அனைத்து மடல்களிலும் ஏதாவது ஒரு வித்தியாசமான சுவாரசியமான ஒரு விஷயம் அடங்கியிருக்கும். எனவே தினசரி மடல் பெட்டியை திறக்கும் பொழுது அவர் அனுப்பி இருக்கும் மடல் இருந்தால் இன்று என்ன அனுப்பி இருப்பார் என ஆவலோடு அதனை திறந்து பார்ப்பது வழக்கம்.
அதுபோல் இன்றும் தற்போது திறந்துப் பார்த்ததில் சகோதரர் அ.......ன் ஒரு மடல் அனுப்பியிருந்தார். அய்யோ என்ன சொல்ல. ஒரே காமடி தான் போங்க. படித்து விட்டு நான் சிரித்த சிரிப்பை கண்டு வீட்டில் காசு கேட்டு வந்திருந்த கூர்க்கா நேபாளி, "க்யா பாய் சாப்? க்யா ஹோகா?" என்றான்.
கண்டிப்பாக அவன் அறிந்திருக்க வேண்டிய காரியமாதலால், அவனை அழைத்து பக்கத்தில் அமர வைத்து முழுவதும் படித்து காண்பித்தேன்.
முடிந்தவுடன் எழுந்து "நீங்களே உங்களை சந்தி சிரிக்க வைத்துக் கொண்டிருக்கின்றீர்கள்" என்பது போன்று நக்கலாக ஒரு சிரித்து விட்டு சென்றான்.
அப்படியென்ன இந்தியாவை சந்தி சிரிக்க வைக்கும் காரியம் என்கிறீர்களா?
பாருங்கள்:
ஒரிசா மாநிலம் பூரியில் புகழ்பெற்ற ஜெகனாதர் ஆலயம் உள்ளது. இந்த கோவிலில் நேற்று பால் என்ற அமெரிக்க சுற்றுலா பயணி நுழைந்து விட்டார். பூசாரி ஒருவர் அவரிடம் பணம் வாங்கிக் கொண்டு அவரை கோவில் மூலஸ்தானம் அருகே அழைத்து சென்றார்.
பக்தர்கள் மத்தியில் வெளிநாட்டுக்காரர் ஒருவர் நிற்பதை பார்த்ததும் மூலஸ்தான பூசாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் கோவில் நிர்வாகிகள் வந்து அமெரிக்கர் பாலை வெளியேற்றினார்கள். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
கோவிலுக்குள் வெளி நாட்டார் நுழைந்து விட்டதால் புனிதம் கெட்டு விட்டதாக கூறி கோவில் நடை அடைக்கப்பட்டது. கோவிலை கழுவி பரிகாரம் செய்தனர். சுமார் 18 மணி நேரம் இந்த பரிகார பூஜைகள் நடந்தன.
ஜெகனாதர் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு வழங்க ஆயிரக்கணக்கான பிரசாத பொட்டலங்கள் தயார் செய்யப்பட்டிருந்தன. அமெரிக்கர் நுழைந்ததால் தீட்டுப்பட்டு விட்டதாக கருதப்பட்டதால் சுமார் 7 ஆயிரம் பிரசாத பொட்டலங்கள் குப்பையில் வீசி அழிக்கப்பட்டன. இந்த பிரசாத பொட்டலங்களின் மதிப்பு ரூ.3 லட்சமாகும்.
அ......ன்: என்ன இறை நேசரே! செய்தியை பதிந்து விட்டு பேசாமல் போனால் எப்படி? உங்கள் கருத்தை சொல்றது!
இறை நேசன்: அடப்போங்கடா.... வந்தேறிப் பார்ப்பன கிறுக்கு மு........!
//அமெரிக்கர் நுழைந்ததால் தீட்டுப்பட்டு விட்டதாக கருதப்பட்டதால் சுமார் 7 ஆயிரம் பிரசாத பொட்டலங்கள் குப்பையில் வீசி அழிக்கப்பட்டன.//
ReplyDeleteஹா ஹா ஹா!
ஹோ ஹோ ஹோ!
ஹே ஹே ஹே!
யப்பா வயிரு வலிக்குதே.
இறைநேசன்,
ReplyDeleteஇந்தச் செய்தியை நானும் படித்தேன் - இன்றைய செய்தித் தாளில். Gulf News, india பக்கத்தில்.
இதை ஒரு பதிவாகப் போடலாமே என்று நினைத்திருந்தேன். யாராவது இதை போட்டிருக்கிறார்களா என்று ஒரு முறை தேடிப் பார்த்து விடலாம் என்ற முயற்சியில் உங்கள் பதிவு வந்தது. (யாராவது ஒருமுறை போட்டுவிட்டால், மீண்டும் அதே தகவலைத் தருவது அவசியமற்றது அல்லது அதில் புதிதாக கூடுதலாக ஏதாவது தகவல் இருந்தால் பதிவு போடலாம். அதில் கூடுதலாக ஒரு தகவல் இருந்தது)
நான் படித்த செய்தியில், கூடுதலான தகவலாக, இதே கோயிலில், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அவர்களை உள்ளே நுழைய விடவில்லை.
ஏன்?
அவர், ஹிந்து அல்லாத ஒருவரை மணந்து கொண்டதால் தான். இந்திராவின் கணவர் ஒரு பார்ஸி. அதனால், கோயிலின் ஆகம விதிகளுக்குட்பட்டு, பிரதமரான இந்திராவையே உள்ளே அனுமதிக்கவில்லை.
இதைப் படித்த பொழுது, வெளிநாட்டு கிருத்துவர் எம்மாத்திரம்!
இருந்தாலும் வருத்தமான விஷயம் என்னவென்றால், பத்திரிக்கை அளவிற்கு விஷயத்தை நீட்டியிருக்க வேண்டாம்.
சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை உயர்த்தி அன்னிய பொருளாதார ஈட்டை அதிகரிப்பதற்கு இந்த மாதிரி செய்திகள் ஒரு பின்னடைவை உண்டாக்குவது ஒன்று. மற்றொன்று, இந்தியாவின் மதிப்பை இது சீர்குலைக்கும்.
தவிர்த்திருக்க வேண்டிய விஷயம். அது சரி, இந்த மாதிரி பிரபலமான கோயில்களில், சுற்றுலா பயணிகளைக் கவனித்துக் கொள்ளவென்று ஒரு அரசு அதிகாரி கூடவா இல்லாது போய்விட்டார்!
இந்து மதத்தின் மோசமான பகுதியைக் காட்டியதை விட, நாட்டின் நன்மதிப்பிற்கு (இப்பொழுது தான் கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்து கொண்டு வருகிறது) விளைந்த களங்கம் தான் அவலமானது.
என்று திருந்துவார்களோ, இம்மக்கள்?
நண்பன்
ஐயோ பாவம் அம்ரிக்கனுக்கே இந்த நெலமயா?
ReplyDelete//அமெரிக்கர் நுழைந்ததால் தீட்டுப்பட்டு விட்டதாக கருதப்பட்டதால் சுமார் 7 ஆயிரம் பிரசாத பொட்டலங்கள் குப்பையில் வீசி அழிக்கப்பட்டன. இந்த பிரசாத பொட்டலங்களின் மதிப்பு ரூ.3 லட்சமாகும். //
ReplyDeleteபசியோடு ஒருவேளை உணவுக்கு அலையும் ஏழைகளுக்குக் கொடுத்திருக்கலாம். பசித்தவனுக்குத் தீட்டு ஏது?
Thanks Lot. Good Post.
ReplyDelete