Tuesday, January 31, 2006

விஷமக் கார்ட்டூன்கள் கிளப்பிய விவகாரம்!

இஸ்லாமியர்கள் தங்கள் உயிரைவிட அதிகமாக நேசிக்கக்கூடிய இறைத்தூதர் நபி (ஸல்) அவர்களை அவமதித்து வெளியிடப்பட்ட கார்ட்டூன் உருவங்கள் டென்மார்க்கின் தினசரி பத்திரிக்கையான Jyllands-Posten இல் கடந்த செப்டம்பர் 30 ல் வெளியானபோது உலகெங்கிலும் உள்ள இஸ்லாமியர்கள் அதனை எதிர்த்துக்குரல் எழுப்பினர்.

தெரியாமல் நடந்துவிட்ட தவறுக்கு தினசரி வழக்கம் போல் "வருத்தம்” தெரிவித்ததினால், ஏதோ அறியாமல் செய்துவிட்டார்கள் போல என்று எண்ணி மறந்துவிட்டார்கள்.

ஆனால் மறுபடியும் ஜனவரி மாத தொடக்கத்தில் நார்வேயின் Magazinet பத்திரிகையில் இவ்விஷமம் மறுபிரசுரமாகியபோது உலகெங்கிலும் இஸ்லாமியர்கள் அதிர்ச்சியுடன் கொதித்தெழுந்துள்ளனர்.

டென்மார்க்கின் பிரதமர் ஆண்டர்ஸ் முதற்கொண்டு கார்ட்டூன்களை வெளியிட்ட பத்திரிகை நிறுவனம் வரை “இது எங்கள் நாட்டு பத்திரிகை சுதந்திரம். அதனால் நாங்கள் செய்தது தவறென்று நினைக்கவில்லை” என்றும் ஒரு போடு போட்டுள்ளது தான் விவகாரத்தை மேலும் உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது.

அதன் விளைவாக இஸ்லாமியர்கள் முதற்கொண்டு அனைத்துலக மக்களிடம் டென்மார்க் மற்றும் நார்வே நாட்டுத் தயாரிப்புக்களைப் புறக்கணிக்கும் எதிர்ப்பு அலைகள் உலகெங்கும் எழுந்துள்ளது. ஏற்றுமதித் தொழிலையே முதன்மை வருவாயாகக் கொண்டுள்ள நார்வே மற்றும் டென்மார்க் நாடுகளுக்கு இது பேரிடியாக இருந்தபோதிலும் தன் "இமேஜை" விட மனமில்லாமல் இருக்கிறது.

57 முஸ்லிம் நாடுகளின் கூட்டமைப்பு நிறுவனமான Organization of the Islamic Conference (OIC) கூட நேற்று உலக முஸ்லிம் நாடுகளை டென்மார்க்கிற்கு எதிரான கண்டனங்களைத் தெரிவிக்கக் கோரியுள்ளது.

ஒரு குறிப்பிட்ட மதத்தினரின் மத உணர்வுகளைக் காயப்படுத்துவதில் தான் பத்திரிகை சுதந்திரம் இருக்கிறது என்றால் டென்மார்க் உற்பத்தி பொருள்களை புறக்கணிக்கவும், பொதுமக்களுக்கு சுதந்திரம் இருக்கிறது அல்லவா?

இஸ்லாமிய அடிப்படையைத் தெளிவாக அறிந்திருந்தும் இறைத்தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்களின் கோட்பாடுகளை பின்பற்றும் 130 கோடி முஸ்லிம்களின் உணர்வுகளை புண்படுத்தும் வண்ணம் கேலிச் சித்திரங்களை பிரசுரம் செய்ததோடு மட்டுமில்லாமல் "இது பத்திரிகையின் கருத்துச்சுதந்திரம்" என்று அகந்தையுடன் பேசுவது மனித சமுதாயத்திற்கு ஏற்பட்ட ஆபத்தான முன்மாதிரியாகத்தான் இருக்கும்.

பிறரது மத உணர்வுகளைச் சீண்டி, அதில் குளிர் காய எண்ணும் பத்திரிகைகள் கருத்துச்சுதந்திரம் என்ற போர்வையில் என்ன வேண்டுமானாலும் எழுதலாம், எதை வேண்டுமானாலும் பிரசுரிக்கலாம் என்ற அகங்கார மனப்பான்மையை மாற்றிக்கொள்ளவேண்டும்.

அதன் தொடர்ச்சியாக, செய்த தவறுக்காக உலக அரங்கில் மன்னிப்பு கோருவதுடன் இனி இதுபோல் நடைபெறாவண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டியது பொறுப்புள்ளதாக தம்மைக்கருதிக்கொள்ளும் எந்த ஒரு பத்திரிகைக்கும் கடமையாகும்.

50 comments:

  1. இறைநேசன்,
    இஸ்லாமிய சகோதரர்கள் அல்லாவின் இறுதி இறை தூதராக பெரிதும் மதிக்கும் முகமது நபியவர்களை பற்றிய கார்டூன் இஸ்லாமியர் மனம் புண்படும் படி இருந்தால் அது வருந்தத்தக்கது .கண்டிக்கத் தக்கது.

    இதே கோணத்தில் எனது மனதுக்குள் இருக்கும் ஒரு சிறு சந்தேகத்தை சகோதரர் என்ற முறையில் உங்களிடம் கேட்கலாம் என நினைக்கிறேன்.

    அல்லாவின் இறைதூதர்களில் ஒருவரும் ,அல்லாவினால் விசேஷமாக ஆசீர்வதிக்கப்பட்டு மரியமினால் பெற்றெடுக்கப்பட்ட ஈசா நபியவர்கள் பற்றி எத்தனையோ திரைப்படங்கள் ,புத்தகங்கள் தாறு மாறாக வெளிவந்திருக்கின்றன .அவை பற்றியெல்லாம் முஸ்லீம் உலகம் கொதித்தெழுவதை விடுங்கள் ,குறைந்த படிசம் முணுமுணுப்பாவது வந்திருக்கிறதா ?

    இறுதி நாளில் அல்லாவின் தூதராக மீண்டும் வருவார் என நீங்கள் நம்பும் ஈஸா நபிக்கு இஸ்லாமிய உலகில் இவ்வளவு தான் முக்கியத்துவமா?

    ReplyDelete
  2. //ஒரு குறிப்பிட்ட மதத்தினரின் மத உணர்வுகளைக் காயப்படுத்துவதில் தான் பத்திரிகை சுதந்திரம் இருக்கிறது என்றால் டென்மார்க் உற்பத்தி பொருள்களை புறக்கணிக்கவும், பொதுமக்களுக்கு சுதந்திரம் இருக்கிறது அல்லவா?//

    இறைநேசன்,

    நிச்சயமாக.
    புறக்கனிக்கட்டும்.

    Burkhaக்ளையும் அங்கே தடை செய்ய போவதாக கேள்வி.

    டென்மார்க்கில் இப்போது முஸ்லிம்களும் kaffirகளும் ஒரு confronting attitude உடன் உள்ளனர்.

    இதன் முடிவு நிச்சயமாக நன்றாக இருக்காது என்று நினைக்கிறேன்.

    அதே சமயம் டென்மார்க் பத்திரிக்கைகளில் வரும் படங்களை கட்டுபடுத்தும் அதிகாரம் அந்த அரசுக்கு இல்லை.

    பி.கு: நபிகளை படமாக வரைவது இஸ்லாமில் தடை செய்யபடவில்லை என்று எனது பாகிஸ்தானிய வக்கீல் நன்பர் என்னிடம் அடித்து சொல்கிறார்.உன்மையா?

    ReplyDelete
  3. indiya today KUSPU moolam ,indiya,thamil pennkalik keeliseiyavillaya, athu kooda SUTHANTHIRAMAM, NABIYUM -Denmarkum
    appideejeethan.
    ithu suthanthira viyathik kalam polum
    johan-paris

    ReplyDelete
  4. முகம்மதைப் பற்றி ஒரு கார்ட்டூன் படமே வரப்போகிறது.
    இதற்கு அனுமதி கொடுத்திருப்பது எகிப்தின் அல்-அசார் பல்கலைக்கழகம்...


    http://www.ldsfilm.com/anime/MuhammadTheLastProphet2.html

    ReplyDelete
  5. //பி.கு: நபிகளை படமாக வரைவது இஸ்லாமில் தடை செய்யபடவில்லை என்று எனது பாகிஸ்தானிய வக்கீல் நன்பர் என்னிடம் அடித்து சொல்கிறார்.உன்மையா?//

    சமுத்ரா,

    முஹம்மது நபி (ஸல்) அவர்களை படமாக வரைவது இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டதெனில் அந்த அனுமதியின் விளக்கங்களை பாகிஸ்தான் வக்கீலிடம் கேட்டு எழுதுங்கள் பரிசீலிப்போம்.

    ReplyDelete
  6. //முஹம்மது நபி (ஸல்) அவர்களை படமாக வரைவது இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டதெனில் அந்த அனுமதியின் விளக்கங்களை பாகிஸ்தான் வக்கீலிடம் கேட்டு எழுதுங்கள் பரிசீலிப்போம்.//

    அபு,

    முகமது நபிகள் இறந்து பின்னர் தான் இப்படிபட்ட ஒரு "வழக்கம்" வந்தாகவும், அவர் வாழ்ந்த காலத்தில் அப்படி எந்தவித தடையும் இல்லை என்றும் அவர் சொல்கிறார்.


    மேலும் அதற்க்கு அதாரமாக அவர் முகமது நபிகளின் இந்த depictionகளை காட்டினார்.


    16ஆம் நூற்றாண்டை சேர்ந்த பல ஓவியங்களில் முகமது நபிகளை வரைந்து உள்ளதாகவும் அவர் கூறினார்.

    ReplyDelete
  7. அபூ ஸாலிஹாJanuary 31, 2006 at 10:40 PM

    //பிறரது மத உணர்வுகளைச் சீண்டி, அதில் குளிர் காய எண்ணும் பத்திரிகைகள் கருத்துச்சுதந்திரம் என்ற போர்வையில் என்ன வேண்டுமானாலும் எழுதலாம், எதை வேண்டுமானாலும் பிரசுரிக்கலாம் என்ற அகங்கார மனப்பான்மையை மாற்றிக்கொள்ளவேண்டும்.//

    சரியாகச் சொன்னீர்கள்! டென்மார்க்கில்தான் இப்படி என்றில்லை. இஸ்லாமியர்களுக்கு எதிராக விஷமம் செய்ய என்று தமிழ்நாட்டில் ஒரு தினசரியே இருக்கிறது.

    ReplyDelete
  8. இஸ்லாமிய சட்டங்கள் எனக்குத் தெரியாது. ஆகையால் வெளியாளாக என்னுடைய கருத்தை வைக்கிறேன்.

    சரியோ தவறோ முறையோ ஒருவரின் மத நம்பிக்கையைக் கிண்டல் செய்வது தவறு. அது யார் செய்தாலும் சரி.

    இந்த விஷயத்தில் அந்தப் பத்திரிகை மன்னிப்புக் கேட்பதே முறையென்று தோன்றுகிறது.

    அரசாங்கத்தை இதில் இழுக்க வேண்டியதில்லை என்று தோன்றுகிறது. (இழுப்பதற்கு வேறு காரணங்கள் உண்டா என்று எனக்குத் தெரியாது.) ஏனென்றால் ஏசுவை அவர்கள் இப்படி வரைந்தாலும அரசாங்கம் சும்மா இருக்க வேண்டியதுதான் என கேள்விப்படுகிறேன்.

    எது எப்படியோ....மீண்டும் ஒரு பிரச்சனை. நடப்பது நடந்தே தீரும்.

