திருவாளர் வெங்கைய்யா நாயுடு அவர்கள் பா. ஜனதா சிறுபான்மை(!) அணியின் தேசிய பயிற்சி முகாமில் பேசிய வித்தியாசமான சில கருத்துக்களும் ஓர் வழிப்போக்கனின் புலம்பல்களும்:
//சிறுபான்மையினருக்கு எதிரான கட்சி என்று பா.ஜனதா பற்றி காங்கிரஸ் உட்பட மற்ற கட்சிகள் தவறாகப் பிரசாரம் செய்து வருகின்றன.//
அப்படியா! சே! ரொம்ப தப்பாச்சே!
//இந்தியா அனைத்துத் துறையிலும் முன்னேற வேண்டும் என்பதுதான் பா.ஜனதா கட்சியின் நோக்கம்.//
அது தான் கடந்த உங்கள் ஆட்சியில் நடந்த சவப்பெடி ஊழல் பற்றி அறிந்த போதே தெரிந்து கொண்டோமே!
//அப்படி இருக்கும் போது, சிறுபான்மையினரின் நலனைக் கருதாமல் இருக்கமாட்டோம்.//
ஓ! உங்கள் குடும்பத்தில் இயங்கும் ஆர்.எஸ்.எஸ்., வி.ஹெச்.பி., பஜ்ரங்தள் போன்ற, சிறுபான்மையினரின் நலனிற்காகவே இயங்கும் - சிறுபான்மை அழிப்பு அமைப்புகளைப் பற்றி நன்றாகத் தெரியுமே.
//குறிப்பிட்ட இனத்தை மட்டும் உயர்த்த வேண்டும் என்பது எங்களின் எண்ணம் அல்ல.//
காஞ்ஜி மடத்தின் காதுகளில் இது விழவில்லையே? (விழுந்தாலும் பரவாயில்லை. கேட்டால் "மற்ற இனத்தை உயர்த்த வேண்டும் என்பது எங்களின் எண்ணம் அல்ல" என்று கூறியதாக கூறி சமாளித்துக் கொள்ளலாம்.)
//உடலில் சிறிய உறுப்புதானே என்று அவற்றை கவனிக்காமல் விட்டுவிட்டால் முழுமையான உடல்நலனைப் பெறமுடியாது.//
இது சாகா (தடி, சூலாயுதம், வாள், துப்பாக்கி, குண்டு போன்றவற்றால் சிறுபான்மையினரை பாதுகாக்க(!) கொடுக்கப் படும் பயிற்சி) வகுப்புகளில் சங்பரிவார உறுப்பினர்களுக்கு கொடுக்கப் படும் ஆரோக்கிய ஆலோசனையல்லவா?
//அதுபோல்தான் இந்தியா முன்னேற வேண்டும் என்றால் சிறுபான்மை மக்கள் உட்பட அனைத்துத் தரப்பு மக்களும் முன்னேற்றம் அடைய வேண்டும்.//
உயிரோடு இருந்தால் தானே முன்னேறுவதற்கு!
//பா.ஜனதா பற்றி சிறுபான்மையினரிடம் காணப்படும் தவறான கருத்துக்கள் நீக்கப்பட வேண்டும்.//
எப்படி?
//இந்தக் கட்சியுடன் சிறுபான்மையினர் இணைந்து செயல்பட வேண்டும்.//
அதற்காக "முக்தார் அப்பாஸ் நத்வி" யைப் போல் எல்லோருக்கும் ஆளுக்கொரு பதவி கொடுக்க முடியுமா?
//அப்போதுதான் அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற பா.ஜனதா கட்சி முற்படும்.//
ஆகா எப்படிப் பட்ட முற்போக்கான கருத்து. ஒரு நாட்டில் கட்சியை எப்படி நடத்த வேண்டும் என்பதை இவர்களைக் கண்டு படிக்க வேண்டும். நாட்டில் வாழும் மக்கள் அனைவரையும் ஒன்று போல் பாவிக்கும் இந்த உயர்ந்த உள்ளம் இங்கு எந்த கட்சிக்கு இருக்கிறது - எங்களுக்கு ஓட்டளித்தால் மட்டுமே உங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற முற்படுவோம் என்று கூறும் உயர்ந்த உள்ளம்.
