Wednesday, January 25, 2006

நல்ல காலம் வரப் போகுது!

சட்டசபையில் கலந்து கொண்டு பேசாததால்தேர்தலில் போட்டியிட கருணாநிதிக்கு தடை விதிக்க வேண்டும்தேர்தல் அதிகாரியிடம் வக்கீல்கள் மனு


சட்டசபையில் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பேசாமல் இருப்பதால் தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் வக்கீல்கள் மனு கொடுத்து உள்ளனர்.


சென்னையை சேர்ந்த வக்கீல்கள் எஸ்.முத்துராஜ் (சேப்பாக்கம்), எம்.ராமகிருஷ்ணன், ஐ.சதீஷ், கே.அர்ஜ×னன் ஆகியோர் தலைமைச் செயலகத்தில் உள்ள தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தா மற்றும் சபாநாயகர் காளிமுத்து ஆகியோரிடம் கொடுத்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-


சென்னை சேப்பாக்கம் தொகுதியின் எம்.எல்.ஏ.வாக அந்தப் பகுதி மக்களால் கருணாநிதி தேர்ந்து எடுக்கப்பட்டு உள்ளார். ஆனால் சட்டசபைக்கு சென்று அங்கு நடக்கும் நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொள்வதில்லை. அரசியல் காரணங்களுக்காக அங்கு வருவதை கருணாநிதி தவிர்க்கிறார்.
ஆனால் சட்டத்தின் பிடியில் சிக்காமல் இருப்பதற்காக 60 நாட்களுக்கு ஒருமுறை சட்டசபைக்கு வந்து அங்குள்ள வருகைப் பதிவேட்டில் அவர் கையெழுத்து போட்டு செல்கிறார். இந்தியாவில் இப்படி உயர்மட்டத்தில் உள்ள பொது ஊழியர்கள் தங்கள் கையெழுத்தை மட்டும் போட்டுவிட்டு வேலை செய்யாமல் சென்றுவிட்டால் இந்தியாவின் நிலை என்னவாகும்?

எம்.பி., எம்.எல்.ஏ. போன்ற பொது ஊழியர்களுக்காக மக்கள் பணத்தில் இருந்து பெருந்தொகை செலவழிக்கப்படுகிறது. சம்பளம், சலுகைகள், படிகள், வசதிகள், ஓய்வூதியம் ஆகியவற்றுக்காக பெருந்தொகை தரப்படுகிறது.
சட்டசபையில் அனுமதியை பெறாமல் 60 நாட்கள் அங்கு நடக்கும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் இருக்கும் எம்.எல்.ஏ.யின் பதவியை சட்டசபை ரத்து செய்யலாம் என்று இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் 190(4)-ம் பிரிவு கூறுகிறது. கடந்த நாலரை ஆண்டுகளாக சட்டசபை நிகழ்ச்சிகளில் கருணாநிதி கலந்து கொள்ளவில்லை.

எனவே, இந்த சட்டத்தின் அடிப்படையில் கருணாநிதியின் எம்.எல்.ஏ. பதவியை ரத்து செய்ய வேண்டும். அவரது எம்.எல்.ஏ. பதவியை ரத்து செய்வது மட்டுமல்ல, இதுவரை அவர் பெற்றுள்ள சம்பளம், படிகள், சலுகைகள் ஆகியவற்றை திரும்பப் பெற வேண்டும்.


மேலும், மற்ற பொறுப்பற்ற அரசியல்வாதிகளை எச்சரிக்கும் வகையில், வரும் தேர்தல்களில் போட்டியிட கருணாநிதிக்கு தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு வக்கீல்கள் கொடுத்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.


அப்படி போடு! எனக்கு தெரிந்து வக்கீல்கள் செய்த நல்ல காரியங்களில் இதற்கு முதலிடம் தரலாம். என்ன "திராவிட கொள்கை" என்று கூறிக் கொண்டிருப்பது இது தானா? ஒரு பெண்ணுக்கு இருக்கும் சாமர்த்தியம் கூட இல்லாத இவர்களெல்லாம் நாட்டுக்கு என்ன செய்து கிழித்து விடப் போகிறார்கள்.

"தமிழக முதல்வர்" என்ன பாடுபட்டாவது இந்த வழக்கை வெற்றி பெற வைக்க வேண்டும்.(ஆமா சும்மா விட்டு விடுவதா? எதிராளி யார்? துகில் உரி கழக தலைவர் அல்லவா? கிடைத்த சந்தர்ப்பத்தை யாராவது நழுவ விடுவார்களா என்ன?)

