அதாவது, சகோதரர் ஸாலிஹ் அவர்களின் பரம்பரை மதமான இந்து மதத்தைச் "சாக்கடை" என்றும் அவர் தேர்ந்தெடுத்துக் கொண்ட இஸ்லாமை "ஆசிட்" என்றும் உவமித்திருந்தார்.
அனானி சகோதரர் அறிந்தோ அறியாமலோ இஸ்லாத்தினை "ஆசிட்" உடன் உவமை படுத்தியிருக்கிறார். என்னைப் பொறுத்தவரை அதனை மிகச் சரியான உவமைப் படுத்துதலாக கருதுகிறேன். அவரின் பின்னூட்டம் இஸ்லாமிய காழ்ப்புணர்வினைக் காட்டினாலும் அவரை அறியாமலேயே இஸ்லாத்தினை புகழ்ந்து கூறியிருக்கிறார்.
சகோதரரின் உவமை மிகவும் ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய ஒன்றாகும். தனி மனிதனுக்கும் முழுமனித சமுதாயத்திற்கும் அபாயம் + கேடு எதில் அதிகமாக உள்ளது? "சாக்கடையிலா?" அல்லது "ஆசிட்டிலா?" என்பதை ஆராய்ந்தால்,
ஆசிட்டை விட சாக்கடையில் தான் தனி மனிதனுக்கும் முழுமனித சமுதாயத்திற்கும் அபாயமும் பெருங்கேடும் மிக அதிகமாக உள்ளது. காரணம், ஆசிட்டைத் தவறான வழியில் தனக்கு உபயோகித்துக் கொண்ட ஒருவருக்கு மட்டுமே அபாயமும் கேடும் உள்ளன. ஆனால் சாக்கடை என்பது, அது பெருக்கெடுத்து ஓடுகின்ற பகுதியின் சுற்றுப்புற சூழல் முழுவதையும் மாசுபடுத்துவது மட்டுமல்லாது அந்தப் பகுதியில் வசிக்கும் மனிதர்களையும் மற்ற உயிரினங்களையும் பல்வகை நோய் கொண்டு தாக்குகின்றது. இதனால் மனித சமுதாயம் உடல் நலத்தையும் பொருளாதாரத்தையும் இழப்பதோடு பல நோய்களையும் விலையில்லாமல் வாங்கிக் கட்டிக் கொண்டு, தன்னைத் தானே மாய்த்துக் கொள்கின்றது. எனவே, பிறருக்கு எந்த நன்மையுமில்லாத தீமை மட்டுமே தரக்கூடிய சாக்கடையிலிருந்து தன்னையும் சுற்றுப்புறத்தையும் காப்பாற்றுவது தூய்மையை விரும்புவோரின் தலையாய கடமையாகும்.
இஸ்லாம் தூய்மையை விரும்புகிறது என்றும் சாக்கடையை அது சுத்தம் செய்ய முனைகிறது என்றும் சகோதரர் அனானி அவர்கள் மறைமுகமாக கூறியிருக்கிறார். அவருக்கு என் நன்றிகள். ஏனெனில் இஸ்லாம் தூய்மையை விரும்பும் மார்க்கமே( நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: தூய்மை ஈமானில்(நம்பிக்கையில்) பாதியாகும்).
நிச்சயமாக அது ஜாதி ஏற்றத் தாழ்வு என்னும் சாக்கடை முழுமையாக தூய்மையாகும் வரை அதனை தூய்மைப் படுத்திக் கொண்டே இருக்கும். அவ்வாறு சாக்கடை தூய்மையாவதின் அறிகுறிகள் தான் இன்றைய ஸாலிஹ் குலசைகள்.
மேலும், அனானி சகோதரர் தன் பின்னூட்டத்தில், "மற்ற மதங்களைப்போல் இஸ்லாமிலும் பல ஜாதி பிரிவுகள் உள்ளன" எனக் குறிப்பிட்டிருந்தார்.
