Monday, November 21, 2005

சட்டங்கள் ஆள்வதும், பட்டங்கள் செய்வதும்............. எப்பொழுது?

காலம் எவ்வளவு தான் முன்னேறினாலும் மனித குலம் எவ்வளவு தான் வளர்ச்சியடைந்திருந்தாலும் பெண்களைக் கொடுமைப் படுத்துவது மட்டும் இன்று வரை குறைந்த பாடில்லை. எதில் சமத்துவம் வேண்டுமோ அதைப் பற்றி பேசாமல் எதில் சமத்துவம் காண்பித்தால் பெண்ணினம் சீரழிக்கப் படுமோ அதைக் கூறி, ஆண் பெண் இருபாலரும் உடல் ரீதியாக ஒரே தன்மையினரல்ல என்பதை கண்டுகொள்ளாமல் எங்கெல்லாம் ஆணையும், பெண்ணையும் கலந்துறவாட சந்தர்ப்பங்களை ஏற்படுத்தியுள்ளனரோ அங்கெல்லாம் பெண்கள் ஏதாவதொரு முறையில் கொடுமைப் படுத்தப் படுகின்றனர் என்பது நிதர்சனமான உண்மையாகும்.

பாதிக்கப்பட்ட பெண்கள் பக்கமிருந்து மானத்தைக் கருதி பெரும்பாலான கொடுமைகள் வெளிப்படுத்தப் படாமல் மறைக்கப்படுகின்றன என்பதும் மறுக்க முடியாத உண்மையாகும். இதில் துணிச்சலுள்ள சில பெண்களால் எப்பொழுதாவது சில விஷயங்கள் வெளிப்படுவதுமுண்டு. இவ்வாறு கூறும் பொழுது சில படித்த முற்போக்குவாதிகளாகவும், பெண்ணியவாதிகளாகவும் தன்னை காட்டிக்கொள்பவர்கள் உடனே இதற்கு எதிராக களமிறங்குவதும் நடந்த சம்பவங்களைப் பட்டியலிடும் போது அதற்கு ஏதாவது நொண்டி காரணங்களை கூறுவதும் வாடிக்கை.

அதில் முக்கியமாக பெண்கள் கொடுமைப் படுத்தப்படுவதற்குக் காரணம் படிப்பறிவின்மையும், முற்போக்கு மனப்பான்மையில்லாததுமே என்று சில படித்த முற்போக்கு மேற்கத்திய கலாச்சாரத்தில் ஊறிய அறிவு ஜீவிகள் கூறுவதுண்டு. அப்படிப்பட்ட படித்த முற்போக்கு அறிவு ஜீவிகளுக்கு இப்பதிவு அர்ப்பணம்.

இந்தியாவிலேயே கல்வியறிவில் முதன்மையானதும் அறிவுஜீவிகளும், முற்போக்குவாதிகளும்(லெஸ்பியனுக்கு முதலாவதாக இயக்கம் கண்ட மாநிலம்) நிறைந்த கேரளாவில் சமீபத்தில் வெளிப்பட்டு தற்போது கேரளாவையே கலக்கிக் கொண்டிருக்கும் செய்தியை அப்படியே கீழே தருகிறேன்.

கேரள மாநிலம் கோட்டயத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்வி பள்ளியில் முதலாம் ஆண்டு நர்சிங் படித்து வந்த சுதி என்ற மாணவி சக மாணவர்களால் ராக்கிங் என்ற போர்வையில் கற்பழிக்கப்பட்ட சம்பவம் கேரளா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை ரஞ்சித், ஆஷ்லி வர்கீஸ் என்ற 2 மாணவர்களும் சம்பவம் குறித்து தெரிந்திருந்தும் போலீசுக்கு தகவல் தெரிவிக்காமல் இருந்த குற்றத்திற்காக பள்ளி பெண் முதல்வர் மதியம் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 4 மாணவிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

சம்பவம் நடந்த பள்ளி, தொடங்கப்பட்ட காலத்திலிருந்தே மிகவும் கொடூரமான முறையில் ராக்கிங் நடந்து வந்துள்ளதாக மாணவ - மாணவிகளின் பெற்றோர்களே கண்ணீர் மல்க கூறியுள்ளனர். பல பெற்றோர்கள் தங்களது குழந்தைகளின் எதிர் காலத்தை நினைத்து பள்ளியில் நடக்கும் கொடுமைகளை வெளியில் சொல்லாமல் இருந்திருக்கின்றனர்.

