Tuesday, June 20, 2006

இன்றைய சிறந்த வலைப்பதிவர் ஆவது எப்படி?

உலக அளவில் ஒருவர் பேசப்பட என்ன செய்ய வேண்டும்?

இதற்கு பல வழிகள் உள்ளன. அவற்றில் இன்றைய காலகட்டத்தில் மிக எளிதான வழி கின்னஸில் இடம் பெறுவது, நோபல் பரிசுக்குரியவராக தேர்ந்தெடுக்கப்படுவது போன்றவை.

இதிலும் நோபல் பரிசுக்குரியவராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கான விதிமுறைகள் மிக எளிதானவை. அதற்கு மிகவும் சிரமப்பட வேண்டிய அவசியம் ஒன்றும் இல்லை.

இதற்கு மிகச் சிறந்த உதாரணமாக, அமைதிக்கான நோபல் பரிசினை அமெரிக்க அதிபர், இஸ்ரேலிய அதிபர், ஃபலஸ்தீன அதிபர்(!?!) மூவரும் பகிர்ந்து கொண்ட சம்பவத்தினைக் கூறலாம். விரைவில் இதே போல் உலக அமைதிக்கான நோபல் பரிசு ஜார்ஜ் புஷ் மற்றும் டோனி பிளேருக்கு கூட கிடைக்கலாம். அதற்கான தகுதி அனைத்தும் இவர்களுக்கு உள்ளது.

சரி இதற்கும் நமக்கும் என்ன தொடர்பு என அவசரப்பட வேண்டாம். நான் கூற வந்த விஷயம் வேறு.

இன்றைய தமிழ்வலையுலகில் அதுவும் ப்ளாக் நண்பன் வந்த பிறகு தமிழ் சிந்தனையாளர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும் பஞ்சம் இல்லாமல் போய் விட்டது. வெறும் புத்தப் புழுக்களாக இருந்து என்றாவது இது போல் நாமும் எழுத மாட்டோமா என்று ஏங்கி கிடந்தவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம் என்றால் அது மிகையல்ல.

இதற்கும் ஒருபடி மேலே போய் தமிழ் மணம், தேன்கூடு போன்ற வலை திரட்டிகள் வந்து இவ்வாறு நேரம்போக்கிற்கு எழுத வருபவர்களைக் கூட அவர்களுக்கென ஒரு வாசகர் வட்டத்தை உருவாக்கிக் கொடுத்து நம்மாலும் நன்றாக எழுத முடியும் என அவர்கள் மனதில் உற்சாகத்தை ஊட்டி தமிழ் உலகத்திற்கு நல்ல பல சிந்தனையாளர்களை உருவாக்கிக் கொடுத்துள்ளது. இதற்கு கண்டிப்பாக தமிழ்மண காசி அவர்களுக்கும் தேன்கூடு நிர்வாகிகளுக்கும் தமிழ் உலகம் நன்றி கடன் பட்டுள்ளது.

இவர்கள் இதிலும் ஒரு படி மேலே போய் இவ்வார நட்சத்திரம், இன்றைய வலைப்பதிவர் போன்ற நட்சத்திரப் பதிவாளர்களை தேர்ந்தெடுக்கும் ஓர் முறையினை அறிமுகப்படுத்தி தமிழ் வலைப்பதிவர்கள் மேலும் வளர ஊக்குவித்து வருகின்றனர். இதில் நட்சத்திரமாக தேர்ந்தெடுக்கப்படுவது தமிழ் வலையுலகில் ஓர் பெருமையான விஷயமாக இன்று ஆகிவிட்டது. மட்டுமல்ல தமிழ் வலைச் சமுதாயத்தில் அனைவராலும் பேசப்படுவதற்கு இது ஒரு மிகச் சிறந்த வழியாகவும் ஆகி விட்டது.

அந்த வகையில் நேற்றைய(19/06/2006) தேன்கூடு தளத்தில் சிறந்த வலைப்பதிவாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது நம் அனைவருக்கும் மிகவும் அறிமுகமான சிறந்த மொழிபெயர்ப்பாளரான பெரியவர் திருவாளர் டோண்டு அவர்கள். அவர் இதற்கு மிகவும் தகுதியானவரே. மிகச்சிறந்த எழுத்தாளரான அவர் முற்போக்கான மெச்சத்தக்க எண்ணங்கள் கொண்டவர். அவருக்கு வாழ்த்துக்கள்.

தமிழ் வலையில் தற்போது எழுதிக்கொண்டிருக்கும் ஒவ்வொருவருக்கும் இது போல் நட்சத்திரமாக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற ஆவல் உண்டு. உலக அளவில் இலகுவாக பேசப்படுவோம் என்பது கசக்கக் கூடிய விஷயமா என்ன? நோபல் பரிசு பெறுவது எவ்வளவு எளிதோ அது போலவே இவ்விதம் நட்சத்திரமாக தேர்ந்தெடுக்கப்படுவதும் மிக எளிதானதே.

