Saturday, December 17, 2005

மதிப்பிற்குரிய பாகிஸ்தான் உளவாளி!

இன்றைய தினத் தந்தியில் வந்த ராஜஸ்தானில் பிடிபட்ட ஓர் பாகிஸ்தான் உளவாளியைப் பற்றிய செய்தி:

பாகிஸ்தான் உளவாளி ராஜஸ்தானில் கைது!
2 ஆண்டுகளாக பாகிஸ்தான் ராணுவத்துக்கு தகவல்
அனுப்பியவர்!

2 ஆண்டுகள் இந்தியாவில் தங்கி, பாகிஸ்தான் ராணுவத்துக்கு தகவல் அனுப்பிய பாகிஸ்தான் உளவாளியை போலீசார் கைது செய்தார்கள்.

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் நகரில் பாகிஸ்தான் உளவாளி பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையொட்டி ராஜஸ்தான் போலீசாரும்,மத்திய உளவு படை போலீசாரும் இணைந்து ஜோத்பூரில் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

அங்குள்ள ஓட்டல்கள், பங்களாக்கள், மற்றும் சில ரகசிய இடங்களில் இந்த அதிரடி சோதனை நடந்தது. இந்திய எல்லைக்கு அப்பால் உள்ள ஏராளமான இ-மெயில் முகவரிகளுக்கு ரகசிய தகவல்களை ஒருவர் அனுப்பியதால் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையொட்டி நடந்த விசாரணையில் பாகிஸ்தான் உளவாளி ஒருவர் ஜோத்பூர் நகரில் பதுங்கி இருக்கும் விவரம் தெரிய வந்தது.

அப்போது ஜோத்பூர் நகரில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கி இருந்த மகேந்திர குமார் ரிஷி (வயது28) என்பவரை போலீசார் கைது செய்தார்கள். அவரது சொந்த ஊர் பாகிஸ்தானில் உள்ள ஐதராபாத் மாவட்டம் சிந்து நகரை சேர்ந்தவர்.

2 ஆண்டுகளாக இந்தியாவில் தங்கி, பாகிஸ்தான் ராணுவத்துக்கு உளவு வேலை பார்த்து, பல தகவல்களை பாகிஸ்தான் ராணுவத்துக்கு அவர் அனுப்பி வந்த விவரம் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது.

வங்காளதேசத்துக்கு போவதற்காக காலாவதியான விசாவை அவர் வைத்திருந்ததை, புனேயில் உள்ள தெற்கு ராணுவ உளவு பிரிவும், மத்திய உளவு பிரிவும் கண்டுபிடித்தது. இவர் அஜ்மீரில் தங்கி, ராஜஸ்தானில் உள்ள ராணுவ தளங்கள், நசிராபாத், பார்மர், ஜெய்சால்மர், அகமதாபாத், மற்றும் உ.பி. மாநிலத்தில் சில பகுதிகளையும். குஜராத் மாநிலம் சூரத், மராட்டிய மாநிலம் புனே, மும்பை ஆகிய நகரங்களையும் பார்வையிட்டு, பாகிஸ்தான் ராணுவத்துக்கு ஏராளமான தகவல்களை மகேந்திரகுமார் ரிஷி அனுப்பி வந்த விவரம் விசாரணையில் தெரிய வந்தது.

இன்டர்நெட் மற்றும், எலக்ட்ரானிக் கருவிகள் மூலம் பாகிஸ்தான் ராணுவத்துக்கு அவர் பல ரகசிய தகவல்களை அனுப்பியதை போலீசார் கண்டுபிடித்தார்கள்.

கைது செய்யப்பட்ட பாகிஸ்தான் உளவாளி மகேந்திரகுமார் ரிஷி, ஜோத்பூரில் உள்ள உளவு போலீசின் தலைமை அலுவலகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டார். அங்கு அவரிடம் மேலும் தீவிர விசாரணை நடத்துகிறார்கள்.

அதன் பிறகு அவரை கோர்ட்டில் ஆஜர் படுத்துகிறார்கள்.

விட்டால் அவருக்கு ஆரத்தி எடுத்து பூவும் தண்ணியும் வைத்து கும்பிட்டு விடுவார்கள் போலுள்ளது. இரண்டு வருடங்களாக நாட்டின் பாதுகாப்புக்கு பங்கம் விளைவிக்கும் செயலை செய்த ஓர் உளவாளிக்கு இந்தளவிற்கு மரியாதை தரப்பட வேண்டிய அவசியமென்ன? ஆண்டவனுக்கே வெளிச்சம்!