இதுகுறித்து பள்ளி உயரதிகாரிகளுக்கு தெரிந்திருந்தும் அவர்களும் கண்டும், காணாமலும் இருந்து விட்டனர். வருடந்தோறும் பல மாணவ-மாணவிகள் ஆயிரக்கணக்கில் பணத்தைக் கட்டிய பிறகு, ராக்கிங் கொடுமையை தாங்க முடியாமல் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு வேறு பள்ளிகளுக்கு சென்றுள்ளனர்.

இப்படி மாணவர்களின் ராக்கிங் கொடுமை ஒருபுறமென்றால் மறுபுறம் இந்தப்பள்ளியில் மதிப்பெண்களை குறைத்து விடுவதாக கூறி ஆசிரியர்களே மாணவிகளுக்கு …செக்ஸ் டார்ச்சர் கொடுத்த சம்பவமும் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இறுதி தேர்வில் செய்முறை தேர்வுக்கு ஒரு குறிப்பிட்ட மதிப்பெண்கள் அந்தந்த ஆசிரியர்களின் கைகளில் தான் உள்ளது. அவர்கள் நினைத்தால் மதிப்பெண்களை கூட்டவோ, குறைக்கவோ முடியும். இந்த ஒரு துருப்புச்சீட்டை வைத்துக்கொண்டு பல ஆசிரியர்கள் அப்பாவி மாணவிகளை தங்களது ஆசைக்கு இணங்க வைத்துள்ளதாக கூறப்படுகிறது. …செய்முறை தேர்வில் முழு மதிப்பெண் வேண்டுமா? தனியாக என்னை வந்து பார்! என்று மாணவிகளிடம் ஆசிரியர்கள் கூறுவார்களாம்.

எதுவுமே தெரியாத அப்பாவி மாணவிகளும் ஆசிரியரை சென்று பார்த்தால் தன்னுடைய அறைக்கு வரவழைத்து பிறகு மிரட்டி தனது பசியை தீர்த்துக்கொள்வார்களாம். மிரட்டலுக்கு பணியாவிட்டால் அந்த தேர்வில் பெயில்தான். இப்படி ஏராளமான மாணவிகளுக்கு ஆசிரியர்கள் கொடுத்துள்ள செக்ஸ் டார்ச்சர் இப்போது வெளிவந்துள்ளது.

கடந்த செப்டம்பர் மாதம் 23-ந்தேதி சில மாணவிகள் தங்களை ஆசிரியர்கள் கொடுமைப்படுத்துவதாக கூறி தக்க ஆதரங்களுடன் துணைவேந்தரிடம் புகார் கொடுத்துள்ளனர். இதுகுறித்து விசாரணை நடத்திய பல்கலைக் கழக அதிகாரிகளுக்கு மாணவிகளின் புகார் உண்மைதான் என தெரியவந்துள்ளது.

இதையடுத்து கோட்டயம் எஸ்.பி.யிடம் புகார் செய்ய அறிவுறுத்தி பல்கலைக்கழக பதிவாளருக்கு கடிதம் எழுதப்பட்டது. ஆனால் இந்த சம்பவம் குறித்து எஸ்.பி.யிடம் புகார் செய்ய பதிவாளர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதற்கு காரணம் சில உயர்மட்ட அதிகாரிகளுடன் சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் தொடர்பு இருந்தது தான்.

இதன் பிறகும் வழக்கம்போல் அந்த ஆசிரியர்கள் தங்கள் …விளையாட்டுக்களை! தொடர்ந்துள்ளனர். பல்கலைக்கழக சிண்டிகேட் கூட்டத்திலும் இதுகுறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. ஆனால் விவாதத்தோடு அந்த விவகாரம் முடிந்து போனது.

மாணவி சுதி கற்பழிக்கப்பட்ட சம்பவம் வெளிச்சத்திற்கு வந்த பிறகு பேபி குரியன், கிரண் என்ற 2 ஆசிரியர்களை பல்கலைக்கழகம் சஸ்பெண்டு செய்தது. ஆனால் அவர்கள் மீது மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.


