Wednesday, October 5, 2005

ஆனை முகன் வாழ்த்து

செய்யுள்:

“வாக்குண்டாம் நல்ல மனம் உண்டாம் மாமலரால் நல்ல
நோக்குண்டாம் மேனிநுடங்காது பூக்குண்டு
துப்பார் திருமேனி தும்பிக்கையான் பாதம்
தப்பாமல் சார்வார் தமக்கு.”
மாமலர் - தாமரை.

நோக்கு - பார்வை.

நுடங்காது - கூனிக் குறுகாது.

துப்பார் - உண்பவர். திருமேனி - குப்பைமேனி.

தும்பி - தும்பை.

கையான் - கரிசலாங் கண்ணி.

பாதம் - சிறுசெருப்படி (சிறு செருப்படை)

பொழிப்புரை: தாமரைமலர், குப்பைமேனி, தும்பை சிறுசெருப்படி இவைகளை உண்பவர்களுக்கு நல்ல சொல்வளம், நல்ல மனநிலை, நல்ல பார்வை, உடல் கூனிக் குறுகாது (இளமையோடு) வாழ்வார்கள் என்பதாகும்.
இந்த மூலிகை வைத்தியப் பாடலில் தும்பிக்கை யான் பாதம் என்று வருவதால் இது ஆனைமுகக் கடவுள் வாழ்த்தாகப் பாடவைத்து விட்டார்கள். இன்றும் பாடி வருகிறார்கள்.

சாணிக்குப் பொட்டு வைத்து சாமியாக்கியவர்கள், தும்பிக்கையான்பாதம் என்றதும் இதை ஆனைமுகக் கடவுள் வணக்கம் ஆக்கியதில் ஆச்சரியம் என்ன இருக்கிறது?

னன்றி:- வை. விசுவநாதன், ஆசிரியர் ஓய்வு, சுந்தரபெருமாள் கோயில்

1 comment:

  1. இப்படியே ஒவ்வொரு பாட்டுக்கும் ஆளாளுக்கு ஒவ்வொரு விளக்கம் கொடுத்துக்கொண்டே போகலாம். பாடலை பாடியவரே வந்து விளக்கம் கொடுத்தால்தான் நம்ப முடியும்.இதுபற்றி பின்னவீனத்துவ வாதிகள் நிறைய பேசி முடிச்சாச்சு.

    இப்ப குர்ரானுக்கு , அதிலிருக்கும் வசனங்களுக்கு ஆளாளுக்கு விளக்கம் கொடுத்துக்கொண்டே இருக்கிறாஅங்க இல்லையா அப்படித்தான்.

    பெரிய ஜோக், செப்டெம்பர் 11 தாக்குதல் பற்றி குர் ஆனில் சொல்லப்பட்டிருக்கெண்டு வந்த விளக்கங்கள்தான்.

    ReplyDelete