Sunday, December 25, 2005
கேள்வி கேட்டவன் எங்கே?
கீற்றின் சிரிப்பூ பகுதியில் கண்ட ஒரு ஜோக்.
ஜார்ஜ் புஷ் ஒரு பள்ளிக்குச் சென்றார். அங்கு மாணவர்கள் முன்பு உரையாற்றியதும், "கேள்விகள் கேட்க விரும்புபவர்கள் கேட்கலாம்" என்றார். ஒரு மாணவன் எழுந்தான். புஷ் அவனிடம் கேட்டார்.
புஷ் : "உன் பெயர் என்ன?"
மாணவன் : "டேவிட்"
புஷ் : "கேள், டேவிட். உன் கேள்விகள் என்ன?"
மாணவன் : "3 கேள்விகள் கேட்கப்போகிறேன்.
1. ஐ.நா. சபையின் ஆதரவு இல்லாமல் ஈராக் மீது ஏன் போர் தொடுத்தீர்கள்?
2. கெர்ரி அதிக வோட்டுகள் வாங்கிய நிலையில் நீங்கள் ஏன் அதிபரானீர்கள்?
3. பின் லேடன் இப்போது எங்கே?"
அப்போது இடைவேளைக்கான மணி ஒலித்தது. இடைவேளைக்குப் பின் கேள்வி நேரம் தொடரும் என்று புஷ் அறிவித்தார். இடைவேளை முடிந்தது. புஷ் மீண்டும் வகுப்புக்கு வந்தார். "கேள்விகள் கேட்கலாம்" என்றார்.
வேறொரு மாணவன் எழுந்தான். புஷ் அவனிடம் பெயர் கேட்டார்.
மாணவன் : "ராபர்ட்"
புஷ் : "உன் கேள்விகள் என்ன?"
மாணவன் : "5 கேள்விகள் கேட்கப் போகிறேன்.
1. ஐ.நா. சபையின் ஆதரவு இல்லாமல் ஈராக் மீது ஏன் போர் தொடுத்தீர்கள்?
2. கெர்ரி அதிக வோட்டுகள் வாங்கிய நிலையில் நீங்கள் ஏன் அதிபரானீர்கள்?
3. பின் லேடன் இப்போது எங்கே?
4. வழக்கத்துக்கு மாறாக 20 நிமிடங்களுக்கு முன்னதாக இடைவேளை மணி ஏன் அடித்தது?
5. முதலில் கேள்வி கேட்ட டேவிட் இப்போது எங்கே?"
நன்றி - கீற்று.
படித்த போது எனக்கு சிரிப்பு வரவில்லை; ..................! உங்களுக்கு?
Subscribe to:
Post Comments (Atom)
எனக்கு சிரிப்பு வந்துவிட்டது.
ReplyDelete:)
புத்தாண்டு வாழ்த்துக்கள்
சுகா
சிரிப்பு வரவில்லை, ஆதிகாரவர்கத்திடம் இப்படியான கேள்விகேட்க கூடாது என்று புரிந்தது, கேட்பவர்கள் கானாமல் போவார்கள் என்று புரிந்தது.
ReplyDeleteஎனக்கு சிரிப்பு வரவில்லை, அதிகாரவர்க்கத்திடம் இப்படியான கேள்வி கேட்ககக்கூடாது என்று புரிந்தது. கேட்பவர்கள் கானாமல் போவார்கள் என்றும் புரிந்தது.
ReplyDeleteசும்மா நச்சுன்னு இருக்குப்பா...
ReplyDeleteவலைப்பூவிற்கு வழங்கிய கீற்றுக்கும் நன்றி, இறைநேசனுக்கும் நன்றி.
சும்மா நச்சுன்னு இருக்குப்பா...
ReplyDeleteவலைப்பூவிற்கு வழங்கிய கீற்றுக்கும் நன்றி, இறைநேசனுக்கும் நன்றி.
6. உங்க பதிவு காணாமல் போயிடுச்சே ;-)
ReplyDeleteநன்றி சுகா!
ReplyDeleteஉங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் அருளும் நிலவட்டும்!
சந்திப்பு, போஸ்டன் பாலா, பிருந்தன் அனைவருக்கும் நன்றி!
அன்புடன்
இறை நேசன்.
நல்ல பதிவு, சும்மா நச்சுன்னு இருந்தது. ஆனால் உண்மையும் அது தான் சிரிக்க முடியவில்லை.
ReplyDeleteநல்ல திறமை புஷுக்கு
ReplyDeleteசிரிப்பா? இதை படித்த பின்னா?? மனசுதான் வலிக்கிறது... இதற்கு எதிராக ஏதாவது செய்ய வேண்டும் என நெடுநாள் ஏக்கம். எப்படி?? எப்படி?? எப்படி??
ReplyDeleteஇறை நேசன் இதே ஜோக் இஸ்லாமிய அடிப்படைவாதிகளுக்கும் பொருந்தும், எந்த அடிப்படைவாதிக்கும் பொருந்தும்.
ReplyDeleteஇந்தப் பதிவை பொறுத்தவரை என் பின்னூட்டம் பொருந்தாமல் போகலாம் உங்களின் பிற பதிவுகளில் நீங்கள் காட்டும் சகிப்புத்தன்மையை முன்னிட்டு இந்த ஜோக்கை இன்னுமொருமுறை படிக்கலாம்.
புஷ்ஷை எனக்கும் பிடிக்காதுதான், அதே சமயம் மனிதனின் உருவாக்க சக்திக்கும் அதை வெளிப்படுத்துவதை தடைசெய்யும் எந்த கூட்டமானாலும் அவையும் கண்டிக்கப்படவேண்டியவையே.
உங்கள் எல்லா பதிவுகளையும் நான் படித்திருக்கவில்லை என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.