முதலில் இப்படிப்பட்ட சம்பவங்கள் நடப்பதற்கு வெறிபிடித்த ஆண்கள் மனதில் அந்த சிந்தனையை தூண்டாமல் இருக்க பெண்களை பாதுகாக்கும் நோக்கிலேயே இஸ்லாம் பெண்களுக்கு உடலை மறைக்கும் படி அறிவுறுத்துகிறது! இதனை அனுபரீதியாக உணர்ந்து கூறியவர்கள் பலபேர் உண்டு.

பல சரித்திரம் படைப்பதற்கு நல்ல பெண்ணாக வாழ்ந்தால் முடியாது என்ற கருத்துடைய சானியாவையும், கர்ப்பப்பை சுதந்திரத்தை விரும்பும் தஸ்லீமாவையும் போன்றவர்கள் இதற்கு விதி விலக்கு - இப்படிப் பட்ட எண்ணமுடையவர்கள் தனுடலை மறைக்க வேண்டிய அவசியமில்லை என்பதும், இவர்களைப் போன்றவர்கள் தான் இப்படிப் பட்ட ஆண்களுக்கு இடையில் புழங்குவதற்கு அருகதையுடையவர்கள் என்பதும் என் கருத்து - ஏனெனில் அவர்களுக்குத் தான் அதெல்லாம் ஒருப் பிரச்சினையே இல்லையே.

எவர்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்று தோன்றுகிறதோ, எவருக்கு மற்றவர் தன்னை கண்ணியமாக பார்க்கப்பட வேண்டும் என்ற எண்ணம் உள்ளதோ அவர்களையே இஸ்லாம் தன்னுடைய உடலை மூடச் சொல்கிறது.

இதை அனுபவத்தில் உணர்ந்த பிரபல கேரள பெண் எழுத்தாளர் இஸ்லாத்தை ஏற்றபிறகு (இவர் இஸ்லாத்தை ஏற்பதற்கு முன்பு தஸ்லீமாவின் கருத்துடைய பல நாவல்களை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது) ஒரு பேட்டியில் இவ்வாறு கூறுகிறார், "நான் இப்பொழுது பாதுகாப்பாக உணர்கிறேன்; பர்தா எனக்கு கண்ணியம் வழங்கியுள்ளது;".

இதை இஸ்லாம் கூறினால் அது தவறு. அதையே அண்ணா பல்கலைக் கழகம் கூறினால் அது சரி. என்ன ஒரு கண்ணோட்டம்.

அதுபோல் இப்படிப்பட்ட கயவர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும்(அதுவும் இஸ்லாம் கூறிய முறைப்படி தன்னுடலை வெளிக்காட்டாமல் வாழும் பெண்களிடம் கொடுமைப் புரியும் காமக்கொடூரர்களை) என்று இஸ்லாம் கூறினால் அது ஈவிரக்கமற்ற, மனிதாபிமானமற்ற செயல்.

அதுவே (தவறு செய்ய எல்லா சூழ்நிலைகளையும் ஏற்படுத்திக் கொடுத்திருக்கும் சூழலில்) இத்தவறு செய்யும் கொடியவர்களுக்கு மரணதண்டனை வழங்க வழி செய்யும் படி சட்டமியற்றப் படவேண்டும் என்று திரு. அத்வானி அவர்கள் கூறினால் அது சரி. என்ன மனிதர்கள் ஒன்றுமே புரியவில்லை!

15 comments:

  1. முதலில் உண்மைகளைத் தெரிந்து கொள்ளுங்கள். அண்ணா பல்கலைகழகம் விதித்த உடைக் கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு இருக்கிறது. பல்கலைகழகம் பர்தா அணியச் சொல்லவில்லை.
    இஸ்லாமிய சமூகங்களில் பெண்கள் மீது வன்முறையே இல்லையா. இந்தியாவை விட அங்குதான் அதிகம். கல்லால் அடித்துக் கொல்லுதல் போன்ற முட்டாள்த்தனமான, கொடூரமான தண்டனைகள்
    அங்கு உண்டுதானே. ஆனால் ஏன் ஐரோப்பாவின் பல நாடுகளில் இஸ்லாமிய நாடுகளை விட
    பெண்கள் மீதான குற்றங்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது என்பதை யோசியுங்கள்.
    அந்நாடுகளில் பெண்கள் பர்தா அணிவதில்லை. அத்வானியின் கருத்தினை பெண்ணிய அமைப்புகள் பல ஏற்கவில்லை.

    ReplyDelete
  2. muzhusa mukkadu pottukitu pona pennaye saudile karpazhichangalame. ippa enna pannalam. irumbu kavasam anindhu pogalama?