தேன்கூட்டில் இவ்விதம் தானும் நட்சத்திரமாக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என ஆவல் கொண்டவர்களுக்கு சில உபயோகமான ஆலோசனைகளை இங்கு வைக்கிறேன்.

ஒவ்வொருவரும் எழுதும் எழுத்துக்களில் உள்ள கருத்துக்கள் கீழ்கண்ட முற்போக்கு சிந்தனையை கொண்டிருத்தல் வேண்டும்.

· வரதட்சணைக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும். இது தங்களை ஓர் பெண்ணியவாதியாக காண்பிக்க உதவும். அப்படியே அதற்கு தீர்வாக, "திருமணம் இல்லாமலே ஆண் தன் காம இச்சையை தணித்துக் கொள்ளலாம். அது வெளியே தெரிய வந்தாலும் ஆம்பிள்ளைனா இப்படி அப்படித்தான் இருப்பான் என்று கூறி விடுவார்கள். கால்கட்டு போட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்றும் கூறுவார்கள். ஆனால் பெண் என்ன செய்வாள்? அவள் உடல் உறவை திருமணம் என்ற போர்வையின் கீழ்தான் பெற முடியும். ஆகவே பெண்ணுக்கு திருமணம் அதிக அவசியம் ஆகிறது. கேட்க கசப்பாயிருந்தாலும் இதுதான் உண்மை நிலை. வரதட்சணைக்கு இதுவே முக்கியக் காரணம்." என்று முற்போக்கு சிந்தனையுடன் வரதட்சணையை இல்லாமலாக்க, "ஆண்கள் உடலுறவு விஷயத்தில் முற்போக்குடன் நடந்து கொள்வது போல்" பெண்களும், "திருமணம் செய்யாமலே உடலுறவை அனுபவிக்க முன் வர வேண்டும்" என எழுத வேண்டும். இவ்வாறு வரதட்சணை கொடுமைக்கு நீங்கள் தீர்வெழுதி விட்டால் நீங்கள் தேன்கூட்டின் பார்வையில் "முற்போக்கு கருத்துக்களை கொண்ட சிறந்த பெண்ணியவாதி" என்ற அந்தஸ்தை அடைந்து விட்டீர்கள்.

· அநியாயமாக அடுத்தவரின் சொத்துக்களை ஆக்ரமித்து அதனை திரும்ப பெற முயல்பவர்களை, "பயங்கரவாதி", "தீவிரவாதி" போன்ற அடைமொழிகளுடன் உலகின் முன் அக்கிரமக்காரர்களாக சித்தரித்து விட்டு தன்னை உலகிலேயே மிகப் பெரிய சமாதானவாதியாகக் காட்டிக் கொண்டிருப்பவர்களை, அவர்களின் இந்த ஏகாதிபத்திய ஆக்ரமிப்பு குணத்திற்காகவும் அவர்கள் ஆக்ரமித்து பிடித்து வைத்திருக்கும் சொத்துக்குரியவர்கள் தங்களது மனு தர்ம வளர்ச்சிக்கு எதிரானவர்களனதால் கண்ணை மூடிக்கொண்டு அவர்கள் எந்நாட்டைச் சார்ந்தவர்களானாலும் அவர்களை எனக்கு மிகவும் பிடிக்கும் என எழுத வேண்டும். காரணம் கேட்டால் "பூர்வ ஜென்ம பந்தம்" எனக் கூறிவிட்டால் போதும் நீங்கள் "தம் கருத்தை துணிந்து வல்லமையோடும்,நெஞ்சு துணிவோடும் உரத்து சொல்பவர்" என்ற அந்தஸ்துக்கு உரியவராகி விட்டீர்கள்.

· அடிக்கடி தன்னுடைய பெயர் எல்லா இடங்களிலும் பேசப்பட வேண்டும் என்ற கொள்கையில் உறுதியுடன் இருக்க வேண்டும். எழுதும் பதிவிற்கு யாராவது ஒரு வார்த்தை பின்னூட்டி விட்டால் விடக்கூடாது. அதற்கு மறு மொழி என்ற பெயரிலும், சோதனை என்ற பெயரிலும் தொடர்ந்து நாலைந்து பின்னூட்டமாவது போட்டுவிட வேண்டும். இதன் மூலம் எப்பொழுதும் வலைப்பதிவில் பெயர் அடிபட்டுக்கொண்டே இருக்கும். யாரும் சீந்தவில்லை எனில் ஏதாவது டுபாக்கூர் செய்தாவது பின்னூட்டத்தை அதிகரித்துக் கொண்டே இருக்கவேண்டும். ஒன்றும் வேலைக்காகவில்லை எனில் போலியாக ஒருவரை உருவாக்கி அவரை எதிராக களமிறக்கி பின்னர் குய்யோ முறையோ என்று விளித்து அந்த பெயரை கூறியே ஒரு பதிவைப்போட்டு எங்கெல்லாம் பின்னூட்டுகிறோமோ அதையெல்லாம் அங்கு தொகுக்கலாம். இந்த முறை வெகுவாக பயனளிக்கும். எவ்வாறாயினும் ஒரு 400 500 பின்னூட்டம் வாங்கிவிட்டீர்கள் எனில், "பின்னூட்ட சூப்பர்ஸ்டார்" என்ற பெறர்கரிய பட்டத்துடன் "வலையுலக தெண்டுல்கர்" என்ற புகழும் உங்களை வந்தடையும்.

