"ஆக்ரமிப்பிற்கு எதிராக போராட்டம் நடத்தும் போது தற்கொலை தாக்குதல்களில் ஈடுபடுவது கூட தீவிரவாத செயல் அல்ல!" என்று இத்தாலியில் ஒரு நீதிபதி தீர்ப்பு கூறியிருக்கிறார்.
இராக்கில் நடக்கும் போராட்டத்திற்கு இத்தாலியில் ரிக்யூர்ட்மென்ட் நடத்தி ஆட்களை தேர்ந்தெடுத்து அனுப்பியதாக குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்ட சில இஸ்லாமியர்க்கெதிரேயுள்ள வழக்கில் நீதிபதி க்லெமன் தீனா போர்லியோ இந்த முக்கியமான கருத்தினை தெரிவித்துள்ளார்.
இராக் - பலூஜாவில் கொல்லப்பட்டவர்களில் ஒரு பகுதி
"வெளினாடுகளில் நடக்கும் ஆக்ரமிப்பிற்கெதிரான மறைமுக தாக்குதல்கள் இத்தாலிய சட்டப்படி குற்றமல்ல" என்றும் போர்லியோ தீர்ப்பளித்தார்.
மேலும் கூறுகையில், "தொடர்ந்து எல்லாப் போரட்டங்களையும், தாக்குதல்களையும் தீவிரவாத செயல் என்று கூறுவது பொதுமக்களின் சுய நிர்ணய உரிமையையும், சுதந்திரத்தையும் ஒடுக்கும் செயல்" என்று கண்டித்தார்.
இந்த தீர்ப்பைத் தொடர்ந்து இத்தாலி அரசாங்கம் போர்லியோவிற்கு எதிராக திரும்பியுள்ளது. இதில் 3000 - த்திற்கு மேல் இத்தாலிய ராணுவ வீரர்கள் தற்போது இராக்கில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
னன்றி : தேஜஸ் 2005 ஜூன் 16௩0 பக்கம் 7.
by posting this what do you mean to say my friend?
ReplyDeleteமுற்போக்கான மனிதாபிமானமுள்ள தீர்ப்பு.
ReplyDeleteஇந்த செய்தியின் ஆதரத்தின் தொடுப்பினை தந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
வெற்றுப்பயங்கரவாத கைக்கூலிகளிடம் ஆரோக்கியமான தற்கொலைப்போராளிகள் இருக்க மாட்டார்கள். உரிமைப்போர்களிலேயே இப்படி ஒரு படையணி இருக்கும். அதுதான் யதார்த்தம்.
ஆனால் அமரிக்கா போன்ற மேலாதிக்க சக்திகள் தனது ராணுவத்தையே தற்கொலைக்கு தள்ளி மற்றவர்களை ஒடுக்க நினைக்கும்.
//by posting this what do you mean to say my friend? //
ReplyDeleteதலைப்பில் உள்ள "தீவிரவாதிகளை" எடுத்து விட்டு "போராளிகள்" என்று போட்டு படியுங்கள். இப்பொழுது என்ன சொல்ல வருகிறேன் என்பது புரியும்.
தற்பொழுது போராளிகள் அல்லது சுதந்திரப் போராளிகள் என்ற வார்த்தையையே கேட்பது அரிதாகி விட்டபடியாலும்(ஏனென்றால் உலகில் தற்போது ஆக்ரமிக்கப் பட்டுள்ள நாடுகளே இல்லை பாருங்கள்), எங்கு போராட்டம் நடந்தாலும் தீவிரவாதிகளின் அட்டூளியம் என்றே வாசித்து பழக்கமாகி விட்டபடியாலும் மனதில் போராடுபவர்களின் பெயரே தீவிரவாதிகள் என்று பதிந்துவிட்டது. அதனால் நேர்ந்த தவறு தான் இந்த தலைப்பு குழப்பம்.
//இந்த செய்தியின் ஆதரத்தின் தொடுப்பினை தந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.//
இது இணையத்தில் படித்ததல்ல. ஆதாரமாக குறிப்பிட்டுள்ள மாதமிருமுறை வரும் புக்கில் படித்தது.