பெயரில் முஸ்லிம் அடையாளம் இருந்தால் அவன் எந்தளவிற்கு சிறிய தவறு செய்தாலும் அவன், இவன் என்று எழுதுவதும் முஸ்லிம் அடையாளம் இல்லாத போது அவன் ஏதோ இந்திய பாதுகாப்பிற்காக உயிரையே பணயம் வைத்து தீர செயல் செய்தது போன்று செய்திகள் இடுவதும் - இது தான் இன்றைய இந்திய பத்திரிக்கைகளின் மதசார்பற்ற தன்மை. இவை யாரை திருப்திபடுத்த.

இந்தியா என்றாலே இந்துக்கள் மட்டுமே தேசபக்தர்கள் எனவும் முஸ்லிம்கள் என்றால் பாகிஸ்தானுக்குரியவர்கள் என்பது போலவும் மக்களுடைய மனதில் மத துவேசமான எண்ணத்தை வலிந்து வளர்க்கும் சங்க்பரிவாரத்தினர்களுக்கு துணை போகும் இதுபோன்ற பத்திரிக்கைகளை மக்கள் அடையாளம் கண்டு கொள்ள வேண்டும்.

ஒரு நாட்டில் பிறந்தவன் அவன் எம்மதத்தைச் சார்ந்தவனாக இருந்தாலும் அவன் அந்நாட்டின் முன்னேற்றத்திலேயே கவனமாக இருப்பான் என்பதும், அந்நாட்டு பாதுகாப்பிற்காக என்ன வேண்டுமானாலும் செய்வான் என்பதையும் நாம் அனைவரும் இதிலிருந்து புரிந்து கொள்ள வேண்டும்.

நாட்டின் பாதுகாப்பிற்கு ஊறுவிளைவிக்கும் இதுபோன்ற புல்லுருவிகளை அவன் யாராக இருந்தாலும் இது போன்ற மதிப்புகள் கொடுப்பதும், மத துவேசத்தை மக்கள் மனதில் விதைக்கும் விதத்தில் செய்திகளை வெளியிடுவதும் ஒரு நாட்டின் சுதந்திரத்திற்கு முதுகெலும்பாக திகளும் பத்திரிக்கை துறைக்கு அழகல்ல! அது மக்கள் மனதில் வேற்றுமையையும், பிளவையும் மட்டுமே வளர்க்குமே தவிர எவ்விதத்திலும் பத்திரிக்கையின் நம்பகத்தன்மையையும், விற்பனை எண்ணிக்கையையும் உயர்த்தாது என்பதையும் பத்திரிக்கைத் துறையினர் புரிந்து கொள்ள வேண்டும்.

16 comments:

  1. "சும்மா நச்சுன்னு இருக்கு" உங்கள் கருத்தோட்டம்.

    ReplyDelete
  2. ஆரோக்கியம் kettavanDecember 17, 2005 at 9:12 AM

    அய்யா இறை நேசரே

    நீங்க சொல்ல வந்த உணமையோட சூடு தாங்க முடியாம ரெண்டு மைனசை குத்திவிட்டுப் போயிருக்காங்க பாத்தீங்களா.. சரிதான் உள்வாங்குபவர்களும், அகப்பயணம் என பீலா விடுபவர்களும், கேள்வி கேட்க மட்டும் தெரிந்தவர்களும் மௌனியாகி விட்டனர் பார்த்தீர்களா.. அதைவிட நடுநிலை எனப் பீற்றிக் கொள்வோர் இச்செய்தியைக் குறித்து என்ன சொல்கிறார்கள் எனப் பொறுத்திருந்து பார்ப்போம்.. அவர்கள் ஒண்ணும் சொல்ல மாட்டார்கள் என்பது அனைவரும் அறிந்த விஷயம் தானே..

    ReplyDelete
  3. அண்ணே,
    நம்ம பக்கத்திற்கு
    வாங்க பதில் செல்லி இருக்கேன்.

    சந்தோஷ்த்துடன்
    சந்தோஷ்

    ReplyDelete
  4. ஆரோக்கியம் kettavanDecember 17, 2005 at 11:10 PM

    சந்தோசு தம்பி,

    நுனிப்புல் மேயறியேப்பா.. அது சரி இந்தக் கட்டுரையும் பின்னூட்டங்களும் படித்து உனக்கு ஏனப்பா நெறி கட்டுது?