. இனி முக்கிய கட்டம்: தற்போதைய உலகில் சிறந்த சிந்தனையாளர், பெண்ணியவாதி போன்ற பட்டங்கள் கிடைக்க செய்ய வேண்டியவை:

"தற்சமயம் பெண்கள் தங்கள் இச்சைகளை வெளிப்படுத்துவதில் அதிகம் தயங்குவதில்லை. உடல் இச்சையை அபாயமின்றி எவ்வாறு பெண்கள் பூர்த்தி செய்து கொள்வது?" என்று கூறி பெண்களுக்கு சிறந்த ஆலோசனைகளாக,

1. பெண்கள் தங்கள் உடல் இச்சையை தணித்துக்கொள்ளட்டும். ஆனால் மிகுந்த தற்பாதுகாப்புடன் செயல்படவேண்டும்.. கருவுறக் கூடாது.

2. கருகலைப்பு உடலுக்கு கெடுதல். பால்வினை நோய்கள் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஆணுறை உபயோகத்தை வலியுறுத்த வேண்டும்.

3. ரொம்ப முக்கியம், பரம ரகசியமாகச் செயல்படவேண்டும். மாட்டிக் கொள்ளக் கூடாது.

4. என்னதான் இருந்தாலும் இப்போது இருக்கும் சமூகக் கட்டுப்பாடுகள் கடுமையானவை. ஆகவே மாட்டிக் கொள்ளக் கூடாது.

5. ஒரு மாதவிடாய் வந்தால் அதற்கு முன் எவ்வளவு உடலுறவு கொண்டாலும் கணக்கில் வராது. ஆகவே தேவையில்லாது குற்ற உணர்ச்சி கொள்ள வேண்டாம்.

6. துணிந்தவர்கள்தான் இதையெல்லாம் செய்ய வேண்டும். மற்றவர்களுக்கு? fire-தான்.

என்று கூற வேண்டும். அதாவது சுருக்கமாக கூறவேண்டுமெனில், "ஒரு பெண் தன் இச்சையை தணித்துக்கொள்ள முயல்வது(திருமணத்திற்கு முன்னும் பின்னும்) அவர்களின் உரிமை. அதற்கு அவர்கள் யாரை வேண்டுமானாலும் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். தவறில்லை." இதனை மட்டும் எழுதி விட்டால் போதும். சிறந்த பேராசிரியர், இளைய சமுதாயத்துக்கு அருமையான ஆலோசனைகளைக் கூறுபவர் போன்ற பட்டங்கள் தேடி வரும்.

இதற்குப் பின்னும் நீங்கள் தான் தேன்கூட்டின் இன்றைய சிறந்த வலைப்பதிவர் என்று கூறவும் வேண்டுமோ? போங்க ஜமாய்ங்க! வலைப்பதிவு உலகம் அறிந்த சூப்பர் வலைப்பதிவர் ஆகுங்க. தேன்கூட்டின் சிறந்த வலைப்பதிவர் ஆக முன்வாழ்த்துக்கள்.

குறிப்பு : இறைவன் நாடினால் நாளை "ஈனப்பிறவிகளைக்" குறித்த மாறுபட்ட கண்ணோட்டத்துடன் கூடிய ஓர் சிறந்த வலைப்பதிவு படம் இங்கு காண்பிக்கப்படும். காணத்தவறாதீர்கள்.

14 comments:

  1. சரிங்க உங்களுக்கும் ஒரு சீட் தேன் கூட்டில் போட சொல்லிடலாம். நாளைக்கு நீங்க தான் சிறந்த புரட்சி வலைப்பதிவர்னு போட்டுறலாம்.அப்போ தானே நாளைக்கு நான் உங்களை கலாய்ச்சி சிறந்த புதுமை வலைப்பதிவர்னு பேரு வாங்கலாம் :-))
    (தனி நபர் செய்வது சரியோ தவறோ அதற்காக பொதுவான தளங்களையும் சந்தேககண் கொண்டுப்பார்ப்பது சரியா)

    ReplyDelete
  2. //தனி நபர் செய்வது சரியோ தவறோ அதற்காக பொதுவான தளங்களையும் சந்தேககண் கொண்டுப்பார்ப்பது சரியா//

    சகோதரர் வவ்வால்(ம் வவ்வாலை எல்லாம் சகோதரரே என அழைக்கவேண்டியிருக்கிறது :-) ) அவர்களே,

    தங்கள் கருத்துக்கு நன்றி வருகைக்கும்.

    பொதுவான தளங்களை சந்தேகக்கண் கொண்டு பார்க்கிறேன் என எதை வைத்துக் கூறுகிறீர்கள்.

