Monday, February 13, 2006

கிறிஸ்தவப் பழங்குடி மக்களைக் குறி வைக்கும் சங் கூட்டம்

மதச் சார்பற்ற நம் தேசமாம் இந்தியாவில் சிறுபான்மையினரை ஒழித்துக் கட்டிவிட்டு இந்துத்துவாவை நிறுவியே தீருவது என்று கங்கணம் கட்டிக் கொண்டு அலையும் காவிக்கூட்டம், முதலில் தங்கள் குஜராத் 'சோதனை' முயற்சியில் முஸ்லிம்களைக் கூட்டம் கூட்டமாகக் கருவறுத்து அதில் ஓரளவு வெற்றியும் கண்டது.

தற்போது அதே குஜராத்தின் தெற்குப் பகுதியில் உள்ள டாங்ஸ் மாவட்டத்தில் மூன்று நாட்கள் 'ஷபரி கும்ப மேளா' என்கிற பெயரில், அந்த மாவட்டத்தில் இருக்கும் கிறிஸ்தவச் சிறுபான்மையினரைக் கருவறுக்கத் திட்டம் வகுத்துள்ளது. இந்த மாவட்டத்தில் கிறிஸ்தவத்தை ஏற்றுக் கொண்டுள்ளப் பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

1990களில் இங்கு இந்துக்களுக்கும் கிறிஸ்தவப் பழங்குடியினருக்கும் மிகப் பெரும் கலவரம் வெடித்தது. தற்போதும் அதே போன்று சதியை அரங்கேற்ற காவிக்கும்பல்களான VHP, RSS மற்றும் BJP போன்றவை முயல்கின்றன.

கிறிஸ்தவர்களின் வீடுகளை எளிதில் 'அடையாளம்' காண இந்துக்களின் வீடுகளில் எல்லாம் காவிக்கொடியைப் பறக்கவிடுமாறு 'கேட்டுக் கொள்ளப்' பட்டுள்ளார்களாம். டாங்ஸ் மாவட்டத்தில் சுமார் 15 சதவீத மக்கள் கிறிஸ்தவர்களாவர்.

இம்மாவட்டத்தில் கிறிஸ்தவ மக்கள்தொகை அதிகரிப்பது இந்தக் காவிக் கும்பலுக்கு 'கவலை' அளிப்பதால், பழங்குடியினரை 'மீட்டு' எடுக்கப் போகிறார்களாம். மிஷினரிகளை வெற்றி பெற விட மாட்டோம் என்றும் இவர்கள் சூளுரைத்துள்ளார்களாம்.

எந்தவிதமான அசம்பாவிதம் நடக்காமலிருக்க மாநிலக் காவல்துறை 'தகுந்த' நடவடிக்கை எடுத்துள்ளார்களாம்..

பிறப்பினால் உயர்வு தாழ்வு கற்பித்து ஒதுக்கி வைக்கப் பட்டதால் மனம் வெதும்பித்தானே இந்த மக்கள் இந்த சனாதனக் கட்டமைப்பை விட்டி ஓடுகிறார்கள்; முதலில் அதனைச் சரி செய்ய வக்கில்லாமல் என்ன மீட்கப் போகிறார்கள் இந்த வீரர்கள்?

குஜராத் காவல்துறையின் 'தகுந்த' நடவடிக்கையைத் தான் ஒருமுறை பார்த்துவிட்டோமே! ஆடுகளைக் காக்க வேண்டிய வேலி ஓநாய்க்குக் காவலாய் இருந்து வரலாற்றில் மாறா இழிவை பன்னாட்டு அரங்கில் இந்தியாவிற்கு வாங்கித் தந்தனரே இந்தக் காவி(லி)கள்!

8 comments:

  1. Dear Mr. IRAINESAN,
    Your posts are thoughts provoking.

    Always keep a short title
    as Lengthy titles are allergic to blogger.
    - AbuNajla

    ReplyDelete
  2. இறைநேசன்

    பா.ஜ.க. - சங்பரிவாரின் தற்கால திட்டத்தை சரியாக அம்பலப்படுத்தியுள்ளீர்கள். ஆரம்பத்தில் சிறுபான்மை மக்களை கடிக்கும் அவர்களின் நோக்கம் நிறைவேறினால், பெரும்பான்மையாக உள்ள தாழ்த்தப்பட்ட - பழங்குடிமக்களை சூறையாடுவார்கள். இது அவர்களின் மறைமுக அஜண்டா. மொத்தத்தில் ஒரு மேல்ஜாதி - இந்து ஆதிக்கத்தை இந்திய நாட்டில் திணிப்பதே அவர்களின் நோக்கம். இவர்களுக்கு எதிராக விடாப்பிடியாக கருத்துப் போராட்டம் நடத்துவதன் மூலம் இந்த சக்திகளை வேறோடு பிடுங்கி எறியலாம்.

    ReplyDelete
  3. மிகச் சரியாக சொன்னீர்கள் இறைநேசன் அவர்களே. சில வருசங்களுக்கு முன்பு இந்து மதத்திலுள்ள வருணாசிரமக் கொள்கையால் அவதிப்பட்டு தமிழகத்தில் ஒரு கிராமமே இசுலாமிய மதம் மாறினார்கள். அவர்களை அரசாங்கம் எல்லா உதவிகளையும் செய்கிறோம் என்று சொல்லி மீண்டும் இந்து மதம் மாறச்சொன்னார்கள். ஆனால் அவர்கள் எங்களுக்குத் தேவையானது பணமோ பொருளோ அல்ல! சமநீதி. அதை எந்த அரசாங்கத்தாலும் தர முடியாது என்று சொல்லி இசுலாமிய மதத்திலேயே இன்னும் இருக்கிறார்கள்.

