Saturday, November 19, 2005

நாடு முன்னேற - ஒரு சுய பரிசோதனை!

நாட்டு முன்னேற்றத்தில் அக்கறை கொண்டவரா நீங்கள்?

எனில் உங்களுக்கொரு சவால்! தமிழ்நாட்டு மந்திரி சபையில் இருந்த, இருக்கின்ற சில மந்திரிகளின் பெயர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒவ்வொரு மந்திரியின் பெயர்களின் மீதும் அழுத்தி அவர்கள் நாட்டு முன்னேற்றத்திற்காக எவ்வாறெல்லாம் கஷ்டப் படுகிறார்கள் என்பதை பார்க்க வேண்டியது மட்டுமே. பின்னர் இவற்றில் எந்த மந்திரியின் செயல் உங்களுக்கு பிடித்துள்ளதோ அவருக்கு உங்கள் ஆதரவினை பின்னூட்டம் மூலம் குறிப்பிடுங்கள்.

உங்களில் எத்தனை பேர் நம் நாட்டு முன்னேற்றத்தில் அக்கறை கொண்டவர் என்பதை அறியும் சிறு முயற்சியே இது!.

திரு. அன்வர் ராஜா

திரு. தனபால்

திரு. ஜீவானந்தம்

திரு. ஜெயக்குமார்

திரு. பாண்டு ரங்கன்

திரு. பன்னீர் செல்வம்

திரு. பொன்னையன்

திரு. செம்மலை

திரு. சண்முகநாதன்

திரு. தம்பி துரை

திரு. வைத்தியலிங்கம்

திரு. வளர்மதி

திரு. வேலுச்சாமி

உங்களுக்கு பிடித்த மந்திரியின் உழைப்பினை பின்னூட்டம் மூலம் தெரிவிக்கும் முன் இப்பதிவினுள் கடந்தவர்களைப் பற்றிய ஓர் சிறு கண்ணோட்டம்:

1. மேலோட்டமாக பார்வையிட்டவர்கள் :- சுற்றுலாப் பயணிகள்!

2. ஒன்றிரண்டை திறந்து பார்த்து விட்டு இவனுக்கு வேற வேலையே இல்லை என்று முடித்துக் கொண்டவர்கள் :- இவ்வாறு நாட்டுக்காக குறுக்கு முறிந்து வேலைப் பார்க்கும் சட்டமன்ற உறுப்பினர்களையும், மந்திரிகளையும் வாழவைக்கும் அப்பாவி குடிமக்கள்!

3. அனைத்தையும் பொறுமையுடன் பார்த்து விட்டு மவுனமாக செல்பவர்கள் :- வெள்ளுடை தரித்த கனவான்கள்(சாக்கடை தன் மீது தெறிக்காமல் கவனமாக இருப்பவர்கள்). இவ்வாறு நாட்டுக்காக குறுக்கு முறிந்து வேலைப் பார்க்கும் சட்டமன்ற உறுப்பினர்களையும், மந்திரிகளையும் வாழவைப்பதில் இவர்களுக்கு சமப் பங்குண்டு!.

4. அனைத்தையும் பொறுமையுடன் பார்வையிட்டு பிறந்த நாட்டின் மீதுள்ள அக்கறையால் இந்த அவலமான நிலைக்கு எதிராக ஏதாவது செய்ய வேண்டும் என்ற சிந்தனையோடு குறைந்த பட்சம் இப்பதிவினையாவது அனைவருக்கும் தெரிய வைக்கலாம் என்ற நோக்குடன் "+" குறியினை அழுத்தியும், பின்னூட்டமும் இடுபவர்கள் :- வேறு வேலையில்லாத சோம்பேறிகள், பயங்கரவாதிகள், நாட்டைத் துண்டாட நினைப்பவர்கள், அரசைக் கவிழ்க்க சதி செய்பவர்கள் etc....

5. இந்தப் பக்கமே எட்டிப் பார்க்காதவர்கள் :- நாட்டில் நடக்கும் அவலங்களை கண்டு மனம் வெம்பி அதனை மாற்ற என்னேரமும் அயராது பாடுபட்டுக் கொண்டிருப்பவர்கள் இவர்கள் மட்டுமே!

