Wednesday, December 28, 2005

பா.ஜ.க. வெள்ளிவிழா சிறப்பிதழ்

ஆட்சியில் இல்லாததால் வறுமையில் வாடும் பா.ஜ.க (ஊழல் முன்னேற்ற முன்னனி) எம்.பிக்கள் நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க பணம் வாங்கியது, உமாபாரதியின் சண்டித்தனங்கள், ஜோஷியின் அஜால் குஜால் வேலைகளால் கலகலத்துள்ள RSS+BJP கூடாரம். கடந்த இருபத்தைந்து ஆண்டுகளில் "பல" சாதனைகளைப் படைத்து விட்டு, கடந்த இருபத்தைந்து வாரங்களாக நடக்கும் உள்குத்துகள் வருத்தமளிப்பதாக அத்வானி பா.ஜ.கவின் வெள்ளி விழா மாநாட்டில் ஆதங்கப்பட்டுள்ளார்.

மதத்தின் பெயரால் மக்களை கூறு போட்டு ஓட்டு வேட்டையாடி ஆட்சியைப் பிடித்த பா.ஜ.க பலமுறை இந்திய அரசால் தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கமான ஆர்.எஸ்.எஸ்ஸின் அரசியல் முகமூடி என்பதை அறிவோம்.
13 நாட்களில் தொடங்கி பிறகு 13 மாதங்கள் ஆட்சி செய்து இறுதியாக ஐந்து வருடங்களை ஓட்டிய பா.ஜ.கவின் சாதனைகளையும் அதற்கு பின்னனியில் இருந்த சிந்தனைச் சிற்பிகளையும் அறிந்து கொள்வோம்.

அடல்பிகாரி வாஜ்பாய்

இந்திய சுதந்திரத்திற்கு பாடுபட்ட தியாகிகளை ஆங்கிலேய இராணுவத்திடம் காட்டிக் கொடுத்ததிலிருந்து (பார்க்க) திருவாளர் வாய்பாய் அவர்களின் அரசியல் வாழ்க்கை தொடங்கியது. முதல்நாள் ஒரு அறிக்கை விட்டுவிட்டு மறுநாள் RSS இன் நெருக்குதலால் நான் அப்படிச் சொல்லவில்லை; பத்திரிக்கையாளர்கள் திரித்து எழுதிவிட்டார்கள்" என்று அந்தர் பல்டி அடிப்பதில் மன்னன்.

லால் கிருஷ்ண அத்வானி

400 ஆண்டுகால இந்தியாவின் பாரம்பரியச் சின்னங்களில் ஒன்றான பாபர் மசூதியை இடித்ததில் முக்கிய குற்றவாளியாக இருந்து பிறகு இவ்வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார்?! இவர் கட்டுப்பாட்டின் கீழிருந்த CBI மறுமுறையீடு செய்யவில்லை. நாட்டிற்கு மட்டும் இவர் வில்லனல்ல தன் வீட்டிலும் வில்லனாகத்தான் இருந்திருக்கிறார்.

சுஷ்மா ஸ்வராஜ்

சானியா மிர்ஜா தொடையைக் காட்டி பொதுவில் விளையாடுவது, உடை ஒழுக்கம் பேணும் இஸ்லாமிய ஒழுக்கநெறிக்கு எதிரானது என்று முஸ்லிம் பெரியவர் சொன்னதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்ணுரிமை பேசிய இவர், நம் நாட்டிற்காக தன் இன்னுயிரை ஈந்த ராஜீவ் காந்தியின் துணைவி அன்னை சோனியா பிரதமரானால் மொட்டை அடித்து விதவைக் கோலம் பூண்வேன் என்று மிரட்டி தன் பெண்ணுரிமைப் போராட்டத்தின் முரண்பட்ட பக்கங்களைக் காட்டிக் கொண்டவர்.

ஜார்ஜ் பெர்ணாண்டஸ்

இந்தியாவின் பாதுகாப்பு மந்திரியாக இருந்த போது அரசுமுறைப்பயனமாக அமெரிக்கா சென்றபோது, அமெரிக்க ஏர்போர்ட்டில் நிர்வாண சோதனை செய்யப்பட்ட உலகின் ஒரே பாதுகாப்பு அமைச்சர். டெகல்கா வெளிப்படுத்திய ஊழலிலும் கலந்து கொண்ட பெருமை இவருக்குண்டு.