நான் இதற்கு தயார். ஆனால் ஒரு நிபந்தனை "முக்தார் அப்பாஸ் நத்வி" யைப் போல் எனக்கும் ஒரு பதவி வேண்டும் - பா.ஜனதா அகில இந்திய தலைவர் பதவி, ஆட்சிக்கு வந்தால் பிரதமர் பதவி.(தலையை சொறிந்து கொண்டு ஹி ஹி கூறுவதாக நினைத்துக் கொளுங்கள்)
//சிறுபான்மையினரை காங்கிரஸ், கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகள் ஓட்டு வங்கிகளாகத்தான் கருதுகின்றன.//
அப்ப இதற்கு முந்தைய வரியின் அர்த்தம் என்ன? ஓ! இது கோரிக்கைக்ளை நிறைவேற்ற தரப் படும் லஞ்சமா? ஆமாம் நாட்டின் உயிர் மூச்சான ராணுவத்தினரின் இன்னுயிரை இழந்த உடம்பை வைக்கும் சவப்பெட்டி விஷயத்திலேயே லஞ்சம் வாங்கியவர்களாயிற்றே நீங்கள். சரி! சரி! நீங்கள் ஓட்டுக்காக கட்சி நடத்துபவர்களல்ல, ஊழலுக்காக கட்சி நடத்துபவர்கள் என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன்.
//உண்மையிலேயே இந்த மக்கள் மீது இந்தக் கட்சிகளுக்கு கரிசனம் இருந்து இருந்தால் கடந்த 58 ஆண்டுகளில் சிறுபான்மை மக்களை முன்னேற்றி இருப்பார்கள்.//
ஆ! உங்களால் இப்படி கூட சிந்திக்க முடியுமா?
//முஸ்லிம், கிறிஸ்தவர்களில் படிப்பறிவு விகிதம் மற்றும் பொருளாதார முன்னேற்றம் இன்னும் குறைவாகவே உள்ளது.//
அட இங்கப் பார்ரா! ஆடு நனைகிறதென்று ஓநாய் ...............
//இந்தக் கட்சிகளுக்கு ஓட்டு வங்கியாக இருப்பதில் இருந்து சிறுபான்மை மக்கள் அனைவரும் விடுபட வேண்டும்.//
கண்டிப்பாக சிறுபான்மையினர் சிந்திக்க வேண்டிய விசயம் தான். விடுபட்டு பின் என்ன செய்வதாம். ஆங்! நம்ம பழைய சித்தாந்தம். ஓட்டளித்தால் உங்களுக்கு ஓட்டளிக்க வேண்டும். அல்லது யாருக்கும் ஓட்டளிக்காமல் பேசாமல் இருந்து விட வேண்டும். என்ன ஒரு கரிசனம் சிறுபான்மையினர் மீது!
//இந்தியாவில் 35 சதவீதம் பேர் இன்னும் படிப்பறிவில்லாமல் இருக்கிறார்கள்.//
அது தானே உங்கள் பலம்.
//2 லட்சத்து 60 ஆயிரம் கிராமங்களுக்கு இன்னும் சாலை வசதிகள் இல்லை. பீகாரில் 60 சதவீத வீடுகளுக்கு இன்னும் மின்சார இணைப்பு தரப்படவில்லை.//
அப்ப இதெல்லாம் உங்களுக்கும் தெரியுமா? "முஸ்லிம் தீவிரவாதிகளையும்","பாகிஸ்தான் உளவாளிகளையும்" பற்றி மட்டும் தான் உங்களுக்கு தெரியும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். சரி தவறாக நினைக்காதீர்கள் ஒரு கேள்வி - நீங்கள் மத்தியில் 5 ஆண்டு காலம் ஆட்சியில் இருந்த போது இந்தியா ஒளி வீசியதாக கூறினார்களே? நீங்கள் ஆட்சியிலிருந்து இறங்கியவுடன் கிராம சாலைகளையும், வீட்டு மின் இணைப்புகளையும் துண்டித்து விட்டார்களோ?