ஆகா படம் காட்டுறாங்க!

14 comments:

  1. அதான் நீங்களே சரியான வரிசையிலே தானே போட்டுருக்கீங்க... 'இறைவனை தவிர வேறு யாருக்கும் வணக்கம் சொல்ல மாட்டொம்' அப்படீன்னு சொல்லிக்கிட்டிருக்கிற இனத்தில இருந்து வந்து கூழைக் கும்பிடு போடுற அன்வர் ராஜாவுக்கு தான் என்னோட வோட்டு! அது சரி.. நீங்க என்ன காரணத்துக்காக அன்வரை முதலிலே போட்டீங்க? என்ன பற்றுன்னு தெரிந்துக்கலாமா?! :) :)

    ReplyDelete
  2. ஸ்மைல் குறி போட்டிருப்பதால் விளையாட்டுக்குத் தான் கேட்டிருக்கிறீர்கள் என்று தெரிகிறது. எனினும் உண்மையில் நீங்கள் கூறியப் பிறகு தான் அந்த விஷயமே எனக்கு உறைத்தது.

    இது எதேச்சையாக நடந்ததே!. அப்படங்கள் அகர வரிசைப்படி கோப்புகளாக இருந்ததால் பதிவேற்றம் செய்யும் போது அப்படியே பதிவேற்றம் செய்து விட்டேன்.

    நீங்கள் "அந்த" காரணம் தான் என நினைத்துக் கொண்டீர்கள் எனில் அதற்கு நான் பொறுப்பல்ல:-)))

    "வணக்கத்திற்குரியவன்" படைத்தவனைத் தவிர வேறு யாரும் இல்லை என்று மனதால் உறுதி கொண்டவன் தான் முஸ்லிம். தன்னை இறைவனுக்கு மட்டுமே அடிமையாக்கிக் கொள்வதை விட்ட இந்த ஜென்மத்தை எப்படி அந்த இனத்தில் சேர்ப்பது!

    மனதால் உறுதியாக நம்பிக்கை கொண்டேன் என்று கூறுபவர்களை நம்பலாம்.

    எனக்கு இதில் நம்பிக்கை இல்லை என்று நேரடியாக கூறுபவர்களை நம்பலாம்.

    நான் நம்பிக்கைக் கொண்டேன் என்று கூறி விட்டு அதற்கு எதிராக நடப்பவர்களை எப்படி நம்புவது?

    எனவே கண்டிப்பாக நம்பிக்கை துரோகிகளுக்கு என் ஆதரவு கிடையாது:-))))))))

    ReplyDelete
  3. அபூ ஸாலிஹாNovember 20, 2005 at 1:00 AM

    மாயவரத்தான்... நீங்கள் சொன்ன "அந்த" காரணம் தான்!

    இறைவனுக்கு மட்டுமே தலை வணங்குவேன் என்ற ஏகத்துவத்தை கொள்கையாகக் கொண்ட முஸ்லிம்(?) ஒருவர் இவ்வாறு கீழ்த்தரமான காலில் விழும் செயலில் ஈடுபடும்போது, கண்டிக்கும் பட்டியலிலும் அவருக்கே முதலிடம் என்று Erai Nesan நினைத்திருக்கலாம்.

    அது சரி..? கூழைக்கும்பிடு போடும் அனைவரையும் விட்டுவிட்டு அன்வருக்கு மட்டும் நீங்கள் ஓட்டு போடுவதில் உள்ள உங்களின் பற்று என்னன்னு தெரிந்துக்கலாமா?! :) :)

    ReplyDelete
  4. தொடுப்புகளிலிருக்கும் படங்களைப் பார்த்த பிறகு "பொன்னையன்" மட்டும் தன் பெயருக்கு எதிர்ப்பதமாக ஓரளவு செயல்பட்டுள்ளார்.

    "அன்வர் ராஜா" தன் பெயரிலுள்ள "அன்வரை" நீக்கி விட்டால் அவர் நம்பிக்கைக்கும் கொள்கைக்கும் நலம்.

