Thursday, September 7, 2006

வந்தே(றிகளின்) 'மா'தரம்.

உணவகங்களின் எச்சில் இலை போடும் பகுதியிலோ அல்லது சில திருமண மண்டபங்களின் எச்சில் போடும் பகுதிகளிலோ முன்னங்காலை நட்டு வைத்து பின்னங்கால்களில் தனது பிட்டத்தை வைத்துக் கொண்டு ஏதாவது எச்சில் இலை வந்து விழாதா என ஆவலோடு வாயிலிருந்து நீர் சொட்டச் சொட்ட நாக்கைத் தொங்கப் போட்டு அமர்ந்திருக்கும் நாயை பார்த்திருப்பீர்கள்(இதுவரை இப்படி ஒரு காட்சியை காணாதவர்கள் மேற்கொண்டு படிக்கும் முன் ஏதாவது உணவகத்திற்கோ அல்லது திருமண மண்டபத்திற்கோ சென்று உணவருந்தி கண்டு வரவும்).

ஏதாவது எச்சில் இலை வந்து விழும் நேரம் அதுவரை இருக்கும் இடம் வெளியில் தெரியாமல் இருக்கும் இந்த நாய் அரக்க பரக்க விழுந்தடித்துக் கொண்டு ஓடி அந்த இலைப்பக்கம் வரும். அதில் ஒன்றும் இல்லை எனினும் அவ்விலையை அது விடாது. பறந்தடித்து ஓடி வந்ததற்காக ஒன்றுமில்லை எனினும் கொஞ்ச நேரம் அவ்விலையை போட்டு அங்குமிங்கும் இழுத்துப்போட்டு தனது வெறியை தீர்த்துக் கொண்டு போகும்.

சரி இனி விஷயத்திற்கு வருவோம். செப்டம்பர் 7 ஆன இன்று இந்திய மக்கள் தங்களின் தேசப்பற்றை மற்றவர்களுக்கு வெளிப்படுத்தும் நாள். எப்படி? இந்திய எல்லையில் ஊடுருவும் அந்நிய சக்திகளுக்கு எதிராக இந்திய இராணுவத்துடன் சேர்ந்து களமிறங்கியா? இந்தியாவை அடக்கியாண்ட ஆங்கில அரசின் உற்பத்திகளை புறக்கணித்தா? இந்திய உயர்பதவிகளில் அமர்ந்து கொண்டு அந்நிய நாட்டுக்கு உளவு வேலைப்பார்க்கும் பிச்சைக்காசுக்கு விலைப்போன தூத்தேறிகளை அரசாங்கத்துக்கு பிடித்துக் கொடுப்பதன் மூலமாகவா? சுதந்திரப்போரில் உயிர்தியாகம் செய்த போராளிகளின் ஏழைக் குடும்ப அங்கங்களை தத்தெடுப்பதன் மூலமாகவா? இந்திய நாட்டின் இறையாண்மைக்கு களங்கம் கற்பித்துக் கொண்டிருக்கும் ஜாதி/மத வெறியர்களையும், மத/மொழி/இனத்தின் பெயரால் பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விடும் தீவிரவாதிகளுக்கு எதிராக களமிறங்குவதன் மூலமாகவா? என்பது போன்று ஏதாவது கிறுக்குத்தனமாக மட்டும் கேட்டு விடாதீர்கள்.

