திராவிடர் கழகத்தின் தலைவர் டாக்டர் வீரமணி அவர்கள் தமிழினம் அறிந்த தலைவர். தந்தை பெரியார் அவர்களுக்கு பிறகு திராவிடர் கழகத்தின் தலைவராக பணியாற்றி வருபவர். ஆரம்பம் தொட்டு இன்று வரை ஈழத் தமிழர்களின் விடிவுக்காக குரல் கொடுத்து வருபவர். சென்ற 29 டிசம்பர் அன்று சென்னையில் ஈழத்தமிழர் பாதுகாப்பு மாநாட்டை நடத்தி மீண்டும் தமிழ்நாட்டில் ஈழத்தமிழர் ஆதரவு நிலை வருவதற்கு வழிவகுத்தவர். இனவிடுதலையும் பகுத்தறிவும் இரு கண்கள் என வாழும் தலைவர் வீரமணி அவர்களை பேட்டி காண வெப்ஈழம் விரும்பியது. தன்னுடைய வேலைப்பளுக்களின் மத்தியிலும் வெப்ஈழம் மின்னஞ்சல் மூலம் அனுப்பிய கேள்விகளுக்கு தன்னுடைய பதிலை வீரமணி அவர்கள் தந்திருக்கிறார். முகம் சுளிக்கக்கூடிய கேள்விகள் என்று கருதப்பட்டவைகளுக்கும் வீரமணி அவர்கள் தயங்காது பதிலளித்திருக்கிறார். டாக்டர் வீரமணி அவர்களுக்கு வெப்ஈழத்தின் நன்றிகள்.
வெப்ஈழம்: பெரியார் வாழ்ந்த மண்ணில் இன்று மதவாதம் பெருகி வருகின்றது. திராவிடப் பாராம்பரியத்தில் வந்த கட்சிகளான திமுகவும் அதிமுகவும் அதிலிருந்து விலகிச்செல்கின்றன. அதிமுக கட்சியினர் வேல்குத்தி வழிபடுகின்றனர். ஆதன் தலைமை கூட யாகங்கள் நடத்துவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. திமுகவின் முக்கிய தலைவர்கள் பூமிபூஜை நடத்துகின்றார்கள். இவைகளை நீங்கள் எப்படிப் பார்க்கின்றீர்கள். இவைகளை திராவிடக் கொள்கைகளின் தோல்வியாகக் கொள்ளலாமா?
வீரமணி: தந்தை பெரியார் ஒரு முழுப் பகுத்தறிவுவாதி, மனிதநேயர். ஜாதி ஒழிப்பு, மூடநம்பிக்கை ஒழிப்பு, கடவுள் மறுப்பு, பெண்ணடிமை ஒழிப்பு, "அனைவர்க்கும் அனைத்தும்" எனும் தத்துவம், சுயமரியாதை - இவை அனைத்தும் பெரியார் அவர்களுடைய சமூகப் புரட்சிச் சிந்தனைகள் - அவரது மானுடப் பற்றிலிருந்து மலர்ந்தவை. இவைகளை நாம் அடைய வேண்டுமானால், அதற்கு நாம் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை உருவாக்க இடையறாத பிரச்சாரம், போராட்டம் மூலமே முடியும்.
அரசியலில் இருப்பவர்களுக்கு நாம் அழுத்தம் கொடுத்து இக் கொள்கைகளை சாதிக்கலாம். அதற்காக நாம் அரசியலுக்கு, பதவிக்குப் போனால் இவற்றை மெல்ல மெல்ல விட்டு - பதவிக்கு வருவது எப்படி, அதனை தக்க வைப்பது எப்படி அதனைக் காப்பாற்றிக் கொள்வது எப்படி என்பதையே சதா சர்வ காலமும் சிந்தித்து, வாக்கு வங்கிக்கு ஏற்ப, மக்களை நாம் வழி நடத்திச் செல்வதிற்க பதில், நாம் மக்களின் பின்னால் செல்ல வேண்டி வந்துவிடும். இதனாற்தான் 1939இலேயே தனக்கு வந்த முதலமைச்சர் பதவியை உதறித் தள்ளினார் தந்தை பெரியார்.
