Saturday, November 12, 2005

கஷ்டகாலம்!

நடிகர் சத்ருகன் சின்கா தனியார் டெலிவிஷனுக்கு நவ.12 அன்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மத்திய மந்திரிசபையில் குற்ற பின்னணி கொண்ட மந்திரிகள் பிரச்சினை பற்றி தேசிய ஜனநாயக கூட்டணி பேசுவதற்கு முன்பு, நீங்கள் நன்றாக சிந்தித்து பார்க்கவேண்டும். பா. ஜனதா- ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் குற்ற பின்னணி உள்ளவர்களுக்கு தேர்தலில் டிக்கெட் கொடுக்கப்பட்டுள்ளது.
பீகாரில் குற்ற பின்னணி உள்ளவர்களுக்கு தேர்தல் டிக்கெட் கொடுத்துவிட்டு, நாளை அவர்கள் வெற்றி பெற்று மந்திரிகளாகிவிட்டால், குற்ற பின்னணி உள்ள மத்திய மந்திரிகள் பற்றி பாராளுமன்றத்தில், தேசிய ஜனநாயக கூட்டணி எப்படி பேச முடியும்?

நான் இப்படி கூறுவதற்காக என்னை கட்சியை விட்டு தூக்கி எறிந்தால், நான் வெளியேற தயார்.

இரட்டை வேடம் போடும் பா.ஜனதா-ஐக்கிய ஜனதா தளம் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, காங்கிரஸ் தலைமையிலான மத்திய மந்திரிசபையில், குற்ற பின்னணி உள்ள மந்திரிகள் பற்றி பேசும் தகுதியை இழந்து விட்டார்கள்.

ஏ.சி. அறைக்குள் இருந்து கொண்டு, பீகார் பிரச்சினை பற்றி தெரியாமலேயே அருண்ஜெட்லி போன்றவர்கள், பீகார் அரசியலை நடத்திக்கொண்டு இருக்கிறார்கள்.

இவ்வாறு நடிகர் சத்ருகன் சின்கா கூறினார்.

உண்மைகள் சில நேரங்களில் வெளிப்பட்டாலும் காலப்போக்கில் அவை மறக்கப்படுகிண்றன அல்லது மறக்கடிக்கப் படுகின்றன. பாவம் சத்ருக்கனன் இன்னும் அரசியலை சரியாக புரிந்து
கொள்ளவில்லை போலிருக்கிறது. கஷ்டகாலம் சத்ருக்கனனுக்கா அல்லது சங்க்பரிவாரத்திற்கா?

5 comments:

  1. "இரட்டை வேடம் போடும் பா.ஜனதா-ஐக்கிய ஜனதா தளம் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, காங்கிரஸ் தலைமையிலான மத்திய மந்திரிசபையில், குற்ற பின்னணி உள்ள மந்திரிகள் பற்றி பேசும் தகுதியை இழந்து விட்டார்கள்."


    சரியான ஓர் மரமண்டையைத் தான் பி.ஜே.பி யினர் கட்சியில் வைத்துள்ளனர்!

    ReplyDelete
  2. "இரட்டை வேடம் போடும் பா.ஜனதா-ஐக்கிய ஜனதா தளம் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, காங்கிரஸ் தலைமையிலான மத்திய மந்திரிசபையில், குற்ற பின்னணி உள்ள மந்திரிகள் பற்றி பேசும் தகுதியை இழந்து விட்டார்கள்."


    சரியான ஓர் மரமண்டையைத் தான் பி.ஜே.பி யினர் கட்சியில் வைத்துள்ளனர்!

    ReplyDelete
  3. இரட்டை வேடம் போடுரவந்தான் இந்திய அரசியல்வாதி இதை கூடதெரியாத இவர் கட்சியில் இருந்தா கட்சிக்குத்தான் கேடு. தூக்கி கடாசுங்கப்பா.

    ReplyDelete
  4. The First Two Comments are another example for 'IRATTAI VEDAM'

    ReplyDelete
  5. I refuse to believe that there exists a politician who is not a turncoat!

    ReplyDelete