    இந்த பதிவை ஒரு முறை கூட நன்றாக படித்துப் பாருங்கள். தமிழ் இணைய உலகுக்கு தமிழ்மணம் மற்றும் தேன்கூடு இந்த இரண்டு தளங்களும் ஆற்றியிருக்கும் சேவை அளப்பரியது. இதனை நான் இப்பதிவில் எங்காவது மறுத்திருக்கிறேனா?

    //இதற்கும் ஒருபடி மேலே போய் தமிழ் மணம், தேன்கூடு போன்ற வலை திரட்டிகள் வந்து இவ்வாறு நேரம்போக்கிற்கு எழுத வருபவர்களைக் கூட அவர்களுக்கென ஒரு வாசகர் வட்டத்தை உருவாக்கிக் கொடுத்து நம்மாலும் நன்றாக எழுத முடியும் என அவர்கள் மனதில் உற்சாகத்தை ஊட்டி தமிழ் உலகத்திற்கு நல்ல பல சிந்தனையாளர்களை உருவாக்கிக் கொடுத்துள்ளது. இதற்கு கண்டிப்பாக தமிழ்மண காசி அவர்களுக்கும் தேன்கூடு நிர்வாகிகளுக்கும் தமிழ் உலகம் நன்றி கடன் பட்டுள்ளது.

    இவர்கள் இதிலும் ஒரு படி மேலே போய் இவ்வார நட்சத்திரம், இன்றைய வலைப்பதிவர் போன்ற நட்சத்திரப் பதிவாளர்களை தேர்ந்தெடுக்கும் ஓர் முறையினை அறிமுகப்படுத்தி தமிழ் வலைப்பதிவர்கள் மேலும் வளர ஊக்குவித்து வருகின்றனர். இதில் நட்சத்திரமாக தேர்ந்தெடுக்கப்படுவது தமிழ் வலையுலகில் ஓர் பெருமையான விஷயமாக இன்று ஆகிவிட்டது. மட்டுமல்ல தமிழ் வலைச் சமுதாயத்தில் அனைவராலும் பேசப்படுவதற்கு இது ஒரு மிகச் சிறந்த வழியாகவும் ஆகி விட்டது.//

    இந்த வரிகள் உண்மையாகவே மனம் திறந்து நான் கூறிய வரிகள் தான். இதில் எந்த உள்குத்தும் இல்லை.

    இந்த வரிகள் உங்கள் கண்களுக்குத் தெரியாமல் போனதேன். காரணம் அதற்கும் இந்த பதிவு தான் என்பது தெரிகிறதல்லவா?

    அதாவது பதிவின் பிற்பாதியில் வைத்துள்ள கருத்து முற்பாதியில் நான் கூறிய எதார்த்த உண்மைகளையும் அவ்வார்த்தைகளின் நம்பகத்தன்மையையும் இழக்கச் செய்து விட்டது என்பது உங்கள் கேள்வியிலிருந்து புலனாகிறதல்லவா?

    இதுத் தான் இந்த பதிவின் வாயிலாக நான் கூற வந்த கருத்து. தேன்கூடு மற்றும் தமிழ்மணம் செய்யும் சேவை நிச்சயமாக மெச்சத்தக்க சேவையே. அவர்களின் சிறந்த செயல்பாடுகளுக்கிடையில் இவ்வகையக தேர்ந்தெடுப்பவர்களை "அவரவர்களுக்கு பொருந்தும் படியான" பட்டங்களுடன் அவர்களைக் குறித்து விளக்கம் கொடுத்தால் சரி. அதை விடுத்து மேற்கண்ட சமுதாய முன்னேற்றத்திற்கு மிக அரிய(!!) ஆலோசனைகளை வழங்குபவர்களை இது போன்ற பாராட்டு பத்திரத்துடன் அவர்கள் செய்யும் போது அவர்கள் செய்யும் உண்மையான சேவை கேள்விக்குள்ளாகிறது.

    இதைத்தான் நான் சுட்டிக்காட்ட விரும்பினேன். அல்லாமல் இத்தளங்களை சந்தேகப்பட்டல்ல.

    தங்களின் புரிந்து கொள்ளலுக்கு நன்றி.

