Sunday, August 6, 2006

அத்வானிக்கு ஒரு கோரிக்கை.

இந்தியா ஆங்கிலேய ஆதிக்கத்திலிருந்து 1947 - ல் விடுதலை அடைந்த பிறகு தன்னை ஒர் ஜனநாயக நாடாக அறிவித்துக் கொண்டு அணி சேரா நாடுகளுடன் நடுநிலையோடு உலக அரங்கில் தலை நிமிர ஆரம்பித்தது.

அதன் பிறகு உலக நாடுகளுடன் எவ்வளவு வேகத்தில் போட்டியிட்டு இந்தியா முன்னேறியதோ அவ்வளவு வேகத்தில் இந்தியாவினுள் இனங்களுக்கிடையே பிளவுகள் வளர்ந்தன. இதற்கு இனக்கலவரங்களும், குண்டு வெடிப்புகளும் நன்றாக உரமிட்டன.

இந்தியாவின் வளர்ச்சிக்கு இந்திய குடி மக்களிடையே நிகழும் கலவரங்களும், அநியாய குண்டு வெடிப்புகளும் பெரும் தடையாக விளங்குகின்றன. ஒவ்வொரு குண்டு வெடிப்பு நிகழும் பொழுதும், ஒவ்வொரு இனக் கலவரம் நிகழும் பொழுதும் அவற்றின் தாக்கங்களுக்கேற்ப பொருளாதாரத்திலும், நாட்டு முன்னேற்றத்திலும் மிகப்பெரிய அளவில் விள்ளல் விழுந்து நாடு பின்னோக்கி செலுத்தப்படுகிறது.

நாட்டு முன்னேற்றத்திற்கு மிகப்பெரும் சவாலாக விளங்கும் இத்தகைய இனக்கலவரங்கள் குறித்தும், குண்டு வெடிப்புகள் குறித்தும் ஆட்சிக்கு வரும் அரசுகளுக்கு எவ்வித கவலையும் இருப்பதாக தெரியவில்லை. உலக வல்லரசுகளில் ஒன்றாக வருவதற்கான எல்லாவித அடிப்படை சாத்தியக் கூறுகளும் உள்ள நம் தாய்நாட்டில் நடக்கும் இத்தகைய சம்பவங்கள் அதன் அதிவேக வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை இடுவதை நாட்டுப் பற்றுள்ள ஒவ்வொருவரும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

நாட்டின் ஒற்றுமைக்கும், வளர்ச்சிக்கும் மிகப்பெரும் சவாலாக விளங்கும் இத்தகைய பிரச்சனைகளில் ஒன்றான குண்டு வெடிப்புகளில் ஒன்று சமீபத்தில் மும்பையில் நடந்தது நாம் அனைவரும் அறிந்ததே. தேசப்பற்றுள்ள எந்த ஒரு குடிமகனும் இவ்விஷயத்தை சாதாரணமாக எடுத்துக் கொள்ள மாட்டான். அந்த வகையில் அக்குண்டு வெடிப்பைக் குறித்து மிகுந்த கவலை தெரிவித்த மதச்சார்பற்ற(!!??), தேசப்பற்றை இரத்தக்கறைகளைக் கொண்டு நிரூபிக்கும் "இரத்த யாத்திரை" புகழ் திருவாளர் அத்வானி அவர்கள் இக்குண்டு வெடிப்பில் தொடர்புடையவர்களாக உளவுத்துறையால் கருதப்படும் SIMI என்ற இந்திய இஸ்லாமிய மாணவர்கள் இயக்கத்தைக் குறித்து தனது திருவாய் மலர்ந்து ஒரு அருமையான(இதில் உள், வெளி, நடு குத்து ஒன்றும் இல்லீங்கோ) ஆலோசனையை வழங்கியுள்ளார்.

இந்தியாவில் இஸ்லாமியர்களுக்கெதிரான ஃபாஸிச அத்வானி வகையறாக்களின் இந்துத்துவ சூழ்ச்சிகளை பட்டியலிட்ட சகோ. (வாயில் நுழையாத பெயர் கொண்ட) இப்னு பஷீர் அவர்களின் பதிவில் அத்வானி வகையறாக்களிடம் நான் வைத்த ஒரு கோரிக்கையை இங்கு பதிக்கிறேன்.