    ReplyDelete
  3. முதலில் தாங்கள் கொடுத்த செய்திக்கான ஆதாரத்தினைத் தாருங்கள். உடைக்கட்டுப்பாடு பெண்களுக்கு பாதுகாப்பு என்பது ஆதாரமற்ற வாதம். பாகிஸ்தானிலும், மத்திய கிழக்கு நாடுகளிலும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஏராளமாக நடக்கின்றன, குடும்பங்களிலும் நடக்கின்றன. உடைக்கட்டுப்பாடு இல்லாத பிரான்சிலும், ஜெர்மனியிலும், ஸ்வீடனிலும், ஸ்விஸ்லும் பெண்களுக்கு எதிரான வன்முறை மிகவும் குறைவு. நார்வே, டென்மார்க்,ஸ்வீடன் போன்ற நாடுகளில் ஆண்-பெண் சமத்துவம் மிக நல்ல நிலையில் உள்ளது. பெண்கள் அரசியலிலும் பெரும் பங்கு வகிக்கிறார்கள்.
    முதலில் மானுட வளர்ச்சி அறிக்கை போன்றவற்றை படித்து புரிந்து கொள்ளுங்கள். எண்ணெய் வளம் மூலம் அபரிதமான செல்வம் இருந்தும் மத்திய கிழக்கு நாடுகள் மானுட வளர்ச்சியில் ஏன் பிந்தங்கியுள்ளன என்பதை அரபியப்பகுதிக்கான மானுட வளர்ச்சி அறிக்கை கூறுகிறது. கொஞ்சமாவது சிந்திக்க முயலுங்கள்.

    ReplyDelete
  4. //முதலில் தாங்கள் கொடுத்த செய்திக்கான ஆதாரத்தினைத் தாருங்கள்.//

    நான் கொடுத்த செய்திக்கான ஆதாரம் தினகரன் நவம்பர் 21 நெல்லை பதிப்பில் பாருங்கள். அச்சம்பவத்தின் இன்றைய நிலையைக் குறித்து இங்கே கணலாம்.

    பெண்களுக்கு இஸ்லாம் தான் உண்மையான அன்பையும் பாதுகாப்பையும் வழங்குகிறது என்று அந்த எழுத்தாளர் கூறியதை இங்கே பாருங்கள்.

    //கொஞ்சமாவது சிந்திக்க முயலுங்கள்.//

    எல்லாம் நேரம் தான்.

    ReplyDelete
  5. //அரபியப்பகுதிக்கான மானுட வளர்ச்சி அறிக்கை கூறுகிறது.//

    யப்ப சீனிவாசு அத்த ரெடி பண்ணியது அவுத்து போட்டு நாயி போல திரியீத பேசன் ஷோன்னு சொல்லி வாய பொளந்து நல்லா பாத்து தனக்க காமபசிய தீக்கிய கயவாளி பயலுவ தானே!

    ReplyDelete
  6. அட்றா சக்கைNovember 22, 2005 at 11:33 AM

    //கொஞ்சமாவது சிந்திக்க முயலுங்கள்.//
    சிந்திக்க மறுப்பதோடு மட்டுமின்றி இசுலாத்தை எதிர்த்தல் மட்டுமே ஒரே குறியாக இருப்பது போல அல்லவா ரவியின் தற்போதைய பின்னூட்டங்கள் உள்ளன?

    ReplyDelete
  7. //மாணவி சுதி கற்பழிக்கப்பட்ட சம்பவம் வெளிச்சத்திற்கு வந்த பிறகு பேபி குரியன், கிரண் என்ற 2 ஆசிரியர்களை பல்கலைக்கழகம் சஸ்பெண்டு செய்தது. ஆனால் அவர்கள் மீது மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.//

    இவ்வளவு தெளிவாக நம் கண் முன் சம்பவம் நடந்து கொண்டிருப்பதை ஆதாரத்துடன் குறிப்பிட்ட பிறகும் அதனை ஒரு பார்மாலிட்டிக்கு கூட கண்டிக்கவோ அந்த வெறிபிடித்த மிருகங்களைக் குறித்து பேசவோ நாவெழாத மத வெறி பிடித்த ரவி சிறீனிவாஸ் போன்றவர்களுக்கு மற்ற நாடுகளில் நடப்பதைப் பற்றி பேச என்ன அருகதையிருக்கிறது.

