காலம் எவ்வளவு தான் முன்னேறினாலும் காலம் காலமாக பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகள் மட்டும் எந்த விதத்திலும் குறைந்த பாடில்லை. ஒரு காலத்தில் பெண்களை மனிதப் பிறவியாகவே இந்த ஆண்வர்க்க சமூகம் அங்கீகரிக்கவில்லை. காலம் காலமாக பெண்களை ஆண்களுக்காகப் படைக்கப்பட்ட போகப் பொருளாகவே இந்த சமூகம் நினைத்துக் கொண்டிருந்தது. ஆண்களை "சந்தோஷப்" படுத்துவதற்கு மட்டும் பயன்படுத்தப்பட்டு வந்த, படைப்புகளிலேயே உயர்வானதான,மதிக்க வேண்டிய தாய்மை குணம் உடைய பெண் சமூகம் காலம் மாற மாற கொஞ்சம் கொஞ்சமாக அரக்கத்தனமான கட்டுப்பாடுகளை மீறி இந்த சமூகத்தில் தனக்கென ஒரு நிலையை நிச்சயிக்க ஆரம்பித்தது.
காலம் எவ்வளவு தான் முன்னேறினாலும் இந்நாகரீக காலத்திலும் கூட பெண்களை இந்த கேடுகெட்ட ஆண் வர்க்கம் பார்க்கும் பார்வை மட்டும் மாறவில்லை. எப்படி அந்த காலத்தில் தங்களுடைய இச்சையை தீர்க்க பயன்படும் விதத்தில் சட்டங்களை இந்த ஆண் வர்க்கம் இயற்றியதோ அதே பாணியைத் தான் இப்பொழுதும் பின்பற்றி வருகிறது. இக்காலத்தில் இனி பெண்களை அடக்கி ஒடுக்கி விட முடியாது என்றுணர்ந்த இவர்கள் போராடப் புறப்பட்ட பெண்களின் மனதில் இருந்த சம அங்கீகாரம் என்ற எண்ணத்தை பயன்படுத்திக் கொண்டு "ஆடையை அவிழ்த்தால் அல்லது ஆடையில் தாங்கள் நினைப்பது போல் நடப்பதற்கு தடையிடாதிருந்தாலே உண்மையான அங்கீகாரம் கிடைத்ததாக ஆகும்" என்று, ஒரு சில கீழ்மட்ட "கர்ப்பப்பை சுதந்திரம்" போன்ற சிந்தனையுள்ள பெண்களின் மனதில் எண்ணத்தை தோற்றுவித்து அதன் மூலம் தங்களுடைய வக்கிர எண்ணத்திற்கு வடிகால் அமைக்க முயல்கிறது.
இவ்விஷயத்தில் அனைவரும் ஒன்றை கவத்தில் கொள்ள வேண்டும். பெண்கள் அரை குறை ஆடையில் வருவது தான் அவர்களின் உண்மையான சுதந்திரம் என்று கூறும் வக்கிர சிந்தனையுள்ள ஆண்கள் அதையே ஆண்களுக்கும் கூற முன்வருவதில்லை. சம அந்தஸ்து எனில் குறைந்த பட்சம் ஆண்களின் உடை அளவிற்காவது பெண்களும் உடை அணிவது தானே சரி. ஆனால் இங்கு என்ன நடக்கிறது. முழுக்க முழுக்க ஆண்கள் பயன்படுத்தும் பொருட்களுக்கான விளம்பரங்களில் கூட ஏதாவதொரு விதத்தில் அரைக்குறை ஆடையுடன் பெண்களை தோன்ற செய்து விடுகின்றனர். எதற்காக? இப்படி காட்டினால் தான் அப்பொருள் விலை போகும் என்பற்காகத் தானே! இது எதை உணர்த்துகிறது. காலம் மாறினாலும் கோலம் மாறவில்லை என்பதையல்லவா?. இது பெண்களின் கண்ணியத்தை உயர்த்தியிருக்கிறதா அல்லது தாழ்த்தியிருக்கிறதா? இதையா பெண்கள் சுதந்திரம் என விரும்புகிறார்கள்.