    அன்புடன்
    இறை நேசன்

    ReplyDelete
  3. ஸாலிஹ்குலசைJune 21, 2006 at 12:58 AM

    ஒருவர் சிறந்த எழுத்தாளன் முற்போக்கு எழுத்தாளன் என்று போற்றப்பட வேண்டுமெனில்
    1)அவர் பெண்கள் அரைகுறையாக திரிவதற்கு ஆதரவாக எழுதவேண்டும்
    2) இஸ்லாத்தை எதிர்த்து எழுதவேண்டும்
    3) இஸ்லாத்தில் பெண்களுக்கு உரிமையில்லை என்று எழுதவேண்டும்
    4) கவிதை வர்ணனை என்ற பெயரில் ஆபாசத்தை எழுத வேண்டும்
    5) முஸ்லிம்கள் தீவிரவாதிகள் என்று எழுதவேண்டும்
    அப்பத்தானையா பரிசு கிடைக்கும் இல்லையென்றால் நீங்கள் பிற்போக்கு வாதிகள் என்று முத்திரை குத்தப்படுவீர்கள் அதனால்தானே சல்மான் ருஷ்டிக்கும், தஸ்லிமாவுக்கும் சிறந்த எழுத்தாளர்(?)என்ற பட்டங்கள் கிடைத்தது அதுமட்டுமல்ல அந்நாட்டு? ஏழை மக்களின் வரிப்பணத்தில் அவர்களுக்கு பாதுகப்பும் உள்ளது இவர்களால் ஏற்பட்ட கலாச்சார சீர்கேட்டை விட நன்மைகள் குறைவே என்ன செய்ய
    காலம் களிகாலமாகிப்போச்சடா
    கம்யூட்டர் கடவுளாக மாறிபோச்சடா
    இதை கேட்க கேட்க மனிதன் கொண்ட பக்தி கொறையிது அதை கேட்க வந்த சாமிகூட அத்தில் கரையிது என்ற பாடல்தான் ஞாபகம் வருது

    ReplyDelete
  4. ஜனாப் இறை நேஸன்,

    தவறான காரணங்களை முன்வைப்பவருக்குப்போய் தேன்கூட்டில் முக்கியத்துவம் கொடுத்துவிட்டார்கள் என்கிற தொனியில் உங்களின் வயிற்றெரிச்சலைக் கொட்டியிருக்கிறீர்கள்.

    உங்களுக்குத் தவறாகத் தெரிவது எல்லோருக்கும் தவறாகத் தெரியவேண்டிய அவசியமில்லை. அக்கருத்துக்கள் உங்களுக்குத் தவறாகத் தெரியுமானால், திறந்த மனத்துடன் அவை தவறு என்பதற்கு உங்களுக்குத் தோன்றும் காரணங்களை மதிப்பிற்குரிய ஸ்ரீ. டோண்டு ராகவன் அவர்களிடம் அவருடைய வலைத்தளத்திலேயே விவாதிக்கலாம்.

    நீங்கள் தவறு என்று கூறுவதற்கானக் காரணங்கள் தங்களது மதநம்பிக்கையைச் சார்ந்ததாகவிருப்பதால் அவற்றை விவாதத்திற்கான பொருளாக ஆக்க நீங்கள் விரும்பாமலிருக்கலாம். அப்படியானாலும் இதுபோன்று வயிறெரிவது தவறுதான்.

    தங்களுக்குப் பிடிக்காதக் கருத்துக்களைக் கூறுவதாலேயே ஒருவரது கருத்துக்களை மற்றவர்கள் பாராட்டக்கூடாது என்ற சிந்தனையை உங்களிடம் தோற்றுவித்த காரணி எது?

    அதே சமயத்தில் மாறுபட்ட கருத்துள்ளவராயிருந்தாலும் உங்களையும் ஒரு நட்சத்திரப் பதிவாளராக ஏதேனும் ஒரு வலைத் திரட்டி அறிவிக்குமானால், கண்டிப்பாக ஸ்ரீ. டோண்டு ராகவன் முன்னின்று தங்களுக்கு வாழ்த்துக்களே தெரிவிப்பார். வயிறெரியமாட்டார். அவரை அங்கனம் செய்யவைக்கின்ற காரணிகள் உயர்ந்தவை.

    ReplyDelete
  5. >>>> குறிப்பு : இறைவன் நாடினால் நாளை "ஈனப்பிறவிகளைக்" குறித்த மாறுபட்ட கண்ணோட்டத்துடன் கூடிய ஓர் சிறந்த வலைப்பதிவு படம் இங்கு காண்பிக்கப்படும். காணத்தவறாதீர்கள்.<<<<

    ஒவ்வொரு பதிவின் கீழும் இந்த அறிவிப்பை வெளியிடுகிறீர்கள். இதைப் படித்துவிட்டு உங்களது வலைப்பதிவுத் தியேட்டருக்கு நிறையப்பேர் வருவார்கள்.

    என்னுடன் பள்ளியில் படித்த நண்பர்கள் பலர் இது போன்ற அறிவிப்புகளைப் படித்த பின்புதான் "சில குறிப்பிட்ட" தியேட்டர்களுக்கே படம்பார்க்கச் செல்லுவார்கள். ஆனால் படம் முடிவதற்கு முன்னரே திரும்பி வந்துவிடுவார்கள். "அவ்வளவு காசு கொடுத்து ஏண்டா முழு படமும் பார்க்கவில்லை" என்று கேட்டால் விழுந்து விழுந்து சிரிப்பார்கள். எனக்குக் காரணம் தெரியவில்லை. தங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்களேன்.

    ReplyDelete
  6. சகோதரர் ம்யூஸ் அவர்களுக்கு,

    கருத்துக்களுக்கு நன்றி.

    ஆனால் நான் ஏதோ அவர் நட்சத்திரம் ஆனதை நினைத்து வயிறு எரிவதாக கூறியுள்ளீர்களே. சரியான திரித்தல். கூடுதலாக விளக்க ஒன்றும் இல்லை.

