Tuesday, February 27, 2007

உதவி வேண்டி..!

அன்பின் தமிழ் நெஞ்சங்களே!

தமிழ் நாட்டைச் சேர்ந்த சங்கரன் மற்றும் பரீத் என்ற இருவர் லிப்டில் வேலைசெய்யும் பொழுது லிப்ட் அறுந்து விழுந்ததில் கால் மற்றும் இடுப்பு நசுங்கி பொருளாதார வசதியின்மையால் மருத்துவ உதவி செய்ய இயலாமல் முதலுதவி மட்டும் செய்யப்பட்ட நிலையில் ஒரு கிளினிக்கில் அனுமதிக்கப்பட்டு அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்ற செய்தி சவூதிகேசட் பத்திரிக்கை வாயிலாகவும் நண்பர்கள் மூலமாகவும் பெரும்பாலானோர் அறிந்திருக்கக்கூடும், சில நல்லெண்ணம் கொண்ட இந்தியர்களின் உதவியுடன் அவரின் ஸ்பான்சரை தொடர்பு கொண்டு பேசியதில் ஒருவரின் ஸ்பான்சர் 3000ம் ரியால் மட்டும் தருகிறேன் என்று கூறுகிறார், மற்றவருக்கு ஒன்றும் கிடைக்கவில்லை அத்துடன் அவரின் இக்காமா ரினிவல், அபராதம் போன்றவைகளுக்கு 4000ம் ரியால் தேவைப்படுகிறது அதுபோக இருவரையும் படுக்கை வசதியுடன் இந்தியா அனுப்ப என்று 15000 ம் ரியால் வரை தேவைப்படுகிறது, Indians in KSA என்ற அமைப்பும் இவர்களுக்கு உதவிசெய்ய முன்வந்து மக்களிடம் உதவிக்கரம் நீட்டியுள்ளனர் .

தமிழர்கள் என்ற முறையிலும் மனிதாபிமானிகள் என்ற முறையிலும் இவர்களுக்கு நம்மாலான உதவிகள் செய்து உடன் இவர்களை தாயகம் அனுப்ப நம்மாலான உதவிகளை செய்யும் முகமாக ரியாத் தமிழ்ச் சங்கத்தின் சமுதாய சேவை அமைப்பு முன்வந்துள்ளது... அதன் முதற்கட்டமாக 1250 ரியால் உறுப்பினர்கள் உதவியுள்ளார்கள், உங்களால் முடிந்த உதவியை உடன் செய்து இவர்கள் இருவரையும் இன்னும் இருதினங்களுக்குள் இந்தியா அனுப்பி மருத்துவ சிகிச்சை செய்ய உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

(குறிப்பு: மருத்துவர்களின் கருத்துப்படி பரீத் என்பவருக்கு இரண்டுகாலும் எடுக்க வேண்டிய நிலை ஏற்படும் என்று தோன்றுகிறது)

அன்புடன்
அஹமது இம்தியாஸ்
ஒருங்கிணைப்பாளர்
சமூக சேவைப்பரிவு
ரியாத் தமிழ்ச் சங்கம்.

தொடர்புக்கு:

1. riyadhtamilsangam@yahoogroups.com
2. tafareg@yahoogroups.com

1. இம்தியாஸ் - 0506972461
2. சாதிக் - 0508833239
3. லக்கி ஷாஜஹான் - 0508494160

11 comments:

  1. pls.give someone a/c no 2 send money!!

    ReplyDelete
  2. வங்கி கணக்கு விவரம்:

    1. ஜஹபர் சாதிக் மரைக்கார்
    A/c No: 032211074054
    Saudi Hollandi Bank.

    2. இம்தியாஸ் அஹ்மத்
    SBB: 005060520101
    AlRajhi : 166/010778/7

    ReplyDelete
  3. துபாயிலிருந்து உதவ விரும்புபவர்கள் யாரைத் தொடர்பு கொள்வது?