1949இல் திமுக பிரிந்தது. 1957இல் அரசியலில் நேரடியாக ஈடுபடுவதென தீர்மானித்தது. 1972 இல் அதிமுக பிரிந்தது. (எம்ஜிஆர்). இவை இரண்டு திராவிட முத்திரை பெற்ற திராவிட மண்ணின் கட்சிகள் என்றாலும், பதவிக்கு வருவதற்கு அவர்கள் பகுத்தறிவுக் கொள்கைகளில் இருந்து பெரிதும் தடம் புரண்டுவிட்டனர். அவர்கள் "அரசியல் மோகினியின்" பின்னால் சென்றதன் விளைவு இது.
திராவிடர் கழகம் என்பது தாய்க்கழகம். உண்மையில் அதன் பணியை துவக்கத்திலிருந்த நிலையிலேயே செய்து வெற்றி பெற்றுள்ளது. இந்து பாசிச மதவெறிக் கட்சியான பிஜேபி போன்றவைகள் இராமனை வைத்து வட நாட்டில் பதவிக்கு வந்தது போல் இங்கே அது எடுபடாத நிலை.
ஆகவே திராவிடக் கொள்கைகள் தோற்றுப் போகவில்லை. திராவிடக் கொள்கைகளில் கிளைத்த அரசியல் கட்சிகளால் அப்படி ஒரு புறத்தோற்றம். அவ்வளவுதான்.
வெப்ஈழம்: வரவிருக்கும் தமிழ்நாட்டின் சட்டசபைத் தேர்தல் குறித்து உங்கள் கழகத்தில் நிலைப்பாடு என்ன? உங்களின் கணிப்பின்படி எந்தக் கட்சி வெல்லும் என எதிர்பார்க்கின்றீர்கள்?
வீரமணி: நாங்கள் அரசியல் கட்சி அல்ல; தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை, இன்னும் எங்களுக்கென்ன ஆத்திரம், அவசரம்?
பிறகு அறிவிக்க வேண்டிய நேரத்தில் யாரை ஆதரிக்க வேண்டுமா அதை அறிவிப்போம்!மதவெறிக் கட்சிகளையோ அவர்களுடன் கூட்டுச் சேருபவர்களையோ ஒருபோதும் திராவிடர் கழகம் ஆதரிக்காது.
வெப்ஈழம்: சில காலங்களின் முன்னர் நீங்கள் பகவக்கீதை சம்பந்தமாக ஒரு புத்தகம் வெளியிட்டதாகக் கேள்விப்பட்டோம். அதிலிருந்து சில தகவல்களை எமக்கு சொல்லுவீர்களா?
வீரமணி: கீதை - ஒரு வர்ணாசிரமப் பாதுகாப்பு நூல்.
ஜாதி தர்மத்தை - ஆத்மா புரட்டு மூலம் கர்ம வினைப் பயன் என்று காட்டி ஒடுக்கப்பட்ட மக்களை அடிமையாக்குகிறது. பெண்களை இழிவுபடுத்தி `பாபயோனியிலிருந்து பிறந்தவர்கள்’ என்று கூறுகிறது.
இப்படிப் பலப்பல. கீழே உள்ள வடமொழி சமஸ்கிருத சுலோகங்களைப் படியுங்கள்.
"நான்கு வருணங்கள் என்னால் உண்டாக்கப்பட்டவை. அவரவர்களுக்குரிய கருமங்களை அவரவர் மீறாமல் செய்யவேண்டும். அதனை மாற்றிச் செயல்பட வைக்க அந்த வர்ண தர்ம .உற்பத்தியாளனாகிய என்னால் முடியாது.’’
