Tuesday, October 11, 2005

தீவிரவாதம் - பயங்கரவாதம் அழிய

பயங்கரவாதத்தை நாம் வீழ்த்தாவிட்டால் பயங்கரவாதம் நம்மை வீழ்த்திவிடும், என்ற நிலைக்கு உலகம் வந்து விட்டது. என்றைக்கு பயங்கரவாதிகள் உயரத்தில் பறந்து சென்று, உலகின் உயரமான கட்டத்தைத் தகர்த்தார்களோ, அன்றே பயங்கரவாதம் அதன் உச்சத்தை அடைந்து விட்டது எனலாம்.

பயங்கர வாதம் ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டும் நடைபெறுவதாக இனியும் சொல்லிக்கொண்டிருக்க முடியாது. அயர்லாந்தில் அடிக்கடி நிகழும் குண்டு வெடிப்புக்கள, போஸ்னியாவில் நடை பெறும் இனப்படுகொலைகள, நேபாளத்தில் நடைபெறும் குண்டு வெடிப்புக்கள், பாலஸ்தீனர்கள் மீது இஸ்ரேலியர்கள் இழைக்கும் அநீதீகள, நமது நாட்டில் காஷ்மீர், ஆந்திரம் வட கிழக்கு மாநிலங்கள் ஆகியவற்றில் நடைபெறும் பயங்கரவாதச் செயல்கள் ஜாதி மதக் கலவரங்கள; என்று அது நீண்டு கொண்டே போகிறது.
பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகரித்தல், தீவிர முகாம்களை அழித்தல், தீவிரவாதங்களை கடுமையாகத் தண்டித்தல் ஆகியவற்றால் மட்டுமே தீவிரவாதங்களை அழித்து விட முடியாது. தீவிரவதாம் என்பது ஒரு நோயின் அறிகுறியே தவிர அது நோய் கிடையாது.

நோய்நாடி நோய் முதல் நாடி, என்ற அடிப்படையில் செயல்படுவதன் மூலமாகவே தீவிர வாதத்தை ஒழிக்க முடியும். தீவிரவாதம் எது வென்பதை வறையறுக்க வேண்டும். தீவிரவாதத்திற்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் விளக்கம் தந்துள்ளனர்;

"அரசியல் காரணங்களுக்காக ஒரு முகப்படுத்தபட்டுச் செயல்படும் அச்சுறுத்தும் செயல்கள்" - என்கிறது சேம்பர்ஸ் ஆங்கில அகராதி.

"அரசியல் காரணங்களுக்காக அப்பாவிகள் மீது இழைக்கப்படும் வன்முறைகள்" - இப்படி ஒரு விளக்கம்.

"வன்முறையை பயன்படுத்தி அல்லது வன்முறையைக் காட்டி பயமுறுத்தி அதன் மூலம் தனது அரசியல் மதரீதியிலான கொள்கைகளை நிலைநிறுத்தும் குறிக்கோளை அடைய முயல்வதே பயங்கரவதாம் ஆகும். இத்தகைய வன்முறை, கட்டாயப் படுத்துவதன் மூலமோ அல்லது படிப்படியாக பயமுறுத்தியோ கையாளப்படுகிறது" - இது பயங்கரவாதத்திற்கு அமெரிக்கா தரும் விளக்கம்.

தீவிரவாதம் பற்றிய இந்த விளக்கங்கள் முழுமையானதாக இல்லை என்பதால் இது பற்றி ஐ.நா .சபையில் முழுவிவாதம் நடத்தப்பட்டு சரியான வரையறைகள் கொடுக்கப் படவேண்டும்.

ஒப்புக்கொள்ளப்பட்ட சர்வதேச விதிகளுக்குப் புறம்பாக ஒரு மனிதன் அல்லது ஒரு சமூகத்தின் உயிர், உடைமைகள், கண்ணியம் மற்றும் நம்பிக்கைகள், கொள்கைகள் ஆகியவற்றைப் பறிக்கும் அனைத்தும் பயங்கரவாதமே ஆகும். ஒரு சமுதாயத்தையோ மதத்தையோ இழிவுப்படுத்திப் பேசுவது வெளிப்படையாக பார்க்கும் போது பயங்கரவாதமாக தெரியாமலிருக்கலாம். ஆனால் அதனால் ஏற்படும் கலவரங்களும் உயிர் உடைமை இழப்புக்களும் பயங்கரவாதத்தினால் ஏற்படும் பாதிப்புக்களை விட எந்த வகையிலும் குறைந்தவை அல்ல.