தேசப்பற்றாளன் என நிரூபிக்க இவ்வளவு சிரமப்பட வேண்டிய அவசியம் ஒன்றும் இல்லை. வந்தேறிகள் கொண்டு வந்த துர்கா மாதாவை வணங்கும் இரு வரிகள் மட்டும் பாடினால் போதும். காட்டிக் கொடுத்த/கொடுக்கும் ஹிந்துத்துவ தேசப்பற்றாளார்களுக்கு இது ஒன்றும் பெரிய காரியமில்லை தான். இரு வரிகளைப் பாடி துர்கையை ஆலாபித்து விட்டு அவர்களுக்கு தேசப்பற்றாளன் என்ற பெயரில் என்ன வேண்டுமானாலும் செய்யவும் செய்யலாம். யாருக்கு கணக்கு கொடுக்க வேண்டும்?. ஆனால் படைத்த ஒரே இறைவனையே வணங்குவோம்; அவனைத் தவிர வேறு எவருக்கும் சிரம் பணியவோ, துதிக்கவோ மாட்டோம் என உள்ளத்தால் உறுதி பூண்டு முஸ்லிமாக வாழும் இந்திய சுதந்திரப்போராட்டத்தில் வீர காவியம் படைத்த இஸ்லாமியர்களைப் பொறுத்தவரை இது ஒருபோதும் கனவிலும் நினைக்க முடியாத காரியமாகும்.
எனினும் இவ்விஷயத்தை வைத்து அரசியல் இலாபம் தேட துடிக்கும் வந்தேறிகளின் அமைப்புகளுக்கு அதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்காதிருக்கவும், பக்கிம் சந்திர சட்டர்ஜியின் இந்தியாவை அடிமைப்படுத்திய ஆங்கிலேயர்களுக்காக துர்கா தேவியிடம் பிரார்த்தனை புரியும் பாடல் வரிகள் இஸ்லாமிய அடிப்படைக் கோட்பாட்டுக்கு எதிரான கருத்துக்களைக் கொண்டிருப்பதால், அதனைத் தவிர்க்கும் பொருட்டும், செப்டம்பர்-7 ஆன, இன்று இந்திய முஸ்லிம் குழந்தைகளை பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டாம் என்று அகில இந்திய முஸ்லிம் அரசியல் இயக்கங்களின் தலைவர்களும் மற்றும் மார்க்க அறிஞர்களும் கேட்டுக் கொண்டுள்ளார்கள்.

செப்டம்பர்-7, அன்று வந்தேறிகளின் பாடலை கட்டாயமாக்கலாமா என்று பரிசீலிப்பதாகச் சொன்ன மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம்,பாடல்வரிகள் முஸ்லிம்களின் மத உணர்வுகளுக்கு எதிரானது என்பதால் அதனைப் பாடியே ஆகவேண்டும் என்பது கட்டாயமில்லை என்று அறிவித்தது. அவ்வளவுதான்! முஸ்லிம்களை தேச விரோதிகளாக்க ஏதாவது கிடைக்காதா? என நாக்கைத் தொங்கப்போட்டு காத்திருந்த சங்பரிவாரங்களின் எச்சில்வடியும் வாய்க்குக் கிடைத்த அவலாக, இப்பிரச்சினையை கையிலெடுத்துக் கொண்டு இந்திய முஸ்லிம்களின் தேசப்பற்றை, மத நம்பிக்கையுடன் மோதவிட்டு குளிர்காய முனைகின்றனர்.

இந்தியாவை 'காளி'யாகவும் துர்க்கையாகவும் உருவகப்படுத்தி ஆங்கிலேயர்களுக்காக பிரார்த்தனை புரிவதாக வரும் மதத்துவேச வரிகளைக் கொண்ட வந்தேறிகளின் பாடலை 'வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை' என்ற கொள்கையுடைய முஸ்லிம்கள் கட்டாயம் பாடியே ஆக வேண்டுமாம்! அப்படிப் பாட விரும்பாதவர்கள் பாகிஸ்தானுக்குப் போக வேண்டுமாம்! அல்லது ஓட்டுரிமை பறிக்கப்பட வேண்டுமாம்! ஆனால் இந்தியாவைக் காட்டிக் கொடுத்த ஹிந்துத்துவ ஆசாமிகளையும் தேசவிடுதலைக்கு தன் வாழ்க்கையை அர்ப்பணித்த மஹாத்மா காந்தியை வதித்த ஆர் எஸ் எஸ் பரிவாரங்களும் தேசப்பற்றாளார்களாம்.

