நேபாளத்தில் மன்னராட்சிக்கு எதிராக நடக்கும் பேரணிகள் நாளுக்கு நாள் அதிகரிக்கும் அதேவேளை ஆர்ப்பாட்டக் காரர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கும் மன்னர் ஞானேந்திராவின் போக்கும் ஆரோக்கியமானதாகத் தெரியவில்லை.
நேபாளத்தில் பிரமாண்ட பேரணி நடத்திய அரசியல் கட்சிகள் மீது ராணுவத்தைக் கட்டவிழ்த்து விட்டுள்ளார் மன்னர். மேலும் உணவுப் பொருள், எரிபொருளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது.
நேபாளத்தில் மன்னராட்சிக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. ஜனநாயக ஆட்சியை உருவாக்க வலியுறுத்தி 20ம் தேதி அரசுக்கு எதிராக மாபெரும் கண்டன பேரணி நடத்த அரசியல் கட்சிகள் முடிவு செய்துள்ளன. போராட்டம் தொடர்வதால் நாட்டின் பொருளாதாரம் சீர்குலையும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
நேபாளத்தில் ஞானேந்திரா தலைமையிலான மன்னராட்சி நடந்து வருகிறது. மன்னராட்சியை அகற்றி விட்டு ஜனநாயக ஆட்சியை ஏற்படுத்த வேண்டும் என அந்நாட்டின் முக்கிய அரசியல் கட்சிகள் , வக்கீல்கள் , மாணவர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். கடந்த எட்டாம் தேதியிலிருந்து தீவிரமாக போராட்டம் நடந்து வருகிறது. மாவோயிஸ்ட் தீவிரவாதிகளும் மன்னராட்சிக்கு எதிரான தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தங்களது கோரிக்கையை வலியுறுத்தி 20ம் தேதி மிகப் பெரிய கண்டன பேரணி நடத்தப்போவதாக ஏழு அரசியல் கட்சிகள் அடங்கிய போராட்டக் குழு அறிவித்திருந்தது.
இதுகுறித்து அரசியல் கட்சி தலைவர் ஒருவர் கூறும்போது ," எங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி தலைநகரில் மிகப் பெரிய அளவிலான கண்டன பேரணி 20ம் தேதி நடத்தப்படும். இதில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பர். அரசு இதற்கு எத்தகைய தடை விதித்ததாலும் , அதனை மீறி பேரணி நடத்துவோம்' என்றார்.
அரசு செய்தி தொடர்பாளரும், தொலை தொடர்பு துறை அமைச்சருமான சும்ஷர் ராணா கூறும்போது ,"பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு இடையூறு ஏற்படும் வகையில் போராட்டம் நடத்துவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.
தொடர்ந்து நாடு முழுவதும் வங்கிப் பணிகள் முடங்கியுள்ளன. உணவுப் பொருட்கள் மற்றும் எரிபொருட்கள் கிடைப்பதிலும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் நாட்டின் பணவீக்கம் இரண்டு இலக்க அளவிற்கு உயர்ந்து விட்டது. இதே நிலை நீடித்தால் நாட்டின் பொருளாதர நிலை சீர்குலையும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
இதுகுறித்து நேபாள காங்கிரஸ் கட்சியின் மத்திய கமிட்டி உறுப்பினர் சேகர் கொய்ராலா கூறியதாவது:
நேபாளத்தில் மீண்டும் ஜனநாயக ஆட்சியை ஏற்படுத்துவதற்கு இந்தியா உதவ வேண்டும். இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் இந்த விவகாரத்தில் மன்னராட்சிக்கு எதிராக நெருக்கடி தர வேண்டும். மன்னராட்சியில் உயர்ந்த பதவிகளில் உள்ளவர்களுக்கான விசாவை சர்வதேச நாடுகள் ரத்து செய்ய வேண்டும். வெளிநாடுகளில் அவர்களுக்கு உள்ள சொத்துக்களையும் முடக்க வேண்டும். அவர்களின் வெளிநாட்டு வங்கி கணக்குகளையும் முடக்க வேண்டும்.
