Monday, October 3, 2005
பள்ளி சிறுவனும் கழைக்கூத்தாடிகளும்
எந்த ஒரு பாதுகாப்பும் இல்லாத ஒரு தோட்டம். உள்ளே பல விதமான கனி வகைகள் பழுத்து தொங்கிக் கொண்டிருக்கின்றன. உடமையாளன் போட்டிருக்கும் வேலியோ வெளியிலிருந்து பார்க்கும் யாவருக்கும் அப்பட்டமாக உள்ளே இருப்பதை வெளிச்சம் போட்டுக் காட்டும் விதத்தில் அமைந்தது.தோட்டத்தின் உள்ளே புக உடமையாளனைத் தவிர யாருக்கும் அனுமதியில்லை.மீறி யாராவது நுழைந்து கனியை பறித்து உண்டால் - கனியின் பருவத்திற்கு அனுசரித்து அபராதமோ, அபராதமும் இரண்டு அடியுமோ அல்லது அடி மட்டுமோ விதிக்கப் படும்.தோட்டத்திற்கு வெளியில் டெண்ட் அமைத்து கழைக் கூத்தடிகள் கூத்து காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.(வயிற்றுப் பிழைப்பு பாவம் போகட்டும்). மற்றொரு கூட்டம் எப்படி கனியை திருடி உண்டவனுக்கு அடிகிடைக்காமல் குறைந்தபட்சம் அபராதத்துடன் அல்லது அவன் திருடவே இல்லை என்று சாதிக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறது.பள்ளிக்கு படிக்க போகும் வழியில் எதேச்சையாக கூத்தாடிகளை சிறுவன் பார்க்க நேரிடுகிறது. என்னதான் நடக்குது பார்க்கலாமே என்று சிறுவன் எட்டி பார்க்கிறான். அங்கு கனிகளின் சுவை எவ்வாறு இருக்கும் என்றும் அதனை எப்படி எப்படி எல்லாம் திருடி சாப்பிடலாம் என்றும் கூத்தாடிகள் செய்து காண்பிக்கிறார்கள். கூத்து முடிந்து மனம் முழுக்க கனியின் (னன்றாக கவனிக்கவும் - படித்து அறிவை வளர்க்க வந்தவன் "கண்டு" அறிவு மழுங்கி ஒரே ஓர்) சிந்தையுடன் வெளி வருகிறான். பார்க்கிறான் ஆகா "அறைகுறை" வேலி, மனதில் நிறைந்திருக்கும் கனிகளின் தோற்றம் கண் முன் கண்கொள்ளா காட்சியாக, பாதுகாப்பிற்கு நிறுத்தியிருக்கும் காப்பாளனோ நாவில் நீர் வழிந்தவனாக. சிறுவனுக்கு ஆவல் தாங்க முடியவில்லை. எனினும் யாராவது பார்த்து பிடிபட்டால் என்ன செய்வது என்று ஏக்கத்துடன் கனிகளையே வெறித்து பார்த்துக் கொண்டு நிற்கிறான்.அப்பொழுது தான் அந்த சம்பவம் நடந்தது. வாயில் நீர் வடிய கனிகளை நோக்கிக் கொண்டிருந்த காவல் காரன் உள்ளே நுழைந்து கனிகளை பறித்து சாப்பிட தொடங்கினான்(வேலியே பயிரை மேய்கிறது). எதிர்பாராதவிதமாக அங்கே வந்த உடமையாளன் இதைப் பார்த்து அவனை தண்டிக்கப் போக இதைப் பார்த்துக் கொண்டிருந்த மற்றொரு கூட்டம் காவல் காரன் சார்பாக களத்தில் குதித்து அவன் அந்த கனிகளை, ஒரு முறை திரும்பி கூட பார்க்கவே இல்லை என்று கூறி காவல் காரனை விடுவித்தது. சிறிது தள்ளி வந்து காவல் காரனிடமிருந்து காப்பாற்றியதற்கு கூலி(இது என்ன பிழைப்போ - இந்த வழியில் சம்பாதிப்பவர்களின் தோட்டத்தில் இறங்கி ஒரு முறை அவ்வாறு செய்துவிட்டு தப்பிக்க இவர்களையே அழைக்க வேண்டும் அப்பொழுது தான் இவர்களுக்கு புத்தி வரும்) வாங்கிக் கொண்டு நகர்ந்தது.