Monday, October 10, 2005

மதமாற்றமல்ல - மனமாற்றம்

இன்று உலகில் மிக வேகமாக பரவி வரும் ஒரு வாழ்க்கை நெறி இஸ்லாம் ஆகும். இதற்கு முக்கிய காரணம் எது என்பதை - இந்த வாழ்க்கை நெறியை ஏற்று சிறப்படைந்த மக்கள் நன்கு உணர்ந்திருந்தாலும், மனித வாழ்வின் எந்த சூழ்நிலையிலும் தோற்று விடக்கூடிய சித்தாந்தத்தின் சொந்தக்காரர்கள் இஸ்லாத்தின் மகத்தான வெற்றியை மூடி மறைக்க தங்களால் ஆன எல்லா முயற்சிகளையும் எல்லாவிதங்களிலும் செய்து வருகின்றனர். அதில் ஒன்று இஸ்லாத்தை மக்கள் ஏற்றுக்கொள்வதை "மத மாற்றம்" என்ற வினோத சொல் பிரயோகத்தால் வர்ணிப்பது.

ஆனால் உண்மையில் மனிதன் தன் வாழ்வில் சந்திக்கும் அனைத்து சீரழிவுகளிலிருந்தும் மீட்சி பெற்று ஒரு உன்னத நிலையை அடைய அவனது உள்ளத்தின் அடித்தளத்தில் ஏற்படும் "மன மாற்றம்" தான் அவன் இஸ்லாமிய சத்திய நெறியை ஏற்றுக்கொள்ளும் அற்புத நிகழ்ச்சி. இந்த செய்தியை இஸ்லாம் வாளால் பரப்பப் பட்டது என்றும், தீவிரவாத மதம் என்றும், சகிப்புத்தன்மையற்ற மதம் என்றும் அதன் வளர்ச்சியை பொறுக்க முடியாமல் புழுதி வாரி தூற்றிக் கொண்டிருக்கும் "முழு நேரப்" பணியாளர்களுக்கும், இவர்கள் கூறுவதை உண்மை என்று நம்பி இவர்கள் பின்னால் செல்லும் அப்பாவி சகோதர, சகோதரிகளுக்கும் தெளிவுபடுத்துவதற்காக 'புறப்படு நீயும் இஸ்லாத்தை நோக்கி" என்ற நூலின் மின்பிரதியை இங்கே தொகுக்கின்றேன்.

இந்த நூல் திரு. கொடிக்கால் செல்லப்பா (இன்று கொடிக்கால் ஷேக் அப்துல்லாஹ்) என்ற மூதறிஞர் தனது சொந்த வாழ்க்கைச் சுவடுகளின் அடிப்படையில் கன்னியாகுமரி - விவேகானந்தா கேந்திரத்தில் 1986 அக்டோபர் 2 ல் நடைபெற்ற "தீண்டாமை ஒழிப்பில் காந்திஜீயின் பங்கு" என்ற கருத்தரங்கில் ஆற்றிய உரையின் தொகுப்பாகும்.

திரு. கொடிகால் செல்லப்பா தமிழகத்திலுள்ள கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தாமொழியை அடுத்த கொடிக்கால் கிராமத்தில் தந்தை சுப்பையா தாய் கிருஷ்ணம்மாள் (கிட்டு) இவர்களுக்கு மகனாக 1937 ல் பிறந்தார்.
பள்ளிக்கூடத்தில் படித்துக் கொண்டிருக்கும் போதே அரசியல் ஈடுபாட்டின் காரணமாக பள்ளிப் படிப்பிற்கு முற்றுப் புள்ளி வைத்துவிட்டு தனது பதினெட்டாவது வயதில் சிறை புகுந்தார். அதைத் தொடர்ந்து அரசியலில் தீவிரமாக ஈடுபடவே இதனால் பலமுறை சிறை சென்றிருக்கிறார்.
சிறந்த எல்லைப் போராட்ட வீரர் என்று 1968ல் தமிழக அரசு பாராட்டி தாமிரப் பட்டயம் வழங்கி கௌரவிக்கப் பட்டார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில்(சி.பி.ஐ) நீண்ட காலம் இருந்து பணியாற்றிய அவர் அக்கட்சியின் குமரி மாவட்டச் செயலாளர் பொறுப்பிலும் இருந்தவர்.
பத்திரிக்கையாளரும் பல்வேறு சமூக ஸ்தாபனங்களுடன் தொடர்பு கொண்டு சேவை செயதவரும் சிறந்த சமூக சேவகரும் ஆவார்.

அரிஜன மேம்பாடு சமபந்தமாக மாவட்ட மாநில அளவில் பல அரசு கமிட்டிகளில் அரசால் நியமணம் செய்யப்பட்டுள்ள திரு கொடிக்கால் செயல்லப்பா மனித உரிமை இயக்கத்தில் பொதுச் செயலாளராகவும் இருந்து வருகிறார்.

ஒரே நாட்டில் அதே இன மக்களால் ஆழம் காண முடியாத அடித்தளத்திலே அமுக்கி அழுத்தி வைக்கப்படடிருக்கின்ற பரிதாபநிலையிலிருந்து விடுபட சாதி சமூகக் கொடுமைகயை எதிர்த்துப் போராடி வரும் திரு. கொடிக்கால் செல்லப்பா இஸ்லாத்தின் கொள்கைளை உணர்ந்து அதன் ஒளியில், தான் கண்ட காட்சியை உண்மையை அதன் இறுதி வெற்றியை இந்நூலில் தருகிறார்.

வெளியீடு:அறிவுப்பண்ணைஈத்தாமொழி - 629 501

2 comments:

  1. //ஈத்தாமொழி//

    என்ன அண்ணே ,நம்மூர் காரரா நீங்க?

    ReplyDelete
  2. //என்ன அண்ணே ,நம்மூர் காரரா நீங்க?//

    பக்கம் தானுங்கோ

    ReplyDelete