    இந்தியத் திருநாட்டில் எந்த மதத்தையும் பின்பற்றும் உரிமை உண்டு என்பதை உணர்ந்து கொண்டு, எஞ்சியிருக்கும் இந்துக்களையும் தலித்துகளையும் தக்க வைத்துக் கொள்வதற்கு அம்மதத்துக்குள்ளிருக்கும் நடைமுறைக்கு ஒவ்வாத விடயங்களை களைய முன்வரவேண்டும். அப்படிச் செய்யாமல் சிறுபான்மையினரை அச்சுருத்துவது தேச நலனுக்கு கேடு உண்டாக்கும் செயல்.

    ReplyDelete
  4. ஆரோக்கியம் kettavanFebruary 14, 2006 at 9:48 AM

    //பிறப்பினால் உயர்வு தாழ்வு கற்பித்து ஒதுக்கி வைக்கப் பட்டதால் மனம் வெதும்பித்தானே இந்த மக்கள் இந்த சனாதனக் கட்டமைப்பை விட்டி ஓடுகிறார்கள்; முதலில் அதனைச் சரி செய்ய வக்கில்லாமல் என்ன மீட்கப் போகிறார்கள் இந்த வீரர்கள்?//

    அட என்னங்க இப்படிக் கேட்டுப்புட்டீங்க? சனாதனத்தை நிறுவி வர்ண பேதத்தை நிலை நாட்டி எல்லாருக்கும் மேலானவர்கள் 'தலையிலிருந்து' பிறந்தவர்கள் அப்டின்னு சொல்றவங்க தான் வீரத் 'துறவி'கள் (அதாவது வீரத்தைத் துறந்தவர்கள்- கயமையை மூலதனமாய்க் கொண்டவர்கள்)

    ReplyDelete
  5. then....eezai inthukkaLaik kuRivaiikum kiRiSthava mission's?

    ReplyDelete
  6. I am not sure what you have potrayed is the correct way of thinking.

    If you ever come to europe and see the amount of destruction done by christians to Jews is mind boggling. I am not here to comment on VHP or BJP. But other side of coin is worse than the side which you are exposed too.

    ReplyDelete
  7. இந்த்துவ அமைப்புகளின் கோட்பாடுகளான கலாச்சார தேசியவாதம் போன்றவையும், சிறுபான்மையினரை அச்சுறுத்தும் அவர்களது செயல்களும் கண்டிக்கப்பட வேண்டியவை
    என்பதே என் கருத்து. கிறிஸ்துவ மிஷினரிகள் மத மாற்ற நடவடிக்கைகளை தவிர்க்க
    வேண்டும்.ஆசை காட்டி, சலுகைகள் தந்து, வசதிகள் செய்து கொடுத்து பிற மதத்தினரை,
    பழங்குடி மக்களை கிறிஸ்துவர்களாக மாற்றும் முயற்சிகளை அவர்கள் பெருமளவில்
    மேற்கொண்டுள்ளனர்.இதை அவர்கள் கைவிடாதவரை மதமாற்றம் குறித்த பூசல்கள்
    இருக்கும். ஒரு மதத்திலிருந்து இன்னொரு மதத்திற்கு மேற்கூறிய வகையில் மாற்ற வைப்பதும், அதற்கு ஊக்கம் தருவதும் சச்ரவிற்கே வழிவகுக்கும்.

    ReplyDelete
  8. மார்ச் 1982ல் கன்னியாகுமரியில் கிறிஸ்தவர்களை வேட்டையாடுவதற்காக RSS கட்டவிழ்த்துவிட்ட கலவரத்தை பற்றிய விசாரணையை நடத்திய ஜஸ்டிஸ் வேணுகோபால் தமது அறிக்கையில்:

    ''இந்துக்களின் உரிமைப் பாதுகாப்பிற்கான ஆயுதப்படையே RSS என அது கூறுகிறது. சிறுபான்மையினருக்கு அவர்களின் நிலை என்னவென்று தெரியவில்லை எனில் அவர்களுக்கு நாங்கள் கற்றுக் கொடுப்போம் என்றும், அவர்களை வைக்க வேண்டிய இடத்தில் வைப்போம் என்றும் அவர்கள் தொடர்ந்து கூறி வந்துள்ளனர்.

    கிறிஸ்தவர்களை துரோகிகளென்றும், அவர்கள் இந்திய பிரஜகைள் அல்ல என்றும் இந்துக்களை விட கிறிஸ்தவர்களின் ஜனத்தொகை பெருகி வருகின்றன என்றும் அவர்கள் (RSS) தொடர்ந்து பிரச்சாரம் செய்து வந்தனர். இந்துக்களிடையே கிறிஸ்தவர்களுக்கெதிரான மாச்சார்யங்கள் வளர இத்தகைய பிரச்சாரங்கள் துணை புரிகின்றன.

    அரசு இயந்திரங்களில் ஊடுறுவி காவல் துறையையும், சிவில் சர்வீசையும் வகுப்பு வாத வன்முறைமயமாக்கிடவும் இவர்கள் முயற்சி செய்துள்ளனர். பெருபான்மை சமூகத்து இளைஞர்களுக்கு ஆயுதப் பயிற்சியும் அளிக்கப்டுள்ளன. சாதாரண சம்பவங்களுக்குக்கூட வகுப்பு சாயம் பூசுவற்கும் பெரு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன'' என்று குறிப்பிட்டுள்ளார்.

    (BJPயும், RSSம் வலதுசாரி சேவையும்/ EMS CPM வெளியீடு, மார்ச் 1998) - ''இந்துத்துவத்தின் அரசியல் பரிணாமம்'' என்ற நூலில் இருந்து.

    ReplyDelete