Wednesday, August 30, 2006

சகோ.ஆனந்த கணேஷ்(மியூஸ்) அவர்களுக்கு....!

இஸ்லாத்திற்கு எதிராக எதையாவது எழுதுவதையே தங்கள் வாழ்வின் இலட்சியங்களாக கொண்டவர்கள் காலம் காலமாக அரபி மொழியில் இருக்கும் குர்ஆனிலிருந்து மெத்தப்படித்த மேதாவிகளைப் போன்று சில அரபுச் சொற்களையோ சில வாசகங்களையோ அல்லது தொடர்பில்லாத இடங்களிலிருந்து சில வசனங்களையோ தொகுத்து அதனை முஸ்லிமல்லாதவர்கள் அத்தனை பேருக்கும் எதிராக இஸ்லாம் கூறுவதாக திரித்து அவதூறு கற்பித்து முஸ்லிமல்லாதவர்களின் மனதில் முஸ்லிம்கள் மீது வெறுப்பு படர்த்த விஷவிதைகளை தூவி வருகின்றனர்.

அதில் மிக முக்கியமான குர்ஆனின் ஓர் சொல்லாடலான "காஃபிர்" என்ற சொல்லை எடுத்து அது முஸ்லிமல்லாத மற்ற அனைவரையும் இகழ்ந்து கேவலப்படுத்துவதற்காகத் தான் இஸ்லாம் அதனை பயன்படுத்த முஸ்லிம்களுக்கு கற்றுத்தருகிறது என்பது போன்ற ஓர் மாயையை சமீபகாலங்களில் ஒரு சிலர் ஏற்படுத்த முனைகின்றனர்.

இதனால் "காஃபிர்" என்ற அரபிச் சொல்லுக்கு தமிழில் "முஸ்லிம் அல்லாதவர்கள்" என்ற பொதுவான பொருள் தான் வரும் என்ற சத்தியம் மறைந்து இச்சொல்லின் மூலமாகவும் முஸ்லிமல்லாதவர்கள் முஸ்லிம்களை ஒரு வித வெறுப்போடு காணும் நிலை இச்சமுதாய புல்லுருவிகளால் தோற்றுவிக்கப்படும் அபாயநிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் "காஃபிர்" என்ற சொல்லின் அர்த்தம் என்ன?, அது குர்ஆனில் எதற்காக கையாளப்படுகிறது?, அச்சொல் மற்றவர்களை இழிவுபடுத்தும் சொல்லா?, முஸ்லிம்கள் மற்றவர்களை கேவலப்படுத்தத்தான் அந்த சொல்லைக் கையாள்கிறார்களா? என்பது போன்ற கேள்விகளுக்கு தெளிவாக ஒரு முஸ்லிம் என்ற நிலையில் சகோ.நல்லடியார் அவர்கள் "காஃபிர் (Kaafir/كَافِر ) என்பது கேவலமான சொல்லா?" என்ற தலைப்பில் அருமையான ஓர் பதிவினை எழுதியுள்ளார்.

அப்பதிவில் அவர் கூறும் விளக்கங்களை நடுநிலையோடு சிந்திப்பவர்கள் ஏற்றுக் கொள்வார்கள்/கொள்கிறார்கள். அங்கு சகோதரர் ஆனந்த கணேஷ் என்ற மியூஸ் அவர்கள் சில கருத்துக்களை கூறியிருந்தார். அதனைக் குறித்து நான் சில கேள்விகளை எழுப்பியிருந்தேன். அவை அப்பதிவுக்கு தொடர்பில்லாதவை என அவர் கருதியதாலோ என்னமோ என் கேள்விகளை தனிப்பதிவாக போட வேண்டுகோள் விடுத்திருந்தார்.

அவரின் கோரிக்கைக்கு இணங்க நான் அங்கு வைத்த பின்னூட்டத்தை இங்கு தனி பதிவாக பதிகிறேன்.

//தாழ்த்தப்பட்டவர்கள் மட்டுமல்ல யாரையும் பிறப்பின் அடிப்படையில் உயர்த்துவதோ தாழ்த்துவதோ கூடாது என்பது ஹிந்து மதங்களின் கருத்து.//

சில நேரங்களில் அறிவுப்பூர்வமாக வாதங்களை வைக்கும் சகோதரர் மியூஸ் அவர்கள் ஒரு சில நேரங்களில் இது போன்று காமெடி செய்வதற்கும் தவறுவதில்லை.

ஒரு முன் அனுமதி/கோரிக்கை:

நான் கேட்கப்போவதை இப்பதிவுக்கு தொடர்பில்லை என்றோ அல்லது எங்கள் மதத்தில் தலையிட நீ யார் என்றோ கேள்விகள்/வசைகள் வருமாயின் நான் இங்கு வைக்கும் கேள்வியை திரும்பப்பெற்றுக் கொள்கிறேன்.

சகோதரர் மியூஸ் அவர்கள்,

யாரையும் பிறப்பின் அடிப்படையில் தாழ்த்துவதோ/உயர்த்துவதோ கூடாது என்பது இந்து மதங்களின் கருத்து எனக் கூறியிருக்கிறார்.

அவர் என்னுடைய சில கேள்விகளுக்கு பதிலளிப்பாரா?

1. இந்து "மதங்களின் எனக் கூறியிருக்கிறாரே? அப்படியெனில் எத்தனை இந்து மதங்கள் உள்ளன?

2. யாரையும் உயர்த்துவதோ/தாழ்த்துவதோ கூடாது எனக் கூறியிருக்கிறார் எனில் பார்ப்பன மதம் இந்து மதங்களில் ஒன்று இல்லையா?

