Saturday, August 19, 2006

விடாது கருப்புவிற்கு நன்றி!

தாய்நாடு 59 வது சுதந்திர தினத்தை நினைவுபடுத்தும் நாட்களில் சகோதரர் விடாது கருப்பு அவர்கள் சிந்திக்கத் தகுந்த வரிகளோடு ஒரு பதிவு போட்டிருந்தார். அவருக்கு நன்றி தெரிவிக்கும் முகமாக இப்பதிவு.

//நாடு நமக்கு என்ன செய்தது என்று நினைக்கக்கூடாது. நாம் நாட்டுக்கு என்ன செய்தோம் என்று நமக்கு நாமே கேட்டுக் கொள்ள வேண்டும். ஐந்து பைசா மிட்டாயில் முடிந்து போவதா சுதந்திர தினம்? யோசிக்க வேண்டாமா நாம்? இதற்காகவா சுதந்திர போராட்டா தியாகிகள் அடியும் உதையும் மிதியும் பட்டு நமக்காக வாங்கித் தந்தனர் சுதந்திரம்? சும்மா இருந்துவிட்டு கிடைத்த சுதந்திரத்தை அனுபவிக்கிறோமே வெட்கமாக இல்லையா நமக்கு? கிடைத்த அந்த சுதந்திரத்தை நாம் பேணிக் காக்கிறோமா? இந்து என்றும் இஸ்லாம் என்றும் கிறிஸ்தவன் என்றும் நமக்கு நாமே அடித்துக் கொண்டு சாகிறோமே? காந்தியார் ஜாதிபேதம் பார்த்திருந்தால் நமக்கு கிடைத்திருக்குமா இந்த இனிய சுதந்திரம்//

சத்தியமான வார்த்தைகள்.

ஆடாமல் அசையாமல் இருந்து அனுபவிப்பவனுக்கு ஆட்டத்தின் கஷ்டம் புரியப்போவதில்லை.

(சுதந்திரத்தை)அனுபவிக்கப் பிறந்த நமக்கு அதற்காகப் பாடுபட்டவர்களின் கஷ்டங்கள் ஒரு பொருட்டே அல்ல.

நாடு நமக்கு என்ன செய்தது என்று கேட்பவர்கள் இச்சுதந்திரக்காற்று எங்கு கிடைக்கும் என தன் மனதில் கை வைத்து கேட்டுக் கொள்ளட்டும்.

(பிறப்பிலேயே)கிடைத்த சுதந்திரத்தை பேணி காப்பது ஆடாமல் அனுபவித்துக் கொண்டிருக்கும் ஒவ்வொரு இந்திய குடிமகனும் கட்டாயம் நாட்டுக்குச் செய்ய வேண்டிய பிரதிபலனாகும்.

அந்த சுதந்திரத்தை குழி தோண்டி புதைத்து நாட்டை இரத்தக் களரியாக்க காத்திருக்கும் வந்தேறி இந்துத்துவ பார்ப்பன கூட்டங்களுக்கு எதிராக போராடுவதும் பெற்ற சுதந்திரத்தை காப்பதன் பாற்பட்டதாகும்.

வந்தேறி ஆரிய பார்ப்பன வர்க்கம் செய்யும் அட்டூளியங்களை எதிர்க்க வேண்டிய முறைப்படி எதிர்க்காமல் வன்முறையை கையில் எடுக்கும் மூளைச்சலவை செய்யப்பட்ட மத தீவிரவாதிகளுக்கு எதிராக போராடுவதும் பெற்ற சுதந்திரத்தைப் பேணி காப்பதன் பாற்பட்டதாகும்.

நாட்டை துண்டாட நினைக்கும் இந்த இரு வன்சக்திகளுக்கு எதிராக போராட நாட்டுப்பற்றுள்ள ஒவ்வொரு இந்திய குடிமகனும் முன்வரவேண்டும்.

நாடு சுதந்திரம் அடைந்து 59 வருடங்களை கடந்து விட்ட பின்பும் நாட்டு சுதந்திரத்தை கொண்டாட இந்நாட்டின் முதல் குடிமகன் குண்டு துளைக்காத வாகனத்தில் வலம் வர வேண்டிய துர்பாக்கிய நிலையில் தான் சுதந்திர இந்தியா உள்ளது.

தாய்நாட்டின் சுதந்திரதினத்தில் "சுதந்திரமாக" சுதந்திரதினத்தை கொண்டாடும் நாளுக்காக ஒவ்வொரு தேசப்பற்றுள்ள குடிமகனும் போராட முன்வர வேண்டும்.