நரேந்திர மோடி

குஜராத் கலவரத்தின் பிதாமகன். ஆர்.எஸ்.ஏஸின் செயல்திட்டங்களை நடைமுறைப்படுத்தும் செல்லப்பிள்ளை. இவர் தலைமையிலான பரிவாரக் கும்பலின் அட்டகாசங்களால், எந்த முகத்தை வைத்துக் கொண்டு இனி சர்வதேச தலைவர்களை சந்திப்பேன்? என்று வாய்பாயே வருந்தும் அளவுக்கு தன் மாநில முஸ்லிம்களை நரலி கொடுத்து இரண்டாம் முறையாக முதல்வரானவர். தற்போதைய நிலவரப்படி இவர் ஆட்சியில் நடந்த கலவரத்தில் காணாமல் போனவர்களை கும்பலாக எரித்து புதைத்த சடலங்கள் தோண்டப்பட்டு வருகின்றன.

உமாபாரதி:

பெண் துறவி என்று சொல்லிக் கொண்டாலும் RSS இன் கோவிந்தாச்சார்யாவை காதலித்து, கருத்த தோலுடைய தமிழரான கோவிந்தாச்சார்யவை உமாபாரதியின் அண்ணன் நிராகரித்தால் துறவியாகவே காலம் தள்ள வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டு, பாபர் மசூதி இடிப்பில் முக்கிய பங்கும் இவருக்குள்ளது. இவரால் முதல்வராக நியமிக்கப்பட்ட பாபுலால் கவுர், கடைசியில் இவரையே கவுத்திய பெருமையும் அதனால் எழுந்த சச்சரவுகளால் பி.ஜே.பியிலிருந்து அடிக்கடி அடிப்படை உறுப்பினர் தகுதியிலிருந்து நீக்கப்பட்டு தற்போது நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளார். வரும் பிப்ரவரி-2006 இல் புதிய கட்சி தொடங்கவும் திட்டம் உள்ளதாம்.

வெங்கய்யா நாயுடு
இவரும் உழல் மன்னன் தான். ரூரல் மந்திரியாக இருந்தபோது 40 கோடியை சுருட்டியதாக இத்தளம் சொல்கிறது.

இப்படி பல அரிய சாதனையாளர்களை தன்னுள்ளே கொண்ட கட்சி வெள்ளி விழா கொண்டாடுகிறது. வாழ்த்துக்கள்.

9 comments:

  1. பாரதீய ஜனதாக்கட்சியின் சாதனைகள் புல்லைரிக்குதுங்க.

    ReplyDelete
  2. அத்வானியின் அற்புத ஜோக்

    பத்திரிகையாளர்கள் : 6 பா.ஜ.க. எம்.பி.க்கள் லஞ்சம் வாங்கியது குறித்து...
    அத்வானி : என்னுடைய கருத்தை இது மேலும் வலுப்படுத்துகிறது. இதுபோன்ற தவறுகளுக்கு காங்கிர° கலாச்சாரமே காரணம். எனவே, காங்கிர° வேறோடும், வேரடி மண்ணோடும் வீழ்த்தப்பட வேண்டும்.
    (இந்தியன் எக்°பிர°, 29.12.2005)

    நாம் : எனக்கு ஒரு கதை நினைவுக்கு வருகிறது: நான் இதை குழந்தையாக இருந்தபோது பாட்டி சொன்னது...
    ஆடு ஒன்று நீரோடையின் கீழ்ப்பகுதியில் தண்ணீர் குடித்துக் கொண்டிருந்தது. நீரோடையின் மேல் பகுதியில் தண்ணீருக்காக வந்த நரி கீழ்ப்பகுதியில் இருந்த ஆட்டைப் பார்த்து,
    நீ எப்படி நான் குடிக்கும் தண்ணீரை கலங்கப்படுத்தலாம் என்று கேட்டது?
    ஆடு, நான் கீழ் பகுதியில் இருக்கிறேன். நீயோ மேல் பகுதியில் இருக்கிறாய், அப்படியிருக்கையில் நான் எப்படி நீ குடிக்கும் தண்ணீரை கலங்கப்படுத்தினேன் என்றது.
    நரி : நீ கலங்கப்படுத்தவில்லையென்றால், உன், பாட்டன், பூட்டன் யாராவது கலங்கப்படுத்தியிருப்பார்கள் என்று ஆட்டின் மீது பாய்ந்தது.
    இந்த கதைக்கு அத்வானிதான் விளக்கம் கொடுக்க வேண்டும். உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்கள்....

