Tuesday, December 26, 2006

எது பத்திரிக்கை தர்மம்?

"பத்திரிக்கை தர்மம்" அப்படீன்னு அடிக்கடி ஒரு வார்த்தையை கேள்விப்பட்டிருக்கிறோம். யாருக்காவது அதன் அர்த்தம் என்ன என்று தெரியுமா?

தெரியாதவர்களுக்கு தெரியாததை தெரியாமலே இருக்க தெரியாத்தனமாக தமிழ்நாட்டு மக்களுக்கு மிகப்பெரும் தலைவேதனையாக வந்து வாய்த்த தெரியாத்தனமான வந்தேறி பார்ப்பன தமிழ்நாட்டு பத்திரிக்கைகளே அதனை அடிக்கடி தெரியப்படுத்தி விடுகின்றன.

இனி "பத்திரிக்கை தர்மம்" அப்படீன்னா என்ன? என்று தலையைப் பிய்ப்பவர்களுக்கு வந்தேறி பார்ப்பன ஏடு தினமணியின் இன்றைய நடுநிலையான செய்தியிலிருந்து ஒரு உதாரணம்:

3 ஹிந்து வியாபாரிகள் பாகிஸ்தானில் கடத்தல்

இஸ்லாமாபாத், டிச. 24: பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாநிலத்தில் 3 ஹிந்து வியாபாரிகள் உள்பட 7 பேரை, ஆயுதம் ஏந்தியவர்கள் கடத்திச் சென்றனர்.

பலுசிஸ்தான் மாநிலத்தில் உள்ள அப்துல்காதிர் ஷா என்ற கிராமத்தில் ஆயுதங்களுடன் வந்த கும்பல் ஒன்று காரில் வந்த குர்ரம் ஹயாத், ரியாஸ் அகமது, பப்பு கான், அப்துல் ரஷீத் என்ற 4 பேரை, துப்பாக்கி முனையில் மிரட்டி கடத்திச் சென்றது. ஜபாராபாத் மாவட்டத்தில் இச் சம்பவம் நடந்தது.

பலுசிஸ்தானின் நெüதால் என்ற இடத்தில் ரத்தன் குமார், நரேஷ் குமார், சுநீல் குமார் என்ற வியாபாரிகளை ஆயுதம் ஏந்திய கும்பல் வழிமறித்து கடத்திச் சென்றது. இவர்கள் சிந்து மாநிலத்திலிருந்து வந்து கொண்டிருந்தனர்.


யப்பப்பா இதுவல்லவோ "பத்திரிக்கை தர்மம்"! உடம்பு அப்படியே புல்லரிக்கிறது போங்கள்.

No comments:

Post a Comment