரகாமிய மதங்களை இந்நாட்டை விட்டு ஓட்டுவது தான் இவர்களின் குறிக்கோள். இதற்காக இவர்கள் எதற்கும் துணிவர்.

ஹிந்துதீவிரவாதத்தின் மூலம் 1924 க்குப் பின் "சுயசேவர்"களின் அக்கிரமங்களால் உலகில் வல்லரசு ஆகியிருக்க வேண்டிய இந்தியா இன்று 50 வருட பின்னில் உள்ளது. தற்போதைய குண்டுவெடிப்புகளின் மூலம் அது இன்னும் பின்னோக்கியே செல்ல வாய்ப்பும் அதிகரித்திருக்கிறது.
இதன் மூலம் இவர்கள் எதிர்பார்ப்பது ஆபிரகாமிய மதங்களின் வெளியேற்றம் அதோடு ஆட்சி அதிகாரம் முன்பு போல் தங்கள் கைகளில் ஆக்குதல். எனவே இதற்கு எதிராக கண்டிப்பாக இந்திய அரசாங்கம் அதிரடி நடவடிக்கை எடுத்தே ஆக வேண்டும்.

தமிழ் வலையுலகின் இழப்பு - தேனீ உமர் தம்பி.

தமிழ் கணினியுலகுக்கு அளப்பரிய சேவைகள் செய்த "தேனீ" உமர் தம்பி அவர்கள் இறைவனடி சேர்ந்தார்கள். என்னைப்போன்ற பலருக்கு "தேனீ" இயங்கு எழுத்துருவை வழங்கி இணைய உலகில் பலரை வெளிகொணர காரணமானவர்.

அன்னாரின் இறுதி வெற்றிக்கு இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.