Wednesday, March 22, 2006

சாதிப் பிரிவினைக்கு யார் காரணம்?

சகோதரர் மகேஸ் அவர்கள் சகோதரர் குலசை அவர்களின் தேவை மனமாற்றமா? மதமாற்றமா? என்ற பதிவில் சில கருத்துக்களை வைத்திருந்தார். வந்தேறி பிராமணர்களை அப்பாவிகள் போன்றும், இந்நாட்டின் பூர்வீக மக்களை(தலித்) கூத்தடிப்பவர்கள் போன்றும் அவர் பதில் சித்தரித்ததால் அவருக்காக இப்பதிவு.

சகோதரர் மகேஸ் அவர்களே!

நீங்கள் வந்தேறி ஆரிய பார்ப்பன ஆதிக்க கூட்டத்தைச் சேர்ந்தவர் இல்லை எனில் எதற்காக அவாள்களை குறித்து எழுதியவுடன் உங்கள் மனம் பதறுகிறது எனத் தெரிந்து கொள்ளலாமா? நடுநிலை எனில் சாதியை தோற்றுவித்து அதன் விளைச்சலில் குளிர்காயும் அவாள்களுக்காக இரங்கும் உங்கள் மனம், அதே போன்று அவாள்கள் தான் அச்சாதியை தோற்றுவித்தனர் என்பதையும் கூறி சாடாதது ஏன்?

//ஆனால் பார்ப்பணன் தான் சாதி வெறிக்குக் காரணமா? இல்லை.வேறு சில சாதியினர் தான் இப்படிச் செய்கின்றனர். பாப்பாப்பட்டி,கீரிப்பட்டி அவலங்களுக்கு பார்ப்பணன் தான் காரணமா? இல்லை.//

இந்த வாக்கியங்களில் உங்கள் மனநிலை தெளிவாக தெரிகிறது. பார்ப்பனன் தான் சாதி வெறிக்கு காரணமா? பாப்பாப்பட்டி, கீரிப்பட்டிக்கு பார்ப்பனன் காரணமா எனில் நிச்சயமாக ஆம் என்று தான் கூற வேன்டும். வேறு சில சாதியினர் தான் இதனைச் செய்கின்றனர் என்கிறீர்களே, அந்த வேறு சில சாதியினரை நீ இன்ன சாதி, நீ இன்ன சாதி என்று சகோதரர்களாக வாழவேண்டிய இந்நாட்டு மக்களைப் பிரித்து அதில் தன்னை மட்டும் உயர்ந்தவனாக, மற்றவர்களிலிருந்து மேன்மையானவனாக வைத்து அந்த சாதியையே தோற்றுவித்தவன் இந்த வந்தேறி பார்ப்பனன் அல்லாமல் வேறு யார்?

நேற்றைய விதையில் இன்று அவன் சுகிக்கும் விளைச்சல்கள் தான் பாப்பாப்பட்டிகளும் கீரிப்பட்டிகளும். இல்லை நான் தெரியாமல் தான் கேட்கிறேன் - எந்த பார்ப்பனன் தான் அரங்கேற்ற நினைக்கும் அநியாயங்களில் நேரடியாக கலந்து கொண்டான். அன்று ஓர் சம்புகன், சூத்திரன் என்பதால் அவன் செய்யும் தவத்தின் பலனால் அவனுக்கு கிடைத்தற்கரிய மோட்சம் கிடைத்து விடக் கூடாது என்பதற்காக அவனை கொலை செய்ய திட்டமிட்ட பார்ப்பன வெறிக் கூட்டம் அந்த அனியாயத்தை அவர்கள் கை கொண்டா செய்தார்கள்(எதற்காக ராம ராச்சியம் என்று ஓலமிடுகிறார்கள் என்பது புரிகிறதா?). இல்லையே. இன்றும், மாறி வரும் உலகில் - இந்தியாவில் தாங்கள் ஒதுக்கப் பட்டு விடுவோம் என்று அறிந்தவுடன் எப்படியாவது தங்களுடைய திட்டத்துக்கு அன்று ஒத்துழைத்த அதே ராமனின் ஆட்சியை இங்கு கொண்டு வர அதே ராமனின் பெயர் கூறிக் கொண்டு திட்டமிட்டு பாபர் மசூதியை இடித்தார்களே. இதையும் அவாள்களா அவாள் கைக் கொண்டு செய்தார்கள். இல்லையே. காலம் காலமாக நாட்டில் இவர்கள் அரங்கேற்றும் எந்த அட்டூளியங்களில் தான் அவாள்கள் நேரடியாக ஈடு பட்டார்கள். எல்லாம் மற்றவர்களை தூண்டி விட்டு செய்தது தானே. இது தான் அவாள்களின் சாமர்த்தியம். செய்ய வேண்டியதை செய்து விட்டு அமைதியாக ஒன்றும் தெரியாமல் அக்ரகாரத்தில் புகுந்து கொள்வது. பின் அறுவடை தானே கிடைக்கும். அந்த வகை தான் இந்த சாதி பிரிவினையும்.