//காந்தியைப் படுகொலை செய்ததன் மூலம் இந்திய வரலாற்றில் முதன் முறையாக பயங்கரவாதத்தை வெற்றிகரமாக அரங்கேற்றிய இயக்கம் ஆர்.எஸ்.எஸ். 1948-ல் காந்தி கொலைக்கு பிறகு, 1975-ல் இந்திரா காந்தியின் ஆட்சிக் காலத்தில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டபோதும், பிறகு 1992-ல் பாபரி மஸ்ஜித் இடிப்புக்கு பிறகும், இந்தியாவில் மூன்று முறை தடை செய்யப்பட்ட மதவெறி இயக்கம்தான் இது. இந்த இயக்கத்தில் பயிற்சி பெற்று வந்த அத்வானி, ‘சிமி (SIMI) போன்ற இஸ்லாமிய அமைப்புகள் தடயமே இல்லாத அளவிற்கு இந்திய மண்ணிலிருந்து துடைத்தெறியப்பட வேண்டும்’ என்று சொல்கிறார்.//

SIMI மட்டுமல்ல முஸ்லிம் லீக்கிலிருந்து ஆரம்பித்து ஜமா அத்தே இஸ்லாமி, தௌஹீத் ஜமா அத், JAQH, தமிழ் நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், மனித நீதி பாசறை என அனைத்து இஸ்லாமிய இயக்கங்களும் இந்திய மண்ணிலிருந்து துடைத்தெறியப் பட வேண்டும்.

அதற்கு தாய் மண்ணை உயிராக நேசித்து ஆங்கிலேயனிடமிருந்து அதனை மீட்க தங்களது இரத்தத்தால் வீர காவியம் எழுதிய தியாக செம்மல்களின் பரம்பரையில் வந்த இந்திய முஸ்லிம்களாகிய நாங்கள் தயார்.

அதற்கு முன் ஒரு முக்கிய கேள்வி:

இந்த இஸ்லாமிய இயக்கங்கள் அவை தீவிரவாத இயக்கங்களோ அல்லது மிதவாத இயக்கங்களோ இவை தோன்றுவதற்கு காரணம் என்ன? இவற்றின் தோற்றக்காலம் என்ன என்பதைக் குறித்து சற்று எண்ணிப் பார்க்க கோருகிறேன்.

இந்திய சரித்திரத்தில் இந்திய ஒருமைப்பாட்டுக்கு சவாலாக இன அடிப்படையில் இயக்கத்தை தோற்றுவித்தது யார்?

இந்திய மக்கள் ஒற்றுமையோடு தங்களது மண்ணின் விடுதலையை கனவு கண்டு கொண்டு ஆங்கில அரசுக்கு எதிராக போராடிக் கொண்டிருந்த போது அப்போராட்டத்தின் தாக்கத்தால் விரைவில் சுதந்திரம் கிடைத்து விடும் என கணக்கு கூட்டிய சில ஆரிய பார்ப்பன வந்தேறிகள் சுதந்திர இந்தியாவை தங்கள் பிடியில் கொண்டு வர, சுதந்திரத்திற்காக தங்கள் எண்ணிக்கையை விட அதிக அளவில் உயிர் தியாகம் செய்து கொண்டிருந்த முஸ்லிம் சமுதாயத்தை கருவறுக்க திட்டமிட்டு ஒரு அட்டூளிய அராஜக மனிதத்தன்மையற்ற ஆயுதபடையை பயிற்சியளித்து ஆர் எஸ் எஸ் என்ற பெயரில் தயார் செய்து இந்திய சரித்திரத்தில் இன அடிப்படையில் ஓர் வன்முறை இயக்கத்தைத் தோற்றுவித்தனர்.

ஆங்கிலேயர்களுக்கு எதிராக ஆயுதமேந்தி போராடுவதற்காகவா இவர்கள் இந்த அராஜக இயக்கத்தைத் தோற்றுவித்தனர். இல்லை. பின் எதற்காக?

