Friday, December 29, 2006

உலக முஸ்லிம்களுக்கு புஷிடமிருந்து நற்செய்தி!

உலக முஸ்லிம்கள் இறைதூதர் இப்ராகீம்(அலை) அவர்களின் தியாகத்தை நினைவு கூர்ந்து மகிழும் தியாகத் திருநாளான இன்று காலை சுமார் 6 6மணியளவில், இறைவனால் வழங்கப்பட்ட அதிகாரத்தை தன் ஆட்சி காலத்தின் போது துர்பிரயோகம் செய்து தன்னை எதிர்த்தவர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய சதாம் ஹுசைன் உலக சட்டாம்பிள்ளை ஜார்ஜ் புஷின் ஈராக் பொம்மை அரசால் தூக்கிலிடப்பட்டார்.

எவ்வித நடுநிலையான விசாரணையும் இன்றி நடைபெற்ற வழக்கில் கூறப்பட்ட அநியாயமான தீர்ப்பை பல்வேறு உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி அவசரகோலத்தில் நிறைவேற்றியிருக்கின்றனர்.

சதாம் செய்த குற்றம் அவரின் ஆட்சி காலத்தில் அவரை வஞ்சகமாக கொலை செய்ய முயன்ற குர்து இன மக்களில் நூற்று சொச்சம் பேரை அநியாயமாக கொலை செய்ததாகும். ஓர் ஆட்சியாளனுக்கு எதிராக அவனை கொலை செய்ய முயல்பவர்களை அந்நாட்டு சட்டம் கடுமையாக தண்டிக்கும். இது அனைவரும் அறிந்ததாகும். எனினும் அவரின் ஆட்சி காலத்தில் நடந்த அந்த சம்பவத்திற்கு, இன்று தன்னை எதிர்க்கும் அனைவரையும் எவ்வித இரக்கமும் இன்றி அநியாயமாக கொன்று குவித்து நரமாமிசம் சாப்பிட்டு வரும் காட்டுமிராண்டி ஜார்ஜ் புஷ் நீதி வழங்குகிறாராம்.

சரி. இவ்விஷயத்தில் நீதி, நியாயம் பற்றி இனி பேசி ஒன்றும் நடக்கப்போவதில்லை. "நடப்பது நடந்தே தீரும்". அது நடந்தாகி விட்டது. இங்கு சதாமுக்கு நிறைவேற்றப்பட்ட தண்டனையை குறித்து கூற ஆயிரம் விஷயங்கள் உள்ளன. இருப்பினும் முடிந்த அந்த காரியத்தைக் குறித்து என்ன கூற?(இதனைத் தானே இருபத்தொன்றாம் நூற்றாண்டின் அடிமட்ட முட்டாள் ஜார்ஜ் புஷ் முஸ்லிம் சமூகத்திடமிருந்து எதிர்பார்த்தான்).

தன்னை உலகிற்கு நீதி வழங்கும் நியாயவானாக நினைத்துக் கொண்டு சதாமை மட்டுமல்ல, அநியாயம் இழைக்கும் எவருக்கும் புஷ் பாடம் புகட்டட்டும். ஆனால் சதாமை தூக்கிலேற்ற வேறு தினங்களே இந்த காட்டுமிராண்டிக்கு கிடைக்கவில்லையா? உலக முஸ்லிம்கள் தங்களின் அனைத்து விதமான கஷ்ட, நஷ்டங்களையும், கவலைகளையும் மறந்து மகிழ்ச்சியுடன் இருக்கும் இன்றைய தினமா அதற்கு கிடைத்தது? அதுவும் இன்றைய தின சிறப்பான தியாகத் திருநாள் தொழுகை நடைபெறும் அச்சமயம்?

இதன் மூலமாக புஷ் முஸ்லிம் உலகிற்கு கூற வரும் செய்தி என்ன? தனது மனதில் எவ்வளவு வக்கிரமும், துவேச எண்ணமும் ஊறிப்போயிருந்தால் இந்த ஜடம் இம்மாபாதகச் செயலுக்கு இத்தினத்தை அதுவும் அத்தொழுகை நேரத்தை தேர்ந்தெடுத்திருக்கும்?

சதாமினால் முஸ்லிம்களிலேயே ஒரு கூட்டம் மக்கள் மிகுந்த கொடுமைகளுக்கு உள்ளானார்கள் எனபது உண்மை தான். அதற்காக சதாமுக்கு இழைக்கப்பட்டிருக்கும் இக்கொடுமையை படைத்த இறைவனுக்கு மட்டுமே பயந்து தலைவணங்கும் எந்த ஒரு முஸ்லிமும் சகித்துக் கொள்ள மாட்டான். மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டிய இந்த தியாகத்திருநாளில் தொழுவதற்கு கூட அனுமதிக்காமல் சதாமை தூக்கிலேற்றி தனது வன்மத்தை தீர்த்துக் கொண்ட பிசாசு(வார்த்தை உபயம்: வெனிசுலா அதிபர் ஹ்யூகோ ஷாவேஸ்), அத்தோடு உலகில் தன் பின்னால் இருந்த கொஞ்ச நஞ்ச மக்களின் மதிப்பையும் குழி தோண்டி புதைத்துக் கொண்டது. இதனைத் தான், தன் தலையில் தானே மண்ணை அள்ளிப்போடுவது என்பர்.