3. இல்லை பார்ப்பன மதமும் இந்து மதங்களில் ஒன்று தான் என அவர் கூறினால் பிரம்மா/சிவனின்(என்னடா காக்கும் கடவுளை படைப்பு விஷயத்தில் சேர்க்கிறானே என நினைக்க வேண்டாம். சிலர் சிவனின் தலை,தோள்,தொடை,கால் எனக் கூறுவதால் அவரையும் சேர்த்துக் கொண்டேன்) தலை/முகம், தோள், தொடை, கால் இவற்றிலிருந்து பிறந்தவர்கள் என மனிதனை பாகுபடுத்தி ஒருவனை விட மற்றவன் தாழ்ந்தவன் எனவும் இப்பிறவியில் எப்பிரிவில் ஒருவன் பிறந்தானோ அவன் அப்பிரிவிலேயே தான் மரணிப்பான்; அவன் எவ்வளவு நல்ல காரியங்கள் செய்தாலும் தலை/முகத்திலிருந்து பிறந்தவன் ஆக முடியாது என பாப்பான் மதம் கூறுவதாக பாப்பானின் வேதம் கூறுகிறதே? இதற்கு என்ன பதில் வைத்துள்ளீர்கள்.

4. பாப்பானின் மதத்தில் மனிதர்கள் அனைவரையுமே நான்கு வர்ணத்தில் பிரித்து எழுதி வைத்திருக்கிறானே! எனில் இந்து மதங்களில் உட்படாத மற்ற மத மனிதர்கள் எவ்வர்ணத்தில்/பிரிவில் வருகின்றனர் எனக் கூற முடியுமா?

அதாவது இந்து மதங்களில் படாத மற்ற மதத்தவர்கள் பிரம்மா/சிவனின் தலை/முகத்திலிருந்து பிறந்தவர்களா?, தோளிலிருந்து பிறந்தவர்களா?, தொடையிலிருந்து பிறந்தவர்களா? அல்லது காலிலிருந்து பிறந்தவர்களா?

5. இது தொடர்பில்லாத ஆனால் தொடர்புள்ள கேள்வி: இந்து மதங்களில் ஒன்றான பார்ப்பன மதம் கூறும் தத்துவமே சரி என இந்து மதங்களில் உட்படாத ஒருவன் நம்பி பார்ப்பன மதத்துக்கு மதம் மாறுவதற்கு நினைக்கிறான் என வைத்துக் கொள்ளுங்கள். அவனை அந்த நான்கில் எப்பிரிவில் சேர்ப்பீர்கள்: தலை/முகத்திலிருந்து பிறந்தவன் எனக் கொண்டு ஆடாமல் அசையாமல் வெகுளிகளின் இறைவிசுவாசத்தை கருவியாகக் கொண்டு உண்டு கொழுக்கும் பாப்பான்கள் வர்க்கத்திலா? அல்லது தன் கையில் என்றும் அதிகாரத்தை வைத்திருக்க மக்கள் பணத்தை பாப்பானுக்கு வாரி இறைத்து அந்தபுரத்தில் கூத்தடிக்கும் சத்திரிய வர்க்கத்திலா? அல்லது மேற்கூறிய இரண்டு வர்க்கத்திற்கு நாள் தவறாமல் வாய்க்கரிசி இட ஏழைகளின் இரத்தத்தை உறிஞ்சும் வியாபார ஒட்டுண்ணிகளான வணிக வர்க்கத்திலா? அல்லது தான் என்ன தான் நல்லவனாக இருந்தாலும் நற்கருமங்கள் செய்தாலும் தலையிலிருந்து பிறந்தவனுக்கு இப்பிறவி முழுவதும் ஊழியம் செய்வது தான் பிறவிப்பலன் விதிக்கப்பட்ட சூத்திர வர்க்கத்திலா?

முதலில் இவற்றிற்கு பதில் கூறுங்கள். அதன்பிறகு,

//ஆனால் எல்லாரும் இப்படித்தான் நடைமுறையில் உபயோகிக்கிறார்கள் என்பது ஏற்றுக்கொள்ளக்கூடியதில்லை.//

முஸ்லிமல்லாதவர்களை அழைக்க முஸ்லிமல்லாதவர்கள் என்ற அர்த்தத்தில் தான் முஸ்லிம்கள் காஃபிர் என்ற சொல்லை பயன்படுத்துகிறார்களா? இல்லையா? என்ற ஆழ்மன ஆராய்ச்சிகளை தேர்ந்த மனோ தத்துவ நிபுணர்களை வைத்தோ அல்லது பொய்யுரைப்பதை கண்டறியும் கருவியை வைத்தோ நாம் ஆராய்ச்சி செய்து முடிவுக்கு வருவோம்.

40 comments:

  1. இறைநேசன் அவர்களே: ம்யூஸ் அவர்களின் குர்ரான் அறிவைக் குறித்து பதிவிடும் தாங்களும் அதே தவறைச் செய்வது என்ன நியாயம்? தங்களுடைய கேள்விகள் அனைத்துமே அரைவேக்காட்டுத் தனமான கழகக் கண்மணிகளின் அறிவையொத்தே அமைந்துள்ளன. உங்களுடைய ஹிந்து மதத்தைப் பற்றிய அறிவு மிகச் சொற்பமே என்பதும், வெறும் கேள்வி ஞானத்தைக் கொண்டது மட்டுமே என்பதும், உங்களுடைய கேள்விகளின் தரத்திலிருந்தே தெரிகிறது. உண்மையிலேயே தங்களின் நோக்கம் ஹிந்து மத துவேஷம் மட்டுமே என்பதை மறுபடியும் உணர்த்தும் ஒரு பதிவு. ம்யூஸ் அவர்கள் இந்த பதிவை நிராகரிக்க பரிந்துரைகிறேன்.

    ReplyDelete
  2. //சில நேரங்களில் அறிவுப்பூர்வமாக வாதங்களை வைக்கும் சகோதரர் மியூஸ் அவர்கள் ஒரு சில நேரங்களில் இது போன்று காமெடி செய்வதற்கும் தவறுவதில்லை.//

    :-)

    ReplyDelete
  3. இறை நேசன்,
    பார்ப்பனர் என்பது மதம் அல்ல. அது ஒரு சமூகம்.

    பரம்பொருள் உன்னை சுற்றியுள்ள அனைத்து பொருள்களிலும், உன்னுள்ளும் இருக்கிறான். இதுவே நான் அறிந்த இந்து மதம்.

    ReplyDelete
  4. இறை நேசன்,
    பார்ப்பனர் என்பது மதம் அல்ல. அது ஒரு சமூகம்.

