கற்பனை தகவல் 41 முஸ்லிம்களை அடையாளம் காட்டிய ஒன்பது பாஜக உறுப்பினர்கள் அன்றைய தினம் (இரயில் எரித்த போது) இரயில்வே நிலையத்திலேயே இருக்கவில்லை. ஒன்பது பேர்களில் காகுல் பதக் மற்றும் முரளி மூல்சன்தானி ஆகிய இருவரின் உரையாடலை தெஹல்காவின் இரகசிய நிருபர் தனது ஒளிபதிவு கருவியில் பதிவு செய்துள்ளார். அந்த உரையாடலின் போது தாங்கள் சம்பவம் நடந்த போது அவ்விடத்தில் இருக்கவில்லை என்றும், தங்களது கவனத்துக்கு வராமலேயே காவல்துறையினர் அவர்களாகவே தங்கள் பெயரில் வாக்குமூலத்தை உருவாக்கியதாகவும் இருப்பினும் ஹிந்துத்வாவுக்கு சேவையாற்றவே இந்தத் தீய சதிக்குத் தாங்கள் உடன்பட்டதாகவும் தெரிவித்தார்கள்.
கற்பனை தகவல் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட இல்யாஸ் ஹுசைன் மறறும் அன்வர் கலந்தர் ஆகியோர், இரயிலின் தட்டைத் திருப்பி தொடர் வண்டியை அறை Aயின் அருகே நிறுத்தியதாக, நோயல் பர்மார் மற்றும் அவனது விசாரணை குழுவினரால் நிர்பந்திக்கபட்டு குற்றச்சாட்டை ஒப்பு கொள்ளச் செய்யப்பட்டனர். காவல்துறையின் விசாரணை காவலில் இருந்த போது, பர்மார் உடைய ஆட்கள் தன்னுடைய காலில் பெரிய கட்டையைக் கட்டி அதோடு நடக்க சொல்லி சித்தரவதை செய்ததாக இல்யாஸ், தெஹல்கா நிருபரிடம் சொன்னார். கலந்தர் சொல்லும் போது அவருடைய மர்மஸ்தானத்தில் மின்சார அதிர்ச்சி கொடுக்கப்பட்டு சித்தரவதை செய்யப்பட்டதாக கூறினார். காவல்துறையின் நிர்பந்தத்தால் வாக்குமூலம் கொடுத்த ஓராண்டுக்குப் பின், கட்டயப்படுத்தி வெளியேற்றபட்ட இவ்விருவரும் திரும்பி வந்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாணத்தில் தனது வாக்குமூலத்தை முழுமையாக மாற்றி கூறினார்கள்.
கற்பனை தகவல் புரிந்து கொள்ள முடியாத மர்மம் நிறைந்தவரான ஹிந்து வியாபாரி அஜெய் பாரியா உடைய வாக்குமூலம் காவல்துறையின் கருத்தை நேர்த்தியாக பொருத்திகாட்ட உதவும் வகையில் காணப்பட்டது. இவர் கோத்ராவில் வாழ அனுமதிக்கப்படவில்லை. 24 மணி நேரமும் இரண்டு காவலர்கள் அவருடனேயே உள்ளார்கள். எனவே தெஹல்கா அவரிடம் நேரடியாகப் பேச முடியவில்லை. ஆனால் அவருடைய தாயாரிடம் பேசினர். அப்போது பாரியா பயத்தினாலேயே காவல்துறையின் சாட்சியாக மாறியதாக அவருடைய தாயார் கூறினார்.
