Sunday, December 11, 2005

பத்திரிக்கைகளின் நம்பகத்தன்மை.

பத்திரிக்கைகள் இம்ரானாவுக்கும் சானியா மிர்சாவுடைய அரை நிர்வாண உடம்பைப் பற்றி ஏதோ மதப் பண்டிதன் தெரிவித்த அபிப்பிராயத்திற்கும் முன் பக்கத்தில் இடம் கொடுத்தபோது ஹரியானா கோஹானா கிராமத்தில் ஒரு தலித் கிராமம் ஒட்டுமொத்தமாக பி.ஜே.பி தலைமையில் மேல்ஜாதிக்காரர்கள் தீ வைத்து நாசப்படுத்திய சம்பவத்திற்கு அதன் உட்பக்கம் ஒரு சிறிய இடம் கூட கொடுக்கவில்லை.

இதற்கு முன் செப்டம்பரில் மஹாராஷ்டிரா அகோலாவில் ஒரு தலித் கிராமம் தீக்கிரையாக்கப் பட்ட சம்பவம், சில தலித் பத்திரிக்கைகளுக்கு மட்டுமே ஒரு விஷயமாகப் பட்டது. கோஹானாவில் வீடுகள் முன் கூட்டியே திட்டமிடப்பட்டு நாசமாக்கப் பட்டதாக அவ்விடம் பின்னர் பார்வையிட்ட மனித உரிமை கழகத்தினர் கூறுகின்றனர். வால்மீகி சமுதாயத்தில்பட்ட வீடுகளும் வீட்டு சாதனங்களும் குறிவைத்து நாசமாக்கப்பட்டது. குஜராத் மாதிரியில் இருந்தது இந்த அழிப்பு. பி.ஜே.பி எம்.பி யாய கிஷன்சிங்க் ஸங்க்வினுடைய மகனும் சகோதரனும் இந்த தாக்குதலுக்கு சுக்கான் பிடித்தனர்.

இதில் சமையல் கியாஸ் தாராளமாக பயன்படுத்தப் பட்டது. ஆகஸ்ட் மாதத்தில் மேல்ஜாதிகாரரில் ஒருவரை தலித்கள் கொன்றதற்கான பதிலடியாக இந்த தாக்குதல் என்று அவர்கள் கூறினர். முதலமைச்சர் நேரடியாக தலையிட்டு அதில் சம்பந்தமுள்ள வால்மீகிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவில்லையெனில் அக்கிராமத்தை தாக்கி அழிப்போம் என்று ஏற்கெனவே பி.ஜே.பி தலைவர்கள் அறிவித்திருந்தனர். கிராம பஞ்சாயத்து கூட்டியப் பிறகு மேல்ஜாதிக்காரர்கள் தலித்துகளுக்கு எதிராக திரும்பினர். தாக்குதல் 5 மணி நேரம் நீண்டு நின்றது.

வால்மீகிகள் சமீப காலமாக பொருளாதார ரீதியில் சற்று மேலே வந்தது பிரபல சமுதாயமான ஜாட்டுகளுக்கு அதிருப்தியை உண்டாக்கியிருந்தது. சுத்தம் செய்யும் துப்புரவு பணிக்காரர்கள் சமுதாயத்தில் மதிக்கப் படுவது அவர்களுக்கு விருப்பமில்லாமல் இருந்தது. தாக்குதல் நடத்தியவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு பதில் ஜில்லா நிர்வாகம் அவர்கள் பக்கம் நின்று அவர்களுக்கு துணை நின்றது. பி.ஜே.பி எம்.பி யுடைய மகனையும், மருமகனையும் போலீஸ் கைது செய்யவில்லை. வீடுவிட்டு வெளியேறியவர்கள் திரும்பி வந்த போது அவர்களுக்கு உதவவும் ஜில்லா நிர்வாகம் தயாராகவில்லை.

இந்தியாவில் தலித் அக்கிரமங்களை தடைவதற்குண்டான சட்டங்களுக்கு ஒரு குறையும் இல்லை. 1955 - ல் தீண்டாமைக்கெதிரான சட்டம் முதல் 1989 -ல் தலித்களுக்கு எதிராக நடக்கும் தாகுதல்களுக்கு எதிரான சட்டம் வரை பல சட்டங்கள் ஏடுகளில் உண்டு. ஆனால் நாட்டில் நடக்கும் சம்பவங்கள் தலித்துகளுக்கு எதிரேயுள்ள அக்கிரமங்கள் கொஞ்சமும் குறையவில்லை என்பதை தெளிவிக்கின்றன. சமுதாயத்தில் கீழ்நிலையிலுள்ள தலித்துகள் தங்களுடைய சுயநிர்ணயத்திற்காக குரல் கொடுக்க எழும்புவது தான் இது போன்ற அக்கிரமங்கள் நடக்க காரணமாகின்றன.