ஒரு காலத்தில் இதுபோன்ற ஐயம் கலந்த நினைப்பு, பெரும்பாலோர் மனங்களிலும் இருந்தது. ஆனால் அந்த நினைப்பு தற்போது மலையேறிவிட்டது. மேலும் இந்த ஐயத்திற்கு, ஜாதி ஏற்றத் தாழ்வுகளை கண்டு மனம் பொறுக்காமல் கடவுளே இல்லை என்ற கருத்துடன் ஜாதியை எதிர்த்துப் போராடிய பெரியார் கூட அப்பொழுதே, "இன இழிவு நீங்க இஸ்லாமே நன்மருந்து" என விளக்கம் சொல்லிவிட்டார். அந்தத் தீர்வு, தொடர் அறுபடாமல் இன்றும் பலருடைய வாக்காலும் வாழ்க்கையாலும் உரத்துச் சொல்லப் பட்டுக்கொண்டே இருக்கும் பொழுது, அனானி சகோதரருக்கு மட்டும் காதிலும் கண்ணிலும் விழாதது விந்தையாக உள்ளது!. "நாங்கள் கேள்வி மட்டும் தான் கேட்போம்; அதற்கு யார்-என்ன பதில் சொன்னாலும் அதை நாங்கள் கண்டு கொள்ளவே மாட்டோம்; காது கொடுத்துக் கேட்கவே மாட்டோம்" என்ற சிந்தனையில் கண்ணை மூடிக் கொண்டு காறித் துப்புபவர்களின் காதுகளில் உண்மையை ஏற்றுவது கடினம் தான். என்றாலும் அந்தக் காறித் துப்பல்களை காண்பவர்கள் அதனை நியாயமானது தான் என தவறாக விளங்கிக் கொள்ளக் கூடாது என்பதற்காக ஒரு சிறு விளக்கம் மட்டும் இங்கு வைக்கின்றேன்:
ஒரு சரியான கொள்கை வகுக்கப் பட்டு இருக்கின்றது; அந்தக் கொள்கையை நடைமுறைப் படுத்துபவர், அதைப் பிழையாகவோ அல்லது அதற்கு எதிராகவோ நடைமுறைப் படுத்துகிறார் என்று வைத்துக் கொள்வோம். இப்போது, நடைமுறைப் படுத்தியவரைக் குறை சொல்வோமா? அல்லது கொள்கையைக் குறை சொல்வோமா? ஒரு உதாரணத்திற்கு அண்மையில் நமது பிரதமர் திரு. மன்மோகன் சிங் அவர்கள் செய்த ஒரு வரலாற்றுத் தவறை எடுத்துக் கொள்ளலாம்.
நமக்கு நட்பும் ஆதரவும் அளிக்கக் கூடிய ஒரு நாட்டுக்கு நாமும் நட்போடு நடந்து கொள்ள வேண்டும்; அந்நாட்டுக்கு ஆதரவு நல்க வேண்டும் என்பதே (நமது நாட்டின்) சரியான வெளிநாட்டுக் கொள்கை. ஆனால் நடந்தது என்ன? இந்திய சட்ட திட்டத்தின் படி ஆட்சி செலுத்துவதாக உறுதி மொழி அளித்து ஆட்சியேறிய திரு. மன்மோகன் சிங், நமது சரியான அயல் நாட்டுக் கொள்கைக்கு எதிராக முடிவெடுத்தார். இந்தியா ஐ.நா சபையில் ஈரானுக்கு எதிராக வாக்களித்தது. உலகில் உள்ள அத்தனை நல்ல உள்ளங்களும் இந்திய அரசின் இந்தச் செயலை எதிர்த்தன. ஆட்சேபணை செய்தன. இங்கு யாரும் இந்திய அரசின் அயல் நாட்டுக் கொள்கையை விமர்சிக்கவில்லை. திரு. மன்மோகன் சிங்கின் அரசைத் தான் விமர்சித்தன. காரணம் என்ன? வெளிநாடுகளோடு இந்தியா எப்படி உறவு வைத்துக் கொள்ளவேண்டும் என்று சட்டமும் கொள்கையும் தனியாக உள்ளது. அது விமர்சனத்திற்கு அப்பாற்பட்ட சரியான கொள்கை. பதவிக்கு வரும் கட்சிகள் அதனடிப்படையில்தான் நடந்து கொள்ள வேண்டும். ஆனால் அதற்கு மாற்றமாக டாக்டர் மன்மோகன் சிங் அவர்களின் அரசு செய்ததால் தான் மக்களால் அவருடைய அரசு விமர்சிக்கப்படுகின்றது.
