காலையில் மடல்களை பிரித்து மேய்ந்து கொண்டிருந்த போது இடையில் வித்தியாசமான சில மடல்கள் கண்ணில் பட்டன. அனைத்திலும் நல்ல காரத்துடன் கூடிய சமையல் வாசனை. என்னடா இது மடல்களிலேயே சமையல் வாசனை வர ஆரம்பித்து விட்டதே? என்னவாக இருக்கும் எனப்பிரித்து ருசித்தால் யப்பா யப்பப்பா, காரம் அத்தனை காரம். கண்ணைக் கட்டிய காரத்துடன் இருந்தாலும் சமையல் வித்தியாசமாக வெகு ருசியுடன் இருந்தது.
அதனை இங்கு பரிமாறுகிறேன். ரசித்து, ருசித்து கருத்து கூறுங்கள்.
@ ************************** @
முன் குறிப்பு:
இவ்வாக்கம், நேசகுமார் என்பவர், திண்ணையில் உளறியதற்கான எதிர்வினையாகும். இதைத் திண்ணை பிரசுரிக்கவில்லை. தனிமனித எள்ளல் என்பதாகத் திண்ணை காரணம் வைத்திருக்கலாம். வலைப் பதிவர்களுள் பத்தோடு பதினொன்றான, அந்தப் பதினொன்றிலும் மனநோயாளியான நேசகுமாரை எள்ளுவது திண்ணையின் பாலிஸிக்கு எதிரானதாக இருக்கலாம். கோடானுகோடி முஸ்லிம்களின் உயிரினும் மேலான தலைவர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை மனம்போனவாறு திட்டித் தீர்ப்பது தனிமனிதத் தாக்குதலில்லையா? அதைப்பிரசுரிப்பது எழுத்து வக்கிரமில்லையா? நல்ல பாலிஸிதான் போங்க!
___________________________________________________
ஜன்னல் ஜர்னலிஸம் கேள்விப் பட்டிருப்பீர்கள். கிச்சன் ஜர்னலிஸம்? அதுதான் கமலா சுரைய்யா விஷயத்தில் நடந்தது. சமையலறையைச் சுத்தம் செய்து விட்டு, கழிவுகளைத் தெருவிலுள்ளக் குப்பைத் தொட்டியில் கொட்ட வந்த சுரைய்யாவின் வீட்டு வேலைக்காரியை இடைமறித்தது ஒரு பரிதாபக் குரல்: "அம்மோய்! இந்தப் பக்கமா போடுங்கம்மோய்" என்று கெஞ்சிக் கூத்தாடிக் கமலா சுரைய்யா வீட்டுக் கழிவுகளை வாங்கிப் போய், அந்தக் கொஞ்சக் கழிவுகளோடு, தன்னிடம் மிகுதியாய் மிஞ்சியிருந்தவற்றைப் போட்டுக் கலக்கி, தானே சமைத்ததுபோல் 'மடுத்த' தட்டில் வைத்து 'மாத்ருபூமி'யில் பரிமாறினார் அதன் ஃபோட்டோகிராஃபர்.
"ஆஹா எவ்வளவு அற்புதமான உணவு! என்னே மணம், என்னே ருசி! மலையாளிகள் மட்டும் இதை உண்பதா? தனியொரு தமிழனுக்கு இவ்வுணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம்" என்ற சூளுரையோடு அதற்கு உள்ளூர் மசாலா தூவி, திண்ணைத் தட்டில் வைத்துச் சுடச்சுடப் பரிமாறினார் இரா.முருகன்.
இதெல்லாம் இருபது மாதங்களுக்கு முன்னர் பரிமாறப் பட்டு ஆறிப்போன அவியல்.