இவ்வாறு சேகர் கொய்ராலா கூறினார்.
பிரதமரின் சிறப்பு தூதுவராக நேபாளம் சென்றார் கரண்சிங் : நேபாளத்தில் மன்னராட்சிக்கு எதிராக நடந்து வரும் போராட்டங்களை இந்தியா கூர்ந்து கவனித்து வருகிறது. கடந்த ஞாயிறன்று நேபாள நாட்டிற்கான இந்திய தூதர் சிவ் முகர்ஜி , மன்னர் ஞானேந்திராவைச் சந்தித்து அரசியல் கட்சி தலைவர்களுடன் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தையை துவக்கும்படி வலியுறுத்தினார். அடுத்த கட்ட நடவடிக்கையாக இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக பிரதமரின் சிறப்புத் தூதராக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கரண்சிங் காத்மாண்டு சென்றார். ராஜ்ய சபா எம்.பி.,யும் , ஜம்மு காஷ்மீர் மன்னர் குடும்பத்தை சேர்ந்தவருமான கரண்சிங் , காத்மாண்டுவில் மன்னர் ஞானேந்திரா மற்றும் அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்தார். அவர்களுடன் நாட்டில் நிலவும் அரசியல் சூழ்நிலை குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். கரண்சிங்கும் மன்னர் பரம்பரையை சேர்ந்தவர் என்பதால், மன்னர் ஞானேந்திராவுடன் அவருக்கு உள்ள நெருங்கிய உறவு, பிரச்னையை தீர்ப்பதற்கு உதவும் என வெளியுறவுதுறை செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.
நேபாளத்தில் நடக்கும் இந்த அடக்குமுறை நிச்சயமாக மனித உரிமைக்கு எதிரானதாகும். காஷ்மீர் பண்டிட்டுகள், பங்களாதேஷ் இந்துக்களின் உரிமைக்காக குரல் கொடுக்கிறோம் என்ற பாவனையில் இஸ்லாத்திற்கு எதிராக அவ்வப்போது விஷம் கக்கக் காத்திருக்கும் சங் பரிவாரின் வலைப்பதிவுக் கூலிப் பட்டாளம் இப்பிரச்னையில் காத்துவரும் அழுத்தமான மௌனம் பல கேள்விகளை எழுப்புகிறது. ஒருவேளை இந்தப் பிரச்சனையில் இறந்தவர்கள் யாரும் உயர்சாதியினர் இல்லையோ?
அடப்பாவிகளா இறப்பவர்கள் நம் சகோதரர்கள் தானே! அவர்களுக்கு ஆதரவாக ஈனஸ்வரத்தில் கூட நீங்கள் முனகவில்லையே. உங்களுக்குப் படியளக்கும் சங் மேலிடம் இவ்விஷயத்தில் மௌனம் காக்க உமக்கு உத்தரவிட்டுவிட்டதோ?
தொடர்புடைய சுட்டிகள்:
http://in.news.yahoo.com/060420/137/63okb.html
http://www.dailythanthi.com/article.asp?NewsID=252640&disdate=4/18/2006
Subscribe to:
Post Comments (Atom)
அப்பூ, ரொம்பத்தான் அலட்டிக்காதே. எங்க பிரச்சினய நாங்க பாத்துப்போம். நாங்க அடிச்சுக்குவோம், பிடிச்சிக்குவோம். மாறி மாறி வெட்டி கொல்லயும் செய்வோம். அது எங்களுக்கு உள்ள பிரச்சின. ஒனக்கு எங்க அதனால அரிக்குது?
ReplyDeleteசகோதரர் சாணான் அவர்களே! தங்கள் வருகைக்கு நன்றி! கருத்து செறிவு மிக்க(!???!) விமர்சனத்துக்கும். உங்களின் மனப்பான்மையை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. நீங்கள் செய்வதை செய்து கொண்டிருங்கள். நாங்கள் கத்துவதை கத்திக் கொண்டிருக்கிறோம்.
ReplyDeleteஅன்புடன்
இறை நேசன்.