//இட ஒதுக்கீட்டால் தகுதியான ஏழைப் பிராமணர்கள் பாதிக்கப்பட்டார்கள் //

வெறும் இரண்டு சதவீதம் இருக்கும் இவர்கள் நாட்டின் ஐம்பது சதவீதத்திற்கும் அதிகமான உயர் பதவிகளில் ஒட்டிக் கொண்டிருப்பது போதாதா? உங்களின் கரிசனை ஆகா பிரமாதம். இருக்கும் இரண்டு சதவீத கூட்டம் முழுமையும் தகுதியானது தான். இல்லையென்று யார் சொன்னது. அப்படியே நாட்டை அவாள்களுக்கு எழுதி கொடுத்து விட வேண்டியது தானே! உங்களின் பரிதாபத்தை அப்படியே பாக்கி உள்ள 98 சதவீத மக்களின் மேலும் சற்று திருப்புங்கள்(பாவம் இதில் நீங்களும் உட்படுகிறீர்கள் என்பது கூட உங்களுக்கு புரியாத அளவிற்கு அவாள் பக்தி உங்கள் கண்ணை மறைத்து விட்டதா?)

//இட ஒதுக்கீட்டால் வேலைக்குத் தகுதியில்லாத தலித் மக்கள் கூத்தடிக்கிறார்கள் என்பதும் எனக்குத் தெரியும்//

சிறிது இந்நாட்டு மைந்தர்களும் கூத்தடிக்கட்டுமே மகேஸ் அவர்களே! நேற்று வரை பீ அள்ள மட்டுமே லாயக்குள்ளவன் என்று ஒதுக்கி வைக்கப்பட்டவனுக்கு எடுத்த எடுப்பில் தகுதி எங்கிருந்து வரும். ஆரம்ப தகுதி "பீ அள்ளல்" மட்டுமாகத் தான் இருக்கும். அதற்காக மீண்டும் அவனுக்கு பீ அள்ளல் வேலையையா கொடுக்கச் சொல்கிறீர்கள். சரி தகுதியைப் பற்றி பேசுகிறீர்களே இன்றைய இந்திய உயர் மட்ட பதவிகளை ஆக்ரமித்திருக்கும் வந்தேறி அன்னிய ஆரிய வர்க்கத்தில் எத்தனை பேருக்கு அப்பதவிகளுக்கான தகுதி இருக்கிறது என்பதை உங்களால் கூற முடியுமா? மிகுந்த கரிசனத்துடன் நடுநிலையாக(!) பேசும் நீங்கள் தகுதியில்லாமல் அப்பதவிகளில் அமர்ந்து கூத்தடிக்கும் பிராமணர்களை அதற்குண்டான தகுதி வரும் வரைக்கும் சிறிது காலத்துக்கு பீ அள்ளும் வேலைப் பார்க்க சொல்லுங்களேன். இட ஒதுக்கீடு என்பதே ஒதுக்கப் பட்டிருக்கும், தாங்கள் ஒன்றுக்கும் லாயக்கிலை, பீ அள்ள மட்டுமே லாயக்கு என்று மனதளவில் தன்னைத் தானே தாழ்த்திக் கொண்டிருக்கும் இந்நாட்டின் பூர்வீகக் குடிகளை மேலே கொண்டு வர, அவர்களும் மனிதர்களுக்கிடையில் மதிக்கப்பட்டு அவர்களின் தன்மானம் காக்கப்பட அரசாங்கத்தால் காட்டப்பட்டிருக்கும் ஒரு சிறந்த மாற்று வழி. அதனை மாற்றி விட்டு இந்நாட்டின் பூர்வீகக் குடிகளை எக்காலத்துக்கும் அடக்கி ஒதுக்கியே வைக்கவா நீங்கள் கூறுகிறீர்கள். சிறிது காலத்துக்கு அவர்களும் கூத்தடிக்கட்டும் சகோதரே! அவர்களுக்கு சொந்தமானதைத் தானே அனுபவிக்கிறார்கள். அனுபவிக்கட்டும் சற்று காலத்துக்கு. ஒரு தலை முறை கழியும் போது அவர்களுக்கும் வரும், நீங்கள் எதிர்பார்க்கும் தகுதி. அது வரைக்கும் அவர்களை கூத்தடிக்க விட்டு தான் தீர வேண்டும்.