    என்னமோ இந்தியாவிலிருக்கற 30 கோடி முஸ்லிம்களையும் நல்லதொரு வாழ்க்கை வாழ வைத்து விட்டு ஓய்ந்து விட்டதாகக் கூறுகிறாயே தம்பி, மேலே சொன்ன உளவாளிக்கு முஸ்லிம் பெயர் இருந்திருந்தால், இதே பத்திரிகைகள் அவன் உளவாளி என்பதற்காக அல்ல முஸ்லிம் பெயர் கொண்டவன் என்பதற்காகவே கிழித்து காயப்போட்டிருக்கும் , உன்னைப் போன்றவர்களும் அதையும் ஒரு பதிவு போட்டு புளகாங்கிதம் கொண்டிருப்பீர்.

    இந்தப் பதிவப் போட்டவர் பாகிஸ்தான் சூப்பர் நாடு அப்டின்னு எழுதியிருக்காரா, பின்ன எதுக்கு பாகிஸ்தானோடா ஒப்பீடு.. உண்மையிலேயே உனக்கு நீயே ஒப்புக்கிட்டது போல மந்தபுத்தி தான்.

    ReplyDelete
  5. அதி. அழகுDecember 18, 2005 at 1:45 AM

    //சரியாக செல்ல வேண்டும் என்றால் உங்களுக்கு மற்ற முஸ்லிம் நாடுகளில் கொடுக்கப்படும் மரியாதையையும், வாழ்க்கை தரத்தையும், சுகந்திரத்தையும் விட இங்க அதிகமாகவே குடுத்து இருக்கிறோம்//

    தம்பீ சந்தோசு,

    கூப்பிட்டியேன்னு வந்தேன்.

    ஆமா ... சொதந்திரம்கிறது என்னமோ ஒங்க வீட்டு பொண்ணுக கொண்டு வந்த சீதனம் மாதிரி எழுதி இருக்கே ... அது எங்க பாட்டனுவ கொட்டுன பணத்துலேயும் ரத்தத்திலேயும் கெடச்சிதுப்பா. தெரியாதுன்னா சொல்லு ... தெரிய வைக்கிறேன்.

    ReplyDelete
  6. ஆரோக்கியம் kettavanDecember 18, 2005 at 3:57 AM

    அய்யா பெரியண்ணே 'டூப் டெல்லரு',

    //Do u ppl made a post similar to this if suppose a moslem guy did the same thing and the same paper wrote in the same manner?//

    ஹி ஹி என்ன ஒரு வார்த்தையப்பா!!! இப்போ ஒரு மகேந்திர குமார் ரிஷியத் தோலுரிச்சுக் காட்டுனது சந்தோசா? டூப் டெல்லர் வந்து பெனாத்துறாரு.. சரி சரி மொதல்ல இங்கிலீபீசு இல்ல தமிழ் ஒழுங்கா கத்துகிட்டு பெனாத்து ராசா...

    ReplyDelete
  7. இறைநேசன்,

    சந்தோஷ் என்பவருக்கு பாகிஸ்தான் உளவாளி பிடிபட்டதில் கொஞ்சம் வருத்தமுள்ளது போலும்! தனி பதிவு போட்டு முஸ்லிம்களுக்கு இன்னின்ன சலுகைகள் தரவில்லையா? ஜனாதிபதியாக முஸ்லிமை நியமிக்கவில்லையா? etc... எனக் கேட்டுள்ளார். நம் நாட்டைக்காட்டிக் கொடுத்த உளவாளிக்கு அவர்(ன்) முஸ்லிமாக இருந்தால் 'தனி' மரியாதையும் மற்ற மத்தவராக இருந்தால் சாதாரண பிக்பாக்கெட் கேஸை பிடிச்சமாதிரி எழுதுவது ஏன் என்று நீங்கள் கேட்டதற்குத்தான் மேற்சொன்னதையெல்லாம் பட்டியலிட்டுள்ளார்.

    ஐயா சந்தோஷ்,

    சுட்டுக் கொல்லப்பட்ட வீரப்பனையோ அல்லது இரட்டை ஆயுள் தண்டனைக்கைதி பிரேமானந்தாவையோ "இந்து" என்று குறிப்பிட்டுச் சொல்வதில்லை. ஆனால் தவறு செய்பவன் முஸ்லிம் பெயர் தாங்கியாக இருந்து விட்டால் மட்டும் "முஸ்லிம்" என்ற அடைமொழியுடன் குறிப்பிடப்படும் பத்திரிக்கை (அ)தர்மத்தைச் சொன்னால் உங்களால் ஏன் சகிக்க முடியவில்லை?

