Sunday, October 1, 2006

மடராமனுக்கு ஜே!

//துலுக்கர்கள் என்ற சொல் அவர்கள் இந்த தேசத்தில் ஊடுருவியவர்கள் என்பதால் ஆரம்பமானது. அந்த சரித்திர உண்மை அந்த இன மக்களுக்கு அவமானமாக தோன்றுவது நியாயமே. ஆனால், அதற்காக அந்த தூய தமிழ்வார்த்தையில் ஏதும் குறை இல்லை.//

சொன்னவர் யார் தெரியுமா? சுமார் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன் மத்திய ஆசியாவிலிருந்து மொள்ளமாரித்தனம் சகிக்க முடியாமல் அடித்து விரட்டப்பட்டு போக போக்கிடம் இன்றி, நிரந்தரமாக வாழ வழியின்றி, வாழ்வாதாரம் தேடி கைபர் போலன் கணவாய் வழியாக ஆடுமாடுகளை மேய்த்தவாறு வடமேற்கு இந்தியாவில் ஊடுறுவிய வந்தேறி பார்ப்பனர்களின் பரம்பரையில்(சற்று அழுத்தி படியுங்கள் காரணம் இருக்கிறது) வந்த நம் உளறுவாய் சகோதரர் ஜயராமன் தான்.

அவ்வாறு கால்நடைகளுடன் கால்நடையாக வந்தேறியவர்கள், இந்தியாவின் பூர்வீக குடிகளான திராவிடர்களின் தெய்வங்களை இழிவுபடுத்தியதோடு, மநுவின் வர்ண அடிப்படையிலான சட்டங்களை நடைமுறைப்படுத்தி சகோதரர்களாய் இருந்தவர்களை பிறப்பின் அடிப்படையில் பிளவுபடுத்தியதால், கோவில், கடைத்தெரு, குளம் என அனைத்து பொது இடங்களிலும் ஒதுக்கி வைக்கப்பட்டு, இடுப்புக்கு மேல் ஆடை அணிய உரிமை மறுக்கப்பட்டு, தலை நிமிர்ந்து நடக்க கூட அனுமதியின்றி சுடுகாட்டில் கூட இருப்பிடம் மறுக்கப்பட்டவர்களாய் சூத்திரனாக அடக்கி ஒடுக்கப்பட்டு அடிமைகளை விடக்கேவலமாக இருந்த காலகட்டத்தில், சமத்துவம், சகோதரத்துவம் என்ற முழக்கத்தை வாழ்வில் நடைமுறைபடுத்திக் காட்டும், அரேபியாவிலிருந்து சில அரபி வியாபாரிகளுடன் கப்பலேறி வந்த இஸ்லாத்தை ஏற்று வந்தேறி பார்ப்பனர்களின் அடக்கு முறைகளிலிருந்து விடுதலை பெற்று உத்வேகத்துடன் இந்தியாவை ஒருங்கிணைத்து, ஆங்கிலேயர்களுக்கு எதிராக இந்திய சுதந்திரப்போரில் சொத்துக்களையும் சுகங்களையும் இழந்து, வந்தேறி பார்ப்பன சங்க் கூட்டம் வெள்ளையர்களுக்கு அடிவருடிகளாக இருந்து அவர்கள் வீசும் எச்சில் எலும்புத்துண்டுகளுக்காக அவர்களுக்கு இந்தியாவை காட்டியும் கூட்டியும் கொடுத்து ஆக்ரமித்தவை போக எஞ்சியுள்ள கல்வி, வேலை வாய்ப்புகளில் உரிமை கேட்டு கெஞ்சிக் கொண்டிருக்கும் இந்நாட்டின் மைந்தர்களான திராவிட பழங்குடிகளான முஸ்லிம்களை ஊடுருவியவர்கள் என்று உளறியதோடு நில்லாமல், அதுவே வரலாற்று உண்மை எனப்பிதற்றுகிறது இந்த வந்தேறி பரம்பரை!.

ஜயராமன் மடராமன் ஆன கதையை ஆரம்பிப்பதற்கு முன், வந்தேறி பார்ப்பன ஜயராமன் கும்பல் முதல் முறையாக வந்தேறி என்பதை அவமானமாகக் கருதுவதாக ஒப்புதல் வாக்கு மூலம் தந்ததற்கும், தன்னை மீண்டும் மீண்டும் மடராமன் என்று நிரூபிப்பதற்கும் முதலில் வாழ்த்துக்களை கூறிக் கொள்கிறேன்.

