Tuesday, December 5, 2006

டிச-6 நம்பிக்கையின் தினம்!

"இருக்க இடம் கொடுத்தால் படுக்க இடம் கேட்பார்கள்" என்று கேட்டிருக்கிறோம். "நிற்க இடம் கொடுத்தால் அந்த இடத்தையே சுருட்டிக் கொள்வார்கள்" என்பதை கேள்விப்பட்டுள்ளீர்களா?

அது தான் வந்தாரை வாழ வைக்கும் மண்ணான நம் தாய் நாட்டில் நடந்தது. சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன் கைபர் போலன் கணவாய் வழியாக முதன் முதலாக இந்தியாவுக்குள் ஒதுங்கிக் கொள்ள இடம் தேடி ஆரிய நாடோடிகள் வந்தனர். அவர்களைத் தொடர்ந்து நாடுபிடிக்கும் வெறியுடன் முகலாயர்கள் இந்தியாவிற்குள் வந்தனர். தொடர்ந்து வியாபாரம் செய்ய என்று கூறிக் கொண்டு பரங்கியர்களும், ஆங்கிலேயர்களும் இந்நாட்டிற்குள் வந்தனர்.

இந்த மூன்று கூட்டத்தில் முதலில் வந்த ஆரிய கூட்டம் நம் மூதாதையர்களின் அறியாமையையும் வெகுளித்தனத்தையும் பயன்படுத்திக் கொண்டு அந்நேரம் இந்திய பகுதிகளை அரசாண்டுக் கொண்டிருந்த அரசர்களுக்கு அடிவருடி பின்னர் அவர்களுக்கு மேலும் மேலும் அரச ஆசையை ஊட்டி முழுமையாக இந்தியாவை தங்கள் கீழ் கொண்டு வந்து ஆடாமல் அசையாமல் உண்டு அனுபவித்துக் கொண்டு இருந்தனர்.

அதற்காக அவாள்கள் வடிவமைத்த திட்டம் தான் "மனு தர்மத்தின்படியான வர்ணபாகுபாடு".

மற்றவர்களை ஒடுக்குவதை தட்டிக்கேட்க சக்தியுடைய, கையில் ஆயுதம் எடுத்து அடிக்கத்தெரிந்த அரசபரம்பரையினரை தங்களுக்கு தொட்டு அடுத்துள்ளவர்கள்(சத்தியரியர்கள்) எனக் கூறி லாவகமாக அமுக்கி வைத்துக் (எலும்புத்துண்டை வீசியெறிந்து)கொண்டு அழகாக நிற்க இடம் கொடுத்த இடத்தை முழுமையாக சுருட்டி எடுத்துக் கொண்டனர்.

தட்டிக் கேட்க யாருமின்றி, அரசனே ஆனாலும் பிராமணனுக்கு வணங்கி வழிபட வேண்டும் என வகுத்து தனிக்காட்டு ராஜாவாக, அரசாள்வது வேறு ஒருவனாக இருந்தாலும் முழு அதிகாரமும் தன் கையில் வைத்துக் கொண்டு(நமது முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம் முதல்வராக இருந்த காலத்தை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். தன் இனம் முன்னர் செய்து வந்ததை அழகாக செயல் ரீதியில் அப்பொழுது நமது செல்வி காட்டித்தந்தார்.) இறுமாப்புடன் வலம் வந்த ஆரிய வந்தேறிகளின் வாழ்வில் இடி விழுந்தது அடுத்து வந்த முகலாயர்களின் வருகை.

என்ன தான் நாடு பிடிக்கும் வெறியில் இந்தியாவுக்குள் வந்திருந்தாலும் இஸ்லாம் கொடுத்த சில பண்புகள் முகலாயர்களின் செயல்களில் வெளிப்பட்டதால் அதுவரை எவ்வித உடல் உழைப்பும் இன்றி ஆண்டு அனுபவித்துக் கொண்டு இருந்த வந்தேறி ஆரியர்களின் வாழ்வுக்கு அவர்களின் வருகை மிகப்பெரும் இடியாக இறங்கியது.

முகலாயர்களின் சமத்துவம், யாருக்கும் தலை வணங்காமை முக்கியமாக பாப்பானுக்கு கும்புடு போடாமை போன்ற குணங்கள் அதுவரை "அவை புரோகிதர்" என்றிருந்த உடல் உழைப்பில்லா சாப்பாட்டுராமன் பதவியை இல்லாமல் ஆக்கியது. இனி பிழைப்புக்கு என்ன வழி என்று அங்கலாய்ந்து கொண்டிருந்த முதல் வந்தேறிகளுக்கு அதிர்ஷ்டம் ஆங்கிலேயனின் வழி வந்தது.