மொழி, கலாச்சாரம், மதம் ஆகியவற்றை ஒரு சழூதக்தின் மீது திணிப்பதும் வன்முறைகளுக்கே இட்டுச் செல்வதால் இதுவும் பயங்கர வாதமே!பயங்கரவாதம் எனும் போது ஒரு லட்சியத்திற்காக பாடுபடும் குழுக்கள் செய்யும் தீவிர வாதம் பற்றியே அதிகம் பேசப்படுகிறது. ஆனால் பல நாடுகளில் அரசே பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விடுகிறது.(ளுவயவந வுநசசழசளைஅ) அரசை எதிர்ப்பவர்களை ராணுவம, காவல் துறை, உளவுத்துறை, மூலமாக கொல்வது, சித்திரவதை செய்வது, நாடு கடத்துவது, ஆகியவையும் பயங்கரவாதத்தில் அடங்கும். குழுத் தீவிரவாதமும், அரசு பயங்கரவாதமும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை ஆகும். பயங்கரவாதிகளின் நோக்கம் எவ்வளவு உயர்ந்ததாக இருந்தாலும் நீதி நெறி முறைக்கு எதிரானதாக செயல்படுகின்ற எல்லாக் காரியங்களும் கண்டிக்கத் தக்கவை.

இந்தத் தீவிரவாதிகள் நோய்க்குத் தரும் மருந்துகள் நோயைவிட மோசமானவையாக இருப்பதால் சிகிச்சையே நோயாளியைக் கொன்று விடும்.

"ஒர் அநீதியின் ழூலம் இன்னொரு அநீதியை அழிக்க முடியாது. ஒர் அழுக்கு இன்னொரு அழுக்கை அகற்றுவதில்லை"- என்றார் நபிகள்நாயகம் (ஸல்)அவர்கள். நோக்கமும் அதனை அடைகின்ற வழிமுறைகளும் நேர்மையானதாக இருக்க வேண்டும். தீவிரவாதத்தின் வேர்களை அறிந்து அவற்றை களைவது தான் நிரந்தரத் தீர்வைத் தரும.

"நான் செல்லும் பாதையில் தடை ஏற்படுத்துவோரை கண்டறிந்து அவர்களை ஒழிப்பதல்ல என் பணி!!! மாறாக எனது பாதையில் அத்தகைய தடையை ஏற்படுத்த அவனைத் தூண்டியது எது என்பதைக் கண்டறிந்து அதனைக் களைய முயல்வதே என் முதற்பணியாகும்" என்று கூறினார் அண்ணல் காந்தியடிகள் (யங் இந்தியா 26.2.1931.)

மலேசியாவில் தீவிரவாதம் ஒழிகக்ப்பட்ட விதத்தை விளக்கும் போது மலேசியப் பிரதமர் மஹாதீர் முஹம்மது, "மலேசியாவில் வாழ்ந்து வந்த சீன மக்கள் தாம் அன்னியமாக்கபடுகிறோம் என்று எண்ணிக் செயல்பட்டார்கள்; அவர்களை முழுமையான குடிமக்களாக ஆக்குவதற்கான முயற்சிகளை எடுத்ததால் தீவிரவாதத்தை வேரோடு அறுத்தோம்" என்று குறிப்பிட்டார்.

சமீபத்தில் குஜராத்தில் தாய்தந்தையரை இழந்து நின்ற சிறுவனிடம் "உன்னுடைய எதிர் காலத்திட்டம் என்ன?" என்று கேட்ட போது "எனது பெற்றோர்களைக் கொன்றவர்களைப் பழிக்குப்பழி வாங்குதே!" என்றான்.