தாய்நாட்டின் சுதந்திரத்தை சுதந்திரமாக கொண்டாட முடியாத துர்பாக்கிய நிலை மிகவும் இகழ்ச்சிக்குரியதாகும். வெளிநாடுகளில் தாய்நாட்டின் சுதந்திரத்தை "சுதந்திரமாக" கொண்டாடும் அளவிற்கு கூட தாய் நாட்டில் சுதந்திரமாக சுதந்திரதினத்தை கொண்டாட முடியாத அளவிற்கு தீவிரவாதமும் பயங்கரவாதமும் தலைதூக்கியிருப்பது நாட்டின் அழிவிற்கே வழிவகுக்கும்.

நாட்டு முன்னேற்றத்திற்கு மிகப்பெரும் இடையூறாக விளங்கும் இந்த தீவிரவாத செயல்களை ஒழிக்க என்னென்ன வழிகள் உள்ளன என்று இனிமேலாவது ஆக்கப்பூர்வமான வழிகளில் ஒவ்வொருவரும் சிந்திக்க முயல வேண்டும்.

அதுவே நாட்டு முன்னேற்றத்திற்கு தூண்டு கோலாக அமையும். எந்நேரம் என்ன நடக்குமோ என பயந்து உயிரை கையில் பிடித்துக் கொண்டு வாழும் அமைதியற்ற வாழ்வு சுதந்திரகாற்றை சுவாசிக்கும் நாட்டு மக்களுக்கு உகந்ததல்ல.

நாடு கடந்த 59 வருட காலயளவில் சந்தித்திருக்கும் கலவரம், குண்டுவெடிப்பு, இன சுத்தீகரிப்பு போன்ற பயங்கரவாத தீவிரவாத செயல்களால் அடைந்திருக்கும் பின்னடைவை கருத்தில் கொள்வோமானால் இந்தியாவின் முன்னேற்றம் எந்த அளவிற்கு பாதிக்கப்பட்டுள்ளது என்பதை உணரமுடியும்.

இந்தியாவின் முன்னேற்றத்தைக் கண்டு பொறுக்க இயலாத அன்னிய சக்திகள், நாடு வல்லரசாவதை காணச்சகிக்காத வல்லரசுகள் இப்பயங்கரவாத தீவிரவாத செயல்களுக்கு ஊக்கம் கொடுக்கும் சக்திகள் என்பதை மறுக்கவியலாது. இத்தகைய தீயசக்திகளை வேரோடு களை எடுத்தாலே இந்தியா முழு சுதந்திரக்காற்றை சுதந்திரமாக சுவாசிக்க இயலும்.

எனவே நாட்டு முன்னேற்றத்திற்கு மிகப்பெரும் சவாலாக விளங்கும் இந்த பயங்கரவாத தீவிரவாத செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க, கிடைத்த சுதந்திரத்தை, எவ்வித உடல் உழைப்புமின்றி ஆடாமல் அசையாமல் நமக்குக் கிடைத்த பெறர்கரிய இப்பேற்றை பேணிக்காக்க நாம் இந்தியன் என்னும் ஓரணியில் ஒன்றிணைவோம்.

போராடுவோம்; பெற்ற சுதந்திரத்தைப் பேணிக்காப்போம்.

சுதந்திரதின கொண்டாட்டத்தில் இருக்கும் நேரத்தில் அருமையான ஓர் சிந்தனையை நினைவுபடுத்திய சகோதரர் விடாது கருப்பு அவர்களுக்கு நன்றிகள்.


பின் குறிப்பு:

தங்களின் பதிவில் சகோதரி சுமா போடும் பதில்கள் அது சும்மாவாக இருந்தாலும் அவை அனைத்தும் கருத்துச் செறிவுள்ளவை. எனவே சகோதரி சுமா பெயரில் வரும் பின்னூட்டம் வெறும் சும்மா தான் என கத்திக் கொண்டிருக்கும் அனானிமஸ்களை தாங்கள் கண்டு கொள்ள வேண்டாம்.

கருத்துக்களை கூறுவது யார் என்பது முக்கியமல்ல. கருத்துக்களாக கூறுபவை பரிசீலனையில் எடுக்கத்தக்க கருத்துக்கள் தானா என்பது தான் முக்கியம்.

சிறந்த கருத்துக்கள் சகோதரி சுமா பெயரில் வந்தாலும் சரி தான்; சும்மா பெயரில் வந்தாலும் சரி தான். நமக்குத் தேவை சிந்தனைக்கு விருந்தாகும் கருத்துக்களே.

எனவே அந்த சகோதரி சு(ம்)மாவின் வேண்டு கோளுக்கு இணங்க "மாட்டிக் கொள்ளாமல் உடலுறவு கொள்ள" ஆலோசனை வழங்கும் "சிறந்த முற்போக்கு பெண்ணியவாதிகளைக்" குறித்தும் அதற்கு பின்பாட்டு பாடுபவர்களைக் குறித்தும் தாங்கள் எழுத நினைத்திருப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டாம்.