    ReplyDelete
  4. தற்காலிக மின் தூக்கி அறுந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் இரண்டு தமிழ்ச்சகோதரர்கள் ஷிபா-அல் ஜஸீரா மருத்துவமனையில் முதலுதவி பெற்றுக் கொண்டிருப்பதும் அவர்கள் விரைவாக தாயகம் அனுப்பப்பட நிதி உதவி கோரியிருப்பதும் நீங்கள் அறிந்ததே...நேற்றிரவும் இன்று மதியமும் அவர்களை சந்தித்து பேசிக்கொண்டும் ஆறுதல் சொல்லிக் கொண்டும் இருக்கும் வேளையில் அவர்கள் வலியால் படும் அவஸ்தையும் வேதனையும் காணப் பொறுக்காமலே இந்த அவசர மடல்.ஒரு சகோதரரின் இரண்டு கால்களும் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வருகிறது. இன்னும் மூன்று
    நாட்களுக்குள் அவர் தாயகம் சென்று (இன்ஷா அல்லாஹ்) உடனடியாக ஒரு பெரும் அவசர அறுவை சிகிச்சை மேற்கொள்ளாவிடில் சர்வ நிச்சயமாக இரண்டு கால்களையும் இழக்க கூடும் என்று அஞ்சப்படுகிறது .( இறைவன் வைத்துக் காப்பாற்றுவானாக).அவருக்கும் மற்ற சகோதரருக்கும் சேர்த்து பயணக் கட்டணம் மட்டுமே பதினாராயிரம் ரியால் உறுதி செய்யப்பட்டுள்ளது. ( ஸ்டெரச்சர் டிக்கெட் என்பதால் மூன்று நபர் கட்டணம் + ஒரு செவிலியர் பயண கட்டணம் மற்றும் இன்னொரு சகோதரருக்கான கட்டணங்கள் ) துன்பத்தில் இருக்கும் இந்த சகோதரர்களுக்கான துயர் துடைக்கும் பணியில் நிதி திரட்டும் பணி துரிதமாக நடந்து கொண்டிருக்கிறது.அன்புக்குரிய சகோதரர்கள் தங்களால் இயன்றதை உதவினால் இந்த இரண்டு நாட்கள் எனும் குறுகிய கால கட்டத்துக்குள் அவர்களை அனுப்பி வைக்க இயலும்.
    சேலம் மற்றும் கடையநல்லூர்- புளியங்குடியைச் சார்ந்த இந்த நம் சகோதரர்களின் துயர் துடைப்பு பணியில் நம்மையும் ஈடுபடுத்திக் கொள்ள உங்களில் ஒருவராக கேட்டுக் கொள்கிறேன்.


    அன்புடன் - அன்பிற்காக

    லக்கி ஷாஜஹான்.
    050 84 94 160.

    ReplyDelete
  5. சகோதரர் சுல்தான் அவர்களே

    என்னை மடலில் தொடர்பு கொள்ள இயலுமா?

    mailto.erainesan@gmail.com

    அன்புடன்
    இறை நேசன்.

    ReplyDelete
  6. அன்பின் தமிழ் நெஞ்சங்களே!

    நேற்று இரவு சில நண்பர்கள் தொடர்பு கொண்டு அவர்களால் முடிந்த உதவியினைச் செய்தார்கள், அதிலும் நைஜீரியாவில் இருந்து ஆனந்தன் என்ற ஒரு தமிழர் 500ரியால் அவர் நண்பர் மூலம் தரச்சொன்னது மனிதாபிமானத்தின் சிறப்பைக்காட்டுகிறது, அவருக்கு நேற்று இரவு போன் செய்து நன்றி தெரிவித்தேன், உங்கள் சார்பாகவும் அவருக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன், அவரின் தொலைபேசி : 002348037065653.

    பாதிக்கப்பட்ட இருவரில் நிலை மிக மோசமாக இருக்கும் திரு. பரீத் என்பவரை இன்று இரவு சவூதியா விமானத்தில் அனுப்புவதற்கு ஏற்பாடுகள் நடந்துள்ளது, அவருக்குரிய மருத்துவ இருக்கைக்கு மாத்திரம் 10,235 ரியால் வந்துள்ளது, நல்லுள்ளம் கொண்ட அன்பர்கள் உதவிக்கொண்டுள்ளார்கள், இன்று இரவு 9:00 மணிக்கு இறைவன் நாடினால் அவர் விமான நிலையம் செல்லவிருக்கிறார். அதற்குமுன் பார்க்க விரும்புபவர்களும் உதவி செய்ய விரும்புவர்களும் முன்வருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். என் இந்திய அல்லது சவூதி வங்கிக்கணக்குக்கு அனுப்பினால் நான் இன்ஷா - அல்லாஹ் அதை உரியவரிடம் ஒப்படைத்து விடுவேன், என் வங்கி முகவரி தேவை பட்டவர்கள் imthias@imthias.com / 0506972461 முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்..