"சாதுர் வர்ண்யம் மயாஸ்ருஷ்டம் கண கர்ம விபாகச:தஸ்ய கர்த்தாரமபிமாம் வித்யகர்த்தார மவ்யயம்’’(அத்தியாயம் 4, சுலோகம் 13)
இந்த உலகத்தில் மட்டும்தான் இத்தகைய நான்கு வகை வர்ண தர்மம் உண்டு. மறு உலகத்தில் இது இல்லை.
"காங்கஷ்ந்த்: கர்மணாம் ஸித்திம் யஜந்த இஹ தேவதாக்ஷிப்ரம் ஹி மானுஷே லோகே ஸித்திர்ப் பவதி கர்மஜா’’(அத்தியாயம் 4, சுலோகம் 12)
பெண்களும், வைஸ்யர்களும், சூத்திரர்களும் பாவயோனியிலிருந்து பிறந்தவர்கள் (Born out of the womb of sin)
"மாம் ஹி பார்த்த வ்யபாச்ரித்ய யே பி ளுயு பாப யோனயஸ்த்ரியோ வைச்யாஸ் ததா சூத்ராஸ்தேளுபி யாந்தி பராங்கதிம்
(அத். 9 சுலோகம் 32)கீதையின் மறுபக்கம்: பக்கங்கள்: 83,84,85
வெப்ஈழம்: விஞ்ஞானம் மிகவும் வளர்ந்துள்ள இந்த மேற்கத்தேய நாடுகளில்கூட எமது தமிழர்கள் கோயில்களைக் கட்டி அலகு குத்தி காவடி எடுக்கின்றார்கள். நிறைய செலவு செய்து யாகங்கள் செய்கின்றார்கள். மனிதர்களை கடவுள் என்று வழிபடுகிறார்கள். இவர்களுக்கு உங்கள் புத்திமதி என்ன?
வீரமணி: படிப்பறிவு வேறு, பகுத்தறிவு வேறு. மூடநம்பிக்கை, அறியாமையைவிட கொடுமையான நோய் மனிதர்களுக்கு வேறு கிடையாது!காலங் காலமாக கடவுள் வழிபாட்டால் மனிதர்கள் அடைந்த துன்ப, துயரத் தடுப்பு உண்டா?
ஈழத் தமிழர்களை புலம் பெயர வைத்த கதிர்காமக்கந்தனும், யாழ்ப்பாண சிவனும் என்ன செய்தார்கள் - `தமிழன் மாமிசம்’ இங்கே கிடைக்கும் என்று சிங்கள இனவெறி ஓங்காரக் கூச்சல் இட்டபோது?
`சுனாமி’யில் இலங்கை மக்கள் கொல்லப்பட்டார்களே, கருணையே வடிவான, எங்கும் நிறைந்த, எல்லாம் வல்லவனாக் கூறப்படும் கடவுள் தடுத்தாரா?
இல்லாத ஒன்றுக்கு இவ்வளவு இழப்பா? சிறப்பா? ஈழ விடுதலைக்கு அப்பொருளைச் செலவழித்தால் மனித உரிமையாவது பாதுகாக்கப்படுமே!
வெப்ஈழம்: திராவிடர் கழகத்தில் இருந்து அண்ணா பிரிந்த பொழுது அவரைக் கடுமையாக விமர்சனம் செய்த பெரியார் பின்பு பொதுநலநோக்கில் அவரை ஆதரித்தார். நீங்களும் திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகளுடன் நட்புடன் இருந்து வருகின்றீர்கள். பொதுநலனுக்காய் இணைந்து போராடியும் இருக்கின்றீர்கள். இதே போன்று தற்பொழுது உங்களுடன் இருந்து பிரிந்து தனிக் கழகங்களை நடத்தி வரும் கொளத்தூர் மணி போன்றவர்களுடன் ஈழத்தமிழர்களுக்காக நீங்கள் இணைந்து போராட தயாராக இருக்கின்றீர்களா?
வீரமணி: ஈழ தமிழர்களுக்காகப் போராடுவது எங்களது வேலைத் திட்டம்! மற்றவர்களுடன் இணைந்துதான் போராட வேண்டும் என்பது அவசியமில்லை.
