Saturday, December 10, 2005

பால் விற்க வாரீயளா?

ஒரு ஊரில் ஒரு பால் வியாபாரி இருந்தான். ஊரின் எல்லையில் இருந்த குளத்தங்கரையில் அவன் வீடு அமைந்திருந்தது. அதிகாலையில் எழுந்து பால் கறப்பது தான் அவனுடைய முதல் வேலை. கறந்தபாலை பெரும்பாலும் வீட்டின் முன் அமர்ந்து விற்பது அவன் வழக்கம்.

வாரத்தில் வெள்ளிக் கிழமை மட்டும் ஊரின் உள் சென்று பால் விற்பான். வீட்டின் முன் அமர்ந்து பால் விற்கும் பொழுது கிலோ கணக்கில் நிறுத்தும், ஊரின் உள் செல்லும் பொழுது லிட்டர் கணக்கில் அளந்தும் பால் விற்பது அவனுடைய பழக்கம். ஊரில் பால் விற்று திரும்பும் பொழுது பால் விற்கத் தேவையான உபகரணங்களை ஊரின் உள் இருக்கும் அவனுடைய சகோதரியின் வீட்டில் வைத்து விட்டு வந்து விடுவான்.

அன்றும் பதிவு போல் அதிகாலையிலேயே எழுந்து பால் கறந்தான். அன்று திங்கள் கிழமையாதலால் வீட்டின் முன் அமர்ந்து பால் விற்க எல்லா ஆயத்தங்களையும் செய்ய ஆரம்பித்தான்.

பால் விற்க தேவையான எல்லா உபகரணங்களையும் எடுத்து வந்து வீட்டின் முன் வைத்துக் கொண்டிருந்தான். எல்லாவற்றையும் கொண்டு வந்து வைத்து விட்டு கடைசியாக பாலை எடுக்க வீட்டின் உள் சென்றான்.

இந்நேரம் பல நாள் இவன் செயலை கவனித்துக் கொண்டிருந்த கள்வன் ஒருவன் மெதுவாக வந்து கல்லாப் பெட்டியை தூக்கிக் கொண்டு ஓட ஆரம்பித்தான். அப்பொழுது தான் பாலை வெளியில் கொண்டு வந்த பால்காரன் இதைக் கவனித்து விட்டான். பால்காரனின் கத்தலில் கள்வன் வேகமாக ஓட ஆரமித்தான். அவன் ஓடிய வேகத்தில் எடைக் கற்கள் அனைத்தும் கீழே விழுந்து விட்டன.

கல்லாப் பெட்டியும், தராசுடனும் கள்வன் ஓடி மறைந்து விட்டான்.

பால் வாங்குவதற்கு மக்கள் வர ஆரம்பித்தனர். பால்காரனுக்கோ இக்கட்டான நிலை. பாலும் எடைக் கற்களும் மட்டுமே தற்போது அவன் கையில் உள்ளன. நிறுப்பதற்கு தராசு இல்லை.

விழித்துக் கொண்டிருக்கும் பால்காரனுக்கு பாலை விற்க உங்களின் மேலான ஆலோசனைகளைக் கூறுங்களேன்.

ஏதாவது சீரியசாக நினைத்து வந்தவர்களுக்கு ஸாரி. எப்பொழுதும் சீரியசாகவே இருக்க வேண்டுமா என்ன?

சரி. சரி. வந்ததே வந்தாயிற்று, பாவம் அந்த பால்காரனுக்கு முடிந்த ஆலோசனைகளைக் கூறிவிட்டு செல்லலாமே!

வித்தியாசமான, சிறந்த ஆலோசனைகளுக்கு "தகுந்த" வெகுமதி அளிக்கப் படும்.

பிற்சேற்கை:

"தகுந்த" வெகுமதி அறிவிப்பை வெளியிட்ட உடனேயே கூட்டத்திலிருந்து வெளிப்பட்ட நம்ம ஐடியா அய்யாசாமி எவ்வித பிரச்சினையும் இல்லாமல் தேவைப் பட்டவர்களுக்கு அவரவர் கேட்ட அளவு மிகச் சரியாக அளந்து கொடுத்து மொத்த பாலையும் விற்றுவிட்டார்.

எப்படி அவர் மொத்த பாலையும் விற்றார்?

4 comments:

  1. என்ன இது யாருக்குமே பதில் தெரியவில்லையா? அல்லது தெரிந்ததால் மவுனமாக இருக்கிறார்களா?

    ReplyDelete
  2. //எப்படி அவர் மொத்த பாலையும் விற்றார்?//

    இது கூட தெரியாதா?

    அவரவர் கேட்ட அளவு மிகச் சரியாக அளந்து கொடுத்து மொத்த பாலையும் விற்றார்.

    ReplyDelete
  3. நான் அவுட்....இத எங்கயோ படிச்சிருக்கேன். இப்ப தோணலையே...

    எடக்கல்ல பாலுல போட்ட பால் வெளிய வருமில்ல...அந்த அளவை வச்சு வித்தாரா?

    ReplyDelete
  4. எடக்கல்ல பாலுல போட்ட பால் வெளிய வருமில்ல...அந்த அளவை வச்சு வித்தாரா?

    ஆர்க்கிமிடிஸ் கோட்பாடா? ஆனால் அது எடைக்கு எடை சமமான நீர் வெளியேறும் என்று கூறவில்லையே!

    எதற்கும் ஒரு பாத்திரத்தில் நீர் எடுத்து அதில் ஒரு கிலோ எடையை போட்டுப் பாருங்கள். ஒரு கிலோ நீர் வெளியேறினால் உங்கள் பதில் கோட்பாட்டின் படி சரி.

    ஆனால் இங்கு கேள்வி எடையை மட்டும் சார்ந்து நிற்கவில்லையே! எடை கற்களும் பால் இருக்கும் பாத்திரமும் தவிர வேறு எதுவும் இந்த பால்காரரிடம் இல்லாத போது எப்படி வெளியில் வரும் பாலை சேமிப்பார்?

    எனவே நீங்கள் அவுட் தான் என்று ஐடியா அய்யாசாமி கூறுகிறார் ராகவன் அவர்களே!.

    ReplyDelete