ஒவ்வொரு அநீதியும் ஒரு தீவிரவாதியை உருவாக்குகின்றது. தீவிரவாதிகள் உருவாகுவதில்லை, உருவாக்கப்படுகிறார்கள் என்ற கருத்தில் உண்மை இல்லாமலில்லை. இப்படிச் சொல்வதால் தீவிரவாதம் நியாயப் படுத்தப்படுவதாகப் பொருள் கொள்ளக்கூடாது. எந்தக் பிரச்சனைக்கும் இரண்டு பக்கங்கள் உள்ளன என்பதனை உணர்த்தவே இங்கு சுட்டிக்காட்டப்படுகிறது.

வல்லரசுகள் கடைபிடிக்கும் இரட்டை நிலைகளும் தீவிரவாதத்திற்கு உரமிடுகின்றன. குவைத்தின் மீது படையெடுத்த இராக்கிற்குத் தண்டனை அளிக்கப்படுகின்றது. ஆனால் பாலஸ்தீனம், சிரியா, ஜோர்டான், லெபனான் ஆகிய நான்கு நாடுகளைத்தாக்கும் இஸ்ரேலுக்குத் தண்டனை இல்லை.

தீவிரவாதிகளை அவர்கள் சார்ந்துள்ள மதத்தோடு இணைத்துப் பேசுவதும, தீவிர வாதிகளுக்குச் சாதகமாகவே அமையும். தீவிரவாதிகள் மதப்போர்வையில் ஆதரவு பெற முயல்கின்றனர். இதனை முறியடிக்க வேண்டும். அவர்களைத் தனிமைப்படுத்த வேண்டும். பொதுவாக மதங்கள் வன்முறையை ஆதரிக்காத நிலையில், அவர்கள் சார்ந்துள்ள மதத்தின் பெயரால் அவர்கனை அடையாளப்படுத்துவது அந்த மதங்களுக்குச் செய்யும் அநீதியாகும்.

"முதியவர்கள், குழந்தைகள், பெண்கள் ஆகியோரைக் கொல்லாதீர்கள். மடங்களில் உள்ள துறவிகளைக் கொல்லாதீர்கள். மரங்களை வெட்டாதீர்கள்." இவை போரின் போது நபிகள்நாயகம்(ஸல்) அவர்கள் தோழர்களுக்கு இட்ட கட்டளை.

சமாதான முயற்சிகளை மேற்கொள்வதன் மூலமாக பயங்கரவாதத்தைக் கட்டுப்படுத்த முடியும். மோதிக்கொள்ளும் இருதரப்பினரையும், நடுநிலையானவர்களும் நீதி விரும்பிகளும், பேச்சுவார்த்தைக்கு அழைத்து நீதியுடன் சமாதானம் செய்ய வேண்டும். கட்டப் பஞ்சாயத்துகளும், கட்டாயப் பஞ்சாயத்துக்களும் நிரந்தர அமைததியைத் தரமாட்டா.

பயங்கரவாதம் எப்போதும் ஒரு நாட்டின் பிரச்சினை அல்ல. இது உலகப் பிரச்சினை. உலகநாடுகள் அனைத்தும் இணைந்து பாடுபட்டால் தீவிரவாதம் வீழ்ந்து விடும். தீவிர வாதம், நோயுற்ற உள்ளங்களில் உருவாகின்றது. அநீதியால் உரமூட்டப்படுகிறது. வெறுப்பினால் நிலைத்து நிற்கிறது.

நன்றி : தினமணி - 28.11.2002-சென்னை பதிப்பிலிருந்து

1 comment:

  1. //"நான் செல்லும் பாதையில் தடை ஏற்படுத்துவோரை கண்டறிந்து அவர்களை ஒழிப்பதல்ல என் பணி!!! மாறாக எனது பாதையில் அத்தகைய தடையை ஏற்படுத்த அவனைத் தூண்டியது எது என்பதைக் கண்டறிந்து அதனைக் களைய முயல்வதே என் முதற்பணியாகும்"//

    தமிழின் வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் தீவிரவாதிகளையும் இந்த பட்டியலில் சேர்க்க வேண்டும்.

    ReplyDelete