இவ்வாறு இன்று எங்கு திரும்பினாலும் எந்த இடத்தில் பார்த்தாலும் ஏதாவது ஒரு விதத்தில் அரைகுறை ஆடையுடன் ஒரு பெண் காணக்கிடைக்கிறாள். இது யாருக்கு இலாபம் யாருக்கு நஷ்டம். பொருளாதாரத்தை பெருக்குவதற்காக வக்கிர சிந்தையுள்ள வன்கிட முதலாளிகள், பெண்களை ஓர் சந்தைப் பொருளாக ஆக்கியதன் விளைவு? காலம்காலமாக பெண்களுக்கு இழைக்கப்படும் இதே கொடுமை இன்று பச்சிளம் குழந்தைகளையும் நோக்கி; முன்னேறிய காலம் வக்கிர சிந்தையுள்ள ஆண்களின் உதவியால் நமக்கு தந்த பரிசு இது; ஒரு சில உதாரணங்கள்:
லால்குடி அருகே சிறுமிகளை மானப்பங்கம் செய்த அரசு பஸ் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள கீழ வாளாடி கிராமத்தை சேர்ந்த ராஜாமணி. அவருடைய மகள் லட்சுமி (வயது 6) அதே ஊரைச் சேர்ந்த ரமேஷ் மகள் வனிதா (5). (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன)
இந்த சிறுமிகள் அங்கே உள்ளள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கூடத்தில் முதல் வகுப்பு படித்து வந்தனர்.
இந்த நிலையில் பள்ளிக் கூடத்துக்கு வெளியே விளையாடிக்கொண்டிருந்த 2 சிறுமிகளையும் அதே பகுதியைச் சேர்ந்த தவமணி என்கிற குமார் (38) என்பவர் தனது வீட்டுக்கு டி.வி பார்க்கலாம் என்று கூறி அழைத்துச் சென்றார். வீட்டில் குமாரின் மனைவி மற்றும் குழந்தைகள் வெளியூருக்கு சென்று இருந்தனர். வீட்டுக்குள் அழைத்து சென்ற 2 சிறுமிகளையும் குமார் மானப்பங்கம் படுத்தியதாக தெரிகிறது.
வீட்டுக்கு சென்ற 2 குழந்தைகளும் குமார் நடந்து கொண்ட சில்மிஷங்களை தெரிவித்தனர். இதனால் ஆத்திரம் கொண்ட சிறுமிகளின் பெற்றோர் லால்குடி அனைத்து மகளில் போலீசில் புகார் செய்தனர்.
16 வயது சிறுமியை கர்ப்பிணி ஆக்கிய 14 வயது சிறுவன்
13 வயது சிறுமியை 2 கயவர்களுடன் சேர்ந்து கற்பழித்து கர்ப்பமாக்கிய சித்தப்பா
- தினகரன் 30/11/2005 பதிப்பு.
நெல்லையில் 13 வயது மாணவி கர்ப்பமாகி குழந்தை பெற்றாள் - சீரழித்த வாலிபர் மீது நடவடிக்கை எடுக்க போலீஸ் தயக்கம்
- தினகரன் 30/11/2005 பதிப்பு.
வடநாட்டு பெண்களிடம் குறும்பு! கோவில் காவலர் நீக்கம் - தினகரன் 29/11/2005 பதிப்பு.
பெண் மானபங்க முயற்சி தொழிலாளி கைது
- தினகரன் 30/11/2005 பதிப்பு.
மகளை கேலி செய்ததை தட்டி கேட்ட தந்தைக்கு கொலை மிரட்டல்
மகளை கேலி செய்ததை தட்டி கேட்ட தந்தைக்கு கொலை மிரட்டல் - தினகரன் 30/11/2005 பதிப்பு.
கல்லூரி மாணவி கடத்தல். 4 பேர் மீது தந்தை புகார்
- தினகரன் 29/11/2005 பதிப்பு.
பெண்ணின் கை துண்டிப்பு
கற்பழிப்பு புகாரை வாபஸ் பெற மறுத்ததால் வெறிச்செயல்
காட்டுக்கு சென்ற பெண்ணை கற்பழிக்க முயற்சி! பெருசு, சிறுசு 3 பேருக்கு வலை - தினகரன் 06/12/2005 பதிப்பு.
குழந்தைக்கு தந்தை டிரைவரா? கிளீனரா? 2 போpடம் கற்பிழந்த நெல்லை மாணவியின் கண்ணீர் கதை- தினகரன் 05/12/2005 பதிப்பு.
