Thursday, April 6, 2006

இரத்த யாத்திரைகள்!

மீண்டும் நாடெங்கும் மதவெறிக்கலவரங்களை ­மூளச்செய்து, நாட்டை இரத்தக் களறியாக்க இந்துத்துவாவாதிகள் திட்டமிட்டுவிட்டனர்.

அத்வானி, பா.ச.க. தலைவர் இராஜ்நாத்சிங் ஆகியோர் மற்றொரு ரத யாத்திரை நடத்த திட்டமிடடு இன்று அதனைத் துவக்க உள்ளனர்.

பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவில் தங்களுடைய வேத கால ஆட்சியை நிறுவுவதற்கு ஏதுவாக அரசியலில் பாரதீய சனதா கட்சி என்ற பெயரில் களமிறங்கிய ஆர்.எஸ்.எஸ், தங்களின் மறைமுக அஜெண்டாவை நிறைவேற்றுவதற்கு தேசியவாதம், இந்து ஐக்கியவாதம் போன்ற கவர்ச்சிகரமான வார்த்தைகளை முன் வைத்து அப்பாவி மக்களை தங்களுடைய வலையில் விழ வைக்கின்றனர்.

கடந்த 5 வருட காலத்தில் பாரதீய சனதாவின் தீய முகம் இனபடுகொலை, மதக் கலவரம், இலஞ்சம் போன்ற பல ரூபங்களில் வெளிப்பட்டுள்ளது. தங்களின் கோர முகம் வெளிப்படும் போதோ அல்லது தங்களுக்குள்ளேயே கோஷ்டி மோதல் உருவாகும் போதோ அதிசயமாக நாட்டில் ஏதாவதொரு அசம்பாவிதம் நடந்து விடுகிறது.(பாராளுமன்ற தாக்குதலிலிருந்து தற்போதைய காசி குண்டு வெடிப்பு சம்பவம் வரை எல்லா சம்பவங்களின் போதும் பாரதீய சனதாவிற்குள் ஏதாவதொரு நாற்றமெடுக்கும் சம்பவம் நடந்திருப்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்).

இவர்களின் ரத யாத்திரை, கர சேவை போன்ற இரத்தம் தோய்ந்த டெக்னிக்குக்ளை இச்சம்பவங்களின் ஊடாகத் தான் காணப்பட வேன்டும். ஒவ்வொரு முறையும் தங்களை நிலை நிறுத்த தங்கள் கோர முகத்தை, தங்களுடைய அசிங்கங்களை மக்கள் மனதிலிருந்து திசை திருப்ப இவர்கள் நடத்தும் நாடகம் தான் இந்த ரத்த யாத்திரைகளும் கரசேவைகளும்.

அந்த வரிசையில் இதோ மற்றொரு ரத்த யாத்திரைக்கு இந்த இரத்த வெறிப்பிடித்த சங்க் கூட்டம் தயாராகி விட்டது. இந்த யாத்திரையின் நோக்கம் -காசி குண்டு வெடிப்பை கண்டிப்பதாம்.

இந்த ரத்த யாத்திரைகளின் உண்மையான நோக்கம் என்ன என்பதை ஒவ்வொரு ரத்த யாத்திரைகளின் பின் விளைவுகளை வைத்து கணக்கிடலாம்.


ஏற்கெனவே இந்துத்துவாவாதிகள் நடத்திய பல ரத யாத்திரைகளின் விளைவாக ஏற்பட்ட விபரீதங்களின் வடுக்கள் இன்னமும் மறையவில்லை.

1990 ஆம் ஆண்டு செப்டம்பரில் சோமநாதபுரத்தில் தொடங்கி 8 மாநிலங்கள் வழியாகச் சென்று அக்டோபர் 30ஆம் தேதி அயோத்தியில் முடிவடையும் வகையில் இராமர் ரத யாத்திரையை அத்வானி நடத்தினார்.

இந்த ரத யாத்திரை சென்ற வழி நெடுக மதக் கலவரங்கள் ­மூண்டன. ஏராளமான அப்பாவி மக்கள் மாண்டனர்.