அதுபோலவே இஸ்லாமிய மார்க்கத்திற்கு என்று சட்டமும் அதை நடைமுறைப்படுத்திய தூதரின் சரித்திரமும் தனியாக இருக்கிறது. அதனை பின்பற்றுவதாக கூறுபவர் அக்கொள்கையின் படி தான் நடக்க வேண்டும். அவற்றுக்கு மாற்றமாக யாராவது செயல் பட்டால் தவறு யார் மீது? இஸ்லாத்தின் மீதா? அல்லது அதனைப் பின்பற்றுவதாகக் கூறி உறுதி மொழி கொடுத்துவிட்டு அதற்கு மாற்றமாக செயல் படுவோர் மீதா? தவறாக செயல் படுவோரை விமர்சிக்காமல் இஸ்லாமை விமர்சிப்பது எவ்வகையில் நியாயம்.
சரி இனி ஜாதிகள்-பிரிவுகள் பற்றி இஸ்லாத்தின் கொள்கை என்ன என்பதைச் சிறிது பார்ப்போம்:
மனிதர்களே! உங்கள் இறைவனை அஞ்சி வாழுங்கள். அவன் தான் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான் . அவரிலிருந்தே அவருடைய துணையையும் படைத்தான்;. பின்னர் அவ்விருவரிலிருந்து, அநேக ஆண்களையும் பெண்களையும் (வெளிப்படுத்தி உலகில்) பரவச் செய்தான்;. ஆகவே, அல்லாஹ்வை அஞ்சி வாழுங்கள் ……." (அல்குர்ஆன் 4:1) (இக்கொள்கையின் அடிப்படையில் உலகமே ஒரு குடும்பம் ஆகிறது. இஸ்லாம் எனக்கு இவ்வாறு போதித்ததால் தான் முகமறியாத உங்களைப் போன்றவர்களையும் கூட நான் சகோதரன் என்று அழைக்கிறேன்.)
மனிதர்களே! உங்கள் அனைவரையும் நிச்சயமாக நாம் ஓர் ஆண்-ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம். நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்வதற்காகவே கிளைகளாகவும் கோத்திரங்களாகவும் ஆக்கினோம் (அவற்றால் ஏற்றத் தாழ்வு கற்பித்துக் கொள்வதற்கன்று). ஆகவே, உங்களில் இறைபக்தி மிகுந்தவர் தாம் அல்லாஹ்வின் பார்வையில் மிக்க கண்ணியமானவர் . (அல்குர்ஆன் 49:13)
உங்கள் அனைவரின் மூலக்கூறும் ஒன்றே. ஒரே ஆண் ஒரே பெண்ணிலிருந்து தான் உங்கள் இனம் முழுவதும் தோன்றியுள்ளது என்கிறன மேற்காணும் இறைவசனங்கள். மனித இனம் ஒரே இனமாக இருந்த போதிலும் மனிதர்கள் பல கிளைகளாகவும் கோத்திரங்களாகவும் பிரிந்து கிடப்பது, வாழும் வழி மற்றும் பேசும் மொழி போன்ற இயற்கையைச் சார்ந்த ஒன்றாகும். மனித இனம் பெருகப்பெருக எண்ணற்ற குடும்பங்கள் தோன்றுவதும் பிறகு பல பாகங்களுக்கு அவை குடிபெயரும்போது பல கிளைகளும் பல கோத்திரங்களும் உருவாவதும் தவிர்க்க முடியாத நிகழ்வுகளாகும். மனிதன் பூமியின் பல பகுதிகளில் வசிக்கத் துவங்கிய பின்னர் உடல் அமைப்பு, நிறம், மொழி, நடை-உடை பாவனைகள், வாழ்க்கை முறைகள் ஆகியன ஒன்றுக்கொன்று மாறுபட்டேயாக வேண்டியிருந்தது. ஒரே பகுதியில் வசிப்போர் ஒருவருக்கொருவர் நடை-உடை பாவனை உறவுகளில் நெருங்கியவர்களாகவும் வெகுதொலைவில் வசிப்போர் நெருக்கமற்றவர்களாகவும் இருக்க வேண்டிய நிலை இயல்பானதாகும்.