    ReplyDelete
  9. Samudra,

    Have you noticed that, in the same web link you have provided in your blog, it is indicated as below?

    "Paintings like these are not acceptable in all Muslim societies"

    When it is not acceptable in all Muslim societies, what is the intention of the Media which publish cartoons of Prophet Muhammad (pbuh)? What they want to acheive by this, besides stirring up hatred feelings among societies? Who they are trying to please? And WHY?

    ReplyDelete
  10. -கலைப்பார்வை- என்று சரஸ்வதியை ஓவியர் ஹுசேன் மோசமாக வரைந்தப்போது அவரைக்கண்டித்தவர்களில் நியாய உணர்வுள்ள இசுலாமியரும் இருந்தனர் என்பதை அறிவேன்.
    ஆனால் அப்போது மத உணர்வுகளை காயப்படுத்தியதாக -நியாயம்- பேசியவர்கள், இப்போது கருத்து சுதந்திரம் என்றெல்லாம் கதைப்பது தான் மிகவும் தவறு. இன்னும் சிக்கலாக்கிப்பார்க்க ஆசைப்படும் ஆதிக்கவாதிகள் அவர்கள்.

    கருத்து சுதந்திரம் என்ற பெயரில் எல்லாவற்றையும் சரிகாணப் பார்த்தால் உலகில் குழப்பம் தான் மிஞ்சும்.

    உலகில் மற்றவர் உணர்வுகளை மதித்து நடக்க அனைவரும் தெரிந்துக்கொண்டாலே பாதிப் பிரச்னைகள் தீர்ந்து விடும்.

    வலை உலகிலும் தன் சுயநலனை / ஈகோவை மகிழ்வித்துக்கொள்ள கன்னாபின்னாவென்று அடுத்த மதத்தை/இனத்தைப்பற்றி எழுதுபவர்களும் இதை உணர்ந்துக்கொள்வது மிகவும் நலம் பயக்கும்.

    ReplyDelete
  11. //இறுதி நாளில் அல்லாவின் தூதராக மீண்டும் வருவார் என நீங்கள் நம்பும் ஈஸா நபிக்கு இஸ்லாமிய உலகில் இவ்வளவு தான் முக்கியத்துவமா? //

    அன்பு சகோதரர் ஜோ அவர்களுக்கு,

    உங்களின் கேள்வி மிக்க நியாயமானதே. கண்டிப்பாக இன்றைய முஸ்லிம் சமுதாயம் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயத்தில் ஒன்று.

    ஆனால் ஒரு விஷயத்தை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். இஸ்லாத்தின் கொள்கை எல்லா இறைத்தூதர்களையும், வேதங்களையும் இறைவன் பக்கமிருந்து வந்தவை என்று ஏற்றுக் கொள்வதாக இருந்தாலும் பின்பற்ற வேண்டியது முகம்மது(ஸல்) அவர்களையும் அவர் மூலம் அருளப்பட்ட திருக் குரானையும் தான். முகம்மது(ஸல்) தூதராக தேர்ந்தெடுக்கப்பட்டது, விக்ரக ஆராதனை கூடாது என்று கூறிய ஈஸா(அலை) அவர்களுக்கே உருவம் வரையப் பட்டு அவரின் விக்ரகத்தையே இறைவனாக(கர்த்தராக) வணங்க ஆரம்பித்து மக்கள் வழி தவறி போனதினால் தான்.

    அதாவது ஈசா(அலை) அவர்களுக்கு உருவம் வரையப் பட்டு இறைத் தூதர் என்ற நிலையிலிருந்து இறைவன் என்ற அந்தஸ்த்திற்கு அவரை பின்பற்றுபவர்கள் என்று கூறப்படுபவர்களாலேயே மாற்றப்பட்டதால் தான் அதற்கு எதிராக உரத்து குரல் கொடுக்க முடியாமல் உள்ளது.

    அந்த நிலை கடைசியாக வந்த தூதருக்கும் வந்து விடக் கூடாதே என்ற கவலையினால் தான் முகம்மது(ஸல்) அவர்களுக்கு உருவம் கொடுக்க முயற்சிக்கப் படும் வேளைகளிலெல்லாம் முஸ்லிம் சமுதாயம் கொதித்தெழுகிறது.

    இதில் மற்றொரு விஷயமும் கவனிக்க வேண்டும்.

    இஸ்லாத்தினை அதன் உண்மையான வடிவத்திலிருந்து மாற்ற பல வழிகளில் முயற்சிக்கின்றனர். அதற்கு மிக இலகுவான வழி இறைத்தூதர்களையே இறைவனாக்குவது. அதற்கு முதலில் அந்த தூதர்களின் உருவம் இருந்தாலே காரியம் நடக்கும். ஒரு உருவத்தை கற்பித்து கொடுத்து விட்டால் மற்றைய காரியங்களை அப்பாவி மக்கள் பார்த்துக் கொள்வார்கள். முதலில் கண்ணியப் படுத்துகி றோம் என்ற பெயரில் ஒவ்வொரு வீட்டிலும் அவருடைய உருவப் படத்தை வைப்பார்கள். பின்னர் வருங்கால சந்ததியினரால் அதுவே இறைவனாக மாற்றப் படும்.

    இதனை மனதில் கொண்டு தான் முகம்மது(ஸல்) அவர்கள் ஒருமுறை, "மர்யமின் மகன் ஈஸா(அலை) அவர்களை கிறிஸ்த்தவர்கள் அளவுக்கதிகமாக புகழ்வது போல் என்னையும் புகழாதீர்கள். என்னை இறைவனின் அடிமை என்றே கூறுங்கள்" என்று வலியுறுத்தினார்கள்.

    இஸ்லாமிய உலகம் முகம்மது(ஸல்) அவர்களுக்கு ஒரு உருவம் கொடுக்காமல் இருப்பதன் காரணம் இது தான். முஸ்லிம்களைப் பொறுத்தவரை முகம்மது(ஸல்) அவர்கள் சாதாரண மனிதர் தான். அவருடைய ஒரே ஒரு மகத்துவம் மக்களை நல்வழிப்படுத்த இறைவனால் தேர்ந்தெடுக்கப் பட்ட ஓர் இறைத்தூதர் என்பது மட்டும் தான். நாளை மற்றவர்களால் அவரும் இறைவனாக்கப் பட்டு விடக் கூடாது என்பதற்காகத் தான் அவருக்கு உருவம் கொடுக்க முயற்சிக்கும் போது முஸ்லிம் சமுதாயம் கொதித்தெளுகிறது.

    எப்பொழுதுமே இறைவனுடைய நேர் மார்க்கத்தை தகர்தெறிய இறை விரோத சக்திகள் பல வழிகளில் முயற்சி செய்து கொண்டே இருக்கின்றன. அதன் ஒரு பகுதி தான் இப்பொழுதும் நடக்கிறது. இஸ்லாம் - இறை மார்க்கத்தில் மக்கள் விரைந்தோடுவதை பொறுக்க முடியாத இறை விரோத சக்திகள், அதனை மக்கள் முன் ஒரு மோசமான கொள்கையாக காட்ட பல வழிகளில் முயற்சி செய்து வருகிறது. அதற்கு நவீன காத்தில் அவர்கள் கையாண்ட ஒரு வழிமுறை தான் "தீவிரவாதம்" என்ற சொல். 19 ஆம் நூற்றாண்டு வரை தீவிரவாதம் என்ற சொல்லுக்கு என்சைக்கிளோபீடியா பிரிட்டானிக்காவில் தந்திருந்த அர்த்தம் வேறு. அது எப்படி 20 ஆம் நூற்றாண்டில் இஸ்லாத்தோடு சம்பந்தப்படுத்தப் பட்டது என்பதை அமெரிக்க-இஸ்ரேல் கூட்டணியின் பின்புலத்தை அறிந்தவர்கள் நன்றாக அறிவார்கள்.

    இஸ்லாம் என்றாலே தீவிரவாதம் தான் என்று சாதாரண மக்களின் மனதில் ஓர் பயத்தினை உருவாக்கி இஸ்லாத்தினை விட்டு அவர்களை வெருண்டோடச் செய்வதற்காக இதோ தற்போது அடிமுடியிலேயே கைவைத்து விட்டார்கள்.

    முகம்மது(ஸல்) அவர்களைக் குறித்து இப்படி ஓர் கார்ட்டூன் வரைந்திருப்பதின் பின்னணி இது தான். இது பத்திரிக்கை சுதந்திரம் என்று கருதி சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடிய விஷயமல்ல. 130 கோடி முஸ்லிம் சமுதாயத்தின் மீதும் அதன் எதிர் கால வளர்ச்சியின் மீதும் தொடுக்கப் பட்ட ஆதிக்கப் போராகத்தான் இதனைக் காண வேண்டியுள்ளது.

    அன்புடன்
    இறைநேசன்.

    ReplyDelete
  12. //Samudra,

    Have you noticed that, in the same web link you have provided in your blog, it is indicated as below?

    "Paintings like these are not acceptable in all Muslim societies"

    When it is not acceptable in all Muslim societies, what is the intention of the Media which publish cartoons of Prophet Muhammad (pbuh)? What they want to acheive by this, besides stirring up hatred feelings among societies? Who they are trying to please? And WHY?//

    Yes.
    I have noticed the same.
    However I would say those are great forms of art because they show Mohammed as a Prophet and not as they have shown in the Jutland Post.

    I have even put up a blog post in appreciation of those arts.


    You see, I standby my stance that drawing a portrait of Mohammed is not banned in Islam.

    However, had you noticed my comments you could have understood that I was never justifying the acts of the Jutland Post.

    They were clearly trying to provoke the Moslems.

    Both sections of the society are on a collision course.

    I'd say this is only part of the clash of civilisations - which has been happening since the Crusades.

    Muslims in Europe are in for hard time.

    If you notice, Moslems are under pressure in UK after 7/7 bombings,Holland and even France - the migrants from North Africa.

    Saudi decision to recall their Dutch Envoy may not help things either.

    ReplyDelete
  13. //ஆதிக்கப் போராகத்தான் இதனைக் காண வேண்டியுள்ளது. //

    ஆதிக்கப் போர் அல்ல.
    சிலுவை போர்

    ReplyDelete
  14. //அரசாங்கத்தை இதில் இழுக்க வேண்டியதில்லை என்று தோன்றுகிறது. (இழுப்பதற்கு வேறு காரணங்கள் உண்டா என்று எனக்குத் தெரியாது.) ஏனென்றால் ஏசுவை அவர்கள் இப்படி வரைந்தாலும அரசாங்கம் சும்மா இருக்க வேண்டியதுதான் என கேள்விப்படுகிறேன்//

    வாங்க ராகவன்,

    இக்கார்ட்டூன்கள் சென்றவருடம் செப்டம்பர் மாதம் டென்மார்க் நாளிதழில் பிரசுரமாகியபோது, இத்தகைய எதிர்ப்புகள் கிளம்பவில்லை. காரணம் 1) இஸ்லாத்தின் மீது தொடுக்கப்படும் வழக்கமான ஊடகத் தாக்குதல் 2) இஸ்லாத்தைப் பற்றிய அறியாமை என்ற வகையில் முஸ்லிம்களும் வெகுவாக பெரிது படுத்தவில்லை.

    சமீபத்தில் இதை நார்வே கிறிஸ்டியன் பத்திரிக்கை மறுபதிவு செய்து, வாசகர்களிடமிருந்து மேலும் கார்ட்டூன்கள் கேட்டு ஊக்கப்படுத்தியதால்தான் பிரச்சினையின் தீவிரம் உணர்ந்து, ஐ.ஒ.வில் உள்ள முஸ்லிம் நாடுகளின் பிரதிநிதிகள் சம்பந்தப்பட்ட அரசாங்கத்திடம் தங்கள் மனக்குமுறலை தெளிவுபடுத்த விரும்பினர். இவர்களை சந்திக்க மறுத்ததோடு, "கருத்துச் சுதந்திரம் என்பது சமரசத்திற்கு அப்பாற்பட்டது" என்பதே என் புத்தாண்டு செய்தி என்று பொறுப்பின்றி சொல்லி எரியும் நெருப்பில் எண்ணை வார்த்துள்ளார்.