    பரம்பொருள் உன்னை சுற்றியுள்ள அனைத்து பொருள்களிலும், உன்னுள்ளும் இருக்கிறான். இதுவே நான் அறிந்த இந்து மதம்.

    ReplyDelete
  5. திரு கிரிஸ்,

    இந்து/பார்ப்பன மதத்த பத்தி கொஞ்சம் சொல்லி எங்கள தெளிவுபடுத்துங்க சாமி....

    ReplyDelete
  6. // ம்யூஸ் அவர்கள் இந்த பதிவை நிராகரிக்க பரிந்துரைகிறேன். //

    கிருட்டினன்,

    இந்து மதத் தத்துவங்களில், நீங்கள் பாண்டிதர் என்றால், இங்கு அது சம்பந்தமாக கேட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்கவும். இல்லை என்றால், மியூஸ் அவர்களை விளக்க விடவும். இறைநேசனுக்கு துவேசம் காரணமாக புரியாவிட்டாலும், எம் போன்ற திராவிடர்கள் இந்து மதம் என்று ஒன்று உண்டு என அறிய வாய்ப்பாக இருக்கும். ஒருவேளை நீங்கள் இந்து மதம் என குறிப்பிட்டது பார்ப்பன மதத்தையே எனில், மன்னிக்கவும், ஜகா வாங்கிக் கொள்கிறேன்.

    நெருப்பு

    ReplyDelete
  7. // ம்யூஸ் அவர்கள் இந்த பதிவை நிராகரிக்க பரிந்துரைகிறேன். //

    கிருட்டினன்,

    இந்து மதத் தத்துவங்களில், நீங்கள் பாண்டிதர் என்றால், இங்கு அது சம்பந்தமாக கேட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்கவும். இல்லை என்றால், மியூஸ் அவர்களை விளக்க விடவும். இறைநேசனுக்கு துவேசம் காரணமாக புரியாவிட்டாலும், எம் போன்ற திராவிடர்கள் இந்து மதம் என்று ஒன்று உண்டு என அறிய வாய்ப்பாக இருக்கும். ஒருவேளை நீங்கள் இந்து மதம் என குறிப்பிட்டது பார்ப்பன மதத்தையே எனில், மன்னிக்கவும், ஜகா வாங்கிக் கொள்கிறேன்.

    நெருப்பு

    ReplyDelete
  8. இறைநேசன் அவர்களே...

    ஒன்றை மறந்துவிட்டீர்கள்...உங்கள் கேள்விகள் அனைத்துமே புத்திசாலிகளாய் நன்கு நடிக்கத்தெரிந்த அரைவேக்காடுகளை நோக்கி வீசியிருக்கிறீர்கள்....நிச்சயமாய் நீங்கள் கேட்ட கேள்விகள் எதற்குமே அவர்களிடமிருந்து பதில் கிடைக்க வாய்ப்பில்லை. ஆனால் அதே நேரத்தில் உங்கள் பதிவின் நோக்கத்தை திசைதிருப்ப அத்தனைவகையான யுக்திகளும் கையாளுவார்கள்.

    திரு.கிருஷ்னாவின் முயற்சி இதில் முதல்படி...

    ReplyDelete
  9. "தங்களுடைய கேள்விகள் அனைத்துமே அரைவேக்காட்டுத் தனமான கழகக் கண்மணிகளின் அறிவையொத்தே அமைந்துள்ளன"
    krishnan.

    ஸ்ஸ்ஸ் .... பதில் தெரியுமா. தெரியாதா..?

    ReplyDelete
  10. ஆரோக்கியம் kettavanSeptember 2, 2006 at 5:04 AM

    இன்னாமா கண்ணுங்களா பதில் எல்லாம் தெரியாது அந்தப் பண்ணாடைகளுக்கு,,
    யோவ் கிருஷ்னா, ஒங்க பாசத்துக்குரிய எலி என்கிற ஆனந்த கனேசு தான் இன்னொரு பதிவில இறைநேசனுக்கு அழைப்பு விட்டாரு.

    அத்த முதல்ல படி. அப்புறம் வந்து சவடால் விடு..

    ReplyDelete
  11. நெருப்பு சிவா மற்றும் வெட்டிப்பயல் அவர்களுக்கு, நீங்கள் இந்து மதம் பற்றி தெரிந்து கொள்ளவிரும்புவதால் என்னாலான ஒரு சுட்டி தருகின்றேன், அதில் 4 பாகங்களாக உள்ளது, அவர் 30 ஆண்டுகளாக தத்துவவியலில், அதாங்க ஒலகத்துல உள்ள எல்லா தத்துவங்களையும் (தத்துவங்கள் எனும்போது அதில் மதங்களும் உள்ளடங்கியதே) பேராசிரியராக பணியாற்றியவர், கொஞ்சம் பொறுமையாக எந்த முன் முடிவுகளும் இல்லாமல் கேட்டுப்பாருங்க.... ஏதாவது புரியலாம்...

    ReplyDelete
  12. நெருப்பு சிவா மற்றும் வெட்டிப்பயல் அவர்களுக்கு, நீங்கள் இந்து மதம் பற்றி தெரிந்து கொள்ளவிரும்புவதால் என்னாலான ஒரு சுட்டி தருகின்றேன், அதில் 4 பாகங்களாக உள்ளது, அவர் 30 ஆண்டுகளாக தத்துவவியலில், அதாங்க ஒலகத்துல உள்ள எல்லா தத்துவங்களையும் (தத்துவங்கள் எனும்போது அதில் மதங்களும் உள்ளடங்கியதே) பேராசிரியராக பணியாற்றியவர், கொஞ்சம் பொறுமையாக எந்த முன் முடிவுகளும் இல்லாமல் கேட்டுப்பாருங்க.... ஏதாவது புரியலாம்...

    அந்த சுட்டி இங்கே

    ReplyDelete
  13. இறைநேசன் அண்ணா,

    தாங்கள் கேட்டிருந்த கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டியது எனது கடமை. வீட்டில் இன்டெர்நெட் பிரச்சினை தருகிறது. டாட்டா இண்டிகாமுக்கு மாறிவிடலாமா என்று யோசித்துக்கொண்டிருக்கிறேன்.