ஆனால் இந்த இயல்பான வேற்றுமை நம்மிடம் இருப்பதால் இவ்வேற்றுமையின் அடிப்படையில் உயர்ந்தவன்-தாழ்ந்தவன் , ஆண்டான்-அடிமை, மேலோன்-கீழோன் எனும் பாகுபாடுகள் தோற்றுவிக்கப்பட வேண்டும் என்பது அறிவீனர்களின் கருத்தாகும்.
இறைத்தூதர் அவர்கள் நிகழ்த்திய உரைகளில், சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த தனது இறுதி உரையில் கூறினார்கள்: "மானிடரே! நிச்சயமாக உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்துதான் இறைவன் படைத்தான். மனித சமுதாயம் அனைத்தும் ஆதமுடைய சந்ததிகளே! ஆதமோ மண்ணிலிருந்து படைக்கப்பட்டவர். எனவே பிறப்பு, சொத்து ஆகியவற்றால் எவரும் உயர்ந்தவரோ தாழ்ந்தவரோ அல்லர். ஓர் அரபி, அரபி அல்லாத ஒருவனை விட உயர்ந்தவன் அல்லன். அவ்வாறே அரபி அல்லாத ஒருவன், ஓர் அரபியை விட உயர்ந்தவன் அல்லன்.
ஒரு வெள்ளையன், ஒரு கருப்பனை விட உயர்ந்தவன் அல்லன். அதேபோல் ஒரு கருப்பன் ஒரு வெள்ளையனை விட உயர்ந்தவன் அல்லன். மனிதர்களுக்குள்ள உயர்வெல்லாம் அவரவர்களின் இறை அச்சத்தைப் பொறுத்தே அமைந்திருக்கிறது''.
மக்காவை வெற்றி கொண்டபோது நபி(ஸல்) ஆற்றிய சொற்பொழிவில் கூறினார்கள்:
"அறியாமைக் காலத்தின் குறைகளையும் அதன் வீண் பெருமைகளையும் உங்களிடமிருந்து போக்கிவிட்ட இறைவனைத் துதித்து நன்றி செலுத்துகிறேன் . மக்களே! எல்லா மனிதர்களும் இரண்டே பிரிவினராக பிரிகின்றார்கள். ஒருவர் நல்லவர்; இறையச்சம் உள்ளவர் . அவரே இறைவனின் பார்வையில் கண்ணியம் மிக்கவர் . மற்றொருவன் தீயவன்; பேறிழந்தவன். அவன் அல்லாஹ்வின் பார்வையில் இழிவுக்குரியவன். மனிதர் அனைவரும் ஆதமின் மக்களே ஆவர். அல்லாஹ் ஆதம் ( அலை) அவர்களை மண்ணிலிருந்து படைத்தான்." (நூல் : பைஹகீ மற்றும் திர்மிதி).