//"கமர்கட்'' மிட்டாய்களை குழந்தைகளிடம் காட்டுவது போல் சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீடு தரப் போவதாக கூறிக்கொண்டு இருக்கிறார்கள்.//
அது ஏமாற்றத்துடனேயே வளரும் குழந்தை, வளர்ந்த பின் எப்படி தன்னிடம் பரிமாறும் என்பதைக் குறித்து சிந்திக்காத பெற்றோர் செய்யும் தவறு. அக்குழந்தைக்கும் ஒரு எதிர்காலம் உண்டு என்றும், நாளை தமது வயோதிக காலத்தில் தம்மை அதிகாரம் செய்யப் போவது இக்குழந்தை தான் என்ற யதார்த்தத்தை புரிந்து கொள்ளாத இன்றைய அதிகாரத்தில் இருப்பவர் செய்யும் மிகப் பெரிய சந்திப் பிழை.
//நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி செய்யாததை சோனியா செய்யப் போகிறாரா? //
அதானே. செய்து விடுவாரா என்ன? அல்லது நாங்கள் இருக்கும் போது செய்ய விட்டு விடுவோமா என்ன?. வி.பி.சிங் மண்டல் கமிஷன் பரிந்துரையை நடப்பாக்க முயற்சித்த போது எங்கள் முழு ஒத்துழைப்பும் கொடுத்து அவரை வீட்டிற்கு அனுப்பிய எங்கள் வீர வரலாற்றை அந்தளவுக்கு சோனியா அறியாமலா இருப்பார்?
//எதையாவது கூறி சிறுபான்மையின மக்களை சமாதானப்படுத்துவதில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை.//
அப்படித்தான் இருக்க வேண்டும். ஏன் நம்முடைய கோர முகத்தை மறைக்கவேண்டும். மத்தியில் ஆட்சியில் இருக்கும் போது கூட, "தவறான இடத்தில் உள்ள சரியான" ஆளான அன்பர் வாஜ்பாய் அவர்களும், தன் தாய் நாட்டில்(பாகிஸ்தான்) போன போது அடக்க முடியாத தாய்நாட்டுப் பற்றில் தன்னை மறந்து உண்மைகளை கூறிய ர(த்)த யாத்திரை விரும்பி அத்வானி அவர்களும் தங்களை உருவாக்கி விட்ட தாய்(ஆர்.எ.எஸ்) சங்கத்தின் நாக்பூர் மாநாட்டில் தாங்கள் ஒரு நாட்டின் முதன்மையான - முக்கிய பொறுப்பில் இருப்பவர்கள், உலகம் தங்களை உற்று நோக்கும் என்பதை கூட சட்டை செய்யாமல் அரை –டவுசருடன் நின்று உறுதி மொழி எடுத்தது போல் அவ்வபோது தாய் சங்கம் போய் உறுதி மொழி எடுத்துக் கொண்டு நம் நிலைபாட்டில் உறுதியுடன் நிலைத்து நிற்க வேண்டும்.
//இந்துத்துவா என்பது மத ரீதியான அடையாளம் கிடையாது. கலாசார ரீதியான அடையாளம் அது.//
எந்த கலாச்சாரம்? ஆரிய கலாச்சாரமா? கண்டிப்பாக இந்திய கலாச்சாரம் இல்லை என்பது எங்களுக்கு நன்றாகத் தெரியும்!