கற்பனை தகவல் தொடர் வண்டி எரிப்பு சம்பவம் நிகழும் போது அவ்விடத்திலேயே இருந்திடாத இஸ்லாமிய மார்க்க அறிஞர் உமர்ஜி, சதி ஆலோசனையில் பங்கு பெற்றதாக உறுதியாக கூறப்படுவது காவல்துறை கூறும் கருத்தை நிறுவிட மிக முக்கியமானதாகும். இவர் மீதான குற்றச்சாட்டு இரண்டு வாக்குமூலங்களை கொண்டு உறுதிபடுத்தப்படுகிறது. இதில் முக்கியமான அம்சம் என்னவென்றால், முதலில் உமர்ஜியின் பெயரை கூறியவரான ஜாபிர் பின் பஹீரா என்பவர் பின்னர் தனது வாக்குமூலத்தை முழுமையாக மாற்றி கூறினார். உமர்ஜியின் பெயரை கூறும் அடுத்த சாட்சியான சிக்கந்தர் சித்தீக் என்பவன் மிகவும் நம்பகமற்றவன் என்பது நிரூபணமாகிறது, ஏனென்றால் இவன் இஸ்லாமிய மார்க்க அறிஞர் யாகூப் பஞ்சாபியையும் உமர்ஜியையும் சம்பவத்தில் இருந்ததாக குறிப்பிட்டான். ஆனால் சம்பவம் நடந்த நாளில் பஞ்சாபி இந்தியாவிலேயே இருக்கவில்லை என்பது நிரூபணமாகியுள்ளது.
கற்பனை தகவல் உடைந்த ஜன்னல்கள் வழியாகவோ அல்லது பெட்டியின் வெளி பகுதியிலோ திரவ எரிப்பொருளை ஊற்றி S-6 இரயில் பெட்டி தீயிட்டு எரிக்கப்பட்டது என காவல்துறையும் மாநில அரசும் கூறுகின்ற வாதத்தை தடயவியல் அறிக்கை மிக உறுதியாக உடைதெறிந்துள்ளது. எனவே தற்போதைய புதிய கருத்து என்னவென்றால், மூன்று கரசேவகர்களின் வாக்குமூலத்தின் அடிப்படையில் பெட்ரோல் பெட்டியின் தரையில் ஊற்றி S-6 இரயில் பெட்டி தீயிட்டு எரிக்கப்பட்டது. மூன்று மாதங்களுக்கு முன்பு தான் இம்மூவரும் தாங்கள் மயங்கி விட்டதால் எதையும் பார்க்கவில்லை என்று கூறியிருந்தார்கள்.
இருமுறை எரிந்தும் கூட இன்னும் கொதிக்கும் நிலையிலேயே இருக்கிறது
நிரூபிக்க முடியாத கருத்துக்கள், கையூட்டு பணம் இறைத்து பெறபட்ட சாட்சிகள், நிர்பந்தங்களை கொண்டு உருவாக்கப்பட்ட வாக்குமூலங்கள். புலன்விசாரணையின் மூலமாக, திகிலூட்டவும் திகைப்படைய வைக்கவும் செய்யும் விதத்தில் திட்டமிட்டு குரோதத்தால் உண்மைகள் அழிக்கப்பட்டதை ஆசிஸ் கேத்தன் வெட்ட வெளிச்சமாக்கி இருக்கிறார்.
பொய் பெரிதாக இருக்குமானால் அதிகமான மக்கள் நம்புவார்கள் - அடோல்ஃப் ஹிட்லர்.