    ReplyDelete
  3. ஆஹா பாரதிய ஜனதா கட்சியோட வெள்ளி விழா சாதனைகளை இப்படி புட்டு புட்டு வைக்கிறீங்களே

    ஐயா, நடாளுமன்றத்துள கேள்வி கேட்க லஞ்சம் வாங்கி கட்சிக்கு பெருமை சேர்த்த மறந்துட்டீங்களே

    பங்காரு லட்சுமணன் தலைவராக இருந்த பொழுது சிரித்துக் கொண்டே லஞ்சம் வாங்கிய பெருமையை ஏன்யா இந்த வெள்ளிவிழால சொல்ல மறந்தீங்க

    ReplyDelete
  4. அட்றா சக்கைDecember 29, 2005 at 1:48 AM

    இது தான் தரமான மாற்றுக் கட்சி என்றெல்லாம் நிறைய பேர் போட்ட கூப்பாடு இப்படி எல்லாம் அழகு ?! பார்க்கத் தானா?

    பார தீய ஜனதாக் கட்சி என்பது சரிதான்

    ReplyDelete
  5. மூன்று மாதங்களுக்கு முன்னர், "இது பி.ஜே.பி யுகம்" என்று ஒருவர் தமிழோவியப் பின்னூட்டம் ஒன்றில் கருத்துக் கூறியிருந்தார். இப்போதன்றோ பொருள் (!) புரிகிறது.

    ReplyDelete
  6. இது குறித்து பாரதீய ஜனாதா ஆதரவாளர்களான நேசமுடன் வெங்கடேஷ், பாரா, பத்ரி, அருண்வைத்யநாதன், சீமாச்சு, அன்புடன்பாலா, முகமூடி, மாயவரத்தான், சீமாச்சு, கிச்சு, திருமலை, டோண்டு போன்ற பாப்பான்கள் என்ன நினைக்கின்றனர் என அறிந்து கொள்ள ஆசை.

    ReplyDelete
  7. வாஜ்பாய காந்தி என்ன வழிகாட்டினாரோ அதைதானே செய்தார்!
    சத்தியம் பேச வேண்டும் என்பது காந்திய கொள்கை இல்லையா ?

    நேரு கூட பிரிட்டிஷ் பிரதமருக்கு "உங்கள் போர் கைதி ரஷ்யியாவில் இருப்பதாக தகவல் கிடைத்து உள்ளது.பார்த்து" என்று கடிதம் எழுதினார்.அந்த போர் கைதி வேறு யாரும் அல்ல நேதாஜி தான்!

    //கருத்த தோலுடைய தமிழரான கோவிந்தாச்சார்யவை//
    அவர் தான் தமிழ்ர் என்று எப்போது சொன்னார் ?

    //ஜார்ஜ் பெர்ணாண்டஸ்//

    இவரை போன்ற இரானுவ மந்திரி இந்தியாவிக்கு கிடைப்பது கடினம்.முன்னால் இரானுவ தளபதி பத்மநாபன் சென்னையில் தான் உள்ளார், அவரிடம் வேண்டுமாலும் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.

    ReplyDelete
  8. //ஜார்ஜ் பெர்ணாண்டஸ்//

    கார்கில் போரில் இறந்த் வீரர்களுக்கு சவப்பெட்டி வாஙகியதில் பணம் பார்த்த இந்த சவம் தின்ற சாதனையை எப்படி ஐயா மறக்கலாயீற்று.....

    மிஸ்டர் பொதுஜனம்

    ReplyDelete
  9. mud slinging on BJP, of course every other party has such characters, exceptions are left
    raghs

    ReplyDelete