தங்களது பரம்பரை குணமான அதே காட்டியும் கூட்டியும் கொடுக்கும் குணத்தை முகலாயர்களுக்கு எதிராக ஆங்கிலேயர்களுக்கு செய்து முகலாயர்களை விரட்டி விட்டு வியாபாரத்திற்காக வந்தவனை அரியணையில் ஏற்றினர் இந்த முதல் வந்தேறிகள். அதற்கு விசுவாசமாக இம்மண்ணை விட்டு செல்லும் வரை ஆங்கில ஏகாதிபத்தியவாதிகள் முதல் வந்தேறிகளுக்கு எலும்புத் துண்டுகளை வாரி வீசினர்.

அப்பொழுது கிடைத்த அனைத்து சௌகரியங்களையும் நன்றாக பயன்படுத்தி எல்லா துறைகளிலும் தங்கள் இருப்பை பலப்படுத்திக் கொண்டனர் இந்த வந்தேறி பார்ப்பனர்கள். தாங்கள் பிறந்த இந்த இந்திய மண்ணின் மீது ஆழ்ந்த பற்று கொண்ட இந்நாட்டின் பழங்குடிகள் ஆங்கில ஏகாதிபத்தியவாதிகளுக்கு எதிராக ஆர்த்தெழுந்து அவர்களை வந்த வழியே விரட்டினர்.

எனினும் இந்நாட்டில் வந்தேறிய முதல் வந்தேறிக் கூட்டத்தை மட்டும் ஏனோ அவர்கள் கவனிக்கவே இல்லை. இந்நாட்டின் அனைத்து வளர்ச்சிகளுக்கும் முட்டுக்கட்டையாக இருப்பது இந்த முதல் வந்தேறிகள் தான் என்பதை இன்னும் உணராததாலோ என்னமோ?

ஆங்கிலேயன் இருக்கும் வரை அவனுக்கு அடிவருடி அனைத்து சுகங்களையும் அனுபவித்த இந்த வந்தேறிக் கூட்டம் அவனை இந்நாட்டு மைந்தர்கள் தங்களது இரத்தம் சிந்தி அடித்து விரட்டிய பின் காலியான அந்த இருப்பிடத்தை நிரப்ப - தங்களது பழைய அதே மனுதர்மத்தின் படியான வர்ணபாகுபாட்டின் அடிப்படையிலான ஆட்சியை ஏற்படுத்த அனைத்து விதமான செயல்களையும் செய்ய ஆரம்பித்தனர்.

இந்திய சுதந்திரத்திற்குப் பின் இனி ஒரு அந்நியனையும் இந்நாட்டிற்குள் அனுமதியோம் என்ற ஒருமித்த சிந்தையுடன் தெளிவாக இருந்த இந்நாட்டு மைந்தர்கள், தங்களுக்குள்ளேயே ஏற்கெனவே உள்ளே நிற்க இடம் கொடுத்த ஒரு நரிக் கூட்டம் அப்படியே இருப்பதை மறந்து விட்டனர்.

அதன் பிரதிபலன் 1992 டிசம்பர் 6 முதல் ஆரம்பமானது. வந்தேறிக் கூட்டப்பரம்பரையான இரத்த வெறிப்பிடித்த அத்வானி நடத்திய ரத்த யாத்திரையின் பிரதிபலன் ஏற்கெனவே நாடெங்கும் நிகழ்ந்து கொண்டிருக்கும் தருணத்தில் இந்திய வரலாற்றில் மிகப்பெரும் கறை இந்த வந்தேறிக் கூட்டத்தின் தூண்டுதலால் நிகழ்த்தப்பட்டது.
* 400 ஆண்டுகால பழமை வாய்ந்த இந்தியாவின் வரலாற்றுச் சின்னம்.
* வந்தேறிகளால் அடக்கி ஒடுக்கப்பட்ட நிலையிலிருந்து கரையேற சமத்துவமும் சமூகத்தில் மரியாதையையும் பெற்றுத் தந்த இஸ்லாத்திற்கு மதம் மாறிய இந்நாட்டு மைந்தர்களின் வழிபாட்டு ஆலயம்.
* 400 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த இந்நாட்டு மைந்தர்களின் வியர்வையில் உருவான அரிய பொக்கிஷம்.
இந்நாட்டில் முதலில் வந்தேறிய ஆரிய பார்ப்பன வர்க்கத்தின் அதிகார போதைக்கு பலியானது. வரலாற்றில் அழியாத கறையை ஏற்படுத்திய இச்சம்பவத்திற்குப் பிறகு அதுவரை ஒரு தாய் மக்களாக வாழ்ந்து வந்த இந்நாட்டு மைந்தர்களுக்கிடையில் பிளவு வலுவடைந்தது. அதன் பின் நாட்டில் எங்கு நோக்கிலும் குண்டு வெடிப்புகளும், கலவரங்களும், கொலைகளும், கொள்ளைகளும் பரவலாக தினக்காட்சிகளாக அரங்கேறி வருகின்றன.