27 பிப்ரவரி 2002 அன்று காலை 7:43 மணிக்கு சபர்மதி விரைவு தொடர் வண்டி ஐந்து மணி நேர தாமத்திற்குப் பின் கோத்ரா இரயில் நிலையத்தின் உள்ளே செல்லும் போது எவ்வித கெட்ட அறிகுறிகளோ மோசமான அச்சுறுத்தல்களோ இருக்கவில்லை. காற்றில் குளிர் இன்னும் தொற்றிக் கொண்டிருந்தது. நாட்டின் பிறபகுதியில் மக்கள், பாடசாலைக்குச் செல்வதிலோ அல்லது வேலைக்குச் செல்வதிலோ அல்லது தூங்கச் செல்லவோ மற்றுமொரு புதிய நாளுக்குள் தங்களை இயக்கிக் கொண்டிருந்த வேளையில் தான் முக்கிய செய்தி வெளியாகியது. கோத்ரா இரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த சபர்மதி விரைவு தொடர் வண்டியில், அதிக எண்ணிக்கையிலான பயணிகளால் நெரிசலோடு நிறைந்திருந்த S-6 பெட்டியில் பயங்கரமான தீ பற்றிக் கொண்டது. இக் கொடிய நிகழ்வில் 59 பேர் உயிரோடு கருகி இறந்தனர். - இவர்களில் சிலர் அயோத்தியாவிலிருந்து திரும்பி வரும் கரசேவகர்கள், இன்னும் சிலர் சுல்தான்பூர், அலகாபாத் மற்றும் லக்னோவிலிருந்து குஜராத்திற்கு வந்தச் சாதாரண பயணிகளாவர்.
இத்துயரமான பயங்கர நிகழ்வானது நாட்டையே துன்பத்தில் உறைய வைத்தது. ஆனால் கோத்ராவில் நிகழுற்ற இத்துயர சம்பவமானது, நமது நாடடின் அண்மைய வரலாற்றில் இடம்பெற்றிடாத மோசமான அழிவுகளுக்குக் காரணமாக அமையப் போகிறது என்பதனை உடனடியான யாரும் உணர்ந்திருக்கவில்லை. நாடு முழுவதிலும் உள்ள 24 மணி நேர செய்தி ஊடகங்கள் இக் கொடிய சம்பவத்தின் போது எடுக்கப்பட்ட, இரத்தத்தை உறைய வைக்கும் அதிர்ச்சி தரும் படங்களை தொடர்ந்து மீண்டும் மீண்டும் ஒளிபரப்பவே, பதட்டமும் உருவாகியது. கோபம் - நியாயமான கேள்விகள் கேட்கபட்டது. தீ எப்படி ஆரம்பித்தது? குற்றவாளிகள் யார்? இது ஒரு விபத்தா? அல்லது வேண்டுமென்றே தீயிட்டு கொளுத்தப்பட்ட செயலா? அப்படிவேண்டுமென்றே தீயிட்டு கொளுத்தப்பட்ட செயலாக இருக்கும் பட்சத்தில் முன்பே திட்டமிட்டு நடத்தபட்ட சதி செயலா? அல்லது தீடீரென்று எதேச்சையாக நிகழ்ந்ததா?
கோத்ராவில் கொடூரமாக நடந்த நிகழ்வின் உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டியும், நீதி நிலைநாட்டவும் குரல்கள் எழஆரம்பித்தது. ஏற்கனவே பிரிந்து கிடக்கும் சமுதாயங்கள், ஏற்கனவே வெளிப்படாமல் கொதித்து கொண்டிருக்கும் சமூகங்களுக்கிடையிலான விரோதம் போன்ற பதட்டமான சூழ்நிலையில் இருக்கும் குஜராத்தில், இப்போது மிக பயங்கரமான மற்றும் அடக்க முடியாத கோபத்தால் நிறைந்திருந்தது. அப்போது மக்களின் தேவை என்னவென்றால் நீதி நிலை நிறுத்தபட வேண்டும் என்பதும், உண்மையை வெளி கொண்டு வருவதில் எவ்வித சமரசமும் செய்ய கூடாது என்பதுமாகும். இன்னும் தங்களது அரசாங்கத்தின் பரிவுடன் கூடிய அரவணைப்பும் ஆறுதலும் கூட மக்களுக்கு தேவைபட்டது.