    இந்தியாவின் அணுவிஞ்ஞானத்தின் தந்தை அபுல்கலாம் அவர்களுக்கு ஜனாதிபதி பதவியும் சானியா முன்னனி வீராங்கணையாக பிரகாசிப்பதும் அவரவர்களின் திறமை மற்றும் தகுதியினாலன்றி "முஸ்லிம்" என்ற சலுகையால் அல்ல.

    //இவ்வளவு கஷ்டப்பட்டு ஏன் இந்தியாவுல வாழணும் போக வேண்டியது தானே. சரியாக செல்ல வேண்டும் என்றால் உங்களுக்கு மற்ற முஸ்லிம் நாடுகளில் கொடுக்கப்படும் மரியாதையையும், வாழ்க்கை தரத்தையும், சுகந்திரத்தையும் விட இங்க அதிகமாகவே குடுத்து இருக்கிறோம்//

    உங்கள் மனதிலுள்ள அரிப்புகளை தயவு செய்து எழுத்தாகக் கொட்டி சொறிந்து கொள்ளாதீர்கள். யாருக்கு யார் கொடுப்பது என்று முடிவு செய்யும் நாட்டாமை மனப்பான்மை, ஊறிப்போன உங்கள் ஆதிக்க வெறிதானே இப்படிச் எழுதச் சொல்லுகிறது?

    சமுத்திரா,

    பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் யூசுப் யோகானா இஸ்லாத்தை ஏற்றால் அதற்கு இந்தியாவில் இருக்கும் முஸ்லிம்கள் என்ன செய்ய வேண்டும் என்கிறீர்கள்?

    //இந்தியாவின் பரம் விர் சக்ரா விருது பெற்ற ஒரு முஸ்லிம் ரானுவ வீரனை பற்றி எழுத பல முறை கோரிக்கை விடுத்து விட்டேன் நல்லடியார், இறை நேசன் போன்றோர் இடம்.//

    எங்கே? எப்ப கேட்டீங்கன்னு தெரியல. இருந்தா சுட்டியை இடவும். இந்திய ராணுவ வீரருக்கு கொடுக்கப்படும் விருதுகள் தகுதி இருந்தால் கொடுக்கிறார்கள். முஸ்லிம் வீரருக்கு அந்த தகுதி இல்லை என்கிறீர்களா? அல்லது இதுவும் "கொடுக்கவில்லையா?" என்ற பாணியில் கேட்கப்பட்டதா?

    ReplyDelete
  8. ஐயா இறைநேசன் அவர்களே..,
    உங்கள் பதிவில் சொல்லப்பட்ட உண்மை, தம்பி சந்தோஷ் போன்றவர்களை அதிகமாகவே சுடுகிறது போலும்-தனிப்பதிவு போடுமளவுக்கு.

    பல்லாண்டுகளுக்கும் மேலாக பயணித்துக்கொண்டேயிருக்கும் பாபர் மசூதி வழக்கும் - ஒரு மடத்தலைவருக்கு ஜாமீன் வழங்குவதற்காக ஞாயிறுகளிலும் காட்டப்பட்ட முனைப்பும் 'ஞாபகம்' வருதுங்க!

    ReplyDelete
  9. நல்லடியார்,

    உங்கள் இடம் நான் பாகிஸ்தானின் எந்த மனிதரை பற்றியும் பேசவில்லை.

    பரம் வீர் சக்ரா விருது அளிக்கபட்ட வீரரை பற்றி என் எழுத நிறைய தரம் எழுத சொல்லி பார்த்தேன்.

    பொதுவாக பழைய பதிவுகளில் நான் பின்னூடம் இடுவதால் நிங்கள் பார்க்க முடியாமல் போயிருக்களாம்.

    சரி, விடுங்கள், இன்னும் சில நாட்களில் நானே எழுதிவிடுகிறேன்.

    9/11 தாக்குதலில் இறந்த யூதர்களின் பெயர்கள் வேண்டுமா என்று கேட்டேன்.பதிலை கானவில்லை.

    நீங்கள் தானே எழுதியது, யூதர் யாரும் சாகவில்லை என்று.அது உன்மையா அல்லது பொய்யா?