    வளைகுடா போர்களால் அமெரிக்க-பிரிட்டானிய பொருட்கள் புறக்கணிக்கப் பட்டு, ஐரோப்பாவுடன் இணக்கமாக இருக்கும் சூழலில் ஒரு பத்திரிக்கை மதநல்லிணக்கத்திற்கு ஊறுவிளைவிப்பதை கண்டிக்காமல், சப்பைக் கட்டிய சம்பந்தப்பட்ட நாட்டின் ஆட்சியாளர்கள் கண்டிக்கப் படவேண்டும்.

    சகோதரர் ஜோ,

    //அல்லாவின் இறைதூதர்களில் ஒருவரும் ,அல்லாவினால் விசேஷமாக ஆசீர்வதிக்கப்பட்டு மரியமினால் பெற்றெடுக்கப்பட்ட ஈசா நபியவர்கள் பற்றி எத்தனையோ திரைப்படங்கள் ,புத்தகங்கள் தாறு மாறாக வெளிவந்திருக்கின்றன .அவை பற்றியெல்லாம் முஸ்லீம் உலகம் கொதித்தெழுவதை விடுங்கள் ,குறைந்த படிசம் முணுமுணுப்பாவது வந்திருக்கிறதா ?

    இறுதி நாளில் அல்லாவின் தூதராக மீண்டும் வருவார் என நீங்கள் நம்பும் ஈஸா நபிக்கு இஸ்லாமிய உலகில் இவ்வளவு தான் முக்கியத்துவமா?//

    இயேசு என்கிற ஈஸா நபியை முஸ்லிம்கள் முஹம்மது நபிக்கு முந்தைய மூத்த தூதுவர் என்று மதிப்பதோடு, இறுதி நாளில் முஹம்மது நபியை பின்பற்றுபவராக/அல்லாஹ்வின் கட்டளையை ஏற்பவராக வருவார் என்றும் நம்புகிறோம்.

    இயேசுவையும் சரி இன்னபிற இறைத்தூதுவர்களையும் சரி, அவர்கள் சொல்லாததை சொல்வதும், செய்வதும் அவர்களை இழிவு படுத்துவதாக முஸ்லிம்கள் நம்புகின்றனர்.

    இயேசுவின் உருவத்தைக் கண்டவர் யாருமிலர். பிற்காலத்தில் இயேசுவின் சீடர் புனித பீட்டர் வரைந்த உத்தேசக் கோடுகளைக் கொண்டே இயேசுவின் உருவம் சித்தரிக்கப்படுகிறது.

    இயேசுவைப்பற்றிய ஊடகத் தாக்குதல்களை முஸ்லிம்கள் கண்டித்தால் சம்பந்தப்பட்ட கிறிஸ்தவர்களே சகித்துக் கொண்டிருக்கும்போது, முஸ்லிம்களுக்கு என்ன வந்தது? என்று ஊடகங்களால் முஸ்லிம்கள் மென்மேலும் சகிப்புத்தன்மையற்றவர்களாக சித்தரிக்கப் படுவார்கள் என்பதே எதார்த்தம். ஆகவேதான் முஹம்மது நபியை தவறாக சித்தரிப்பதை மட்டும் முஸ்லிம்கள் எதிர்க்கிறார்கள். முஹம்மது நபி மட்டுமல்ல மற்ற எந்த நபியையும் இழிவு படுத்தக் கூடாது என்பதுதான் இஸ்லாத்தின் நிலை.

    நண்பர்.சமுத்திரா,

    //பி.கு: நபிகளை படமாக வரைவது இஸ்லாமில் தடை செய்யபடவில்லை என்று எனது பாகிஸ்தானிய வக்கீல் நன்பர் என்னிடம் அடித்து சொல்கிறார்.உன்மையா?//

    முஹம்மது நபியின் காலத்தில் நேரில் பார்த்தவர்களில் எவரும் முஹம்மது நபியை வரைந்ததாகவோ அல்லது சிற்பமாக வடித்ததாகவோ எந்த ஆதாரமும் இல்லை.

    பாகிஸ்தானியர்களை தயவு செய்து ஒட்டுமொத்த முஸ்லிம்களின் பிரதிநிதியாகக் கருதாதீர்கள்.

    இக்கார்ட்டுன் விவகாரம் தொடர்பான என்பதிவையும் பாருங்கள்

    அன்புடன்,

    ReplyDelete
  15. //முஹம்மது நபியின் காலத்தில் நேரில் பார்த்தவர்களில் எவரும் முஹம்மது நபியை வரைந்ததாகவோ அல்லது சிற்பமாக வடித்ததாகவோ எந்த ஆதாரமும் இல்லை//

    அனால் வரைய கூடாது என்ற எந்த தடையும் இல்லையே.


    //பாகிஸ்தானியர்களை தயவு செய்து ஒட்டுமொத்த முஸ்லிம்களின் பிரதிநிதியாகக் கருதாதீர்கள்.
    //

    அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை.

    நான் எதையாவது கேள்விபட்டால் எங்கு இருந்து கேள்விபட்டேன் என்று சொன்னால் உங்களுக்கு புரிந்துகொள்ள வசதியாக இருக்கும்.

    ReplyDelete
  16. //I would say those are great forms of art because they show Mohammed as a Prophet and not as they have shown in the Jutland Post.//

    இத்தகைய great forms of art-களை இஸ்லாம் ஏற்றுக் கொள்வதில்லை என்பதுதான் இங்கு கவனிக்கப்பட வேண்டிய விஷயம். நபியவர்களை அளவுக்கு அதிகமாக புகழ்வதை அவர்களே விரும்பியதில்லை. மேலே இறைநேசன் ஒரு பின்னூட்டத்தைல் குறிப்பிட்டுள்ளது போல "மர்யமின் மகன் ஈஸா(அலை) அவர்களை கிறிஸ்த்தவர்கள் அளவுக்கதிகமாக புகழ்வது போல் என்னையும் புகழாதீர்கள். என்னை இறைவனின் அடிமை என்றே கூறுங்கள்" என நபிகளாரே வலியுறுத்துயுள்ளார்கள். அப்படி இருக்கையில், இஸ்லாம் ஏற்றுக்கொள்ளாத ஒரு கலைவடிவத்தில் நபிகளாரை படமாக வரைந்து, அதில் அவர்களை ஒரு prophet என காட்டுவதற்கு என்ன அவசியம் ஏற்பட்டது?

    //I standby my stance that drawing a portrait of Mohammed is not banned in Islam.//

    ஏற்கனவே அபூமுஹை கேட்டிருப்பது போல 'முஹம்மது நபி (ஸல்) அவர்களை படமாக வரைவது இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டதெனில் அந்த அனுமதியின் விளக்கங்களை பாகிஸ்தான் வக்கீலிடம் கேட்டு எழுதுங்கள் பரிசீலிப்போம்.'

    //முகமது நபிகள் இறந்து பின்னர் தான் இப்படிபட்ட ஒரு "வழக்கம்" வந்தாகவும், அவர் வாழ்ந்த காலத்தில் அப்படி எந்தவித தடையும் இல்லை..// என்றால், முஹம்மது நபிகள் வாழ்ந்த காலத்தில் வரையப்பட்ட படங்களை ஆதாரம் காட்டச்சொல்லுங்கள் உங்கள் பாகிஸ்தான் நண்பரை! அவர்கள் வாழ்ந்த காலம் ஏறத்தாழ கி.பி. 5-ம் நூற்றாண்டு, 16-ம் நூற்றாண்டு அல்ல.

    ReplyDelete
  17. \\You see, I standby my stance that drawing a portrait of Mohammed is not banned in Islam.//

    Samudra,

    If your stance based on your Pakistani friend, I am sure your stance in wrong like your Pakistani friend.

    I have given below only two Islamic examples forbiding pictures:

    Ibn 'Abbas, may Allah be pleased with them, reported:
    Allah's Messenger (may peace be upon him) said: Angels do not enter a house in which there is a dog or a picture. [http://hadith.al-islam.com/bayan/display.asp?Lang=eng&ID=1214]

    'A'ishah, may Allah be pleased with her, reported:
    Umm Habibah and Umm Salamah mentioned before the Messenger of Allah (may peace be upon him) of a church which they had seen in Abyssinia and which had pictures in it. The Messenger of Allah (may peace be upon him) said: When a pious person among them (among the religious groups) died they built a place of worship on his grave, and then decorated it with such pictures. They would be the worst of creatures on the Day of Judgment in the sight of Allah. [http://hadith.al-islam.com/bayan/display.asp?Lang=eng&ID=277]

    Are you clear now?

    ReplyDelete
  18. \\ஈசா நபியவர்கள் பற்றி எத்தனையோ திரைப்படங்கள் ,புத்தகங்கள் தாறு மாறாக வெளிவந்திருக்கின்றன .அவை பற்றியெல்லாம் முஸ்லீம் உலகம் கொதித்தெழுவதை விடுங்கள் ,குறைந்த படிசம் முணுமுணுப்பாவது வந்திருக்கிறதா ?//

    ஜோ,

    ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை இழிவு படுத்தும் எந்தச் செயலையும் எதிர்ப்பதற்கு நாங்கள் தயாராகவே இருக்கிறோம். நீங்கள் 10 பேர் புறப்படுங்கள்; நாங்கள் 20 பேர் இணைந்து கொள்கிறோம். வெறும் வார்த்தைகளல்ல; ஸீரியஸாகச் சொல்கிறேன்.

    ReplyDelete
  19. சகோதரர்கள் இறைநேசன்,நல்லடியார் உங்கள் விளக்கங்களுக்கு நன்றி..அது பற்றிய மேலும் கேள்விகள் இருக்கிறது..அது பின்னர் கேட்க முயற்சிக்கிறேன்.

    //இயேசுவைப்பற்றிய ஊடகத் தாக்குதல்களை முஸ்லிம்கள் கண்டித்தால் சம்பந்தப்பட்ட கிறிஸ்தவர்களே சகித்துக் கொண்டிருக்கும்போது, முஸ்லிம்களுக்கு என்ன வந்தது? //

    இந்த கேள்வியை நான் ஏற்றுக்கொள்ள முடியாது .கிறிஸ்தவர்களின் நம்பிக்கையை ஏற்றுக்கொள்ளாத நீங்கள் ,அது இயேசுவை அவமதிப்பதாக கருதும் நீங்கள் ,எப்படி இயேசுவை கிறிஸ்துவர்களுக்கு தாரை வார்த்துக்கொடுத்தது போல கேள்வி கேட்கிறீர்கள் .கிறிஸ்தவர்கள் என்னவும் நினைத்து விட்டு போகட்டும் .உங்களுக்கு இயேசுவும் மதிப்புக்குரிய இறை தூதர் தானே? சம்மந்தப்பட்ட கிறிஸ்துவர்கள் என்று சொல்லி ,உங்களுக்கு சம்பந்தம் இல்லாதது போல குறிப்பிடுவதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை..மன்னிக்கவும்

    ReplyDelete
  20. //ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை இழிவு படுத்தும் எந்தச் செயலையும் எதிர்ப்பதற்கு நாங்கள் தயாராகவே இருக்கிறோம். நீங்கள் 10 பேர் புறப்படுங்கள்; நாங்கள் 20 பேர் இணைந்து கொள்கிறோம். வெறும் வார்த்தைகளல்ல; ஸீரியஸாகச் சொல்கிறேன்.//

    சகோதரர் வஹ்ஹாபி,
    ஒரு வேளை மூஸா (மோயீசன்) நபியோ ,இப்ராஹிம் (ஆப்ரகாம்) நபியோ இழிவுபடுத்தப்பட்டால் நீங்கள் என்ன சொல்லுவீர்கள்? யூதர்கள் 10 பேர் ,கிறிஸ்தவர்கள் 10 பேர் வாருங்கள் ,நாங்கள் 20 பேர் வருகிறோம் தட்டிக் கேட்க என்றா கேட்பீர்கள்? புரியவில்லை ஐயா.

    ReplyDelete
  21. //கிறிஸ்தவர்களின் நம்பிக்கையை ஏற்றுக்கொள்ளாத நீங்கள் ,அது இயேசுவை அவமதிப்பதாக கருதும் நீங்கள் ,எப்படி இயேசுவை கிறிஸ்துவர்களுக்கு தாரை வார்த்துக்கொடுத்தது போல கேள்வி கேட்கிறீர்கள் .கிறிஸ்தவர்கள் என்னவும் நினைத்து விட்டுபோகட்டும் .உங்களுக்கு இயேசுவும் மதிப்புக்குரிய இறை தூதர் தானே? சம்மந்தப்பட்ட கிறிஸ்துவர்கள் என்று சொல்லி ,உங்களுக்கு சம்பந்தம் இல்லாதது போல குறிப்பிடுவதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை..மன்னிக்கவும்//

    ஜோ,

    "சம்பந்தப்பட்ட கிறிஸ்தவர்கள்" என்று சொன்னது "இயேசுவை கடவுளின் மகனாக நம்பும்" என்ற அர்த்தத்தில் கொள்ளவும். இயேசுவை பிறர் இழிவு படுத்தும் போது முஸ்லிம்கள் 'தட்டிக்' கேட்டால் அல்லது எதிர்ப்பு தெரிவித்தால் ஊடகங்களால் என்ன சொல்லப் படுமோ அதைத்தான் சொன்னேன்.

    இயேசு எங்களுக்கு முஹம்மது நபிக்கு முந்தைய இறைத்தூதுவர் என்பதிலும், இறுதிநாளில் ஓரிரையின்பால் மக்களை அழைப்பார் என்பதிலும் சற்றும் சந்தேகமில்லை.

    அன்புடன்,

    ReplyDelete
  22. //அனால் வரைய கூடாது என்ற எந்த தடையும் இல்லையே.//

    இருக்கே! பார்க்க மேலே வஹ்ஹாபி (அப்துல் வஹாப்?) சொல்லி இருக்கும் நபிமொழிகள்.

    ReplyDelete
  23. //ஒரு வேளை மூஸா (மோயீசன்) நபியோ ,இப்ராஹிம் (ஆப்ரகாம்) நபியோ இழிவுபடுத்தப்பட்டால் நீங்கள் என்ன சொல்லுவீர்கள்?//

    ஜோ,

    என்னைப் பொருத்தவரை இறைவனால் அனுப்பப் பட்ட எந்த தூதுவரும் இழிவுபடுத்தக் கூடாது என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

    3:84 'அல்லாஹ்வையும், எங்கள் மீது அருளப்பட்ட (வேதத்)தையும், இன்னும் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப், அவர்களின் சந்ததியர் ஆகியோர் மீது அருள் செய்யப்பட்டவற்றையும், இன்னும் மூஸா, ஈஸா இன்னும் மற்ற நபிமார்களுக்கு அவர்களுடைய இறைவனிடமிருந்து அருளப்பட்டவற்றையும் நாங்கள் விசுவாசங் கொள்கிறோம். அவர்களில் எவரொருவரையும் பிரித்து வேற்றுமை பாராட்டமாட்டோம்¢ நாங்கள் அவனுக்கே (முற்றிலும் சரணடையும்) முஸ்லிம்கள் ஆவோம்" என்று (நபியே!) நீர் கூறுவீராக.

    அன்புடன்,

    ReplyDelete
  24. //இருக்கே! பார்க்க மேலே வஹ்ஹாபி (அப்துல் வஹாப்?) சொல்லி இருக்கும் நபிமொழிகள். //

    திருகூரானில் அவை இருப்பதாக தெரியவில்லையே நல்லடியார்.

    இரண்டும் Hadithகளில் இருந்து எடுக்கபட்ட Versesஆக இருக்கிறது.

    அவை நபிகள் என்ற ஒரு சாதாரன மனிதர் கூறியது தானே ஓழிய இறைவன் நபிகள் மூலமாக கூறியது அல்லவே(கூரான் போல)

    ReplyDelete
  25. //கிறிஸ்தவர்களின் நம்பிக்கையை ஏற்றுக்கொள்ளாத நீங்கள் ,அது இயேசுவை அவமதிப்பதாக கருதும் நீங்கள் ,எப்படி இயேசுவை கிறிஸ்துவர்களுக்கு தாரை வார்த்துக்கொடுத்தது போல கேள்வி கேட்கிறீர்கள் .கிறிஸ்தவர்கள் என்னவும் நினைத்து விட்டுபோகட்டும் .உங்களுக்கு இயேசுவும் மதிப்புக்குரிய இறை தூதர் தானே? சம்மந்தப்பட்ட கிறிஸ்துவர்கள் என்று சொல்லி ,உங்களுக்கு சம்பந்தம் இல்லாதது போல குறிப்பிடுவதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை..மன்னிக்கவும்//

    சகோ ஜோ,

    இயேசுவின் உருவப்படத்தை மட்டுமல்ல, இன்றைய கிருஸ்துவ மதத்தின் கொள்கைகளில் பெரும்பாலானவற்றை முஸ்லிம்கள் ஏற்றுக்கொள்வதில்லை. மூஸா நபி, இப்ராஹீம் நபி, ஈசா (இயேசு) நபி (அன்னார்களின் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக!) ஆகியோர் கொணர்ந்த சத்திய சன்மார்க்கம் திசைமாறி போனதால் அதை மீட்டெடுக்க வந்த மார்க்கமே இஸ்லாம் என்பது முஸ்லிம்களின் நம்பிக்கை! இஸ்லாத்தின் அடிப்படைகளுள் ஒன்று உருவச்சிலைகளையும் உருவப்படங்களையும் வணங்குவதை எதிர்ப்பதுதான். அப்படியிருக்க, இயேசுவை கிருஸ்துவர்களுக்கே தாரை வார்த்து கொடுத்த்து என்ற கேள்விக்கே இங்கு இடமில்லை. இன்றைய கிருஸ்துவத்தின் பல கொள்கைகளை இஸ்லாம் ஒப்புக்கொள்ளவில்லை எனும்போது, இயேசுவின் உருவப்படத்தையும் இஸ்லாம் ஏற்றுக்கொள்வதில்லை என்றே பொருள்படும். ஆக, இயேசுவை உருவப்படமாக வரைவதை, அதை வணங்குவதை இஸ்லாம் ஆரம்பத்திலிருந்தே எதிர்த்து வந்திருக்கிறது.

    அதிருக்கட்டும், இயேசுவை இறைமகனாக ஆக்கியதே ஒரு conspiracy என டான் பிரவுனின் 'டாவின்சி கோடு' நாவலில் எழுதியிருக்கிறாரே, அது பற்றி உங்கள் கருத்து என்ன?

    ReplyDelete
  26. //"சம்பந்தப்பட்ட கிறிஸ்தவர்கள்" என்று சொன்னது "இயேசுவை கடவுளின் மகனாக நம்பும்" என்ற அர்த்தத்தில் கொள்ளவும். இயேசுவை பிறர் இழிவு படுத்தும் போது முஸ்லிம்கள் 'தட்டிக்' கேட்டால் அல்லது எதிர்ப்பு தெரிவித்தால் ஊடகங்களால் என்ன சொல்லப் படுமோ அதைத்தான் சொன்னேன்.//

    நல்லடியார்,
    உங்கள் பார்வை முற்றிலும் தவறு என்பது என் தாழ்மையான கருத்து.இயேசுவை இழிவு படுத்தும் போது முஸ்லிம்கள் தட்டிக்கேட்டால் இஸ்லாமை பற்றி அதிகம் அறியாதோர் அதை இன்னும் நெருக்கமாக புரிந்து கொள்ள வழி வகுக்கும் .நல்லெண்ணம் அதிகரிக்கும் என்பதே என் கருத்து.இஸ்லாம் என்றாலே அல்லாவும் ,முகமது நபியும் மட்டும் தான் என்றே பெரும்பான்மையான பிற மதத்தவர்கள் புரிந்து வைத்திருக்கிறார்கள் என்பதை தாங்கள் சற்று கண்கொண்டு பாருங்கள் .இஸ்லாமியர்கள் தங்கள் மதத்தை பற்றி அதன் உண்மையான கோட்பாடுகளைப் பற்றி மற்றவர்கள் அதிகமாக அறிந்து கொள்ள வழி வகுக்காததே இந்த பிரச்சனைகளுக்கு ஒரு காரணமும் கூட.

    //"இயேசுவை கடவுளின் மகனாக நம்பும்" //
    ஒரு உதாரணத்துக்கு இப்படி சொல்லுகிறேன் .வரும் காலத்தில் இஸ்லாமால் அங்கீகரிக்கப்படாத ஒரு கூட்டம் முகமது நபியவர்களை கடவுளாக ஏற்றுக்கொண்டு தனி மதமாக செயல் படுவதாக வைத்துக்கொள்வோம்..அப்போது முகமது நபியவர்கள் இழிவு படுத்தப்பட்டால் நீங்கள் "முகமது நபியவர்களை கடவுளாக நம்பும் இவர்களே கண்டுகொள்ளவில்லை..எங்களுக்கென்ன வந்தது" என்று விட்டு விடுவீர்களா?

    பின் குறிப்பு: சகோதரர் இறைநேசன் ,என்னுடைய கேள்விகளும் விவாதமும் இந்த தலைப்புக்கு சம்பந்தம் இல்லாதது என நீங்கள் கருதினால் ,தயவு செய்து தெரிவிக்கவும்.நான் இதோடு நிறுத்தி விடுகிறேன்.

    ReplyDelete
  27. //இரண்டும் Hadithகளில் இருந்து எடுக்கபட்ட Versesஆக இருக்கிறது.

    அவை நபிகள் என்ற ஒரு சாதாரன மனிதர் கூறியது தானே ஓழிய இறைவன் நபிகள் மூலமாக கூறியது அல்லவே(கூரான் போல)//

    முஹம்மது நபியவர்கள் இறைவன் அனுப்பிய திருத்தூதர்தான் எனும்போது, அந்த 'சாதாரண மனிதரின்' வார்த்தைகளுக்கும் மதிப்பளிக்க வேண்டியது முஸ்லிம்களுக்கு கடமையாகிறது. அதனாலேயே ஹதீஸ்கள் சொல்லுவதும் இஸ்லாமிய சட்டங்களாகின்றது.