ஈழத்தில் கருணா குழுவினருடன் தலைவர் பிரபாகரனை இணைந்து போராடுங்கள் என்று கேட்பீர்களா?
எனவே துரோகத்தோடு சமரசம் செய்ய முடியாது. அதனால் லட்சியப் பணி குன்றாது.
வெப்ஈழம்: ஈழப்போராட்டத்திற்கான ஆதரவு தமிழ்நாட்டில் என்ன நிலையில் தற்பொழுது உள்ளதாக நீங்கள் நினைக்கின்றீர்கள்?
வீரமணி: நீறு பூத்த நெருப்பு - அணையாத நெருப்பு - அதனை டிசம்பர் 29ஆம் (2005) தேதி பெரியார் திடலில் நடந்த ஈழத் தமிழர் பாதுகாப்புக் கூட்டத்தின் மூலம் அறிய முடிந்தது. அதன் தாக்கம்தான், தமிழக முதல்வரை சிங்கள அதிபரைச் சந்திக்காமல் செய்ய வைத்தது!
நன்றி - வெப்ஈழம்
அது சரி பெண்களும்(பிராமண, சத்திரிய பெண்களுமா?), சூத்திரர்களும், வைசியர்களும் பாப யோனியிலிருந்து பிறந்தவர்கள்.(யோனி பாவமா? பின் எதற்கு அதை வணங்குகிறார்கள்?, யோனி பாவமெனில் லிங்கம்(!)?).
அப்ப பிராமணர்களும், சத்திரியர்களும் எங்கிருந்து பிறந்தா(பிறக்கிறா)ர்களாம்? புனிதமான(!) லிங்கத்திலிருந்தா?
விபரமறிந்தவர்கள் சற்று விளக்குங்களேன்.
Subscribe to:
Post Comments (Atom)
இறைநேசன்,
ReplyDeleteஇனையத்தில் கீதை கிடைக்கும்.
நிங்களே வீரமனி போன்றோர் கூறுவது சரியா தவறா என்று தெரிந்துகொள்ள முடியும்.
முதலில், வருனம் பற்றிய வாக்கியம்.
//அத்தியாயம் 4, சுலோகம் 13)//
இது தான் அந்த வாக்கியம்.
According to the three modes of material nature and the work associated with them, the four divisions of human society are created by Me. And although I am the creator of this system, you should know that I am yet the nondoer, being unchangeable.
இங்கே இறைவன் தன்னை nondoer என்று தான் சொல்லிவிட்டார்.
எங்கு "என்னால் கூட இதை மாற்ற முடியாது" என்று சொன்னார்?
வருனமும் பிறப்பால் கிடைப்பது அல்ல.வருனத்தை define செய்வது "According to the three modes of material nature and the work associated with them"
அதாவது செய்யும் வேலைய பொருத்து.
அடுத்தது.
//அத். 9 சுலோகம் 32)//
"O son of Pritha, those who take shelter in Me, though they be of lower birthwomen, vaishyas [merchants] and shudras [workers]can attain the supreme destination."
யாராக இருந்தாலும் அவனுக்கு என்னிடம் அடைக்கலம் உண்டு.
(சூத்திரன்,வைஷ்யம், lower birth).
அவர்களுக்கு supreme destination போய் சேர முடியும்.
இங்கு எப்படி பென் கீழ்தனமான பிறவி என்று சொல்லமுடியும் ?
இந்த வாக்கியத்திற்க்கு வேறு மாதிரி பொருள் கொடுக்கும் திராவிட ராஸ்கள்களை பற்றி நன்றாக தெரிந்து கொண்டு பேசுங்கள்.
இந்த வாக்கியத்திற்க்கு வேறு மாதிரி பொருள் கொடுக்கும் திராவிட ராஸ்கள்களை பற்றி நன்றாக தெரிந்து கொண்டு பேசுங்கள்.