இன்று உலக முஸ்லிம்களின் மகிழ்ச்சியில் மண்ணை அள்ளி வீசிய புஷ் என்றும் தன் கையில் அதிகாரம் இருக்கும் எனக் கனா காண வேண்டாம்.

அன்று அதிகாரத்தில் இருந்த சதாம் தன்னை எதிர்த்தவர்களுக்கு எதிராக அதிகாரத்தை துர்பிரயோகம் செய்ததற்கு தண்டனை இதுவென்றால்.....,

இன்று அதிகாரத்தில் இருந்து கொண்டு, தான் வளர்த்தி விட்ட பின்லாடன் தனக்கு எதிராக மாறிய போது, அந்த தனி மனிதனை பிடிக்கிறேன் என்ற பெயரைக் கூறிக் கொண்டு, ஆப்கானில் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களை கொன்று குவித்ததற்கும், அதே போன்று ஒருகாலத்தில் தன் செல்லப்பிள்ளையாக இருந்த சதாம் பின்னர் தனக்கு தலைவலியாக மாறியவுடன், சதாமை ஆட்சியிலிருந்து அகற்றுகிறேன் என்ற பெயரைக் கூறிக்கொண்டு இன்றளவும் லட்சக்கணக்கில் விலை மதிப்பிலா மனித உயிர்களை ஈராக்கில் கொன்றொழித்துக் கொண்டிருப்பதற்கும் நாளை ஒருவன் நியாயம் தீர்க்க நிச்சயம் வருவான். காட்டுமிராண்டி பிசாசு புஷ் தன்னை தயார் படுத்திக் கொள்ளட்டும்.

அன்றைய அந்த நியாயம் தீர்ப்பு மிகக்கடுமையானதாக இருக்கும். இன்று சதாமின் உயிர் அதிக வேதனையின்றி பறிக்கப்பட்டது போல் அன்றைய நீதித் தீர்ப்பு இருக்காது. அந்த தீர்ப்பிற்குரிய தண்டனை முடிவுறாததாக இருக்கும். அப்படிப்பட்ட தனக்கு எதிரான அந்த விசாரணை களத்திற்கு நரமாமிசம் உண்ணும் மனித உருவில் உள்ள காட்டுமிராண்டி கொள்ளிவாய் பிசாசு புஷ் தன்னை தயார்படுத்திக் கொள்ளட்டும்.

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்;

வாளெடுத்தவன் வாளால் மடிவான்;

அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும்;

முஸ்லிம்களின் தியாகத் திருநாளில் ஒரு முஸ்லிமை தூக்கிலேற்றி உலக முஸ்லிம்களின் மகிழ்ச்சியில் மண்ணை அள்ளிவீசலாம் எனக் கனாகண்ட, உலகிற்கு மிகப்பெரும் சாபக்கேடாக வந்து வாய்த்திருக்கும் அடிமுட்டாள் புஷிற்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

நம்மை பொறுத்தவரை சதாமைப் போன்ற பாவ ஆத்மாக்களையும் தியாகச் சீலர்களாக மக்கள் மனதில் என்றென்றும் இடம்பெற வைக்க புஷை போன்ற நவநாகரீக ஷைத்தான்கள் அவசியமே. நடத்தட்டும் புஷ் தனது கோமாளித்தனங்களை;

Tuesday, December 26, 2006

எது பத்திரிக்கை தர்மம்?

"பத்திரிக்கை தர்மம்" அப்படீன்னு அடிக்கடி ஒரு வார்த்தையை கேள்விப்பட்டிருக்கிறோம். யாருக்காவது அதன் அர்த்தம் என்ன என்று தெரியுமா?

தெரியாதவர்களுக்கு தெரியாததை தெரியாமலே இருக்க தெரியாத்தனமாக தமிழ்நாட்டு மக்களுக்கு மிகப்பெரும் தலைவேதனையாக வந்து வாய்த்த தெரியாத்தனமான வந்தேறி பார்ப்பன தமிழ்நாட்டு பத்திரிக்கைகளே அதனை அடிக்கடி தெரியப்படுத்தி விடுகின்றன.