    ReplyDelete
  28. //இயேசுவை இழிவு படுத்தும் போது முஸ்லிம்கள் தட்டிக்கேட்டால் இஸ்லாமை பற்றி அதிகம் அறியாதோர் அதை இன்னும் நெருக்கமாக புரிந்து கொள்ள வழி வகுக்கும் .நல்லெண்ணம் அதிகரிக்கும் என்பதே என் கருத்து.இஸ்லாம் என்றாலே அல்லாவும் ,முகமது நபியும் மட்டும் தான் என்றே பெரும்பான்மையான பிற மதத்தவர்கள் புரிந்து வைத்திருக்கிறார்கள் என்பதை தாங்கள் சற்று கண்கொண்டு பாருங்கள் .இஸ்லாமியர்கள் தங்கள் மதத்தை பற்றி அதன் உண்மையான கோட்பாடுகளைப் பற்றி மற்றவர்கள் அதிகமாக அறிந்து கொள்ள வழி வகுக்காததே இந்த பிரச்சனைகளுக்கு ஒரு காரணமும் கூட.//

    சகோதரர் ஜோ அவர்களுக்கு,

    நான் முழுக்க முழுக்க உங்களின் கருத்தோடு உடன் படுகிறேன். அதனை நான் என்னுடைய முதல் பதிலிலேயே தெளிவு படுத்தி விட்டேன். கண்டிப்பாக முஸ்லிம் சமுதாயம் எந்த ஒரு நபி(இறை தூதர்) இழிவு படுத்தப் பட்டாலும் அதற்கு எதிராக குரல் கொடுக்க முன் வர வேண்டும் என்பதில் எனக்கு எந்த ஒரு மாற்று கருத்தும் இல்லை.

    ஆனால் தற்போதைய நிலையையும் எண்ணிப்பார்க்க வேண்டும். ஒரு காலத்தில் ஒவ்வொரு சமுதாயத்துக்கும் அனுப்பப் பட்ட நபிமார்கள்(இறை தூதர்கள்) அவர்களின் காலத்துக்கு பின் அவரைப் பின் பற்றிய சமுதாயத்தாலேயே இறைவனாக திரித்து வணங்கியது தான் வரலாறு. அடுத்தடுத்த இறை தூதர்கள் வரும் போது அவர்களின் முதல் பணியே முந்தைய இறை தூதர்களை மக்கள் இறைவனாக ஆராதிப்பதிலிருந்து விடுபட வைப்பதற்கு போராடுவதாகவே இருந்தது. முகம்மது(ஸல்) அவர்கள் கூட அவர் இறை தூதராக தேர்ந்தெடுக்கப் பட்ட காலத்தில் புனித மக்கா மஸ்ஜிதில் முந்தைய நபிமார்களான இப்ராகீம்(அலை) உள்பட இறைதூதர்களுக்கு சிலைகள் வைத்து ஆராதித்துக் கொண்டிருந்தனர்.

    இந்த நிலை தன்னைப் பின்பற்றும் சமுதாயம் செய்துவிடக் கூடாது என்பதில் முகம்மது(ஸல்) அவர்கள் மிகக் கவனமாக இருந்தார்கள். கடந்த 1400 வருடங்களாக முகம்மது(ஸல்) அவர்களை அவ்வாறு பார்ப்பதிலிருந்து இச்சமுதாயம் பாதுகாக்கப் பட்டிருக்கிறது. நாளைய சமுதாயம் இந்நிலையிலிருந்து வழி தவறி போய்விடக் கூடாது என்பதற்காகத் தான் முகம்மது(ஸல்) அவர்களுடைய உருவ விஷயத்தில் முஸ்லிம் சமுதாயம் இவ்வளவு ஆவேசப் பட காரணம். அல்லாமல் இதற்கு முந்தைய இறை தூதர்களான ஈஸா(அலை) அடக்கம் மற்ற இறை தூதர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காததால் அல்ல.

    மேலும் நான் முன்பே குறிப்பிட்டது போல் இது வெறும் உருவம் வரைந்தது சார்ந்த விஷயம் மட்டுமல்ல. இஸ்லாமிய ஒட்டுமொத்த சமுதாயமே "தீவிரவாதத்தின்" பிறப்பிடம் தான் என்று மக்கள் மனதில் ஒருவித பீதியை உண்டாக்கி இஸ்லாத்தை விட்டு அவர்களை வெருண்டோட வைக்க இறை எதிரிகள் எடுக்கும் முயற்சியாகத் தான் இதனை காண வேண்டியுள்ளது. அதனால் தான் இக்கார்ட்டூன் விஷயத்தில் முஸ்லிம் சமுதாயம் இத்தனை கடுமையான போக்கை எடுப்பதற்கு காரணம். அல்லாமல் ஈஸா(அலை) மீதோ மற்ற இறைதூதர்கள் மீதோ நேசம் இல்லாததன் காரணமல்ல என்பதை சகோதரர் விளங்கிக் கொள்ள வேண்டும்.

    //சகோதரர் இறைநேசன் ,என்னுடைய கேள்விகளும் விவாதமும் இந்த தலைப்புக்கு சம்பந்தம் இல்லாதது என நீங்கள் கருதினால் ,தயவு செய்து தெரிவிக்கவும்.நான் இதோடு நிறுத்தி விடுகிறேன்.//

    நியாயமான கேள்விகளும், விவாதங்களும் உண்மையை பலர் விளங்கிட வழி வகுக்கும். அந்த அடிப்படையில் சகோதரரின் கேள்விகளுக்கு எதிரானவனல்ல நான். எனவே சகோதரர் தாராளமாக தொடரலாம்.

    அன்புடன்
    இறைநேசன்.

    ReplyDelete
  29. //16ஆம் நூற்றாண்டை சேர்ந்த பல ஓவியங்களில் முகமது நபிகளை வரைந்து உள்ளதாகவும் அவர் கூறினார்.//

    சமுத்ரா
    முஹம்மது நபி (ஸல்) அவர்களை ஓவியமாக 16ம் நூற்றாண்டில் வரைந்திருக்கிறார்கள் என்பதை, இஸ்லாத்தின் அனுமதியாக எடுத்துக்கொண்டு எழுதியிருப்பது, உங்களிடமும், உங்கள் வக்கீல் நண்பரிடமும் அடிப்படையிலேயே தவறிருக்கிறது என்பதையே வலுப்படுத்துகிறது.

    சமாதி வழிபாடுகளுக்கு சாவு மணியடித்த இஸ்லாத்தில், முஸ்லிம்களில் சிலர் சமாதி வழிபாடு செய்வதை சுட்டிக்காட்டி அதனால் சமாதி வழிபாடுகள் செய்யலாம் என்று நியாயப்படுத்துவது போலுள்ளது உங்களின் வாதம். இது தவறான வாதமாகும்.

    இந்த நூற்றாண்டில் முஹம்மது நபி (ஸல்) அவர்களை கார்ட்டூனாக வரைந்ததை, ''இருபதாம் நூற்றாண்டில் நபி (ஸல்) அவர்களை ஒவியமாக வரைந்திருக்கிறார்களே?'' என்று நாளைய நூற்றாண்டில் இது பற்றி பேசப்படும், எழுதப்படும். அப்போது வரைந்ததற்கான எதிர்ப்புகளையும் கணக்கில் கொள்ளவேண்டுமேயல்லாது வரைந்ததை மட்டும் கணக்கிலெடுப்பது தவறாகும்.

    கி.பி ஏழாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஒவியம் வரைவதை இஸ்லாம் தடை செய்திருக்கிறது எனும்போது, முஹம்மது நபி (ஸல்) அவர்களை 16ம் நூற்றாண்டில் ஒவியமாக வரைந்திருப்பதை எப்படி இஸ்லாம் அனுமதித்திருக்கும்? என்பதையாவது நீங்கள் சிந்திக்க வேண்டாமா?

    அன்புடன்,
    அபூ முஹை

    ReplyDelete
  30. இறைநேசன் அவர்களே,
    எனக்கு இஸ்லாமிய மதத்தை மிகவும் பிடிக்கும். ஆனால் இந்தியாவை அச்சுறுத்தும் பெரும்பான்மையான தீவிரவாதிகள் முஸ்லீம்களாக இருப்பதாலேயே முஸ்லீம்களை ஆதரிக்கத் தயங்குகிறேன்.

    ReplyDelete
  31. சகோதரர் மகேஸ் அவர்களே!

    உங்களின் வெளிப்படையான கருத்துக்கு நன்றி.

    இந்தியாவின் அச்சுறுத்தலுக்கு உண்மையாகவே முஸ்லிம்கள் தான் காரணமா? அல்லது அவர்கள் தான் காரணம் என்று "காரணமானவர்களால்" சித்தரிக்கப்பட்டுள்ளனரா? என்பதையும் சற்று உன்னிப்பாக நடந்த, நடக்கிற சம்பவங்களையும் கவனியுங்கள் புரியும். இஸ்லாத்தை முறையாக விளங்கியவனால் நிச்சயமாக அப்பாவி பொது மக்களுக்கு எவ்வித அச்சுறுத்தலும், தொந்தரவும் இருக்காது இருக்கவும் முடியாது. மறித்து பாதிக்கப்பட்ட, ஒடுக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக அவர்கள் களமிறங்கி ஆதிக்க சக்திகளுக்கு எதிராக போராடவே முன் வருவார்கள். இது ஆதிக்க மேல்தட்டு வர்க்கங்களின் நிலைநிற்பிற்கு சவாலாக இருப்பதனால் தான் அவர்களின் ஒட்டுமொத்த பார்வையும் இம்முஸ்லிம்களை உயிருக்குப் பயப்படாதவர்களாக உருவாக்கி விடும் இஸ்லாத்தின் மீது திரும்பியுள்ளது.

    முஸ்லிம்கள் என்ற பெயரில் யாருக்கு வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்பதினாலும், யார் என்ன செய்தாலும் அதனை முஸ்லிம்களின் தலையில் கட்டி வைக்கலாம் என்ற நிலையும் தான் இன்று முஸ்லிம்களைக் குறித்து சமூகத்தில் தவறான அபிப்பிராயம் நிலவக் காரணம்.

    அன்புடன்
    இறைநேசன்

    ReplyDelete
  32. //நியாயமான கேள்விகளும், விவாதங்களும் உண்மையை பலர் விளங்கிட வழி வகுக்கும்.//

    இறை நேசன் அவர்களே,

    மேற்கண்ட உங்கள் வாக்கியத்தை நீங்கள் உண்மையிலேயே மனதிலிருந்து கூறியுள்ளீர்கள் எனில் உங்களிடம் ஒரு கேள்வி.

    உங்களின் பல கருத்துக்கள் நடைமுறைக்கு ஒவ்வாதவை என்பது என் அபிப்பிராயம். எழுதும் போது வேண்டுமெனில் அவை படிக்க சுவாரசியமாக புரட்சிகரமாக இருக்கும். ஆனால் எழுதுவது நடைமுறை படுத்தக் கூடியனவாக இருக்க வேண்டும்.

    //கண்டிப்பாக முஸ்லிம் சமுதாயம் எந்த ஒரு நபி(இறை தூதர்) இழிவு படுத்தப் பட்டாலும் அதற்கு எதிராக குரல் கொடுக்க முன் வர வேண்டும் என்பதில் எனக்கு எந்த ஒரு மாற்று கருத்தும் இல்லை.//

    நல்லடியார் மற்றும் இப்னு பஷீர் போன்றவர்கள் நாசூக்காக இவ்விஷயத்தில் அபிப்பிராயம் கூறினர். அவர்கள் சில விஷயங்களை நன்றாக புரிந்துள்ளனர் என நினைக்கிறேன். ஆனால் நீங்கள் ஒட்டு மொத்த முஸ்லிம் சமுதாயத்தை குறிப்பிட்டு கிறிஸ்தவராகிய ஜோ அவர்களிடம் கூறியிருப்பதால், அதுவும் அவரோடு இவ்விஷயத்தில் ஒத்து போவதாக கூறியிருப்பதால் உங்களிடம் இவ்விஷயத்தைக் குறித்து என்னுடைய ஒரு சந்தேகத்தைக் கேட்கிறேன். சந்தேகம் கூட இல்லை ஒரு விளக்கம் மட்டும் தான்.