உடனடியாக தேஜஸிலும் அண்மையில் விகடனிலும் வெளிவந்த கமலா சுரைய்யாவின் உண்மையான பேட்டிகளையும் இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டதிலிருந்து இன்றுவரை மாறாத கமலா சுரைய்யாவின் நிலையையும் அறியாமல் திண்ணையில் உளறி [சுட்டி-1], அபூசுமைய்யா [சுட்டி-2] மற்றும் இப்னு பஷீர் [சுட்டி-3] ஆகியோரின் உறுதியான சான்றுகளுடன் கூடிய, நிதானமான எதிர் வினைகளால் முகமிழந்து நிற்கும் நேசகுமார் என்பவரைப் பற்றி அறிய முற்பட்டபோது சில திடுக்கிடும் உண்மைகள் வெளியாகின!
இவருடைய அகநோயின் வீரியம் புரியாமல், 'நட்புக்கான வழியும் மொழியும்' என்று நாகூர் ரூமி, இவருக்கு அமிர்தாஞ்சன் தடவி [சுட்டி-4] குணப் படுத்த வீண் முயற்சி செய்துள்ளார்.
இஸ்லாமோஃபோபியா என்ற மன நோயினால் மிகக் கடுமையாகப் பீடிக்கப் பட்டுள்ள இவருக்கு அனுபவமுள்ள சிறந்த மருத்துவர்களான அபூஆதில், அபூமுஹை, அப்துல்லாஹ், சுட்டு விரல், ஸலாஹுத்தீன், அக்பர் பாஷா, நல்லடியார், சுவனப் பிரியன், இப்னு பஷீர் போன்றோரால் தொடர் சிகிச்சை அளிக்கப் பட்டுள்ளது.
மருத்துவர்கள் எழுதிக் கொடுக்கும் மருந்துகளை இவர் 'உள்வாங்க' மறுப்பதால் உளறல் நோய் நீங்கிய பாடில்லை. அதனால்தான் ஜிஹாதைப் பற்றி முன்னர் உளறியதையே மீண்டும் மீண்டும் உளறிக் கொட்டுகிறார் [சுட்டி-5].
இவரது தொடர் உளறல்களுக்கு, குறிப்பாக "முஹம்மது விஷம் வைத்துக் கொல்லப் பட்டார்" என்ற உளறலுக்கு, திண்ணை மருத்துவர் ஒருவரும் தம்மால் முடிந்தவரை சிகிச்சை அளித்திருக்கிறார்; [சுட்டி-6] ம்ஹூம், பயனில்லை.
இவருக்கு அளிக்கப் பட்டத் தொடர் சிகிச்சையையும் இவருடைய அத்து மீறிய உளறல்களையும் தொடர்ந்து கவனித்துக் கொண்டிருந்த கம்பவுண்டர் இறை நேசன் என்பவர் இவரை 'மறை கழண்ட கேஸு' என்று [சுட்டி-7] முடிவுக்கு வந்திருக்கிறார்.
இறை நேசனின் முடிவில் எனக்கு உடன்பாடில்லை. இவர் மறை கழண்ட கேஸல்ல; மாறாக, தேறாத கேஸ் என்பது என் கணிப்பு.
மன நோயாளி என்பதால் இவர் மீது பரிவும் இவருடைய உளறல்களால் சில முஸ்லிம்கள் மருத்துப் படிப்பைப் படித்து முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள் என்ற நன்றியுணர்வும் ஒருபுறமிருந்தாலும் இவர் மேலும் மேலும் உளறிக் கொட்டுவதைப் பார்க்கும்போது - அதுவும் திண்ணை என்ற திறந்த வெளியில் - இவர் மீது பரிதாமே எஞ்சி நிற்கிறது!
@ ******************* @
சுட்டிகள்:
1- http://www.thinnai.com/?module=displaystory&story_id=80609081&format=html
2- http://www.thinnai.com/?module=displaystory&story_id=20609081&edition_id=20060908&format=html
3- http://www.thinnai.com/?module=displaystory&story_id=20609158&format=html
4- http://www.tamiloviam.com/unicode/11030512.asp
5- http://www.thinnai.com/?module=displaystory&story_id=20609155&format=html
6- http://www.thinnai.com/?module=displaystory&story_id=80501205&format=html
7- http://copymannan.blogspot.com/2006/09/blog-post_05.html
@ ********************* @
நன்றி : கிச்சன் ஜர்னலிஸம் - வஹ்ஹாபி.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment