இந்து மதம் என்றால் என்ன? பொதுவாக நம் அனைவருக்கும் உடனே தோன்றும் பதில், அது வேதங்களின் அடிப்படையில் அமைந்த ஒரு மதம் என்பதே. இந்த விளக்கமானது, ஆபிரகாமிய மதங்கள் என்று நாம் இன்றழைக்கும் யூத,கிறித்துவ,இஸ்லாமிய மதங்களின் பார்வையை இரவல் பெற்று நாம் அமைத்துக்கொண்டது. நமக்கு அன்னியமான கோட்பாடு.... .....சுருங்கக் கூறின், இந்து மதம் என்பது ஒரு வரையறைக்கு உட்படா மனிதக் கூட்டம். இதற்கு வேதம் தேவையில்லை, சடங்கு தேவையில்லை, நம்பிக்கை தேவையில்லை, ஏன் கடவுளே கூடத் தேவையில்லை. ஆம், கடவுளைப் பற்றியே பேசாத மகான்கள் இங்கே வாழ்ந்து உபதேசித்து சென்றுள்ளனர்.
வலைப்பூக்களில் இஸ்லாத்தைப் பற்றிய அரைகுறை புரிந்து கொள்ளல்களுடன் Islaamic Info என்ற பெயரில் தன்னிச்சையாகவும் தவறாகவும் எழுதி வரும் நேசகுமார், அவர் சார்ந்திருக்கும் இந்து மதம் பற்றிய புரிந்து கொள்ளலிலும் தன் அறியாமையை வெளிப்படுத்தியுள்ளார்.
சமீபத்தில் அங்கயர்கன்னி என்ற தலித் பெண், கோவிலில் ஓதுவாராக நியமிக்கப் பட்டிருப்பதை சிலாகித்து SIFI யில் எழுதி இருந்தார். வாங்கும் கூலிக்கேற்ப மாரடிப்பதிலோ அல்லது தன் மதத்தையும் இன்றைய பிரேமானந்தா,காஞ்சி சுப்பிரமணியன் போன்ற பண்டைய இந்துமத ஞானிகளையும் சிலாகித்து எழுதுவதிலோ யாருக்கும் ஆட்சேபனை இல்லை.
இஸ்லாம் என்றால் ஏதோ ஆயிரத்தி நானூற்று சொச்ச வருட பாரம்பரியம் கொண்ட மதம் என்ற எடுகோலில் முஸ்லிமல்லாத எவரும் இந்து என்று இந்து மதத்துக்கும் அத்னைப் பின்பற்றும் இந்துக்கும் புதிய (?!) விளக்கம் கொடுப்பதற்காக இஸ்லாத்தின் மீது கல்லெறிய வேண்டிய அவசியம் ஏனோ?
முதல் மனிதன் ஆதம் (அலைஹி...) அவர்களிலிருந்து தொடங்கி சுமார் ஒரு இலட்சத்து இருபத்து நான்காயிரம் மனிதர்களை தன் தூதுவர்களாகத் தேர்ந்தெடுத்து இறுதியாக முஹம்மது (ஸல்...) அவர்களால் முழுமை படுத்தப்பட்டதே இஸ்லாம்.
"ஆதமையும், நூஹையும், இப்ராஹீமின் சந்ததியரையும் நிச்சயமாக அல்லாஹ் அகிலத்தாரைவிட மேலாக தேர்ந்தெடுத்தான். (திருக்குர்ஆன் 003:033). மேலும்,
(நபியே) உமக்கு முன்னர் (பற்பல சமூகங்களுக்கும்) நாம் அனுப்பிய தூதர்கள் (அந்தந்த சமூகங்களின்) ஊர்களிலிருந்த மனிதர்களேயன்றி வேறில்லை; அவர்களுக்கு நாம் வஹீ மூலம் (நம் கட்டளைகளை) அறிவித்தோம். என்று குர்ஆன் பல இடங்களில் அழகாகத் தெளிவு படுத்துகிறது.
பின் யார்தான் இந்து? ஆபிரகாமிய மதங்கள் தலையெடுத்து என் வழி தனி வழி, பிற வழியெல்லாம் தீய வழி, என் கடவுள் மட்டுமே கடவுள் மற்றதெல்லாம் ஷைத்தான்.என் நபி (ஆபிரகாமிய மதங்களில் இப்படிக் கடவுளிடம் தொடர்புகொள்பவர் நபி கடவுளின் தூதர் என்றழைக்கப்படுகிறார்) மட்டுமே நபி (அல்லது கடைசி நபி தூதர்) என்று மூளைச் சலவை செய்யப்பட்டு இயல்பான மனிதத்தன்மையிருந்து மாறுபாடு அடையாமல் இருந்தால் அவர்களெல்லாம் இந்துக்களே.
குர்ஆனை, இறை வேதம் என்று நம்புவது எப்படி முஸ்லிம்களின் மீதான கடமையோ அதேபோல்தான் முந்தைய நபிமார்களுக்கு வழங்கப்பட்ட வேதங்களையும் நம்ப வேண்டும். அப்படி நம்பிக்கை கொண்டு இஸ்லாத்தை தங்கள் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டவர்கள்,நேசகுமாரின்பார்வையில் மூளைச் சலவை செய்யப்பட்டவர்களாம். (மூளைச் சலவை என்ற வார்த்தையை அவர் ஏலனமாக உபயோகித்திருந்தாலும்,ஆழ்ந்து நோக்கினால் அழுக்கடைந்த மூளையை இறைவேதம் கொண்டு சுத்தப் படுத்திக் கொண்டவர்கள் என்றும் எடுத்துக் கொள்ளலாம்!)