இனி "பத்திரிக்கை தர்மம்" அப்படீன்னா என்ன? என்று தலையைப் பிய்ப்பவர்களுக்கு வந்தேறி பார்ப்பன ஏடு தினமணியின் இன்றைய நடுநிலையான செய்தியிலிருந்து ஒரு உதாரணம்:

3 ஹிந்து வியாபாரிகள் பாகிஸ்தானில் கடத்தல்

இஸ்லாமாபாத், டிச. 24: பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாநிலத்தில் 3 ஹிந்து வியாபாரிகள் உள்பட 7 பேரை, ஆயுதம் ஏந்தியவர்கள் கடத்திச் சென்றனர்.

பலுசிஸ்தான் மாநிலத்தில் உள்ள அப்துல்காதிர் ஷா என்ற கிராமத்தில் ஆயுதங்களுடன் வந்த கும்பல் ஒன்று காரில் வந்த குர்ரம் ஹயாத், ரியாஸ் அகமது, பப்பு கான், அப்துல் ரஷீத் என்ற 4 பேரை, துப்பாக்கி முனையில் மிரட்டி கடத்திச் சென்றது. ஜபாராபாத் மாவட்டத்தில் இச் சம்பவம் நடந்தது.

பலுசிஸ்தானின் நெüதால் என்ற இடத்தில் ரத்தன் குமார், நரேஷ் குமார், சுநீல் குமார் என்ற வியாபாரிகளை ஆயுதம் ஏந்திய கும்பல் வழிமறித்து கடத்திச் சென்றது. இவர்கள் சிந்து மாநிலத்திலிருந்து வந்து கொண்டிருந்தனர்.


யப்பப்பா இதுவல்லவோ "பத்திரிக்கை தர்மம்"! உடம்பு அப்படியே புல்லரிக்கிறது போங்கள்.

Saturday, December 23, 2006

சரி சரி கொஞ்சம் சிரிச்சுக்கோங்க!

என்ன செய்வது? இதுதான் இன்றைய இந்தியா. அதாவது வந்தேறி ஹிந்துத்துவ பார்ப்பன வெறியர்களுக்கு மட்டும் சொந்தமான இந்தியா.

தேவைக்கு மட்டும் "இந்து"வை துணைக்கழைத்துக் கொள்வார்கள்.

"யார் இந்து?" எனக் கேள்வி எழுப்பினால் ஓடி ஒழிந்தும் கொள்வார்கள்.

வரலாற்றைப் புரட்டி எழுதுவதில் சமர்த்தர்களான இந்த சங்க்பரிவார கில்லாடிகள், டிசம்பர்-6 எங்களுக்கும் வருத்தமளித்த நாள் தான் என்று ஓட்டுக்காக நாளை அடிவருட வருவார்கள். எனவே ஆதாரத்திற்காக நீங்களும் இதனை சேமித்து வைத்துக் கொள்ளுங்கள்.

Tuesday, December 5, 2006

டிச-6 நம்பிக்கையின் தினம்!

"இருக்க இடம் கொடுத்தால் படுக்க இடம் கேட்பார்கள்" என்று கேட்டிருக்கிறோம். "நிற்க இடம் கொடுத்தால் அந்த இடத்தையே சுருட்டிக் கொள்வார்கள்" என்பதை கேள்விப்பட்டுள்ளீர்களா?

அது தான் வந்தாரை வாழ வைக்கும் மண்ணான நம் தாய் நாட்டில் நடந்தது. சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன் கைபர் போலன் கணவாய் வழியாக முதன் முதலாக இந்தியாவுக்குள் ஒதுங்கிக் கொள்ள இடம் தேடி ஆரிய நாடோடிகள் வந்தனர். அவர்களைத் தொடர்ந்து நாடுபிடிக்கும் வெறியுடன் முகலாயர்கள் இந்தியாவிற்குள் வந்தனர். தொடர்ந்து வியாபாரம் செய்ய என்று கூறிக் கொண்டு பரங்கியர்களும், ஆங்கிலேயர்களும் இந்நாட்டிற்குள் வந்தனர்.

இந்த மூன்று கூட்டத்தில் முதலில் வந்த ஆரிய கூட்டம் நம் மூதாதையர்களின் அறியாமையையும் வெகுளித்தனத்தையும் பயன்படுத்திக் கொண்டு அந்நேரம் இந்திய பகுதிகளை அரசாண்டுக் கொண்டிருந்த அரசர்களுக்கு அடிவருடி பின்னர் அவர்களுக்கு மேலும் மேலும் அரச ஆசையை ஊட்டி முழுமையாக இந்தியாவை தங்கள் கீழ் கொண்டு வந்து ஆடாமல் அசையாமல் உண்டு அனுபவித்துக் கொண்டு இருந்தனர்.

அதற்காக அவாள்கள் வடிவமைத்த திட்டம் தான் "மனு தர்மத்தின்படியான வர்ணபாகுபாடு".