//மத அடிப்படையில் சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீடு அளிக்கக் கூடாது.//
இத முதலிலேயே சொல்லித் தொலைக்க வேண்டியது தானே. அதற்காக இவ்வளவு சுற்றி வளைக்க வேண்டுமா?
//அப்படி அளித்தால் நாடு மீண்டும் பிளவு பட்டுவிடும்.//
நாடு பிளவு படுமா? அல்லது ஆரிய வந்தேறிகளின் பிழைப்பில் மண் விழுமா? நாட்டை பிளவு படுத்தியவர்கள், பிளவு படுத்துபவர்கள் நாடு பிழவு பட்டு விடும் என்று கவலைப் படுகிறார்கள். எங்கோ உதைக்கவில்லை?
//பெண்களுக்கு அனைத்திலும் உரிமை உண்டு.//
அப்ப ஆண்களுக்கும், அரவாணிகளுக்கும்.?
//நாங்கள் பாலினப் பாகுபாடு பார்ப்பதில்லை.//
மேலே உள்ள கேள்வியை திரும்பப் பெறுகிறேன். அதோடு இனி ஆண்களும், அரவாணிகளும் குழந்தைப் பெற முயற்சிக்க வேண்டும் என்ற கட்டளையை உங்கள் தீர்மானங்களில் சேர்க்க கோரிக்கை வைக்கிறேன்!
//திருமணம், விவாகரத்து, ஒருவனுக்கு ஒருத்தி, சொத்து விவகாரத்தில் சமத்துவம் ஆகியவற்றுக்காக பொது சிவில் சட்டம் தேவை.//
ஒருத்திக்கு ஒருவன் என்பதை சேர்க்கவில்லையே ஏன்? நடைமுறை சாத்தியமில்லாத விஷயமோ?
//மத விஷயங்களில் இந்தச் சட்டம் தலையிடாது.//
அப்ப இந்த சட்டம் இஸ்லாமியர்களைப் பாதிக்காதா? பின் எப்படி அது "பொது" சிவில் சட்டமாகும். சட்டம் பொதுவாக இல்லையெனில் "பொது" என்ற வார்த்தை எதற்காக? எடுத்து விடலாமே? (பாவம் தலைவர், இஸ்லாம் எல்லா காரியங்களுக்கும் முஸ்லிம்களுக்கு தீர்வு கூறுகிறது என்பதை அறியாமல் இந்த வார்த்தையை விட்டு விட்டார்!)
//சிறுபான்மையினரின் மத நம்பிக்கை , சடங்குகள், நடவடிக்கைகள் அனைத்துக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும்.//
மதசார்பற்ற இந்தியா இவ்வுரிமையை இந்தியா சுதந்திரம் அடைந்த போதே இந்தியாவில் வாழும் அனைத்து மக்களுக்கும் கொடுத்து விட்டது. இந்தியாவில் உள்ள ஒரு அரசியல் கட்சி அந்த அடிப்படை உரிமையை 58 வருடங்களுக்கு பிறகு அங்கீகரித்திருப்பதாக கூறுகிறது. என்ன கொடுமையப்பா இது?
//மத விஷயங்களில் நாங்கள் தலையிடமாட்டோம்.//
அப்ப இது வரை தலையிட்டிருந்தீர்கள் என்பதை ஒத்துக் கொள்கிறீர்களா?
//ஆனால் மத மாற்றம் செய்வதை ஏற்க முடியாது.//
எந்த கேடுகெட்டவன் அதைச் செய்கிறான். விஷ்வ ஹிந்து பரிஷத் மற்ற மதத்தினரை ஹிந்துவாக (நிச்சயமாக பிராமணனாக அல்ல மக்களே!) மத மாற்றம் செய்கிறார்களே! அதை ஏற்றுக் கொள்கிறீர்களா? ஓ! அது மதம் மாறியவர்களை தாய் மதத்திற்கு(எது சூத்திரனாகவா) மாற்றுவதல்லவா?