ReplyDeleteஎலேய் தம்பி சமூத்தரா....மருவாதியா பேச கத்துக்கலே. அமெரிக்காவுல குந்திகினு இஸ்ரேலுக்கு ஜல்லியடிக்கிற வேலையோட நிறுத்திக்கோ. வருணம் கிருணம்னு பேசிக்கினு வந்தே, மவனே தமிழ் மக்கள் உன் மூஞ்சில கரிய வர்ணத்தைப் பூசிடப் போறாங்கய்யா.
இரைநேசன்...என் பின்னூட்டத்தை சமூத்திரா அனுமதிக்கவில்லை.அதனால் இங்கு இடுகிறேன். தயவு செய்து இதை தடுக்க வேணாம் (தந்தை பெரியார் வழி வந்த வீரமணியை திராவிட ராஸ்கல்னு சொல்லும் சமுத்திரா உன்னை ஆரிய ராஸ்கல் என்று சொன்னால் எப்படி இருக்கும்னு யோசிய்யா)
இறைநேசன், கீதை முட்டாள்த்தனமானது என்றே வைத்துக் கொள்வோம். குரான் ஆணும் பெண்ணும் சமம் என்பதை ஒப்புக்கொள்கிறதா? ஆணும் பெண்ணும் சேர்ந்து பழகினாலே தப்பு என்று எழுதியவர்
ReplyDeleteவீரமணியை, பெரியார் பற்றி எழுதுவது வேடிக்கை. முதலில் உங்களுடைய மத நூல்களில் இறை நம்பிக்கை இல்லாதவர்களைப் பற்றி என்னவென்னாலாம் எழுதப்பட்டுள்ளது என்பதை பேசலாமா. இந்து மதத்தினை விட பல விஷயங்களில் நீங்கள் முன் வைக்கும் இஸ்லாம் பிற்போக்கானது. இதுதான் உண்மை.
//ஆரிய ராஸ்கல் //
ReplyDeleteரொம்ப நல்லது.
ஆர்ய என்றால் enlightened, noble என்று தான் பொருள்.
சமுத்ராவை noble என்ன சொன்ன புலிபாண்டிக்கு எனது நன்றிகள்.
பி.கு : noble என்றால் அரசகுலம் என்று யாரும் பிதற்ற வேண்டாம்.அதற்க்கு வேறு அர்த்தமும் உள்ளது. உதாரனம் : "ஆர்ய சத்யனி" என்ற புத்தமத வாக்கியம்.
வீரமணி போன்ற கிரிமினல்களை ராஸ்கல் என்று தான் கூறமுடியும்.அப்படி சொல்லகூடாது என்றால் அந்த மனிதரின் interpretation சரியானது என்று நிருபிக்கவேண்டும்.
அவரின் interpretation தான் சரி என்று கூறுவோர் முதலில் நான் மேலே கூறியுள்ள வாக்கியங்கள் தவறு என்று நிருபிக்க முடியுமா ?
அன்புடன்,
சமுத்ரா.
//இந்து மதத்தினை விட பல விஷயங்களில் நீங்கள் முன் வைக்கும் இஸ்லாம் பிற்போக்கானது. இதுதான் உண்மை.//
ReplyDeleteரவி ஸ்ரீனீவாஸ்,
நேரடியாக விசயத்துக்கு வந்தமைக்கு நன்றி. எந்தெந்த வகையில் இஸ்லாம் இந்து மதத்தை விட பிற்போக்கானது என்ற உங்களின் வாதத்தை வைத்தால் நன்றாக இருக்கும்.
paba yonasthriyo = lower birth women
ReplyDeleteஇதை உயர்வானதாக குருடன் கூட சொல்ல மாட்டான்.
யாராவது இஸ்லாமின் பழக்க வழக்கங்களை ஏதாவது குறை சொல்லிவிட்டால்
வானத்துக்கும் பூமிக்கும் இடையே குதிப்பவர்கள் மற்ற மதங்களைப்
பற்றி பேசக் கூடாது.