மற்றவர்களை ஒடுக்குவதை தட்டிக்கேட்க சக்தியுடைய, கையில் ஆயுதம் எடுத்து அடிக்கத்தெரிந்த அரசபரம்பரையினரை தங்களுக்கு தொட்டு அடுத்துள்ளவர்கள்(சத்தியரியர்கள்) எனக் கூறி லாவகமாக அமுக்கி வைத்துக் (எலும்புத்துண்டை வீசியெறிந்து)கொண்டு அழகாக நிற்க இடம் கொடுத்த இடத்தை முழுமையாக சுருட்டி எடுத்துக் கொண்டனர்.

தட்டிக் கேட்க யாருமின்றி, அரசனே ஆனாலும் பிராமணனுக்கு வணங்கி வழிபட வேண்டும் என வகுத்து தனிக்காட்டு ராஜாவாக, அரசாள்வது வேறு ஒருவனாக இருந்தாலும் முழு அதிகாரமும் தன் கையில் வைத்துக் கொண்டு(நமது முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம் முதல்வராக இருந்த காலத்தை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். தன் இனம் முன்னர் செய்து வந்ததை அழகாக செயல் ரீதியில் அப்பொழுது நமது செல்வி காட்டித்தந்தார்.) இறுமாப்புடன் வலம் வந்த ஆரிய வந்தேறிகளின் வாழ்வில் இடி விழுந்தது அடுத்து வந்த முகலாயர்களின் வருகை.

என்ன தான் நாடு பிடிக்கும் வெறியில் இந்தியாவுக்குள் வந்திருந்தாலும் இஸ்லாம் கொடுத்த சில பண்புகள் முகலாயர்களின் செயல்களில் வெளிப்பட்டதால் அதுவரை எவ்வித உடல் உழைப்பும் இன்றி ஆண்டு அனுபவித்துக் கொண்டு இருந்த வந்தேறி ஆரியர்களின் வாழ்வுக்கு அவர்களின் வருகை மிகப்பெரும் இடியாக இறங்கியது.

முகலாயர்களின் சமத்துவம், யாருக்கும் தலை வணங்காமை முக்கியமாக பாப்பானுக்கு கும்புடு போடாமை போன்ற குணங்கள் அதுவரை "அவை புரோகிதர்" என்றிருந்த உடல் உழைப்பில்லா சாப்பாட்டுராமன் பதவியை இல்லாமல் ஆக்கியது. இனி பிழைப்புக்கு என்ன வழி என்று அங்கலாய்ந்து கொண்டிருந்த முதல் வந்தேறிகளுக்கு அதிர்ஷ்டம் ஆங்கிலேயனின் வழி வந்தது.

தங்களது பரம்பரை குணமான அதே காட்டியும் கூட்டியும் கொடுக்கும் குணத்தை முகலாயர்களுக்கு எதிராக ஆங்கிலேயர்களுக்கு செய்து முகலாயர்களை விரட்டி விட்டு வியாபாரத்திற்காக வந்தவனை அரியணையில் ஏற்றினர் இந்த முதல் வந்தேறிகள். அதற்கு விசுவாசமாக இம்மண்ணை விட்டு செல்லும் வரை ஆங்கில ஏகாதிபத்தியவாதிகள் முதல் வந்தேறிகளுக்கு எலும்புத் துண்டுகளை வாரி வீசினர்.

அப்பொழுது கிடைத்த அனைத்து சௌகரியங்களையும் நன்றாக பயன்படுத்தி எல்லா துறைகளிலும் தங்கள் இருப்பை பலப்படுத்திக் கொண்டனர் இந்த வந்தேறி பார்ப்பனர்கள். தாங்கள் பிறந்த இந்த இந்திய மண்ணின் மீது ஆழ்ந்த பற்று கொண்ட இந்நாட்டின் பழங்குடிகள் ஆங்கில ஏகாதிபத்தியவாதிகளுக்கு எதிராக ஆர்த்தெழுந்து அவர்களை வந்த வழியே விரட்டினர்.

எனினும் இந்நாட்டில் வந்தேறிய முதல் வந்தேறிக் கூட்டத்தை மட்டும் ஏனோ அவர்கள் கவனிக்கவே இல்லை. இந்நாட்டின் அனைத்து வளர்ச்சிகளுக்கும் முட்டுக்கட்டையாக இருப்பது இந்த முதல் வந்தேறிகள் தான் என்பதை இன்னும் உணராததாலோ என்னமோ?

ஆங்கிலேயன் இருக்கும் வரை அவனுக்கு அடிவருடி அனைத்து சுகங்களையும் அனுபவித்த இந்த வந்தேறிக் கூட்டம் அவனை இந்நாட்டு மைந்தர்கள் தங்களது இரத்தம் சிந்தி அடித்து விரட்டிய பின் காலியான அந்த இருப்பிடத்தை நிரப்ப - தங்களது பழைய அதே மனுதர்மத்தின் படியான வர்ணபாகுபாட்டின் அடிப்படையிலான ஆட்சியை ஏற்படுத்த அனைத்து விதமான செயல்களையும் செய்ய ஆரம்பித்தனர்.