    என் அடுத்த மடலில் அவரின் டிக்கட் காப்பியை நகலெடுத்து அனுப்புகிறேன்..

    இதுவரை உதவி செய்தவர்கள்.... (யார் பெயராவது விடுபட்டிருந்தாலோ அல்லது தொகையில் வித்தியாசம் இருந்தாலோ தயவு செய்து தெரிவிக்கவும்)

    ReplyDelete
  7. அன்பின் தமிழ் நெஞ்சங்களே!

    இன்ஷா - அல்லாஹ் இன்று இரவு 9:00 மணிக்கு ஆம்புலன்ஸ் மூலம் சகோதரர். பரீத் அவர்கள் விமானநிலையம் செல்லயிருக்கிறார் அவரின் விமானம் இரவு 12:30க்கு என்ற விபரம் அறியவும்..

    பல நல்லுள்ளங்கள் உதவிகளை வாரி வழங்கினார்கள் அறிவுப்புக்கொடுத்து 24 மணிநேரத்திற்குள் 10,780 ரியால் கொடுத்துதவிய நல்லுள்ளங்களுக்கு ரியாத் தமிழ்ச் சங்கம் சார்பாக எங்கள் உளம்கனிந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.

    மேலும் சில நண்பர்கள் இந்தியாவில் இருந்து மடல் எழுதி அவரின் முகவரி கேட்டார்கள், அங்கு தங்களால் ஆன உதவிசெய்வதாக கூறியுள்ளார்கள் அவரின் வேண்டுகோளுக்காக கீழே சகோதரர். பரீதின் முகவரி...

    Mr. Sheik Fareed
    S/o B. Abdul Aziz
    110, Park Street
    Near Palace Theater
    Selam - 636 001
    Phone : 0427-2451554
    Mobile: 9442927806

    அன்புடன்,
    இம்தியாஸ்
    0506972461

    ReplyDelete
  8. அன்பின் தமிழ் நெஞ்சங்களே!

    உங்களின் சரியான நேரத்தில் பாதிக்கப் பட்டவர்களுக்குச் செய்த உதவியால் விபத்து நடந்து 5 நாட்கள் ஆகியும் கால் எழும்புகள் அனைத்தும் நொருங்கிய நிலையில் வேதனையில் ஒரு நிமிடத்தை ஒருயுகமாக கடத்தி திக்கற்று நின்ற இரு தமிழர்களை மின்னஞ்சல் என்ற இவ்வூடகத்தின் வாயிலாக மட்டுமே அனுகியதில் 24 மணி நேரத்திற்குள் அவர்களை தாயகம் அனுப்ப நீங்கள் செய்த உதவியின் மதிப்பை நேற்று இரவு அதில் ஒருவரை ஆம்புலன்ஸில் ஏற்றும் பொழுது அவர் பட்டபாடை நீங்கள் கண்டிருந்தால் உங்கள் உதவியின் அருமை தெரிந்திருக்கும்... ஆம் ஒரு சிறிய அசைவைக்கூட தாங்க முடியாமல் துடித்தவர் அதே வேதனையுடன் விமானம் ஏறி தாயகம் சென்றடைந்துவிட்டார் என்ற தகவலை உங்களுக்குத் தருகிறேன்.. அங்கு விமானநிலையத்தில் ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்யப்பட்டு சேலம் சென்றுகொண்டிருக்கிறார் தற்சமயம்... இறைவனுக்கே அனைத்து புகழும்... இதன் அடுத்தக்கட்டம் என்னவென்றால் அவருக்கு இந்தியாவில் அறுவை சிகிச்சை செய்வது 3 தங்கைகளை கட்டிக்கொடுப்பதற்காக அவரின் வாழ்க்கையை தியாகம் செய்து இன்னும் 6 மாதத்தில் இந்தியா சென்று திருமணம் செய்ய ஏற்பாடு செய்திருந்தாராம், தகப்பனார் வயதுமுதிர்ந்து படுத்த படுக்கை என்பதும் நேற்றய தினம் முதன்முதல் நான் அவரை பார்த்த பொழுது அவர் என்னிடம் கண்ணீருடன் கூறினார், அறுவைசிகிச்சை செய்வதற்குகூட வசதியில்லை என்று கண்ணீர் வடித்தது அங்கிருந்த அனைவரையுமே கண்கலங்கச் செய்தது...