    மற்ற கூழைக்கும்பிடு அரசியல்வாதிகளைப் பற்றி சொல்வதற்கு ஒன்றுமில்லை.

    ReplyDelete
  5. //"அன்வர் ராஜா" தன் பெயரிலுள்ள "அன்வரை" நீக்கி விட்டால் அவர் நம்பிக்கைக்கும் கொள்கைக்கும் நலம்.//

    என்ன ஆப்பா? "ராணி"யின் முன் இன்று யார் "ராஜா"வாக இருக்கிறார்? பதவிக்கு வேட்டு வைத்துவிடுவீர்கள் போல் உள்ளதே!:-]

    ReplyDelete
  6. //அது சரி..? கூழைக்கும்பிடு போடும் அனைவரையும் விட்டுவிட்டு அன்வருக்கு மட்டும் நீங்கள் ஓட்டு போடுவதில் உள்ள உங்களின் பற்று என்னன்னு தெரிந்துக்கலாமா?!//

    அதான் மேலேயே என்னோட வோட்டிற்கான காரணத்தை சொல்லி விட்டேனே சார். :) :)

    இறை நேசன், காரணம் சொன்னதுக்கு தேங்க்ஸ்..!

    பொதுவாகவே, இறைவனை வணங்குவதும், வயதிலும், அறிவிலும் மூத்தோருக்கு மரியாதை செய்விப்பதும் தவறில்லை என்பது என் கருத்து. ஆனால் இங்கே அனைவருமே ஏதோ ஒரு காரணத்துக்காக தான் (வேறென்ன காரணம்--'பதவி படுத்தும் பாடு' தான்!) இப்படி 'பொத் பொத்' என்று விழுந்து எழுந்திருக்கிறார்கள் என்பது கண்கூடு.

    ReplyDelete
  7. என்னபபா உண்மையில்விழுகிறாங்க.. நானன் ஏதோ திரைப்படத்தில்தான் சும்மா இப்பிடி காட்டுவாங்க என நினைத்தேன்!!!

    ReplyDelete
  8. கல்லையும் மண்ணையும் வணங்கும்போது அம்மாவையும் வணங்குவதில் என்னதப்பு.அதுவும் பதவி தந்தவர்.உங்களுக்கு பதவி தரவில்லை என்ற பொறாமை.

    ReplyDelete
  9. ஏம்பா! இப்படி ஆளுக்காளு ஓட்டு போட சொல்றியலே..யாருக்கு நாங்க வோட்டு போடுறது ( குமரன், இளவஞ்சி..இப்போ நீங்க) :-)

    ReplyDelete
  10. ---ஏம்பா! இப்படி ஆளுக்காளு ஓட்டு போட சொல்றியலே..//

    தேர்தலில் நிற்க முன்னோட்டம் விடுகிறார்களோ:-]

    ReplyDelete
  11. "+" குறியினை அழுத்தியும், பின்னூட்டமும் இடுபவர்கள்//

    அப்ப "-" குறியை அழுத்தி பின்னூட்டமிடாதவர்கள்?. (நா இல்லீங்கோ!)

    ReplyDelete
  12. //ஆகா படம் காட்டுறாங்க!//

    அண்ணாத்தே! படம் நல்லாத்தேய்ங் காட்டுற, இன்னா சன் குடும்பத்துல வேல செஞ்சிக்கினிறியா?

    ReplyDelete
  13. //குறைந்த பட்சம் இப்பதிவினையாவது அனைவருக்கும் தெரிய வைக்கலாம் என்ற நோக்குடன் "+" குறியினை அழுத்தியும், பின்னூட்டமும் இடுபவர்கள் ...
    //
    ஒரு "+" குத்தினேங்க, ஏதோ என்னால முடிஞ்சது ;-)

    ReplyDelete
  14. இதுல, பொன்னையன், பன்னீர்செல்வம், ஜெயக்குமார், வளர்மதி தவிர வேறு யாரும் "ஸ்டண்ட்"க்காக கூட ஊடகங்களில் பெயர் வராதவர்கள். அது சரி, இவங்க எல்லாம் எந்த "வருஷத்து" அமைச்சர்கள்.

    ReplyDelete