    இப்படிப் பட்டவர்களுக்கு பதில் கூறுவதை விட்டு வேறு ஏதாவது பிரயோஜனமான வேலையைப் போய் பாருங்கள். இவர்களுக்கு தன் வீட்டில் என்ன நடந்தாலும் பரவாயில்லை. என்ன பாடுபட்டாவது இஸ்லாம் தவறான மார்க்கம் என்று வருத்தித் தீர்ப்பதே முக்கிய நோக்கம். அப்படிப் பட்டவர்களுக்கு என்ன கூறினாலும் எத்தனை ஆதாரங்கள் அடுக்கினாலும் மண்டையில் ஏறாததில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை.

    ReplyDelete
  8. http://www.hindu.com/2005/11/20/stories/2005112008690400.htm

    ReplyDelete
  9. முதலில் எழுதிய விசயம் கண்டிக்கப் பட வேண்டியது என்பது சந்தேகம் இல்லை.சில ஆண்கள் பெண்களை போகப் பொருளாக மட்டுமே பார்ப்பதற்கான பலன் இது .ஆனால் உங்களின் இந்தப் பதிவு கயவர்களைக் கண்டிப்பதை காட்டிலும் பெண்களின் உடை விசயத்தில் இருந்தது.

    //பல சரித்திரம் படைப்பதற்கு நல்ல பெண்ணாக வாழ்ந்தால் முடியாது என்ற கருத்துடைய சானியாவையும், கர்ப்பப்பை சுதந்திரத்தை விரும்பும் தஸ்லீமாவையும் போன்றவர்கள் இதற்கு விதி விலக்கு - இப்படிப் பட்ட எண்ணமுடையவர்கள் தனுடலை மறைக்க வேண்டிய அவசியமில்லை என்பதும், //

    சானியாவும் ,தஸ்லீனும் கற்பழிக்கப் பட்டால் குற்றமில்லை என்று சொல்லுகிறீர்களா

    //தை அனுபவத்தில் உணர்ந்த பிரபல கேரள பெண் எழுத்தாளர் இஸ்லாத்தை ஏற்றபிறகு (இவர் இஸ்லாத்தை ஏற்பதற்கு முன்பு தஸ்லீமாவின் கருத்துடைய பல நாவல்களை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது) ஒரு பேட்டியில் இவ்வாறு கூறுகிறார், "நான் இப்பொழுது பாதுகாப்பாக உணர்கிறேன்; பர்தா எனக்கு கண்ணியம் வழங்கியுள்ளது;//

    அவரே "மதம் மடுத்து" என்று இஸ்லாமை விட்டு விலகி விட்டு எழுதியிருக்கிறாரே படிக்க வில்லையா..அவரின் வார்த்தைகளில் அவர் மாறியது காதலுக்காக..

    உங்கள் மாதிரியான ஆள்காளால் தான் இஸ்லாமிற்கு கெட்டப் பேர் . உங்கள் நம்ப்பிக்கை உங்களுக்கு மற்றவர் நம்ப்பிக்கை அவர்களுக்கு .

    உங்கள் பதிவு நேச குமாருக்கும் ,ரவி ஸ்ரீனிவாசுக்கும் மட்டும் என்றால் பின்னூட்டம் இட்டதற்கு மன்னிக்கவும் .
    உங்களுக்கும் அவர்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை

    ReplyDelete
  10. என் எண்ணங்களை கிறுக்கி உங்களையும் குழப்பவே கூத்தாடி என்ற நாமத்தோடு வந்திருக்கிறேன்.

    அன்புள்ள கூத்தாடி,

    நீங்களே உங்கள் வரவுக்கான காரணத்தை தெளிவாக அறிவித்துள்ளதால் எனக்கு அதிகம் குழப்பம் ஏற்படவில்லை என்பதை முதலிலேயே கூறிக் கொள்கிறேன்.

    //உங்களின் இந்தப் பதிவு கயவர்களைக் கண்டிப்பதை காட்டிலும்//

    பதிவையும் பின்னூட்டங்களையும் முழுமையாக படிக்கும் நடுநிலையாளர் யாரும் இக்கருத்தை சுய நினைவுடன் கூற மாட்டார்கள். ஓ! நீங்கள் தான் குழப்ப வந்தவர் ஆயிற்றே!. சரி நான் கண்டிப்பது இருக்கட்டும் ரவியிலிருந்து நீங்கள் வரை இச்சம்பவத்தை எந்தளவிற்கு கண்டித்தீர்கள் என்பதையும், இப்படிப்பட்ட தாய்க்கும் தாரத்திற்கும் வித்தியாசம் பார்க்காத கயவர்களை என்ன விதத்தில் தண்டிக்கலாம் என்பதையும் சற்று கூறுவீர்களா?