    கட்டாயம் நாம் உரையாடுவோம். நேர்மையான உரையாடல் நம்மிடமுள்ள குறைகளையும், அடுத்தவரிடமுள்ள நல்ல விஷயங்களையும் வெளிப்படுத்தும். குறை தெரிந்தால் குறை களையலாம். குறை களைய நிறை தெரிய வேண்டும். இவ்விரண்டிற்கும் தகவற் பரிமாற்றம் அவஸியம் என்றுதான் நான் நினைக்கிறேன்.

    ReplyDelete
  14. ஆரோக்கியம் kettavanSeptember 4, 2006 at 12:17 AM

    ஸ்ரீமான் இறைநேஸன்

    என்னுடைய முந்தையப் பின்னுட்டத்தை ஏன் இன்னும் வெளியிடவில்லை? அனுமதிக்க முடியாத அளவுக்கு அப்படி என்ன அதில் உள்ளது எனக் கூறினால் தன்யனாவேன்

    இந்தப்பின்னூட்டம் ஆவது வெளிவரும் என நம்புஹிறேன். ஸெய்வீர்ஹளா?

    ReplyDelete
  15. மரத் தடிSeptember 4, 2006 at 12:20 AM

    இறைநேசன்,

    வீணாபோன மூசுக்கெல்லாம் பதில் சொல்லி உங்கள் தரத்தை குறைத்துக்கொள்ள வேண்டாம்!!!

    ReplyDelete
  16. îv΂èœ, ňFó˜èœ â¡ð¬îMì è£H˜èœ â¡ð¶ «ñ£êñ£ù õ£˜ˆ¬îò£ â¡ù?
    "Þ‰¶ â¡ð¶ ñî‹ Ü™ô, MFº¬øèO¡ ªî£°Š¹î£¡" â¡ð£˜ ð£ð£ê£«èŠ Ü‹«ðˆè˜. 嚪õ£¼ õ˜íˆFŸ°‹ ê£F‚°ñ£ù MFº¬øè¬÷‚ èø£ó£è õ¬óòÁˆ¶ H¡ðŸø õL»Áˆ¶õ«î Þ‰¶ ñî‹

    ReplyDelete
  17. இறை நேசனுக்கு
    தாங்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் (கழிந்த என் நினைவில் யாரும் வரவில்லை.)
    தந்தை பெரியாரிடம் இக்கேள்விகளை கேட்டு இருந்தால் சூப்பராக பதில்
    சொல்லி இருப்பார். இந்து வேதம்களை அக்கு வேரு ஆணி வேராகவும் அலசி
    ஆராய்தவருகு இதுவரை அன்றே பதில் யாரும் கொடுத்தது இல்லை.


    தற்பொழுது உங்களின் கேள்விகளூகு வேண்டுமானால் "விடாது கருப்பரிடம் " சொல்லி
    அனுப்பலாம் என்று நம்புகிறேன். அவர்தான் விடாமல் தொடருவார்.

    asalamone

    ReplyDelete
  18. ஸாலிஹ்குலசைSeptember 8, 2006 at 9:12 AM

    காளி என்றால் யார் ?
    United Press Trust of India என்ற செய்தி நிறுவனம் கூறுகின்றது.

    கடந்த மூன்று வருடங்களில் 2500 இளம் பிள்ளைகளும், பெண்டிரும் கடவுள் காளிக்காகப் பலி கொடுக்கப்பட்டுள்ளார்கள் என்று.

    இராமனின் பக்தன் ஒருவன் எட்டு வயதான தனது மகனைக் கதறக் கதற தலையை வெட்டினான். காரணம் காளி அவனிடம் சொன்னாளாம். "உன் மகனின் தலையை வெட்டிவிடு. அவன் இறந்துவிடுவான். அவன் மீண்டும் வந்து விடுவான். மீண்டும் வரும் போல அவன் செல்வத்தை மூட்டை கட்டி வருவான்" என்று.

    இராம பக்தன் காளியிடம் ஏமாந்தான்

    இந்த இரத்த வெறி கொண்ட காளியை கடவுள் என்று இந்த நாடு முழுவதும் வணங்குகின்றார்கள் அப்பாவி பாமரர்கள்.

    காளியின் வாய் எப்போதும் அகலவிரிந்தே இருக்கும். கிழிந்து பீரிக் கொண்டு கோரமாய் இருக்கும். பற்களிலிருந்து இரத்தம் கொட்டிக் கொண்டே இருக்கும். வெட்டிய தலையொன்று கையிலேயும் இருக்க, அவள் துர்க்கை, தேவி, சக்தி, உமா என்ற பெயர்களுடன் குரூரமாய் காட்சி தருவாள்.

    டெல்லியில் காளிமாதாவுக்கு பணிவிடை செய்யும் பூசாரி கூறுகின்றார்:

    காளிக்கு ஒரு குழந்தையைப் பலி கொடுப்பது ஓர் ஆண்மகன் பிறப்பதற்கான உத்திரவாத்தைப் பெற்றுக் கொள்வதாகும்.

    இந்தியாவில் மனித பலி என்பது கொலையாகும். எனவே பலி கொடுப்பவர் இன்னும் அதோடு தொடர்புடையவர் அனைவரும் கொலை செய்ததற்குரிய தண்டனையைப் பெறுவர்.
    இந்தப் பலிகளெல்லாம் பாமரர்களுக்குத் தானே தவிர பிராமணர்களுக்கல்ல.

    வேதத்தில் பிராமணர்களை பலி கொடுக்கக்கூடாது என்று பகிரங்கமான பிரகடனம் இருக்கின்றதாம்.

    ReplyDelete
  19. //ம்யூஸ் அவர்கள் இந்த பதிவை நிராகரிக்க பரிந்துரைகிறேன்//

    சகோ. கிருஷ்ணா அவர்களே இந்த பதிவே சகோ. ஆனந்த கணேஷ்(ம்யூஸ்) கூறி போட்டது தான் என்பதை தாங்கள் அறிவீர்களா? நான் இந்த கேள்விகளை கேட்டது நல்லடியார் பதிவில். அங்கு எனக்கு சகோ.ம்யூஸ் தந்த பதில் கீழே:

    //இறை நேசன்,

    தாங்கள் கேட்டிருந்தவற்றுள் பல கேள்விகள் சரியானவை. பல விளக்கங்கள் தேடுபவை. கடைஸி கேள்வி நெத்தியடி.