(நம் தாய் மொழியிலும் மனிதர்கள் இரண்டு பிரிவினராக மட்டுமே பிரித்துப் பார்க்கப் பட்டனர்:
"சாதி இரண்டொழிய வேறில்லை - சாற்றுங்கால்
நீதி வழுவா நெறிமுறையின் மேதினியில்
இட்டார் பெரியோர்; இடாதார் இழிகுலத்தோர்
பட்டாங்கில் உள்ளபடி"
பின்னால் வந்தவர்கள் பட்டாங்கைப் பரலோகம் அனுப்பியது தனிக்கதை)
திருக்குர்ஆனின் பிரகடனமும் திருத்தூதரின் போதனையும் வெறும் ஏட்டுச் சுரைக்காய்த் தத்துவங்களாக இருந்துவிட்டு மாய்ந்து போகவில்லை. அன்றைய அரபுச் சமுதாயத்தில் தலைவிரித்தாடிய குலபேதம், நிறபேதம், வர்க்க பேதம் முதலான பீடைகளை வேரோடு பிடுங்கி வீசியெறிந்து, தீயபண்புகளை விட்டு விலக்கி, மிகவும் தூய்மையான பண்பட்ட ஒரே சமுதாயத்தை இம்மண்ணுலகில் உருவாக்கிக் காட்டியது இஸ்லாம். ஆகவே அனானி சகோதரர் கூறக்கூடிய பிரிவினைகள் என்பவை, கொள்கை அறியாத மனிதர்கள் உருவாக்கியவையேயல்லாது இஸ்லாமிய மார்க்கத்தில் உள்ளவையல்ல என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
The first link shall be:
ReplyDeletehttp://iniyaislam.blogspot.com
Thanks for your detailed article.
//நடைமுறைப் படுத்தியவரைக் குறை சொல்வோமா? அல்லது கொள்கையைக் குறை சொல்வோமா? //
ReplyDeleteசரியான கேள்வி. இதே போல் இந்து மதத்திலும் உயர்ந்த சாதி தாழ்ந்த சாதி என்றோ இவன் இந்த வேலையை செய்ய வேண்டும் என்றோ செருப்பு இல்லமல் நடக்க வேண்டும் என்றோ தோளில் துண்டு போடக்கூடாது என்றோ சொல்லவில்லை. இங்கு மட்டும் நடைமுறை படுத்தியவரை குறை சொல்லாமல் இல்லாத கொள்கையை குறை சொல்வதேன்?
miha miha arumaiyana vilakkathai koduthirhal nanbarea
ReplyDeleteothers
மனிதர்களுக்குள்ள உயர்வெல்லாம் அவரவர்களின் இறை அச்சத்தைப் பொறுத்தே அமைந்திருக்கிறது''
ReplyDeleteபெரியார் நாத்திகர், கடவுள் மறுப்பாளர்.அதாவது இறையச்சம் இல்லாதவர்.அவர் மேலானவரா,
கீழானவரா.
Foreign policy is not fixed.Depending upon the needs and contexts it changes.What is right in one context may be wrong in another context.India may not be happy with Iran acquring capacity to produce nuclear weapons as that would increase the tensions in the region.You may argue that this perception is wrong.But foregin policy is guided more by pragmatic considerations than by anything else.To expect that one country will always support another country in international fora
ReplyDeletein all times under all circumstances is an unrealistic
expectations.
இதே போல் இந்து மதத்திலும் உயர்ந்த சாதி தாழ்ந்த சாதி என்றோ இவன் இந்த வேலையை செய்ய வேண்டும் என்றோ செருப்பு இல்லமல் நடக்க வேண்டும் என்றோ தோளில் துண்டு போடக்கூடாது என்றோ சொல்லவில்லை
ReplyDeleteபகவத்கீதை மூலம் கிருஷ்ணன் தன் வாயால் கூறுகின்றான்.