    எந்த இறைத்தூதரையும் யார் இழுவு படுத்தினாலும் அதை கண்டிக்க முஸ்லிம் சமுதாயம் முன் வர வேண்டும் என குறிப்பிட்டுள்ளீர்களே, இறைதூதர் தாவூது(தாவீது ராஜா) அவர்கள் மாற்றான் பெண்ணை அனியாயமாக கற்பளித்தது மட்டுமின்றி அவனை கொலை செய்து அப்பெண்ணை தனது மனைவியாக ஆக்கிக் கொண்டார் என்றும், இறை தூதர் நூஹ்(நோவா) திராட்சை ரசம் அருந்தி மதிமயக்கத்தில் நிர்வாணமாக விழுந்து கிடந்தார் எனவும், இறை தூதர் லூத்(லோத்) மதிமயக்கத்தில் தனது இரு பெண்மக்களுடன் உறவு கொண்டார் எனவும் இதே ரீதியில் இன்னும் ஒவ்வொரு இறை தூதர்களைக் குறித்து பைபிளில் அசிங்கமாகவும், அருவருப்பாகவும், அல்லாஹ்வால்(கர்த்தரால்) ஆசீர்வதிக்கப்பட்ட அவர்களின் குணங்களின் மீது களங்கம் உண்டாக்கும் படி "எழுதி" வைத்துள்ளார்களே, உங்கள் கருத்தில் நீங்கள் உறுதியாக இருக்கிறீர்கள் எனில் முதலில் இதற்கு எதிராக குரல் கொடுக்கவும், போராடவும் முன் வர வேண்டும். நீங்கள் தயாரா?

    மேலும் இவ்விஷயத்தில் ஜோ அவர்களின் கருத்தையும் அறிய ஆசைப்படுகிறேன். இப்படிப்பட்ட தர்மசங்கடங்கள் (உலகின் மிகப்பெரிய சமுதாயம் தங்களது வேதமாக கருதுவதை எதிர்த்து போராட வேண்டிய சூழ்நிலை) இவ்விஷயத்தில் உண்டு என்பதனால் தான் நல்லடியார் மற்றும் இப்னு பஷீர் போன்றவர்கள் மற்றவரின் மனதை புண்படுத்த வேண்டாம் என நினைத்து அவ்விதம் பதில் கூறியிருப்பார்கள் என நினைக்கிறேன்.

    எனவே ஒரு கருத்தை வைக்கும் முன் அது நடைமுறைக்கு ஒத்து வருமா என்று சற்று அதனைக் குறித்து ஆலோசித்து விட்டு கருத்து கூறுங்கள். அப்படியே கூறினாலும் அதனை ஒட்டு மொத்த சமுதாயத்தின் கருத்து போல் கூறி பிரச்சினைகளை விலை கொடுத்து வாங்காதீர்கள். உங்களை போன்ற சிலர் சிந்திக்காமல் அவசரப்பட்டு வார்த்தைகளை விடுவதால் தான் சமுதாயத்துக்கு கெட்ட பெயர் வருகிறது.

    முஸ்லிம் சமுதாயம் எல்லா இறை தூதர்களையும் மதிக்கிறது, ஏற்றுக் கொள்கிறது என்பது சரி தான். ஆனால் அவர்கள் அனைவரிலும் இதுவரை சிலையாகவோ, சித்திரமாகவோ வரைந்து அவ்விதத்தில் கண்ணியம் என்ற பெயரில் மாசுபடுத்தப்படாமல் இருக்கும் ஒரே தூதர் முகம்மது(ஸல்) வர்கள் மட்டும் தான். அவருக்கும் அது போன்ற ஒருநிலையை உருவாக்கி இறைவணக்கத்தில் களங்கம் கற்பிக்கப்பட்டு விடக்கூடாதே என்ற பொறுப்புணர்ச்சி தான் முஸ்லிம்களை இதற்கு எதிராக களமிறக்கியுள்ளது.

    பி.கு:

    இப்பின்னூட்டத்தை நீங்கள் அனுமதிப்பதும் அனுமதிக்காதிருப்பதும் உங்கள் இஷ்டம். ஆனால் ஒன்று மட்டும் கூறிக் கொள்கிறேன். இதனை நீங்கள் அனுமதிக்கவில்லையெனில் என் பதிவில் போடுவதற்கு யாருடைய அனுமதியும் தேவையில்லை என்பதனை மட்டும் உங்களுக்கு நினைவு படுத்திக் கொள்கிறேன். இப்பொழுதெல்லாம் மட்டுறுத்தல் என்ற பெயரைக் கூறிக் கொண்டு தங்களுக்கு ஏற்ற விதத்தில் வரும் பின்னூட்டங்களை மட்டும் அனுமதிப்பதால் இவ்வாறு கூறினேன். தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.

    என்றும் அன்புடன் - பகுத்தறிவாளன்.

    ReplyDelete
  33. அபு,

    பொதுவாக நான் இஸ்லாமிய scripturesகளை பற்றி வாதிடுவது கிடையாது - அவைகளை பற்றி எனக்கு எதுவும் அதிமாக தெரியாது என்ற நிலையில் அவைகளை பற்றி நான் பேசுவது சரியல்ல.

    அனால் இங்கே கொடுக்கபட்டுள்ள Hadithகள் உன்மையானவையா என்று எனக்கு தெரியாது.

    மேலும், முஸ்லிம்கள் நாய் வளர்க்கவும் தடை செய்யபட்டுள்ளது -கொடுக்கபட்டுள்ள முதல் Hadithஇன் படி.

    இரண்டாவது Hadith சமாதி வழிபாட்டை பற்றிய விஷயம்.

    அதில் ஓவியத்தை பற்றி இருந்தாலும் திருகுரானில் ஓவியத்தை தடை செய்யவில்லை என்று தெரிகிறது.

    I think the second Hadith is taken out of the context, while the first Hadith is simply not sensible - because it says angels dont enter house where there is a "dog or a picture"!

    நாய் என்ன பாவம் செய்தது?
    மேலும் எனக்கு தெரிந்த அனைத்து இஸ்லாமியர் விடுகளிலும் kabbaவின் புகைபடம் உள்ளது.

    இந்த Angels அங்கே செல்லமாட்டார்களா?

    Sorry for making a comment on the name of a person, but the name "Wahhabi" reminds me of the Saudi regime which is famous for its treatment of non-muslims and the (in)famouse religious police.

    படத்தை வழிபட வேண்டாம் என்று சொல்லபட்டுள்ளதை தவறாக எடுத்து கொள்கிறோமோ?

    ReplyDelete
  34. //இஸ்லாமியர்கள் தங்கள் மதத்தை பற்றி அதன் உண்மையான கோட்பாடுகளைப் பற்றி மற்றவர்கள் அதிகமாக அறிந்து கொள்ள வழி வகுக்காததே இந்த பிரச்சனைகளுக்கு ஒரு காரணமும் கூட.//

    ஜோ,

    மன்னிக்கவும் நான் சொல்ல வந்ததை நீங்கள் சரியாக புரிந்து கொள்ளவில்லை என நினக்கிறேன். இஸ்லாம் முஸ்லிம்களுக்கு மட்டுமான மார்க்கமல்ல. மற்ற மதங்களைப்போல் இதனை அறிந்து கொள்ள எந்த சடங்கோ சம்பிரதாயமோ தேவையில்லை என்பது உங்களுக்கு விளங்கி இருக்கும் என்று நம்புகிறேன்.

    இஸ்லாம் என்றால் பழமைவாதம் என்றும், இஸ்லாமியர் என்றால் தீவிரவாதிகள் என்றும்தான் இதுவரை ஊடகங்களால் அறியத் தரப்படிருக்கிறோம். ஒஷாமா பின்லாதினுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை மனித குலத்திற்கு அரிய கண்டுபிடிப்புகளை வழங்கிய இஸ்லாமிய அறிவியலாளர்களுக்கும் கொடுத்திருக்கலாம் தானே? ஆனால் ஊடகங்கள் எதிர்மறைக் கருத்துக்களைச் சொல்லி இஸ்லாத்தின்பால் நெருங்காமல் இருப்பதில் மட்டும் மதவேறுபாடின்றி செயல்படுகின்றன.

    //ஒரு உதாரணத்துக்கு இப்படி சொல்லுகிறேன் .வரும் காலத்தில் இஸ்லாமால் அங்கீகரிக்கப்படாத ஒரு கூட்டம் முகமது நபியவர்களை கடவுளாக ஏற்றுக்கொண்டு தனி மதமாக செயல் படுவதாக வைத்துக்கொள்வோம்..அப்போது முகமது நபியவர்கள் இழிவு படுத்தப்பட்டால் நீங்கள் "முகமது நபியவர்களை கடவுளாக நம்பும் இவர்களே கண்டுகொள்ளவில்லை..எங்களுக்கென்ன வந்தது" என்று விட்டு விடுவீர்களா?//

    முகம்மது நபியவர்கள் இறைத்தூதர் என்பதை ஏர்கதவர்களுக்கு அவர்கள் எந்த ரூபத்திலும் உரிமை கொண்டா தார்மீக உரிமை இல்லை. உங்கள் வாதப்படி, முகம்மது நபியை கடவுளாகச் சொல்பவர்களும், இழிவு படுத்துபவர்களும் ஒன்றுதான். தான் சாதாரன மனிதந்தன்; இறைவனால் அனுப்பட்ட இறுதித் தூதுவர் என்பதைத் தவிர அவர்கள் வேறு சொல்லி இல்லாத போழ்து, அவர்கள் எப்படி முகம்மது நபியை முழுமையாக நம்புபவர்களாக முடியும்?

    ReplyDelete
  35. அழகப்பன்February 1, 2006 at 9:41 AM

    //அல்லாவின் இறைதூதர்களில் ஒருவரும் ,அல்லாவினால் விசேஷமாக ஆசீர்வதிக்கப்பட்டு மரியமினால் பெற்றெடுக்கப்பட்ட ஈசா நபியவர்கள் பற்றி எத்தனையோ திரைப்படங்கள் ,புத்தகங்கள் தாறு மாறாக வெளிவந்திருக்கின்றன .அவை பற்றியெல்லாம் முஸ்லீம் உலகம் கொதித்தெழுவதை விடுங்கள் ,குறைந்த படிசம் முணுமுணுப்பாவது வந்திருக்கிறதா ?//

    ஜோ எங்கள் தவறைச் சுட்டிக் காட்டியமைக்கு மிக்க நன்றி. என்னுடைய பெரிய தந்தையும், என்னுடைய தந்தையும் பாதிக்கப்படும்போது முதலில் என்னுடைய தந்தைக்குத்தான் உதவுவேன். பெரிய தந்தைக்கு உதவமாட்டேன் என்று சொல்ல முடியாது. ஆனாலும் மனித இயல்பு நம்முடைய தந்தைக்குத்தான் முன்னுரிமை கொடுக்கும். இதுபோன்றுதான் இன்றைய முஸ்லிம்களும் முஹம்மது நபிக்கு முன்னுரிமை கொடுத்துள்ளனர்.

    //இயேசுவை இழிவு படுத்தும் போது முஸ்லிம்கள் தட்டிக்கேட்டால் இஸ்லாமை பற்றி அதிகம் அறியாதோர் அதை இன்னும் நெருக்கமாக புரிந்து கொள்ள வழி வகுக்கும் .நல்லெண்ணம் அதிகரிக்கும் என்பதே என் கருத்து.இஸ்லாம் என்றாலே அல்லாவும் ,முகமது நபியும் மட்டும் தான் என்றே பெரும்பான்மையான பிற மதத்தவர்கள் புரிந்து வைத்திருக்கிறார்கள் என்பதை தாங்கள் சற்று கண்கொண்டு பாருங்கள்//

    மிகச் சரியான கருத்து. எனினும் முஹம்மது நபியின் மீதும் இஸ்லாத்தின் மீதும் சுமத்தப்பட்ட, சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளே மிக அதிகம் என்பது தாங்கள் அறியாத ஒன்றல்ல. அதனை எதிர்கொள்வதே முஸ்லிம்களுக்கு மிகப்பெரிய சவாலாக இருந்து வருகிறது. இது மேலைநாடு கீழைநாடு என்ற பாகுபாடின்றி தமிழ்மணத்தில்கூட அவ்வப்போது இத்தகைய பதிவுகளைத் தாங்கள் காணலாம்.