    இந்த கேள்விகளை உங்கள் பதிவில் போடுங்களேன். நாம் அங்கே கலந்துரையாடுவோம். ப்ளீஸ்.//


    அவரின் வேண்டுகோளுக்கிணங்கவே இங்கு தனி பதிவாக போட்டேன்.

    இறை நேசன்

    ReplyDelete
  20. இறைநேசன்,

    இன்டெர்னெட் சரியாகிவிட்டது. முடிந்தால் இன்று இரவிலிருந்து நமது உரையாடலை தொடங்குவோம்.

    ReplyDelete
  21. இறைநேசன்,

    இன்டெர்னெட் சரியாகிவிட்டது. முடிந்தால் இன்று இரவிலிருந்து நமது உரையாடலை தொடங்குவோம்.

    ReplyDelete
  22. இறைநேசன் அண்ணா,

    தங்களுடைய ஒவ்வொரு கேள்விக்கும் (மொத்தம் 5 கேள்விகள்) ஒன்றன் பின் ஒன்றாக பதிலளிக்கிறேன்.

    தங்களுடைய முதல் கேள்வி பின்வருமாறு.

    1. இந்து "மதங்களின் எனக் கூறியிருக்கிறாரே? அப்படியெனில் எத்தனை இந்து மதங்கள் உள்ளன?

    இதுவரை ஹிந்து மதம் என்கிற ஒருமைப்பண்பில் அழைக்கப்பட்ட பெயரை, நான் ஹிந்து மதங்கள் என்று பன்மை விகுதியில் அழைத்ததற்கான காரணம் என்ன? என்பதே தங்கள் கேள்வி என புரிந்துள்ளேன். (இல்லை எனில் தயவுசெய்து திருத்தவும்.)

    ஹிந்து மதங்கள் என்று அழைப்பதுதான் சரி என்று எனக்குத் தோன்றியதால் அங்கனம் கூற ஆரம்பித்தேன்.

    முதலில் கருத்தியல் ரீதியாக:<

    இங்கே மதம் என்பது ஒரு குறிப்பிட்ட "தத்துவ இயலும்" "சடங்குகளும்" சந்திக்கும் ஒரு நிகழ்வு என்ற வகையில்தான் இருக்கிறது. தனிமனித விருப்பத்திற்குட்பட்ட விஷயமாக இருந்துவருகின்றது. அந்த வகையில் ஒரு மதமானது மற்றொரு மதத்தின் கருத்துக்களை பெற்று அதை பின்பற்றுகின்றது. ஒவ்வோரு மதத்திற்குமான தெளிவான எல்லை என்கின்ற ஒன்று இல்லை.

    இதனால் தம்பி முருகனையும், அண்ணன் விநாயகனையும் வணங்க, தந்தை விஞ்ஞானவாதம் பேசலாம். தாய் நாத்திக வாதம் பேசலாம்.

    நில அடிப்படையில்:

    க்ரேக்க, ரோமானிய, பாரஸீக மக்கள் இந்த ப்ரதேஸத்திற்கு இட்ட பெயர்தான் ஹிந்துஸ்தானம். எனவே இங்கு மக்கள் பின்பற்றிய பல்வேறு நம்பிக்கைகள் ஒட்டுமொத்தமாக ஹிந்து மதம் என்று அழைக்கப்பட்டது. எல்லா குழுக்களுமே ஒரு வித எல்லை மீறலை பல வழிகளில் செய்துவந்ததால், வெளியிலிருந்து பார்ப்பவருக்கு எந்த வித்யாஸமும் தெரியப்போவதில்லை. அந்த வகையில் இங்கு இருக்கும் அத்தனை பழக்கங்களையும் ஹிந்து மதம் என்று மற்றவர்கள் அழைக்க ஆரம்பித்தனர். இன்னும் தெளிவாகக் கூறவேண்டும் என்றால், "பரத கண்டத்தில்" தோன்றிய சமய சிந்தனைகள் ஒவ்வொன்றும் ஹிந்து மதம்தான். (பரத கண்டம் என்பது ஹிமாலயத்திற்குக் கீழேயுள்ள அனைத்து நிலப்பகுதிகளும்). அந்த வகையில் பார்த்தால் புத்த, ஜைன, அத்வைத, விஸிஷ்டாத்வைத, த்வைத, விஞ்ஞானவாத, கர்மவாத தத்துவங்கள், கருப்பன, ஐயனார் வழிபாடு முதல் ஷங்கரர் ஸ்தாபித்த எட்டு மதங்கள் உள்ளீடாக எல்லாவிதமான சமய சிந்தனைகளும் ஹிந்துமதங்கள்தான். பெரும்பாலான ஹிந்து குழுக்களுக்கு அதன் புனித ஸ்தலம் இந்த பரத கண்டத்தில் இருக்கிறது. புனித ஸ்தலம் இல்லாத தத்துவங்களும் இந்த நிலப்பகுதியில் தோன்றியுள்ளன. அவையும் ஹிந்து மதங்கள்தான். இவை பலவகை குழுக்கள் என்பதால் நான் ஹிந்து மதங்கள் என்று குறிப்பிட்டேன். உதாரணமாக, வேதியியலை எடுத்துக்கொள்வோம். உள்ளே போனால் கனிம, கரிம முதலாய் பல்வேறுபட்ட வேறுபாடுகள் உண்டு. ஆனால் அனைத்தும் வேதியியல்தான். அந்த வகையில் ஹிந்து மதங்கள் என்றாலும் சரி. ஹிந்து மதம் என்றாலும் சரி இரண்டும் ஒன்றுதான்.

    மொத்தம் எத்தனை ஹிந்து மதங்கள் உள்ளன என்று கேட்டிருக்கிறீர்கள். இதை நீங்கள் படிக்கும்போது புதிதாக ஒரு பத்து பிறந்திருக்கும். யோஸிக்கத் தெரிந்தவர்கள், ஞானம் பெறுபவர்கள் இந்த பூமியில் ஒரு பத்துப்பேராவது இருப்பார்கள் இல்லையா?