பயத்துடன் நின்று கொண்டிருந்த சிறுவன் இவை அனைத்தையும் கண்டான். பின் என்ன நடந்திருக்கும் என்பதை சொல்லியும் தெரிய வேண்டுமோ. அதே சம்பவம் மீண்டும் ஒரு முறை - கனியும், கனியை பறித்து உண்டவனும் மட்டும் வேறு.ஏதாவது புரிந்ததா. புரிந்தாலும் இந்த முற்போக்குவாதியென்றும், பெண் விடுதலைவாதி என்றும் கூறி பினாத்திக்கொண்டு நடப்பவர்களுக்கு மட்டும் ஒன்றும் புரியாது. ஏனென்று சொல்லி தெரிய வேண்டியதில்லையே.இப்பொழுது கூறுங்கள் குற்றங்கள் குறைய என்ன செய்ய வேண்டும். கல்லெறிந்தவனை விட்டு விட்டு கல்லை நொந்து கொண்டிருப்பதில் ஒரு பிரயோஜனமும் இல்லை.குற்றங்களின் பிறப்பிடத்தை கண்டுகொள்ளாமல் குற்றம் செய்தவனை நோக்கியே நமது பார்வை இருப்பதால் தான் இங்கே குற்றங்கள் குறைவதில்லை என்பதை நாம் எப்பொழுது புரிந்து கொள்ளபோகிறோம்.1. மனதில் வக்கிரத்தை தூண்டும் கழைக்கூத்தாடிகளின் கலை சேவை.2. கண்ட காட்சிகளுக்கேற்ற அவயங்களை அப்பட்டமாக வெளிக்காட்டும் ஆடையுடன் நவனாகரீக மங்கைகள்.3. வேலியே பயிரை துணிந்து மேயும் அளவிற்குள்ள ஓட்டைச் சட்டங்கள்.ஒரு மனிதன் தவறு செய்ய இதைவிட வேறு என்ன வேண்டும்.உடனே ஆ,ஊ,ஈ,ஐ என்று கூறிக் கொண்டு சில போலி பெண்ணியவாதிகள் வரக்கூடும். அவர்களைப் பற்றி கவலையில்லை. ஏனெனில் இவர்கள் காலையில் பெண்சுதந்திரம் என்று கூக்குரகிடுவார்கள். மதியம் ஏதவது பெண்கள் ஆடையில்லாமல் வரும் பேஷன் ஷோக்களில் இருப்பார்கள். மாலை ஏதாவது அரைகுறை ஆடையில்லா போஸ்டரில் ஆடை வரைந்து கொண்டிருப்பார்கள். இரவு ஏதாவது தியேட்டரில் கூத்தடிகளின் துகில் உரிதல் காட்சியை கண்டு ரசித்து கொண்டிருப்பார்கள். இது தான் இவர்களின் பெண் சுதந்திரம்.னான் இங்கு மனித இயல்பை குறித்து எழுதுகிறேன். தவறு செய்ய தூண்டும் எல்லா சூழ்னிலைகளையும் உருவாக்கி கொடுத்துவிட்டு ஒன்றும் செய்ய கூடாது என்றால் எப்படி. கயவர்களையும், பொறுக்கிகளையும், ரவுடிகளையும் உருவாக்கும் காரணிகளை ஒழித்தில்லாமல் குற்றங்கள் நிச்சயமாக குறையாது.
Subscribe to:
Post Comments (Atom)
Great blog! I enjoyed reading it even though I came across it by pure chance! I was actually looking for last minute travel all inclusive which features some pretty good deals. Anyway, keep up the good and keep BLOGGING!
ReplyDelete