    பி.கு : எங்க ஊரில குண்டு வச்ச தீவிரவாதியை கூட "அவர்" தானே எழுதுறாங்க?

    அட அபு சலிமை கூட 'அவர்' மரியாதை கொடுத்து தானே எழுதறாங்க?

    ReplyDelete
  10. சமுத்திரா,

    உங்களோட ஒரே ரோதனையாப் போச்சு :) தயவு செய்து பதிவுக்கு சம்பந்தமாக எழுதுங்கள் அல்லது தனிப்பதிவு போட்டு நியாயம் கேளுங்கள்.

    நீங்கள் சொன்னதற்கு ஏற்கனவே பதில் சொல்லிவிட்டேன். பார்க்க: http://www.blogger.com/comment.g?blogID=9457100&postID=113440636140699805

    இனியாச்சும் எங்கே எந்த பின்னூட்டம் இட்டோம் என்று நினைவில் வையுங்கள்.

    அன்புடன்,
    நல்லடியார்

    ReplyDelete
  11. நல்லடியார்,

    நியாயம் கெட்கும் லூசுதனமான வேலை எல்லாம் நான் செய்யமாட்டேன்.

    முன்று மாதமாக தமிழ்மனம் பக்கமே நான் வராத பொதும் என் பெயரில் நிறைய பின்னூட்டம் எழுதபட்டு உள்ளது.

    எனது குழப்பம் எல்லாம் இதுதான்:

    1.இஸ்ரேல் பாலஸ்தீன விசயத்தில் எத்தனையோ சிக்கல் உன்டு.
    அதை பற்றி எல்லாம் எழுதாமல் சும்மா அமெரிக்காவையும்,இஸ்ரேலையும் மிகுவும் கிழ்தரமாக ஈரான் அதிபரை போல விமர்சனம் செய்வதால் சிக்கல் முடிந்து விடுமா அல்லது இப்படிபட்ட கட்டூரைகளை படிப்பவர்கள் தான் நல்ல விசயம் எதையாவது தெரிந்து கொள்ள வசதியாக உள்ளதா ?

    அப்படி எழுதும் நிங்கள் ஏன் அமெரிக்கா இஸ்லாமியர்க்கு செய்த உதவிகள் பற்றி எழுதுவது இல்லை ?

    இந்தியா அகாஷ் எவுகனை சொதனை செய்த போது அமெரிக்காவை திட்டி ஒரு பதிவு!
    இதில் பெரிய தமாஷ் என்ன என்று கேட்டால் இதே அமெரிக்காவிடம் இந்தியா எவுகனைகளை தாக்கி அழிக்க கூடிய பேட்ரியட் ரக எவுகனைகளை பற்றி விவரம் கேட்டு உள்ளது.

    அகாஷ்,திரிஷுல் எவுகனைகளில் இஸ்ரேல் மூலமாக அமெரிக்க தொழில்நுட்பம் சமிப காலங்களில் நுழைந்து உள்ளது! கார்கில் போரின் போது இஸ்ரேல் இந்தியாவின் மிக நம்பகரமான தோழனாக நடந்து கொன்டது, அனால் அரபி நாடுகள் இந்தியாவுக்கு செய்த்து என்ன தெரியுமா?

    பாகிஸ்தான் அனுஆயுதம் தயாரிக்க பனம் பல வழிகளில் கோடுத்து உதவியது.

    வெறும் வெறுப்பை கக்க எழுத வேன்டாம், தெசத்தின் நிலைமை என்ன என்று கொஞசமாவது புரிந்து கொன்டு எழுத வேன்டும்.

    Truth Stands out clearly from the lies - Mohammed.

    ReplyDelete
  12. //அமெரிக்காவையும்,இஸ்ரேலையும் மிகுவும் கிழ்தரமாக ஈரான் அதிபரை போல விமர்சனம் செய்வதால் //

    அப்படி எழுதும் நிங்கள் ஏன் அமெரிக்கா இஸ்லாமியர்க்கு செய்த உதவிகள் பற்றி எழுதுவது இல்லை ?//

    சமுத்திரா,

    எனக்கு அமெரிக்கா மீதோ அல்லது இஸ்ரேல் மீதோ எவ்வித வுறுப்பும் இல்லை என்பதை முதலில் அறியவும். அவர்களின் அடாவடித்தனமான அணுகுமுறையை சாமான்ய இந்தியனின் மனநிலையில்தான் எதிர்க்கிறேன். முஸ்லிம் எனும் பட்சத்தில் இயல்பான இயலாமை கலந்த ஆத்திரமும் உண்டு.