ராஜஸ்தானில் கும்கர் கூட்டுக்கொலையிலிருந்து தப்பிய சுன்னிலால் இவ்வாறு கூறுகிறார்,"சுப்ரீம் கோர்ட்டின் எல்லா நீதிபதிகளும் சேர்ந்தாலும் அவர்களுக்கு கிராமத்தில் ஒரு கான்ஸ்டபிளிற்குள்ள அதிகாரம் இல்லை. எங்களை பாதுகாப்பதும் அழிப்பதும் அந்த கான்ஸ்டபிளின் கையில் உள்ளது. அவர் அவருக்குக்காக சட்டம் உண்டாக்குகின்றார்."

எப்படிப்பட்ட அக்கிரமம் செய்தாலும் தப்பித்துக் கொள்ளலாம் என்ற நம்பிக்கைத்தான் இப்படிப்பட்ட சட்ட விரோதிகளை ஊக்குவிக்கின்றது. உத்தர பிரதேசத்தில் கல்யாண் சிங் ஆட்சி காலத்தில் மேல்ஜாதிக் காரர்களுக்கு எதிராக தலித் அக்கிரமங்களுக்காக தொடுக்கப்பட்ட வழக்குகள் ஒவ்வொன்றாக பின்வலிக்கப் பட்டது. மகாராஷ்டிராவில் சிவசேனா அரசும் இது தான் செய்தது. பின்னர் வந்த என்.ஸி.பி - காங்கிரஸ் கூட்டணி அரசும் அதே பாணியைத் தான் பின் தொடர்ந்தது.

தமிழ்நாட்டில் தலித்துகளுக்காக ஒதுக்கப் பட்ட பஞ்சாயத்துக்களில் கூட அவர்களுக்கு போட்டியிடவும், வெற்றி பெற்றால் பதவி வகிக்கவும் முடியாது. மேலவளவில் ஒரு தலித் பஞ்சாயத்து தலைவரின் தலையை மேல் ஜாதிக்காரர்கள் வெட்டி கிணற்றில் வீசினர்.

பத்வா முல்லாக்களின் ஏகாதிபத்தியத்தைக் கூறி பத்திரிக்கைகள் கவலைக் கொள்வது, தொடர்கதையாக மாறிய தலித்துகளுக்கு எதிரான அக்கிரமங்கள் மக்களுடைய கவனத்திற்கு வருவதை தடைவதற்கான தந்திரம் என சந்தேகப் படவேண்டியிருக்கிறது.

நன்றி: தேஜஸ் நவ. 1௧5 பக்கம் 47.

4 comments:

  1. அட்றா சக்கைDecember 11, 2005 at 10:22 AM

    அட நீங்க ஒண்ணு.. இதயெல்லாம் சொன்னா தங்களுக்கு படியளக்கறவங்களோட சாயம் வெளுத்துரும்னு அவங்களுக்கு தெரியாதா?

    ReplyDelete
  2. எனக்குத் தெரிந்து தமிழ்நாட்டில் பாப்பாபட்டியும் கீரிப்பட்டியும் நமக்கு உணர்த்தும் பாடங்கள் ஏராளம்.

    சுகா

    ReplyDelete
  3. நன்றி அட்றா சக்கை மற்றும் சுகா அவர்களே!

    எனக்குத் தெரிந்து தமிழ்நாட்டில் பாப்பாபட்டியும் கீரிப்பட்டியும் நமக்கு உணர்த்தும் பாடங்கள் ஏராளம்.

    மற்ற மாநிலங்களில் தலித்துகளுக்கு எதிராக நடக்கும் அக்கிரமங்களை ஒப்பிட்டால் தமிழ் நாட்டில் நடப்பவை மிக துச்சமானவையே. எங்கெல்லாம் அரசியல் ரீதியாக சங்க்பரிவாரத்தினர் பலம் பெற்றிருக்கின்றனரோ அங்கெல்லாம் தாழ்த்தப் பட்டவர்களுக்கெதிரான அட்டூழியங்கள் ஏராளம்.

    அவர்களின் அரசியல் செல்வாக்கினைப் பயன்படுத்தி செய்திகள் மக்களிடம் பரவாமலும் பார்த்துக் கொள்கின்றனர். இதற்கு மக்களுக்காக குரல் கொடுக்க வேண்டிய பத்திரிக்கைத் துறையும் துணை போகின்றது என்பது தான் மிகப் பெரிய கொடுமை. குரூரமான சங்க்பரிவாரத்தின் கைகள் எங்கு வரை நீண்டிருக்கிறது என்பதற்கு பத்திரிக்கைகள் செய்திகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவமே மிகப் பெரிய சாட்சி!

    ReplyDelete
  4. ithartku pala karanangal irukkalaam.
    1) pathirikkai nadathubavargal-um uyar saathiyai sernthavargalai irukkalaam. ithu pondra seithigalukku mukiyathuvam kodukka virumbaathavargalaai irukkalaam.

    2) indraya thethiyil, prabalamaanavargalai patriya seithi irunthaal taan vyabaram nadakkum. Naattil vellam atheetha sethathai undaakiyapothum, thalaippu seithi Amitabh Bachan-ai patri taan ullathu (Amitabh meethu entha kobamum alla).

    ReplyDelete