    ReplyDelete
  23. வேறு வகையில் கூறுவதென்றால், இஸ்லாத்தில் எத்தனை பிரிவுகள் உள்ளன? அத்தனையும் ஒன்று சேர்த்து இஸ்லாம் என்று அழைக்கிறோம் இல்லையா அதுபோலத்தான் இதுவும்.

    ReplyDelete
  24. எல்லாரும் ஒண்ணுங்கறத இப்படியும் சொல்லலாம்.

    இந்த ஆகாசத்துக்குக் கீழே நம்மட பூமிக்கண்டத்துல இரண்டு கால்களால் நடக்கத்தெரிந்த 'பகுத்தறிவு' வாய்த்துள்ளதாக நம்புகிற அனைவரையும் நாம் 'மானுட சமயம்'னு சொல்லலாம். அதிலே கடவுள் ஒருவனை மட்டுமே வணங்கி வழிபடுபவரும் இருப்பார். பல கடவுளை வணங்குபவரும் இருப்பார். யாரையுமே வணங்காதவரும் இருப்பார். சுயவணங்கியும் இருப்பார். என்ன ஒண்ணு, நாங்க "தேவைக்கேத்த மாதிரி" குரூப்பா இருப்போம். ஒரு "குரூப்"பான ஆளுங்க விட வேற "குரூப்"பான ஆளுங்க எந்தவகையிலேயும் முன்னேறிடாம பாத்துப்போம். ஏன்னா "ஒரு குரூப்"பான ஆளுங்கத் தான் பிரம்மனோட தலையிலேர்ந்து பொறந்ததா நம்ப வெச்சிருக்கோம்.

    சொடலய சுப்ரமணி ஒத்துக்கவேமாட்டான். ஆனாக்கா, எதிரிய அடிக்க நெனைக்கும் போது அவனுக்கு 'மதத்த' ஊத்திக்கொடுத்து எல்லாரும் ஒண்ணுன்னு சொல்லிப்பிடுவோம். அப்பால தான் அவனுக்கு 'மத்தத' ஊத்திக்கொடுப்போம். இல்லாட்டி கேள்வி கேட்டுப்புடுவான் -"என்னய ஏன் அடக்கி வெச்சுருக்கே?"ன்னுட்டு.

    இப்படிலாம் சொன்னா, அத மியூஸ் மாதிரி ஆளுங்க மறக்காம ஜல்லின்னு சொல்லிடுவாய்ங்க. அப்பத்தானே அவங்க 'கான்கிரீட்' போட முடியும். மியூஸும் நேச குமாரும் 'ஹிந்து'மதத்துக்கு முட்டு கொடுக்கறதே வேடிக்கப் பாக்க வர்றவங்கட கோமணத்தயும் கொண்டுட்டு போறதுக்குத்தானே.

    -TJS

    ReplyDelete
  25. //ஒவ்வோரு மதத்திற்குமான தெளிவான எல்லை என்கின்ற ஒன்று இல்லை.//
    இது இந்து மதங்கள் பற்றிய கருத்தா? அல்லது பொதுவாக எல்லா மதத்துக்கும் உள்ள விதியா?

    ReplyDelete
  26. டி ஜே எஸ்,

    இப்படிலாம் சொன்னா, அத மியூஸ் மாதிரி ஆளுங்க மறக்காம ஜல்லின்னு சொல்லிடுவாய்ங்க.

    இல்லை. இது ஜல்லி இல்லை. நீங்கள் சொல்லுவது உண்மைதான். ஒரு குழுவானது மற்ற குழுவை அடக்க, அமுக்க நினைப்பது எல்லா இடங்களிலும், எல்லா மதங்களிலும் இருப்பதுதான். ஆனால் இந்த செயல்களை செய்யுமாறு அந்த மதம் சொல்லியிருக்கிறதா என்பதை காண வேண்டும். ஒரு மதமானது அங்கனம் சொல்லாதபோது, அந்த மதத்தை சேர்ந்தவர் அந்த காரியத்தை செய்வாராயின் அது மதத்திற்கு விரோதமான செயல்தான்.

    ReplyDelete
  27. சுல்தான் அவர்களே,

    இது இந்து மதங்கள் பற்றிய கருத்தா? அல்லது பொதுவாக எல்லா மதத்துக்கும் உள்ள விதியா?

    இங்கே ஹிந்து மதங்கள் பற்றிய கேள்விக்கு பதிலளிக்கப்படுவதால், என்னுடைய பதில் ஹிந்து மதங்கள் பற்றியே கூறுகின்றது.

    இந்த முதல் கேள்விக்கான என்னுடைய பதில்கள் குறித்து வேறு ஏதேனும் கேள்விகள் இல்லாவிட்டால் அடுத்த கேள்விக்கான பதிலை வழங்குவேன்.

    ReplyDelete
  28. ம்யூஸ்,
    முதல் கேள்விக்கான உங்களின் பதிலே ஜல்லி என்பதை TJஸ் அவர் பாணியில் சொல்லிவிட்டார். நீங்கள் அவருடையதை 'ஜல்லி இல்லை' என்று சொல்வதே உங்கள் பதிலை காப்பாற்றிக்கொள்ளத்தான்.

    மதமோ, எதுவுமோ, ஒரு டெபனிஃசன் இருக்கோணும். டெபனிஃசன் இல்லாதது தான் டெபஃனிஷன்னு நீங்க ஜெயமோகன் தனமா சொன்னீங்கன்னா, உங்களிடம் பேச எதுவுமேயில்லை.

    "நாலு வேதம் இருக்கிறது, நாலு வர்ணம் இருக்கிறது" என்று பிராமண மதத்துக்கான டெபஃனீசனை நீங்கள் ஒத்துக்கொள்வதாக இருந்தால், ரைட், பேஸலாம்.