இன்றைய இந்தியாவில் பாதுகாப்புக்காக செலவளிக்கப்படும் தொகையில் 100ல் ஒரு 10 சதவீதத்தை நாட்டு வளர்ச்சிக்காக மாற்றி வைத்தாலே போதுமானது. அடுத்த 10 வருடங்களில் நாட்டில் வறுமையையும், இல்லாமையையும் இல்லாமலொழிக்கலாம். நாடு முன்னேற இச்செயலை செயல்படுத்த முடியாமல் இருக்க வேண்டிய இன்றைய நிலைக்கு காரணம் என்ன?

ஒரே காரணம். இந்நாட்டில் வந்தேறிய அந்நியன் தான்.

மூன்று வந்தேறிகளில் இருவர் அடித்து விரட்டப்பட்டாயிற்று. மீதியுள்ள இந்த ஒரு வந்தேறி காலம் காலமாக செய்து வரும் நரித்தனத்தால் தான் நாடு முன்னேறுவதற்கு பதிலாக பின்னேறிக் கொண்டிருக்கிறது.

அன்று ஒரு டிசம்பர் 6 ல் இந்த முதல் வந்தேறி ஆரம்பித்து வைத்த காட்டுமிராண்டித்தனம் இன்றும் இந்நாட்டு மக்களிடையே அழியா நெருப்பாக பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. இந்த நெருப்பு அணையாமல் அப்படியே தொடர வைக்க எண்ணையையும் இந்த வந்தேறிக் கூட்டம் விட்டுக் கொண்டே இருக்கிறது.

இடிக்கப்பட்ட தங்கள் வழிபாட்டு தலம் திரும்ப கட்டித் தரப்பட வேண்டும் என விரும்பும் இந்நாட்டு மைந்தர்களின் கனவையும், 400 ஆண்டு பழமையான வரலாற்றுச் சின்னத்தை திரும்ப எழுப்பி வரலாற்றில் படிந்த கறையை அகற்ற விரும்பும் சமூக ஆர்வலர்களுக்கும், தங்கள் சகோதரர்களின் இறையாலயத்தை திரும்பக் கொடுத்து பழைய இணக்கத்தை தங்களிடையே கொண்டு வரத்துடிக்கும் இந்நாட்டு மைந்தர்களின் விருப்பத்தையும் நிறைவேற விடாமல் அப்பிரச்சினையை அப்படியே வைத்து அரசியல் ஆதாயம் அடையத்துடிக்கும் இந்த வந்தேறிக் கூட்டத்தின் நரிக்குணத்திற்கு முடிவெப்போது?

ஒரு கவிதை நினைவிற்கு வருகிறது.

பாபர் மசூதியும்,

நாங்களும் ஒன்றுதான்!

இடிக்க மட்டுமே வருகிறார்கள்!!

கட்டுவதற்குக்குத்தான் யாருமில்லை!!!

நன்றி: முதிர்கன்னி.


இந்நாட்டு மைந்தர்களின் மனதில் வடியும் இரத்தத்தை அழகாக வார்த்தைகளில் தோய்த்தெடுத்திருக்கும் இவ்வரிகள் பொய்க்க வேண்டும். திரும்பவும் தரைமட்டமாக்கப்பட்ட இறையாலயம் திரும்ப எழுப்பப்பட வேண்டும்.

அதன் மூலம் இந்நாட்டு மக்களிடையே பிளவு ஏற்படுத்தி அதில் குளிர்காய நினைக்கும் வந்தேறி பார்ப்பனர்களின் கனவில் மண் விழ வேண்டும். நிச்சயம் மண் விழும். அந்நாளுக்காக காத்திருப்போம்.

4 comments:

  1. இன்ஷா அல்லாஹ்.

    அவனிடமே கையேந்துவோம்.அவன் கொடுப்பதை தடுப்பார் எவருமில்லை.

    ReplyDelete
  2. இன்ஷா அல்லாஹ்.

    நிச்சயமாக பெற்றே தீருவோம்.

    ReplyDelete
  3. How about Bamian statues destroyed by Talibans and many places of worship destroyed by islamic rulers and invaders.Destruction of Babri Masjid is not to be welcomed.
    Most Hindus oppose Hindutva and want friendly relations with Muslims. Although muslims had destroyed places of worships of people of other faith, Hindus, Christians and Buddhists did not act in revenge.Understand this.

    ReplyDelete
  4. நீங்களும் வந்தேரிகள் என்பதை எப்படி மறந்தீர்கள் ? இந்தியாவின் செழிப்பைக்கண்டு கொள்ளையடிக்க வந்த கூட்டம் தானே உங்கள் முன்னோர்கள் கூட்டம் ? ஆரிய வந்தேரிகள் என்று சொல்ல எப்படி வருகிறது வாய் ? முதலில் நீங்கள் வெளியேருங்கள்

    பரதரசு

    ReplyDelete