    //வரும் காலத்தில் இஸ்லாமால் அங்கீகரிக்கப்படாத ஒரு கூட்டம் முகமது நபியவர்களை கடவுளாக ஏற்றுக்கொண்டு தனி மதமாக செயல் படுவதாக வைத்துக்கொள்வோம்..அப்போது முகமது நபியவர்கள் இழிவு படுத்தப்பட்டால் நீங்கள் "முகமது நபியவர்களை கடவுளாக நம்பும் இவர்களே கண்டுகொள்ளவில்லை..எங்களுக்கென்ன வந்தது" என்று விட்டு விடுவீர்களா?//

    முஸ்லிம்களில் பல பிரிவினர் இருந்தாலும் இதுவரை, முஹம்மது நபியை கடவுளாக ஆக்கியது இல்லை. மேலும் இத்தகைய ஒரு கூட்டம் ஒருபோதும் தோன்றக்கூடாது என்பதற்கான போராட்டமே இது என்பதை தங்கள் கவனத்திற்கு கொண்டுவருகிறேன்.

    நான் முன்பே கூறியது போன்று முஸ்லிம்கள் ஈஸா நபி அவர்கள் விதயத்தில் முன்னுரிமை கொடுக்காமல் இருந்துவிட்டார்கள். ஆனாலும் அவர்களின் கண்ணியம் மத அடிப்படையில் குலைக்கப்படுவதை எதிர்த்து வருகின்றனர். (உதாரணமாக ஈஸா நபியவர்கள் எதிரிகளால் சிலுவையில் அறையப்படவில்லை என்பது போன்றவை) சிலுவையில் அறையப்பட்டது உங்களது பார்வையில் உண்மையாக இருப்பதால் முஸ்லிம்களின் கண்டனத்தை நீங்கள் பொருட்படுத்துவதில்லை. உங்களது மத நம்பிக்கை என்பதற்காக இந்த விதயத்தில் நாங்கள் சாமாதானமாகப் போய்விடுவதில்லை. மற்ற விதயங்களிலும் ஈஸா நபியவர்களின் கண்ணியம் குலைக்கப்படுவதை கண்டிக்க வேண்டும் என்ற உங்களின் கோரிக்கை நியாயமானதே. இனி இறைவன் நாடினால் அதற்காக நான் குரல் கொடுப்பேன்.

    ReplyDelete
  36. இது கருத்து சுதந்திரம் குறித்த பிரச்சினை.அந்த நாட்டு சட்டப்படி அது குற்றமில்லை. பொதுவாக ஐரோப்பிய அரசுகள் கருத்து சுதந்திரத்தினை தடை செய்ய மாட்டா.அங்கு பத்திரிகை சுதந்திரத்தில் அரசு குறுக்கிடமுடியாது. பத்திரிகை தவறான செய்தி வெளியிட்டால், பொய் செய்திகளை வெளியிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம். நீங்கள் டென்மார்க் பொருட்களைப் புறக்கணியுங்கள்.அது உங்கள் விருப்பம். அதே சமயம் உங்களது இஸ்லாமிய மதிப்பீடுகளை ஐரோப்பியர் மீது புகுத்தாதீர். அப்படி செய்ய முயன்றால் அது இஸ்லாமியருக்கு
    எதிரான நடவடிக்கைகளில் போய் முடியும். உங்கள் ம்த வழிபாட்டில் டென்மார்க் சமூகம் குறுக்கிடாத போது அவர்களின் கருத்து சுதந்திரத்தினை மதித்து வாழக் கற்றுக் கொள்ளுங்கள்

    ReplyDelete
  37. ஆரோக்கியம் kettavanFebruary 1, 2006 at 10:26 AM

    அடேடே அயோக்கியமா...

    //முகம்மதைப் பற்றி ஒரு கார்ட்டூன் படமே வரப்போகிறது.
    இதற்கு அனுமதி கொடுத்திருப்பது எகிப்தின் அல்-அசார் பல்கலைக்கழகம்...//

    பரவாயில்லையே சரியான லின்க்கைத் தான் குடுத்திரிக்கிறே... அத நல்லாப் படிச்சுட்டியா
    //Cinematically, Mr. Rich used the camera's point-of-view to indicate the comings and goings of the Prophet (pbuh). But this technique is completely brought to life by an unforgettable melody created by Mr. Kidd. The effect is stirring.//

    முதல் முறையா உருப்படியான ஒரு வேலை செஞ்சதுக்கு ரொம்ப டேங்க்சு..

    அய்யா இறைநேசரே, இத அயோக்கியத்துக்கு பதிலா மட்டும் தான் வச்சிருக்கேன்.. அனுமதிச்சா சந்தோசப் படுவேன்.

    ReplyDelete
  38. நல்லடியார்,
    நீங்க என்ன திடீர்ன்னு டோண்டு மாதிரி விவாதம் பண்ணுறீங்க .நான் உதாரணம் என்று சொன்னதை உதாரணமாக மட்டும் எடுத்து முடிந்தால் பதில் சொல்லவும் ...அதற்கு நீங்கள் கொடுக்கும் மட்டையான விளக்கம் எனக்கு சிரிப்பத்தான் வரவழைக்கிறது

    //முகம்மது நபியவர்கள் இறைத்தூதர் என்பதை ஏர்கதவர்களுக்கு அவர்கள் எந்த ரூபத்திலும் உரிமை கொண்டா தார்மீக உரிமை இல்லை//

    அது தான் நான் உதாரணத்திற்கு என்று சொல்லி ,இஸ்லாம் கோட்பாடுக்கு எதிராக என்றும் சொல்லி விட்டேனே..அப்புறம் தார்மீக உரிமை பற்றியெல்லாம் பேசுவது அர்த்தமில்லாதது .யாராவது முகமது நபியையோ அல்லது யாரையோ கடவுளாக சித்தரித்து வணங்குவதற்கு அவர்களுக்கு உரிமையுள்ளது (இஸ்லாத்துக்கு வெளியே)

    மீண்டும் என் கேள்வி..
    //ஒரு உதாரணத்துக்கு இப்படி சொல்லுகிறேன் .வரும் காலத்தில் இஸ்லாமால் அங்கீகரிக்கப்படாத ஒரு கூட்டம் முகமது நபியவர்களை கடவுளாக ஏற்றுக்கொண்டு தனி மதமாக செயல் படுவதாக வைத்துக்கொள்வோம்..அப்போது முகமது நபியவர்கள் இழிவு படுத்தப்பட்டால் நீங்கள் "முகமது நபியவர்களை கடவுளாக நம்பும் இவர்களே கண்டுகொள்ளவில்லை..எங்களுக்கென்ன வந்தது" என்று விட்டு விடுவீர்களா?//

    இதை உதாரணமாக எடுத்துகொண்டு ,தார்மீக உரிமை ,யோக்கியதை பற்றியெல்லாம் பேசாமல் ,அந்த சூழ்நிலைக்கு உங்கள் பதி என்ன என்று சொன்னால் நல்லது..

    இல்லையேல் இதே விவாத அடிப்படையில் என்னால் தொடர முடியாது என்பதை பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

    ReplyDelete
  39. //பொதுவாக நான் இஸ்லாமிய scripturesகளை பற்றி வாதிடுவது கிடையாது - அவைகளை பற்றி எனக்கு எதுவும் அதிமாக தெரியாது என்ற நிலையில் அவைகளை பற்றி நான் பேசுவது சரியல்ல.//

    சமுத்ரா,
    உங்களின் எழுத்துக்களில் மொத்தமாகவே குழப்பமிருக்கிறது. குர்ஆனிலிருந்தால்தான் ஏற்றுக்கொள்வேன் என்று கூறி ஹதீஸ்களை நிராகரிக்கும் நீங்கள், முழுக்குர்ஆனும் நபி (ஸல்) அவர்களின் வழியாக வந்ததுதான் என்பதை கவனிக்க மறுக்கிறீர்கள்.

    //அவை நபிகள் என்ற ஒரு சாதாரன மனிதர் கூறியது தானே ஓழிய இறைவன் நபிகள் மூலமாக கூறியது அல்லவே(கூரான் போல)//

    ஹதீஸ் என்பதும் இறைவன். நபி (ஸல்) அவர்களின் மூலமாக மக்களுக்காக விளக்கிய நற்போதனைகளாகும். இதைத் திருக்குர்ஆனிலிருந்தே விளங்க முடியும். இது பற்றியும், மற்ற உங்களின் முரண்பாடுளையும், நாய் வளர்ப்பது பற்றியும் பிறகு பார்ப்போம்.

    நபி (ஸல்) அவர்களை ஒவியம் வரைவதற்கு திருக்குர்ஆனில் தடை செய்யப்படவில்லை என்று கூறிவிட்டு, நபி (ஸல்) அவர்கள் ''புராக்'' வாகனத்தில் விண்ணுலகப் பயணம் மேற்கொண்டப் படத்தையும் வெளியிட்டுள்ளீர்கள். மட்டுமல்ல //எழு "spheres of exitense"களை தாண்டி இறைவனை சந்திப்பதை சித்தரிக்கும் ஓவியம்.// என்று விரிவுரையும் எழுதியுள்ளீர்கள். இங்கே நான் உங்களைக் கேட்பது இதுதான்..

    முஹம்மது நபி (ஸல்) அவர்கள் விணுணுலகப் பயணம் புராக் வாகனத்தில்தான் சென்றார்கள் என்பதையும், இறைவனை சந்தித்தார்கள் என்பதையும் திருக்குர்ஆனில் எந்த வசனத்திலிருந்து பெற்றீர்கள் என்பதை தெரிவிக்க முடியுமா? ஹதீஸை ஏற்றுக்கொள்ள முன்வராத நீங்கள் ஹதீஸிருந்து ஆதாரம் காட்டாமாட்டீர்கள் என்று நம்புகிறேன்.

    அன்புடன்,
    அபூ முஹை

    ReplyDelete
  40. // சமீபத்தில் இதை நார்வே கிறிஸ்டியன் பத்திரிக்கை மறுபதிவு செய்து, வாசகர்களிடமிருந்து மேலும் கார்ட்டூன்கள் கேட்டு ஊக்கப்படுத்தியதால்தான் பிரச்சினையின் தீவிரம் உணர்ந்து, ஐ.ஒ.வில் உள்ள முஸ்லிம் நாடுகளின் பிரதிநிதிகள் சம்பந்தப்பட்ட அரசாங்கத்திடம் தங்கள் மனக்குமுறலை தெளிவுபடுத்த விரும்பினர். இவர்களை சந்திக்க மறுத்ததோடு, "கருத்துச் சுதந்திரம் என்பது சமரசத்திற்கு அப்பாற்பட்டது" என்பதே என் புத்தாண்டு செய்தி என்று பொறுப்பின்றி சொல்லி எரியும் நெருப்பில் எண்ணை வார்த்துள்ளார். //

    இது தவறுதான். தவறுவது மனித இயற்கை. எடுத்துச் சொன்னால் மன்னிப்புக் கேட்பது சாதாரண மனிதருக்கு நேருவதே. ஆனால் அதற்குப் பிறகும் வேறொரு பத்திரிகை இது போன்று அனுப்புங்கள் என்று மக்களிடம் கேட்பது நிச்சயமாக கருத்துச் சுதந்திரம் ஆகாது. மிகவும் தவறான முன்னுதாரணம்.