//சாதியை ஒழிக்க வேண்டும் என்பதில் எனக்கு மாற்றுக்கருத்து இல்லை.//

எனில் எப்படியென்று சற்று கூறி விட்டு, அதனை ஒழித்த பிறகு மேலே கூறியவைகளை நீங்கள் கூறியிருந்தால் நான் ஏற்றுக் கொண்டிருப்பேன். முதலில் அதனை எப்படி ஒழிப்பது என்பதற்கு ஒரு வழியைக் கூறுங்கள். அதன் பிறகு இட ஒதுக்கீடைக் குறித்தும் தலித் மக்களின் கூத்தடிப்புகளைக் குறித்தும் சர்ச்சை செய்வோம். உங்களுக்கு உண்மையில் சாதி ஒழிப்பினைக் குறித்து மாற்றுக் கருத்து இல்லாமல், ஆனால் எப்படி ஒழிப்பது என்று ஒரு வழியும் புலப் படவில்லையெனில் சகோதரர் தங்க மணி அவர்களின் இந்த பதிவினை பார்வையிடுங்கள். உங்களுக்கு ஏதாவது வழி புலப்படலாம்.

அன்புடன்
இறை நேசன்

4 comments:

  1. வெங்காயம்March 22, 2006 at 3:10 AM

    சகோதரர் இறைநேசன் அவர்களே,

    அஸ்ஸலாமு அலைக்கும்...

    மற்ற மனிதர்களை நன்கு மதிக்கத்தெரிந்தவன் நான். இந்துவாக இருந்தாலும் இஸ்லாம், கிறிஸ்துவ என்று எல்லா மதத்தின்பாலும் நன்மதிப்பும் மரியாதையும் வைத்திருப்பவன் நான்.

    இங்கே குண்டுகள் போடுவது இஸ்லாமியர் மட்டும் என்பதுபோல என்று சித்தரிப்பது மிகத்தவறு. சுப.இளவரசன் யார்? தமிழரசன் யார்? சங்கர்ராம குருக்களை போட்டுத்தள்ளிய ஜெயேந்திரன் யார்? இந்துக்கள்தான். கிறிஸ்துவ பாடசாலைகளில் சில நன்மதிப்புள்ள கிறிஸ்துவ ஆசிரியர்களும் போதகர்களும் சிறுவர்களோடும் சிறுமிகளோடும் உறவு கொண்டதை அடிக்கடி பத்திரிக்கைகளில் காண முடிகிறது.

    பின்லேடன் என்பவரையும் தாவுத் இப்ராஹிம் பற்றியும் நாம் சொல்லவே வேண்டியதில்லை. இந்திராகாந்தியை சுட்டுத் தள்ளியவர்கள் சீக்கியர்கள். எனவே அனைத்து மதத்திலும் கெட்டவர்கள் உண்டு என்பது எனது கூற்று.

    மகேசின் சமீபத்திய மறுமொழிகளை நானும் படித்து வருகிறேன். அய்யர் என்றும் அய்யங்கார் என்றும் சமீபகாலமாக ஆதரித்து எழுதிவருவதை நான் அறிவேன். பார்ப்பனீயர்களை ஏன் ஆதரிக்கிறது எதற்கு ஆதரிக்கிறது என்று எனக்கே தெரியவில்லை. இது பார்ப்பனர் என்று நான் நம்பவில்லை.

    வந்தேறிகுடிகளான ஆரியர்களை அன்றைக்கே கைபர்போலன் கணவாய் வழியாக துரத்தி இருந்தால் இவை இன்றைக்கு வாய்கிழியக் கத்திக் கொண்டிருக்காது என்பது மட்டும் உண்மை. நாட்டில் உள்ள எல்லா பார்ப்பனர்களையும் ஒரு லாரியில் ஏற்றினால்கூட லாரி புல்லாக நான்குபேர் குறைவார்கள் என்பது மகேசுக்கு தெரியுமா?