    எந்த ஒரு நாட்டிற்கும் அமெரிக்கா உதவி செய்ய முன்வந்தால் அதன் பின்னனியில் நீண்டகால சுயநல நோக்கம் இருக்கும் என்பதை அதன் வரலாற்றையும், ஆட்சியாளர்களின் திட்டங்களையும் பார்த்தால் எளிதில் விளங்கும்.

    பேரழிவு ஆயுதங்கள் என்று சொல்லி ஈராக்கை நாசம் செய்த அமெரிக்காவை விடவா சதாம் உஷேன் செய்து விட்டார்? சதாம் உஷேன் சர்வாதிகார ஆட்சியாளராக இருந்தார் என்பதும் இது உலகின் ஏனைய (ஜனநாயகப் போர்வையில் இருக்கும் அமெரிக்கா இங்கிலாந்து உட்பட) ஆட்சியாளர்கள் போல் செயல்பட்டார் என்பதும் மறுப்பதகில்லை. சதாம் உஷேனை கொடுங்கோலன் என்று அமெரிக்கா சொல்வதுதான் வேடிக்கையாக இருக்கிறது.

    நான் எங்கு இஸ்ரேலையும் அமெரிக்காவையும் கீழ்தரமாக விமர்சனம் செய்தேன்? என்று தயவு செய்து சொல்லவும். நான் சொல்லாததைச் சுட்டி என்னிடம் விளக்கம் கேட்காதீர்கள்.

    ReplyDelete
  13. நியாயம் கெட்கும் லூசுதனமான வேலை எல்லாம் நான் செய்யமாட்டேன்//

    ஆனா லூசுதனமான கேள்விகள மட்டும் கேட்ப்பீர்கள்! அப்படி தானே!

    நீங்கள் கேட்ட கேள்விகள் எல்லாம் லூசுதனமாக இருப்பதால் கேட்டேன்.

    1.இஸ்ரேல் பாலஸ்தீன விசயத்தில் எத்தனையோ சிக்கல் உன்டு.
    அதை பற்றி எல்லாம் எழுதாமல் சும்மா அமெரிக்காவையும்,இஸ்ரேலையும் மிகுவும் கிழ்தரமாக ஈரான் அதிபரை போல விமர்சனம் செய்வதால் சிக்கல் முடிந்து விடுமா //

    பாலஸ்தீன பிரச்சினையில் உள்ள சிக்கல்களே இஸ்ரேலும், அமெரிக்காவும் தானே! இது கூட தெரியாமல் என்ன கேள்வி கேட்கிறீர்களோ! பாலஸ்தீன பிரச்சினையின் காரணகர்த்தாக்கள் யார் என்பதை அறிந்து தான் இப்படி கேட்கிறீர்களா? அல்லது அறியாமையா? பாலஸ்தீனர்களின் இடத்தினை அநியாயமாக பிடித்துவைத்துக்கொண்டு ஆட்டம் போடும் இஸ்ரேலையும், அதற்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கும் அமெரிக்காவையும் அவர்கள் செய்யும் கீழ்தரமான செயலகளையும் குறித்து எழுதினால் உங்களுக்கு அது கீழ்தரமாகத் தோன்றுகிறதா?

    சரி சிக்கல் தீர நீங்கள் ஒரு வழி கூறுங்களேன். உங்களின் நடுநிலையை நாங்களும் தெரிந்து கொள்கிறோம்.

    அப்படி எழுதும் நிங்கள் ஏன் அமெரிக்கா இஸ்லாமியர்க்கு செய்த உதவிகள் பற்றி எழுதுவது இல்லை ?//

    அட அத தானே எழுதுகிறோம்.

