Saturday, December 3, 2005

வளர்ச்சிப் பாதையில் இந்தியா!

வருங்கால இந்தியா எவ்வாறு இருக்கும்?

ஒவ்வொரு இந்திய குடிமகனும் கேட்க வேண்டிய, தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான விஷயம் இது. சில கிரிமினல் அரசியல்வாதிகளின் ஊழலால் மற்ற வளர்ச்சியடைந்த நாடுகளை விட சுமார் 50 ஆண்டுகள் பின் தங்கி இருக்கும் நாம் வருங்காலத்தில் மற்றவர்களுக்கு சமமாக எல்லாத்துறையிலும் முன்னேற முடியுமா என்பது நாட்டு முன்னேற்றத்தில் அக்கறை கொண்ட ஒவ்வொருத்தரின் மனதில் எழும்பும் மிகப் பெரிய சந்தேகமாகும்.

ஒரு நாடு முன்னேற வேண்டுமெனில் முதலில் அந்நாடு தன்னிறைவு அடைய வேண்டும். முக்கியமாக தனக்கு தேவையான சாதனங்களுக்கு மற்றவரின் முன் கையேந்தும் நிலை மாற வேண்டும். இது சாதாரண ஒரு மனிதனில் ஆரம்பித்து ஒரு நாடு வரை எல்லாவற்றுக்கும் பொதுவான விஷயமாகும்.

அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தும் செய்தி என்னவெனில்,
சமீப காலங்களில் இந்தியா ஒவ்வொரு துறை சார்ந்த விஷயங்களில் தனக்கு தேவையான சாதனங்களை தானே தயாரித்து அதனை மற்ற நாடுகளுக்கும் ஏற்றுமதி(விற்கும்) செய்யும் நிலையை சமீப காலங்களில் எட்டியுள்ளது தான். இதனை நாம் சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. அதுவும் ஊழல் ராஜாக்களின் பிடியில் கைப்பாவையாக இருக்கும் இந்தியாவில் இது ஒரு மாபெரும் சாதனையாகும்.

ஒவ்வொரு நாட்டுக்கும் சவாலாக இருப்பது பாதுகாப்புத் துறையாகும். முக்கியமாக இத்துறையில் எந்நாடு மற்றவரை எதிர் பார்க்காமல் வித்தியாசமான பாதுகாப்பு சாதனங்களை தன்னால் உருவாக்கிக் கொள்ள முடியும் என்பதை உலகுக்கு காட்டுகிறதோ அந்நாடு உலகின் முன் தலை நிமிர்ந்து நிற்கும் என்பது நிதர்சனமான உண்மை. அமெரிக்கா உலகில் இறுமாந்து நிற்பதற்கு இது தான் காரணம் என்பதும் அனைவருக்கும் தெரியும்.

இந்தியாவைப் பொறுத்த வரை கடந்த காலங்களில் நமது பாதுகாப்பு தளவாடங்களுக்கு மற்றவரைச் சார்ந்து நிற்கும் நிலை இருந்தது. இதனை பயன்படுத்திக் கொண்டு தான் வருங்கால உலகிற்கு மிகப் பெரிய தலைவலியாக இருக்கும் இன்றைய உலக அதி பயங்கர தீவிரவாதி அமெரிக்கா, ராணுவ தளவாடங்களை நமக்கும் அதே நேரத்தில் நமக்கு சவாலாக இருக்கும் பாகிஸ்தான் போன்ற சுற்று புற நாடுகளுக்கும் விற்று தன்னுடைய பொருளாதாரத்தை நிலை நிறுத்திக் கொண்டது. (சகோதரர்களுக்கிடையில் குழப்பமும், பிரச்சினயும் என்றும் நிலை நின்றாலே மூன்றாம் மனிதனுக்கு அங்கு இடமிருக்கும் என்ற சாதாரண மூன்றாந்தர சிந்தனை).

இந்நிலைக்கு இதோ இந்தியா ஆப்பு வைக்க ஆரம்பித்து விட்டது.

ஆம். இன்றைய மிகவும் மகிழ்ச்சிகரமான செய்தி, முழுக்க முழுக்க இந்திய விஞ்ஞானிகளின் முயற்சியில் உருவான ஆகாஷ் ஏவுகணையை நேற்று இந்திய விஞ்ஞானிகள் விண்ணில் செலுத்தி சாதனை படைத்துள்ளனர். இது நிச்சயமாக இந்தியாவின் வளர்ச்சிப் பாதையில் ஓர் மைல் கல்லாகும்.

பல்வேறு பிரச்சினைகளுக்கிடையில் ஓர் மிகப் பெரிய சாதனையை மிக அமைதியாக செய்துக் கொண்டிருக்கிறது இந்தியா. இது நிச்சயம் நமது வளர்ச்சிக்கு உறு துணை புரியும். அதே நேரம் கவனிக்கப் பட வேண்டிய மற்றொரு விஷயமும் உண்டு. உலகில் எந்த நாடும் தன்னை விட மிஞ்சுவதை என்றுமே உலக அண்ணன் அனுமதித்ததில்லை. அதற்கு சோவியத் யூனியனிலிருந்து பல்வேறு உதாரணங்களைக் காட்ட முடியும். தனக்கு சவாலாக வளரும் என்று தோன்றினால் அந்நாட்டை எந்த அயோக்கியத்தனம் செய்தாவது அடித்து வளர விடாமல் தடுப்பதில் அது கவனம் செலுத்தும்.