    ReplyDelete
  2. சகோதரர் இறைநேசன் அவர்களே,

  3. இறைநேசன் அவர்களே,
    எனக்கு நண்பர்கள் வட்டத்தில் 15 பிராமணக் குடும்பங்களைத் தெரியும். அவர்களில் யாரும் சாதி வெறியுடன் என்னைத் தள்ளிவைக்கவில்லை. என்னையும் அவர்களின் பிள்ளைகளில் ஒருவனாக நினைத்து சமையல் அறை வரை அனுமதித்துள்ளனர்.
    நீங்கள் கடந்த காலங்களைப் பற்றிப் பேசுகிறீர்கள். நான் நிகழ்காலத்தில் எனக்குத் தெரிந்த வரையில் யாரும் அப்படி இல்லை என்று பேசுகிறேன். பிராமணர் என்று இட ஒதுக்கீட்டில் பாதிக்கப்ப்ட்ட தகுதியான என் நண்பணின் வாழ்க்கையின் பாதை மாறிவிட்டதைப் பற்றிப் பேசுகிறேன். இது பற்றி ஏற்கனவே குலசை அவர்களுக்குப் பின்னூட்டம் இட்டுள்ளேன். அது இன்னும் வெளியிடப்படவில்லை. இன்றைய உலகம் தகுதியுள்ளவர்களுக்கே என்ற நிலைக்கு மேலை நாடுகளின் ஆதிக்கத்தால் மாறிவிட்டது. நாமும் அந்த ஓட்டத்தின் வேகங்களுக்கு ஈடு கெடுக்காவிட்டால் சில வருடங்களில் நாம் தனிமைப்படுத்தப் பட்டு விடுவேம். சாதி மதம் பாராமல் கல்வி, தகுதியுள்ளவருக்கு வேலை வாய்ப்யு கிடக்க்க வேண்டும்.
    இன்னும் எத்தனை நாட்களுக்கு கைபர் போலன் கணவாய்களைப் பற்றிப் பேசுவது. தமிழர்களும் நாடு பிடிக்க கடல் கடந்து சென்றுள்ளனரே. எனக்கு சாதி பிடிக்காது. மூன்றாம் வகுப்புப் படிக்கும் போத முதல் தாழ்த்தப்பட்டதாகக் கூறப்படும(அவர்களை தலித் என்று நான் அங்கீகரிக்கவில்லை) நண்பர்களுடன் பழக்கம் உண்டு. எங்கள் ஊரில் சில பாரம் சுமக்கும் தொழிலாலர்கள் 1995ம் ஆண்டில் ஒரு நாளில் 150 ரூபாய் வரை வருமானம் பெற்றனர். தற்போதய வருமானம் எனக்குத் தெரியாது. பலர் அதை குடித்தே அழித்தார்கள். அப்பணத்தை சிறிது சிறிதாக சேமித்து இருந்தால் ஒரு சிறிய வியாபாரம் ஆரம்பிக்கலாம். அரசாங்கம் சிறுசேமிப்பு பற்றி பல விளம்பரங்கள் செய்தாலும் பயன் இல்லை. அரசாங்கம் வழிகாட்ட இயலும். வழியெங்கும் துணை வர இயலாது. கடந்த காலங்களைப் பற்றிப் பேசாமல் தற்போதைய மாறிவரும் சூழ்நிலையைப் பாருங்கள். உலகில் அனைவரும் சமம். ஏழைப் பிராமணனாய்ப் பிறந்ததால் ஒரு மாணவன் பாதிக்கப் படக்கூடாது, ஏழை தாழ்த்தப்பட்டவராய் பிறந்ததால் ஒரு மாணவன் பாதிக்கப் படக்கூடாது என்பதே என் கருத்து. நான் கொஞ்சம் பிராக்டிக்கல்லாக நினைத்து சிந்தித்துப் பாருங்கள்.

    மேலும் ஒரு விசயம், நீங்கள்/வெங்காயம் பல இடங்களில் கேள்விகளுக்கு react செய்கிறீர்கள். response செய்தால் எதிரில் இருப்பவரிடம் இருந்து பல நேரங்களில் சாதகமான பதில் வரும். இது என் அனுபவத்தில் கண்ட உண்மை.
    --நன்றி..

    ReplyDelete
  4. இறைநேசன் அவர்களே,