    எங்களிடம் நேற்றயதின இறுதிவரை சேர்ந்திருந்த 12,040ல் அவரின் மருத்துவ இருக்கை விமான டிக்கட்டிற்கு 10,235 ரியால் ஆகிவிட்டது, வேறு சில நண்பர்கள்/அமைப்புகள் செய்த உதவியுடன் அவரின் முதன்மைச் செலவிற்காக 3000ரியால் ரியாத் தமிழ்ச்சங்கம் சார்பாக அங்கு வந்திருந்த செயற்குழு உறுப்பினர்கள் திரு. ஜவஹர், தாவூத், ஷாஜஹான் அவர்கள் முன்னிலையில் கொடுத்தனுப்பியுள்ளோம். அவரின் வங்கி கணக்கு இன்னும் இருதினங்களில் அறிவிக்கிறோம் அதுவரை உதவி செய்யவிரும்புபவர்கள் imthias@imthias.com என்ற என் மின்னஞ்சலுக்கு தொடர்பு கொண்டால் உங்களுக்கு என் வங்கி கணக்கு தருகிறேன். ரியாத்தில் உள்ளவர்கள் பத்தாவில் உள்ள லக்கி மொபைலி கடையில் சகோ. லக்கி ஷாஜஹான் அவர்களிடம் கொடுக்கச்சொல்லி ஒரு கவரில் பெயர் எழுதி கொடுத்தால் அதை பெற்றுக்கொண்டு உங்களுக்கு தகவல் தருகிறோம்.
    அடுத்ததாக குற்றாலத்தைச் சேர்ந்த சங்கரன் அவர்களை அனுப்ப வேண்டும், உங்களின் உதவிகள் கிடைத்தபின்புதான் அவரை அனுப்ப வேண்டும், அவரின் நிலையும் பரிதாபம் 2002 ல் ஒரு லட்சம் ரூபாய் வட்டிக்கு பணம் கட்டி வந்தாராம் இதுவரை வந்த கடனையே அடைக்கமுடியாமல் வேலையின்மை, ஸ்பானசர் ஏமாற்று இப்படி பெரும் கதை.. உங்களைப்போன்ற நல்ல உள்ளங்கள் தரும் உதவியினால்தான் அவரை இந்தியா அனுப்ப வேண்டும் பின்னர் அவருக்கு மருத்துவசெலவுகள் செய்ய வேண்டும்.. எனவே உங்களின் உதவியை வேண்டியவர்களாக...

    அன்புடன்...
    இம்தியாஸ்
    ரியாத் தமிழ்ச்சங்கம் சமூகசேவைப்பிரிவு

    ReplyDelete
  9. இம்தியாஸ்March 5, 2007 at 5:31 AM

    அன்பின் தமிழ் நெஞ்சங்களே!

    இன்றைய நாள் இறுதி நிலவரப்படி 11,230 சவூதிரியால் உதவிசெய்யப்பட்டுள்ளது, இன்று இரவு 8:30 மணிக்கு அல்-ஜெஸிரா பாலிகிளினிக்கில் வைத்து டிக்கட்டிற்கான செலவு 10,235 ரியாத் தமிழ்ச் சங்கம் சார்பாக ஒப்படைக்க உள்ளோம், பாதிக்கப்பட்ட இருவருக்கும் ஆறுதல் கூறவிரும் அன்பர்கள் வந்து அவர்களை சந்தித்து அதில் ஒருவரை வழியனுப்பி வைக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம்..

    ReplyDelete
  10. சகோ.இறைநேசன்
    தங்கள் மெயில் திரும்பி விடுகிறது.
    இன்னொரு முறை இன்று அனுப்பியுள்ளேன்.

    ReplyDelete
  11. சகோதரர் சுல்தான் அவர்களே

    என்ன காரணத்தினால் மடல் திரும்புகின்றது என்று தெரியவில்லை. மற்ற மடல்கள் எனக்கு நன்றாகவே வருகின்றன.

    தாங்கள் விரும்பினால் toerainesan@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளுங்கள். அல்லது இங்கேயே உங்களது தொடர்பு மடல் முகவரியை தெரிவித்தால் இறைவன் நாடினால் நான் தொடர்பு கொள்கின்றேன்.

    அன்புடன்
    இறை நேசன்.

    ReplyDelete