எழுதுங்கள். பார்ப்பன வந்தேறி ஈனப்பிறவி, "மோக"நர் காம வெறிமிருகங்களின் உடல் வெறியை தணிப்பதற்காக, சூழ்நிலைகைதியாக்கப்பட்டு தங்களின் வயிற்றுப்பாட்டுக்கு வேறுவழியின்றி உடலை விற்கும் பெண்களுக்கு மாற்று வழியை உருவாக்கி அவர்களை நல்வழிக்கு கொண்டு வர முயற்சிப்பதை விடுத்து அவர்களை தொடர்ந்து அந்த சாக்கடையிலேயே இருக்க வைத்து தங்கள் வெறிக்கு வடிகால் காணத் துடிப்பவர்களின் முகமூடியை கிழிக்கும் உங்கள் பதிவை எதிர்ப்பார்த்திருக்கிறேன்.

4 comments:

  1. ஐயா இறைனேசன்,

    யாரோ ஒருவர் வளர்த்த தணலில் குளிர்காய முனைவதேன் ? நீங்கள் மேற்கோள் காட்டியுள்ள அவரின் கருத்தும், நீங்கள் பதிவை கொண்டுசென்று முடித்துள்ள கருத்தும் வெகுவாகு வேறுபடுவதால், உங்களுடைய இந்த பதிவினை வேறுமாதிரிதான் என்னால் புரிந்துக் கொள்ளமுடிகிறது. உங்களுடை கக்குதல்களுக்கு காரணத்தினைத் தேடி அலைந்து, பின்பு அடைந்த வெற்றியுடன் இந்த பதிவினை (கக்குதல்களை) செய்துள்ளீர்களோ ?

    ReplyDelete
  2. இது உங்கள் தகவலுக்காக,
    உங்கள் பின்குறிப்பு தொடர்பான பின்னூட்டத்தை கருப்பின் பதிவில் இட்டிருக்கிறேன். மட்டுறுத்தலுக்காக காத்திருக்கிறது. வந்தபின் பார்த்து விட்டு கருத்து சொல்லவும்.

    ReplyDelete
  3. அசுரன்,
    இதே மாதிரியான ஒரு statisticsஜ ஒரு பத்து வருடத்திற்க்கு முன்னாடி எடுத்து இருந்தா இன்னும் மோசமா இருந்து இருக்கும். அமெரிக்காவின்(அது வல்லரசு தானே இல்ல வேற ஏதாவது ஒரு கிரக்த்தில் உள்ள நாட்டை தான் வல்லரசாக ஒத்துக்குவிங்களா?) crime rate மற்றும் மோசமான statistics பற்றி வலையில் தேடுங்கள் கிடைக்கும் எந்த ஒரு விஷயத்திற்கும் மோசமான விஷயம் இருக்கும் நல்ல விஷயங்களை எடுத்துக்கோங்க. பிடிச்சா இந்தியாவுல இருங்க இல்லாட்டி கிளம்பி போங்க யாரும் உங்களை புடிச்சி நிறுத்தலையே?

    ReplyDelete
  4. These are all hype.. Don't beleive in statistics. Have they interviewed every indians of the 40% (which is roughly 40 crore indians) are half-starved.??.... all of them are bull-shit... Thanks to media for painting good/bad pictures of a country, religion, or individuals. Do you know, where is Laos located, Do you know where is Trinidad & Tobacco... These are all countries, which many people don't know where they exist. If someone is shot in the streets of America, it become the world news. If some body was injured in Israel, it is a world news, but is it only happening all around the world at this moment?? Don't beleive in those statistics.

    India was threatened by Western Powers that If india is not controlling the population explosion, it will harm india and bring downfall. But what happened?? Japan, Swiss, Netherlands, all are having negative birthrate. Singapore, US, and many other european countries are seeing their birthrate declining over years. India and China are filling up the gap. whether they don't like it or not, Westerners have to co-habit with an Indian or Chinese in any office. Was the population explosion, a dreadful thing for India..?? No.. it is a blessing in disguise.

    Wait and see... Bio-diesel is going to change the so called America's "New World Order". If each country is going to cultivate their own fuel in their backyard, what will happened to American hegemony; Will they have sufficient money to maintain their expensive armies? They might have a choice to invade every Arab country to rob their money and make it their own.

    தமிழில் டைப் செய்வதற்கு நேரமாகிறது என்பதாலும்... அவசரமாக வெளியே கிளம்ப வேண்டியிருப்பதாலும்.. ஆங்கிலத்தில் உள்ளது... அன்பர்கள் மன்னிக்கவும்..

    ReplyDelete