    //சானியாவும் ,தஸ்லீனும் கற்பழிக்கப் பட்டால் குற்றமில்லை என்று சொல்லுகிறீர்களா//

    நான் கூறாததை கூறுவதாக கூறி மற்றவரை "குழப்புபவரே", முதலில் கற்பு என்பதற்கு என்ன அர்த்தம் கொள்கிறீர்கள் என்பதைக் கூறுங்கள். அவர்களை பொறுத்தவரை கற்பு என்ற வார்த்தையே கேலிக்குரியது. அப்படி ஒரு வார்த்தையே அவர்கள் அகராதியில் இல்லாத போது - அதாவது அவர்களிடம் இல்லாத ஒரு விஷயத்தை - எப்படி அழிக்க முடியும்?

    //அவரே "மதம் மடுத்து" என்று இஸ்லாமை விட்டு விலகி விட்டு எழுதியிருக்கிறாரே படிக்க வில்லையா..//

    எங்கே "எழுதியிருக்கிறார்" என்பதை காட்ட முடியுமா?

    நீங்கள் உண்மையாளர் எனில் அதற்கான ஆதாரத்தை காட்ட வேண்டும்.

    அதாவது கமலா தாஸ், "இஸ்லாத்தை விட்டு மாறியதையும்", அவரே "மதம் மடுத்து" என்று "எழுதியதையும்".

    ஆதாரத்தைக் காட்டுவீர்கள் எனில், "மாத்ரு பூமி" மலையாள தினப் பத்திரிக்கை செய்த அனியாயத்தை கமலா தாஸ் பேட்டியின் ஆதாரச் செய்தியோடு ஒரு பதிவாகவே நான் வெளியிடுகிறேன்.

    என்ன பொய்யான செய்திகளை ஆராயாமல் ஆதாரமாக கூறி "மற்றவரைக் குழப்பும்" கூத்தாடி அவர்களே "நான் ரெடி நீங்கள் ரெடியா?"

    //உங்கள் மாதிரியான ஆள்காளால் தான் இஸ்லாமிற்கு கெட்டப் பேர்//

    உங்கள் கரிசனத்திற்கு மிக்க நன்றி!

    //உங்கள் பதிவு நேச குமாருக்கும் ,ரவி ஸ்ரீனிவாசுக்கும் மட்டும் என்றால் பின்னூட்டம் இட்டதற்கு மன்னிக்கவும் .
    உங்களுக்கும் அவர்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை//

    இதைக் கூறுவதற்கு இவ்வளவு பொய்களைக் கூறி "மற்றவரை குழப்ப" வேண்டுமா? நேரடியாக ஒரே வார்த்தையில் கூறி இருக்க வேண்டியது தானே!

    நண்பரே அவசியமில்லாத வார்த்தைகள் ஆரோக்கியமான சர்ச்சையிலிருந்து நம்மை வழி பிறழ வைக்கும். தவறான செய்திகளை இங்கு கண்டால் ஆதாரத்துடன் தாராளமாக கேள்வி எழுப்புங்கள். நட்போடு நாம் நல்ல முறையில் சர்ச்சை செய்வோம், தேவையில்லாத வார்த்தைப் பிரயோகங்களைத் தவிர்த்து.

    - நட்புடன் இறை நேசன்.

    ReplyDelete
  11. மானம், சூடு, சுரணை இல்லாத ஜென்மங்கள். காறித் துப்பிவிட்டு ஆதாரத்தைக் கேட்டால் மாயமாய் மறைந்து விடுவார்கள். இந்த நேச குமார் கூட்டணி வகையறாக்களுக்கு பதில் சொல்லி நேரத்தை வீணாக்குவதை விட்டு விட்டு ஏதாவது நல்ல விஷயங்களைக் குறித்து எழுதுங்கள் இறைநேசன்.