//கிரிக்கெட்டில் அசாருதீன், டென்னிஸ் விளையாட்டில் சானியா மிர்சா ஆகியோரால் நாங்கள் பெருமை அடைகிறோம்.//
எதற்கு? எங்களுக்கு விளையாட்டின் மேல் இருந்த ஆர்வத்தை "சூதாட்டம்"(மேட்ச் பிக்சிங்) மூலம் கெடுத்ததற்காகவும், ஏற்கெனவே கலை என்ற பெயரில் ஆபாசத்தை கூவி விற்று, இந்நாட்டின் இளைய தலைமுறையை சிந்திக்க விடாமல், வக்கிர எண்ணங்களிலேயே ஊறவைத்து நாட்டிற்கு மிகப் பெரிய சேவையாற்றிக் கொண்டிருக்கும் சினிமாத் துறையை மிஞ்சும் அளவில் விளையாட்டுத் துறையையும் ஆக்கியதற்கா? பட்டியலில் தமிழ் நாட்டின் தன்மான சிங்கங்கள் குஷ்பு, சுகாசினி பெயர்கள் விடுபட்டு விட்டனவே! மறந்து விட்டதோ?
//காஷ்மீருக்கு சிறப்பு மாநில அந்தஸ்து அளிக்கும் அரசியல் சாசன சட்டப் பிரிவை ரத்து செய்ய வேண்டும்.//
காஷ்மீர் பிரச்சினையில் நடுநிலையாளர்கள் காஷ்மீர் மக்களின் சார்பாக பேசுவதற்கு, காஷ்மீர் இந்தியாவின் மற்ற மாநிலங்களைப் போன்றதல்ல - அந்நாட்டு மக்கள் இரு நாட்டு அரசியல்வாதிகளால் வஞ்சிக்கப் பட்டார்கள் என்பதற்கான ஒரே தெளிவிது. கண்டிப்பாக இச்சட்டம் மாற்றப் பட்டே ஆகவேண்டும்.
ஆமாம் அது என்ன? காஷ்மீருக்கு மட்டும் சிறப்பு மாநில அந்தஸ்து. அப்படியெனில் காஷ்மீர் இன்னும் முறையாக இந்தியாவுடன் இணைக்கப் படவில்லையா? எனில் நம் நாட்டு இராணுவம் எதற்காக அங்கு போய் நிற்கிறது? ஏன் நம் பட்ஜெட்டில் பெரும் பங்கு அவர்களுக்கு செலவளிக்க வேண்டும்? ஏன் நம் நாட்டு இராணுவ வீரர்களின் பொன்னுயிர்கள் அனாவசியமாக அங்கு இழக்கப் பட வேண்டும்? என்ன தான் நடக்கிறது நாட்டில்? என்னமோ போ!
//அங்கு யாராலும் இப்போது ஒரு செண்டு நிலம் கூட வாங்க முடியாது.//
அப்படி சட்டம் வைத்திருப்பது நம் இந்திய அரசா? அல்லது காஷ்மீர் அரசா? காஷ்மீர் அரசு எனில், அதை மாற்றும் உரிமை கூட நம் இந்திய அரசுக்கு இல்லையா? இந்திய அரசு எனில், எதற்காக அவர்களுக்கு மட்டும் அப்படி ஒரு சட்டம். காஷ்மீரிகளுக்கு என்ன கொம்பா முளைத்திருக்கிறது?(ஹி ஹி நான் சுகாசினி இல்லீங்க! இது சிந்திப்பதற்காகத் தான் - காஷ்மீர் விஷயத்தில் இரு அரசுகள் செய்யும் அநியாயங்களை)
//பா.ஜனதா கட்சி இனி ஆட்சிக்கு வரும்.//
இந்திய மக்கள் கோம்பயர்களாக இருந்தால்.......
//சிறுபான்மை மக்களுக்கு பா.ஜனதாதான் உண்மையான பாதுகாப்பைத் தரும்.//
இது தான் வசனங்களிலேயே டாப்புங்கோ!
