அதிகார மமதை கொண்டவர்களின் கையில் ஆட்சி இருந்தால் அது குரங்கு கையில் பூமாலை தான் என்பதற்கு மிக சிறந்த உதாரணம், தன்னை உலக வல்லரசு என்று வளர்ப்பு நாயின்(டோனி) உதவியுடன் பயந்தவர்களின் காதில் பூசுற்றிக் கொண்டிருக்கும் அமெரிக்காவின் அழிவிற்கு காரணமாக வந்து வாய்த்திருக்கும் இளைய புஷ் என்றால் அது மிகையில்லை.
உலகின் மிகச் சிறந்த(!!???!!!) அதிபர் என்று தனக்கு ஒத்து ஊதும் சில கைக்கூலி மேற்கத்திய ஊடகங்களையும், அவை என்ன உளறுகிறதோ அதை அப்படியே எவ்வித ஆராய்ச்சியும்(குறைந்த பட்சம் அச்செய்தி சரியா இல்லையா என்று கூட ஆராய்சி) செய்யாமல் வாந்தி எடுக்கும் மூன்றாம் நாடுகளின் சில ஊடகங்களின் துணையுடனும் லட்சக்கணக்கான அப்பாவி உயிர்களின் மீது அகந்தையுடன் வலம் வரும் புஷின் சுயரூபம் பல சமயங்களில் எதேச்சையாக வெளிவருவதுண்டு.
அவை புஷின் யதார்த்த ரூபங்களையும் வெளிபடுத்துவதாக அமைவதுண்டு.
அதில் ஒன்று தான் இங்கே காணப்படுவது.
உலகின் மிகச் சிறந்த(!!!?) அதிபர் எதை எப்படிப் பார்த்து எப்படி முடிவுகள் எடுக்கிறார் என்பதை இங்கு பாருங்கள்.
உலகின் மிகச் சிறந்த படங்களாக தேர்ந்தெடுக்கலாம்.
Subscribe to:
Post Comments (Atom)
சிரித்துச் சிரித்து வயிற்று வலி. இவரை என்னதான் செய்வது! இந்தப் படங்கள் உண்மையான படங்கள்தானா? சினிமாவில் வரும் நகைச்சுவைக் காட்சி போல இருக்கிறது.
ReplyDeleteஉண்மையான படங்கள் தான், எந்த சந்தேகமும் வேண்டாம்.
ReplyDeleteஅடக்கடவுளே! நடிப்புல எல்லா நகைச்சுவை நடிகர்களையும் மிஞ்சிட்டாரு இவரு. முதல்ல சிரிச்சாலும் அப்புறம் வயித்தெரிச்சலா இருந்ததுங்கறது உண்மைதான்.
ReplyDeleteராகவன் சார்,
ReplyDeleteஜூனியர் புஷ்ஷைப் பார்த்து வயித்தெரிச்சல் படாதீங்க! உங்களையும் தீவிரவாதின்னு சொல்லிடபோறார்:-)))
இறுதியில் உள்ள படம் மிகவும் பிரசித்தி பெற்றது,
ReplyDeleteFarenheit 9/11 படத்தில், விமானத்தாக்குதல் கேட்டகும் நேரத்தில் அந்த பள்ளியில்தான் புஷ் இருந்தார்..
Nalla Kooththu..Ha ha
ReplyDelete