ஆரிய வந்தேறி பார்ப்பனர்களின் மனு அரசுக்கு எதிராக இவர்களால் கணிக்கப்பட்ட முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், கம்யூனிஸ்டுகள் இவர்களை பூண்டோடு அழிப்பதற்காகத் தான் இக்கூட்டம் மூளைச் சலவை செய்யப்பட்ட அப்பாவிகளை கொண்டு ஓர் அக்கிரம இயக்கத்தைத் தோற்றுவித்தனர்.

இல்லை என்று ஆர் எஸ் எஸ்ஸால் மறுக்க இயலுமா? இல்லையெனில்,

இராணுவத்துக்கு நிகரான பயிற்சி பெற்ற ஆர் எஸ் எஸ் கர்ம "வெறி" வீரர்களை எத்தனை முறை இந்திய எல்லையில் இந்தியாவிற்காக களமிறங்கியிருக்கின்றனர் கூற முடியுமா? எத்தனை பேரை இந்திய சுதந்திரப் போராட்டத்திற்காக போராட முக்கியமாக சுபாஸ் சந்திர போஸின் இந்திய தேசிய இராணுவத்திற்கு அனுப்பி வைத்தனர் என்று கூற இயலுமா?

இல்லை இவர்களால் கூற இயலாது? ஒருவரைக் கூட காட்ட இயலாது. அதற்கு பதிலாக,
இந்திய சுதந்திரப்போருக்கு எதிராக ஆங்கிலேயர்களுக்கு சாதமாக ஆர் எஸ் எஸ் செயல் பட்டதை ஆதாரத்துடன் குறிப்பிட இயலும். காட்டிக் கொடுத்த செயல் வீரர்கள் வாஜ்பேயியிலிருந்து ஆங்கில அரசுக்கு விசுவாசமாக செயல்பட்ட வந்தேறி ஆரிய பார்ப்பன வர்க்கங்களை லிஸ்ட் போட்டு காண்பிக்க இயலும்.

இன்னும் கூற வேண்டுமெனில், இந்திய சுதந்திரப் போரில் தேசப்பற்று மிக்க சிலர் ஈடுபட்டதை தடுக்கும் முகமாக, "நம் சக்தியை தற்போது செலவளித்து விடக் கூடாது. அதனை சேமித்து வைக்க வேண்டும். நமது சக்தியை காட்ட வேண்டியது முஸ்லிம்களுக்கும் கம்யூனிஸ்டுகளுக்கும் எதிராகத் தான்" என ஆர் எஸ் எஸ்ஸின் தலைவர்கள் பேசி சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு சிலரையும் கூட தடுத்ததை காண இயலும்.

இவ்வாறு லட்சக்கணக்கான அப்பாவிகளை மூளைச் சலவைச் செய்து ஒரு குறிப்பிட்ட சமூகத்துக்கு எதிராக திருப்பும் பொழுது அச்சமூகம் என்ன செய்ய வேண்டும்: "வாருங்கள் சகோதரர்களே! நாம் அனைவரும் ஒரு தாய் தந்தையிலிருந்து பிறந்தவர்கள் தான். எனவே நீங்கள் என் சகோதரர்கள் ஆகிறீர்கள். எனவே வந்து என் தலையை வெட்டி எடுத்துப் போங்கள்" என தலையை நீட்டி வைத்துக் கொண்டா நிற்க வேண்டும்.

இந்த அராஜக இயக்கத்தின் தோன்றுதலால் தான் அதிலிருந்து தங்களை பாதுகாப்பதற்கும், எவ்வித பிரக்ஞையுமற்று இருக்கும் அப்பாவி சமுதாயத்தை உணர்வூட்டுவதற்கும், அவர்களின் சமூக அரசியல் நிலை நிற்பிற்காக போராடுவதற்கும் தான் மேற் குறிப்பிட இஸ்லாமிய இயக்கங்கள் தோன்றின.

இதன் பயனாக, உறங்கிக் கொண்டிருந்த முஸ்லிம் சமுதாயம் தாங்கள் அழிக்கப்படுவதன் காரணம் சமூக, அரசியல், வேலை வாய்ப்பில் தன் சமுகத்திற்கு சரியான விகிதாச்சாரம் கிடைக்கவில்லை என்பதை சற்று காலம் தாழ்ந்தெனினும் இன்று தான் சற்று உணர்ந்து அதற்காக போராட களமிறங்கியுள்ளது.