சுதந்திர இந்தியாவின் அரசியல் சாசனம் இந்திய மக்கள் எல்லோருக்கும் மதச் சுதந்திரத்தை வழங்கியுள்ளது. இந்திய அரசியல் சாசனத்தை என்றுமே மதிக்காத சங்க்பரிவாரங்கள் மற்றும் இந்தியாவின் தேசியக் கொடிக்கு மரியாதை செய்ய அரை நூற்றாண்டுகள் எடுத்துக் கொண்ட RSS கும்பலுக்கும் அதன் அரசியல் முகம் பிஜேபிக்கும் இதைச் சொல்ல என்ன தகுதி இருக்கிறது.
கடவுள் நம்பிக்கையற்ற கம்யூனிஸ்டுகளும் கூட 'காளியை' வணங்குவதாகப் பாடப்பட்ட வந்தேறிகளின் பாடலின் முதல் இரண்டு அந்தாதிகளை (Stanzas) பாடச்சொல்வது வியப்பாக இருக்கிறது! பாபர் மசூதியைத் தகர்த்தவர்கள் சங்பரிவாரக் கும்பல் என்றால் அதற்கு வழி ஏற்படுத்திக் கொடுத்ததோடு, தற்போது கட்டப்பட்டுள்ள கோவில் பீடத்திற்கு எஃகுச் சுவர் பாதுகாப்பு கொடுத்துக் கொண்டிருப்பது காங்கிரஸ். ஆக, இந்திய முஸ்லிம்களின் நலனை யார் அதிகம் சிதைப்பது என்ற விஷயத்தில் தான் இந்திய அரசியல் கட்சிகள் முனைப்புடன் செயல்படுகின்றன.

சமஸ்தானங்களாகப் பிரிந்து கிடந்த இந்தியாவிற்கு ஒரு பூவரைபடத்தை ஏற்படுத்தி ஓர் அகண்ட பாரதத்தை உருவாக்கிக் கொடுத்தவர்கள் முகலாய மன்னர்கள் - முஸ்லிம்கள் என்பதைச் சகிக்க முடியாமல் எழுதப் பட்டதுதான், 'ஆனந்த மடம்' என்ற நாவலில் வரும் "வந்தே(றிகளின்) மாதரம்" பாடல். இது தேசியப் பாடலுக்கு துளியும் தகுதியானது இல்லை என்பதற்கு, அப்பாடலில் வரும் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை வரிகளே சான்று. முகலாயர்களை விரட்டிய ஆங்கிலேயரைக் கடவுள் ஆசீர்வதிக்க வேண்டும். இப்படிப்பட்ட வரிகள் அடங்கிய இப்பாடலை தேசப்பற்றுள்ள எவரும் நாட்டுப் பண்ணாக ஏற்க முடியாது.அது முழுப்பாடலாக இருந்தாலும் அல்லது இரண்டு அந்தாதிகளாக இருந்தாலும் சரியே. ஒருவேளை இதனைப் பாடுவது தேசப்பற்றின் அடையாளம் எனபது அந்த ஆங்கிலேயர்களை விரட்டியடிக்க தன் வாழ்நாளை செலவழித்த காந்தியை சுட்டுக் கொன்ற சங்க்பரிவார ஆர் எஸ் எஸ் வன்முறை கும்பலுக்கு வேண்டுமானால் சரியாக இருக்கலாம்.