    ReplyDelete
  29. கருத்து அவர்களே,

    டி ஜே எஸ்தான் அவருடைய வாதங்களை ஜல்லி என்று நான் சொல்லுவேன் என்று கூறியுள்ளாரே தவிர, நான் அவருடைய வாதங்களை ஜல்லி என்று கூறவே இல்லையே. அதாவது அவரது கருத்தை என் வாயில் வைத்து பேசியுள்ளார். இந்த தந்திரத்தை புரிந்துகொள்ளாமல் குழம்பிவிட்டீர்கள் போலிருக்கிறது.

    அவர் சொன்ன கருத்துக்கள் ஏன் ஜல்லி இல்லை என்பதற்கான காரணங்களைத்தான் நான் வைத்துள்ளேன். அவை ஜல்லி என்று சொல்லவே இல்லை.

    மதமோ, எதுவுமோ, ஒரு டெபனிஃசன் இருக்கோணும்.

    ஹிந்து மதத்தை பொறுத்தவரையில் ஒரு இறுகிய டெஃபனிஷன் இல்லை என்பது உண்மைதான். அது ஆன்மீக புரிதல்களின் வெளிப்பாடு. புரிந்துகொள்ளும் தன்மை உள்ளவர்களுக்கானது. மனிதர்களுக்கு புரிந்து கொள்ளுதல் என்பது இயல்பு. செம்மறி ஆடுகள்தான் முதலிலுள்ள ஆடு போன பாதையை, போன விதத்தில் பின்பற்றும்.

    ReplyDelete
  30. "நாலு வேதம் இருக்கிறது, நாலு வர்ணம் இருக்கிறது" என்று பிராமண மதத்துக்கான டெபஃனீசனை நீங்கள்
    ஒத்துக்கொள்வதாக இருந்தால், ரைட், பேஸலாம்.


    a. நான்கு வகையாக பிரிக்கப்பட்ட வேதங்கள் உள்ளன.

    b. மனித ஸுபாவங்களின் அடிப்படையில் நான்கு வகையாக பிரிக்கப்பட்ட வர்ணங்கள் உள்ளன.

    c. பிராமண மதம் என்று ஒரு மதம் இல்லை.

    பேஸலாமா?

    ReplyDelete
  31. //நான்கு வகையாக பிரிக்கப்பட்ட வேதங்கள் உள்ளன.

    மனித ஸுபாவங்களின் அடிப்படையில் நான்கு வகையாக பிரிக்கப்பட்ட வர்ணங்கள் உள்ளன.

    பிராமண மதம் என்று ஒரு மதம் இல்லை.//

    என்னத்த பேஸறது?.

    சாதம்லாம் இருக்குது, ஆனா, பிராமண மதம்ங்கற 'பாத்திரமே' இல்லேன்னு புது ஜல்லி அடிச்சா?

    ReplyDelete
  32. //மதமோ, எதுவுமோ, ஒரு டெபனிஃசன் இருக்கோணும்.

    ஹிந்து மதத்தை பொறுத்தவரையில் ஒரு இறுகிய டெஃபனிஷன் இல்லை என்பது உண்மைதான்.//

    Back to Point: Before said: 'No any Definition'. Now loosen the old: 'No any 'tight' definition'.

    Still, U feel No contrary?

    ReplyDelete
  33. கருத்து அவர்களே,

    சாதம்லாம் இருக்குது, ஆனா, பிராமண மதம்ங்கற 'பாத்திரமே' இல்லேன்னு புது ஜல்லி அடிச்சா?


    ப்ராமண மதம் என்று ஒரு மதம் இருக்கிறது என்பதற்கான வாதங்களை, ஆதாரங்களை தாங்கள் முன்வைத்தால் ஜல்லி தானாகவே சிதறிப்போய்விடும். எங்கே 1, 2, 3, .... ஸ்டார்ட்.

    ReplyDelete
  34. Before said: 'No any Definition'.

    Where? Please show me.

    ReplyDelete
  35. 1). பிராமணர்களாகிய நாங்கள் எங்களுக்கென்று தனிப்பட்டு எந்த 'பூணூலும்' அணிந்துக்கொள்வதில்லை. எங்களையே உயர்வென்று மார்தட்டுவதில்லை. பிறப்பின் அடிப்படையில் அனைவரும் சமம் என்றே சொல்வோம்.

    2). எங்கள் ஆலயத்தினுள் (சூத்திரர்கள்) உட்பட எல்லாவரும் வரலாம். கருவறை வரையும்.

    3). மநுவை, சதியை, சாஸ்திர ஆசாரங்களை நாங்கள் மட்டும் தான் பின்பற்றுகிறோம் என்றில்லாமல் எங்களால் (பிறப்பின் அடிப்படையில்) தாழ்த்தப்பட்டவனும் - எங்களால் ஹிந்து என்று 'அவசியங்களை முன்னிட்டு' அழைக்கப்படுபவனும்-பின்பற்றவே செய்கிறான்.

    இப்படியெல்லாம் 'மனசாட்சி'ப்படி உங்களால் சொல்ல முடிந்துவிட்டால் பிராமணீய மதம் என்று இல்லை தான். ஸொல்ல முடியுமா? 1 2 3...

    ReplyDelete
  36. 1). பிராமணர்களாகிய நாங்கள் எங்களுக்கென்று தனிப்பட்டு எந்த 'பூணூலும்' அணிந்துக்கொள்வதில்லை. எங்களையே உயர்வென்று மார்தட்டுவதில்லை. பிறப்பின் அடிப்படையில் அனைவரும் சமம் என்றே சொல்வோம்.

    2). எங்கள் ஆலயத்தினுள் (சூத்திரர்கள்) உட்பட எல்லாவரும் வரலாம். கருவறை வரையும்.

    3). மநுவை, சதியை, சாஸ்திர ஆசாரங்களை நாங்கள் மட்டும் தான் பின்பற்றுகிறோம் என்றில்லாமல் எங்களால் (பிறப்பின் அடிப்படையில்) தாழ்த்தப்பட்டவனும் - எங்களால் ஹிந்து என்று 'அவசியங்களை முன்னிட்டு' அழைக்கப்படுபவனும் பின்பற்றவே செய்கிறான்.

    இப்படியெல்லாம் 'மனசாட்சி'ப்படி உங்களால் சொல்ல முடிந்துவிட்டால் பிராமணீய மதம் என்று இல்லை தான். ஸொல்ல முடியுமா? Ready 1 2 3...