ரத யாத்திரை தொடங்கும் போதே அதற்குத் தடைவிதிக்கத் தவறிய பிரதமர் வி.பி.சிங்கின் அரசு கலவரங்கள் வெடித்த பிறகு அக்டோபர் 21ஆம் தேதி அன்று பீகாரில் அத்வானியை கைது செய்தது.

அக்டோபர் 30ஆம் தேதி அத்வானியின் ரத யாத்திரை அயோத்தியில் முடிவடைந்து அங்கு கரசேவை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அத்வானி கைது செய்யப்பட்டாலும் சங்கப்பரிவாரம் பெரும் திரளை அயோத்தியில் கூட்டியது. அப்போது ­மூண்ட கலவரத்தில் 22 பேர் மாண்டனர்.

மாண்டுபோன 22 பேரின் அஸ்திகளை வைத்து மற்றொரு யாத்திரையை சங்கப்பரிவாரங்கள் நடத்தின. அஸ்தி கலசங்கள் சென்ற வழி நெடுகிலும் மதக்கலவரங்கள் ­மூண்டு நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர்.

குருதி ருசி கண்ட சங்கப்பரிவாரம் இத்துடன் நிற்கவில்லை.

1991ஆம் ஆண்டு பா.ச.க. தலைவராக இருந்த முரளி மனோகர் ஜோசி குமரி முதல் காசுமீர் வரை ""ஏக்தா யாத்திரையை"" தொடங்கினார். இந்த யாத்திரையும் முசுலீம்களையும், சிறுபான்மையினரையும் தாக்குவதில் முடிந்தது.

1992ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி அன்று அயோத்தியில் மற்றொரு கரசேவை நடத்தப்போவதாக விசுவ இந்து பரிசத் அறிவித்தது.

அன்று அத்வானி, முரளி மனோகர் ஜோசி, அசோக் சிங்கால், தொகாடியா, உமாபாரதி மற்றும் பாச.க. தலைவர்கள் முன்னிலையில் இந்து வெறியர் கூட்டம் பாபர் மசூதியை இடித்துத் தகர்த்தது. மேற்கண்ட தலைவர்கள் யாரும் இந்த அடாத செயலை தடுத்து நிறுத்த முன்வரவில்லை.

பாபர் மசூதி இடிக்கப்பட்டதன் எதிரொலியாகத் தேசமெங்கும் பெரும் கலவரங்கள் மூ­ண்டன.
பம்பாயில் நடைபெற்ற கலவரத்தில் 51 பேர் மாண்டனர். காவல்துறையினர் சுட்டதில் 152 பேர் கொல்லப்பட்டனர்.

மகாராட்டிரா, குசராத், உத்திரபிரதேசம், மத்தியப்பிரதேசம், இராசஸ்தான், பீகார், மேற்கு வங்கம், அசாம், கர்நாடகம், தில்லி ஆகிய மாநலங்களில் நடைபெற்ற கலவரங்களில் 1200 பேருக்கு மேல் மாண்டனர்.

கடந்த கால வரலாறு கூறும் இந்த உண்மைகளை மறந்துவிடக்கூடாது. மதக்கலவரங்களை நடத்துவதன் ­மூலம் மட்டுமே தாங்கள் வளர்ச்சி பெற முடியும் என இந்துத்துவாவாதிகள் கருதுகின்றனர். எனவேதான் ரத யாத்திரைகள், கரசேவைகள் ஆகியவற்றை அடிக்கடி நடத்தி அரசியல் ஆதாயம் தேட முற்படுகிறார்கள். இத்தகைய போக்குக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படவேண்டும்.

அத்வானி, இராஜ்நாத் சிங் தொடங்க இருக்கும் ரத யாத்திரை உடனடியாகத் தடைசெய்யப்பட வேண்டும். மத வாதத்திற்கு எதிரான அனைத்துக் மக்களும் ஒன்று சேர்ந்து சங்கப்பரிவாரத்தின் முக­மூடியைக் கிழித்தெறிய முற்படவேண்டும்.

