தமிழ் வலையுலகில் தமிழ்மணத்திற்கு அடுத்தபடியாக மிக சிறந்ததொரு சேவையை தேன்கூடு வழங்கிக் கொண்டிருக்கிறது. இணையத்தில் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும் தமிழ் மக்களின் கருத்துப்பரிமாற்றங்களுக்கும் அவர்களை இணையம் வழி ஓரிடத்தில் ஒன்று கூட்டுவதற்கும் இவர்களின் சேவை அளப்பரியதாகும்.
தேன் கூட்டின் நிர்வாகியாக இருக்கும் சகோதரர் சாகரன் என்கிற கல்யாண் அவர்கள் நேற்று மாரடைப்பால் மரணமடைந்ததாக கேள்விப்பட்டேன்.
"பாதுகாப்பாக மாற்றார்களோடு பிடிபடாமல் உறவு கொள்வது எப்படி?" என எம்சக சகோதர பெண்குலத்திற்கு ஆலோசனை வழங்கிய, இந்தியாவிற்கு சாபமாக வந்து சேர்ந்த வந்தேறிப் பரம்பரையில் வந்த "பெண்கற்புப் புகழ் டோண்டு" அவர்களை "முற்போக்கு பெண்ணியவாதி" என ஒருமுறை தேன்கூடு நிர்வாகம் வாழ்த்தி நட்சத்திரமாக தேர்ந்தெடுத்ததை கண்டித்து நான் எழுதிய பதிவினை வைத்து என்னை தேன் கூட்டிலிருந்து அவர்கள் நீக்கியிருந்தாலும், இஸ்லாம் மனிதத்தை மதிக்க கற்றுத்தருவதால் ஓர் சக சகோதரன் என்ற அடிப்படையில் சகோதரர் சாகரனை இழந்து வாடும் அவரின் குடும்பத்தினரின் துக்கத்தில் நானும் பங்கு சேர்கிறேன்.
சகோதரர் சாகரனனை இழந்து வாடும் அவரின் குடும்பத்தினருக்கு வருத்தத்துடன் கூடிய என் ஆழ்ந்த இரங்கல்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
Subscribe to:
Post Comments (Atom)
திரு இறைநேசன்,
ReplyDeleteஉங்கள் மனிதத்தை மதிக்கும் பண்பு போற்றத்தகுந்தது.. சிலர் சொன்னதைக் கேட்டு உங்களைக் கண்மூடித்தனமாக இன்றுவரை எதிர்த்துவந்தேன்..
உங்கள் கருத்தியலில் மட்டும் ஒத்துப் போகாத இன்னொரு மனிதன்.
என் பிளாக்கர் கணக்குடன் பின்னூட்டம் இட முடியாமைக்கு வருந்துகிறேன்.
கண்கலங்க வைத்துவிட்டீர்கள்..