http://www.blogger.com/publish-comment.do?blogID=9582779&postID=112908127869076727&r=ok
ReplyDeleteஇறைநேசன் என்ற ஒரு முஸ்லிம் மதவெறியன் எழுதியிருப்பதைப் படியுங்கள்.இத்தாலியிலிருந்து ஈராக் போய் மனித வெடிகுண்டாக வெடித்து இந்த வெறியர்கள் கொல்வது பெரும்பாலும் அப்பாவி பொதுமக்களையே..மற்றபடி அவர்களால் அமெரிக்க சிப்பாய்களின் மசிரைக்கூட தொட முடியவில்லை..எங்.கோ ஒன்றிரண்டு பேர் ஏமந்து போய் செத்தால் தான் உண்டு.. அவர்கள் "போராளி"கள் என்று எவனோ சொன்னானாம்...அதுதான் நடுநிலைமையாம்
http://copymannan.blogspot.com/2005/10/blog-post_17.html
//வெற்றுப்பயங்கரவாத கைக்கூலிகளிடம் ஆரோக்கியமான தற்கொலைப்போராளிகள் இருக்க மாட்டார்கள். உரிமைப்போர்களிலேயே இப்படி ஒரு படையணி இருக்கும். அதுதான் யதார்த்தம்//
ReplyDeleteமயூரன்,
உங்கள் கருத்தை "ideal"-ஆக சரியானதே.ஆனால் முஸ்லிம் பயங்கரவாதிகளின் நோய்க்கூறு மனோபாவம் வேறு..
உதாரணமாக விடுதலைப்புலிகள் விடுதலைப் போராட்டத்தை எதிர்க்கும், தடுக்கும் விரோதிகளாக அவர்கள் கருதுபவர்களையே பெரும்பாலும் குறி வைத்து மனித வெடிகுண்டால் அழிக்கின்றனர்..ஆனால் முஸ்லிம் பயங்கரவாதிகளின் கொலைகள் பெரும்பாலும் ப்ரச்னைக்கு சம்பந்தம் இல்லாதவர்களையே அழிக்கிறது...
இதைப்பற்றி மேலதிகத் தகல்வல்கள் இங்கே இக்டைக்கும்...
ennamopo.blogspot.com
சகோதரர் புலிப் பாண்டி அவர்களுக்கு,
ReplyDeleteஎல்லாவற்றிற்கும் மிக்க நன்றி! முக்கியமாக எனக்கு "முஸ்லிம் மத வெறியன்" என்று பட்டம் தந்ததற்கு.
ஒரு செய்தியினை உள்ளது உள்ளபடி கூட்டவோ குறைக்கவோ இல்லாமல் தந்ததற்கா இப்பட்டம்?
படித்த ஒரு செய்தியை அப்படியே தந்ததற்குத்(தனியாக என் கருத்தைக் கூட தெரிவிக்கும் முன்) தான் "முஸ்லிம் மத வெறியன்" பட்டம் எனில்,
இதனை செய்தியாக பிரசுரித்த அந்த பத்திரிக்கையின் ஆசிரியருக்கு(பெயர்: முகுந்தன், ஆச்சரியப் படவேண்டாம் இந்து சகோதரர் தான்) என்ன பட்டம் கொடுக்கப் போகிறீர்கள்?
அதை விட இப்படி ஒரு தீர்ப்பை கொடுத்த அந்த நீதிபதிக்கு(கிறிஸ்தவ சகோதரர்) என்ன பட்டம்?
அப்பாவி மக்கள் கொல்லப் படுவதற்கு உங்கள் மனம் இரங்குவதால் நிச்சயம் நீங்கள் ஒரு நடுநிலைவாதி என நினைக்கிறேண். உண்மையான நடுநிலைவாதி எனில் முதலில் அவர்களுக்கு நல்ல ஒரு பட்டம் கொடுத்துவிட்டு பின் என்னைக் குறித்து ஆலோசியுங்கள்(என் கருத்தைக் கேட்ட பிறகு - அப்பாவிகள் கொல்லப் படுவதற்கு நீங்கள் மட்டும் அல்ல உலகில் மனிதாபிமானமுள்ள ஒருவர் கூட துணை நிற்க மாட்டார்கள் என்பது என் கருத்து).
நான் அறிந்தவரை ஆக்ரமிப்பதற்கு எதிராக அன்னியர்களுக்கு எதிராக போராடுவதை சுதந்திரப் போராட்டம் எனவும் அவர்களை போராளிகள் எனவும் சொல்வதைத் தான் கேட்டிருக்கிறேன் - அது முஸ்லிம்களாக இருந்தாலும் சரி விடுதலைப் புலிகளாக இருந்தாலும் சரி.
உலகில் முஸ்லிம்கள் எனில் அவர்கள் தங்களுடைய சுதந்திரத்திற்காக போராடவேக் கூடாது என எண்ணுகிறீர்களா?
மேலும் அப்பாவிகள் என்பது யார் என்று ஒரு விளக்கமளித்தால் நலமாக இருக்கும்.
தன்னுடைய சொந்த நாட்டை அன்னியர்களுக்கு சில எலும்புத் துண்டுகளுக்காக காட்டிக் கொடுத்து இன்று அவர்கள் வீசியெறிந்த எலும்புத் துண்டுகளை நக்கிக் கொண்டிருப்பவர்களா அப்பாவிகள்?
