Tuesday, June 13, 2006

ஒரு லேப்டாப்புக்கு இரண்டு குண்டு இலவசம்!

என்னப்பா விவகாரமா இருக்கும் போல இருக்கிறதே என்று நினைக்க வேண்டாம். நிஜமாகவே "இந்த" லேப்டாப் வாங்குபவர்களுக்கு இரண்டு குண்டுகள் இலவசமாக கிடைக்கும். முதலில் லேப்டாப்பும் அதன் உரிமையாளரையும் குறித்த ஒரு அறிமுகம்.

உரிமையாளர் பெயர் : சீனிவாசன் (ஓய்வு பெற்ற ஓர் நீதிபதியின் மகன்)
இடம் : நெசப்பாக்கம், கேகே நகர், சென்னை.
தொழில் : கணினி பொறியாளர்
பணியிடம் : அமெரிக்கா


சம்பந்தப்பட்ட அதி நவீன ஏகே 47 இயந்திர துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தப்படும் இரண்டு தோட்டாக்களைக் கொண்ட லேப்டாப்பின் சொந்தக்காரர் இவரே.

கணினி வல்லுனரான இவரின் அதி நவீன குண்டுகளுடன் கூடிய இந்த புதிய அரிய கண்டுபிடிப்பான "ஏகே 47 குண்டு லேப்டாப்பை", இவர் இதுவரை வெளியுலகத்துக்குத் தெரிவிக்காமல் இருந்தார்(தற்பெருமை இல்லாதவர்). இவரின் இந்த அரிய கண்டுபிடிப்பை வெளிக்கொணர்ந்தவர்கள் சென்னை விமான நிலையத்தைச் சேர்ந்த பணியாளர்கள்.

இதனை வெளியுலகத்துக்கு மிக மகிழ்ச்சியுடன் தெரிவித்தவர்களில் முதலிடம் தினத்தந்தி தினப்பத்திரிக்கையை சாரும்.

இந்த அரிய சீனிவாசன் கம்ப்யூட்டர் எஞ்சினியரின் கண்டுபிடிப்பையும் அதனை கண்டுபிடித்த சென்னை விமான நிலையத்தினரின் செயலையும் அதனை வெளியிட்ட தினத்தந்தி பத்திரிக்கையின் செய்தியையும் இங்கு காணலாம்.

இந்த "ஏகே 47 குண்டு லேப்டாப்" தேவையுடையோர் கண்டிப்பாக ஒருமுறையேனும் மேற்கண்ட தினத்தந்தி செய்தியை முழுமையாக பார்வையிட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இனியும் அந்த அரிய லேப்டாப் தேவை எனக்கருதுவோர் அமெரிக்க கம்ப்யூட்டர் எஞ்சினியரான சீனிவாசன் அவர்களை தொடர்பு கொள்ளவும்.

முக்கியமான எச்சரிக்கை:

இந்த லேப்டாப்பை வாங்க முயற்சிக்கும் "முஸ்லிம்"களுக்கு ஒரு முன்னெச்சரிக்கை. என்ன காரணம் கொண்டும் இதனை எடுத்துக் கொண்டு வெளிநாடு போக முயற்சிக்க வேண்டாம். அதனை உங்கள் வீடுகளிலோ, அலுவலகங்களிலோ, நீங்கள் புழங்கும் எந்த இடத்திலும் அதனை கருதி வைக்க வேண்டாம்.

அப்படி யாராவது இந்த எச்சரிக்கையை மீறி வைத்திருந்து அதனை இது போல் ஏதாவது கடமை உணர்வுள்ள அதிகாரிகள் கண்டுபிடிக்க நேர்ந்தால்,


"நீங்கள் துப்பாக்கி உபயோகிக்கும் பழக்கம் இல்லாதவர் என்றோ அல்லது கடந்த சில நாட்களாக அந்த கம்பூட்டரை நீங்கள் உபயோகப்படுத்தவில்லை" என்றோ வாக்குமூலம் கொடுத்தாலும், உங்களுக்கு இதே பத்திரிக்கைகள் "முஸ்லிம் தீவிரவாதி அதி நவீன ஆயுதங்களுடன் பிடிபட்டான், பாகிஸ்தான் உளவாளியா?" என்ற நேர்மையான விளம்பரம் (நீங்கள் கம்ப்யூட்டர் எஞ்சினியராக இருந்தாலும் சரி அல்லது பள்ளிக்கூடமே காணாத பாமரனாக இருந்தாலும் சரி) தந்தால் அதற்கு "கம்பூட்டர் எஞ்சினியர் சீனிவாசன்" பொறுப்பேற்க மாட்டார் என்பது அறிவுறுத்தப்படுகிறது.

15 comments:

  1. என்ன உள்குத்து என்பதை கடைசிவரை கண்டுபிடீக்க முடியவில்லையே..

    ReplyDelete
  2. அன்பு நண்பா
    இந்த தினத்தந்தி செய்தியை நம்பவும் முடியவில்லை. நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. கணினிக்குள் எப்படி குண்டுகள் வந்தது என்றும் புரியவில்லை.