    "எதையோ" நினைத்து தியேட்டருக்கு வந்துவிட்டு நினைத்து வந்தது கிடைக்காததால் "பாதியிலேயே" நீங்கள் திரும்ப போயிருக்கிறீர்கள் என்பது உங்களின் இரண்டாவது பின்னூட்டத்திலிருந்து புரிகிறது.

    ஒரு முறை படத்தை முழுவதுமாக பார்க்கவும். பின்னர் "என் வயிற்றெரிச்சல்" எதனால் என்பதை புரிந்தால் பதிலிடவும்.

    "ஈனப்பிறவி" குறித்த படம் நான் என்ன கூற வருகிறேன் என்பதை நன்றாக உங்களுக்கு புரிய வைக்கும். ஆனால் சில தவிர்க்கமுடியாத காரணங்களால் இன்று அப்படத்தை வெளியிட இயலவில்லை. முடிந்தால் இரு நாட்களுக்குள் வெளியிட முயற்சிக்கிறேன்.

    நீங்கள் கண்டிப்பாக வந்து பார்க்க வேண்டும். அப்படத்தையாவது முழுவதுமாக இருந்து பார்க்க கோருகிறேன்.

    அன்புடன்
    இறை நேசன்

    ReplyDelete
  7. இறைவன் நாடினால் நாளை "ஈனப்பிறவிகளைக்" குறித்த மாறுபட்ட கண்ணோட்டத்துடன் கூடிய ஓர் சிறந்த வலைப்பதிவு படம் இங்கு காண்பிக்கப்படும். காணத்தவறாதீர்கள்

    The god of a perveted mind will also be a perverted being.

    ReplyDelete
  8. சகோதரர் ஸ்ரீநிதி அவர்களே வருக.

    நலமாக இருக்கிறீர்களா?

    முன்பு ஒருமுறை இங்கு வந்ததாக நினைவு. அதன் பின் வரவேயில்லையே! ஏன்? உங்கள் பின்னூட்டத்திற்கு பதில் போடாததாலா?

    சாதாரணமாக நான் ஆன்லைனில் எப்பொழுதும் வருவதில்லை. சில நேரங்களில் எல்லா பின்னூட்டத்திற்கும் பதில் போட முடியாமல் போய் விடுகிறது.

    உங்களின் "இரத்தயாத்திரைகள்" பின்னூட்டத்தில் வைத்த "பன்முகத்தன்மைப் பற்றி பேச உங்களைப்போன்ற ஓர் முஸ்லிம் அடிப்படைவாதிக்கு பேச எந்த தகுதியும் இல்லை" மற்றும் "முஸ்லீம் லீக்களும், தமுமுக போன்றவை இஸ்லாமிய அடிப்படைவாதக் கட்சிகள். மதக்கலவரங்களுக்கு இரு தரப்பாரும் காரணம்." என்ற இரு விமர்சங்களுக்கு கண்டிப்பாக பதில் விரைவில் வைக்கிறேன்.

    //The god of a perveted mind will also be a perverted being.//

    நன்றி உங்களின் பாராட்டுக்களுக்கு(!??!). "ஈனப்பிறவி" என்ற வார்த்தை உபயோகத்துக்கு இதனை விட சிறந்த ஒரு பாராட்டு கிடையாது என்பதில் நானும் உங்களுடன் உடன்படுகிறேன்.

    நான் இன்னும் "ஈனப்பிறவி" பதிவே தயார் செய்யவில்லை. அதற்குள் என் மனதிலுள்ளதை சரியாக பிடித்து விட்டீர்களே. நீங்கள் கில்லாடி தான் போங்கள்.

    விரைவில் "ஈனப்பிறவி" படம் போடுகிறேன்.

    அப்பதிவிலும் நீங்கள் கண்டிப்பாக இந்த கமெண்டை வைக்கவேண்டும் என உங்களை கேட்டுக் கொள்கிறேன்.

    மீண்டும் என் மன ஓட்டத்தோடு இணைந்து "ஈனப்பிறவி" வார்த்தையை உபயோகித்தவருக்கு மேற்கண்ட அருமையான "பாராட்டை(!!??)" தெரிவித்த உங்களுக்கு நன்றிகள் பல ஆயிரம்.

    நன்றியுடன்

    இறை நேசன்.

    ReplyDelete
  9. இறை நேசன்,
    நல்ல பதிவு. அப்புறம் என்னுடைய பதிவில் உங்களின் பின்னூட்டம் இட்டு சுட்டியை கொடுத்தக்கு மிக்க நன்றி..

    சந்தோஷ்.