//உலகின் எந்த மூலையில் ஒருவன் இருந்தாலும், மதமாச்சர்ய ஒரே வழி வன்மதக் கோட்பாடுகளுக்குள் அகப்பட்டுக் கொள்ளாமல் இருந்தால் அவன் இந்துவே. இந்து என்கிற வார்த்தை பிராமணர்களையும், சடங்குகளையும் உங்களது கற்பனையில் கொண்டுவந்தால் இந்து என்பதற்குப் பதில் பாகன் என்றழையுங்கள்.//
முஹம்மது நபி இஸ்லாத்தை முதன் முதலில் எடுத்துச் சென்ற பாகன் அரபிகளையும் இந்து என்பதில் பெருமிதப் படுகிறார். இஸ்லாத்தைப் பின்பற்றாதவர்கள் என்ற தகுதியில் பாகன்களையும் இந்து மதத்திற்குள்ளடக்க விரும்பும் இவர், அன்றைய பாகன்களின் பழக்க வழக்கங்களையும் பண்பாடுகளையும் அறிந்து கொள்வது அவசியமாகும்.
1) கடவுளை நிர்வாணமாக வழிபடுதல் 2) தந்தையின் மனைவியை மறுமணம் செய்தல், பெண் குழந்தைகளை உயிரோடு கொல்லுதல், போன்ற கொடுங்குணங்களின் சொந்தக் காரர்கள்தான் இவர் விரும்பும் பாகன்கள். நிர்வாண சாதுக்களும் உசிலம்பட்டி, தர்மபுரி போன்ற பாகன் வழி சிசுக் கொலைகளைப் பேணுபவர்களும் இருப்பதால் ஒரு சமயம் பாகன்களை இந்துக்கள் என்கிறாரோ என்னவோ?
//ஆபிரகாமிய மதங்கள் செய்ததைப் போன்ற இனச் சுத்திகரிப்புகளை இந்தப் பாகன் மரபுகள் செய்யவில்லை. சடங்குகள் இங்கிருந்தன,//
பெளத்த மதத்தை தோன்றிய இந்தியாவிலிருந்து விரட்டியவர்களும், குஜராத்திலும் இன்னும் பல வடஇந்திய மாநிலங்களிலும் முஸ்லிம்களை இனச்சுத்திகரிப்பு செய்தவர்கள் ஆபிரஹாமிய மதங்களா?என்பதைத் தெளிவுபடுத்த நேசகுமார் கடமைப் பட்டுள்ளார்.
//வேதத்தையே நாம் மறை என்றுதானே அழைக்கின்றோம். நமது வேதங்களின் மறைபொருள் கோட்பாட்டைக் காப்பியடித்து இஸ்லாத்தில் சூஃபியிஸம், குரானுக்கு மறைபொருள் உண்டு என்றது.அப்படி குரானுக்கு மறைபொருள் உண்டு என்றால், இஸ்லாம் முழுவதுமே தகர்ந்து விழுந்துவிடும். ஏனெனில் முழு இஸ்லாமுமே குரானின் வெளிப்படையான அர்த்தப்படுத்துதலை அடிப்படையாக வைத்தே அமைந்துள்ளது.//
வேதம் (Scripture) என்பதற்கு தமிழில் மறை என்ற பொருளுண்டு. திருக்குறளை சிலர் உலகப் பொதுமறை என்பார்கள். மறை என்றால் புனிதப் புத்தகம் என்ற அர்த்தத்திலேயே அறியப்படுகிறது. நேசகுமார், மறை என்றால் மறைபொருள் கொண்டது என்று புரிந்து கொண்டிருப்பதிலிருந்து இவருக்கு தமிழும் சரியாகத் தெரியாது என்பதை வெளிப்படுத்தியுள்ளார். இவரெல்லாம் இந்து மதத்திற்கு புதிய புதிய வியாக்கியானம் கொடுக்கும் நிலைக்கு வந்துள்ளதைப் பார்த்தால், கொஞ்ச நஞ்சம் இருக்கும் இந்துக்களையும் குழப்பாமல் விடமாட்டார் போலிருக்கிறது. ஐயோ தேவுடா!
ஐயா எரைநேசா,,,,,!
ReplyDeleteஎங்க நேசகொமாரண்ணே மறைய பத்தி சொன்னதவெச்சி மறை கழண்டவன்னு சொல்லுற நீயிதான் ம.க.கே...!
Iyya,
ReplyDeletevantheri,Vantheri-nnu intha irai nasa maharaja pesurare!Ivaroda matham mattum enna dravidathula poranthatha?.
Intha alavukku oru setthupona velinattukarran sonnathai ivvaluvu thukki vechu kontadura ivaru namma thiruvalluvara nenaippara?
oru 9 perai mathi mathi kalyanam panna mohammed romba nallavaram?
innum solluven arabingaloda lilaikalai?
Arabikku intha alavuku vakkaluthu vankara ivara mathiri ettappanunka natla irukara varai romba kashdamthan!
Enna panrathu thulakanunkala vechunu maradikavendiyatha pochu namma nelamai!
ellam namma pattanunga sencha thappu!