அல்லது தன்னுடைய நாட்டு வெள்ளை மக்களைத் தவிர மற்றவர்களை மனிதர்களாகவே மதிக்காத உலகின் பல நாட்டு லட்சக்கணக்கான மக்களை அன்பாக தட்டிக் கொடுத்து ஒரேயடியாக தூங்கவைத்துக் கொண்டிருக்கும் மிகுந்த இரக்க சுபாவம் வாய்ந்த அமெரிக்க இராணுவத்தினரா?
அல்லது கிட்டிய சந்தர்ப்பத்தில் கிடைத்ததை சுருட்ட நினைக்கும் வழிபறி கொள்ளையர்களா?
அல்லது தங்களுடைய சுதந்திரத்திற்காக, அன்னியர்களுக்கு எதிராக, காட்டிக் கொடுத்தவர்களுக்கு எதிராக, தேச விரோதிகளுக்கு எதிராக போராடும் சாதாரண மக்களா?
உங்களின் நடுநிலைமையை நேரடியாக காண்பியுங்கள். அதை விடுத்து காசிற்காக "எப்படியோ போனவர்களின்" அர்த்தமற்ற காறித்துப்பல்களை ஆதாரங்களாக காண்பிக்க வேண்டாம்.
அது சரி எந்த போராளிகளின் போராட்டத்தில் ஒன்றுமறியாத(எதிலும் பங்கு பெறாத - யார் ஆண்டால் எனக்கென்ன என் வயிறு நிறைந்தால் சரி தான் என்றிருப்பவர்கள்) மக்கள் உயிரிழக்காமல் இருக்கின்றனர்.
இறைநேசன்,
ReplyDeleteபுலிப்பாண்டி போன்ற அனாமதேயங்களுக்கு இவ்வளவு நீண்ட விளக்கம் தேவையில்லை.
புலிப்பாண்டி போன்ற 'ஆரோக்கிய சிந்தனையாளர்கள்' இந்திய சுதந்திரத்திறாக போராடியவர்களையும் "தீவிரவாதிகள்" என்று சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. என்ன செய்வது எங்களில் சில ஜென்மங்களுக்கு ஜாதிவெறி மூளையை மழுங்கடித்து மனிதாபிமானத்தை கொன்றுவிட்டது.
புலிப்பாண்டிகளுக்காக நாமும் வருந்துவோம்.
நன்றி தஞ்சை கண்ணன் அவர்களே!
ReplyDeleteநான் சகோதரர் புலிப்பாண்டி அவர்களை அவ்வாறு கருதவில்லை.
அவர் சில தவறானவர்களின் தவறான வழிகாட்டுதலினால் தவறாக புரிந்து கொண்டுள்ளார் என நினைக்கிறேன்.
உண்மையில் அன்னியர்களுக்கும், ஆக்ரமிப்பிற்கும் எதிரான சுதந்திரப் போராட்டங்களுக்கு அவர் எதிரில்லை என்றே நான் கருதுகிறேன்.
விரைவில் நம் நாட்டு சுதந்திரத்திற்காக போராடிய காந்தியவர்களை கொன்ற தேச விரோத சங்கங்களுக்கும், நம் நாட்டில் கைபர், போலன் கணவாய் வழியாக வந்தேறி பிரிட்டிஷாருக்கு அவர்கள் வீசிய எலும்புத் துண்டுகளுக்காக நம் நாட்டை காட்டிக் கொடுத்து இன்று ஏதோ இவர்கள் தான் உண்மையான தேசபக்தர்கள் என்றும் மற்றவர்கள் எல்லாம் தேச விரோதிகள் என்றும் சித்தரித்து நாட்டில் மதக் கலவரங்களை உண்டாக்கி அதன் மூலம் நம் நாட்டை ஆளத் துடிக்கும் ஆரிய-பார்ப்பன கூட்டங்களுக்கு எதிராக தன் கருத்தை கூறி அவர் தனது நடுநிலையை தெளிவிப்பார் (என நம்புவோமாக!).
நான் இந்தியாவிலிருக்கும் இஸ்லாமிய சகோதரர்களை எதிர்க்கவில்லை. பாகிஸ்தானிலிருந்து ஊடுறுவும் முஸ்லிம் தீவிரவாதிகளைத் தான் எதிர்க்கிறேன்.
ReplyDeleteகண்ணன், எனக்கு ஜாதி வெறின்னு என்கேய்யா கண்டீர். நான் பார்ப்பனர்களை எதிர்க்கும் அதே வெறியுடந்தான் பாகிஸ்தானியர்களையும் எதிர்க்கிறேன். நான் ஒரு நாத்திகன். மணுவைப் பரப்பும் டோண்டு ராகவன் மாதிரி கபோதிங்களை எதிர்ப்பதில் என் நிலையை எல்லோரும் அறிவர்.
