அமெரிக்காவிற்கு என்றுமே எழுதப் படாத ஓர் சட்டம் உண்டு. உலகின் ஒரே வல்லரசாக தான் மட்டுமே விளங்க வேண்டும் என்பது தான் அது. "ஒரு உறையில் இரண்டு கத்தி" இருக்கக் கூடாது என்ற உயரிய நோக்கமே தான். அதற்கு எந்த கீழ் தரமான வேலையை செய்வதற்கும் அதன் அதிபராக வருபவர்கள் தயங்கியதில்லை.
எதிரியாக நினைக்கும் நாட்டை ஒன்று எலும்புத்துண்டைக் காட்டி தனக்கு விசுவாசமான வளர்ப்பு நாயாக ஆக்கி விடுவார்கள். அல்லது ஏதாவது காரணங்களைக் கூறி அந்த நட்டின் ஆட்சியை கவிழ்த்து விடுவார்கள்.(அயல் நாட்டு காரியங்களில் தலையிடக் கூடாது என்ற சட்டம் எல்லாம் அவர்களுக்கு இல்லை!).19 ஆம் நூற்றாண்டின் இறுதி வரை சோவியத் யூனியனை உடைப்பதற்கு "பனிப் போர்" நடத்தியது இதனடிப்படையில் தான்.
சோவியத் யூனியனை எதிர்ப்பதற்கு தன்னால் பாலூட்டி, சீராட்டி வளர்த்து விடப்பட்ட உசாமா என்ற வளர்ப்பு குழந்தை சோவியத் உடைந்து போன பிறகு தன் நெஞ்சிலேயே அது ஏறி மிதிக்கும் என்று கனவிலும் எதிர்ப்பார்க்கவில்லை. சோவியத் சின்னாபின்னமான பிறகு உலகின் ஒரே வல்லரசு என்று நினைத்துக் கொண்டிருந்த அதன் நினைப்பில் மண்ணை அள்ளிப் போட்டது ஒசாமா என்ற அதன் செல்லக் குழந்தை.
20 ஆம் -ணூற்றாண்டின் ஆரம்பத்தில் உலகில் அதி வேகமாக வளர்ந்த இஸ்லாத்தைக் கண்ட போது அதற்கு மேலும் கிலி பிடித்துக் கொண்டது. இனி தன் இடத்தை பிடிக்க ஒன்று வரும் எனில் அது நிச்சயமாக அமைதிப் புரட்சியின் வழி முன்னேறும் இஸ்லாமாகத் தான் இருக்கும் என சரியாக கணித்த அது அன்றிலிருந்து இஸ்லாத்தினை அழிப்பதற்கான எல்லா வழிகளையும் ஆராயத் தொடங்கியது.
அதில் மிக இலகுவான வழியாகத் தோன்றியது தான், தான் ஏற்கெனவே உருவாக்கி விட்டு தன் மார்பில் ஏறி குதித்துக் கொண்டிருக்கும் செல்லப் பிள்ளையான உசாமாவைப் பயன்படுத்திக் கொள்வது. ஆம் ஒரே கல்லில் இரண்டு மாங்காய். தான் அளிப்பதை மட்டும் செய்தியாக வாந்தியெடுக்கும் சில ஊதுகுழல் ஊடகங்களை வைத்துக் கொண்டு மிகச் சரியாக ஓங்கியடித்தது அமெரிக்கா.
கை மேல் பலன் மிக எளிதில் கிடைத்தது. விளைவு ஆப்கன், ஈராக் யுத்தங்கள். அது மட்டுமல்ல ஒரே கல்லில் இரண்டு மாங்காய் திட்டத்துடன் கல்லெறிந்த அமெரிக்காவிற்கு ஒரே கல்லில் மூன்று நான்கு மாங்காயாக கனியத் தொடங்கியது. துவண்டுக் கிடந்த பொருளாதாரம் புதிதாக உற்பத்திச் செய்த ஆயுதங்களைப் பரிசீலனையில் செய்துக் காட்டி மற்ற நாடுகளுக்கு விற்று நிமிர்த்திக் கொண்டது. போதாததிற்கு எண்ணெய் வேறு.