ஏற்கனவே வெறுக்கத்தக்க உணர்வுகள் நிறைந்திருந்ததினால், கோத்ராவில் நடந்தேறிய துயரமான சம்பவத்துக்குப் பின் சில மணி நேரத்துக்குள் இவ்வெறுப்புணர்வானது மோசமான இன அழிப்பு நிகழ்வாக மாற்றப்பட்டது. தீயில் கருகிய பிரேதங்கள் மருத்துவமனையிலிருந்து கொண்டு வரப்பட்டு உணர்ச்சி கொந்தளிப்பான ஊர்வலமாய் எடுத்துச் செல்லப்பட்டது. தீயிட்டு கொளுத்தப்பட்ட 59 பேர்களும், அவர்களுடைய தனித்துவ அடையாளத்தைக் கொண்டு காட்டப்படுவதற்கு அனுமதிக்கபடவில்லை. முதல் பரீட்சாத்தைய உண்மைகள் நிறுவபடுவதற்கு முன்பாகவே, காவல்துறையினரின் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யபடுவதற்கும் முன்பே, பிரேத பரிசோதனையின் அறிக்கைகள் இன்னும் வந்து முடியவில்லை என்னும் சூழ்நிலையிலேயே – சம்பவம் நிகழ்ந்து 12 மணி நேர காலத்திற்கும் குறைவான நேரத்திற்குள்ளாகவே, முதலமைச்சர் நரேந்திர மோடி போர் பிரகடனத்தைப் பத்திரிக்கை அறிக்கை மூலமாக வெளியிடுகிறான். “கோத்ராவில் நடத்தப்பட்ட கொடூரமான வெறுக்கத்தக்க சம்பவமானது எந்த ஒரு நாகரீக சமுதாயத்தினாலும் ஏற்று கொள்ளப்பட முடியாத நிகழ்வாகும்”. “ இது ஒரு வெறும் சமூக கலவரம் அல்ல. மாறாக, தீவிரவாதிகள் ஒரு புறம் ஒன்றிணைந்து ஒரு சமூகத்தின் மீது நடத்திய தாக்குதலாகும்.”
அன்றிரவே தீவைப்பு நிகழ்வுகளின் முதல் சம்பவம் நிகழ்த்தப்பட்டது. அடுத்த மூன்று தினங்களில் 2000க்கும் அதிகமான முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். துண்டம் துண்டமாக வெட்டப்பட்டு, சுட்டு தள்ளப்பட்டு, தீயிட்டு எரிக்கபட்டு, கற்பழிக்கப்பட்டு கொல்லப்பட்டார்கள். ஆயிரக்கணக்கான முஸ்லிம் வீடுகள் எரிக்கப்பட்டன, டஜன்கள் எண்ணிக்கையில் மசூதிகள் சூறையாடப்பட்டது. வார்த்தையால் வர்ணிக்க முடியாத வெறுப்பால் உடல் வெப்பம் உச்சத்தை எட்டியது.
கோத்ராவை பற்றிய உண்மை, அச்சம்பத்திற்கு பின் திடீரென்று ஏற்பட்ட பெரும் மாற்றத்தினை நமக்கு கோடிட்டு காட்டுகிறது. கோத்ராவை பற்றிய உண்மை, மக்களை பிரித்தாளும் மிக படுபயங்கரமான மோசக்கார கும்பல்கள் இந்தியாவில் இருப்பதை நமக்கு கோடிட்டு காட்டுகிறது. நம்மை நாமே நாட்டின் அங்கமாக பார்க்க வேண்டிய அவசியத்தையும் கோத்ராவை பற்றிய உண்மை நமக்கு கோடிட்டு காட்டுகிறது.