சிறிது நாட்களுக்கு முன்பு வரை நன்றாக இருந்த சகோதரர் வந்தேறி ஜயராமன் சமீபத்தில் சில நாட்களாக எதையும் முழுமையாக அறியாமலும் அரைகுறையாக தெரிந்ததை வைத்து முன்னுக்குப்பின் முரணாகவும் உளறி வருகிறது. அந்த வகையைச் சார்ந்தது தான் மேற்கண்ட உளறலும்.

இதனை அப்பட்டமான உளறல் என நிரூபிப்பதற்கு முன் வந்தேறி ஜயராமனின் கண்டுபிடிப்புகளும் கிடைக்கும் ஒரு செய்தியை கவனமாக ஆராயும் அறிவும் எவ்வளவு ஆழமானது என்பதற்கான ஒரு ஆதாரத்தை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

இணையக்குரல் என்ற வலைப்பூவில் "DYFI தொண்டரை ஆர்.எஸ்.எஸினர் வெட்டிக் கொன்றனர்." என்ற பதிவிற்கு நம் வந்தேறி ஜயராமன் அவர்கள் போட்ட ஓர் பின்னூட்டத்தை(அதன் பிறகு அத்திசையிலேயே போகவில்லை) பாருங்கள்:

"சசிகுமாரை எதற்காக தாக்கினார்கள் என்று சொல்லவில்லையே? என்னவோ அறைகுறையாக எழுதினதாக படுகிறது."

இப்பொழுது அப்பதிவில் இது தொடர்பாக வரும் வாசகத்தை கவனியுங்கள்:

"கொடுங்கல்லூர்: பொழங்காவ் செம்பனேழத்து(செம்பநாடன்) ராஜு(35) என்ற DYFI தொண்டரை இரவு 2 மணிக்கு வீடுபுகுந்து வெட்டிக் கொன்றனர். இவர் தனது மனைவியின் சகோதரி வீட்டுக்கு விருந்துக்கு வந்திருந்த பொழுது இந்த அசம்பாவிதம் நடந்தது. மேற்கு வெம்பல்லூர் அம்பலத்திற்கு சமீபமுள்ள இவரின் மனைவியின் சகோதரி வீட்டுக்கு வந்திருந்த பொழுது இச்சம்பவத்தை திட்டமிட்டு ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் செய்ததாக இருங்காலக்குட DSP சசிக்குமார் கூறினார்."

இதில் சசிக்குமார் யார் எனத்தெரிகிறதா? சசிக்குமார் காவல்துறை அதிகாரி என்பது தமிழ் படிக்கத் தெரிந்த, கண்பார்வை சரியாக உள்ள அனைவருக்கும் நன்றாகத் தெரியும். இப்பொழுது நம் ஜெயராமன் அவர்களின் பின்னூட்டத்தில் இரண்டாவது வரியை கவனியுங்கள். எழுதியவரை அரைகுறையாக எழுதி இருக்கிறார் என சந்தேகப்படுகிறார். யார் அரைகுறை? இதைத் தான் இரு காதும் இல்லாதவள் ஒரு காது இல்லாதவளைப் பார்த்து குறை கூறினாளாம் என்பார்களோ?
வந்தேறி ஜயராமனின் அறிவோ அறிவு. மெய்சிலிர்க்கிறது போங்கள். இந்த லட்சணத்தில் உள்ளவர் தான் துருக்கியர் விஷயத்தில் திடீரென மொழி-வரலாற்றாசிரியர் ஆகியிருக்கிறார். ஆய்வின் முடிவு எப்படியிருக்கும் என்பதை இதிலிருந்தே விளங்கிக் கொள்ளலாம். சரி இனி விஷயத்திற்கு வருவோம்.

வந்தேறி ஜயராமனின் புதிய வரலாற்றாய்வில் அவர் இரு விஷயங்களை கண்டுபிடித்திருக்கிறார்.

1. துலுக்கர்கள் இந்நாட்டில் ஊடுருவியவர்களாம்.
2. அது வரலாற்று உண்மையாம்.

அவரின் மொழி ஆய்வில் ஒரு முடிவினைக் கூறியிருக்கிறார். அது,

"துலுக்கன் என்பது தூயத் தமிழ் சொல்லாம்".