சமீப காலங்களில் இந்தியாவுடன் அண்ணன் நெருங்குவதற்கு காரணமும் அது தான். ஆசியாவில் சோவியத் யூனியன் உடைந்த பிறகு சொல்லப் படும் ஒரே சக்தியாக வளரும் சீனா தான் அதற்கு காரணம். நாளை ஏதாவது காரணம் கூறி இந்தியாவிற்கு எதிராக களமிறங்காது என்பதும் நிச்சயமில்லை.

இப்பிரச்சினைகளை கருத்தில் கொண்டு தந்திரமாக நீங்கினால் வரும் காலங்களில் இந்தியா உலகில் ஓர் பெரும் சக்தியாக இருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. அதற்காக இந்தியர்களாகிய நாம் ஒவ்வொருவரும் உண்மையாக உழைப்போம். வாழ்க இந்தியா! வளர்க அதன் புகழ்!

10 comments:

  1. சகோதரர் இறைநேசன்,
    மகிழ்ச்சியான செய்தி.பகிர்ந்து கொண்டதற்கு நன்றி!

    ReplyDelete
  2. இறைநேசன்,

    கேட்கவே சந்தோசமாக இருக்கிறது. இந்தியாவின் வளர்ச்சியில் என்றுமே அமெரிக்காவிற்கு எரிச்சல் இருந்ததுண்டு. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக இருப்பதால் பல்லைக் கடித்துக் கொண்டு இருக்கிறது. மேலும் பி.ஜே.பி போன்ற மதவாத சக்திகளிடம் நம் பாரத நாடு சிக்கியதாலும் இத்தகைய வளர்ச்சி சற்று தடைபட்டிருந்தது என்பது தற்போதைய காங்கிரஸ் கூட்டனி அரசின் செயல்பாட்டின் மூலம் அறிய முடிகிறது.

    மேதை மன்மோகன் சிங் மற்றும் விஞ்ஞானி அபுல்கலாம் இவர்களைத் தலைவர்களாகக் கொண்ட கொண்ட இந்தியாவின் வளர்ச்சி கூடிய விரைவில் அமெரிக்காவின் வயிற்றில் மேலும் புளியைக் கரைக்கும்.

    அமெரிக்கா மற்றும் பி.ஜே.பி ஆகிய இரண்டு தீயசக்திகளிடமிருந்தும் இந்தியர்களாகிய நாம் இனிதான் மிகுந்த கவனமாக இருக்கவேண்டும்.

    ReplyDelete
  3. நாளை ஏதாவது காரணம் கூறி இந்தியாவிற்கு எதிராக களமிறங்காது என்பதும் நிச்சயமில்லை.//

    சவாலாக வரும் பொழுது நிச்சயம் இது நடக்கும். அது வரை உசாமா உயிரோடு இருக்க வேண்டுவோம். சில வேளை அப்பொழுது இந்தியாவிற்கு உசாமா ஆதரவு தெரிவிக்கலாம்!:-)

    ReplyDelete
  4. //உலக அதி பயங்கர தீவிரவாதி அமெரிக்கா//

    don't write like stupid

    ReplyDelete
  5. ஏன்யா சப்போட்டு, ஒலகத்துல நடக்கிய அத்தன மொள்ளமாரித்தனத்துக்கும் அவன் தானய்யா காரணம். பின்ன அவன் "ஒலக அதி பயங்கர தீவிரவாதி" இல்லாம வேற இன்னா? ஒனக்கு அவன் படியளக்கியான்னு ஒள்ள பாசமா?

    ReplyDelete
  6. நன்றி இறைநேசன்
    வாழ்க இந்தியா

    ReplyDelete
  7. வருகைக்கும் கருத்து தெரிவித்தமைக்கும் நன்றி! ஜோ, நல்லடியார், சப்போர்ட், அனானிமஸ்கள், மதுமிதா அவர்களே!(ஜோ பேருரை பாணியில்)

    ReplyDelete
  8. இறைநேசன்,
    மிகவும் நல்ல பதிவு. infact மிகவும் மகிழ்ச்சியை கொடுத்த பதிவு. ஆனால் நாம் இன்னமும் services sectorல் தான் வளர்ச்சி பொற்றுள்ளோம் தயாரிப்பு, அடிப்படைவசதி(infrastructure), consumer awareness ஆகிய துறைகளில் இன்னும் வளரவேண்டும். நம்மை போன்ற இளைஞர்களின் ஆக்கமும் அப்துல் கலாம், மன்மோகன் சிங், போன்ற மேதைகளின் வழிகாட்டுதலாலும் அந்த இலக்கை நாம் அடையும் காலம் நேடுதொலைவில் இல்லை.

    சந்தோஷத்துடன்
    சந்தோஷ்

    ReplyDelete
  9. அட்றா சக்கைDecember 8, 2005 at 12:21 PM

    திரு இறைநேசன்,

    தங்களின் இந்தப் பதிவு தினமலரில் (06/12/2005) அன்று வந்துள்ளது.. பாராட்டுக்கள்..

    ReplyDelete
  10. தங்களின் இந்தப் பதிவு தினமலரில் (06/12/2005) அன்று வந்துள்ளது.. பாராட்டுக்கள்..

    ஏற்கெனவே அறிவேன்.

    மலர்களுக்கு நார் மணம் சேர்க்குமா அல்லது நாருக்கு "மலர்கள்" மணம் சேர்க்குமா? இந்த ஆராய்ச்சியில் நான் ஈடுபட்டிருந்ததால் இதனைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை!(:-))

    எனினும் சுட்டி காட்டியமைக்கு நன்றி அட்றா சக்கை(என்ன இழவு பெயர்களோ :-)) அவர்களே!

    ReplyDelete