    ReplyDelete
  10. மரத் தடிJune 30, 2006 at 12:17 AM

    //தவறான காரணங்களை முன் வைப்பவருக்குப்போய் தேன்கூட்டில் முக்கியத்துவம் கொடுத்துவிட்டார்கள் என்கிற தொனியில் உங்களின் வயிற்றெரிச்சலைக் கொட்டியிருக்கிறீர்கள்.//

    பார்ப்பன ம்யூஸ் அவர்களே,

    தவறான ஒரு தகவல் உலகம் முழுவதும் பரவுதல் முறையாகுமா? தவறான ஒரு தகவல் மக்களை சென்றடைவது சட்டப்படி குற்றம். எங்கே விமானத்தில் குண்டு இருக்கிறது என்று தவறான தகவலை போன் போட்டு சொல்லிப் பாருங்களேன்.

    //உங்களுக்குத் தவறாகத் தெரிவது எல்லோருக்கும் தவறாகத் தெரியவேண்டிய அவசியமில்லை.//

    சரி உங்கள் பார்வையில் டோண்டு சொன்னது சரியான கருத்து என்றே கொள்வோம்.

    அவர் சொன்ன ஆலோசனைகளை தங்களின் சகோதரியிடமும் தாயிடமும் சென்று கூறி நிறைவேற்றுவீர்களா?

    //அக்கருத்துக்கள் உங்களுக்குத் தவறாகத் தெரியுமானால், திறந்த மனத்துடன் அவை தவறு என்பதற்கு உங்களுக்குத் தோன்றும் காரணங்களை மதிப்பிற்குரிய ஸ்ரீ. டோண்டு ராகவன் அவர்களிடம் அவருடைய வலைத்தளத்திலேயே விவாதிக்கலாம்.//

    அங்கே டோண்டுக்கு இல்லை இல்லை அவரின் கருத்துக்கு எதிராக எழுதப்படும் எந்த கருத்தும் வெளியிடப்படுவதில்லை. அவ்வாறு எழுதுபவர்கள் பார்ப்பன எதிர்ப்பாளர் என்றும் திம்மித்துவவாதி என்றெல்லாம் கட்டம் கட்டப்படுகிறார்கள். உங்கள் பார்ப்பன நண்பர்கள் வரிசையாக வந்து ஜல்லியடித்துச் செல்வீர்கள். தேவையா இதெல்லாம் எங்களுக்கு? அதுசரி இறைநேசனை அங்கே வந்து எழுதச் சொல்ல நீங்கள் யார்? டோண்டுவின் கைக்கூலியா அல்லது இறைநேசன் அவர்களின் முதலாளியா? டோண்டுவெல்லாம் ஒரு மனிதன்! அவருக்கு மதிப்பிற்குரிய ஸ்ரீ பட்டம் எல்லாம் ஒரு கேடு!

    //நீங்கள் தவறு என்று கூறுவதற்கானக் காரணங்கள் தங்களது மத நம்பிக்கையைச் சார்ந்ததாக விருப்பதால் அவற்றை விவாதத்திற்கான பொருளாக ஆக்க நீங்கள் விரும்பாமலிருக்கலாம்.//

    அவரவர்க்கு அவரவர் மதம் முக்கியமாக இருக்கலாம். அதற்காக பார்ப்பனர்களைப்போல இறைநேசன் மற்ற மதத்தினரை கண்டபடி திட்டவில்லை. உம்மைப்போல அன்னை திரேசாவை புகழுக்காக சேவை செய்தார், போட்டோ, டிவிக்காக சேவை செய்தார் என்று அவதூறு பரப்பவில்லை. உங்கள் ஜாதி, வஜ்ரா சங்கர் ஒருபடி மேலேபோய் அசிங்கமாக எழுதுகிறார்.

    //அப்படியானாலும் இதுபோன்று வயிறெரிவது தவறுதான்.//

    யாருக்கு வயிறு எரிகிறது? கண்ணாடியைப் பார்த்துக் கொள்ளுங்கள்.

    //தங்களுக்குப் பிடிக்காதக் கருத்துக்களைக் கூறுவதாலேயே ஒருவரது கருத்துக்களை மற்றவர்கள் பாராட்டக்கூடாது என்ற சிந்தனையை உங்களிடம் தோற்றுவித்த காரணி எது?//

    அதையேதான் நானும் கேட்கிறேன். இறைநேசன் அவர்களை உங்களைப் போன்ற பார்ப்பனர்களுக்குப் பிடிக்காமல் போனதன் மர்மம்தான் என்ன?

    //அதே சமயத்தில் மாறுபட்ட கருத்துள்ளவராயிருந்தாலும் உங்களையும் ஒரு நட்சத்திரப் பதிவாளராக ஏதேனும் ஒரு வலைத் திரட்டி அறிவிக்குமானால், கண்டிப்பாக ஸ்ரீ. டோண்டு ராகவன் முன்னின்று தங்களுக்கு வாழ்த்துக்களே தெரிவிப்பார். வயிறெரியமாட்டார். அவரை அங்கனம் செய்யவைக்கின்ற காரணிகள் உயர்ந்தவை.//

    ஒரு வலைப்பதிவரை ஒரு திரட்டி பாராட்டுகிறது என்றால் நிச்சயம் அந்த வலைப்பதிவர் அதற்கு தகுதி உள்ளவராக இருக்க வேண்டும். சிறு குழந்தைகளுக்கும் காம ஆசை வந்ததால்தான் பால்ய விவாகங்கள் தோன்றின என்று உளறி முத்துக்குமரன் அவர்களிடம் செருப்படிபட்டு ஓடி வந்தது மறந்து விட்டதா டோண்டுவுக்கு?