நன்றி:- தென் செய்தி

7 comments:

  1. பன்முகத்தன்மைப் பற்றி உங்களைப் போன்ற ஒரு முஸ்லீம் அடிப்படைவாதிக்கு பேச் எந்தத் தகுதியும் இல்லை. முதலில் சவுதியில் இந்துக்களுக்கும் பிறருக்கும் வழிபாட்டு உரிமைகள் இல்லாததை விமர்சித்துவிட்டு பன்முகத்தன்மை குறித்து எழுதுங்கள். பா.ஜ.க ஒரு இந்த்துவ
    அடிப்படைவாதக் கட்சி என்றால் முஸ்லீம் லீக்களும், தமுமுக போன்றவை இஸ்லாமிய அடிப்படைவாதக் கட்சிகள். மதக்கலவரங்களுக்கு இரு தரப்பாரும் காரணம்.

    ReplyDelete
  2. அதுவும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த சட்டமன்ற தேர்தல்கள் 5 மாநிலங்களில் நடைபெறவுள்ள சூழ்நிலையில் சங்பரிவாரின் இத்தகைய ரத்த யாத்திரை குறித்து தேர்தல் கமிஷனுக்கு எந்தவிதமான அக்கறையும் இல்லையா? மக்களின் இந்து மத உணர்வுகளை தூண்டி விடுவது தேர்தல் நேரத்தில் மக்களை பிளவுபடுத்திட உதவாதா? பா.ஜ.க.வும் - சங்பரிவாரும் - அத்வானியும் தனது தேய்ந்து போன செல்வாக்கை மீட்பதற்கு செய்யும் டெக்னிக்தான் ரத்த யாத்திரை. எனவே மத்திய அரசும், ஜனாதிபதியும், தேர்தல் கமிஷனும் இதற்கு தடை விதிக்க வேண்டும்.

    ReplyDelete
  3. Srinidhi,

    //பா.ஜ.க ஒரு இந்த்துவ
    அடிப்படைவாதக் கட்சி என்றால் முஸ்லீம் லீக்களும், தமுமுக போன்றவை இஸ்லாமிய அடிப்படைவாதக் கட்சிகள். //

    I agree with your comment that both sides are responsible for communal tensions. But the argument here is we MUST NOT support explicit acts like this yatra planned just for stimulating these tensions. So, I think your response sounds more like blank response without any thinking about the subject in question.

    Blood leaders like Advani,etc who obtained their position today on the tops of skeletons of multitudes of innocent people (of both sides) must be isolated from our support. These guys take us back to dark period based on bloated trivial issues rather than people's real issues and our country's progress.

    Did he or any of his paramaartha group guys plan a similar yatra for number of important national issues? Just one instance where this guy tried to save the 'bribe for question' fame MPs.

    Time that we realise we not pawns anymore for their objectives.

    NERUPPU

    ReplyDelete
  4. LK Advani is on a Rath Yatra against atrocities comitted against majority religion in India.
    Why there was no opposition to kasi bomb blast from muslim community,whereas the previous week everyone was up arms against a cartoon ?
    CARTOON DID NOT KILL LIVES,BOMB DID

    ReplyDelete
  5. LK Advani is on a Rath Yatra against atrocities comitted against majority religion in India.
    Why there was no opposition to kasi bomb blast from muslim community,whereas the previous week everyone was up arms against a cartoon ?
    CARTOON DID NOT KILL LIVES,BOMB DID

    ReplyDelete
  6. http://www.malaysiakini.com/letters/50322

    http://www.outlookindia.com/pti_news.asp?id=379485

    WHAT IS YOUR ANSWER FOR THIS ?

    ALL YOUR BLOG AND POST ARE DOUBLE STANDARDS.

    GET REAL.IF YOU ARE A TRUE INDIAN,ASD YOU REPLIED TO SRINIDJHI ,POST A BLOG CONDEMNING THIS INCIDENT..
    I KNOW YOU WONT..

    ReplyDelete
  7. http://www.malaysiakini.com/letters/50322

    http://www.outlookindia.com/pti_news.asp?id=379485

    WHAT IS YOUR ANSWER FOR THIS ?

    ALL YOUR BLOG AND POST ARE DOUBLE STANDARDS.

    GET REAL.IF YOU ARE A TRUE INDIAN,ASD YOU REPLIED TO SRINIDJHI ,POST A BLOG CONDEMNING THIS INCIDENT..
    I KNOW YOU WONT..

    ReplyDelete