இந்த விழிப்புணர்வை கண்டு எங்கே நாளை ஆட்சியிலும் ஒரு பகுதியை பிடித்து விடுவார்களோ என்று பொறுக்க இயலாத சங்க் கூட்டம் சமயம் கிடைக்கும் பொழுதெல்லாம் குய்யோ குய்யொ என்று கத்தத் தொடங்கி விட்டது.

இந்தியாவில் இன ரீதியாக மற்ற சமூகத்தை அழிப்பதற்காகவே ஒரு இயக்கத்தை முதன் முதலாக தோற்றுவித்த இந்த இரத்தவெறி பிடித்த மதவெறி கூட்டம் ஏதோ இஸ்லாமிய இயக்கங்கள் இருப்பதனாலேயே இந்தியாவில் ஒற்றுமை சிதைகிறது என்பது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்த முயல்கிறது. இந்த இரத்த வெறி பிடித்த கூட்டத்திடமிருந்து தங்களை பாதுகாக்கவே மற்ற இயக்கங்கள் தோன்றின என்பதை வகையாக இந்த வந்தேறி பார்ப்பன கூட்டம் மறைக்கப் பார்க்கின்றன. இதனை இவ்வியக்கங்களின் தோற்ற காலத்தையும் ஆர் எஸ் எஸின் தோற்ற காலத்தையும் ஒப்பிட்டு நோக்கினாலே புரிந்து கொள்ள இயலும்.

எனவே இப்பொழுதும் ஒரு தேசப்பற்று மிக்க, தாய் மண்ணை உயிராக நேசித்து ஆங்கிலேயனிடமிருந்து அதனை மீட்க தங்களது இரத்தத்தால் வீர காவியம் எழுதிய தியாக செம்மல்களின் பரம்பரையில் வந்த இந்திய முஸ்லிம்களாகிய நாங்கள் SIMI மட்டுமல்ல முஸ்லிம் லீக்கிலிருந்து ஆரம்பித்து ஜமா அத்தே இஸ்லாமி, தௌஹீத் ஜமா அத், JAQH, தமிழ் நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், மனித நீதி பாசறை என அனைத்து இஸ்லாமிய இயக்கங்களையும் இந்திய மண்ணிலிருந்து துடைத்தெறிய போராடுவதற்கு தயார்.

அதற்கு முன் இதற்கான காரணத்தை ஏற்படுத்திய அக்கிரம, அராஜக, வெறிப்பிடித்த ஆர் எஸ் எஸ்ஸையும் அதன் பரிவார இயக்கங்களையும் அடியோடு இந்திய மண்ணிலிருந்து துடைத்தெறிய தேசப்பற்று மிக்க இந்திய முஸ்லிம்களாகிய எங்களோடு கைகோர்த்து போராட அத்வானியிருந்து தேசத்தந்தை காந்தியடிகளை கொலை செய்ய தூண்டிய ஆர் எஸ் எஸ்ஸிற்கு காவடி தூக்கும் ஜெயராமன் வரை அனைவரும் தயாரா?

6 comments:

  1. 'நச்'ன்னு எழுதி இருக்கீங்க. இதை 'நச்சு' உள்ளம் கொண்டவர்கள் புரிந்து கொள்வார்களா??

    ReplyDelete
  2. உங்கள் கருத்து ஒரு தலைபட்சமாக உள்ளது. யார் தவறு செய்தாலும் நிச்சயம் தண்டிக்கப் பட வேண்டும்(ஆர்.எஸ்.எஸ் உட்பட). அதை விடுத்து மும்பை குண்டுவெடிப்புகளையும், அதற்கு காரண்மானவர்களையும் நியாயப்படுத்தி இருப்பது துரதிஷ்டவசமானது.

    ReplyDelete
  3. இதெல்லாம் அவாகளுக்கு புரியும்கறீங்க..?

    ReplyDelete
  4. Thanks Mr. Erai Nesan

    Appreciate about your questionare that you asked Mr.Advani that he has to withdraw or abolish/scrap all the related organization of RSS & all kind of organization established after 1900 in India. So India will be peacefull. Sure.

    Thanks and regards
    Asalamone

    ReplyDelete
  5. Appa kristhavam thappe illai nu solringa!

    ReplyDelete