    //என்னுடன் பள்ளியில் படித்த நண்பர்கள் பலர் இது போன்ற அறிவிப்புகளைப் படித்த பின்புதான் "சில குறிப்பிட்ட" தியேட்டர்களுக்கே படம்பார்க்கச் செல்லுவார்கள். ஆனால் படம் முடிவதற்கு முன்னரே திரும்பி வந்துவிடுவார்கள்.//

    தியேட்டரில் 11மணி காட்சி ஏ படம் பார்த்த நீயெல்லாம் பேச வந்துட்டே!

    //"அவ்வளவு காசு கொடுத்து ஏண்டா முழு படமும் பார்க்கவில்லை" என்று கேட்டால் விழுந்து விழுந்து சிரிப்பார்கள். எனக்குக் காரணம் தெரியவில்லை. தங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்களேன்.//

    அந்தக் கூட்டத்தில் நீயும் ஒரு ஆள்தான். யோக்கியர் வறார் சொம்பை எடுத்து உள்ள வைன்னு சொல்வாங்க. 11மணி காட்சி பாக்குற மூஞ்சில்லாம் கற்பைப் பத்தி அப்படித்தான் கொச்சையாக எழுதும்!

    ReplyDelete
  11. மரத் தடிJune 30, 2006 at 12:18 AM

  12. //அவர் சொன்ன ஆலோசனைகளை தங்களின் சகோதரியிடமும் தாயிடமும் சென்று கூறி நிறைவேற்றுவீர்களா?//

    பெண்களைக் குறித்து கருத்துக்களை கூறும் முன் ஒவ்வொருவரும் தான் பிறந்தது ஒரு பெண்ணின் வயிற்றிலிருந்து என்பதையும், தனக்கும் சகோதரி, மகள் உள்ளனர் என்பதையும் சற்று நினைவு கூர்ந்தால் இத்தனை கழிசடை எண்ணங்கள் மனதில் வருவதிலிருந்து தவிர்ந்து கொள்ளலாம்.

    என்னிடம் கேட்டால் இவ்வுலகில் மிக உயர்ந்தது, மதிப்பதற்கு தகுதி வாய்ந்தது, ஆண்கள் தங்களுடைய மனதில் எந்நேரமும் நினைந்து நன்றி பெருக்குடன் மரியாதையுடன் காண வேண்டியது தாய்மையுடைய பெண்கள் என்பேன்.

    வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி மரத்தடி மற்றும் சகோதரர் சந்தோஷ் அவர்களுக்கு.

    அன்புடன்
    இறை நேசன்

    ReplyDelete
  13. என் பெயரில் வெளிவந்துள்ள பின்னூட்டம் போலி. அது நான் பதித்ததல்ல.

    அதை களைந்து விடுமாறு வேண்டிக்கொள்கிறேன்.

    தங்கள் ஒத்துழைப்புக்கு நன்றி

    ஜயராமன்

    ReplyDelete
  14. //நீங்கள் தவறு என்று கூறுவதற்கானக் காரணங்கள் தங்களது மதநம்பிக்கையைச் சார்ந்ததாகவிருப்பதால்//

    அப்படியா? கீழே உள்ளதெல்லாம் உங்கள் மத நம்பிக்கையின்படி சரி என்று சொல்ல வருகிறீர்களா

    //1. பெண்கள் தங்கள் உடல் இச்சையை தணித்துக்கொள்ளட்டும். ஆனால் மிகுந்த தற்பாதுகாப்புடன் செயல்படவேண்டும்.. கருவுறக் கூடாது.
    2. கருகலைப்பு உடலுக்கு கெடுதல். பால்வினை நோய்கள் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஆணுறை உபயோகத்தை வலியுறுத்த வேண்டும்.
    3. ரொம்ப முக்கியம், பரம ரகசியமாகச் செயல்படவேண்டும். மாட்டிக் கொள்ளக் கூடாது.
    4. என்னதான் இருந்தாலும் இப்போது இருக்கும் சமூகக் கட்டுப்பாடுகள் கடுமையானவை. ஆகவே மாட்டிக் கொள்ளக் கூடாது.
    5. ஒரு மாதவிடாய் வந்தால் அதற்கு முன் எவ்வளவு உடலுறவு கொண்டாலும் கணக்கில் வராது. ஆகவே தேவையில்லாது குற்ற உணர்ச்சி கொள்ள வேண்டாம்.
    6. துணிந்தவர்கள்தான் இதையெல்லாம் செய்ய வேண்டும். மற்றவர்களுக்கு? fireதான்.//

    அவ்வாறெனில்..... அந்த மதத்தையே ஒரு மீள்பார்வை பாருங்க ஸாமீ.

    ReplyDelete