    ஒரே குழப்பமாக இருக்கிறதே...

    ReplyDelete
  3. //கணினிக்குள் எப்படி குண்டுகள் வந்தது என்றும் புரியவில்லை.//

    இன்னாப்பா ராசா இது கூடவா தெரீல்ல.

    குண்டு லேப்டாப்ப வச்சிருந்த சீனிவாசு கம்ப்யூட்டர் எஞ்சினியரு.

    ReplyDelete
  4. சகோதரர்கள் செந்தழல் ரவி மற்றும் மஞ்சூர் ராசா அவர்களின் வருகைக்கு நன்றி.

    //என்ன உள்குத்து என்பதை கடைசிவரை கண்டுபிடீக்க முடியவில்லையே..//

    "முஸ்லிம் தீவிரவாதி அதி நவீன ஆயுதங்களுடன் பிடிபட்டான், பாகிஸ்தான் உளவாளியா?"

    இன்னுமா புரியவில்லை?

    //கணினிக்குள் எப்படி குண்டுகள் வந்தது என்றும் புரியவில்லை.//

    ஒருவேளை அவர் வலையை உபயோகிக்கும் பொழுது பாகிஸ்தான் உளவாளிகள் online -ல் அனுப்பியதாக இருக்குமோ?

    ReplyDelete
  5. அப்பாவி சீனிவாசனின் லேப் டாப்பிற்குள் குண்டுகள் எப்படி வந்திருக்கும்?

    1) சைபர் போலிசார் நடத்திய 'தீவிர' விசாரணையில் சீனிவாசனுக்கு பாகிஸ்தானிலிருந்து வந்த ஈமெயிலில் அட்டாச்மெண்டை திறந்தப்ப் அவரின் சிஸ்டத்திற்குள் அந்த குண்டுகள் டவுன்லோட் ஆகியதாகச் சொன்னார்.

    2) ஆன்லைனில் சீனிவாசன் கேம் விளையாடும் பழக்கமுள்ளவர். துப்பாக்கி சுடும் கேமிற்கு வைத்திருந்த புல்லட்டுகள் அவை. அல்லது

    3) MS-Word டாகுமெண்டில் இருக்கும் புல்லட்டுகள்.

    அட சீனிவாசா! உம்பேரு 'சீனி மொகமது' ஆக இருக்கக்கூடாதா? இன்னேரம் "சென்னை விமான நிலையத்தை தகர்க்க சதி! தீவிரவாதி பிடிபட்டான்" என்று செய்திகள் கலை கட்டியிருக்குமே!

    ReplyDelete
  6. //1) சைபர் போலிசார் நடத்திய 'தீவிர' விசாரணையில் சீனிவாசனுக்கு பாகிஸ்தானிலிருந்து வந்த ஈமெயிலில் அட்டாச்மெண்டை திறந்தப்ப் அவரின் சிஸ்டத்திற்குள் அந்த குண்டுகள் டவுன்லோட் ஆகியதாகச் சொன்னார்.

    2) ஆன்லைனில் சீனிவாசன் கேம் விளையாடும் பழக்கமுள்ளவர். துப்பாக்கி சுடும் கேமிற்கு வைத்திருந்த புல்லட்டுகள் அவை. அல்லது

    3) MS-Word டாகுமெண்டில் இருக்கும் புல்லட்டுகள்//

    :))



    நன்கு புரிகிறது பதிவின் உள்குத்து!

    ReplyDelete
  7. திரு bun butter jam , அது என்ன coincidence ஓ .

    ரெண்டும் ஒரே நாளில் கண்ணுல பட்டுடிச்சு.

    'சீனி மொகமது' கேள்விப்பட்டு இருக்கேன்

    விஷ்ணு K மஹ்முது கேள்விப்பட்டு இருக்கீங்களா?

    :)

    இங்கே பாருங்கள் படத்துடன்

    http://asia.cnet.com/reviews/blog/toekangit/


    இதுல எந்த உள் குத்தும் இல்லைங்கோ !

    அன்புடன்
    சிங்கை நாதன்.

    ReplyDelete
  8. குஜராத்தில் ஆக்ரமிப்பு இடத்தில் இருந்த மசூதி இடிக்க நீதிமன்றம் தடை.

    மதுரையில் ஆக்ரமித்து கட்ட பட்ட கோவில் இடித்து தள்ளப்பட்டது.

    ஓ... இது இங்க நியாபகம் வர கூடாதுனு யாருப்பா சொல்லறது, பிச்சுபிடுவேன் பிச்சு:-)

    ReplyDelete
  9. நீங்க ரொம்ப குசும்பு ஸார்...

    ReplyDelete
  10. நீங்க ரொம்ப குசும்பு ஸார்...

    ReplyDelete
  11. நீங்க ரொம்ப குசும்பு ஸார்...

    ReplyDelete
  12. ஹலோ இறைநேஸன்,

    விசாரணைக்காகப் போலீஸார் அரெஸ்ட் செய்துள்ளதாகத்தான் செய்தி.