இதில் இரண்டாவது மொழி ஆய்வு முடிவை எடுத்துக் கொள்வோம். முதல் விஷயத்திற்கு பின்னர் வருகிறேன்.

துலுக்கன் என்றச் சொல் துருக்கன் என்பதன் மருவி என்பதை அனைவரும் அறிவர். இதையே பாரதி என்ற ஜாதிவெறி பிடித்த முண்டாசு பார்ப்பனன், "திக்கை வணங்கும் துருக்கரும்" என்று இஸ்லாத்தை விளங்காமல் அல்லது அரைகுறையாக விளங்கி முஸ்லிம்களின் வழிபாட்டைப் பற்றி சரியாக அறியாமல் கிறுக்குத்தனமாகப் பாடினான். ஒரு முட்டாள் மற்றொரு முட்டாளுடன் தான் சேரும். அது போன்றே ஒரு பார்ப்பன உளறல் பேர்வழி அப்பரம்பரையில் வந்த மற்றொரு பார்ப்பன உளறல் பேர்வழி கூறியதை பெரிய வரலாற்று ஆதாரமாக கூறுகிறது.

துருக்கி என்பது ஒரு நாட்டின் பெயராக இருக்கலாம். அதனாலென்ன? இறுதியில் தமிழ் எழுத்து 'ன்'ஐ இணைத்து விட்டால் முழுதுமே தூய தமிழ்ச் சொல்லான 'துருக்கன்' என்றாகி விடும்.

அதுபோலவே சிரியா என்பது எந்தமொழிச் சொல்லாக இருந்தாலும் 'சிரியன்' என்பது தூய தமிழ்ச் சொல்லே! அவ்வாறே அமெரிக்கா, ஆஸ்த்ரேலியா, ஆப்பிரிக்கா என்ற சொல்லுக்கு இறுதியில் ஒரு 'ன்' மட்டும் சேர்த்து விட்டால் அது தமிழாகி விடும்.

இதைத் தான் நவீன மொழி-வரலாற்றுப் பேராசிரியரான வந்தேறி பார்ப்பன மடராமன் “துலுக்கன் என்பது தூயத் தமிழ் சொல்” என்கிறது. இதை மறுப்பவர் அனைவரும் அதன் அகராதியில் திம்மிகள்.

என்னே கண்டுபிடிப்பு. இதனால் தான் இதை உளறல் என்றேன். இந்த உளறலுக்கு வந்தேறி ஜயராமனுக்கு கிடைத்த வரலாற்று ஆதாரம் தான் அதன் பரம்பரையில் வந்த ஜாதிவெறிப்பிடித்த முண்டாசு கவியின் "திக்கை வணங்கும் துருக்கரும்" வாசகம்.

மூன்று சொற்கள் கொண்ட வாசகத்தில் இரு சொற்கள் பிழைகள். இங்கு வந்தேறி முண்டாசு துருக்கர் எனக்கூற வருவது முஸ்லிம்களை எனில் ஒரு முஸ்லிமாகிய நான் கூறுகிறேன்: "முஸ்லிம்கள் திக்கை வணங்கவில்லை".

இந்த உளறலை ஆதாரமாக காட்டிய வந்தேறி ஜயராமன் நான் கூறிய "முஸ்லிம்கள் திக்கை வணங்கவில்லை" என்ற கூற்றை மறுத்து அதனை நிரூபிக்க தயாரா?

தயார் இல்லை எனில் வந்தேறி பார்ப்பன முண்டாசு கவி கூறிய கூற்று சுத்த உளறல் என வந்தேறி ஜயராமன் ஒத்துக் கொள்ளவேண்டும்.

ஒரு உளறலை மற்றொரு உளறல் பேர்வழி உளறிக் கொண்டு நடக்கிறது என்பதற்கு இதனை விட அதிகம் விளக்கம் தேவையா என்ன?

குறிப்பு: வந்தேறி ஜயராமனின் வரலாற்று ஆய்வில் கிடைத்த இரு முடிவுகளை குறித்து இறைவன் நாடினால் விரைவில் காண்போம். மேலும் யார் இந்நாட்டின் வந்தேறிகள்? எதனால் திரும்பத்திரும்ப வந்தேறிகள் என்ற வாசகம் பயன்படுத்தப்படுகிறது? இன்றைய நிலையில் யாரை வந்தேறிகள் எனக் கூறலாம் என்பவற்றைக் குறித்து ஆதாரத்துடன் காணலாம்.