இந்திய சுதந்திரத்திற்குப் பின் இனி ஒரு அந்நியனையும் இந்நாட்டிற்குள் அனுமதியோம் என்ற ஒருமித்த சிந்தையுடன் தெளிவாக இருந்த இந்நாட்டு மைந்தர்கள், தங்களுக்குள்ளேயே ஏற்கெனவே உள்ளே நிற்க இடம் கொடுத்த ஒரு நரிக் கூட்டம் அப்படியே இருப்பதை மறந்து விட்டனர்.

அதன் பிரதிபலன் 1992 டிசம்பர் 6 முதல் ஆரம்பமானது. வந்தேறிக் கூட்டப்பரம்பரையான இரத்த வெறிப்பிடித்த அத்வானி நடத்திய ரத்த யாத்திரையின் பிரதிபலன் ஏற்கெனவே நாடெங்கும் நிகழ்ந்து கொண்டிருக்கும் தருணத்தில் இந்திய வரலாற்றில் மிகப்பெரும் கறை இந்த வந்தேறிக் கூட்டத்தின் தூண்டுதலால் நிகழ்த்தப்பட்டது.
* 400 ஆண்டுகால பழமை வாய்ந்த இந்தியாவின் வரலாற்றுச் சின்னம்.
* வந்தேறிகளால் அடக்கி ஒடுக்கப்பட்ட நிலையிலிருந்து கரையேற சமத்துவமும் சமூகத்தில் மரியாதையையும் பெற்றுத் தந்த இஸ்லாத்திற்கு மதம் மாறிய இந்நாட்டு மைந்தர்களின் வழிபாட்டு ஆலயம்.
* 400 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த இந்நாட்டு மைந்தர்களின் வியர்வையில் உருவான அரிய பொக்கிஷம்.
இந்நாட்டில் முதலில் வந்தேறிய ஆரிய பார்ப்பன வர்க்கத்தின் அதிகார போதைக்கு பலியானது. வரலாற்றில் அழியாத கறையை ஏற்படுத்திய இச்சம்பவத்திற்குப் பிறகு அதுவரை ஒரு தாய் மக்களாக வாழ்ந்து வந்த இந்நாட்டு மைந்தர்களுக்கிடையில் பிளவு வலுவடைந்தது. அதன் பின் நாட்டில் எங்கு நோக்கிலும் குண்டு வெடிப்புகளும், கலவரங்களும், கொலைகளும், கொள்ளைகளும் பரவலாக தினக்காட்சிகளாக அரங்கேறி வருகின்றன.

இன்றைய இந்தியாவில் பாதுகாப்புக்காக செலவளிக்கப்படும் தொகையில் 100ல் ஒரு 10 சதவீதத்தை நாட்டு வளர்ச்சிக்காக மாற்றி வைத்தாலே போதுமானது. அடுத்த 10 வருடங்களில் நாட்டில் வறுமையையும், இல்லாமையையும் இல்லாமலொழிக்கலாம். நாடு முன்னேற இச்செயலை செயல்படுத்த முடியாமல் இருக்க வேண்டிய இன்றைய நிலைக்கு காரணம் என்ன?

ஒரே காரணம். இந்நாட்டில் வந்தேறிய அந்நியன் தான்.

மூன்று வந்தேறிகளில் இருவர் அடித்து விரட்டப்பட்டாயிற்று. மீதியுள்ள இந்த ஒரு வந்தேறி காலம் காலமாக செய்து வரும் நரித்தனத்தால் தான் நாடு முன்னேறுவதற்கு பதிலாக பின்னேறிக் கொண்டிருக்கிறது.

அன்று ஒரு டிசம்பர் 6 ல் இந்த முதல் வந்தேறி ஆரம்பித்து வைத்த காட்டுமிராண்டித்தனம் இன்றும் இந்நாட்டு மக்களிடையே அழியா நெருப்பாக பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. இந்த நெருப்பு அணையாமல் அப்படியே தொடர வைக்க எண்ணையையும் இந்த வந்தேறிக் கூட்டம் விட்டுக் கொண்டே இருக்கிறது.

இடிக்கப்பட்ட தங்கள் வழிபாட்டு தலம் திரும்ப கட்டித் தரப்பட வேண்டும் என விரும்பும் இந்நாட்டு மைந்தர்களின் கனவையும், 400 ஆண்டு பழமையான வரலாற்றுச் சின்னத்தை திரும்ப எழுப்பி வரலாற்றில் படிந்த கறையை அகற்ற விரும்பும் சமூக ஆர்வலர்களுக்கும், தங்கள் சகோதரர்களின் இறையாலயத்தை திரும்பக் கொடுத்து பழைய இணக்கத்தை தங்களிடையே கொண்டு வரத்துடிக்கும் இந்நாட்டு மைந்தர்களின் விருப்பத்தையும் நிறைவேற விடாமல் அப்பிரச்சினையை அப்படியே வைத்து அரசியல் ஆதாயம் அடையத்துடிக்கும் இந்த வந்தேறிக் கூட்டத்தின் நரிக்குணத்திற்கு முடிவெப்போது?