குஜராத்தில் நடந்த இனப்படுகொலையானது திட்டமிட்டு நடத்தப்பட்ட செயலால் (கோத்ரா தொடர் வண்டி எரிப்பு) ஏற்பட்ட திடீர் கொந்தளிப்பே என்று தங்களை சுத்தமானவர்களாகக் காட்டுவதற்காக, மோடியும், அவர் சார்ந்துள்ள அரசியல் கட்சியான பாஜகவும், கடந்த ஐந்தாண்டுகளாய் எடுத்து கொள்ளும் பாதுகாப்பு கவசமாகும். கோத்ராவில் நிகழ்த்தப்பட்ட சம்பவமானது, கலவரக்காரர்களின் கட்டுபடுத்த முடியாத கோபத்தால் திடீரென்று ஏற்பட்ட நிகழ்வல்ல, மாறாக முக்கிய மத தலைவர்களாலும், முஸ்லிம் அரசியல் தலைவர்களாலும் முற்கூட்டியே சதி திட்டமிட்டு நிகழ்த்தியதாகும் என்று மோடியும் அவனது அரசாங்கமும் கடந்த ஐந்தாண்டுகளாக கூறி வருகிறது. குஜராத்தில் திட்டமிட்டு நிகழ்த்தபட்ட இனப் படுகொலைகளுக்கான காரணமே, கோத்ரா நகராட்சி தலைவரான முஹம்மது ஹுசைன் கலோட்டா செய்கு, பிலால் ஹாஜி, பாரூக் முஹம்மது பஹானா சலீம் செய்கு மற்றும் அப்துல் ரஹ்மான் தாண்டியா ஆகிய நான்கு நகரமன்ற உறுப்பினர்கள், ரோல் அமீன் ஹுசைன் ஹதிலா மற்றும் ஹபீப் கரீம் செய்கு ஆகிய இரண்டு வழக்கறிஞர்கள் இன்னும் உள்ளூர் மத தலைவரான மார்க்க அறிஞர் உமர்ஜி ஆகிய எட்டு நபர்களின் மீது பழியைச் சுமத்தி மோடி அரசாங்கம் கடந்த ஐந்து ஆண்டுகளாக கூறிவருகிறது.
கடந்த ஐந்து ஆண்டுகளாக, இவர்களே கொலையாளிகள் என்று மக்களிடமும், நீதிமன்றத்திலும், செய்தி ஊடகங்களுக்கும் சொல்லப்பட்டு வந்துள்ளது. இவ்வாறு கூறப்பட்ட அனைத்துமே, மோடியின் வினை-எதிர்வினை கூற்றின் அடிப்படையிலாகும். சபர்மதி விரைவு தொடர் வண்டி எரிப்பு சம்வத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 134 பேர்களில், அரசியல் மற்றும் மார்க்க பிரமுகர்களான இந்த எட்டு பேரை நீக்கி விட்டு பார்த்தால் மீதியிருப்பவர்கள் சிறு வியாபரம் செய்யும் வியாபாரிகளும், கூலி வேலை செய்பவர்களும், கனரக வாகன ஓட்டிகளும் ஆவர். கோத்ரா சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களின் பட்டியலில் இருந்து அரசியல் மற்றும் மார்க்க பிரமுகர்களை நீக்கினால் மீதியிருப்பவர்கள் தீடீரென்று ஏற்பட்ட கொந்தளிப்பான உணர்வால் உணர்ச்சி வயப்பட்டு எரித்தக் குற்றவாளிகளே. அரசியல் மற்றும் மார்க்க கோணத்தை நீக்கி கோத்ராவில் நிகழ்ந்த துர்சம்பவத்தை பார்த்தோமேயானால், மோடியின் தீய “வினை-எதிர்வினை” கூற்று நிலைபெற முடியாமல் சுக்கு நூறாக சிதறுண்டு போவதைக் காண முடியும்.
எனவே இந்த எட்டு பேரும் பழிசுமத்தப்பட வேண்டியவர்களா?
கோத்ராவில் நடந்த தீ வைப்பு சம்பவத்துக்கு மோடியின் பின்னனியே காரணம் என சில அரசியல் குழுவினரும், சமூகத்திலுள்ள சில பொதுமக்களிலுள்ள பிரிவினரும் குற்றம் சுமத்துகின்றனர். திட்டமிட்ட படுகொலைகளை நிகழ்த்தி, அதனடிப்படையில் அரசியலில் இன ரீதியில் பிரிவு மற்றும் பிளவுகளை அறுவடை செய்திட இவன் (மோடி) S-6 பெட்டியை எரித்தான் என்று அவர்கள் குற்றம் சுமத்துகின்றனர். இது உண்மையா?