முகலாயர் ஆட்சியில் ஒரே வங்காளமாக இருந்ததை, இந்தியா-பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகு கிழக்கு மேற்கு எனத் துண்டாடியது ஆங்கிலேயர்கள் என்றால், அதனை பங்களாதேஷ் என்ற தனிநாடாக்கிப் பாகிஸ்தானை இந்தியாவின் நிரந்தரப் பகைவர்களாக்கும் அவர்களின் கனவை நனவாக்கியது காங்கிரஸ் கட்சி. ஆக, வந்தேறிகளின் பாடலை அவமதித்தவர்கள் காங்கிரஸ்காரர்களே! இன்னொரு பக்கம் மோகன்தாஸ் காந்தியை தேசப்பிதா என்றால் நாக்கைப் பிடுங்கி கொள்ளும் சங்க்பரிவாரங்கள், காளியை 'தேசமாதா' என்பது உள்நோக்கம் கொண்டதாகும்.

ஆங்கிலேயருக்கு ஆதரவாக சாமரம் வீசியதோடு, சுதந்திரப்போராட்ட வீரர்களைக் காட்டிக் கொடுத்து உயர் பதவிகளை ஆக்கிரமித்ததோடு இன்றும் அதன் பலனை அறுவடை செய்து வரும் வந்தேறி கூட்ட சங்பரிவாரங்கள், நாட்டுச் சுதந்திரத்திற்காக கல்வி வாய்ப்புகளை இழந்து தியாகம் செய்த இந்திய முஸ்லிம்களின் தேசப்பற்றைக் குறைகூற கொஞ்சமும் தகுதியற்றவர்கள்.

குறிப்பு:
நாக்கைத் தொங்கப் போட்டு காத்திருக்கும் நாய் எது என்பதற்கும் அதன் செய்கைகள் யாது என்பதற்கும் தனி விளக்கம் அவசியமில்லை என நினைக்கிறேன். எப்பொழுதும் போல் இன்னும் புரியாதவர்கள் தொடர்பு கொள்ளவும். என்ன வழியில் தொடர்பு கொள்கிறார்களோ அவ்வழியில் பதில் தரப்படும்.

5 comments:

  1. Your suitable comparison lead me to a complete read.
    Good. Keep it up.

    ReplyDelete
  2. நன்றி கருத்து அவர்களே.

    ReplyDelete
  3. எங்க ஊர் பாஷையில் சொன்னால் " போட்டு சப்பி எடுத்து விட்டீர்களே" அவாளின் வண்ட
    வாளத்தை.

    அசலம்

    ReplyDelete
  4. ஸங் பரிவாரங்களைப் பொறுத்தவரை, எப்படியாவது தேவையில்லாத ஒரு பிரச்னையை கிளப்பி விட்டு, நேற்று வரை நாயினும் கீழாய் அவர்களால் நடத்தப்பட்டவனையே தூண்டிவிட்டு, முஸ்லீம்களோடு தகராறு செய்து கொள்ள வைத்து சுயலாபம் அடையும் ஜென்மங்கள்.

    இங்குள்ள முழு நேர குஞ்சுகள் என்னதான் (அவர்களுக்குத் தெரியாது என நினைத்துக் கொண்டு காட்டுக்கூச்சலுடன்) கத்தினாலும் அம்மக்கள் விழிப்புணர்வின் பக்கம் வந்து கொண்டிருக்கின்றனர். இவர்களின் கூச்சல் தங்களுக்கே எதிரானது என்பதை பின்னர் (வெகு விரைவில் அம்மக்களாலேயே உதைபடும்போது) விளங்குவார்கள். எல்லாம் நன்மைக்கே.

    ReplyDelete
  5. கேரளாவில் ஜெஹோவா பிரிவு கிறிஸ்தவர்கள், ஜனகணமன பாடலின் சில வரிகளும், தேசியக் கொடிக்கு சல்யூட் அடிப்பதும் கிறிஸ்தவ நம்பிக்கைகளுக்கு எதிராக இருப்பதாகச் சொன்ன போது, சுப்ரீம் கோர்ட் வழங்கிய தீர்ப்பில்

    "Our tradition teaches tolerance, our philosophy teaches tolerance, our Constitution practices tolerance, let us not dilute it." என்றது.

    ReplyDelete