ஒரு கவிதை நினைவிற்கு வருகிறது.

பாபர் மசூதியும்,

நாங்களும் ஒன்றுதான்!

இடிக்க மட்டுமே வருகிறார்கள்!!

கட்டுவதற்குக்குத்தான் யாருமில்லை!!!

நன்றி: முதிர்கன்னி.


இந்நாட்டு மைந்தர்களின் மனதில் வடியும் இரத்தத்தை அழகாக வார்த்தைகளில் தோய்த்தெடுத்திருக்கும் இவ்வரிகள் பொய்க்க வேண்டும். திரும்பவும் தரைமட்டமாக்கப்பட்ட இறையாலயம் திரும்ப எழுப்பப்பட வேண்டும்.

அதன் மூலம் இந்நாட்டு மக்களிடையே பிளவு ஏற்படுத்தி அதில் குளிர்காய நினைக்கும் வந்தேறி பார்ப்பனர்களின் கனவில் மண் விழ வேண்டும். நிச்சயம் மண் விழும். அந்நாளுக்காக காத்திருப்போம்.

Monday, December 4, 2006

தலித்கள் இந்துக்கள் அல்ல - தினமலர் அறிவிப்பு!

கைபர் போலன் கணவாய் வழி ஆரிய பார்ப்பனஜீவிகள் என்று இந்திய திருநாட்டில் நுழைந்தனரோ? அன்று தொட்டு இந்திய ஒருமைப்பாட்டுக்கு தீராத தலைவலியாக இருக்கும் ஒரே விஷயம் தீண்டாமையாகும். தங்களுடைய நிலை நிற்பிற்காக ஒரே மனித குலத்தில் பிறந்த இந்நாட்டின் மைந்தர்களை சத்திரியன், வைணவன், சூத்திரன் என பாகுபடுத்தி தன்னை பிரம்மனின்/சிவனின் தலையில் இருந்து பிறந்தவனாக கூறி, வர்ண பாகுபாட்டை விதைத்தான் இந்த வந்தேறி.

மக்கள் தொடர்பு சாதனங்கள் பிரபலமடைந்திராத அக்காலகட்டத்தில் மத்திய ஆசியாவிலிருந்து ஏன் இவர்களை விரட்டியடித்தனர் என்பதை முழுமையாக அறிந்து கொள்ளாமல் ஏதோ தங்களுக்கும் சில அனுகூலங்கள் கிடைக்கிறது என்பதற்காக கிடைத்ததை அனுபவித்துக் கொண்டு சிலர் இந்த வந்தேறி ஜென்மங்களுக்கு காவடி தூக்கினர்.

அதன் பலன் இன்று இந்திய நாட்டின் சொந்தக்காரர்களான இந்நாட்டு குடிமகன்கள் அனுபவிக்கின்றனர். குடியிருக்க ஒரு இருப்பிடம் கட்டுவதிலிருந்து மன அமைதிக்கு கண்மூடி சற்று நேரம் நிம்மதியாக தியானிக்கும் ஆலயங்கள் வரை இந்த வந்தேறி காட்டுமிராண்டிகளின் அநியாயங்கள் சொல்லி மாளாது.
அன்று இந்த அடித்து விரட்டப்பட்ட நாடோடிகளுக்கு இந்தியாவில் காவடி தூக்கிய சில துரோகிகள் இன்றும் சமூகத்தில் பரவலாக காணப்படுகின்றனர். இவர்களின் ஒரே பணி வந்தேறி பார்ப்பனர்களுக்கு ஆதரவாக செயல்படுவது மட்டுமே.

அவைகள் வீசி எறியும் சில எலும்புத்துண்டுகளுக்கு நாக்கை தொங்கவிட்டு அலையும் இந்த இழிப்பிறவிகள், வந்தேறிய இந்த பார்ப்பன வர்க்கத்திற்கு ஆதரவாக செயல்படுவது தனது சொந்தம் சகோதரனுக்கு மிகப்பெரும் கேடு விளைவிக்கும் என்பதை ஏனோ சிந்தித்துப் பார்ப்பதே இல்லை.

உலகம் எவ்வளவு தான் வளர்ச்சியை எட்டிப் பிடித்தாலும் இந்தியா மட்டும் அத்திசை நோக்கிப்பயணிப்பதை ஒருக்காலும் நாங்கள் அனுமதிக்கவே மாட்டோம் என கங்கணம் கட்டியே இக்கூட்டம் செயல்படுகிறது.
அன்று மக்கள் தொடர்பு சாதனம் இன்று போல் இல்லாததால் இந்த வந்தேறிகளின் அழுகிப்போன பின்புலங்கள் இந்நாட்டு மைந்தர்களுக்கு தெரிந்திருக்கவில்லை. மக்களை மடையர்களாக வைத்திருப்பதில் மக்கள் தொடர்பு சாதனங்கள் பெரும்பங்காற்றும் என்பதை புரிந்து கொண்ட இந்த வந்தேறி நரிக்கூட்டம் மக்கள் தொடர்பு சாதனங்களின் யுகமான இவ்விஞ்ஞான யுகத்தில் ஆங்காங்கே தங்களுக்கு சிந்து பாட இவற்றில் சிலவற்றையும் உருவாக்கி வைத்துள்ளது.

அவ்வாறான, இந்த வந்தேறி பார்ப்பன ஜென்மங்களுக்கு காவடி தூக்கும் மக்கள் தொடர்பு சாதனங்களில் தமிழக அளவில் முதல் வரிசையில் வருவது தினமலர் பத்திரிக்கையாகும். தமிழக அளவில் மக்களை பிரித்து வைப்பதிலும், சமூகத்தில் குழப்பதை உருவாக்குவதிலும் முன்பந்தியில் நிற்கும் இப்பத்திரிக்கை, வந்தேறி பார்ப்பனர்களுக்கு ஆதரவாக எல்லா விதமான வழிகளிலும் உதவி வருகிறது.
ஒரு காலத்தில் இந்நாட்டு மக்களை பிரித்தாண்டு(இவைகளின் இந்த பிரித்தாழும் சூழ்ச்சியை பின்பற்றியே ஆங்கிலேய வந்தேறிகளும் இந்நாட்டு மைந்தர்களை பிரித்தாண்டார்கள் என நினைக்கிறேன்) எவ்வித உடலுழைப்பும் இன்றி தங்கள் உடல்களை வளர்த்து வந்த இந்த பார்ப்பன வந்தேறிகளின் வாழ்க்கையில் அதே மத்திய ஆசியாவில் இருந்து வந்த இஸ்லாம், கிறிஸ்தவம், கம்யூனிஸ கொள்கைகள் சாவு மணியடித்தன.

கூட்டம் கூட்டமாக இக்கொள்கைகளுக்குத் தாவிய, அடக்கி ஒடுக்கப்பட்ட இந்நாட்டு மைந்தர்கள் அதன் பின்னர் இந்த வந்தேறிகளின் முன் தலை நிமிர்ந்து வாழத்தொடங்கினர். சமத்துவத்தைக் கொண்டு தனது தலையில் உள்ள கிரீடத்தை இக்கொள்கைகள் எடுத்து மாற்றும் என்பதை நன்றாக உணர்ந்து கொண்ட இந்த நரிக்கூட்டம் தங்கள் தலை மீதுள்ள கிரீடத்தை தக்கவைக்க நவீன யுகத்தில் "இந்து" என்ற அஸ்திரத்தைக் கொண்டு காலியாகும் கூடாரத்தை திரும்ப நிறைக்க முயன்றனர்.

அதன் பின் இந்தியாவில் எங்கு நோக்கினும் "நாம் இந்துக்கள்" என்ற கூக்குரல் ஓங்கி ஒலிக்கத்தொடங்கியது. இந்து ஒருங்கிணைப்புக்கு எதிர்பார்த்த பிரதிபலனை "பாபர் மசூதி", "குஜராத்", "கோயம்புத்தூர்" என அமோக விளைச்சலையும் இப்பார்ப்பன வந்தேறிக் கூட்டம் கொய்யத் தொடங்கியது.

இதற்காக இதே பார்ப்பன அடிவருடி பத்திரிக்கையும் பலவாறாக செய்திகளை திரித்தும், தேய்த்தும் கொடுத்தன. தேவைக்கு வந்தேறி கொள்கைகளான இஸ்லாம், கிறிஸ்தவத்தை பின்பற்றுபவர்கள் அல்லாத மற்ற எல்லோரும் "இந்துக்களே" என கூக்குரலிடவும் தயங்கவில்லை.

எத்தனை நாள் தான் உண்மை மறைந்திருக்கும்? நிச்சயமாக சத்தியம் ஒரு நாள் வெளிப்பட்டே தீரும்.

மிகவும் கஷ்டப்பட்டு இந்நாட்டின் சொந்தக்காரர்களான ஒடுக்கப்பட்ட எம்சகோதரர்கள் தலித்களை "இந்துக்கள்" என்ற வரம்பிற்குள் கொண்டு வர முயன்றாலும், "எங்கள் மனதில் நிச்சயமாக அவ்வாறு ஒன்றும் இல்லை" என்று அழுத்தம் திருத்தமாக பார்ப்பன அடிவருடி குப்பை தினமலர் வெளிப்படுத்திவிட்டது.

சத்தியம் வந்தது; அசத்தியம் அழிந்தது; நிச்சயமாக அசத்தியம் அழிந்தே தீரும்.

புவனேஸ்வர்: மேல் சாதி இந்துக்கள் தடை விதித்ததால், சொந்தமாக கோவிலை கட்டினர் தலித்துகள். அதில் பிராமண பூசாரியை அர்ச்சகராக நியமித்துள்ளனர். இந்துக்கள் எல்லாரையும் அனுமதித்து வருகின்றனர்.

மற்ற மாநிலங்களை விட ஒரிசா மாநிலத்தில் தலித்துகளை மேல் சாதி இந்துக்கள், கோவில்களில் நுழைய விடாமல் தடுப்பது அதிகமாக உள்ளது. பல ஆண்டு வழக்கமாகவே, ஒரிசா மாநிலத்தில் மட்டும் எந்த மேல் சாதி இந்துக்கள் கோவில்களிலும், தலித் மக்கள் அனுமதிக்கப்பட்டதே இல்லை.

புவனேஸ்வரில் இருந்து 90 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கேந்த்ரபாடா பகுதியில் உள்ள பிரபல கோவில் ஜகந்நாதர் கோவில். அங்கு தலித்துகள் "நாங்கள் நுழைந்தே தீருவோம்' என்று சபதம் எடுத்துள்ளனர். ஆனால், அவர்களை அனுமதிக்க இந்துக்கள் மறுத்துவிட்டனர்.

இதை எதிர்த்து தலித்துகள் சார்பில் கோர்ட்டில் மனு செய்யப்பட்டது. அதற்கு "நாங்கள் 18ம் நூற்றாண்டில் இருந்து இந்த நடைமுறையை கடைபிடித்து வருகிறோம். அதை தகர்க்கக் கூடாது' என்று இந்துக்கள் பதில் அளித்தனர். இந்நிலையில், கோவிலில் நுழைந்தே தீருவோம் என்று தயாராகிவிட்டனர் தலித் மக்கள். விரைவில் கோவிலில் நுழையத்தான் போகிறோம் என்று அவர்கள் அறிவித்ததால், கோவிலில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஏற்கனவே இது தொடர்பாக தொடர்ந்து பிரச்னைகள் இருந்து வந்ததால், மேல் சாதி இந்துக்களுக்கு பதிலடி தர, கேந்த்ரபாடா பகுதிக்கு வெளியே, சவுரிபெர்காம்பூர் என்ற பகுதியில் தலித்துகள் ஒன்று சேர்ந்து ஒரு கோவிலை கட்டினர். அந்த ஜகந்நாதர் கோவிலில், அர்ச்சகராக பிராமண சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை அமர்த்தினர். இப்போது அந்த கோவிலில் மேல் ஜாதி இந்துக்களையும் வழிபட அனுமதித்து வருகின்றனர் தலித்துகள். அந்த கோவிலில் தலித்துகள் அதிகம் வருவதில்லை என்பதும் அவர்கள் ஆதங்கம்.

மேற்கண்ட தினமலரின் செய்தியில் காணப்படும் வரிகளை ஆழ்ந்து படித்துப்பாருங்கள். தலித்களை இந்துக்கள் என்ற சொல்லிலிருந்து தனிமைப்படுத்தி கூறும் பார்ப்பன பத்திரிக்கை தினமலர் என்ன கூற வருகிறது என்பது தெளிவாக தெரிகிறதா?


பார்ப்பன அடிவருடி தினமலர், "பார்ப்பன வந்தேறி நரிக்கூட்டத்தால் அடக்கி ஒடுக்கப்பட்ட இந்நாட்டு மைந்தர்களான தலித்கள் இந்துக்கள் அல்ல" என்பதை ஒத்துக்கொண்டமைக்கு நன்றி.

இதற்கு மேலும், தங்கள் நிலைநிற்பிற்காக பார்ப்பனர் அல்லாத மற்ற அனைத்து பழங்குடி, தலித், அரிஜன மக்களுக்கு சூலாயுதம் வினியோகித்து அவர்களை "அசுரர்களாக" என்றென்றும் நிலைநிறுத்தவும், அவர்களை அறியாமலேயே தங்களின் எண்ணங்களை நிறைவேற்றும் அவர்களின் மனம் குளிர(மட்டும்) நாங்கள் அனைவரும் "இந்துக்கள்" தான் என கேனத்தனமாக புலம்பவும் செய்யும் வந்தேறி பார்ப்பன தொகாடியா, அத்வானி, சொக்கர்கள் இனிமேலும் "இந்து ஐக்கியம்", "தலித்களும் இந்துக்கள் தான்", "இந்து மதம் பார்ப்பனமதம் அல்ல" என்பன போன்ற உளுத்துபோன ஜல்லிகளை அடிப்பார்கள் என்று நினைக்கிறீர்கள்?.