    இன்னமும் குண்டினை வைத்தது யார், எங்கிருந்து வந்தது என்பது போன்ற செய்திகள் தெரியவில்லை. எனவே, இந்தச் செய்தியின் தொடர்ச்சியாய் போலிசார் குற்றவாளி என கோர்ட்டில் யாரை முன்னிறுத்துகிறார்கள் என்பது போன்ற விஷயங்களையும் வெளியிடுவீர்களானால் ஒரு செய்தி பற்றிய முடிவை முழுமையான புரிதலுக்குப் பின்னரே எடுத்துள்ளீர்கள் என்பது உறுதியாகும்.

    ReplyDelete
  13. பார்த்தீர்களா? மியூஸ்க்கு வலிக்கிறது. நியாயமானதுதான்.
    இதைத்தான் நாங்கள் எப்போதும் சொல்லிக் கொண்டிருக்கிறோம். என்ன ஏது என்று தெரிவதற்கு முன்னரே ஒருவர் முஸ்லீம் என்ற ஒரே காரணத்துக்காக......
    இதுபோன்று எத்தனை வலிகளை நாங்கள் உணர்ந்திருக்கிறொம் தெரியுமா.
    இனிமேலாவது இது போன்று (தெளிவாக அறியும் முன்னரே தீர்ப்பெழுதும்) உயர்ஜாதி பத்திரிக்கைகளை கண்டிப்போம்.

    ReplyDelete
  14. >>>> என்ன ஏது என்று தெரிவதற்கு முன்னரே ஒருவர் முஸ்லீம் என்ற ஒரே காரணத்துக்காக.<<<

    நான் பிடிபட்டவர் நிரபராதி என்றும் கூறிவிடவில்லை. முழு உண்மையும் தெரிந்த பின்னால் பேசுவது நல்லது என்பதே என் கருத்து.

    எனக்கும் தங்கள் வலி புரிகிறது. ஒரு அப்பாவியை அவர் முஸ்லீம் என்ற ஒரே காரணத்திற்காகத் தீவிரவாதி என்று கூறுவது நியாயமில்லை.

    அதே சமயத்தில் பிடிபடும் தீவிரவாதிகள் அனைவரும் இஸ்லாமியராகவிருப்பதும், இஸ்லாத்திற்காகத்தான் இவற்றை செய்கிறோம் என்று கூறுவதும் அவர்கள் மேல் இதுபோன்ற ஒரு கருத்துருவாக்கத்தை ஏற்படுத்திவிட்டது.

    நமது தற்போதைய ஜனாதிபதி ஜனாப். அப்துல் கலாம் போன்றவர்கள் வெளிப்படும்பக்ஷத்தில் இது போன்ற கருத்துருவாக்கங்கள் கண்டிப்பாக அழியும்.

    சகோதரரே, தாங்களும் அவர் வெளிப்படுத்தும் கருத்துக்கள் போன்ற உயர்கருத்துக்களை முன்வைத்து அவப்பெயர்களை நீக்கவேண்டும்.

    இஸ்லாமிலுள்ள இந்திய முன்னேற்றத்திற்குப் பாடுபடும் பெரியோரினைப் பற்றி எழுதுங்கள்.

    ReplyDelete
  15. அமெரிக்கா-
    நியு யார்க் நகரம்-
    ஒரு நாய் ஒரு சின்ன குழந்தையின் கவுனை பிடித்து இழுத்து கடித்து குதற முற்பட்டது. ஒரு வாலிபர் நாயிடமிருந்து அந்த குழந்தையை காப்பாற்ற எண்ணி நாயை கட்டையால் ஓங்கி அடிக்கிறார். நாய் அந்த இடத்திலேயே செத்து மடிகிறது. ஒரு போலீஸ்காரர் பார்த்து விட்டு அந்த வாலிபரிடம் வந்து கைகுலுக்கி,
    'ஒரு வீர நியுயார்க் வாசி ஒரு குழந்தையை நாயிடம் இருந்து காப்பாற்றி விட்டார்' என்றார்.
    உடனே அந்த வாலிபர் 'இல்லையே, நான் நியுயார்க் வாசி இல்லையே ' என்கிறார்.
    அந்த போலிசார், 'பரவாயில்லை, ஒரு வீர அமெரிக்கர் குழந்தையை நாயிடமிருந்து காப்பாற்றி விட்டார்' என்கிறார்.
    அதற்கும் அந்த வாலிபர் மறுத்து , 'நான் அமெரிக்கரும் அல்லர்' என்றிருக்கிறார்.
    உடனே அந்த போலிஸ், 'தாங்கள் யாரோ' என்று வினவியதற்கு,
    'நான் ஒரு பாகிஸ்தானி' என்று சொன்னார்.
    அடுத்த நாள் செய்தி தாளில் தலைப்புச் செய்தி இப்படி அலறியது,
    'ஒரு பாகிஸ்தானிய இஸ்லாமிய தீவிரவாதி நாயை நடு ரோட்டில் ஈவு இரக்கமின்றி சுட்டுக் கொன்றார்'- நாகூர்வம்பன்

    ReplyDelete