இதில் பரிதாபகரம் என்னவெனில் இவ்வளவு மறைமுக திட்டங்களை வைத்துக் கொண்டு "தீவிரவாதத்திற்கு எதிரானப் போர்" என்ற முகமூடியுடன் களத்தில் இறங்கிய அமெரிக்காவிற்கு நடுநிலையாக சிந்திக்க வேண்டிய, நீதிக்கு துணை நிற்க வேண்டிய முஸ்லிம் சமுதாயம் அதனுடைய வஞ்சக எண்ணங்களைப் புரிந்து கொள்ளாமல் ஆமாம் சாமி போட்டு அது செய்த அக்கிரமங்களுக்கு துணை நின்றது தான். குறைந்த பட்சம் "சோவியத்திற்கெதிராக நீ வளர்த்த உன் செல்லப் பிள்ளைத் தானே உசாமா" என்ற ஓர் சாதாரண எல்லாருக்கும் தெரிந்த கேள்வியைக் கூட அது கேட்க வில்லை.
ஆப்கானுக்கு எதிரான யுத்ததின் போது "உசாமாவை உயிரோடோ அல்லது பிணமாகவோ பிடிப்பது தான் நோக்கம்; அது வரை யுத்தம் முற்று பெறாது" என்று கூறி ஆரம்பித்த அமெரிக்கா தாலிபான்களை ஆட்சியிலிருந்து இறங்கும் வரை தனது எல்லாவித ஆயுதங்களையும் பரிசீலித்து விட்டு, தாலிபான்கள் ஆட்சியை விட்டு இற்ங்கி உசாமாவைப் போல் ஒளிந்து கொண்டவுடன் அங்கு தனக்கு ஓர் பொம்மையை உட்கார வைத்ததோடு தனது போரை நிறுத்திக் கொண்டது.
உசாமா எங்கே? இன்று வரை கேள்விக்கு பதிலில்லை. உலகின் ஒவ்வொரு மூலை முடுக்கையும் கண்காணிக்கும் விதத்தில் பூமிக்கு வெளியே சாட்டிலைட்களை நிறுவி உலகையே தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் அமெரிக்காவிற்கு ஒரு சாதாரள அதுவும் தன்னால் வளர்த்தி விடப் பட்ட ஒரு மனிதனை பிடிப்பது முடியாத காரியமா என்ன? நிச்சயம் முடியும். ஆனால் அதுவல்லவே அவர்களது நோக்கம்.
எந்த நோக்கத்திற்காக வந்தார்களோ அது நிறைவேறியவுடன் வெளியேறினார்கள் அவ்வளவே. இந்த உசாமா உயிரோடு இருக்கும் வரை அமெரிக்காவிற்கு அது இலாபமே! மற்றொரு சமயம் வேறொரு நாட்டிற்கெதிராக உபயோகப் படலாம். நம் நாட்டு அரசியல்வாதிகள் கொடுக்கும் வாக்குறுதிகளை தேர்தலுக்குப் பின் அவர்கள் மறப்பது போல், அவர்கள் செய்யும் ஊழல்களை தேர்தல் நேரத்தில் மக்கள் மறப்பது போல் எந்த நோக்கத்தைக் கூறி ஆப்கன் மீது அமெரிக்க போர் தொடுத்ததோ அதனை உலகமே மறந்தது. இப்பொழுதும் இந்த பரிதாப முஸ்லிம் உலகிற்கு இது உறைக்க வில்லை.
எண்ணையில் கண்ணை வைத்து அடுத்து ஈராக்கிற்கு ஓடியது அமெரிக்கா!. இப்பொழுது கூறிய காரணம்: "சதாமிடம் உயிர் கொல்லி ஆயுதங்கள் உள்ளன; அடிமையாக வாழும் ஈராக் ஜனங்களுக்கு சுதந்திரம்"; இந்த நிமிடம் வரை இந்த இரண்டுமே நடக்கவில்லை. என்ன நோக்கத்திற்காக வந்ததோ அந்த நோக்கம் நல்லமுறையில் நிறைவேறிக் கொண்டிருக்கிறது. ஆம் ஈராக் ஜனதைக்கு சுதந்திரம் என்று கூறி இருந்த சுதந்திரத்தை இல்லாமல் ஆக்கியது.