    ReplyDelete
  12. //முதலில் இப்படிப்பட்ட சம்பவங்கள் நடப்பதற்கு வெறிபிடித்த ஆண்கள் மனதில் அந்த சிந்தனையை தூண்டாமல் இருக்க பெண்களை பாதுகாக்கும் நோக்கிலேயே இஸ்லாம் பெண்களுக்கு உடலை மறைக்கும் படி அறிவுறுத்துகிறது! இதனை அனுபரீதியாக உணர்ந்து கூறியவர்கள் பலபேர் உண்டு.//

    மற்றவர்களது உணர்வுகளை தூண்டாத வண்ணம் ஆடை அணிவது எல்லாருக்கும் பொருத்தமானது அதில் ஆண்பெண் என்ற பேதம் தேவையில்லை. அண்மையில் பெண்கள் ஆடைகள் பற்றி நண்பர்களுடன் பேசிக்கொண்டிருக்கையில் நண்பர் ஒருவர் கூறினார் முஸ்லீம் உறவுகளிற்கு HIV தொற்று இருப்பது குறைவு என்றார். இதற்கு முக்கியகாரணம் இந்த ஆடைக்கட்டுப்பாடும் ஒன்றே. முஸ்லீம் ஆண்களும் சரி பெண்களும் சரி கன்னியமாகத்தான் ஆடை அணிகிறார்கள். நாகரீகமாய் ஆடைகள் அணிவது இருபாலாருக்கும் தேவையானது.

    அதே போல பல எழுத்தாளர்கள் (முற்போக்கு சிந்தனை என்ற பெயர்கொண்டு) பெண்களின் அங்கங்களையும் ஆண் பெண் அந்தரங்க உறவுகளையும் வரிக்கு வரி விவரித்து கவிதை கதைகள் எழுதுகிறார்கள். இதனால் சமூகத்தில் மனக்கட்டுப்பாடு அல்லது சுயகட்டுப்பாடற்ற ஒரு சிலரது உணர்வுகள் கிளறப்பட்டு அவர்களை அந்த அனுபவங்களை அடையும் படி தூண்டப்பட்டு சமூகசீரழிவுகளிற்குத்தான் இவை வழிவகுக்கும். இப்படி வக்கிரமாக எழுதுகின்ற எழுத்தாளர்களிற்கு உண்மையில் ஒரு மனவியாதியாக இருக்கவேண்டும். அல்லது அவர்களது பாலியல் ஏக்கங்கள் தான் எழுத்துக்களாக வருகின்றனவோ தெரியாது. இவர்களது துணைகள் தான் கவனமாக இருக்கவேண்டும். அந்தரங்கங்களை அப்பட்டமாய் எழுதுபவர்கள். அதை பிரசுரிக்கவும் செய்வார்கள்.

    ReplyDelete
  13. //முஸ்லீம் ஆண்களும் சரி பெண்களும் சரி கன்னியமாகத்தான் ஆடை அணிகிறார்கள்.//

    முஸ்லிம்கள் மட்டுமல்ல, தமிழர்களும் பண்பாட்டு ரீதியாக கண்ணியமான ஆடையையே விரும்பி வந்தனர். என்று நம்மில் சிலர் மேற்கத்திய நாடுகளில் குடியேறினரோ அன்றிலிருந்து அவர்களுக்குப் பிடித்தது "நாகரீக" பைத்தியம்.

    "சம்பாத்தியத்திற்காக சென்றவர்கள் சம்பாதித்துக் கொண்டார்கள் சம்பாத்தியத்தோடு வெட்கமின்மையையும்!"

    ReplyDelete
  14. //நான் இப்பொழுது பாதுகாப்பாக உணர்கிறேன்; பர்தா எனக்கு கண்ணியம் வழங்கியுள்ளது//.
    சமீபத்தில் ஒரு அமெரிக்கப் பெண் பர்தா அணிந்த பின் கூறிய கூற்று, 'நான் இப்போதுதான் விடுதலையை உணருகிறேன்'.
    எது விடுதலை? எது கண்ணியம்? எது மனிதர்களுக்கு நன்மை பயக்க வல்லது? என்பது அவரவர் சிந்திக்கட்டும்.

    //அவரே 'மதம் மடுத்து' என்று இஸ்லாமை விட்டு விலகி//
    இது தவறாக வந்த செய்தி என பலமுறை சுட்டிக்காட்டிய பிறகும் அதை இன்னமும் பிடித்துத் தொங்குபவர்களை என்ன சொல்வது.

    ReplyDelete