"மாம் ஹி பார்த்த! வ்யாபாஸ்ரித்ய யே பிஸ்யூ பாபயோயை
ஸ்தரீயோ வைஸ்யஸ்ததாஸீத்ர
ஸ்தேபி யாந்தி பராம்கதி"
இதன் அர்த்தம் "பார்த்தா! பெண்களோ வைசியர்களோ சூத்திரர்களோ நீச குலத்தில் பிறந்தவர்களோ எவரானாலும் என்னைப் பணிவாராயின் அவர்கள் பரகதியை அடைவர்"
பெண்களையும், பிராமணரல்லாதாரையும் கொல்லுதல் பாதகமாகாது.
(அத்.11. சு.65)
வழக்கம் போல சில ரேடிக்கல் இஸ்லாமியர்கள் வித்தியாசமான பெயர்களில் இந்து மத நூல்களை தவறாக interpret செய்து தங்களின் மதவெறியை தனித்து கொண்டு இருப்பது வேடிக்கையாக இருக்கிறது.
ReplyDelete//இதன் அர்த்தம் "பார்த்தா! பெண்களோ வைசியர்களோ சூத்திரர்களோ நீச குலத்தில் பிறந்தவர்களோ எவரானாலும் என்னைப் பணிவாராயின் அவர்கள் பரகதியை அடைவர்"
//
இந்த வாக்கியத்தில் நீசமான குலம் என்ற வரவில்லையே.தவறாக interpret செய்து மக்களை அதிகம் நாட்களுக்கு எமாத்த முடியுமா என்ன?
//பெண்களையும், பிராமணரல்லாதாரையும் கொல்லுதல் பாதகமாகாது.
(அத்.11. சு.65)//
அத்.11இல் இருப்பதே 55 சுலோகங்கள் தான்.
இந்த 420 வேலைகளுக்கு இறைநேசன் போன்றோர் துனைபோவது வேதனை அளிக்கிறது.
வேண்டும் என்றே செய்கின்றார்களா, அல்லது தெரியாமல் தான் இப்படி வித்தியாசமான பெயர்களில் பின்னூட்டங்கள் வருகிறதா என்று தெரியவில்லை.
//சாணக்கியன் said...
ReplyDelete//நடைமுறைப் படுத்தியவரைக் குறை சொல்வோமா? அல்லது கொள்கையைக் குறை சொல்வோமா? //
சரியான கேள்வி. இதே போல் இந்து மதத்திலும் உயர்ந்த சாதி தாழ்ந்த சாதி என்றோ இவன் இந்த வேலையை செய்ய வேண்டும் என்றோ செருப்பு இல்லமல் நடக்க வேண்டும் என்றோ தோளில் துண்டு போடக்கூடாது என்றோ சொல்லவில்லை. இங்கு மட்டும் நடைமுறை படுத்தியவரை குறை சொல்லாமல் இல்லாத கொள்கையை குறை சொல்வதேன்?//
பகவத்கீதையும், மனுவும், வேதங்களும் இதை கட்டிக்காக்கிறதை இன்னுமா நிரூபிக்காணும்? மல்லாக்க படுத்து துப்பாதீங்க நண்பரே, அது அசிங்கம்!
சகோதரர் இறைநேசன்,
ReplyDeleteமுழுவதும் ஒப்புக்கொள்ள முடியாவிட்டாலும் ,நல்ல பதிவு..நன்றி!
//பகவத்கீதையும், மனுவும், வேதங்களும் இதை கட்டிக்காக்கிறதை இன்னுமா நிரூபிக்காணும்// ஏனுங்க, நீங்க 1400 வருசத்து கூத்த அடிச்சிக்கிட்டு இருந்த நாங்க இன்னும் மனுவையும், பகவத் கீதை வருணாஸ்ரமத்தையும் கட்டிக்கிட்டு மாரடிக்கனும் நினைக்கிறது எந்த விதத்தில் ஞாயம் ? அதல்லெம் காலம் கடந்து போய் நாளாச்சு.