தினமும் நூற்று கணக்கான அப்பாவி மக்கள் "தீவிரவாதி" என்ற பெயரால் அமெரிக்க கூட்டுப் படையினராலும், "தேச விரோதி" என்றப் பெயரால் சுதந்திரப் போராளிகளாலும், யாருக்கு அதிகாரம் என்ற பெயரில் மத மௌடீகவாதிகளாலும், வீடு பற்றியெரியும் போது அதில் குளிர்காய நினைக்கும் சமூக விரோதிகளாலும் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். எல்லோருடைய கவனமும் இங்கு இருக்க தான் நினைத்து வந்த எண்ணையில் சரியாக கண்ணை வைத்து காரியங்களை ஆற்றிக் கொண்டிருக்கிறது உலகின் அமைதி விரும்பி.
அமெரிக்காவின் இந்த அதிகார வெறியில் இது வரை பலியான அப்பாவி மக்களின் எண்ணிக்கையை கூட்டிப் பார்த்தோமானால் உசாமாவும், ஹிட்லரும், சதாமும் அதனிடம் பிச்சை வாங்க வேண்டும். எனினும் தற்போதும் அமெரிக்கா தான் மக்களுக்கு முழுமையான சுதந்திரத்தை வழங்குகிறது!!! அது போன்ற நடுநிலையான நாடு உலகில் இல்லை!!! வாழ்க அமெரிக்க ஜனனாயகம்! வாழ்க அமெரிக்க சுதந்திரம்! வாழ்க அமெரிக்கா!
Subscribe to:
Post Comments (Atom)
இந்த உசாமா உயிரோடு இருக்கும் வரை அமெரிக்காவிற்கு அது இலாபமே! மற்றொரு சமயம் வேறொரு நாட்டிற்கெதிராக உபயோகப் படலாம்.//
ReplyDeleteAn different view. It may be possible. Good writing style. Keep it up.
/எதிரியாக நினைக்கும் நாட்டை ஒன்று எலும்புத்துண்டைக் காட்டி தனக்கு விசுவாசமான வளர்ப்பு நாயாக ஆக்கி விடுவார்கள்./
ReplyDeleteyou mean t........
//துவண்டுக் கிடந்த பொருளாதாரம் புதிதாக உற்பத்திச் செய்த ஆயுதங்களைப் பரிசீலனையில் செய்துக் காட்டி மற்ற நாடுகளுக்கு விற்று நிமிர்த்திக் கொண்டது. போதாததிற்கு எண்ணெய் வேறு.//
ReplyDeleteThis is not a correct news. can you give me the evidence.
ஐயா,
ReplyDeleteஇங்கே எண்ணெய் விலை குறைந்த மாதிரி தெரியலயே. மற்ற சில கருத்துக்களில் உடன்படுகிறேன்.
அமெரிக்க வெளியுறவுத் துறையின் எண்ணங்களும் செயல்களும் அமெரிக்க மேலாதிக்கத்தை வரும் காலங்களில் உறுதி செய்வதே . ஒசாமா யை பிடிப்பது அவ்வுளவு ஒன்றும் சுலபமான காரியமாய் தெரியவில்லை. ஆப்கன் / இராக் பற்றி எழுதுவது எல்லாருக்கும் தெரிந்தது தானே .வெனிசுலா /ஹைட்டி பற்றியும் எழுதுங்கள் நண்பரே.
ReplyDelete/This is not a correct news. can you give me the evidence./
ReplyDeleteஇந்த சமுத்திரா பயலுக்கு முஸ்லிம்கள எத்ரிக்க வேண்டுமெ என்பதுக்காக யாரை வோனும்னாலும் அடிவருடுவான் போல.
அமரிக்காவுக்கு விசுவாசமா இருந்தா எந்த வகையில இந்தியாவுக்கு நல்லதுன்னு சமுத்திரா விளக்குவியா?
சும்மா கூகில்ல படிக்கிறத வச்சுக்கிட்டு பிணாத்தாதெயும்!
//This is not a correct news. can you give me the evidence.//
ReplyDeleteஅப்ப மத்ததெல்லாம் சரியான நியூசுன்னு ஒத்துக்குறியா சமுத்துரா?
Related news :
ReplyDeleteAl-Jazeera No Threat to US