திசையன்விளையில் நர்சை கற்பழித்த வாலிபருக்கு நெல்லை கோர்ட்டில் 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டடது.>- தினகரன் 05/12/2005 பதிப்பு.
டியூஷன் படிக்க சென்றபோது ஆசை வார்த்தை கூறி 9-ம்வகுப்பு மாணவியை கடத்தி கற்பழித்த சித்தப்பா கைது >> - தினகரன் 02/12/2005 பதிப்பு.
வகுப்பறையில் ஆசிரியை கற்பழிப்பு, நான்கு பேருக்கு வலை
வேலைக்கு அழைத்துச் செல்லும் வழியில்கம்ப்யூட்டர் பெண் என்ஜினீயர் கற்பழித்துக் கொலை! கம்பெனி வேன் டிரைவர் கைது
கல்லூரி மாணவியின் சோகக்கதை!``மிஸ் ஆக்ரா`` அழகிப்போட்டியில் வெற்றி பெற்ற கல்லூரி மாணவியின் சோகக்கதைகணவனின் நண்பர்களால் கற்பழிக்கப்பட்டார்
கடந்த சில நாட்களில் கண்ணில் பட்ட சில செய்திகள் இவை. இவற்றில் பெண்களுக்கு எதிராக நடக்கும் மற்றைய அக்கிரமங்கள் அடங்காது. 20 நாட்களுக்குள் இவ்வளவு அக்கிரமங்கள். இவற்றினை களையவும் இனி நடக்காதிருக்கவும் என்ன நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. எங்காவது ஒரு மூலையில் தங்களுடைய வசதிக்காக "4 பெண்கள் ஒரு டிரைவரை" திருமணம் முடித்த விஷயங்கள் கூட எழுதப் படும் விஷயங்களாக கண்ணில் படும் போது கண் முன்னில் நம் இடத்தில் இவ்வளவு அக்கிரமங்கள் நடந்தாலும் யாருடைய கண்களுக்கும் அவை செய்திகளாகப் படுவதில்லை. அல்லது கண்டிக்கத் தக்க அளவில் பெரிய சம்பவங்களாக இப்படிப்பட்ட அக்கிரமங்கள் அவர்களுக்கு தெரிவதில்லை.
குறைந்த பட்சம் இவற்றைக் குறித்து கண்டித்து எழுதுவதற்கு கூட இந்த சிந்தனாவாதிகள் முன் வருவதில்லை.
எங்காவது பெண்கள் தன்னை மூடிக் கொண்டு போனாலோ, ஏதாவது முல்லா அவசியமில்லாமல் பெண்கள் மூடிக் கொண்டு போவதைக் குறித்து பத்வா கொடுத்தாலே இவர்கள் கிளர்ந்தெழுவார்கள். பெண்கள் "மூடிக் கொண்டால்" பின் இவர்களின் வக்கிர எண்ணங்களுக்கு தீனி போடுவது யாராம்.
எனவே பெண்கள் ஆண்களை நம்பி பிரயோஜனமில்லை. தங்களை தாங்கள் தான் காப்பாற்றிக் கொள்ள முன் வர வேண்டும். அதற்கு குறைந்த பட்சம் இப்படிப்பட்ட கயவர்களை கயவர்களாக மட்டுமே எண்ணி, பொது மக்கள் முன்னிலையில் துண்டு துண்டாக வெட்டிக் கொல்வதற்கு சட்டமியற்ற பெண்கள் குரல் கொடுக்க வேண்டும்.
இதனைக் காட்டுமிராண்டி சட்டம் என்று பச்சிளம் குழந்தைகளையும் விட்டுவைக்காமல் சூறையாடும் கல்நெஞ்சம் படைத்த காமகொடூரர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்க வரும் "மனிதநேய" வேடதாரிகளிடம், "இச்சட்டம் தேவையில்லையெனில் இப்படிப்பட்ட ஈவிரக்கமில்லாத குற்றங்களை ஒழிக்க என்ன வழி" என்று அவர்களிடம் கேள்வி கேட்டு இக்குற்றங்கள் குறையாமல் இருக்க மறைமுகமாக துணைபுரியும் "கயவர்நேய" ஆர்வலர்களை மக்கள் முன் அடையாளம் காட்ட வேண்டும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment