நமது பிரதமர் "இந்தியாவின் எந்த ஒரு பகுதியிலும் கிராமப் புறங்களில் மக்களின் வாழ்க்கைத் தரம் சிறப்பாக இருப்பதாகக் கூறிவிட முடியாது. கிராமப் பகுதிகளில் வளர்ச்சியை ஏற்படுத்துவதே நமக்கு முன்பு உள்ள மிகப்பெரிய சவால். கடந்த நுற்றாண்டில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியை ஆராய்ந்தால், பெரிய நகரங்கள் அடைந்த வளர்ச்சியிலிருந்து கிராமப்புற இந்தியா வெகுதொலைவில் உள்ளது." என்று கூறியிருக்கிறார்.
மிகுந்த ஆதங்கத்துடனும் கவலையுடனும் இவ்வாறு தெரிவித்த பிரதமர் இந்நிலைமையை மாற்ற நாம் என்ன செய்ய வேண்டும் எனவும் தெளிவாக கூறினார். அது என்ன?.
"மாற்றங்களை ஏற்படுத்துவதில் மாநில அரசுகளுக்குத் தான் உண்மையான பொறுப்பு உள்ளது(அதாவது மத்திய அரசுக்கு உண்மையான பொறுப்பு இல்லையாம்). அனாவசியமான மானியங்களை கட்டுப்படுத்த வேண்டும். சொற்ப அளவிலாவது அரசுக்கு வரி செலுத்த வேண்டுமென்ற எண்ணத்தை மக்களிடம் ஏற்படுத்தவேண்டும்."
இது தான் அந்த அபூர்வமான அருமையான ஆலோசனை!
பின் எதற்காக மத்திய அரசு? அப்படியெனில் மக்கள் இதுவரை குறைந்த அளவில் கூட வரி செலுத்துவதில்லையா என்றெல்லாம் மடத்தனமான கேள்விகளைக் கேட்கக் கூடாது!
சரி மக்கள் ஒழுங்காக குறைந்த அளவிலாவது(!!!) வரி செலுத்தினால் அப்பணத்தைக் கொண்டு எவ்வாறெல்லாம் கிராமப் புறங்களை முன்னேற்றுவார்கள் என்பதைப் பார்க்க வேண்டாமா? தொடர்ந்து படியுங்கள்.
அபு சலீம் தொடர்பான சில புள்ளி விவரங்கள்:
* மும்பை குண்டு வெடிப்பு, ஆயுத கடத்தல், ஆயுத சப்ளை, மிரட்டல் என்று 54 வழக்குகள் தொடர்பாக 12 ஆண்டுக்கு முன்பில் இருந்தே தேடப்பட்டவன் அபு சலீம்.
* கடந்த 2002ம் ஆண்டு, போர்ச்சுகல் நாடு, அபு சலீமையும், மோனிகா பேடியையும் கைது செய்தது. போலி பாஸ்போர்ட் வழக்கு உட்பட சில வழக்குகளை போட்டு, சிறையில் அடைத்தது.
* போர்ச்சுகல்லில் சிறையில் அடைக்கப்பட்ட சலீம் பற்றி தகவல் தெரிந்ததும், துதரகம் மூலமும், சட்ட ரீதியாகவும் போர்ச்சுகல் அரசை மத்திய அரசு அணுகியது.
* ஏற்கனவே கோர்ட்டில் அவர்கள் மீது வழக்கு உள்ளதால், கோர்ட்டில் மனு தாக்கல் செய்து வாதிட்டு, மீட்டுச் செல்லும் படி போர்ச்சுகல் அரசு கூறிவிட்டது. அதன்படி, போர்ச்சுகல் கோர்ட்டில் வழக்கு போட்டது சி.பி.ஐ.
* போர்ச்சுகல் கோர்ட்டில் வாதாட, சீனியர் வக்கீல்களை அணுகியது சி.பி.ஐ. அந்த நாட்டின் நடைமுறைப்படி, மேல் கோர்ட்களில் வாதாடும், சீனியர் வக்கீல்களுக்கு மணிக்கு ரூ. 10 லட்சமும், ஜூனியர் வக்கீல்களுக்கு தலா ரூ. 5 லட்சமும் பீஸ் என்று கூறப்பட்டது.
* லிஸ்பனில் உள்ள செஷன்ஸ் கோர்ட்டில் வாதாட மட்டும், இந்திய வக்கீல்களை அழைத்து வருவது என்று சி.பி.ஐ., முடிவு செய்தது. அதன்படி, இந்தியாவில் இருந்து இரு வக்கீல்கள் அழைத்து வரப்பட்டனர். அவர்கள் செலவாக, ஒரு மணி நேர வாதத்துக்காக, ஒரு வக்கீல், இரு உதவியாளர்கள் செலவு என்று பார்த்தால், மணிக்கு ரூ. 10 லட்சம் செலவானது. லாட்ஜ் செலவு, சாப்பாட்டு செலவு எல்லாம் அடக்கம்.
* ஒரு நாளைக்கு நான்கு முதல் ஆறு மணி நேரம் வாதம் நடந்தது. அதனால், 40 லட்சத்தில் இருந்து 60 லட்சம் ரூபாய் வரை செலவானது.
* கீழ்க்கோர்ட்டில் 15 விசாரணை அமர்வுகள் நடந்தன. அதன்படி பார்த்தால், ஒரு நாளைக்கு அதிகபட்ச செலவு ரூ. 60 லட்சம் என்ற வகையில், 15 நாளுக்கு ரூ. ஒன்பது கோடி செலவாகியது.
* இதைத் தொடர்ந்து, போர்ச்சுகல் சுப்ரீம் கோர்ட்டில் ஆஜராகி வாதாட, ஒரு சீனியர் போர்ச்சுகல் வக்கீல், இரு ஜூனியர் வக்கீல்கள் அமர்த்தப்பட்டனர். இந்த வகையில், மணிக்கு ரூ. 30 லட்சம் செலவானது.
* தினமும் ஆறு மணி நேரம் வாதம் நடந்தது. இப்படி ஆறு அமர்வுகள் நடந்தன. இப்படி பார்த்தால், ரூ. 1.80 கோடி செலவு.
* ஆறு அமர்வுகளுக்கு தலா ஆறு மணி நேர செலவுகளை சேர்த்தால் மொத்தம் போர்ச்சுகல் வக்கீல்கள் மூவருக்கும் மொத்த செலவு ரூ. 10 கோடியே 80 லட்சம்.
* சுப்ரீம் கோர்ட்டை தொடர்ந்து மனித உரிமை கோர்ட்டில் வாதாடப்பட்டது. அங்கும், போர்ச்சுகல் வக்கீல்கள் மூவரும் அமர்த்தப்பட்டனர். அங்கு, ஒரு நாளைக்கு ரூ. 1.80 கோடி என்று, நான்கு அமர்வுகளுக்கு மொத்தம் 7.20 கோடி ரூபாய் செலவானது.
* மனித உரிமை கோர்ட்டில் ஜெயித்ததும் தான், போர்ச்சுகல் பார்லிமென்ட்டில், கைதிகள் பரஸ்பரம் ஒப்படைக்கும் மனு கையெழுத்தானது. அதன்படி தான் அபு சலீம் ஒப்படைக்கப்பட்டான்.
* போர்ச்சுகல்லுக்கு சென்று அபு சலீம் விவகாரத்தில் விசாரணை செய்ய 20 பேர் கொண்ட சி.பி.ஐ., குழு சென்றது. அவர்கள் அடிக்கடி சென்று வந்தனர். அவர்கள் செலவு மட்டும் மூன்று கோடி ரூபாய்.
* இத்தனைக்கும் மேலாக, எல்லாம் முடிந்து அபு சலீமை தனி விமானத்தில் அழைத்து வர ஆன செலவு என்ன தெரியுமா? 75 லட்சம் ரூபாய். போர்ச்சுகல் நாட்டு லிஸ்பன் விமான நிலையத்தில் இருந்து மும்பை விமான நிலையத்துக்கு மேற்கொண்ட விமான போக்குவரத்து செலவு தான் இது.
இங்கே செலவளித்திருக்கும் இவ்வளவு பணமும் யார் அப்பன் வீட்டு பணமாம். ஒரு படத்திற்கு அங்கும் இங்கும் கையை காலை உதறுவதற்கு 1 கோடி ரூபாய் வாங்கும் "சூப்பர்(!)" நடிகர் அன்பளிப்பாக தந்ததோ அல்லது ஊழல் பெருச்சாளிகளிடமிருந்து பிடித்தெடுத்த கறுப்பு பணமோ இல்லையே?
இனி இவ்வளவு பணம் தண்டத்திற்கு செலவழித்து பிடித்துக் கொண்டு வந்த இவன் மீதுள்ள குற்றங்கள் நிரூபிக்கப் பட்டால் அவனுக்கு அதிக பட்ச தண்டனையையும் தரக்க்கூடாதாம். பின் எதற்காக இவ்வளவு பணம் செலவளித்தார்கள். ஆண்டவனுக்கே வெளிச்சம்.
அப்படியெனில் கிராமப் புறங்கள்? சே! சே! அதை மறக்க முடியுமா?
அவைகள் அல்லவோ நாட்டின் முதுகெலும்புகள். எனவே......
மக்கள் சிறிது கூட வரி செலுத்தட்டும். கண்டிப்பாக கிராமப் புறங்கள் முன்னேறும்!
Subscribe to:
Post Comments (Atom)
1). அபு சலேம் போன்ற தீயவர்களுக்கு அரபு நாடுகளில் உள்ளது போல கடுந்தண்டனை, மற்றவர்களுக்கு பாடமாக இருக்கும் வகையில் தரப்படத்தான் வேண்டும்
ReplyDelete2). அவனை நாட்டுக்கு கொண்டு வர 50 கோடி வரை அரசாங்கம் செலவழித்துள்ளது. செலவுக்கு யோசித்திருந்தால் எப்படியெல்லாம் பழி வந்திருக்கும் என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும்
3). கிராமப்புற முன்னேற்றம் பற்றிய அரசாங்கத்தின் மெத்தனத்தை சரியாகவே நீங்கள் சுட்டிக்காட்டியிருந்தாலும் அதை இதோடு 'முடிச்சு' போடுவது சரியல்ல.
மலர்கள்
ReplyDeletecopymannan
மலர்களின் வாசமடித்து மணம் நுகர வருபவர்களுக்கு மலர்களின் வந்தனங்கள்!
அசத்தியங்களுக்கு இடையில் ஓர் சத்திய பாசறை
சமீபத்தில் மலர்ந்தவை
தொடுக்கப்பட்டவை
தற்போதைய விருந்தினர்கள்
சகோதரரே நீங்கள் 001229 ஆவது விருந்தினர்
சகோதரரே! மேலே செல்லும் முன் ஒரு நிமிடம்! இங்கே அழுத்தி: (இதுவரை 1 பரிந்துரைகள்) மற்றவர்களும் இதனை அறியச் செய்யலாமே
Erai Nesan
Abu Sumaiya
SUPER!!!
"சொற்ப அளவிலாவது அரசுக்கு வரி செலுத்த வேண்டுமென்ற எண்ணத்தை மக்களிடம் ஏற்படுத்தவேண்டும்"
ReplyDelete"இங்கே செலவளித்திருக்கும் இவ்வளவு பணமும் யார் அப்பன் வீட்டு பணமாம். ஒரு படத்திற்கு அங்கும் இங்கும் கையை காலை உதறுவதற்கு 1 கோடி ரூபாய் வாங்கும் "சூப்பர்(!)" நடிகர் அன்பளிப்பாக தந்ததோ அல்லது ஊழல் பெருச்சாளிகளிடமிருந்து பிடித்தெடுத்த கறுப்பு பணமோ இல்லையே?"
ha! ha! ha!
என் வீட்டில் 001229 ஆவது விருந்தினராக வந்து வேண்டு மட்டும் வயிற்றை நிறைத்து விட்டு, உண்ட உணவினைப் பற்றி ஒன்றும் கூறாமல் உண்ண தந்த பாத்திரத்தைக் குறித்து பாராட்டுப் பத்திரம் வாசித்தவருக்கு நன்றிகள்.
ReplyDeleteஆமாம் சாப்பிடுவதற்குப் போன அதிரைக்காரரின் வீட்டில் வைத்து "அண்டர்வேருக்கு" என்னோடு அடி வைத்தவர் தானே நீங்கள் :-))
ச்ச்ச்சும்மா தமாஸுக்கு ஞானப் பண்டிதரே - ச்சே! ஞானப் பீடத்தவரே!
Get your facts right.
ReplyDeleteThere are laws and certain actions that the Central government can take BUT it must be a part of the CENTRAL OR CONCURRENT LIST OF LAWS.
Per the constitution, this federal setup of the Republic cannot be altered easily.
Improving villages, actions needed and the laws or whatever that is needed are mostly on the STATE LIST(per the constitution, ask a Lawyer for more).
The former BJP govt and current UPA governments have introduced the following for the benefit of villages
1.Pradhan mantri gram sadak yojna
Roads to villages which have less populations.
2.SSA - Sarva Shiksha Abiyan
For building schools.
3.Bharath Nirman Yojna
4.Rural health Mission
and more....
A google is all that you need to know more about this.
//...உண்ட உணவினைப் பற்றி ஒன்றும் கூறாமல் உண்ண தந்த பாத்திரத்தைக் குறித்து பாராட்டுப் பத்திரம் வாசித்தவருக்கு..//
ReplyDeleteசமைத்த கரங்களுக்குப் பொன்வளை பூட்ட முனைந்தேன்! அது(வே) உணவுக்குக் கிடைத்த பாராட்டுதானுங்களே!! என்ன நாஞ்சொல்றது!
:-)
'காப்பிமன்னன்' அப்டீன்னா என்னங்க, வெளக்கமுடியுமா? :-)
//'காப்பிமன்னன்' அப்டீன்னா என்னங்க, வெளக்கமுடியுமா? :-)//
ReplyDeleteஅது ஒண்ணுமில்லீங்க! விருந்துக்கு வருகிறவர்களுக்கு ருசியா விதம் விதமா சமச்சு போட தெரியாததுனால ரெடிமேடா கிடைக்கிற பாக்கட்டுகளை வாங்கி கொஞ்சம் அப்படி இப்படி தொட்டு தடவி ஏதோ ரொம்ப கஷ்டப் பட்டு உண்டாக்கியது போல ஷோ காட்டுவோமில்லீங்களா, அதனால பொருத்தமா இருக்கட்டுமுன்னு வச்சுக்கிட்டதுங்க:-)
(வலைப் பதிவு ஆரம்பிக்கும் போது சும்மா டெஸ்ட் பண்ணுவதற்காக இப்பெயரில் ப்ளாக் ஆரம்பித்தேன். இந்த அளவிற்கு என்னாலும் காப்பியடித்தே காலத்தை ஓட்ட முடியும் என்று நானே எதிர் பார்க்கவில்லை. ப்ளாக் சரியாக வந்தப் பிறகு பெயரை மாற்றுவதைக் குறித்து சிந்திக்கவில்லை!)
//அங்கும் இங்கும் கையை காலை உதறுவதற்கு 1 கோடி ரூபாய் வாங்கும் "சூப்பர்(!)" நடிகர் //
ReplyDeletePLEASE FORWARD TO "MAYAVARATHTHAAN"
அப்படியே, ஒங்க யேசனைய அமெரிக்கா காரனுக்கும் சொல்லிடுங்க, அவுங்க பில்லியன் கணக்குல பின்லேடனுக்கு செலவு பண்றாங்க !
ReplyDeleteஅபுசலிம் வகையறாக்கள் இன்னுமெறு குண்டுவெடிப்பு நிகழ்த்தினால், இத காட்டியும் செலவு அதிகமாகுங்கோ. நீங்க வீரப்பன சுடரத்துக்கும் முந்தி இந்த யோசனை சொல்லியிருந்திங்கன்னா பாவம், அவன்
உயிரோடவாவது இருந்திருப்பான்.
இணையாத கைகள் !
நம்ம ராணுவத்துக்கு வருஷத்துக்கு 60000 கோடி செலவாகுது.அதையும் நிறுத்தி கிராமபுறத்தை முன்னேற்றலாமே?தவூத் இப்ராகிமை புடிக்கவும் 50 அல்லது 60 கோடி செலவாகும்.அதையும் நிறுத்திடலாம்.என்ன இன்னும் ஒரு 100 இடத்துல குண்டு வைப்பானுங்க.10000 பேர் சாவானுங்க.அதை எல்லாம் பாத்துட்டிருக்க முடியுமா?60 கோடி செலவாறது தானே முக்கியம்
ReplyDelete/// ஒரு படத்திற்கு அங்கும் இங்கும் கையை காலை உதறுவதற்கு 1 கோடி ரூபாய் வாங்கும் "சூப்பர்(!)" நடிகர் அன்பளிப்பாக தந்ததோ அல்லது ஊழல் பெருச்சாளிகளிடமிருந்து பிடித்தெடுத்த கறுப்பு பணமோ இல்லையே?///
ReplyDeleteஏன் நீங்களும் கையை காலை அங்குமிங்கும் உதறுவதுதானே?எவன் 1 கோடி குடுக்கறான்னு பாக்கலாம்.
நடிப்புங்கறது அவ்வளவு இளக்கனாட்டமா போயிடுச்சா?அது ஒரு கலை.கை கால் உதறல் அல்ல
//60 கோடி செலவாறது தானே முக்கியம்//
ReplyDeleteஅனானிமஸ் அண்ணே! ஏன் திசைத் திருப்புகிறீங்க! இவ்வளவு பணம் செலவளித்து அவனை இங்கே கொண்டு வந்து தண்டத்துக்கு மீண்டும் மக்கள் பணத்தில் அவனுக்கு சாப்பாடும் போட்டு விசாரித்து விட்டு குற்றம் நிரூபிக்கப் பட்டால் அதிக பட்ச தண்டனையும் கொடுக்கக் கூடாது என்பதை தானே இங்கு விமர்சித்திருக்கிறேன். அழகாக நான் ஏதோ அவனுக்கு ஆதரவாக எழுதியது போல் விஷயத்தில் நன்றாக சாயமடிக்கிறீர்களே!