தமிழர்களை மடையர்கள் என நினைத்து கொண்டிருக்கும் புழுத்த அரசியல்வாதிகளுக்கு இவ்வழக்கின் தீர்ப்பு சாவு மணி அடிக்க வேண்டும்.

அதோடு இந்தியாவின் நல்ல காலம் தமிழ்நாட்டிலிருந்து ஆரம்பமாக வேண்டும்.

5 comments:

  1. //"தமிழக முதல்வர்" என்ன பாடுபட்டாவது இந்த வழக்கை வெற்றி பெற வைக்க வேண்டும்//

    ?!

    SCV ஐ அரசு ஏற்கும் என்று சொன்னதற்கு, உடனே கவர்னரை சந்தித்து மசோதவை ஏற்கக் கூடாது என்று சொல்ல முடிகிறது. ஆனால் இதை சட்டசபையில் விவாதிக்க தைரியமில்லை.

    கலைஞருக்கு நேரம் சரியில்லை என்றுதான் தோன்றுகிறது. சன் தொலைக்காட்சியில், லயோலா கல்லூரியின் கருத்துக் கணிப்பில் கலைஞரை அடுத்த முதல்வராக 88% மக்கள் விரும்புவதாகச் சொன்னார்கள்; அதே சமயம் ஜெயலலிதாவை 82% மக்கள் விரும்புவதாகவும் சொன்னார்கள். பாவம் அந்த ஆறு % மக்கள்.

    ReplyDelete
  2. //"தமிழக முதல்வர்" என்ன பாடுபட்டாவது இந்த வழக்கை வெற்றி பெற வைக்க வேண்டும்//

    ?!

    SCV ஐ அரசு ஏற்கும் என்று சொன்னதற்கு, உடனே கவர்னரை சந்தித்து மசோதவை ஏற்கக் கூடாது என்று சொல்ல முடிகிறது. ஆனால் இதை சட்டசபையில் விவாதிக்க தைரியமில்லை.

    கலைஞருக்கு நேரம் சரியில்லை என்றுதான் தோன்றுகிறது. சன் தொலைக்காட்சியில், லயோலா கல்லூரியின் கருத்துக் கணிப்பில் கலைஞரை அடுத்த முதல்வராக 88% மக்கள் விரும்புவதாகச் சொன்னார்கள்; அதே சமயம் ஜெயலலிதாவை 82% மக்கள் விரும்புவதாகவும் சொன்னார்கள். பாவம் அந்த ஆறு % மக்கள்.

    ReplyDelete
  3. எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. கருணாநிதி செய்தது சரியில்லை என்பதில் ஐயமில்லை. இந்த வக்கீல்களின் பதிவிலும் தவறில்லை. ஆனால் ஒருவேளை கருணாநிதி தேர்தலில் போட்டியிடாமல் போனால்...திமுகவை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது.

    ReplyDelete
  4. ஹிந்து என்றால் திருடன் என்ற சொன்ன போதே கருனாநிதியை கைதி செய்து தேர்தலில் போடியிட தடை போட்டு இருக்க வேண்டும்.

    இரண்டு நாட்களுக்கு முன்னர் நேதாஜி பிறந்த நாளன்று பாராளமன்றத்தில் அவர் உருவபடத்துக்கு மரியாதை செய்ய ஒரே ஒரு எம்.பி மட்டும் தான் வந்து இருந்தார்!

    மற்றோர் காங்கிரஸ் மாநாடு,வங்க தேர்தல் என்று வேலையில் மூழ்கிவிட்டனர்.

    நேதாஜியின் கட்சியினர் கூட யாரும் வரவில்லை!

    இங்கே தமிழ்நாட்டில் அவரின் கட்சி தேவர் சமுகத்தின் ஜாதி சங்கம் பொல செயல்படுகிறது.

    இல்லை, நல்ல காலம் இன்னும் பிறக்கவில்லை.

    ReplyDelete
  5. //SCV ஐ அரசு ஏற்கும் என்று சொன்னதற்கு, உடனே கவர்னரை சந்தித்து மசோதவை ஏற்கக் கூடாது என்று சொல்ல முடிகிறது. ஆனால் இதை சட்டசபையில் விவாதிக்க தைரியமில்லை.//

    வேஷ்டியை உருவி விடுவார்களோ என்ற பயமாக இருக்கலாமல்லவா? :-) "முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்"

    அன்புடன்
    இறைநேசன்.

    ReplyDelete