    ReplyDelete
  37. வருத்த சபேஷ்September 18, 2006 at 10:06 AM

    நம்ம மூசண்ணா வந்தத கவனிக்காம மிஸ் பண்ணிட்டேனே...

    மூசண்ணா ஸூத்ரவாளா பிறந்த ஒருத்தன் பிராமணனா ஒருத்தன் மாறுரதுக்கு என்ன பண்ண்னும்னு சொல்லுங்கண்ணா

    ReplyDelete
  38. வருத்த சபேஷ்October 1, 2006 at 12:45 AM

    அலோ.. மூஸ்...

    என்னய்யா இன்னுமா டாட்டா இண்டிகாம் தொல்ல குடுக்குது. ஐயராமனோட பதிவுல போய் இந்தப் பதிவப் பத்தி உளருறீங்களே அண்ணா.. உங்களுக்கக்கவே நம்ம இறை நேஸன் ஸார் ஒரு ஸ்பெஷல் பதிவு போட்டுக் காத்துட்டுருக்கார்,,, பதில் எங்கேண்ணா?

    ReplyDelete
  39. தான் ஒரு சூத்திரர் என்பதில் பெருமைப்படுபவர்October 22, 2007 at 2:24 PM

    ///
    வாசகன் said...
    1). பிராமணர்களாகிய நாங்கள் எங்களுக்கென்று தனிப்பட்டு எந்த 'பூணூலும்' அணிந்துக்கொள்வதில்லை. எங்களையே உயர்வென்று மார்தட்டுவதில்லை. பிறப்பின் அடிப்படையில் அனைவரும் சமம் என்றே சொல்வோம்.

    2). எங்கள் ஆலயத்தினுள் (சூத்திரர்கள்) உட்பட எல்லாவரும் வரலாம். கருவறை வரையும்.

    3). மநுவை, சதியை, சாஸ்திர ஆசாரங்களை நாங்கள் மட்டும் தான் பின்பற்றுகிறோம் என்றில்லாமல் எங்களால் (பிறப்பின் அடிப்படையில்) தாழ்த்தப்பட்டவனும் - எங்களால் ஹிந்து என்று 'அவசியங்களை முன்னிட்டு' அழைக்கப்படுபவனும் பின்பற்றவே செய்கிறான்.

    இப்படியெல்லாம் 'மனசாட்சி'ப்படி உங்களால் சொல்ல முடிந்துவிட்டால் பிராமணீய மதம் என்று இல்லை தான். ஸொல்ல முடியுமா? Ready 1 2 3...///


    வாசகன் என்பவர் தன்னை பார்ப்பனர் என்று சொல்ல வருகிறாரா?

    மற்றபடி அவருடைய உளறலுக்கு ம்யூஸ் என்பவர் பதிலளிக்கவில்லை. ஒருவேளை இந்த உளறலை அவர் கவனிக்காமல் இருந்திருக்கலாம்.

    இந்த உளறலுக்கு பொழுதுபோகாமல் இப்போது இருக்கும் நான் பதிலளிக்கலாமா?

    உளறல் 1க்கு பதில்:

    பூணூல் அணிவது பிராமணர்களுக்கு மட்டும் உரித்தானது இல்லை. பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என்கிற நான்கு பிரிவினருக்குமே இருந்தது. பின்னால், சூத்திரருக்கு கிடையாது என மற்ற பிரிவினர் முடிவு செய்தனர். இப்படித்தான் அம்பேத்கார் சொல்கிறார்.

    உளறல் 2க்கு பதில்:

    "எங்கள் ஆலயம்" என்று ஒரு ஆலயம் இருக்கிறதா? இங்கே இருக்கும் எந்த கோயிலும் பிராமணர்களின் தனிப்பட்ட சொத்து இல்லை. அது அத்துணை இந்துக்களுக்கும் பொதுவானது. கோயில்களை தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் திராவிட கும்பல்கள் இருக்கும்வரை தலித்துகள் அர்ச்சகர் ஆவது நடக்காது. தலித்துகளை அர்ச்சகர் ஆக்குவதற்கு சரியான முயற்சிகளை எடுத்துக்கொண்டிருப்பவை இந்து இயக்கங்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா? தலித்துக்களுக்கு ஆகம பயிற்சி தரப்பட வேண்டும், ஆகம பயிற்சி பெற்றுத் தேர்ந்த தலித் அர்ச்சகர் ஆக வேண்டும் என இந்துத்துவா இயக்கங்கள் சொல்லிவருகின்றன.

    உளறல் 3க்கு பதில்:

    மனு என்கிற சத்திரியர் (இப்போது இருக்கிற BC, OBCக்குள் வருகிறவர்) எழுதிவைத்த மனு நீதி மாற்றக்கூடியது என்பதுதான் இந்துமதத்தின் கருத்து. அதில் பிறப்பின் அடிப்படையில் சாதி வித்தியாசம் காணும் கருத்துக்களை சாக்கடையில் இந்துத்துவா எப்போதோ எறிந்து விட்டது.

    இல்லாத ஒன்றை இருப்பதாகச் சொல்லி வயிற்றையும், தாடியையும் வளர்க்கும் கும்பல்களுக்குத்தான் இவை தேவைப்படுகின்றன.

    ReplyDelete
  40. மற்றபடி "வருத்த சபேஷ்" என்கிற அடுத்த உளறலுக்குப் பதில்:

    /// மூசண்ணா ஸூத்ரவாளா பிறந்த ஒருத்தன் பிராமணனா ஒருத்தன் மாறுரதுக்கு என்ன பண்ண்னும்னு சொல்லுங்கண்ணா ///

    பிறப்பால் யாரும் சூத்திரரும் இல்லை. பிறப்பால் யாரும் பிராமணரும் இல்லை.

    சூத்திரர் என்பது இகழ்வும் இல்லை. பிராமணர் என்பது உயர்வும் இல்லை.

    யாரும், யாராகவும் எப்போது வேண்டுமானாலும் இருக்கலாம் என்பதுதான் இந்து மதம்.

    ReplyDelete