    ReplyDelete
  41. அபூ ஸாலிஹாFebruary 1, 2006 at 11:07 PM

    அய்யா டென்மார்க் தமிழன் அவர்களே!

    ஒருவரது கருத்துச்சுதந்திரம் என்பது மற்றவரை வருத்தாதவரை மட்டுமே என்பதை முதலில் புரிந்து கொள்ளுங்கள்.

    எம்மைப் பெற்ற பெற்றோரை விட, யாம் பெற்ற பிள்ளைகளை விட அதிகமதிகம் நேசிக்கும் இறைத்தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்களை ஒருவர் அறிந்தே இழிவுபடுத்த எண்ணும்போது இதைவிட சாத்வீகமான வழியில் தம் மனக்குமுறலை இறைநம்பிக்கையுள்ள ஒருவர் எப்படி தெரிவிக்க முடியும் என்பதை நீங்களே கூறுங்களேன்?

    ஒரு பத்திரிகைக்கு கருத்தை வெளியிட சுதந்திரம் கொடுத்த டென்மார்க் அரசுக்கு, உலக அளவில் கண்டனங்கள் வந்த பிறகு அது மிகப்பெரும் தவறு என்று உணர்ந்தும் அக்கருத்தை தடுக்க மட்டும் உரிமை இல்லையாம்! என்னய்யா நியாயம்?

    முதன்முறையாக டென்மார்க் பத்திரிகை கார்ட்டூன்களை வெளியிட்டபோதே முஸ்லிம்கள் கண்டனம் தெரிவித்ததோடு மன்னித்து விட்டுவிடாமல், சர்வதேச அளவில் போராட்டத்தை நடத்தியிருந்தால் மறுபதிப்பு செய்யும் அகங்காரம் இன்று நார்வேக்கு பிறந்திருக்காது.

    எதிர்காலத்தில் இது போன்ற சூழ்நிலை மீண்டும் உருவாகாமல் இருக்க வேண்டும் என்பதே இப்போராட்டத்தில் ஈடுபடுத்திக்கொண்டுள்ள இறையுணர்வால் காயப்பட்ட ஒவ்வொரு இஸ்லாமியரின் எண்ணமாக இருக்கும்.

    ReplyDelete
  42. Arokkiyam கெட்டவனுக்கு, நீங்கள் தனிப்பட்ட முறையில் ஏதேனும் கருத்து தெரிவிக்க விரும்பினால் அதை திரு. சமுத்ரா அவர்களின் பதிவில் இடவும். கண்ணியம் கருதி உங்கள் பின்னூட்டம் இங்கே நீக்கப்பட்டுள்ளது.

    அன்புடன்
    இறைநேசன்.

    ReplyDelete
  43. //படத்தை வழிபட வேண்டாம் என்று சொல்லபட்டுள்ளதை தவறாக எடுத்து கொள்கிறோமோ?//

    Samutra,

    The reason of our resistance is clear as per explanation of our Prophet PBUH:
    "Those are the people who, whenever a pious man dies amongst them, make a place of worship at his grave and then they make those pictures in it. Those are the worst creatures in the Sight of Allah."

    (Sahih Al BuKhari - The Book of Funerals) Hadees No. 1263 - Narrated 'Aisha:
    ---------------------------------------------------------------------------------
    When the Prophet became ill, some of his wives talked about a church which they had seen in Ethiopia and it was called Mariya. Um Salma and Um Habiba had been to Ethiopia, and both of them narrated its (the Church's) beauty and the pictures it contained. The Prophet raised his head and said, "Those are the people who, whenever a pious man dies amongst them, make a place of worship at his grave and then they make those pictures in it. Those are the worst creatures in the Sight of Allah."

    Please note that he did not care about his illness, as those days were his almost final days in this world, to advise indirectly that no one should make his grave as a place of worship and no one should art his picture.

    (Sahih Al Bukhari - The Book of Military Expeditions) Hadees No. 3983 - Narrated Ibn Abbas:
    ----------------------------------------------------------------------------------------------------
    When Allah's Apostle arrived in Mecca, he refused to enter the Ka'ba while there were idols in it. So he ordered that they be taken out. The pictures of the (Prophets) Abraham and Ishmael, holding arrows of divination in their hands, were carried out. The Prophet said, "May Allah ruin them (i.e. the infidels) for they knew very well that they (i.e. Abraham and Ishmael) never drew lots by these (divination arrows). Then the Prophet entered the Ka'ba and said. "Allahu Akbar" in all its directions and came out and not offer any prayer therein.

    Are you clear now?

    ReplyDelete
  44. அட்றா சக்கைFebruary 2, 2006 at 1:16 PM

    சகோதரர் வஹ்ஹாபி அவர்களே,

    தூங்குபவர்களை எழுப்பலாம், தூங்குவது போல நடிப்பவர்களை எழுப்ப இயலாது..

    சமுத்ரா இரண்டாவது வகை..

    ReplyDelete
  45. இறைநேசன்,

    கார்டூன்கள் வெளியிட்டது தவறு என்று வைத்துக் கொண்டால் கூட இவ்வளவு களேபரம் தேவையா என்று தோன்றுவதைத் தவிர்க்கமுடியவில்லை. எதிர்ப்புத் தெரிவிக்க எவ்வளவோ அமைதியான முறைகள் இருக்கின்றனவே. ஏன் மீண்டும் மீண்டும் வன்முறையைக் கையில் எடுக்கவேண்டும்?

    இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி இஸ்லாம் ஒரு அமைதி மார்க்கம் என்று நிரூபிக்க முயலலாமே?

    ReplyDelete
  46. அபூ ஸாலிஹாFebruary 3, 2006 at 9:35 PM

    நிலா,

    வன்முறை என்று நீங்கள் எதைக் குறிப்பிடுகிறீர்கள்? சாத்வீகமான வழியில் போராடும் மக்கள், டென்மார்க் தயாரிப்புப் பொருள்களை வாங்காமல் புறக்கணிப்பதையா?

    தவிர, இத்தனை களேபரம் ஏன் என்ற உங்கள் ஆதங்கத்திற்கான பதிலை ஏற்கனவே எனது முந்தைய பின்னூட்டத்தில் இட்டுள்ளேன்.

    ReplyDelete
  47. என் பின்னூட்டம் குறித்து அழகப்பன் எழுதியிருந்த பதிவில் நான் இட்ட பின்னூட்டத்தை இங்கு தருகிறேன்:

    அது என்னவோ தெரியவில்லை, முஸ்லீம்களின் எந்த செயலைக் குறித்தாயினும் லேசாக புருவம் உயர்த்தினால் கூட உடனே காழ்ப்புணர்வு என்று முத்திரை குத்திவிடுகிறார்கள். நான் யாரையும் சார்ந்து பேசவில்லையே? இதை எந்த நாட்டவர்கள் செய்திருந்தாலும், எந்த மதத்தினர் செய்திருந்தாலும் நான் இதைத்தான் கேட்டிருப்பேன். ஏன் எல்லோரையும் எல்லாவற்றையும் வண்ணக் கண்ணாடி கொண்டு பார்க்கவேண்டும்? ஏன் எபோதும் இஸ்லாமியர்களை ஒடுக்குவதற்கும் குறை கண்டுபிடிப்பதற்குமே ஊடகங்களும் மக்களும் முயல்கிறார்கள் என்று நினைக்கவேண்டும்?

    காசாவில் துப்பாக்கி ஏந்திய போராளிகள் செய்ததும் இந்தோநேசியாவில் நடந்த கொடி எரிப்புக் கலாட்டாவும் சாத்வீகமானது என்று நீங்கள் கருதினால் இங்கே பேசுவதற்கொன்றுமில்லை. தவிர, மனசாட்சியைத் தொட்டுச் சொல்லுங்கள் - இந்தப் பிரச்சனைக்கென்று இன்னொரு குண்டு வெடிப்பு நடக்காதென்று உங்களால் உத்தரவாதம் தர இயலுமா? அப்படியே நடக்காவிட்டாலும், நடக்குமென்ற பயத்தை உலகமக்கள் மனதில் விதைத்தது சாத்வீகமானதுதானா?

    என் பின்னூட்டம் குறித்து அழகப்பன் எழுதியிருந்த பதிவில் நான் இட்ட பின்னூட்டத்தை இங்கு தருகிறேன்:

    அதோடு, இதையும் கொஞ்சம் பாருங்கள்:

    http://nilaraj.blogspot.com/2006/02/blog-post_04.html

    ReplyDelete
  48. //அது என்னவோ தெரியவில்லை, முஸ்லீம்களின் எந்த செயலைக் குறித்தாயினும் லேசாக புருவம் உயர்த்தினால் கூட உடனே காழ்ப்புணர்வு என்று முத்திரை குத்திவிடுகிறார்கள்.....ஏன் எபோதும் இஸ்லாமியர்களை ஒடுக்குவதற்கும் குறை கண்டுபிடிப்பதற்குமே ஊடகங்களும் மக்களும் முயல்கிறார்கள் என்று நினைக்கவேண்டும்? //

    நிலா,

    ஏனென்றால் இஸ்லாம் சொல்லும் அமைதி, மேற்கத்திய முதலாளியத்துவ மனிதனைச் சுரண்டி கொழுக்கும் ஆயுத விற்பனைக் கோட்பாட்டிற்கு எதிரானது. மேலும் பெண்சுதந்திரம் என்ற பெயரில் நம் சகோதரிகளை சந்தைபொருளாக்கி காசுபார்க்கும் கேடுகட்ட கலாச்சாரத்திற்கு எதிரானது. இப்படி எத்தனையோ எதிரானதுகள் இஸ்லாத்தில் இருப்பதாலும் அவற்றை அவர்களின் போலி சித்தாந்தங்களுக்கு ஆதரவாக இன்னுமொரு இறைத்தூதர் வரவில்லையே என்ற ஆதங்கங்களாலும் தான் இந்த காழ்புணர்வுகள் இருந்து கொண்டிருக்கின்றன.

    ReplyDelete
  49. அழகப்பன்February 4, 2006 at 4:16 AM

    இது குறித்த என்னுடைய பதிவு
    http://etheytho.blogspot.com/2006/02/blog-post_04.html

    ReplyDelete
  50. ஈடு இணையற்ற இறைவனையும் அன்பே உருவான அவருடைய தூதுவரையும் கேவலம் சில கேலிச் சித்திரங்களா அவமானப்படுத்தமுடியும்? இந்த கேவலங்களை புறம் தள்ளி அமைதியாக இறைவனைத் தொழுவது தான் சாலச் சிறந்தது.

    எத்தனை முறை இந்துக் கடவுளரைக் கேவலப்படுத்தினாலும் அவைகளை ஊதாசினப்படுத்தி இந்துக்கள் தங்கள் பாதையில் சென்று அமைதியாக வாழவில்லையா?

    டென்மார்க்கின் பொருட்களை புறக்கணித்தால் மட்டும் போதாது. அவரிடம் பலஸ்தீனர்கள் பெற்ற/பெறும் உதவிகளை திரும்பக் கொடுக்கவேண்டும், அவர்களின் தொழில் நுட்ப்த்தில் இஸ்லாமிய நாடுகளிச் இயங்கும் பால் பண்ணைகளை மூடி விடவேண்டும்

    அதுதான் சரியான எதிர்ப்பாக இருக்கும்.

    மற்றவை வெறும் வாய் சவடால்தான்.


    கால்கரி சிவா

    ReplyDelete