    தான் உருவாக்கிய ஆயுதங்களை உலக சந்தையில் விற்பதற்கு அதனுடைய சக்தியை வியாபாரிகளுக்கு சோதித்து காண்பிப்பதற்காக, சோவியத்தை அழிக்க தான் வளர்த்திய செல்லப்பிள்ளை உசாமா பின்னர் தனக்கு எதிராக திரும்பிய போது அதை காரணம் காட்டி அவனை (கவனிக்க தனது செல்லப்பிள்ளையை) அழிப்பதாக காரணம் கூறிக் கொண்டு ஒரு தேசத்தையே அழித்தார்களே! இது இஸ்லாமியர்க்கு செய்த உதவி தான். (இது வரை செல்லப் பிள்ளையை அழிக்காதது வேறு விஷயம்)

    மத்திய கிழக்கில் தனக்கு ஒரு நிரந்தர இடம் தேவை என்று ஏமாளி பலஸ்தீனிகளின் இடத்தை ஆக்ரமித்து இல்லாத ஒரு புதிய நாட்டை (இஸ்ரேல்) உருவாக்கி அது நிலை நிற்க ஐ.நா சபையின் அத்தனை கட்டுப்பாடுகளையும் மீறி ஆயுதம் முதல் அனைத்து உதவியும் செய்து கொடுத்துக் கொண்டிருக்கிறதே, இதுவும் இஸ்லாமியர்களுக்கு செய்த மிகப் பெரிய உதவிதான்.

    தனது நாட்டின் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்த எண்ணையின் மீது கண் வைத்து சதாமை தன்னை விட மிகப் பெரிய கொடுங்கோலனாக சித்திகரித்து அவனிடமிருந்து ஈராக் மக்களுக்கு சுதந்திரம் வாங்கி கொடுக்கிறேன் என்று ஐ.நாவுக்கு கட்டுப் படாமல் இராக்கை அழித்து இன்று லட்சக்கணக்கான இராக் முஸ்லிம்களின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கி அதில் எண்ணை(குளிர்) காய்கிறார்களே, இதுவும் இஸ்லாமியர்களுக்கு செய்த மிகப் பெரிய உதவி தான்.

    இந்தியா வளர்ந்து விடக் கூடாது என்று இந்தியாவிற்கும் பாகிஸ்தானிற்கும் சீனாவிற்கும் இடையில் பிரச்சினைகள் எப்பொழுதும் நிலைநிற்கும் விதமாக ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக உதவியும் பாகிஸ்தானிற்கு அளவிற்கதிகமான பண உதவியும்,ஆயுத உதவியும் செய்து கொடுத்துக் கொண்டிருக்கிறதே இதுவும் இஸ்லாமியர்களுக்கு செய்யும் உதவி தான்.

    இதோ அடுத்து எப்பொழுதும் தனக்கு எதிராகவே பேசி தன்னுடைய வண்டவாளங்களை உலகிற்கு எடுத்து கூறும் ஈரானையும், சிரியாவையும் தாக்க தருணம் பார்த்திருக்கிறதே இதுவும் இஸ்லாமியர்களுக்கு செய்யப் போகும் உதவி தான்.

    இனி இதுவல்லாமல் உலகிலுள்ள மற்ற எல்லா நாட்டு மக்களுக்கும் செய்த உதவிகளைக் குறித்து கேள்வி கேட்காமல் விட்டுவிட்டீர்களே!

    அதற்கு மிகப் பெரிய லிஸ்டே உள்ளது;

    ஜப்பான், வியட்நாம், கியூபா ......................... எழுதினால் முடியாத அளவிற்கு உள்ளது, அமெரிக்காவின் பரோபகாரம். ஏன் அதற்கு நீங்கள் கோல் பிடிப்பதற்கு காரணம் கூட அது உங்களுக்கு படியளப்பதால் தானே! வாழுங்கள் அய்யா நன்றாக வாழுங்கள்!

    வெறும் வெறுப்பை கக்க எழுத வேன்டாம், தெசத்தின் நிலைமை என்ன என்று கொஞசமாவது புரிந்து கொன்டு எழுத வேன்டும்.//

    ஓ! உங்களுக்கு தான் தேசத்தின் மீது என்னா கரிசனம். ஆமாம் நீங்கள் தேசம் என்று குறிப்பிட்டது அமெரிக்காவை தானே! அப்படி தான் இருக்க வேணும். உப்பிட்டவனுக்கு ரண்டகம் செய்வது தமிழனுடைய பழக்கமல்லவே! ஆனால் கவனம், ஏதாவது வெவரம் கெட்டவன் நீங்கள் இருக்கும் பகுதியில் குண்டு வைத்து விட்டு போனால் "அயல் கிரகவாசி" என்பதால் "முஸ்லிம் தீவிரவாதி" என்று கூறி உங்களையும் குவாண்டனமோக்கு அனுப்பி விடப் போகிறார்கள்.

