Saturday, April 21, 2007

இந்தியர்களுக்கு ஓர் புதிய கடவுள்!

நிறுவனப்படுத்தப்படாத(!), எதையும் உள்வாங்கும் நோக்கில் அதுவே தனித்தன்மையாக உடைய இந்து மதத்திற்காக இதோ ஓர் புதிய கடவுள் அவதாரமெடுக்கின்றார். முப்பத்து முக்கோடியில் இதையும் சேர்த்துக் கொள்வோமே. என்ன குறைந்தா போய் விடப்போகிறது.

பெங்களூர், ஏப். 21-கன்னட சினிமாவில் தனி முத்திரை பதித்தவர் நடிகர் ராஜ்குமார்.
மக்களால் மிக அன்போடு "அண்ணவரு" என்று அழைக்கப்பட்ட அவர், கடந்த ஆண்டு
இறந்தார்.இந்நிலையில், பெங்களூர் பார்வதிபுரம் லேஅவுட்டைச் சேர்ந்த வெங்கடேஷ் என்ற
ரசிகர் 40 கோடி ரூபாய் செலவில் ராஜ்குமாருக்கு கோயில் கட்டி வருகிறார். செங்கல்,
ஓடு தொழிற்சாலை நடத்தி வரும் இவர் பல பொருட்களின் விநியோகஸ்தராகவும்
உள்ளார்.பெங்களூர் யஷ்வந்த்புரா ஒன்றியம் கென்னல்லி கிராமம் அழகியமலை, ஏரிக்கரை
சூழ்ந்த பகுதியில் இவரது மனைவி சிவம்மா பெயரில் ஒரு ஏக்கர் நிலம் உள்ளது. அங்கு ஒரு
முனீஸ்வரர் கோயிலும் உள்ளது. ராஜ்குமார் இறந்தது முதல், இந்த கோயில் கருவறையில்
அவரது படத்தையும் வைத்து பூஜை செய்து வருகிறார் வெங்கடேஷ். "20 அடி ராஜகோபுரத்துடன்
ராஜ்குமார் கோயில் அமைக்கப்படுகிறது. கருவறையில் விலை உயர்ந்த நவீனகற்களால்
ராஜ்குமார் சிலை ஆளுயரத்துக்கு வைக்கப்படும். இதை சிவகுமார் ஸ்தபதி வடிவமைத்து
வருகிறார். விரைவில் கும்பாபிஷேகம் நடக்கும்" என்று வெங்கடேஷன் தெரிவித்தார்.



தமிழகத்தில் ஒரு குஷ்பு, ஆந்திராவில் ஒரு ராமராவ் எனில் கர்நாடகத்தில் ஒரு ராஜ்குமார். ஒரு 100 வருடத்திற்குப் பின் ராஜ்குமார் சாமியாக யாருடையாவது உடம்பில் வந்து ஆடுவார். அப்பொழுது நடப்பது, நடக்கப்போவது, நடக்காமல் தடுப்பதற்கான வழிமுறைகள் போன்றவைகளை, "வீரப்பனிடமிருந்து தன்னை தற்காத்துக் கொள்ள வக்கில்லாத இந்த புதிய கடவுள்" மக்களுக்கு கூறி ஆசி வழங்குவார். அதையும் இந்து மதத்தின் தனித்தன்மையாக கூறி இணைய ஜல்லிகள் நன்றாக ஜில்லியடிக்கலாம். போங்கடா போங்க.

5 comments:

  1. //தமிழகத்தில் ஒரு குஷ்பு, ஆந்திராவில் ஒரு ராமராவ் எனில் கர்நாடகத்தில் ஒரு ராஜ்குமார். ஒரு 100 வருடத்திற்குப் பின் ராஜ்குமார் சாமியாக யாருடையாவது உடம்பில் வந்து ஆடுவார்.இந்து மதத்தின் தனித்தன்மையாக கூறி இணைய ஜல்லிகள் நன்றாக ஜில்லியடிக்கலாம். போங்கடா போங்க.
    //

    :)

    ReplyDelete
  2. இஸ்மாயில்April 21, 2007 at 11:44 PM

    //தமிழகத்தில் ஒரு குஷ்பு, ஆந்திராவில் ஒரு ராமராவ் எனில் கர்நாடகத்தில் ஒரு ராஜ்குமார். ஒரு 100 வருடத்திற்குப் பின் ராஜ்குமார் சாமியாக யாருடையாவது உடம்பில் வந்து ஆடுவார்.இந்து மதத்தின் தனித்தன்மையாக கூறி இணைய ஜல்லிகள் நன்றாக ஜில்லியடிக்கலாம். போங்கடா போங்க. //

    ஆனாலும் உங்களுக்கு தில் ஜாஸ்தி தான் நேசரே.

    ReplyDelete
  3. 'சந்தன' வீரப்பன்April 22, 2007 at 1:06 AM

    ராஜுகுமார நானு காட்டுல கடத்தி வச்சிருந்தேன்.பிணைக் கைதியாவும் வச்சிருந்ததோடு பெரிய மனசு பண்ணி மன்னிப்பும் கொடுத்து அனுப்பி வச்சேன்.அந்த நாதாரிப்பய வெளில வந்தப்பின்னாடி தமிழர்களுக்கு எதிராகச் செயல்பட்டான்.

    அப்பவே சுட்டு பொசுக்கி இருக்கனும் அந்த கபோதிப்பயலை. சேத்துக்குளி தான் தடுத்துட்டான். இப்ப பாரு கோவில் கட்டுறாங்களாம்.

    அடேய் சேத்துக்குளி மொதல்ல ஒன்னைய சுட்டிருக்கனும்டா.

    ReplyDelete
  4. இறைநேசன்,

    இந்து மதம் என்று சொல்லிவிடாதீர்கள். பார்ப்பனீயம் என்று சொல்லுங்கள். அதைத்தான் நெகிழ்வு அது இது என்று எங்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

    -தி இந்து

    ReplyDelete
  5. புதிய கடவுள் வந்து விட்டார். எத்தனை காலம் தான் பழைய கடவுளை கும்பிடுவது. அதனால் தான் இந்த அவதார கடவுள்.

    அன்புடன் இறை நேசனுக்கு வாழ்த்துக்கள்.

    asalamone

    ReplyDelete