அயோக்கியமாக வலைப்பதிவு செய்துவந்த ஆரோக்கியத்தை தமிழ் மணத்திலிருந்து தூக்க காசியிடம் சொன்னதன் மூலம் என் நடுநிலையை நிரூபித்துவிட்டேன். அத்தோடு அரவிந்த நீலகண்டனின் அகப்பயணம் அரைப்பயணமாகவும் நான் பாடுபட்டிருக்கிறேன்.
தமிழ் சார்ந்த வலைப்பூக்களை ரசிப்பவன் நான். தயவு செய்து என்னை ஜாதி முத்திரை குத்தி கேவலப்படுத்தாதீர்.
இந்திய இஸ்லாமிய சகோதரர்களே மனதை வருத்தி இருந்தால் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்கவும் தயார்.
ஒழிக இந்துத்துவா. ஒழிக பார்ப்பனீயம். ஒழிக மதவெறி!
//அதே வெறியுடந்தான் பாகிஸ்தானியர்களையும் எதிர்க்கிறேன்//
ReplyDeleteபாகிஸ்தானில் வாழும் அனைவரையுமா?
இதே போன்ற கண்மூடித்தனமான வெறி அங்கும் சிலருக்கு இந்தியர்களின் மேல் இருப்பதால் தான் சகோதரர்களான இரு நாட்டு மக்களிடையே எவ்வளவு தான் முயற்சித்தும் ஐக்கியம் வரமாட்டேன் என்கிறது.
இதே வார்த்தையை ஒரு பாகிஸ்தானி "அதே வெறியுடன் இந்தியர்களை எதிர்க்கிறேன்" என்று ஒட்டு மொத்த இந்தியர்களையும் பார்த்து கூறினால் நமக்கு எப்படி இருக்கும்.
தயவு செய்து நடுநிலையாக சிந்தியுங்கள் சகோதரரே!
Erai Nesan,
ReplyDeleteWhile one can certainly appreciate your view that hating all Pakistanis does not befit us, I also wish to ask if we really need to love them for the following act their society has done...
1,00,000 Pounds was the gift of the Paki UK community to Laskar-E-Toiba.We know they are not freedom fighters or any crap because most of their recruits are from Pakistan not kashmir.
it is more of a fashion to show off oneself as a 'peace-lover' , while the truth is that there never will be peace on earth and the one prepared to fight for his survival will survive and protect his women from getting raped and kids from getting sold as slaves.
Do write about how america kills innocent Iraqis.I have never heard about it , all they killed were fighting with guns for Saddam and are now part of the Al-Qaeda.
It is good that Saddam is gone and a new more liberal government has been taken over Iraq.Did you not see the way Iraqis came out to elect their new leaders ?
Come , dont be a hypocrite!
சமுத்ரா தமிழில் எழுத முயற்சியுங்களேன். தெரியாவிட்டாலும் பரவாயில்லை. ஆங்கிலத்திலேயே எழுதுவதால் அமெரிக்காவின் அடிவருடி(மன்னிக்கவும்) போன்ற தோற்றத்தை உண்டு பண்ணுகிறது. நீங்கள் ஆங்கில பாசத்தை வெளிப்படுத்த நான் வேண்டுமானால் ஓர் ஆங்கிலப் பதிவு போட முயற்சிக்கிறேன். தமிழில் தப்பு தப்பாக எழுதினாலும் தமிழ் நாட்டுக்காரன் என்ற எண்ணம் உங்கள் பைத்தியக்காரத் தனமான கேள்விகளுக்கு பதிலளிக்க வைக்கும். அதற்காகத் தான். மேலும் தமிழ் நாட்டான் ஒருவனுக்கு தமிழ் ஒழுங்காக தெரியவில்லை என்பது நமக்கு கேவலமல்லவா? உங்கள் கூகிள் விளம்பரத்திற்கு ஆதரவு கிடைக்கவில்லையென்றாலும் தமிழ் அறிவாவது வளரும் அல்லவா? தயவு செய்து தமிழில் எழுதுங்களேன்.(ஆமாம் கூகிளிலிருந்து கிடைக்கும் ஆண்டு வருமானம் எவ்வளவு?)
ReplyDeleteசமூத்ரா..
ReplyDeleteஉன்னோட அரவேக்காட்டுத்தனத்த வெளிக்காட்டிய கூத்தாடிக்கு நன்றி சொல்லிட்டு தொடர்கிறேன்..
//Do write about how america kills innocent Iraqis.I have never heard about it //
பூனை கண்ண மூடிக்கிட்டா ஒலகமே இருண்டு போயிடுமாம்.. வெள்ளைப் பாஸ்பரசு அப்டின்னு ஒண்ணு தெரியுமா? அத ஒனக்குப் படியளக்குற பெரியண்னன் கிட்ட கேட்டுத் தெரிஞ்சுக்கப்பா..
சொல்லைக் கொட்டுவது எளிது..