ReplyDelete//இஸ்லாம் தூய்மையை விரும்புகிறது என்றும் சாக்கடையை அது சுத்தம் செய்ய முனைகிறது என்றும் சகோதரர் அனானி அவர்கள் மறைமுகமாக கூறியிருக்கிறார்//
இது தானே வேனாங்கிறது. டாய்லட் கழுவிற ஆசிட் அல்ல, முகத்தில அடிக்கிற முட்டை ஆசிட், சாக்கடையை அதில் இருந்து கொண்டே சுத்தப்படுத்திய பெரியாருக்கு தெரியுமா ? இந்த சாக்கடையில் இருந்தவர்கள் யாரும் உலகளாவிய தீவிரவாதத்தில் ஈடுபடவில்லை என்பது.
பதிவுக்குச் சம்பந்தம் இல்லாமல் திசை திருப்பலையே முழு நேர வேலையாகக் கொண்டுள்ளவர் இறை அச்சம் என்றால் என்ன வென்று பொருள் விளங்கிக் கொண்டு விவாதத்திற்கு வரட்டும்.
ReplyDeleteஇங்கே கேள்வி கேட்கும் சாக்கில் பெரியாரையும் இழிவு செய்து குரூர மகிழ்ச்சி அடைகிறார் இவர்.
பலதார மணம் - 1 //பல கணவர்களைக் கொண்டிருக்கும் ஒரு பெண் - ஒரே கால கட்டத்தில் - பல ஆண்களுடன் உடலுறவு கொள்வதால் பாலியல் நோய்களால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகம். மேற்படி பாலியல் நோய்கள் எந்தவித பாவமும் செய்யாத - மற்ற கணவர்களுக்கும் தொற்றிக் கொள்ளக் கூடிய வாய்ப்புகளும் மிகவும் அதிகம். மேற்படி பிரச்சனை பல பெண்களை மணந்து கொள்ளும் ஓர் ஆணுக்கு ஏற்படுவதில்லை.//
ReplyDeleteஇது நல்லாயிருக்கே, பல மனைவிகளை கொண்டிருக்கும் ஆண் - ஒரே காலகட்டத்தில் - பல மனைவியுடன் உடலுறவு கொள்வதால் , ஒரு வேளை ஒரு மனைவிக்கு (ஒரு வேளை ஏற்கனவே விவகரத்து ஆகி மறுமணம் புரிந்தவள் , முன்னால் கனவர் மூலம்) பாலியல் பாதிப்புகள் இருந்தால் மேற்படி பாலியல் நோய்கள் எந்த பாவமும் செய்யாத - மற்ற மனைவிகளுக்கும் தொற்றிக் கொள்ளக் கூடிய வாய்புகளும் மிகவும் அதிகம். மேற்படி பிரச்சனை பல பெண்களை மணந்து கொள்ளும் ஓர் ஆணால் ஏற்படுகிறது. மறுக்கமுடியுமா ? மறுமொழியை நீக்கமாட்டீர்கள் என்று நம்பும் அப்பாவி அனானி மிஸ்டர் புறம்போக்கு
நன்றி சகோ. ஜோ அவர்களே!
ReplyDeleteசகோ. ரவி, சமுத்ரா மற்றும் சனி, ஞாயிறு :-) பகவான்களுக்கு பதில் கூற முடியாமல் இல்லை. எனினும் இப்பதிவுக்கு சம்பந்தமில்லாமையினால் அதனை தவிர்க்கிறேன். கருத்திட்டமைக்கு நன்றி.
//மறுமொழியை நீக்கமாட்டீர்கள் என்று நம்பும் அப்பாவி அனானி மிஸ்டர் புறம்போக்கு//
இந்த ஒரு வரிக்காக மட்டுமே இப்பின்னூட்டத்தை அனுமதிக்கிறேன். மற்றபடி இப்பின்னூட்டத்திற்கும் என்னுடைய பதிவுக்கும் ஏதாவது சம்பந்தம் உண்டா என்பதை ஏதாவது அப்பாவி புறம்போக்கு :-) விளக்கினால் நன்றியுடையவனாவேன்.
அன்புடன்
இறை நேசன்.