Tuesday, October 4, 2005

இன்னாட்டு மன்னர்களின் அவல நிலை

கன்னியாகுமரி, அக். 4: தனியார் பள்ளியில் மாணவிகள் கழிப்பறையில் பெண் வேஷத்தில் பதுங்கிய இளைஞரை பொதுமக்கள் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர்.

சுசீந்திரத்தில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான மாணவிகள் படித்து வருகின்றனர்.
திங்கள்கிழமை காலாண்டுத் தேர்வு முடிந்து பள்ளி திறக்கப்பட்டது.
காலை பிரார்த்தனை நடந்த போது பள்ளிச் சீருடை இல்லாத சுடிதார் அணிந்த ஓர் இளைஞர் மாணவிகள் கழிப்பறைக்குள் நுழைந்ததை உடல்கல்வி ஆசிரியர் லட்சுமணன் பார்த்தார்.

அந்த இளைஞரைப் பிடிக்க முயன்ற போது, இளைஞர் சுடிதாரை அவிழ்த்து எறிந்து விட்டு தப்பி ஓடினார். இதைத் தொடர்ந்து ஆசிரியரும் அவரை விரட்டிப்பிடிக்க ஓடினார்.
இவர்களை கவனித்த பொதுமக்கள், அந்த இளைஞரைப் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர்.

காவல் துறையினர் விசாரணையில் பெண் வேஷமிட்டு வந்த இளைஞர் சுவாமிதோப்பைச் சேர்ந்த திரவியத்தின் மகன் ரகுபதி என்பது விசாரணையில் தெரிய வந்தது.

னன்றி : தினமணி

என்ன விசாரணை நடந்து என்ன பிரயோஜனம், இதுபோன்ற புதிய புதிய ஆலோசனைகளை வாரியிறைத்துக் கொண்டிருக்கும் ஆபாசத்தின் பிறப்பிடமான, சமுதாயத்தை சீரளிக்கும் சினிமாத் துறையும் அதற்கு காவடி தூக்கும் கலை காவலர்களும் இல்லாதாகும் வரை இக்கொடுமை ஒழியப் போவதில்லை.

No comments:

Post a Comment