எப்படி? என்று கேட்காதீங்க! பாருங்க - குஜராத்தை. அப்படி சவக்குழியிலும், அகதிகள் முகாமிலும் உண்மையான பாதுகாப்பை நிச்சயம் தருவார்கள்!
Subscribe to:
Post Comments (Atom)
சபாஷ் சரியானப் போட்டி!
ReplyDeleteநாயுடுவை நினைத்தால் பாவமாக இருக்கிறது. வாய் தவறி சில வார்த்தைகளை விட்டு விட்டார். அதற்காக இப்படியா?
ReplyDelete/நான் இதற்கு தயார். ஆனால் ஒரு நிபந்தனை "முக்தார் அப்பாஸ் நத்வி" யைப் போல் எனக்கும் ஒரு பதவி வேண்டும் - பா.ஜனதா அகில இந்திய தலைவர் பதவி, ஆட்சிக்கு வந்தால் பிரதமர் பதவி/
ReplyDeleteதலீவா! இத்து ரொம்ப ஓவரா தெரீல!
இது ... இது பதிவு... கலக்குங்க....
ReplyDelete//கிரிக்கெட்டில் அசாருதீன், டென்னிஸ் விளையாட்டில் சானியா மிர்சா ஆகியோரால் நாங்கள் பெருமை அடைகிறோம்.//
ReplyDeleteஎதற்கு? எங்களுக்கு விளையாட்டின் மேல் இருந்த ஆர்வத்தை "சூதாட்டம்"(மேட்ச் பிக்சிங்) மூலம் கெடுத்ததற்காகவும், ஏற்கெனவே கலை என்ற பெயரில் ஆபாசத்தை கூவி விற்று, இந்நாட்டின் இளைய தலைமுறையை சிந்திக்க விடாமல், வக்கிர எண்ணங்களிலேயே ஊறவைத்து நாட்டிற்கு மிகப் பெரிய சேவையாற்றிக் கொண்டிருக்கும் சினிமாத் துறையை மிஞ்சும் அளவில் விளையாட்டுத் துறையையும் ஆக்கியதற்கா? பட்டியலில் தமிழ் நாட்டின் தன்மான சிங்கங்கள் குஷ்பு, சுகாசினி பெயர்கள் விடுபட்டு விட்டனவே! மறந்து விட்டதோ?//
சரியான நக்கல் தல! எல்லாருக்கும் கசுமாலங்கள தான் பிடிக்குது! என்ன செய்ய? நம்ம தலயெழுத்து!
சாதாரனமா வாஜ்பாய்தான் இதமாதிரி உணர்ச்சி வசப்பட்டு பேசிட்டு மறுநாள் "ஐய்யய்யோ..நான் அப்படி சொல்லவே இல்லேன்னு" துண்ட போட்டுத் தாண்டுவார்!
ReplyDeleteவெங்காய நாயுடுஜி அதுமாதிரி எதுனாச்சும் மறுப்பறிக்கை மைக்கா (மறு) நாள் உட்டாரான்னு பாருங்க இறைநேசன்.
சும்மா பிச்சு உதறியிருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.
ReplyDeleteகொஞ்சம் உமா பாரதியையும் கவனியுங்களேன். அவர் தான் "உண்மையான பா. ஜனதாவாம்".
தன்னை முதல்வர் ஆக்காததற்காக அயோத்திக்கு "யாத்திரை" கிளம்பி விட்டதை கவனித்தீர்களா?
//அவர் தான் "உண்மையான பா. ஜனதாவாம்".//
ReplyDeleteஅதில் எனக்கு தலைவர் பதவி கிடைக்குமா?
//ஆனால் ஒரு நிபந்தனை "முக்தார் அப்பாஸ் நத்வி" யைப் போல் எனக்கும் ஒரு பதவி வேண்டும் - பா.ஜனதா அகில இந்திய தலைவர் பதவி, ஆட்சிக்கு வந்தால் பிரதமர் பதவி//