கோத்ராவில் உண்மையிலேயே நிகழ்வுற்றது என்ன? என்னும் பேருண்மையை பெறுவதற்காக, தெஹல்கா 6 மாத காலங்களாய் நெடிய புலனாய்வை நடத்தியது. பொய் வலைகள் உண்மைகளோடு சேர்த்து பின்னப்பட்டதையும், உண்மை நிகழ்வுகளோடு கற்பனைகளும் கலந்து தரப்பட்டதையும், மிகுந்த எச்சரிக்கையுடனும், அதி கவனத்துடனும் நடத்தப்பட்ட புலனாய்வு வெளிப்படுத்தியது. எங்களின் தேடல்கள் எம்மையே அதிர்ச்சி அடைய வைத்தது. உண்மையை கண்டறிவது மிகக் கடினமாக உள்ளதே என்றல்ல, மாறாக மேலே கூறப்பட்ட புனைவுகள் ஏராளமாக இருந்த காரணத்தாலே அதிர்ச்சியாக இருந்தது. இப்புனைவுகள் எல்லா இடத்திலும் இருந்ததை பார்க்க முடிந்தது. தாள்களிலும், உயிர் பிழைத்தவர்களின் வாக்குமூலத்திலும் இன்னும் தெரு வெளிகளிலும் காணக் கூடியதாகவே இருந்தது. எங்களின் தேடல்கள் எம்மையே அதிர்ச்சி அடைய வைத்தது. உண்மையே அதிர்ச்சியாக இருந்தது என்பதால் அல்ல, மாறாக மிக விவரத்துடனும் தீய நோக்குடனும் உண்மைகள் அழிக்கபட்டு இருந்ததனாலேயாகும். நாங்கள் பார்த்தது என்னவென்றால்.. மோடியும் அவனது அரசாங்கமும் சொல்லும் அனைத்தும் பொய்யே என்பதனை இது நிரூபிக்கின்றது. இது ஒரு சாதரண பொய்யல்ல, மாறாக திட்டமிட்டு உருவாக்கப்பட்ட பொய்கள். லஞ்சம் வழங்கப்பட்டும், நிர்பந்திக்கப்பட்டும், மிரட்டப்பட்டும் செயல்படுத்தபட்டவைகள்.
இதுவே நாம் கண்ட தகவல்கள். எப்போதும் போல், உண்மைகள் விளக்கமாக....
இன்ஷா அல்லாஹ் தொடரும்...
திரு. இறைநேசன் அவர்களே,
ReplyDeleteஇது வரை வெளிவந்துள்ள 24 பகுதிகளுக்குமான தொடுப்புக்களை INDEX ஆக ஒரு தனிப்பதிவாக கொடுங்கள் முடியும் வரை அதை புதுப்பித்தும் வாருங்கள்.
புதிதாக வந்து வாசிப்பவர்களுக்கும், எதிர்கால வாசகர்களுக்கும் இது எளிதாக இருக்கும்.
இறைவன் உங்களுக்கு அருள் புறியட்டும்.
நன்றி,
முகவைத்தமிழன்
Assalaamu alaikkum.
ReplyDeleteGood work. Useful for the Tamil speaking Ummah to understand what is the reality. Because most of the ignorant mum'ins still believe that it was muslims who initiated it and that's why we are paying the price. Astagfirullah. Articles like this should be distributed in all the islamic centers and masjids around TN and other tamil speaking areas. Insha Allah.
ஆமாம். முகவை தமிழனின் கருத்தை ஆமோதிக்கிறேன்.
ReplyDelete