    அன்பு சமுத்ரா கொஞ்சமாவது மனிதநேயத்தோடும், நடுநிலையோடும் சிந்திக்கவும், எழுதவும் கற்றுக்கொள்ளுங்கள். அப்படியே உலகில் எங்கு வாழ்ந்தாலும் தனக்கு உயிர் தந்து வளர்த்திய இந்திய தாய் மண்ணையும் சிறிதாவது நேசிக்கவும் முயற்சி செய்யுங்கள்.

    அன்புடன்

    இறை நேசன்.

    ReplyDelete
  14. இறைநெசன்,

    வழக்கம்போல ஒரு முடிவை(அமெரிக்கவை திட்டுவது என்று) மனதில் கொண்டு எழுதி உள்ளிர்கள்.

    இஸ்ரேல் பாலஸ்தீன சிக்கலை பற்றி நான் கேட்டு அறிந்ததே ஒரு பாகிஸ்தானிய முஸ்லிம் இடம் என்பதை அறிக.

    (நல்ல வேளை அவர் கொஞசம் விஷயம் தேரிந்தவர்!)

    ஜப்பான் - இரண்டாம் உலகபோர் நடந்த பின ஜப்பானின் அனைத்து infrastructure projects க்கும் அமெரிக்க பனம் தான் செல்வழிக்கபட்டது.

    கியூபா - இந்த நாட்டை விட்டு தினமும் அகதிகள் அமெரிக்காவை நொக்கி தான் சென்று கொண்டு உள்ளார்கள்.

    வியட்னாம் - பனிபோரின் sub-product.They might have ended en destroying the world many times over.Thanks to USA and Soviet Union!

    உலக நாடுகளின் இறுக்கமதி dataவை googleஇல் தேடி பார்த்து அதில் அமெரிக்காவில் இருந்து எத்தனை வருகிரது, அதில் எத்துனை ஆயுதபேரம் முலம் வருகிரது என்று பாத்து விட்டு பிறகு பேசவும்!

    சீனாவிடம் நமது காஷ்மீரின் ஒரு பகுதி சிக்கி உள்ளது.வட-கிழக்கு எல்லையிலும் தோல்லை தான்.பாகிஸ்தானுக்கு அனுகுண்டு கொடுத்து உதவியது சீனா.அனால் நமக்கு அமெரிக்கா தான் எதிரி...நல்ல logic!

    ஈராக் மக்களில் 65 சதவிதம் வோட்டு போட்டு தங்கள் அரசை தெர்ந்து எடுத்து விட்டார்கள்.ஆப்கனிலும் அதுவே நிலை!

    Personal Attacksக்கு நான் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

    பி.கு : நான் தமிழன் அல்ல!

    ReplyDelete
  15. ஆச்சரியமாக இருக்கிறது..

    //உலகில் எங்கு வாழ்ந்தாலும் தனக்கு உயிர் தந்து வளர்த்திய இந்திய தாய் மண்ணையும் சிறிதாவது நேசிக்கவும் முயற்சி செய்யுங்கள்.// என்று இறைநேசன் வைத்த வேண்டுகோளுக்கு, //நான் தமிழன் அல்ல!// என்று பதிலளித்திருக்கிறார் சமுத்ரா என்பவர். ஒருவேளை நான் இந்தியனல்ல என்று சொல்ல நினைத்து மாற்றி சொல்லிவிட்டாரோ! அல்லது 'தாய் மண்ணை நேசிப்பது என்பதெல்லாம் தமிழர்களுக்குத்தான் சரிப்படும். நான் தமிழனல்ல' என்று சொல்லாமல் சொல்கிறாரா?

    ReplyDelete
  16. \\இஸ்ரேல் பாலஸ்தீன சிக்கலை பற்றி நான் கேட்டு அறிந்ததே ஒரு பாகிஸ்தானிய முஸ்லிம் இடம் என்பதை அறிக.

    (நல்ல வேளை அவர் கொஞசம் விஷயம் தேரிந்தவர்!)//

    \\பி.கு : நான் தமிழன் அல்ல!//

    சமூத்ரா,

    தமிழ் எழுதப் படிக்கத் தெரிந்த இலங்கையரோ, மலேஷியரோ, சிங்கப்பூராரோ யாராகவோ நீங்கள் இருந்து கொள்ளுங்கள்.

    தமிழ் படிக்கத் தெரியுமில்லையா?

    ஃபலஸ்தீனைப் பற்றித் தெரிந்து கொள்ள இங்குச் செல்லவும்:

    http://nilamellam.blogspot.com/

    ReplyDelete